பல ஆண்டுகளுக்குப் பின் தாயான நடிகை பூமிகா... ஆண் குழந்தை பெற்றார்!

மும்பை: பிரபல தமிழ் - தெலுங்கு - இந்தி நடிகை பூமிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

நடிகை பூமிகா தமிழில் 'பத்ரி', 'ரோஜா கூட்டம்', 'சில்லுன்னு ஒரு காதல்' போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார்.

பல ஆண்டுகளுக்குப் பின் தாயான நடிகை பூமிகா... ஆண் குழந்தை பெற்றார்!


இதுகுறித்து பூமிகா கூறும்போது, ‘‘எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். பரத் தாகூரும் சந்தோஷமாக உள்ளார். ஆனந்த பெருக்கால் விழிகளில் கண்ணீர் வந்தது'' என்றார்.

குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சி விரைவில் நடக்க உள்ளது. இதில் சக நடிக, நடிகையர் மற்றும் நண்பர்கள் பங்கேற்கிறார்கள்.

தமிழில் அவர் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த களவாடிய பொழுதுகள் படம் இன்னும் வெளிவராமல் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

ஏ ஆர் ரஹ்மானைப் பார்த்து நடு நடுங்கிப் போயிட்டேன் - இயக்குநர் வசந்த பாலன்

ஏ ஆர் ரஹ்மானைப் பார்த்து நடு நடுங்கிப் போயிட்டேன் - இயக்குநர் வசந்த பாலன்

சென்னை: காவியத் தலைவன் படத்துக்காக ஏ ஆர் ரஹ்மானைப் பார்த்தபோது நடு நடுங்கிப் போய்விட்டதாகத் தெரிவித்தார் படத்தின் இயக்குநர் வசந்த பாலன்.

இயக்குநர் வசந்தபாலனும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் முதல் முறையாக இணையும் படம் காவியத் தலைவன்.

சித்தார்த்

சித்தார்த், பிருத்விராஜ், நாசர், வேதிகா, தம்பி, ராமைய்யா, சிங்கம்புலி மன்சூர் அலிகான் பொன்வண்னன் என மிகப்பெரிய நட்ச்சத்திரப் பட்டாளத்தோடு இயக்குநர் வசந்தபாலன் இப்படத்தில் களமிறங்கியுள்ளார்.

நாடகப் பின்னணி

படம் முழுக்க நாடகம் தொடர்பான காட்சிகள் இருப்பதால் ஒப்பனையும் இப்படத்தில் மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. தென்னிந்தியாவின் மிகச் சிறந்த ஒப்பனைக் கலைஞரான பட்டணம் ரசீத் அவர்கள் இப்படத்தில் ஒப்பனைக் கலைஞராக பணி புரிந்துள்ளார்.

வேதிகா

சித்தார்த்தும், பிருத்விராஜூம் முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம் இது. பரதேசியில் தன் நடிப்பின் மூலம் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த வேதிகாவிற்கு இந்தப்படம் பெரும் அடையாளம்.

பர்ஸ்ட் லுக்

படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு கிரீன் பார்க் ஹோட்டலில் நேற்று மாலை நடந்தது. இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

வசந்த பாலன்

இந்தப் படத்துக்காக ஏ ஆர் ரஹ்மானுடன் தான் பணியாற்றிய கதையை கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கும் மேல் சொன்னார் வசந்த பாலன். "நான் ஒரு உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே ஏ ஆர் ரஹ்மானைப் பார்த்து, அவர் வளர்ச்சியை பிரமிப்புடன் ரசித்தவன். இன்று இந்திய இசையின் உலக அடையாளமாகத் திகழ்கிறார் ஏ ஆர் ரஹ்மான். அவர் வீட்டில் பல முறை அவரது தாயார் கையால் பிரியாணி சாப்பிட்டிருக்கிறேன்.

நடு நடுங்கிப் போய்விட்டேன்

ஆனாலும் என் படத்தின் கதையை அவரிடம் சொல்ல சித்தார்த் ஏற்பாடு செய்தார். அவரைச் சந்தித்து கதை சொல்ல உட்கார்ந்த போது நடு நடுங்கிப் போய்விட்டேன். ஆனால் ரஹ்மான் என் மனநிலைப் புரிந்து என்னுடன் இணக்கமாகப் பேசி என் தயக்கம் குறைத்து கதை கேட்டார். அந்தப் பாங்கை யாரிடமும் பார்க்க முடியாது," என்றார்.

 

இலங்கையில் நடக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எங்களுக்குத் தொடர்பில்லை- விஜய் டிவி

சென்னை: இலங்கையில் நடக்கும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பில்லை என்று விஜய் டிவி அறிவித்துள்ளது.

விஜய் டிவியின் புகழ்பெற்ற ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை, கொழும்பில் நடத்தப்போவதாகவும், இதில் அந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற சோனியா, திவாகர் உள்ளிட்டோர் பங்கேற்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மார்ச் மாதம் ஐநாவின் மனித உரிமை அமைப்பு இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ள சூழலில், இப்படியொரு நிகழ்ச்சியில் பங்கேற்று, தமிழருக்கு எதிரான சிங்கள பரப்புரைக்கு துணை போவதா என விஜய் டிவிக்கும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் கலைஞர்களுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இலங்கையில் நடக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எங்களுக்குத் தொடர்பில்லை- விஜய் டிவி

இந்த நிலையில் விஜய் டிவி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

"தமிழர்களின் உணர்வுகளை மதிப்பதிலும், தமிழ் மண்ணின் மாண்பை நிலை நிறுத்துவதிலும் என்றென்றைக்கும் உறுதியான நிலைப்பாடுகளுடனே இருந்திருக்கிறது விஜய் டிவி. இனிமேலும் இருக்கும்.

உலக அளவில் தமிழர்களின் பெருமையையும், திறமையையும் முன்னிறுத்துவதை தன் முதல் கடமையாக வைத்திருக்கிறது. இதனாலேயே விஜய் டிவியின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் உலகத் தமிழர்களின் அன்பும், ஆதரவும் பெருகிக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி குழுமம் பற்றி வருகிற சில உண்மைக்குப் புறம்பான செய்திகளுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறோம்.

மார்ச் 1-2 தேதிகளில் இலங்கையில் நடக்கிற இசை நிகழ்ச்சிக்கும், விஜய் தொலைக்காட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது மட்டுமல்ல, இதற்கு முன் விஜய் தொலைக்காட்சி இலங்கையில் எந்தவொரு நிகழ்ச்சியையும் நடத்தியதும் இல்லை. விஜய் டிவி குறித்து இது போன்று வரும் செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை.

விஜய் டிவி எப்போதும் தமிழர்களின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு பொறுப்புடன் செயல்பட்டு வந்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்."

-இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

அமெரிக்காவில் தமிழ்நாடு அறக்கட்டளையின் இரண்டு நாள் மாநாடு - விவேக், நா முத்துக்குமார் பங்கேற்பு

சிகாகோ(யு.எஸ்): தமிழ் நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களை 40 ஆண்டுகளாக செயல்படுத்தி வரும் அமெரிக்காவிலுள்ள தமிழ்நாடு அறக்கட்டளையின் இரண்டு நாள் மாநாடு சிகாகோவில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் நடிகர் விவேக், பாடலாசிரியர் முத்துக்குமார் உள்பட திரைத்துறையினர், இலக்கியவாதிகள் பங்கேற்கினர்.

அமெரிக்காவில் தமிழ்நாடு அறக்கட்டளையின் இரண்டு நாள் மாநாடு - விவேக், நா முத்துக்குமார் பங்கேற்பு

தமிழ்நாட்டு டாக்டர்கள் ஆரம்பித்த தமிழர் அமைப்பு

1974 ஆம் ஆண்டு நவம்பர் 29 ம் தேதி, டாக்டர் R,பழநிசாமி, டாக்டர் P.G.பெருமாள்சாமி, டாக்டர் B.தியாகராஜன், டாக்டர் பிஜி பெரியசாமி ஆகியோர் தமிழகத்தின் மக்கள் நலனுக்காக நலத்திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அறக்கட்டளையை ஆரம்பித்தனர். அன்று முதல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்க அளவில் மாநாடு நடத்திவருகின்றனர். அதன் மூலம் திரட்டப்படும் நிதி மூலம் தமிழகத்தில் கிராமப்புறத்தில் கல்வி மேம்பாட்டிற்கான் திட்டங்கள் நிறைவேற்றி வருகின்றனர்.

அமெரிக்காவில் தமிழ்நாடு அறக்கட்டளையின் இரண்டு நாள் மாநாடு - விவேக், நா முத்துக்குமார் பங்கேற்பு

சிகாகோ மாநாடும் சிதம்பரம் பள்ளிகளும்

40 ஆம் ஆண்டிற்கான மாநாடு, சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில், சிகாகோவில் மே 24, 25ம் தேதிகளில் நடைபெற உள்ளது. அறக்கட்டளையின் உயர்நிலைக் குழு மாநாட்டிற்கான வரைவு திட்டத்தை விவாதித்து வெளியிட்டுள்ளனர். இந்த மா நாட்டில் திரட்டப்படும் நிதியைக் கொண்டு சிதம்பரம் பகுதியிலுள்ள கிராம்ப்புற பள்ளிகளின் மேம்பாட்டுக்காக திட்டங்கள் தீட்டப்படவுள்ளன. ‘ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்ற முழக்கத்துடன் செயல்படும் தமிழ்நாடு அறக்கட்டளை, பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை எப்படி அதிகரிப்பது என்ற செயல் திட்டத்தையும், சிதம்பரம் கிராமப்புறங்களில் செயல்படுத்த உள்ளது.

அமெரிக்காவில் தமிழ்நாடு அறக்கட்டளையின் இரண்டு நாள் மாநாடு - விவேக், நா முத்துக்குமார் பங்கேற்பு

நா முத்துக்குமார்

மாநாட்டிற்கு வருகைதரும் தமிழறிஞர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களின் முதல் பட்டியல் வெளியாகியுள்ளது. கவிஞர் நா.முத்துக்குமார், தமிழச்சி தங்கபாண்டியன், மகுடேசுவரன், மேகலா ராமமூர்த்தி மற்றும் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் ஆகியோர் வர இருக்கிறார்கள். சின்னத்திரை/திரைப்பட கலைஞர்கள் தீபக், அர்ச்சனா மற்றும் மதுரை முத்து ஆகியோரது பெயர்களும் முதல் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

பாடகர் கார்த்திக்

பிண்ணனி பாடகர் கார்த்திக் தனது குழுவினரோடு கலந்து கொண்டு இன்னிசைக் கச்சேரி வழங்க உள்ளார். மேலும் சில முக்கிய நட்சத்திரங்கள் வர இருப்பதாகவும் விரைவில் அறிவிப்பு வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விவேக் - செல் முருகன்

முன்னணி நகைச்சுவைக் கலைஞர்கள் விவேக், செல்முருகன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.

அறக்கட்டளையின் தலைவர் அறவாழி, துணைத் தலைவர்கள் சோமலை சோமசுந்தரம், டாக்டர் பத்மினி, முன்னாள் தலைவர் துக்காராம் ஆகியோரின் வழிகாட்டுதல்களுடன் சிகாகோ தமிழ்ச் சங்க தலைவர் சோமு, முன்னாள் தமிழ்ச் சங்க தலைவர் வீரா வேணுகோபால் மற்றும் பல தன்னார்வத் தொண்டர்கள் மாநாட்டிற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.