ரசிகர்களின் மனதில் புகுந்த "எலி".. வைகைப் புயல் எப்படி ஓ.கே.வா...?

சென்னை: இன்று வெளியாகிய நடிகர் வடிவேலுவின் எலி படம் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இரண்டு ஆண்டுகள் கழித்து தெனாலிராமன் படத்திற்குப் பின் வடிவேலு நடித்து வெளிவந்திருக்கும் படம் எலி.

தெனாலிராமன் படம் வெற்றி பெறவில்லை எனினும் அந்தப் படத்தின் இயக்குநர் யுவராஜ் தயாளனுக்கு மீண்டும் வாய்ப்பளித்து, எலி படத்தை இயக்க வைத்தார் வடிவேலு. அவரின் நம்பிக்கையை நிரூபிப்பது போல எலி படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

600 க்கும் அதிகமான திரைகளில் எலி படம் திரையிடப் பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகிய நிலையில், படம் நன்றாக இருக்கிறது என்று படத்தைப் பார்த்தவர்கள் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.

பல இடங்களில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக எலி ஓடிக்கொண்டிருக்கிறது, வடிவேலுவின் காமெடி சிரிக்கும் விதமாக உள்ளது படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் எனவும் தகவல்களை அளித்துள்ளனர் ரசிகர்கள்.

எலி படம் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளதால் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர் எலி படக்குழுவினர்.

 

பிறந்த நாளை முன்னதாக கொண்டாடும் இளையதளபதி விஜய்

சென்னை: வரும் ஜூன் 22 ம் தேதி 40 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார் இளைய தளபதி விஜய். கடந்த சில வருடங்களாக பிறந்தநாள் தினத்தில் நடந்த மோசமான நிகழ்வுகள் காரணமாக இந்த வருடம், சென்னையில் பிறந்த நாள் கொண்டாடுவதைத் தவிர்த்து வெளிநாடு செல்லும் திட்டத்தில் இருக்கிறார் விஜய்.

விஜயின் இந்த செயல் அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்தாலும், வழக்கம் போல அவரது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாட முடிவெடுத்து உள்ளனர் அவரது ரசிகர்கள்.

இதே போல அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் புலி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை அவரது பிறந்த நாள் அன்று வெளியிடத் திட்டமிட்டு இருந்தனர் புலி படக் குழுவினர். ஆனால் தற்போது அதில் ஒரு சிறிய மாற்றம் செய்து புலி படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை முன்னதாகவே வெளியிட முடிவு செய்து உள்ளனர்.

புலியின் பர்ஸ்ட் லுக் 20 ம் தேதி நள்ளிரவிலும், டீசர் 21 ம் தேதி இரவு நள்ளிரவிலும் வெளியாகிறது என்று டிவிட்டரில் அறிவித்துள்ளது சோனி மியூசிக். சோனியின் இந்த அறிவிப்பால் மிகுந்த உற்சாகத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் தற்போது சோனியின் இந்த செய்தியை எல்லோருக்கும் பார்வேர்ட் செய்து வருகின்றனர்.

அது மட்டுமின்றி புலி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகும் நாளன்று #pulifirstlook என்று ஹெஷ்டேக்கை உருவாக்கி அதனை டிவிட்டரில் ட்ரெண்டாக்கவும் முடிவு செய்து உள்ளனராம் விஜய் ரசிகர்கள்.

 

வாட்ஸ் ஆப்பில் பரவும் சோனியா அகர்வாலின் நிர்வாண வீடியோ!

நடிகை சோனியா அகர்வாலின் நிர்வாணக் காட்சி என்ற பெயரில் வாட்ஸ் ஆப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறது ஒரு வீடியோ.

இன்று பிற்பகலில் வெளியான அந்த வீடியோவில் சோனியா அகர்வால் மாதிரி தோற்றத்தில் உள்ள ஒரு பெண் உடை மாற்றும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இந்த வீடியோ வெளியான அடுத்த சில நிமிடங்களில் பரபரவென ஒவ்வொரு குழுவுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது.

Sonia Agarwal lookalike girl's absence video goes viral

உண்மையிலேயே இது சோனியா அகர்வால்தானா அல்லது அவரைப் போன்ற வேறு பெண்ணின் வீடியோ என கேட்டு பரப்பி வருகின்றனர். இணையதளங்கள் சிலவற்றிலும் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது.

வழக்கம்போல இந்த வீடியோவுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என சோனியா அகர்வால் தெரிவிக்கக்கூடும்.

 

ஏபிசிடி 2 படத்திற்கு வரவேற்பு எப்படி?

மும்பை: இந்தியில் இன்று வெளியாகிய ஏபிசிடி 2 படம் நன்றாக இருப்பதாக படத்தைப் பார்த்த மக்கள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர். 3D யில் வெளியாகி இருக்கும் இந்தப் படத்தில் பிரபுதேவா, வருண் தவான் இவர்களுடன் இணைந்து ஸ்ரத்தா கபூர் நடித்திருக்கிறார்.

படத்தின் கதை இதுதான் மிகப்பெரிய டான்சராக வரவேண்டும் என விரும்புகிறார் வருண் தவான், அதே போன்று ஸ்ரத்தா கபூரும் மிகப் பெரிய ஹிப்ஹாப் டான்சராக வேண்டும் என்று விரும்புகிறார்.

ABCD 2 Movie: House Full Shows In Theatres

இருவருக்கும் தங்கள் திறமைகளை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. உலக அளவில் நடைபெறும் ஹிப் ஹாப் டான்ஸ் போட்டி ஒன்று நடைபெறுகிறது. எப்படியாவது அந்தப் பட்டதைக் கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்புடன் இருவரும் சென்று மிகப்பெரிய டான்சரான பிரபுதேவாவை சந்திக்கின்றனர்.

டான்ஸ் போட்டியின் முதல் சுற்றில் இருவருமே வெளியே வந்து விட, அதற்குப் பின் என்ன நடந்தது என்பதை காதல், காமெடி, நடனம் இவற்றுடன் நேர்மையையும் கலந்து கொடுத்துள்ளார் இயக்குநர் ரேமோ டி சௌசா.

படத்தில் கதை என்று பெரிதாக இல்லை ஆனால் வருண், பிரபுதேவா மற்றும் ஸ்ரத்தா இம்மூவரும் நடனம், காதல் மற்றும் நடிப்பு என படம் முழுக்க ரகளை செய்துள்ளனர். இவர்களின் நடனத்திற்காகவே ஒரு முறை படத்தைப் பார்க்கலாம் என்று சமூக வலைதளங்களில் குவிகின்றன இளசுகளின் கமெண்டுகள்.

இந்தப் படத்தில் வரும் சன் சாகித்யா பாடலை மட்டும் இதுவரை 80 லட்சத்திற்கும் அதிகமானோர் யூடியூபில் பார்த்து ரசித்துள்ளனர்.

13 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இன்று 2000 திரை அரங்குகளில் இந்தியா முழுவதும் வெளியாகி 90 மில்லியன்களை வசூலித்து சாதனை புரிந்துள்ளது.

மும்பை முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்த போதிலும் பல தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக படம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

என்னம்மா இப்படி இப்படி இப்படி பண்றீங்களேம்மா... - ரஜினிமுருகன் பாட்டுக்கு ஒரு எதிர்ப்பாட்டு!

சில நேரங்களில் ஒரே கதையை இருவரோ அதற்கு மேற்பட்டவர்களோ படமாக எடுத்து, ஒரே நேரத்தில் வெளியிடுவதுண்டு.

பெரும்பாலும் முன்கூட்டித் திட்டமிட்டு நடப்பதல்ல இது. இவருக்குத் தெரியாமல் அவர், அவருக்குத் தெரியாமல் இவர் என படமாக்கி, வெளியிடும்போதுதான் ஒரே கதை என்பது தெரிய வரும்.

இப்போது இது ஒரு பாடல் விஷயத்திலும் நடந்திருப்பதுதான் சுவாரஸ்யமான ஆச்சர்யம்.

One more Ennamma Ippadi Pandringalemma... song in Kollywood

லட்சுமி ராமகிருஷ்ணனின் 'என்னம்மா, இப்படி பண்றீங்களேம்மா..!' என்ற வாக்கியம் சினிமாவில் மட்டுமல்ல, வெகுஜனங்கள் மத்தியிலும் படுபிரபலம். எதற்கெடுத்தாலும், என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. என்று கேட்டு வெறுப்பேற்றுகிறார்கள்.

இந்த வாக்கியத்தை வைத்து ஒரு பாடலையும் இமான் இசையில் ரஜினிமுருகன் படத்துக்காக போட்டிருக்கிறார்கள். அந்தப் பாடல் வெளியாகு படு ஹிட் ரகத்தில் சேர்ந்துவிட்டது.

இந்த நிலையில் இன்னும் ஒரு பாட்டு இதே வாக்கியத்துடன் ஆரம்பிக்கிறது. இந்தப் பாடலை வளர்ந்துவரும் பாடலாசிரியர் முருகன் மந்திரம் எழுதியிருக்கிறார். இஷான் தேவ் இசையமைத்து, அந்தோனிதாசனுடன் பாடியிருக்கிறார் (காசு பணம் துட்டு, வருத்தப்படாத வாலிபர் சங்கம்... போன்ற பாடல்களைப் பாடியவர்).

One more Ennamma Ippadi Pandringalemma... song in Kollywood

என்னம்மா இப்படி இப்படி இப்படி பண்றீங்களேம்மா... என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடல், இமான் இசையில் வெளியாகியுள்ள ரஜினி முருகன் பாட்டை விட செம குத்து ரகமாக உள்ளது.

ரஜினிமுருகன் பாட்டுக்கு இது போட்டியா? என்று பாடலாசிரியர் முருகன் மந்திரத்தைக் கேட்டபோது, "அப்படியெல்லாம் இல்லை. உண்மையில் ரஜினி முருகன் படத்தில் இப்படியொரு பாட்டு இடம்பெற்றுள்ளதா என்றே தெரியாதபோதே இந்தப் பாடலை தயார் செய்துவிட்டோம். ட்யூன் போட்டு பாட்டெழுதி பதிவு செய்து வைத்திருந்த நிலையில்தான், இந்த வாரம் ரஜினி முருகன் பாடல் வந்தது. இது ஒரு கோ இன்சிடென்ஸ் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல..." என்றார்.

சாரல் என்ற படத்துக்காக இந்தப் பாடலை உருவாக்கியுள்ளனர் முருகன் மந்திரமும் இஷான் தேவும்.

 

மும்பை மழையால் பாதிக்கப்பட்ட பாலிவுட் பிரபலங்கள்

மும்பை: மும்பையில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி புறநகர் ரயில் சேவையும் மும்பையில் நிறுத்தப் பட்டுள்ளது.

வீடுகள், தெருக்கள் மற்றும் சாலைகள் போன்றவை முழுவதும் நீர் சூழ்ந்து வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. பருவமழையின் இந்த அதிரடியால் சாதாரண மக்கள் மட்டுமின்றி பாலிவுட் பிரபலங்களும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

மழையின் காரணமாக வெளியே எங்கும் செல்ல முடியாத நிலையில் மழையைத் திட்டியும், மறைமுகமாகப் பாராட்டியும் டிவிட்டரில் ஸ்டேட்டஸ் தட்டி வருகின்றனர் பாலிவுட் பிரபலங்கள்.

நடிகை சோனாக்ஷி சின்ஹா " அதிகாலையில் நான் பார்க்கும் காட்சி இதுவல்ல, நிச்சயம் இன்று மும்பையில் கார் ஓட்டுவது கடினமான ஒன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

தயாரிப்பாளரும் நடிகருமான சஜித் கான் " இன்று எனது கார் டிரைவரை வீட்டில் ஓய்வெடுக்குமாறு கூறினேன், அதற்கு அவர் வீடு முழுவதும் மழை நீரால் நிறைந்து விட்டது என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் ராணா டகுபதி " 25 நிமிடங்களில் நான் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று விட்டேன், எந்தவித போக்குவரத்து இடைஞ்சலும் இல்லாமல் போக்குவரத்துக்கு ஏற்றவாறு சாலைகள் தெளிவாக இருந்தன என்று கூறியுள்ளார்.

இதே போன்று மேலும் பல பாலிவுட் பிரபலங்களும் ஸ்டேட்டஸ் தட்டி மழையையும் டிவிட்டரில் ட்ரெண்ட் டாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மாயா படத்தில் குழந்தையுடன் தவிக்கும் இளம்தாயாக நயன்தாரா

சென்னை: ஏற்கனவே பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடித்த நயன்தாரா தற்போது மாயா படத்திலும் ஒரு குழந்தைக்குத் தாயாக நடித்து இருக்கிறார்.

பேய் படம் என்று சொல்லப்படும் மாயாவில் இளம் குழந்தையை வைத்துக் கொண்டு தவிக்கும் தாயாக வந்து ரசிகர்களின் கண்ணில் கண்ணீரை வரவழைக்கும் அளவுக்கு நடித்து இருக்கிறாராம் நயன்.

Nayanthara’s Maya Trailer Released Yesterday

பொதுவாக ஹாலிவுட்டில் இந்த மாதிரி கதைகள் எடுக்கப்பட்டு அவை மாபெரும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஏனெனில் கணவர் இல்லாமல் குழந்தையை வளர்க்கும் இளம்பெண்கள் கதாபாத்திரம் பார்ப்பவர்களின் மனதில் இரக்கத்தை ஏற்படுத்தி விடும்.

இதே போன்று நேற்று வெளியான மாயா ட்ரைலரில் முக்கியமான அம்சமாக காட்டப்படும் மாயவனம் காடு, அங்கிருக்கும் பழுதடைந்த மனநல மருத்துவமனை காட்சிகள் பின் அதை சார்ந்த புத்தகம் என டிரெய்லரின் துவக்கமே பார்வையாளர்களை கவர்கிறது.

இளம் குழந்தையுடன் தவிக்கும் தாயாக ஏற்கனவே வெளியான தமிழ் படங்கள் , நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்றுள்ளன. ரிதம் (மீனா), இங்லீஷ் விங்லீஷ்( ஸ்ரீதேவி), 36 வயதினிலே, வேட்டையாடு விளையாடு (ஜோதிகா), என்னை அறிந்தால் (த்ரிஷா) என சொல்லிக் கொண்டே போகலாம், எப்போதுமே இதுபோன்ற இளம்தாய் கேரக்டர்கள் மக்களிடம் அதிகம் பேசப்பட்டு விடும்.

இந்தப் படமும் அதே போன்று மக்களிடம் பேசப்படும் ஒரு படமாக அமையும் என்பது படத்தின் டிரைலரிலே தெரிகிறது.

தமிழ் சினிமாவில் சற்றே ஓய்ந்து இருந்த பேய்ப் படங்களை மீண்டும்தனது மாயாவின் மூலம் ஆரம்பித்து வைக்கிறார் நயன்தாரா.

மாயாவின் வெற்றியைப் பொறுத்து தமிழ் சினிமாவை மீண்டும் ஆட்டிப்படைக்கப் போவது ஆண் பேய்களா இல்லை பெண் பேய்களா என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு விடை தெரிந்து விடும்.

 

வெளியானது கோ 2 படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்

சென்னை: கடந்த 2011 ம் ஆண்டு இயக்குநர் கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் வெளியான மெகா ஹிட் திரைப்படம் கோ. நடிகர்கள் ஜீவா, அஜ்மல் மற்றும் நடிகை கார்த்திகா நடித்து வெளிவந்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

முதல் பாகத்தில் நடித்த பிரகாஷ் ராஜ் மட்டுமே இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார், மற்ற அனைத்து நடிகர்களுமே புதிதாக படத்தில் நடிக்கின்றனர். படத்தின் நாயகனாக பாபி சிம்ஹா, நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கும் இந்தப் படத்தை, முதல் பாகத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடேயின்மென்ட் நிறுவனமே தயாரிக்கிறது.

கோ 2 படத்தை சரத் என்பவர் இயக்கி வருகிறார், படத்திற்கு இசை லியோன் ஜேம்ஸ். கோ 2 படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியான நிலையில் இன்று படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகியது.

பிரகாஷ்ராஜ் சேரில் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருக்க, அருகில் கையைக் கட்டிக் கொண்டு ஸ்மார்ட்டாக நிற்கிறார் பாபி சிம்ஹா. இன்று வெளியாகிய இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.

 

சென்னையில் "ஜில்" மழை ஏன் தெரியுமா.. எமி 'ஏமி' சொல்ராருன்னு கேளுங்களேன்!

சென்னை: சென்னையில் கத்தரி முடிந்தும் வெயில் கொளுத்தோ கொளுத்தென்று தகித்துக் கொண்டிருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக சில்லென்று உள்ளது சென்னையில் வானிலை.

மழைக்குக் காரணம் வெப்பச் சலனம் என வானிலை ஆய்வு மையம் ஒரு காரணம் சொல்லிக் கொண்டிருக்க, நடிகை எமி ஜாக்சனோ வேறொரு காரணம் சொல்கிறார்.

அதாவது அவர் தான் லண்டனில் இருந்து மழையை பிளைட்டில் சென்னைக்கு அழைத்து வந்துள்ளாராம்.

இத்தகவலை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அழகிங்க என்ன சொன்னாலும் நாங்க ஆமாம் சாமி போடுவோம்ங்க... !

 

எனக்கு பதவி மோகமில்லை… கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் போட்டியிட மாட்டோம்: நடிகர் விஷால்

மதுரை: நடிகர் சங்கத்திற்கு சுயமாக நிதி திரட்டி புதிய கட்டிடம் கட்ட வேண்டும். பதவி மோகத்திற்காக நடிகர் சங்கத்தில் போட்டியிவில்லை என்று விஷால் கூறியுள்ளார். தங்களின் கோரிக்கைகளை சரத்குமார் அணி ஏற்றுக் கொண்டால் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.

Actor Vishal speaks about Sarathkumar Press meet

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணி, விஷால் அணி என இரண்டு அணிகள் போட்டியிட தயாராகியுள்ளது. இதில் சரத்குமார் தலைமையிலான அணியில் தலைவர் பதவிக்கு சரத்குமாரும், பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவியும் போட்டியிடுகின்றனர். விஷால் தலைமையிலான அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர். விஷால் அணிக்கும் சரத்குமார் அணிக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நாடக, நடிகர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக விஷால் தலைமையிலான அணியினர் இன்று மதுரை வந்தனர். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், நடிகர் சங்கத்திற்கு தனி கட்டிடம் கட்ட ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் ஒப்புக் கொண்டால் இலவசமாக திரைப்படங்களில் நடித்து கட்டிடம் கட்டுவதற்கான நிதியை பெற்றுத் தருகிறோம் என தெரிவித்துள்ளார்.

எங்களின் கோரிக்கைகளை சரத்குமார் அணி ஏற்றுக்கொண்டால் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட மாட்டோம். சரத்குமார் சொல்வதுபோல் இதில் அரசியல் கலப்பு எதுவும் கிடையாது என்று கூறினார். நாடக நடிகர்களைப் பற்றி மன்சூர் அலிகான் பேசியது கண்டிக்கத்தக்கது என்றும் விஷால் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது அருகில் நாசர், கார்த்தி, பொன்வண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

நடிகர் சரத்குமார் தலைமையிலான அணி நேற்று மதுரைக்கு சென்று ஆதரவு திரட்டினர் இந்த நிலையில் விஷால் தலைமையிலான அணியினர் இன்றைக்கு மதுரைக்குச் சென்றுள்ளனர்.

 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளித்து உற்சாகப்படுத்திய விஷால்

நடிகர் விஷால் இப்போது நடிகர் சங்கத்தின் தேர்தல் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். அதற்காகப் பலரையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்த பரபரப்பான வேலைகளின் நடுவேயும் சமூகப் பணிகளிலும் சேவைகளிலும் அவர் கவனம் செலுத்தத் தயங்குவதில்லை.

நேற்று மதுரவாயல் அரசுமேல்நிலைப் பள்ளிக்குச் சென்று மாணவர்களைச் சந்தித்து பரிசுகள் கொடுத்து பாராட்டி ஊக்கப் படுத்தினார். இதற்கான ஏற்பாடுகளை தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளைக் கொண்டு விரிவாகச் செய்திருந்தார்.

Vishal encourages govt school students

அதன்படி அந்தப் பள்ளியில் பத்தாவது மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பத்தாம் வகுப்பில் 400க்கு மேல் எடுத்த மாணவர்கள் 40 பேருக்கும் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

Vishal encourages govt school students

மாணவர்களிடையே விஷால் பேசும் போது, "நான் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்தான். நானும் உங்களைப் போல அரசுப் பள்ளியில் படித்தவன்தான். படிப்படியாக படித்துதான் லயோலா கல்லூரியில் சேர்ந்தேன். பிறகு கஷ்டப்பட்டுத்தான் சினிமாவில் நடித்து முன்னேறியுள்ளேன்.

Vishal encourages govt school students  

உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைத்துத் தர கல்வியால் மட்டுமே முடியும். கல்வி ஒன்றுதான் நம்மை உயர்த்தும்.நன்றாக படியுங்கள். முன்னேறலாம். இந்த பரிசு பெற்ற மாணவர்களை பாராட்டுகிறேன். அனைவரும் அதிக மதிப்பெண் எடுக்க முயல வேண்டும். என்னால் வளர முடிகிற போது உங்களாலும் முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்,'' என்று ஊக்கமூட்டினார்.

Vishal encourages govt school students

"சினிமா நடிகர்கள் எல்லாம் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் போல ஆடம்பரமான தனியார் பள்ளிகளுக்குத் தான் செல்வார்கள். நீங்கள் இங்கு அரசுப் பள்ளிக்கு வந்து எங்களை உற்சாகப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது," என்று நன்றி தெரிவித்தனர் மாணவர்கள்.

 

இன்று முதல் வடிவேலுவின் எலி... குபீர் சிரிப்பா, கிச்சு கிச்சா?

வடிவேலு காமெடி நாயகனாக நடித்துள்ள எலி திரைப்படம் இன்று உலகெங்கும் வெளியானது.

இந்தப் படம் வடிவேலுவின் அடுத்த கட்டத்தைத் தீர்மானிக்கும் படமாக இந்த எலி கருதப்படுகிறது.

Vadivelu's Eli from today

மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடித்த தெனாலி ராமன் கடந்த ஆண்டு வெளியாகி, சுமாராகப் போனது. தான் எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்கவில்லையே வேதனையில் இருந்த வடிவேலு, அடுத்து அதே இயக்குநருடன் இணைந்த படம்தான் எலி.

இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சதா நடித்துள்ளார். வடிவேலுவுடன் நடிக்கும் ஆஸ்தான சிரிப்பு நடிகர்கள் பலரும் இணைந்துள்ளனர் இந்தப் படத்தில்.

Vadivelu's Eli from today

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்தப் படம் இன்று உலகெங்கும் வெளியானது. தமிழகத்தில் மட்டும் 250க்கும் மேற்பட்ட அரங்குகளில் எலி வெளியாகியுள்ளது.

வடிவேலு படம் என்றாலே குபீர் சிரிப்புக்கு உத்தரவாதம் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஆனால் வடிவேலு ஹீரோவாக நடித்த இந்திரலோகத்தில் அழகப்பன், தெனாலிராமன் போன்ற படங்களில் காமெடி குறைவாக இருந்தது என்ற குற்றச்சாட்டு, படத்தை கவிழ்த்துவிட்டது.

Vadivelu's Eli from today

ஆனால் இந்த எலியில் எக்கச்சக்க காமெடி சமாச்சாரங்களைச் சேர்த்திருப்பதாக வடிவேலு கூறியுள்ளார்.

இன்று தெரிந்துவிடும்.. எலி கிச்சுகிச்சு மூட்டுகிறதா.. வயிற்றைப் பதம் பார்க்கிறதா? என்று.

 

ஹரியின் உதவியாளர் இயக்குநராக அறிமுகமாகும் ஆக்ஷன் த்ரில்லர் 'யானும் தீயவன்'!

நாளைய இயக்குனர் சீசன் 3ல் பங்கேற்றவரும், இயக்குனர் ஹரியிடம் சிங்கம் 2 படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவருமான பிரசாந்த் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

முழுக்க முழுக்க கமர்சியல் ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்திற்கு, "யானும் தீயவன்" எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Yaanum Theeyavan, a new action thriller

புதுமுகம் அஸ்வின் கதாநாயகனாக அறிமுகமாக, வர்ஷா கதாநாயகியாக நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடன கலைஞர் மற்றும் நடிகரான ராஜு சுந்தரம் நடிக்க இவரகளுடன் விடிவி கணேஷ், பொன்வன்னன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பிரபல தெலுங்கு திரையுலக இசையமைப்பாளரான அச்சு ராஜாமணி, இப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்திற்கு ஒளிப்பதிவு ஷ்ரேயாஸ், படத்தொகுப்பு பிரசன்னா.G.K. பாடல்களை பாடலாசிரியர்கள் கபிலன் மற்றும் மணி அமுதவன் எழுதியுள்ளனர்.

இப்படத்தின் முதல் பார்வை படங்களை பிரபல புகைப்பட கலைஞர் ஜி.வெங்கட்ராம் வடிவமைத்து படமாக்கினார். ஸோபியா ஜெரோம் மற்றும் பெப்பிட்டா ஜெரோம் "பெப்பி சினிமாஸ்" சார்பாக இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இப்படத்தின் படபிடிப்பு ஜூன் 22-ம் தேதி தொடங்குகிறது.

 

எங்களுக்கு நடிக்க மட்டுமல்ல அடிக்கவும் தெரியும்.. விஷாலுக்கு நாடக நடிகர்கள் "வார்னிங்"!

மதுரை: எங்களுக்கு நாடகத்தில் நடிக்க மட்டுமல்ல, அடிக்கவும் தெரியும். நாடக நடிகர்களை இழிவுபடுத்திப் பேசும் மன்சூர் அலிகான், எங்களை நடிகர் சங்கத்திற்குக் கொண்டு வந்த ராதாரவி மற்றும் எங்களுக்காக பாடுபடும் சரத்குமார் ஆகியோரை இழிவுபடுத்தும் விஷால், நாசர் போன்றோர் வாயடக்கமாக இருக்க வேண்டும் என்று மதுரை நாடக நடிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கம் ( தமிழ் நடிகர் சங்கம் என்று கூட பெயர் வைக்கத் தைரியமில்லை பாருங்கள்) தாறுமாறாக சண்டைக் கூடாராமாகிக் கிடக்கிறது.

Drama artists warn Vishal and group

சரத்குமார், ராதாரவி ஆகியோரைக் குறி வைத்து விஷாலை முன்னிருத்தி பலர் களம் குதித்துள்ளனர். இந்த குழுவின் பின்னணியில் அரசியல் இருப்பபதாக சரத்குமார் குற்றம் சாட்டுகிறார். சரத்குமார் தரப்பு சரியில்லை என்று எதிர்த் தரப்பு பேசி வருகிறது.

இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் ஒரு உறுப்பான நாடக நடிகர்களை தரக்குறைவாக பேச ஆரம்பித்துள்ளனர் விஷால் தரப்பினர். இது நாடக நடிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மன்சூர் அலிகான் வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்.

இதையடுத்து மன்சூர் அலிகான், விஷால், நாசர் போன்றோருக்கு மதுரை நாடக நடிகர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நடிகர் சங்கத்தில் வலுவான ஒரு உறுப்பினர்களாக மதுரையைச் சேர்ந்த நாடக நடிகர்கள் இருக்கிறார்கள் என்பதால் இவர்களின் ஆதரவு பெற்றோரே எளிதாக வெல்ல முடியும்.

இதனால்தான் சரத்குமார், ராதாரவி ஆகியோர் மதுரையில் வைத்து பிரசாரத்தைத் தொடங்கினர். விஷால் குரூப்பும் கூட மதுரையிலேயே பிரசாரத்தைத் தொடங்கியது.

இந்த நிலையில் மன்சூர் அலிகான் உள்ளிட்டோருக்கு எச்சரிக்கை விடுத்து மதுரை நாடக நடிகர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில், சரத்குமார், ராதாரவி போன்றோர் நாடக நடிகர்கள் நலனுக்காக போராடி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக விஷால் போன்ற சில நடிகர்கள் செயல்படுகின்றனர். மன்சூர் அலிகான் நாடக நடிகர்களை இழிவுபடுத்தி பேசி வருகிறார்.

நாடக நடிகர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உட்கார வைத்தவர் ராதாரவி. எனவே சரத்குமார், ராதாரவி கரத்தை வலுப்படுத்த வேண்டும். சங்கத்துக்கு எதிராக செயல்படும் விஷால், மன்சூர் அலிகானை கண்டிக்கிறோம். எங்களுக்கு நடிக்கவும் தெரியும், அடிக்கவும் தெரியும் என்று அவர்கள் கூறினர்.

நாடக நடிகர்களின் இந்த எச்சரிக்கையால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

தனுஷ் சிவகார்த்திகேயன் மோதலில் புதிதாக இணைந்த சிம்பு

சென்னை: கோலிவுட்டில் தற்போது மும்முனைப் போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. பெரிய நடிகர்களின் படங்கள் குறிப்பிட்ட பண்டிகை தினங்களில் மட்டுமே வெளியாக வேண்டும் என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டளையால் ரம்ஜான் தினத்தன்று கோடம்பாக்கத்தின் இளம் நடிகர்கள் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினிமுருகன் படமும் , தனுஷின் நடிப்பில் வெளிவரும் மாரி படமும் ரம்ஜான் தினத்தன்று ஒரே நாளில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப் பட்டுள்ளது.

Ramzan Clash: Danush Vs Simbu Vs Sivakarthikeyan

தற்போது சிம்புவின் நடிப்பில் அனுமார் வாலாக நீண்டு கொண்டே சென்ற வாலு படமும் ரம்ஜான் தினத்தன்று வெளியாகும் என்று சிம்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் வெளியாவதால் கண்டிப்பாக இந்த முறை நம்பலாம் என கோலிவுட்டில் கூறுகின்றனர்.

ஒரே நாளில் மூன்று இளம் நடிகர்களின் படங்கள் வெளியாவதால் தியேட்டர்கள் தொடங்கி, வசூல் வரை பிரச்சினைதான் இந்த உண்மை தெரிந்தும் சம்பந்தப்பட்ட படநிறுவனங்கள் களத்தில் குதிப்பது ஆச்சரியமாக உள்ளது.

இதற்கிடையில் உலக நாயகன் கமல் நடிப்பில் ஜூலை மாதம் 3 ம் தேதி பாபநாசம் படமும், சரித்திரப் படமான பாகுபலி ஜூலை 10 தேதியும் வெளியாவதால் தியேட்டர்களை முழுக்க, முழுக்க இந்த இரு படங்களுமே ஆக்கிரமித்துக் கொள்ளும்.

இவ்வளவு சிகக்கல்கள் இருந்தும் படத்தை அந்த தேதியில் வெளியிடுகின்றனர் இந்த மூவரும், மோதலில் வெல்லப் போவது யார் பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

இணையத்தில் வைரலாகும் மடோனா

லாஸ் ஏஞ்செல்ஸ்: 56 வயதாகும் பாப் பாடகி மடோனா நான்தான் மடோனா என்னும் பொருள் வரும்படி உள்ள ஒரு பாடலை இரு தினங்களுக்கு முன்னர் இணைய தளத்தில் வெளியிட்டார்.

மடோனாவுடன் ஹாலிவுட் பிரபலங்களான ரிடா ஒரா, கிரிஸ் ராக், நிகி மினாஜ், மற்றும் மிலி சைரஸ் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்த இந்தப் பாடலை எழுதி நடித்திருக்கிறார் மடோனா.

இது(Rebel Heart) மடோனாவின் 13 வது ஆல்பம் என்பது குறிப்பிடத்தக்கது. பிங்க் கலரில் உடையணிந்து ஆடிப் பாடி கலக்கி எடுத்திருக்கிறார் மடோனா. பெண்கள் குறித்து ஒரு பெண் சொல்வது போல இந்தப் பாடலின் வரிகள் அமைந்து உள்ளன.

Madonna’s new album Rebel Heart

நான் முட்டாள் என்று நினைக்கவில்லை, எனக்கு காவல் துறையின் பாதுகாப்பு தேவையில்லை , அரசியலில் எனக்கு ஆர்வமில்லை. முதன்முதலில் நான் இங்கிலாந்து நாட்டிற்குச் சென்ற போது பெண்களைக் குறித்து அவர்கள் உபயோகப்படுத்திய வார்த்தையைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஒவ்வொருவரின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகள் வேறு தான், ஆனால் பெண் என்பவள் உடலுறவுக்கான வெறும் போகப்பொருளாக மட்டுமே இங்கு எண்ணுகிறார்கள்.

நான் ஒரு பெண் நான் கூறுகிறேன் நான் மிகவும் வலிமையாக இருக்கிறேன், குழப்பமற்றவளாக மற்றும் கடுமையுடன் இருக்கிறேன். நீங்கள் செக்ஸ் மட்டுமே வெறும் வாழ்க்கை என்று எண்ணாதீர்கள், அதைத் தவிர்த்து வேறு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன கேட்பதற்கு அதனைக் கேளுங்கள் நான் பதில் கூறுகிறேன்" என்று பெண்களை உயர்வாக கருதியும், பெண்களை வெறும் போகப்பொருளாக மட்டுமே எண்ணாதீர்கள் என்று பெண்மைக்கு ஆதரவாக குரல் கொடுத்ததும் மடோனா இந்தப் பாடலை எழுதியிருக்கிறார்.

வெளியான இரு தினங்களுக்குள்ளேயே இணையத்தில் வைரலாக மாறி இருக்கிறது இந்தப் பாடல்.

 

ஆமாம் நான் ஆன்ட்டி தான் .. ரசிகர் கமெண்டுக்கு காரமாக பதிலளித்த "சுப்பிரமணியபுரம்" சுவாதி

ஹைதராபாத்: நடிகை விசாகா சிங்கைத் தொடர்ந்து, நடிகை சுவாதியும் சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவரின் கமெண்டுக்கு நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறார். தமிழில் சுப்ரமணியபுரம் படத்தில் அறிமுகமானவர் நடிகை சுவாதி.

இரு தினங்களுக்கு முன்பு நடிகை சுவாதி புடவை கட்டி தான் எடுத்த செல்பி ஒன்றை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்ய, அதனைப் பார்த்த ஒரு ரசிகர் தயவு செய்து இதுபோன்ற புகைப்படங்களை போடாதீர்கள் பார்ப்பதற்கு ஆன்ட்டி போல இருக்கிறீர்கள் என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார்.

Subramaniyapuram Fame Swati hits back at Fan’s comment

அவ்வளவு தான் உடைத்த சோடா போல சும்மா பொங்கி எழுந்து ஆமாம் நான் ஆன்ட்டி தான் என்றுமே கலர்ஸ் சுவாதியாக இருக்க முடியாது உங்கள் இலவச ஆலோசனைக்கு நன்றி அங்கிள் என்று கூறியவர் அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை.

நான் பார்த்து வளர்ந்த ஆன்ட்டிகள் எல்லோருமே சூப்பர் பெண்கள்தான் எனது எடை கூடியிருந்து நான் ஆன்ட்டியாக தெரிந்தால் அதற்காக நான் கவலைப்படப் போவதில்லை, நீங்கள் சொன்ன கமெண்டை எனது இந்தப் படத்திற்கான பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன் என்று அதற்கு ஒரு நீண்ட விளக்கத்தை அளித்திருக்கிறார்.

பாவம் அந்த ரசிகர் பயந்து போய் தனது அக்கவுண்டையே டெலீட் செய்துவிட, அவர் கூறியது ஒன்றும் ஆபாசமான கமென்ட் அல்ல அதற்கு இவ்வளவு பெரிய விளக்கம் தேவையில்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளனர் தெலுங்குலகத்தினர்.

என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா..........

 

நல்ல நடிகையை வீட்டில் பூட்டி வைத்துவிட்டேனே..! - கமல் ஹாஸன்

சென்னை: நல்ல நடிகையான கவுதமியை வீட்டில் பூட்டி வைத்துவிட்டேனே என வருத்தப்பட்டார் நடிகர் கமல் ஹாஸன்.

கமல் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘பாபநாசம்'. இதில் கமலுக்கு ஜோடியாக கவுதமி நடித்துள்ளார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘த்ரிஷ்யம்' படத்தின் ரீமேக்தான் இந்த பாபநாசம். மலையாளத்தில் இந்த படத்தை இயக்கிய ஜீது ஜோசப்தான் தமிழிலும் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

Kamal regrets for stopping Gowthamai from acting career

இப்படத்தை ஜூலை மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கமல், கவுதமி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் கமல் பேசுகையில், "பாபநாசம் படத்தில் எனக்கு ஜோடியாக கவுதமி நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப்பிறகு கவுதமி நடித்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.

Kamal regrets for stopping Gowthamai from acting career

இவரது நடிப்பைப் பார்த்து மிகவும் அசந்து போனேன். அம்மா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஒரு நல்ல நடிகையை வீட்டில் பூட்டி வைத்து விட்டேனே என்று வருத்தமாக இருந்தது," என்றார்.

மேடையில் இருந்த கவுதமி, இதைக் கேட்டு மிகவும் சந்தோஷமடைந்தார்.