7/6/2011 4:38:57 PM
கொழும்பு விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டு சிறிய அறையில் நடிகை செலினா ஜெட்லி 11 மணி நேரம் அடைத்து வைக்கப்பட்டார். பிரபல இந்தி நடிகை செலினா ஜெட்லி. தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியா வேடத்தில் ஸ்ரீமதி என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு மாலத்தீவில் நடந்தது. அங்கிருந்து மும்பை திரும்ப இலங்கை வழியாக இணைப்பு விமானத்தில் செலினா மற்றும் படப்பிடிப்பு குழுவினர் வந்தனர். கொழும்பு விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த இணைப்பு விமானம் தாமதமானது. அவர்கள் அனைவரும் விமான நிலைய வளாகத்தில் இருந்த சிறிய அறையில் தங்க வைக்கப்பட்டனர்.
விமானம் வரும் வரை அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பதற்கு பதிலாக, சிறிது நேரம் வெளியே சென்று வர விரும்பினார் செலினா. ஆனால், இலங்கை விமான நிலைய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இலங்கை விசா அவரிடம் இல்லாததால் வெளியே விடமுடியாது என்று கூறினர். அறையை விட்டு வெளியே வருவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் கூறி அவரை அறைக்குள் முடக்கினர். சுமார் 11 மணி நேரம் சிறிய அறையில் முடங்கியிருந்தது மிகவும் அசவுகரியமாக இருந்ததாக செலினா கூறியுள்ளார்.