லிங்கா பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் 'தல' ட்ரீட்?

சென்னை: என்னை அறிந்தால் படத்தின் டீஸர் லிங்கா படத்தின் இடையே வெளியிடப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

அஜீத் குமார் நடித்துள்ள என்னை அறிந்தால் படத்தின் டீஸர் கடந்த 4ம் தேதி ரிலீஸ் ஆனது. டீஸர் வெளியான 48 மணிநேரத்தில் அதை யூடியூப்பில் ஏராளமானோர் பார்த்துவிட்டனர். யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட டீஸர் என்ற பெருமையை என்னை அறிந்தால் பெற்றுள்ளது.

லிங்கா பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் 'தல' ட்ரீட்?

இந்நிலையில் என்னை அறிந்தால் பட டீஸரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லிங்கா படத்துடன் சேர்த்து தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். அதனால் லிங்கா பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு தல விருந்து காத்திருக்கிறது.

என்னை அறிந்தால் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. இதற்கிடையே ரஜினியின் லிங்கா படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என்று பலரும் வெள்ளிக்கிழமை லீவ் போட தயாராகிவிட்டனர்.

எங்கள் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை லிங்கா படத்தை பார்க்கும் வாய்ப்பு எங்கள் சினிமா ஆசிரியர் ஷங்கருக்கு மட்டும் தான் கிடைத்துள்ளது. ஜமாய்ங்க...

 

'லிங்கா'... டிக்கெட் முன்பதிவில் தமிழகத்தில் புதிய சாதனை!

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படமான ''லிங்கா'... டிக்கெட் முன்பதிவில் தமிழகத்தில் புதிய சாதனை!  

இந்நிலையில் 'லிங்கா' டிக்கெட் புக்கிங் சென்னை உள்பட பல நகரங்களில் நேற்ரு மாலை தொடங்கியது.

சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸ் தங்களது தியேட்டர்களில் வெள்ளிகிழமை மட்டும் 89 காட்சிகளை லிங்காவுக்கு ஒதுக்கியுள்ளது. இது முன் எப்போதும் இல்லாத காட்சி எண்ணிக்கை ஆகும்.

'லிங்கா' டிக்கெட் புக்கிங் ஆரம்பிப்பதை அறிந்துகொண்ட ரஜினி ரசிகர்கள் ஒரே நேரத்தில் சத்யம் இணைய தளத்தை முற்றுகை இட்டதால் சில மணி நேரங்கள் சத்யம் இணையதளம் ‎முடங்கிவிட்டது.

பின்னர்தான் புக்கிங் ஆரம்பமானது. புக்கிங் தொடங்கிய 30 நிமிடங்களில் மூன்று நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்றுவிட்டன. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தலா 89 ஷோக்களை சத்யம் ஒதுக்கியுள்ளது. அனைத்து டிக்கெட்டுகளும் தீர்ந்தன. அடுத்து 15 முதல் 18-ம் தேதி வரையிலான காட்சிகளுக்கு வேகமாக டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகின்றன.

சென்னையில் உள்ள மற்றொரு தியேட்டரான தேவி ஒரு நாளைக்கு 15 காட்சிகளை 'லிங்கா'வுக்கு ஒதுக்கியுள்ளது. தேவியிலும் அனைத்து டிக்கெட்டுகளும் தீர்ந்துவிட்டன. தேவியில் வெள்ளிக்கிழமைக்கான ஒரு நாள் டிக்கெட் புக்கிங் மூலம் மட்டும் 15 லட்ச ரூபாய் வசூலாகியுள்ளது. மூன்று நாட்களுக்கு ரூ 45 லட்சத்தை அந்த அரங்கம் குவித்துள்ளது.

மாயாஜால் திரையரங்கம் ஒரு நாளைக்கு 100 ஷோக்களை லிங்காவுக்கு ஒதுக்கியுள்ளது. இந்த காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை புக்மை ஷோ தளம் மூலம் ரிசர்வ் செய்து வருகிறது. இன்றுதான் மாயாஜால் புக்கிங்கை ஆரம்பித்தது. மாலைக்குள் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகளை மாயாஜால் விற்றுள்ளது.

வட சென்னைப் பகுதியில் பிரபலமான அபிராமி மெகா மாலில் உள்ள நான்கு அரங்குகளிலும் நாளொன்றுக்கு தலா 16 காட்சிகள் லிங்காவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கும் முதல் 5 நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

ஐநாக்ஸ், கமலா, ஆல்பர்ட், சாந்தி, உதயம் போன்ற காம்ளக்ஸ்களிலும் இதே நிலைதான்.

இந்த முன்பதிவு மூலம் மட்டுமே இதுவரை ரூ 7 கோடியை சென்னையில் மட்டுமே லிங்கா வசூலித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இது தவிர, ரசிகர் மன்ற சிறப்புக் காட்சிகளாக நள்ளிரவு, அதிகாலை, மற்றும் காலை 8 மணிக்கு நடக்கும் காட்சிகளுக்கான கட்டண வசூல் தனிக் கணக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

 

நாளை முதல் என்னை அறிந்தால் பாட்டு, 'அதாரு உதாரு'!

அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தின் டீசர் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அடுத்து படத்திலிருந்து ஒரு பாடலை மட்டும் வெளியிடவிருக்கிறார்கள்.

அதாரு அதாரு உதாரு உதாரு.. என்று தொடங்கும் இந்தப் பாடல் நாளை வியாழக்கிழமை முதல் சமூக வலைத் தளங்கள் மற்றும் வானொலிகளில் ஒளி-ஒலிபரப்பாகும்.

நாளை முதல் என்னை அறிந்தால் பாட்டு, 'அதாரு உதாரு'!

இந்தப் பாடலை விஜய் பிரகாஷ், கானா பாலா பாடியுள்ளனர். விக்னேஷ் சிவன் பாடலை எழுதியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

அதுமட்டுமல்ல, என்னை அறிந்தால் படத்தின் டீசரை பெரிய திரையிலும் போட்டு ரசிகர்களைக் குஷிப்படுத்த முடிவு செய்துள்ளனர். எனவே நாளையிலிருந்து அனைத்து திரையரங்குகளிலும் என்னை அறிந்தால் டீசரையும் கண்டு மகிழலாம்.

 

அமெரிக்காவில் ரஜினிக்கு பிரமாண்ட பேனர்கள்... 100 அரங்குகளில் லிங்கா பிரிமியர் ஷோ!

அமெரிக்காவில் 328 அரங்குகளில் தமிழிலும் தெலுங்கிலும் ரஜினியின் லிங்கா வெளியாவதை ஏற்கெனவே தெரிவித்திருந்தோம்.

அடுத்ததாக, லிங்கா வெளியீட்டை இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்டமாகக் கொண்டாட அமெரிக்காவில் உள்ள ரஜினி ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். ரஜினி படங்கள் வெளியாகும்போது தமிழகத்தில் நடக்கும் ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கு இணையாக அமெரிக்காவிலும் இந்த முறை நடத்தப் போகிறார்களாம். கூடவே ரஜினி பிறந்த நாளையும் அமர்க்களமாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.

அமெரிக்காவில் ரஜினிக்கு பிரமாண்ட பேனர்கள்... 100 அரங்குகளில் லிங்கா பிரிமியர் ஷோ!

அமெரிக்காவில் லிங்கா வெளியாகும் அரங்குகளில் ரஜினிக்கு 30 அடி உயர கட் அவுட் வைத்துள்ளனர். இந்த 328-ல்100 அரங்குகளில் 11-ம் தேதியே பிரிமியர் ஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிகாகோவில்..

சிகாகோ நகரில் ரோஸ்மான்ட் ஐமேக்ஸ் அரங்கில் மாலை 7 மணிக்கு பிரிமியர் காட்சி நடைபெறுகிறது. இந்தக் காட்சிக்கு வருபவர்களுக்காக தமிழகத்திலிருந்து லிங்கா டி ஷர்டுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. லிங்கா பேனர்களும் தமிழகத்தில் தயாராகி வந்துள்ளன. இந்தக் காட்சிக்கு கட்டணமாக 25 டாலர்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1500 கட்டணம். ரோஸ்மாண்ட் ஐமேக்ஸில் 500 பேர் வரை படம் பார்க்கலாம்.

படம் பார்க்க வரும் ரசிகர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்க ஏற்பாடு செய்துள்ளார் சிகாகோ ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ஜெய் பாலா. ரஜினியை திரையில் பார்த்ததும் விசிலடித்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்த அனைவருக்கும் இலவச விசில் தரவும் ஜெய் பாலா ஏற்பாடு செய்துள்ளார்.

ரசிகர்களின் இந்த ஏற்பாடுகளைப் பார்த்த சிகாகோ டெலிவிஷன் மற்றும் மீடியாக்கள் இதனை நேரடியாக ஒளிபரப்பவும் திட்டமிட்டுள்ளனவாம். மேலும் விபரங்களுக்கு: facebook.com/lingaachicago

 

சென்னையில் வடிவேலு மகன் திருமணம்... திரையுலகினருக்கு அழைப்பில்லை!

சென்னை: தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களுள் ஒருவரான வடிவேலுவின் மகன் சுப்பிரமணி - புவனேஸ்வரிக்கு இன்று சென்னையில் திருமணம் நடந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு திரையுலகைச் சேர்ந்த பெரும்பாலானவர்களை வடிவேலு அழைக்கவில்லை.

வடிவேலு தன் மகளுக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடத்தி வைத்தார். இந்தத் திருமணம் மதுரையில் நடந்தது. தனது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் சிலரை மட்டுமே அவர் திருமணத்துக்கு அழைத்தார்.

சென்னையில் வடிவேலு மகன் திருமணம்... திரையுலகினருக்கு அழைப்பில்லை!

அடுத்து தன் மகன் சுப்பிரமணி திருமணத்தை இன்று சென்னையில் நடத்தினார். மணப்பெண் புவனேஸ்வரி வடிவேலுவின் மனைவி ஊரான திருபுவனத்தைச் சேர்ந்தவர்.

இந்தத் திருமணத்துக்கு திரையுலகைச் சேர்ந்த யாரையுமே அழைக்கவில்லையாம் வடிவேலு. அரசியல் பிரமுகர்களுக்கும் அழைப்பு தரவில்லை.

சென்னை ராஜா முத்தையா மண்டபத்தில் நடந்த இந்த திருமணத்துக்கு தனது நெருங்கிய உறவிணர்கள் மற்றும் நண்பர்களை மட்டும் அழைத்திருந்தார் வடிவேலு.

 

சினிமாவுக்கு பை பை... திருமணத்திற்கு ஹாய் ஹாய்.. சொல்லத் தயாராகும் "குதிரை"!

சென்னை: சினிமாவுக்கு பை பை சொல்லி விட்டு திருமணத்திற்கு ஹாய் ஹாய் சொல்லத் தயாராகிறாராம் யோகா நடிகை.

உச்ச நடிகர் படம் மற்றும் புத்த இயக்குநர் படத்தை முடித்து விட்டு திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்துள்ளாராம். இதற்காக தேடி வரும் புதுப்பட வாய்ப்புகளை அவர் தவிர்த்து வருகிறாராம்.

சினிமாவுக்கு பை பை... திருமணத்திற்கு ஹாய் ஹாய்.. சொல்லத் தயாராகும்

தெலுங்கில் ராணி படத்திற்குப் பிறகு நடிகைக்கு திருமணம் கன்பார்ம் என்கிறார்கள் அவருக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள். மாப்பிள்ளை வழக்கம் போல தொழிலதிபர் ஒருவர் தானாம். அமெரிக்காவில் இருக்கிறாராம்.

கல்யாணத்துக்குப் பிறகு அம்மணியும் அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிடுவாராம் !

 

யாரு, நானா சில்க்?, ராஸ்கல்: கோபத்தில் கொந்தளிக்கும் நடிகை

சென்னை: ஆந்திராவில் பிறந்து சென்னையில் செட்டிலான அந்த கண்ணழகி நடிகை தன்னை யாராவது சில்க் ஸ்மிதாவுடன் ஒப்பிட்டால் கடுப்பாகிவிடுகிறாராம்.

ஆந்திராவில் பிறந்து சென்னையில் செட்டிலாகி வேலூரில் கல்லூரி படிப்பை முடித்த அந்த நடிகை கடந்த 2009ம் ஆண்டு கோலிவுட் வந்தார். அதற்கு முன்பு அவர் விளம்பரங்களில் நடித்து வந்தார். இந்தியில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுத்த டர்ட்டி பிக்சர் படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து அதை தமிழில் ரீமேக் செய்தால் நடிக்க நான் ரெடி என்று நடிகை தெரிவித்திருந்தார்.

யாரு, நானா சில்க்?, ராஸ்கல்: கோபத்தில் கொந்தளிக்கும் நடிகை

மேலும் அவரை பார்ப்பவர்கள் சின்ன சில்க் என்று அழைத்தால் பெருமைப்பட்டு வந்தார். இந்நிலையில் தான் அம்மணிக்கு சில்க்கின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் அவரின் வாழ்க்கை முடிந்த விதம் பற்றி தெரிந்து அதிர்ந்துள்ளார்.

இதனால் தற்போது யாராவது தன்னை சில்க் என்று அழைத்தாலோ, அவருடன் ஒப்பிட்டு பேசினாலோ கடுப்பாகிவிடுகிறாராம் நடிகை. சில்க் குத்தாட்டம் போட்டவர். ஆனால் நான் ஹீரோயினாக்கும் என்று பெருமையாக கூறுகிறாராம்.

ரீமேக்கில் நடிக்க ஆசைப்பட்டபோது சில்க் வாழ்க்கை வரலாறு நடிகைக்கு தெரியாமல் போய்விட்டதோ?

 

பொங்கலன்று சேரன் படம்... '50 லட்சம் திரைகளில்' வெளியிடுகிறார்!

இந்தப் பொங்கலுக்கு சேரனின் ஜேகே என்ற நண்பனின் வாழ்க்கை படமும் களமிறங்குகிறது.

‘பாரதி கண்ணமா', ‘பொற்காலம்', 'பாண்டவர் பூமி,' ‘ஆட்டோக்கிராப்', ‘தவமாய் தவமிருந்து' போன்ற வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் சேரன், இப்போது இயக்கியுளள படம் ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை'.

பொங்கலன்று சேரன் படம்... '50 லட்சம் திரைகளில்' வெளியிடுகிறார்!

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், சரியான தியேட்டர் கிடைக்காமல், வெளியிட முடியாத சூழலில் சிக்கிக் கொண்டது.

இந்நிலையில், சேரன் புதுமுயற்சியாக ‘சி2எச்' (C2H) சினிமா டு ஹோம் என்ற திட்டத்தை தொடங்கி, அதன்மூலம், புதிய திரைப்படங்களை நேரடியாக டிவிடி மூலம் வீடுகளுக்கே கொண்டு செல்லும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

சமீபகாலமாக இந்த திட்டத்திற்கான பணிகளை மேற்கொண்டு வந்த சேரன், வருகிற ஜனவரி மாதம் 25-ந் தேதி தனது ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தை சி2எச் திட்டத்தின் மூலம் வெளியிடவுள்ளார்.

பொங்கலன்று சேரன் படம்... '50 லட்சம் திரைகளில்' வெளியிடுகிறார்!

உலகமெங்கும் இப்படத்தின் டிவிடிகள் 50 லட்சம் விற்பனையாகும் என்றும், அதன்மூலம் 50 லட்சம் குடும்பங்கள் இத்திரைப்படத்தை கண்டுகளிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறார் சேரன்.

தயாரிப்பாளர்களே தங்கள் படங்களின் ஒரிஜினல் டிவிடிக்களை தயாரித்து கொடுத்தால், திருட்டு விசிடிக்கள் ஒழியவும் வாய்ப்பிருக்கிறது என்று கமல்ஹாஸன் பல காலம் கூறி வருவதை சேரன் நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளார்.

 

இனி கொஞ்ச நாளைக்கு விஜய் சேதுபதியை தாடி மீசையின்றிப் பார்க்கலாம்!

தாடியும் மீசையுமாகவே நாம் பார்த்துப் பழக்கப்பட்ட விஜய் சேதுபதியை, இனி கொஞ்ச நாளைக்கு தாடி மீசை இல்லாமல் பார்க்கலாம்.

தனுஷ் தயாரிப்பில் அவர் நடிக்கும் நானும் ரவுடிதான் படத்துக்காக இந்த இரண்டையுமே அவர் தியாகம் செய்துவிட்டார்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பவர் நயன்தாரா. இவர்கள் இணையும் இந்த படத்தை போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இனி கொஞ்ச நாளைக்கு விஜய் சேதுபதியை தாடி மீசையின்றிப் பார்க்கலாம்!

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி வேகமாக நடந்து வருகிறது.

இந்தப் படத்துக்காக விஜய் சேதுபதி தன்னுடைய தாடி மற்றும் மீசையை மழித்துக் கொண்டுள்ளார். இதே படத்தில் நரைத்த தாடி. பெரிய மீசையுடனும் அவர் வருகிறார். அந்தக் காட்சிகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டுவிட்டன.

இப்போது இளமையான கேரக்டருக்கு ஏற்றமாதிரி அவர் மாறியுள்ளார்.

இதுவரை அவர் நடித்த எல்லாப் படங்களிலுமே லேசான அல்லது அடர் தாடி மற்றும் மீசையுடன்தான் தோன்றினார் விஜய் சேதுபதி. அதுவே அவரது அடையாளமாகவும் மாறிவிட்டது.

 

மகனது படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய ஜெயராம்!

மகன் காளிதாஸ் ஹீரோவாக நடிக்கும் படப்பிடிப்பில் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் நடிகர் ஜெயராம்.

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் கதாநாயகனாக நடிக்கும் படம் ஒருபக்கக் கதை. வாசன் விசுவல்ஸ் சார்பில் கேஎஸ் சீனிவாசன் தயாரிக்கிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

மகனது படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய ஜெயராம்!

இந்தப் படத்தின் ஷூட்டின் இன்று தொடங்கியது. படப்பிடிப்பின் முதல் நாளில், நடிகரும் ஹீரோவின் தந்தையுமான ஜெய்ராம் கேக் வெட்டி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

மகனது படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய ஜெயராம்!

தயாரிப்பாளர் சீனிவாசன், இயக்குநர் பாலாஜி தரணிதரன், காளிதாசின் தாயும் நடிகையுமான பார்வதி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

என் வாழ்க்கையை சிதைத்த மீடியாக்காரர்களே.. இது நியாயம்தானா? - ஸ்வேதா பாசுவின் கடிதம்

மீடியாக்காரர்கள் என் மொத்த வாழ்க்கையையும் சிதைத்து விட்டார்கள். இது நியாயம்தானா? என்று கேட்டு ஒரு பெரிய கடிதம் எழுதியுள்ளார் சமீபத்தில் விபச்சார வழக்கில் கைதாகி, சிறையிலிருந்து. விடுதலையாகி வந்துள்ள நடிகை ஸ்வேதா பாசு.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், தான் சொல்லாத விஷயங்களை மீடியாக்களே இட்டுக்கட்டி எழுதிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

என் வாழ்க்கையை சிதைத்த மீடியாக்காரர்களே.. இது நியாயம்தானா? - ஸ்வேதா பாசுவின் கடிதம்

அந்த கடிதம்:

எனக்கு சின்ன வயதிலிருந்தே பத்திரிகைகாரர்கள் மீது மரியாதை உண்டு. எங்கோ எல்லைப் பகுதியில் இருந்தபடி போர்ச்செய்திகளைத் தரும், மோசமான கால நிலையில் இருந்தபடி இயற்கைச் சீற்றங்களைப் பற்றி செய்திகள் தரும், பயங்கரவாதத்தின் நுனியில் நின்றபடி, அதன் கோரங்களைப் படம் பிடிக்கும் அந்த செய்தியாளர்களை என் வாழ்க்கையின் ஹீரோக்களாக நினைத்தேன். அதனால்தான் பத்திரிகைத் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் பட்டமும் பெற்றேன்.

ஆனால் அதே பத்திரிகையாளர்கள்தான் என் வாழ்க்கையை நாசப்படுத்திவிட்டனர்.

என் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொன்றும் அடுத்தடுத்த நிகழ்வின் தொடர்ச்சியாக அமைந்தன என்பது புரிகிறது. ஆனால் நான் சொல்லாத, வெளியிடாத அறிக்கையையெல்லாம் கற்பனையாக எழுதி என் பெயரில் வெளியிட்டு என் வாழ்க்கையை மேலும் சிதைத்தன மீடியாக்கள்.

இந்த அறிக்கையைப் பாருங்கள்:

"என் வாழ்க்கையில் மோசமானவற்றை தேர்வு செய்துவிட்டேன். என்னிடம் பணம் இல்லை. என் குடும்பத்தை காப்பாற்றவும், வேறு சில நல்ல விஷயங்களுக்காகவும் பணம் தேவைப்பட்டது. எல்லா கதவுகளும் மூடப்பட்ட நிலையில், விபச்சாரத்தில் இறங்கினால் நிறைய பணம் கிடைக்கும் என சிலர் வழிகாட்டினர். எனக்கு வேறு எந்த உதவியும் கிடைக்காத நிலையில் விபச்சாரத்தில் இங்கினேன். நான் ஒருத்தி மட்டுமல்ல, என்னைப் போல பல நடிகைகள் விபச்சாரச்சில் ஈடுபட்டுள்ளனர்..."

- ஏதோ 80களில் வெளிவந்த சினிமா வசனம் மாதிரி உள்ள இந்த அறிக்கையை சத்தியமாக நான் வெளியிடவில்லை. நீங்கள் எப்பேர்ப்பட்ட பத்திரிகைகாரராக இருநாதாலும், தயவு செய்து இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.

நல்ல வேளை என் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் இதனை நம்பவில்லை. நான் அப்படியெல்லாம் பேசமாட்டேன் என அவர்களுக்குத் தெரியும்.

இந்தியா மற்றும் உலகெங்கும் உள்ள அத்தனைப் பேருக்கும் நான் சொல்லிக் கொள்கிறேன், இப்படி ஒரு அறிக்கையை நான் வெளியிடவே இல்லை. யாருக்கும் அப்படி பேட்டி கொடுக்கவுமில்லை.

என்னதான் என்மீது இரக்கப்பட்டு, ஆதரவு தெரிவித்தாலும், இந்த 23 வயதில் சொந்தக் காலில் இந்தப் பெண் நிற்கிறாளா என்ற பலரது சந்தேகம்தான் நமது சமுதாயத்தில் உள்ள பிரச்சினையே... என்னை மதிக்க வேண்டும், விரும்ப வேண்டும் என யாரையும் நான் கட்டாயப்படுத்தவில்லை. நடந்த எதுவும் என் கட்டுப்பாட்டை மீறியது.

என்னைக் கைது செய்ததும் நேராக பெண்கள் இல்லத்துக்குக் கொண்டுபோய்விட்டார்கள். அங்கு 59.5 நாட்கள் காவலில் இருந்தேன். இந்த நாட்களில் எனக்கு நாளிதழ் வாசிக்கவோ, டெலிவிஷன் பார்க்கவோ, இணையதளம் பார்க்கவோ அனுமதியில்லை. என் அம்மாவுக்கு மட்டும் இரு முறை செல்போனில் பேசினேன். மீதி நேரத்தில் அந்த போனை வாங்கி வைத்துக் கொண்டனர். இதில் எங்கே எப்போது யாருக்கு நான் அப்படி ஒரு அறிக்கை கொடுத்திருக்க முடியும்!

அக்டோபர் 30-ம் தேதி மும்பை திரும்பிய பிறகு அத்தன் நாளிதழ்களின் செய்திகள், இணையதளச் செய்திகளைப் படித்தேன். அவற்றைப் படித்த பிறகு வருத்தப்பட்டதை விட, ரொம்ப வேடிக்கையாக உணர்ந்தேன்.

இப்படி ஒரு அறிக்கையை நானும் தரவில்லை. ஹைதராபாத் போலீசும் வெளியிடவில்லை. அவர்கள் இதை என்னிடம் உறுதியாகத் தெரிவித்தனர். அப்படி ஏதாவது அறிக்கை வெளியாகியிருந்தால் அது சட்டவிரோதமானது.

சரி, என்னுடன் யாரோ ஒரு தொழிலதிபர் இருந்ததாக கதை விட்டார்கள் அல்லவா... என்னைக் கைது செய்த போது உடனிருந்த அந்த தொழிலதிபர் யார் என்பதையும் வெளியிட்டிருக்கலாமே.. யார் அவர் என்ற விவரம் இருக்கிறதா... இருந்தால் நிரூபிக்கலாமே!

அந்த இல்லத்தில் நான் உண்மையிலேயே சந்தோஷமாகத்தான் இருந்தேன். குழந்தைகளுக்கு இந்தி கற்றுக் கொடுத்தேன். இந்துஸ்தானி இசை கற்றுத் தந்தேன். 2 மாதங்களில் 12 புத்தகங்கள் படித்தேன்.

உண்மையில் நான் ஹைதராபாத் வந்தது சந்தோஷம் விருது விழாவுக்காக. அவர்கள்தான் எனக்கு டிக்கெட் போட்டு வரவழைத்தனர். எந்த புரோக்கரும் அல்ல.. நான் வணிக ரிதீயான விபச்சாரத்தை ஆதரிப்பவளும் அல்ல. அந்த ஹோட்டலில் என்னுடன் இருந்தவர்கள், விழாவுக்கு வந்த விருந்தினர்கள் மற்றும் விழாக்குழுவினர்தான்.

பணமில்லாமல் நான் கஷ்டப்பட்டதாகக் கூறுவது பெரிய அபத்தும். அதேபோல வாய்ப்புகளின்றியும் நான் இல்லை.

என் பெற்றோர் எனது கல்வியில்தான் அக்கறையாக இருந்தனர். 2005-ம் ஆண்டு இக்பால் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றேன். அதன் பிறகு என்னை படிக்க வைப்பதில் அக்கறை காட்டினர் பெற்றோர்.

எனது 21வது வயதிலேயே ரூட்ஸ் ஆன் இந்தியன் க்ளாஸிக்கல் மியூசிக் என்ற தலைப்பில் ஏ ஆர் ரஹ்மான், ஹரிபிரசாத் சவுராசியா போன்ற இசை மேதைகளை பேட்டி கண்டு ஆவணப் படம் செய்தேன்.

இந்த ஆண்டு நசுருத்தீன் ஷாவுடன் இணைந்து நான் நடித்த குறும்படம் இன்டர்நேஷனர் நைட் கபே, பல சர்வதேச விழாக்களில் அங்கீகாரம் பெற்றுள்ளது. பல படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வந்த நிலையில்தான், நான் இப்படி தவறான தண்டனைக்குள்ளானேன். இதில் வாய்ப்புகளில்லாததால் விபச்சாரத்தில் விழுந்ததாகக் கூறப்படுவது எத்தனை பொய்யானது?

டிசம்பர் 5-ம் தேதி நாம்பள்ளி நீதிமன்றம் என் மீது எந்தத் தவறும் இல்லை, போலீஸார் போட்டது பொய் வழக்கு என்று திட்டவட்டமாக அறிவித்து விடுதலையும் செய்துவிட்டனர். இந்த நேரத்தில் எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி.

அதேநேரம், ஒரு தப்பான, பொய்யான அறிக்கையை தீவிரமாகப் பரப்பிய மீடியாக்களின் செயலை நினைத்து வேதனைப்படுகிறேன்."

-இவ்வாறு ஸ்வேதா பாசு எழுதியுள்ளார்.

 

லிங்கா முன்பதிவு தொடங்கிய 30 நிமிடத்தில் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!

சென்னை: ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய அரை மணி நேரத்தில் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

லிங்கா படம் ரஜனியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியாகிறது.

இந்தப் படம் உலகெங்கும் 5000க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது.

லிங்கா முன்பதிவு தொடங்கிய 30 நிமிடத்தில் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!

தமிழகம் தவிர பிற பகுதிகளில் சில தினங்களுக்கு முன்பே டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வருகின்றன.

சென்னை மற்றும் தமிழகத்தில் நேற்று மாலைதான் அதிகாரப்பூர்வமாக முன்பதிவு தொடங்கப்பட்டது (அபிராமி போன்ற அரங்குகளில் டிக்கெட் விற்பனை திங்களன்றே தொடங்கிவிட்டது). ரசிகர்கள் பெரும் வரிசையில் நின்று டிக்கெட்டுகள் வாங்கினர்.

ஆனால் ஆன்லைனிலும் ஒரே நேரத்தில் டிக்கெட் விற்றதால் அரை மணி நேரத்துக்குள் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு உள்ள காட்சிகளுக்குத்தான் இப்போது டிக்கெட்டுகள் கிடைக்கின்றன.

படம் வெளியாகும் வெள்ளியன்று அதிகாலை 1 மணி, 4.30 மணி, 8 மணி, 11.30 மணி, 2.30 மணி, 6.30 மணி மற்றும் இரவு 10 மணி என மொத்தம் ஏழு காட்சிகளை பல அரங்குகள் நடத்துகின்றன.

மாயாஜாலில் உள்ள 16 திரைகளிலும் பத்து நிமிட இடைவெளியில் ஒரு காட்சி என 100 காட்சிகளுக்கும் அதிகமாக லிங்கா திரையிடப்படுகிறது. மாயாஜால், தேவி போன்ற மால்களில் இன்றுதான் ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது என்பதால், முதல் மூன்று நாட்களுக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் இந்த அரங்குகளுக்காக காத்திருக்கின்றனர்.

 

அனிமேஷனில் கல்கியின் 'பொன்னியின் செல்வன்'!-

அருள்மொழி வர்மன், ஆழ்வார்க்கடியான்.. இந்த கேரக்டர்கள் எல்லாம் கல்கியின் அழியாத உருவங்கள். பொன்னியின் செல்வன் மாதிரியான ஒரு படைப்பை இனிமேல் யாராலும் எழுதவே முடியாது. நம்மை பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் கொண்டு சென்று, நம்மை இந்த கேரக்டர்களுடன் பயணிக்க வைப்பார் கல்கி.

அனிமேஷனில் வெளியான கோச்சடையான் படம், பல புதிய முயற்சிகளுக்கு வழி வகுத்திருக்கிறது என்றால் மிகையல்ல.

அனிமேஷனில் கல்கியின் 'பொன்னியின் செல்வன்'!-

கோச்சடையானுக்குப் பின் பல புராண, வரலாற்றுக் கதைகளை முழு நீள திரைப்படமாக்கும் முயற்சிகள் அதிகரித்துள்ளன. அவற்றுக்கு தாராள நிதியுதவியும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது எம்ஜிஆர், ரஜினி, கமல் என பலரும் நடிக்க முயன்று முடியாமல் போன வரலாற்று நாவலான கல்கியின் 'பொன்னியின் செல்வன்' அனிமேஷன் வடிவில் படமாகிறது.

அனிமேஷனில் கல்கியின் 'பொன்னியின் செல்வன்'!-

2 டி அனிமேஷனில் தயாராகும் இப்படம் இரண்டரை மணி நேரம் ஓடக்கூடியதாகும்.

'பைவ் எலிமெண்ட்ஸ்' என்ற நிறுவனம் சார்பில் படத்தைத் தயாரிப்பவர் பொ. சரவணராஜா.

இத்தனை நாவல்கள் இருக்கும் போது குறிப்பாக பொன்னியின் செல்வனை படமாக்கக் காரணம் என்ன?

''பொன்னியின் செல்வனுக்கு அவ்வளவு வாசகர்கள், ரசிகர்கள் இருக்கிறார்கள். . தனிப்பட்ட முறையில் எனக்கு அந்நாவல் பிடிக்கும். 2500 பக்கங்கள் கொண்டது என்றாலும் நானே ஐந்து முறை படித்துள்ளேன். அவ்வளவு அற்புதமான படைப்பு அது. எனவே அதை எடுத்துக் கொண்டேன். இவ்வளவு புகழ் பெற்ற அந்தப் படைப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சிதான் 'பொன்னியின் செல்வன்' அனிமேஷன் திரைப்படம்.

இன்றைய வணிகமய, உலகமயச் சூழலில் வரலாற்றுப் படைப்புகள் ரசிக்கப்படுமா என்று சிலர் கேட்கிறார்கள் சொல்கிற விதத்தில் சொன்னால் ரசிக்கவே செய்வார்கள்.

அனிமேஷனில் கல்கியின் 'பொன்னியின் செல்வன்'!-

'பொன்னியின் செல்வன் கதையின் கருத்தும் கரையாமல் ,நோக்கும் போக்கும் நோகாமல் ,தகவல்கள் தடுமாறாமல் அதே சமயம் சுவாரஸ்யம் குன்றாமல் சுருக்கியும் உருவாக்க இருக்கிறோம்.

அனிமேஷனாக உருவாக்கும் போது அதன் எல்லையும் சுதந்திரமும் பரந்தது. தொழில்நுட்ப சாத்தியங்களில் சிறப்பு சேர்க்க முடியும். படத்தின் அனிமேஷன் இயக்குநர் மு.கார்த்திகேயன் .இவர் இத்துறையில் இருபது ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பவர். இம்முயற்சியில் திரைப்பட ஊடக நண்பர்களும் பின்னணியில் இருக்கிறார்கள். அவர்களின் பக்கபலம் திரைவடிவ முயற்சிக்கு பெரிதும் துணை நிற்கும்.

படத்திற்கான இசை, வசனம் போன்றவற்றிற்கு மட்டுமல்ல பின்னணிக் குரலுக்கும் கூட பிரபலமானவர்களை- தமிழ் திரை நட்சத்திரங்களை அணுக இருக்கிறோம்," என்றார் சரவணராஜா.