3/7/2011 12:41:45 PM
'ஆடுகளம்' படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த டாப்ஸி, தெலுங்கில் கிளாமராக நடித்து வருகிறார். இதுபற்றி கேட்டபோது அவர் கூறியதாவது: அதிகமான ரசிகர்களிடம் நம்மை கொண்டு செல்வது கிளாமர் என்பது உண்மைதான். ஆனால், நடிப்பும் கிளாமரும் வெவ்வேறுவிதமானது. ரசிகர்களிடம் அதிகமாக பிரபலமானால்தான் வாய்ப்புகள் கிடைக்கும் சூழல் இன்று இருக்கிறது. அவர்களின் ஆதரவை பெற்றால்தான் சினிமாவில் நிலைக்க முடியும். பிரபலமாகவில்லை என்றால் என்னதான் கிளாமராக நடித்தாலும் அது வீண்தான். சினிமாவில் நான் செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. அதற்குள் என்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். இது எனது ஆரம்பகட்டம். அதனால் கிளாமராக நடிப்பதில் தவறில்லை. ஆனால், இந்த கிளாமர் தற்காலிகமானதுதான். அனைத்துவிதமான கேரக்டர்களிலும் நடித்துவிட்டு, பின்னர் விருதுக்கான படங்களில் நடிப்பேன்.
இவ்வாறு டாப்ஸி கூறினார்.