என்னுள்ளில் எம்எஸ்வி... இளையராஜாவின் இசைக் கச்சேரிக்கு டிக்கெட் எங்கே கிடைக்கும்?

வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) என்னுள்ளில் எம்எஸ்வி என்ற தலைப்பில் இளையராஜா நடத்தும் சிறப்பு இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்ததை ஒட்டி அவர்து பாடல்களை இளையராஜா வரும் இருபத்தியேழாம் தேதி காமராஜர் அரங்கத்தில் நடத்த இருக்கிறார்.

Tickets availability for Ilaiyaraaja's Ennullil MSV

ஜீவா - இளையராஜா கல்வி அறக்கட்டளை சார்பாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கான நன்கொடை ரசீதுகள் http://eventjini.com/ennullilmsv என்ற இணையத்தில் கிடைக்கும்.

7887402888 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்தும் டிக்கெட் பெறலாம். நாளை இந்த நன்கொடை ரசீதுகள் கிடைக்கும் இடங்களை அதிகப்படுத்த இருக்கிறர்கள்.

"இசையில் ஒவ்வொருவருடைய கற்பனையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். நம்மை உயிரை எங்கோ அழைத்துசெல்லுகின்ற உணர்வைக் கொண்டுவருவது அவ்வளவு சதாரணமான விஷயம் அல்ல. இதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன். இதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதால் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன்.

Tickets availability for Ilaiyaraaja's Ennullil MSV

அண்ணன் எம்எஸ்வி உடலை விட்டு உயிர் பிரிந்து சென்றாலும் அவர் என்றும் மறையாத நித்ய சொரூபர். எம்.எஸ்.வி.யின் இசைத் திறமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி இருக்கும்," என இந்த நிகழ்ச்சி குறித்து ஏற்கெனவே இளையராஜா விளக்கம் அளித்திருப்பது நினைவிக்கலாம்.

 

குடை வேண்டாம், அப்படியே நனையுங்க: சன்னியின் 'ஜில் ஜில்' அட்வைஸ்

மும்பை: மழைகாலத்தில் மழையில் ஜாலியாக நனையுமாறு பாலிவுட் நடிகை சன்னி லியோன் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் மழைகாலம் துவங்கிவிட்டது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மழையை ரசித்த காலமும், மழையில் நனைந்து ஆடிப்பாடிய காலமும் கிட்டத்தட்ட மலையேறிவிட்டது. காலையில் மழை வந்தால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் போது தான் இந்த மழை பெய்ய வேண்டுமா என்று மக்கள் அலுத்துக் கொள்கிறார்கள்.

It's time to get drenched with Sunny Leone

மாலையில் மழை பெய்தால் வீட்டுக்கு கிளம்பும்போது தான் இந்த மழை பெய்ய வேண்டுமா என்று முணுமுணுக்கிறார்கள். இந்நிலையில் தான் மழைகாலத்தில் என்ன செய்ய வேண்டும் என பாலிவுட் நடிகை சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பாத்டப்பில் படுத்துக் கொண்டு கூறுகையில்,

என்னைப் போன்று அனைவரும் மழைகாலத்தை ரசியுங்கள். ஹேப்பி மழைகாலம் என்று தெரிவித்துள்ளார்.

 

'குரங்கு கையில பூ மாலை'... போத்திக்கிட்டு நடிச்ச கவர்ச்சி நிஷா!

விதவிதமான மனநிலை கொண்ட நான்கு பேரிடம் சிக்கி தவிக்கும் ஒரு பெண்ணின் நிலைமையை மையப்படுத்தி உருவாகி வரும் புதிய படம் ‘குரங்கு கையில பூ மாலை'.

இப்படத்தில் நாயகர்களாக ஜெகதீஷ், கௌதம் கிருஷ்ணா இருவரும் நடித்துள்ளனர். இவர்களுடன் குரங்கு கையில் கிடைத்த பூமாலையாய் சிக்கித் தவிக்கும் பெண்ணாக ‘கோலிசோடா' படத்தின் நாயகி சாந்தினி நடித்துள்ளார்.

Nisha's homely appearance in Kurangu Kaila Poomalai

மேலும், பல்வேறு படங்களில் குத்துப்பாடலுக்கு நடனமாடிய நிஷா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கிருஷ்ணன். இவர் ஏற்கெனவே ‘விகடகவி' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

ஆகஸ்ட் 7-ந் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படம் குறித்து இயக்குநர் கிருஷ்ணன் கூறுகையில், "இப்படத்தில் நான்கு ஹீரோக்கள், இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் படத்தில் தனியாக எந்தவொரு டூயட் பாடலும், குத்து பாடலும் கிடையாது. கதையோடு பயணித்தபடியே பாடல்களும் இடம்பெற்றுள்ளது.

Nisha's homely appearance in Kurangu Kaila Poomalai

படத்தில் கவர்ச்சி இல்லை. கவர்ச்சி நடிகையான நிஷாவைக் கூட போர்த்திக் கொண்டு நடிக்கும் அளவுக்கு குடும்பப் பாங்கான கதை. இன்னும் சொல்லப் போனால், நிஷாவின் நடிப்பு இந்தப் படத்தில் பிரமாதமாக அமைந்துள்ளது," என்றார்.

சாய் அமீர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

 

நடிகர் திலகத்திற்கு ஒரு நினைவாஞ்சலி

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 14 வது நினைவு தினம் இன்று, நடிப்பில் சிவாஜியைப் போல வரவேண்டும் என்று நேற்று கோடம்பாக்கத்தில் கால் வைத்த இளைஞர்களைக் கூட நினைக்க வைத்த பெருமைக்குரியவர் சிவாஜி கணேசன்.

300 படங்களுக்கும் அதிகமாக நடித்து சுமார் 47 வருடங்களுக்கும் அதிகமாக தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் கொடிகட்டிப் பறந்தவர். சிவாஜி நடித்து முதலில் வெளிவந்த திரைப்படம் பராசக்தி இன்றளவும் அதன் வசனங்களுக்காக பேசப்படும் ஒரு படமாக மாறியுள்ளது.

Sivaji Ganesan Memorial Day

தேசிய விருது, பத்மபூஷன் விருது, செவாலியர் விருது, தாதா சாகேப் பால்கே விருது மற்றும் கலைமாமணி உட்பட ஏராளமான விருதுகளை வாங்கி இருக்கிறார். 2001 ம் ஆண்டில் சிவாஜி கணேசன் இறந்தபோது தமிழ்நாடே ஸ்தம்பித்தது.

அந்த அளவிற்கு தமிழர்களின் வாழ்வில் இரண்டாகக் கலந்த பெருமைக்குரியவர் சிவாஜி கணேசன், அவரது நினைவு தினமான இன்று அவர் நடிப்பில் வெளிவந்த சிறந்த 5 திரைப்படங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

பராசக்தி

சிவாஜி அவர்களின் நடிப்பில் 1952 ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பராசக்தி, கடவுள் மறுப்புக் கொள்கைகளை அந்தக் காலத்திலேயே துணிச்சலாக எடுத்துக் கூறிய இந்தப் படம் மாபெரும் வெற்றிப்படமாக மாறியது. கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு வசனங்களும் இன்றளவும் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

பராசக்தி படத்தில் இடம்பெற்ற " ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்" என்ற வசனம் தமிழின் தலைசிறந்த 10 வசனங்களில் இன்றளவும் முதலிடத்தில் உள்ளது.

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம்

1959 ம் ஆண்டு சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வீரபாண்டிய கட்டபொம்மன், விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறும் படம் இது. படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்த சிவாஜி தனது நடிப்பால் ரசிகர்களின் கண்முன்னே கட்டபொம்மனைக் கொண்டுவந்து நிறுத்தி இருந்தார்.

Sivaji Ganesan Memorial Day

மானம் கெட்டவனே

இந்தத் திரைப்படத்திற்காக சிவாஜிகணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதன்மூலம் சர்வதேச திரைப்படவிழாவில் விருது வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றார்.படத்தில் இடம்பெற்ற

வரி, வட்டி, கிஸ்தி....யாரை கேட்கிறாய் வரி...எதற்கு கேட்கிறாய் வரி...வானம் பொழிகிறது.... பூமி விளைகிறது...உனக்கேன் கட்டவேண்டும் வரி...

எங்களோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா? ஏற்றம் இறைத்தாயா?அல்லது கொஞ்சி விளையாடும் எம்குல பெண்களுக்கு மஞ்சள்அரைத்தாயா?

மாமனா? மச்சானா/மானங்கெட்டவனே? என்ற வசனங்களைப் பார்க்காத கேட்காத தமிழர்கள் இல்லை என்றே சொல்லலாம், அவ்வளவு புகழ்பெற்ற வசனம் இது.

Sivaji Ganesan Memorial Day

தில்லானா மோகனாம்பாள்

நடிகர் திலகம் சிவாஜியும், நாட்டியப்பேரொளி பத்மினியும் போட்டி போட்டு நடித்த திரைப்படம் இது. சிவாஜியின் நடிப்புத் திறமையை வெளிக் கொணர்ந்த படங்களில் இதுவும் ஒன்று, படத்தில் இடம்பெற்ற "நலந்தானா" மற்றும் "மறைந்திருந்து பார்க்கும் மர்மம்" என்ன போன்ற பாடல்கள் இன்றளவும் தமிழின் எவர்கிரீன் பாடல்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்தப் படத்தின் தாக்கத்தில் வெளிவந்தத் திரைப்படம்தான் ரகுமான்- விந்தியா நடிப்பில் வெளிவந்த சங்கமம் திரைப்படம்.

மனோகரா வசனங்கள்

1954 ம் ஆண்டு வெளிவந்த மனோகரா திரைப்படம் கலைஞரின் எழுத்துத் திறமைக்கு மற்றுமொரு சான்றாக அமைந்தது, படத்தில் இடம்பெறும் தர்பார் வசனங்கள் மிகச் சிறப்பாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்.

மனோகரா பொறுத்தது போதும் பொங்கி எழு என்று சிவாஜியிடம் அவரது தாய் கண்ணாம்பா கூறுவார் இன்றளவும் புகழ்பெற்ற வசனமாக விளங்குகின்றது. படத்தில் எல்லோராலும் பாராட்டுப் பெற்ற தர்பார் மண்டப வசனங்கள்.

மனோகரா தர்பார் மண்டப வசனங்கள்

அரசர்: மனோகரா! உன்னை எதற்காக அழைத்திருக்கிறேன் தெரியுமா?

மனோகரன்: திருத்திக் கொள்ளுங்கள் அரசே! அழைத்து வரவில்லை என்னை. இழுத்துவரச் செய்திருக்கிறீர்கள்.

அரசர்: என் கட்டளையைத் தெரிந்து கொண்டிருப்பாய் நீ.

மனோகரன்: கட்டளையா இது? கரை காண முடியாத ஆசை! பொன்னும், மணியும், மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து கண்ணே முத்தே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே, `வீரனே! என் விழி நிறைந்தவனே!' என்று யாரைச் சீராட்டி பாராட்டினீர்களோ அவனை அந்த மனோகரனை சங்கிலியால் பிணைத்து, சபை நடுவே நிறுத்தி சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்ற தங்கள் தணியாத ஆசைக்குப் பெயர் கட்டளையா தந்தையே?

அரசர்: நீ நீதியின் முன்னே நிற்கும் குற்றவாளி! தந்தையின் முன் தனயனல்ல இப்போது!

மனோகரன்: குற்றவாளி! நான் யாருக்கு என்ன தீங்கிழைத்தேன்? என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? அரசே! தந்தையின் முன் தனயனாக அல்ல, பிரஜைகளில் ஒருவனாக கேட்கிறேன். கொலை செய்தேனா? கொள்ளையடித்தேனா? நாட்டைக் கவிழ்க்கும் குள்ளநரி வேலை நான் செய்தேனா? குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே, குற்றம் என்ன செய்தேன்? கூறமாட்டீர்களா? நீங்கள் கூறவேண்டாம்.

இதோ அறங்கூறும் அமைச்சர்கள் இருக்கிறார்கள். மறவர் குடிப்பிறந்த மாவீரர்கள் இருக்கிறார்கள்! மக்களின் பிரதிநிதிகள் _இந்த நாட்டின் குரல்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூறட்டும்... என்ன குற்றம் செய்தேன்?

சபையோர்: குற்றத்தை மகாராஜா கூறத்தான் வேண்டும்.

அரசர்: இது உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது.

மனோகரன்: சம்பந்தம் இல்லாதது சபைக்கு வருவானேன்? குடும்பத்தகராறு கொலு மண்டபத்துக்கு வரும் விசித்திரத்தை சரித்திரம் இன்றுதான் முதன் முதலாகச் சந்திக்கிறது மகாராஜா!

அரசர்: போதும் நிறுத்து... வசந்த விழாவில் நீ செய்த தவறுக்காக வசந்த சேனையிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.

மனோகரன்: அதற்குத்தான் காரணம் கேட்கிறேன்!

அரசர்: எதிர்த்துப் பேசுபவர்களுக்கு ராஜசபையில் என்ன தண்டனை தெரியுமா?

மனோகரன்: முறைப்படி மணந்த ராணிக்கு சிறைத்தண்டனை அளித்துவிட்டு, மூலையில் கிடந்ததற்கு முடிசூட்டியவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையை விடக் குறைவானதுதான்.

அரசர்: ஆத்திரத்தைக் கிளப்பாதே! நிறைவேற்று. அரசன் உத்திரவு.

மனோகரன்: அரசன் உத்திரவென்ன? ஆண்டவனின் உத்திரவுக்கே காரணம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அரசே! சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டும் தாய் என்று கேள்விப்பட்ட பின்னும் அடங்கிக் கிடப்பவன் ஆமை!

அரசன்: தாய்க்கும், தந்தைக்கும் வேற்றுமை அறியா மூடனே! தந்தையின் ஆணை கேட்டு தாயாரின் தலையை வெட்டி எறிந்த பரசுராமனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா நீ?

மனோகரன்: பரசுராமன் அவதாரம். மனோகரன் மனிதன்!"

Sivaji Ganesan Memorial Day

ராஜராஜசோழன்

தஞ்சை தமிழ் மண்ணில் பிறந்த நடிகர் சிவாஜி உலகையே ஒரு குடைக்குக் கீழ் கொண்டுவந்த மாமன்னர் ராஜராஜசோழனாக, ராஜராஜசோழன் படத்தில் நடித்திருப்பார். வழக்கம் போல தனது கம்பீரமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திழுத்து விட்டார் இந்தப் படத்தில். 1973 ம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற தூய வசனங்களும், பாடல்களும் பலரது பாராட்டைப் பெற்றவை.

குறிப்பாக "ஏடு தந்தானடி தில்லையிலே" என்ற பாடல் இன்றளவும் மிகவும் பிரசித்தி பெற்ற பாடல்களில் ஒன்றாக விளங்குகிறது. 42 வருடங்களுக்கு முன்பாக வெளிவந்த இந்தத் திரைப்படம் சுமார் 1.2 கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வெள்ளிவிழா கொண்டாடியது.

 

கண்ணீர் அஞ்சலியில் ஹீரோவான காமெடி “கருணாகரன்”

சென்னை: நடிக்க வந்து 4 வருடங்களில் ஹீரோ ஆகிவிட்டார் காமெடியன் கருணாகரன், கலகலப்பு படத்தில் அறிமுகமான கருணாகரன் தொடர்ந்து நடித்த சூது கவ்வும் படத்தின் மூலமாக ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்தார்.

Kanneer Anjali Movie

பெரிய கண்கள்+ அப்பாவியான ஒரு முகம் இந்த இரண்டின் மூலம் தமிழ் சினிமாவில் மடமடவென்று முன்னேறி வருகிறார் கருணாகரன், ஆடாம ஜெயிச்சோமடா மற்றும் உப்புக் கருவாடு படங்களைத் தொடர்ந்து தற்போது கண்ணீர் அஞ்சலி படத்தில் நாயகனாக களமிறங்கி இருக்கிறார்.

3 வருடம் முடிவதற்குள்ளேயே 25 படங்களில் நடித்து முடித்து விட்ட கருணாகரன், தொடர்ந்து நடிக்க முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் தற்போது நடித்து வருகிறார்.

Kanneer Anjali Movie

இயக்குநர் குகன் இயக்கி வரும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

கண்ணீர் அஞ்சலி திரைப்படத்தில் கருணாகரனுடன் இணைந்து நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் பார்வதி நாயர் ஆகியோர் படத்தில் நடித்து வருகின்றனர். குறுகிய கால தயாரிப்பாக வளர்ந்து வருகிறது கண்ணீர் அஞ்சலி.

 

பாகுபலிக்கு வந்த பாராட்டுகளிலேயே சிறந்தது ரஜினி சொன்னதுதான்!- எஸ்எஸ் ராஜமவுலி

பாகுபலிக்கு இதுவரை வந்த பாராட்டுக்களிலேயே சிறந்தது ரஜினியின் பாராட்டுதான் என்றார் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி.

இந்தியாவின் மிகப் பெரிய வசூல் குவித்த படமான பாகுபலி படம் வெளியானதுமே ரஜினி பார்த்துவிட்டார். பார்த்து முடித்த கையோடு தனது பாராட்டுகளை எஸ்எஸ் ராஜமவுலிக்கும், அவர் குழுவுக்கும் தெரிவித்துவிட்டார்.

Rajini's complement is the best one for Bahubali, Says Rajamouli

என்ன சொல்லிப் பாராட்டினார் ரஜினிகாந்த்?

இதை ராஜமவுலியிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில்:

"பாகுபலிக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு ரஜினி அவர்களின் பாராட்டுதான். ஆனால், அவர் என்ன சொன்னார் என்பதைத் தெரிவிக்க மாட்டேன். அது எனக்கு ரொம்ப தனிப்பட்ட முறையில் அமைந்தது. என்னுள்ளே இருக்கட்டும். வெளியே தெரிவிக்க இயலாது," என்றார்.

 

அமெரிக்காவில் மணிரத்னத்தின் ரோஜா, பாம்பே, தில்சே!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மணிரத்னம் இயக்கிய ரோஜா, பாம்பே மற்றும் தில்சே ஆகிய திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

உலகத் திரைப்பட ஆர்வலர்கள் ஒன்றுகூடும் இடம் நியூயார்க் அஸ்டோரியாவில் இயங்கும் ‘ம்யூசியம் ஆஃப் மூவிங் இமேஜ்' என்ற அரங்கில் இந்தப் படங்கள் திரையிடப்படுகின்றன.

இங்கு உலகின் தலைசிறந்த திரைப்படங்கள் திரையிடும் நிகழ்ச்சிகள், ஒரு இயக்குநரின் சிறந்த படங்களின் திரையிடல், இயக்குநர்களின் நேரடியான சந்திப்புக்கள் போன்ற நிகழ்வுகள் இடம்பெறும்.

Manirathnam's Roja, Bombay and Dil Se to screen at New York

இம்மாத இறுதியில் இயக்குநர் மணி ரத்னத்தின் மூன்று திரைப்படங்கள் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 2 வரை திரையிடப்படும். இந்த மூன்று நாள் சிறப்பு திரையிடல் நிகழ்ச்சியில் மணிரத்னம் நேரடியாகப் பங்கேற்கிறார்.

நிகழ்ச்சி இயக்குநர்களில் ஒருவரான ரிச்செர்ட் பெனா இதுபற்றிக் கூறுகையில், ‘தமிழ் சினிமாவில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கியவர் மணிரத்னம். இவரது திரைப்படங்கள் சிறப்பான காட்சியமைப்புகளுக்காகவும், சிறந்த பொழுதுபோக்காகவும் அதே சமயம் அரசியல், சமூக பொறுப்புணர்வுடன் கூடிய படங்களாக இருக்கும். வணிகத் திரைப்படம், கலைப்படம், அரசியல் படம் என்று காலகாலமாக திரைப்படங்களை பாகுபடுத்திக் கொண்டிருக்கும் விமரிசகர்களின் கூற்றுக்களைப் பொய்ப்பிக்கும் வகையில் மணி ரத்னத்தின் படங்கள் இவற்றின் அத்தனை கூறுகளை ஒருங்கிணைத்தே இருக்கும். மணி ரத்னம் சினிமா உலகின் ஒரு அரிய பொக்கிஷம். இந்த நிகழ்ச்சியில் அவருடைய புகழ்மிக்க படங்களை 35 எம் எம் மிகப் பெரிய திரையில் திரையிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்,' என்றார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் இந்திய திரைப்பட விழா நிறுவனர் கிரிஸ்டினா முரெளடா, நியூயார்க் திரைப்பட விழா முன்னாள் இயக்குநர் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ரிச்செர்ட் பெனா, மற்றும் உமா தா குன்ஹா ஆகிய மூவரும் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறார்கள்.

திரையிடல் விவரம்:

ரோஜா - ஜூலை 31, 2015

பாம்பே - ஆகஸ்ட் 1, 2015

தில் சே - ஆகஸ்ட் 2, 2015

 

பஜ்ரங்கி பாய்ஜானை பார்த்துவிட்டு குமுறிக் குமுறி அழுத சிறுமி: தீயாக பரவும் வீடியோ

மும்பை: பஜ்ரங்கி பாய்ஜான் படத்தை பார்த்த சிறுமி ஒருவர் சல்மான் கானின் கதாபாத்திரத்தை நினைத்து நினைத்து குமுறிக் குமுறி அழுத வீடியோவை இயக்குனர் கபீர் கான் வெளியிட்டுள்ளார்.

கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கரீனா கபூர் உள்ளிட்டோர் நடித்த பஜ்ரங்கி பாய்ஜான் படம் கடந்த 17ம் தேதி ரிலீஸானது. படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர். சல்மான் படங்களிலேயே இது தான் சிறந்தது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

படத்தில் வாய் பேச முடியாதவராக வரும் சிறுமி ஹர்ஷாலி மல்ஹோத்ராவின் நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் கபீர் கான் படம் பற்றி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

என் படத்தை பார்த்துவிட்டு இந்த சிறுமி அழுதுள்ளது மறக்க முடியாது என்று தெரிவித்து சிறுமி அழுதபோது எடுத்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

சூசி என்ற சிறுமி பஜ்ரங்கி பாய்ஜான் படத்தை பார்த்து முடித்ததும் சல்மான் கான், சல்மான் கான் என்று கூறி அழத் துவங்கினார். அவரது தாய் சல்மான் கானுக்கு என்ன என்று கேட்டதற்கு ஐ லவ் சல்மான் கான் என்று அழுதபடியே கூறியுள்ளார்.

சல்மானின் கதாபாத்திரத்தை நினைத்து தான் சிறுமி அப்படி அழுத்துள்ளார்.

 

மீண்டும் தொடங்கியது பாலாவின் தாரை தப்பட்டை

பாலா இயக்கி வரும் தாரை தப்பட்டை படம் ஒரு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.

பரதேசி' படத்திற்கு பிறகு சசிகுமாரை நாயகனாக வைத்து பாலா இயக்கி வரும் படம் ‘தாரை தப்பட்டை'. இளையராஜா இசையமைக்கும் ஆயிரமாவது படம் என்ற பெருமையுடன் இந்தப் படம் உருவாகிறது.

Bala restarts Thaarai Thappattai shoot

சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கிறார் வரலட்சுமி. பாலா தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் பி ஸ்டுடியோஸ் மூலம் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தஞ்சை, குடந்தை பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், சசிகுமார் காயமடைந்த காரணத்தால் படப்பிடிப்புக்கு திடீரென சிறு இடைவெளி கொடுத்தனர்.

இப்போது சசிகுமார் படப்பிடிப்புக்குத் தயாராகிவிட்டார். பாலாவும் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார். ஒரு கரகாட்டப் பாடலுடன் இந்த ஷெட்யூலில் காட்சிகளைப் படமாக்குகிறார் பாலா.

இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

 

சக்திவேல் வாசு... பி வாசு மகனுக்கு இந்தப் பெயராவது கைகொடுக்குமா?

சினிமாவில் திரும்பிய பக்கமெல்லாம் வாரிசுகள் ஆதிக்கம்தான். அத்தனை வாரிசுகளும் ஜெயிக்கிறார்களா என்பது வேறு விஷயம்.

தொட்டால் பூ மலரும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் இயக்குநர் பி வாசுவின் மகன் சக்தி. தொடர்ந்து நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்தார்.

P Vasu son changes his name as Sakthivel Vasu

ஆனால் நினைத்த உயரத்தை அடைய முடியவில்லை. இப்போது தனது இயற்பெயரான சக்திவேலுடன் அப்பா பெயர் வாசுவையும் இணைத்துக் கொண்டு, சக்திவேல் வாசு என்று மாறியுள்ளார்.

க்னைடாஸ்கோப் நிறுவனம் சார்பாக டாக்டர் எஸ் செல்வமுத்து - என் மஞ்சுநாத் இணைந்து தயாரிக்கும் தற்காப்பு என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார் சக்திவேல் வாசு. ஆர் பி ரவி இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தில் மற்றொரு நாயகனாக இதுவரை நடித்திராத புதுமையான கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கின்றார்.

P Vasu son changes his name as Sakthivel Vasu

கதை கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் நமது எல்லையில் அமைந்துள்ள கர்நாடகாவின் பெங்களூருவிலும் நடைபெறுகிறது.

படம் குறித்து இயக்குநர் ரவி கூறுகையில், "மனித உயிர்களின் மேன்மையை சொல்லும் அம்சம் கொண்ட கதை இது. தவறுதலாக நடைபெறும் ஒரு கொலையால் ஏற்படும் பிரச்சனைகளை மிக எதார்த்தமாக சொல்லும் திரைக்கதையாக உருவாக்கியுள்ளோம்.

தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பல உண்மை சம்பவங்களை மையப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்காப்பு என்பது தன்னை மட்டும் காத்துக்கொள்ளுவதைப் பற்றி பேசாமல் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை கொஞ்சம் அழுத்தமாகவே பேசும்.

P Vasu son changes his name as Sakthivel Vasu

மிகவும் புதுமையான கதைக்களம். காரணம் எதுவானாலும் உயிர்ப்பலி தீர்வாகாது என்ற உயரிய நோக்கத்தை வலியுறுத்துகிறது 'தற்காப்பு'. எப்எஸ் பைசல் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு செய்கிறார் ஜோன்ஸ் ஆனந்த்.

அடுத்த மாதம் இந்தப் படம் திரைக்கு வருகிறது.

 

நிம் *க்ளெ கடீட்வூ *ட்ட கொரேடா-ஜ்ரா ரெய்ய்.. ஃபூஹூ *க்ளெ.... என்ன இது?

பாகுபலியின் சுவாரஸ்யான விஷயங்களுள் ஒன்று, இடைவேளைக்குப் பின் வரும் ஒரு புதிய மொழி.

எங்கய்யா பிடிச்சாங்க இப்படியொரு பாஷையை என பலரையும் கேட்க வைத்த மொழி அது.

இந்த மொழி இந்தப் படத்துக்காகவே உருவாக்கப்பட்டது. கிளிக்கி (Kilikki) என்று பெயர் சூட்டப்பட்ட இந்த மொழியை ராஜமவுலி ஆலோசனையுடன் உருவாக்கியவர் மதன் கார்க்கி. இதனை சென்னையில் நடந்த பாகுபலி பட பிரஸ் மீட்டிலேயே சொன்னார் மதன் கார்க்கி.

Here some samples from Madan Karkky's Bahubali language Kilikki

இந்த கிளிக்கி மொழியை 750 வார்த்தைகள் மற்றும் நான்கு இலக்கண விதிகளுடன் உருவாக்கியிருக்கிறார் மதன் கார்க்கி.

இந்த மொழியில் ஒரு குறியீடும் கூட எழுத்தாகப் பயன்படுத்தப்படுகிறது. நாக்கை தட்டித் தட்டி ஒருவித ஒலி எழுப்புவார் படத்தில் காலகேயனாக நடித்துள்ள பிரபாகர். அந்த ஒலிக்கு * என்ற குறியீட்டைப் பயன்படுத்தியுள்ளார் மதன் கார்க்கி.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இதுபற்றி ராஜமவுலியும் மதன் கார்க்கியும் பேசி, உருவாக்கிய மொழியாம் இது.


கிளிக்கி மொழியில் சில வாக்கியங்களும், அவற்றின் தமிழர்த்தமும் தெரிந்து கொள்ள ஆசையா.. இதோ.. (க்ளிக்கியில் நான் என்பதை மின் என்றும், நீ என்பதை நிம் என்றும் குறிப்பிடுகிறார் மதன் கார்க்கி)

தமிழ்: இது உண்மையா?

கிளிக்கி: லோர்ஷா - க்வாய்

தமிழ்: ஆயுதங்களைக் கீழே போட்டுட்டு ஓடிப் போயிடு..

கிளிக்கி: நிம் *க்ளெ கடீட்வூ *ட்ட கொரேடா-ஜ்ரா ரெய்ய்.. ஃபூஹூ *க்ளெ

தமிழ் : முட்டாள் மாதிரி பேசாதே..

கிளிக்கி: டம்பாடம்பா ஜிவ்ல பாஹா-ந

போதுமா கிளிக்கி!

 

பாகுபலி இரண்டாம் பாகம்... ஒரு டீசர் ரேஞ்சுக்கு வெளியாகியுள்ள முதல் போஸ்டர்!

பாகுபலி.. இந்திய சினிமாவில் பிரமாண்டத்தின், வெற்றியின் உச்சமாகக் கொண்டாடப்பட்டு வரும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்களை இப்போதிலிருந்தே தயார்ப்பாடுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

பாகுபலியின் முதல் பாகம் 'பாகுபலி - ஆரம்பம் (Bahubali - The Beginning)' என்று வெளியானது. அடுத்த பாகம் 'பாகுபலி - முடிவு (Bahubali - The Conclusion)' என்று வெளியாகவிருக்கிறது.

இந்த இரண்டாம் பாகத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. முதல் படத்தை விட முற்றிலும் புதிய போர்க்களம், எதிரிப்படைகள் இந்த இரண்டாம் பாகத்தில் இருப்பதை இந்தப் போஸ்டர் உறுதிப்படுத்துகிறது.

Bahubali - The Conclusion first poster released

ஆக்ரோஷமான பிரபாஸ், தொப்பியும் இரும்புக் கவசங்களும் அணிந்த எதிரிப்படை வீரர்களை கோடரியால் துவம்சம் செய்வது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரே படத்தின் பிரமாண்டத்தைப் பறைசாற்றும் வகையில் உள்ளது. கிட்டத்தட்ட ஒரு டீசருக்கு சமமாக இந்த போஸ்டர் வெளியாகியுள்ளது.

 

அந்த சீனை தூக்கினால்தான் விழாவுக்கு வருவேன் - அடம் பிடிக்கும் ரேஷ்மி மேனன்!

ரேஷ்மி மேனன்.... கோடம்பாக்கத்தில் இப்போது பரபரப்பு நாயகி இவர்தான். பாபி சிம்ஹாவின் வருங்கால மனைவியான இவர், இப்போது ஒரு படத்துக்கு வில்லங்கமாக நிற்கிறார்.

அந்தப் படம் கிருமி. காக்கா முட்டை புகழ் மணிகண்டன் கதை திரைக்கதை எழுதியுள்ள இந்தப் படத்தில் கதிர் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரேஷ்மி மேனன் நடித்திருக்கிறார்.

படப்பிடிப்பு முடிந்து, நாளை மறுநாள் இசை வெளியீடும் நடக்கவிருக்கிறது.

இந்த நிலையில் படக்குழுவுக்கு எந்த ஒத்துழைப்பும் தர முடியாது என முரண்டு பிடிக்கிறாராம் ரேஷ்மி.

Reshmi Menon's adamant behavior with Kirumi crew

என்னதான் பிரச்சினை?

இந்தப் படம் ஆரம்பிக்கும்போது ரேஷ்மிக்கும் பாபி சிம்ஹாவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. கிருமி படத்தில் கதிருக்கும் ரேஷ்மிக்கும் ரொம்ப நெருக்கமான காதல் காட்சிகள் சில வைத்திருக்கிறார்கள். ரேஷ்மியும் எந்த மறுப்பும் சொல்லாமல் முழுமையாக ஒத்துழைத்து நடித்துக் கொடுத்திருக்கிறார்.

நாளை மறுநாள் படத்தின் இசை வெளியீட்டில் கலந்து கொள்ளுமாறு தயாரிப்பாளர் தரப்பில் அழைத்திருக்கிறார்கள். ஆனால் சென்னையிலேயே இருந்தும்கூட, விழாவுக்கு வர முடியாது என்று கூறிவிட்டாராம்.

Reshmi Menon's adamant behavior with Kirumi crew

ஏன்?

நீங்கள் ஷூட் பண்ண அந்த நெருக்கமான காட்சிகளை முற்றாக நீக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆடியோ வெளியீடு மட்டுமல்ல, படம் தொடர்பான எந்த நிகழ்ச்சிக்கும் வரமாட்டேன் என்று கூறிவிட்டாராம்.

ஆனால் இயக்குநரைக் கேட்டால், அந்தக் காட்சிகள் கதைக்கு மிகவும் தேவை. இல்லாவிட்டால் படம் அழுத்தமாக இருக்காது. எனவே நீக்க முடியாது என்று கறாராகக் கூற, தயாரபிப்புத் தரப்பு மீண்டும் ரேஷ்மியிடம் போயிருக்கிறது.

Reshmi Menon's adamant behavior with Kirumi crew

ஆனால் ரேஷ்மியோ, என் முடிவில் மாற்றமில்லை என்று கூறிவிட, பப்ளிசிட்டிக்கான வாய்ப்பு குறைவாக உள்ளதே என கையைப் பிசைகிறது தயாரிப்புத் தரப்பு.

"இதுதான் காட்சி என விளக்கி, அதற்கு ரேஷ்மியும் ஒப்புக் கொண்டதால்தான் எடுத்தோம். இந்த மறுப்பை அப்போதே சொல்லியிருக்கலாம். ஆனால் படம் ரிலீசுக்குத் தயாராக உள்ளது. நல்ல பப்ளிசிட்டி முக்கியம். அதற்கு ஹீரோயின் வேண்டும். ஆனால் அவரோ இப்போது திடீரென இப்படி வில்லங்கம் செய்கிறார்..." என்கிறார் தயாரிப்பாளர்.