நடிகைகளுக்கு சில கட்டாயங்கள் உள்ளன! - ஸ்ரேயா


நடிகைகளுக்கென்று சில கட்டாயங்கள், கஷ்டங்கள் உள்ளன. அதையெல்லாம் மீறி தன் முழு திறமையை காட்டி ஜெயிக்க வேண்டியுள்ளது, என்றார் ஸ்ரேயா.

நடிகை ஸ்ரேயாவின் கடைசி தமிழ்ப் படம் ரவுத்திரம். அதன் பிறகு ராஜபாட்டையில் ஒரு குத்தாட்டத்துக்கு ஆட்டம் போட்டார்.

ஆனால் தான் மிகவும் பிஸியாக இருப்பதாகவே கூறி வருகிறார். ஆங்கிலம், இந்திப் படங்களில் நடிப்பதாகவும், தமிழில் கிராமத்துப் பெண் வேடம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறிவருகிறார்.

லைப் ஈஸ் பியூட்டிபுல் என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கும் அவர், தனது அடுத்த படம் குறித்து கூறுகையில், “நல்ல வாய்ப்புகள் மீண்டும் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இப்போது தமிழில் படங்கள் இல்லை என்பது உண்மைதான். அதேநேரம் நல்ல வாய்ப்புகள் வராததால், பல படங்களை நான் வேண்டாம் என கூறிவிட்டது பலருக்கு தெரியாது.

சிவாஜிக்குப் பிறகு, ஜெயிக்குமோ தோற்குமா என்றெல்லாம் யோசிக்காமல் நிறைய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் நடித்த சில படங்கள் தோற்றதற்கு காரணம் இதுதான்.

கதாநாயகிகளுக்கு சில கட்டாயங்கள் நெருக்கடிகள் உள்ளன. பல நிர்ப்பந்தங்களுக்கிடையில், கவர்ச்சியாக நடிக்க வேண்டும். ஆனால் ஆபாசமாக தெரியக்கூடாது அழகு காட்டவேண்டும். நினைத்த மாதிரி நடிக்க முடியாது. இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கூட நான் நடித்த படங்களில் நான் முழு திறமை காட்டியுள்ளேன்.

சினிமாவில் அதிர்ஷ்டம் முக்கியம். தலை எழுத்தை மாற்ற முடியாது. ஒரு படம் ஹிட்டானால் வாழ்க்கையே தலைகீழாக மாறி விடும்.அப்படியொரு படத்துக்காகத்தான் பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு அப்படி வந்த ஒரு படம் சிவாஜி,” என்றார்.

 

ரிக்ஷாக்காரர் மகன் திருமணத்திற்குப் போகும் ஆமிர்கான்!


ஆமிர்கான் வி்த்தியாசமானவர். தனது ரசிகரான வாரணாசியைச் சேர்ந்த ஒரு ரிக்ஷா ஓட்டியின் மகன் திருமணத்திற்கு தன்னை அழைத்ததை தட்டாமல் ஏற்றுக் கொண்ட ஆமிர், அந்தத் திருமணத்திற்குப் போகவுள்ளாராம்.

வாரணாசியைச் சேர்ந்தவர் ராம் லக்கான். ரிக்ஷா ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். 3 இடியட்ஸ் படத்தின் புரோமாவுக்காக வாரணாசிக்கு ஆமிர் போயிருந்தபோது அவருடன் நட்பாகி விட்டார். பின்னர் ஆமிரின் தீவிர ரசிகராகியும் விட்டார்.

ராம் லக்கான் தனது மகனுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார். வாரணாசியில் நாளை திருமணம் நடைபெறுகிறது. இதையடுத்து மும்பை வந்த அவர் ஆமிரை சந்தித்து தனது மகன் கல்யாண பத்திரிக்கையைக் கொடுத்து அவசியம் கல்யாணத்திற்கு வர வேண்டும் என்று தயங்கித் தயங்கி கோரிக்கை வைத்தார்.

அவரது அழைப்பையும், அன்பையும் பார்த்து நெகிழ்ந்து போன ஆமிர் கண்டிப்பாக வருகிறேன் என்று கூறி ராம் லக்கானை வியப்பில் ஆழ்த்தினார். நாளை திருமணம் நடக்கிறது. இதில் ஆமிர் கலந்து கொள்ளவுள்ளாராம்.

3 இடியட்ஸ் படத்தின் புரோமோ நிகழ்ச்சிக்காக இரண்டரை வருடங்களுக்கு முன்பு ஆமிர் வாரணாசி போயிருந்தபோது ஒரு வயதானவர் போல வேடமிட்டுக் கொண்டு ராம் லக்கானின் ரிக்ஷாவில் ஏறி வாரணாசியை சுற்றிப் பார்த்தார். நேரம் போகப் போகத்தான் தனது சவாரியாக வந்திருப்பவர் ஆமிர் என்று லக்கானுக்குத் தெரிய வந்ததாம். இதனால் ஆச்சரியப்பட்டுப் போன அவர் தனது பேச்சாலும், அன்பாலும், நடத்தையாலும் ஆமிரை வெகுவாக கவர்ந்திழுத்து விட்டார்.

இந்த நட்புதான் தற்போது கல்யாணத்திற்கு அழைப்பு விடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

 

சன்னி லியோனிடம் 'அதை' எதிர்பார்த்த தயாரிப்பாளர்கள்!


செக்ஸ் இல்லாவிட்டால் சான்ஸ் இல்லை … இது திரையுலகில் மிகச் சாதாரணமாக உலா வரும் ஒரு வார்த்தை. இதை அவர்களே கூட மறுக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு செக்ஸுக்கும், சினிமா வாய்ப்புகளுக்கும் நிறைய உறவு உண்டு.

ஒரு பெண் நடிகையாக வேண்டும் என்றால் நிறைய ‘முதலீடு’ செய்தாக வேண்டும். பல ‘முதலாளிகளைப்’ பார்த்தாக வேண்டும். அவர்களின் ‘நிபந்தனைகளுக்கு’ உட்பட்டாக வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு சின்ன பிட்டு வேடமாவது கிடைக்கும். இதை திரையுலகிலேயே சகஜமாக பலரும் கூறுவதைக் கேட்கலாம்.

இந்த நிலையில் கடல் கடந்து பாலிவுட்டில் நடிகையாகியுள்ள கனடாவின் சன்னி லியோனுக்கும் கூட இந்த ‘செக்ஸ் பக்’ கடித்துள்ளதாம். கனடாவின் ஆபாசப் பட நடிகைதான் சன்னி. இவர் காட்டிய கவர்ச்சியைப் போல யாரும் காட்டியிருக்க முடியாது. டாப்லெஸ், பாட்டம்லெஸ் என்று இவர் போகாத ஏரியா இல்லை. இந்த நிலையில் இவரிடமும் ‘அதை’ எதிர்பார்த்து பல தயாரிப்பாளர்கள் கொக்கி போட்டுள்ளனராம்.

பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோவில் சன்னி லியோனும் பங்கேற்றிருந்தார். அப்போது அவரை சில தயாரிப்பாளர்கள் அணுகி, வாய்ப்பு தருவதாகவும், தங்களைக் கவனிக்குமாறும் வெளிப்படையாகவே கேட்டனராம்.

சன்னியிடம் இப்படி பகிரங்கமாகவே அவர்கள் கேட்டதற்குக் காரணம் அவர் ஒரு ஆபாசப் பட நடிகை என்பதால்தானாம். ஆபாசப் படங்களில் நடிப்பவர்தானே, நாம் கேட்டால் மாட்டேன் என்றா கூறி விடப் போகிறார் என்பது அவர்களின் எண்ணமாம். ஆனால் தன்னிடம் செக்ஸை எதிர்பார்த்து வந்த தயாரிப்பாளர்கள் அத்தனை பேரையும் ரிஜக்ட் செய்து விட்டாராம் சன்னி லியோன்.

பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ள நான் ரெடியாக இல்லை என்று கூறும் சன்னி லியோன், அப்படி எந்த ஒரு முன் நிபந்தனையும் இல்லாமல் ஜிஸ்ம் 2 பட வாய்ப்பைப் பெற்றுள்ளாராம். இப்போது அவர் பாலிவுட்டில் புக்காகியுள்ள படங்களிலும் கூட அப்படித்தான் சுதந்திரமான வாய்ப்பைப் பெற்றுள்ளதாக அவரது தரப்பு கூறுகிறது.

இதுகுறித்துக் கேட்டால், நான் ஆபாசப் பட நடிகைதான். அதை மறுக்கவில்லை, ஆனால் நான் விபச்சாரி இல்லை என்று பொட்டில் அடித்தது போலக் கூறுகிறார் சன்னி.

 

ரஜினிக்கு பொருத்தமான வில்லன் நானே - ஜாக்கி ஷெராப்


Rajini and Jackie Shroff

ரஜினிக்கு பொருத்தமான வில்லன் நான்தான். அதை கோச்சடையானில் நீங்கள் பார்க்கலாம், என்கிறார் நடிகர் ஜாக்கி ஷெராப்.

ரஜினியின் அடுத்த படமான கோச்சடையானில் அவருடன் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. தீபிகா படுகோன், ருக்மணி, ஷோபனா, சரத்குமார், நாசர், ஆதி இவர்களுடன் ஜாக்கி ஷெராபும் நடிக்கிறார்.

இவர்தான் படத்தில் ரஜினிக்கு பிரதான வில்லன்.

இதுகுறித்து ஜாக்கி ஷெராப் கூறுகையில், “ரஜினி என் நெருங்கிய நண்பர். அவருடன் பல வருடங்களுக்குப் பிறகு இணைந்து நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சி. மிகச் சிறந்த நடிகர் ரஜினி. அவருக்கு இணையாக யாரையும் சொல்ல முடியாது.

கோச்சடையான் படத்தில் என் பெயர் ராஜா. ஆனால் முழுக்க முழுக்க பக்கா வில்லன் வேடம். நானும் ரஜினியும் மோதும் காட்சிகள் லண்டனில் எடுக்கப்பட்டுவிட்டன. அவருக்குப் பொருத்தமான வில்லன் நான்தான் என்பதைப் புரிந்து கொள்வீர்கள், படம் வந்ததும். இதற்கு மேல் சொல்ல முடியாது,” என்றார்.

 

கிசு கிசு - ஹீரோயின்களை அடக்க ஹீரோக்கள் புது பிளான்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

சமீ ஹீரோயினை சான்டல்வுட்ல நடிக்க கேட்டாங்களாம்... கேட்டாங்களாம்... மத்த லாங்குவேஜ்ல வாங்குற சம்பளத்தை கொடுங்க நடிக்க¤றேன்னாராம். அந்த கணக்குபடி சான்டல்வுட்ல இருக்க¤ற வேற ஹீரோயின் யாரும் இவ்ளோ சம்பளம் வாங்குனதில்லையாம். லோகல் பெரிய ஹீரோயினுங்க மேல இருக்க¤ற கோபத்துல சமீக்கு கேட்ட சம்பளம் கொடுக்க தயாரிப்பு தரப்பு ஒத்துக்கிட்டாங்களாம்... ஒத¢துக்கிட்டாங்களாம்... இப்படியே ந¤றைய ஹீரோயினை இழுத்து, கிராக்கி பண்ற உள்ளூர் ஹீரோயினுங்கள அடக்க சில ஹீரோக்கள் பிளான் பண்ணிருக்காங்களாம்... பண்ணிருக்காங்களாம்...

ராஜ ஈஸ்வர இயக்கம் கோலிவுட்ல கிக்கான படம் பண்ணிருந்தாரு. இதுல மூக்குநீண்ட வில்லன் நடிகரும், அவரோட மனைவியா நமீ நடிகையும் நடிச்சிருந்தாங்க. இந்த படத்தை தெலுங்கு டப் பண்ணியிருக்காரு. இதுல கிளாமர் இன்னும் தூக்கலா வேணும்னு வினியோகஸ்தருங்க கேட்க, புது ஷூட் பண்ணி சில காட்சிகளை இயக்கம் சேர்த¢திருக்காராம்... சேர்த¢திருக்காராம்... அந்த காட்சிகள்ல நடிக்க நமீகிட்ட கேட்டப்போ, ஒரு படத்துக்கான சம்பளம் கேட்டு மிரட்டினாராம்... மிரட்டினாராம்... இதனால சைடு நடிகையை வச்சு அந்த காட்சிகளை இயக்கம் முடிச்சிட்டாராம்... முடிச்சிட்டாராம்...

தன்னோட இந்தி படம் சூப்பர் ஹிட்டானதால பிசின் நடிகை சம்பளத்தை திடீர்னு உயர்த்திட்டாராம்... உயர்த்திட்டாராம்... தமிழ்ல வாய்ப்பு வந்தாலும் இதே சம்பளம்தான்னு சொல்றாராம்... சொல்றாராம்... விஷயத்தை கேள்விப்பட்டு, அவரை ஒப்பந்தம் பண்ண இருந்த ஒரு தமிழ் தயாரிப்பு ஜகா வாங்கிட்டாராம்... வாங்கிட்டாராம்...


 

கிசு கிசு - ஹீரோயின்களை அடக்க ஹீரோக்கள் புது பிளான்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

சமீ ஹீரோயினை சான்டல்வுட்ல நடிக்க கேட்டாங்களாம்... கேட்டாங்களாம்... மத்த லாங்குவேஜ்ல வாங்குற சம்பளத்தை கொடுங்க நடிக்க¤றேன்னாராம். அந்த கணக்குபடி சான்டல்வுட்ல இருக்க¤ற வேற ஹீரோயின் யாரும் இவ்ளோ சம்பளம் வாங்குனதில்லையாம். லோகல் பெரிய ஹீரோயினுங்க மேல இருக்க¤ற கோபத்துல சமீக்கு கேட்ட சம்பளம் கொடுக்க தயாரிப்பு தரப்பு ஒத்துக்கிட்டாங்களாம்... ஒத¢துக்கிட்டாங்களாம்... இப்படியே ந¤றைய ஹீரோயினை இழுத்து, கிராக்கி பண்ற உள்ளூர் ஹீரோயினுங்கள அடக்க சில ஹீரோக்கள் பிளான் பண்ணிருக்காங்களாம்... பண்ணிருக்காங்களாம்...

ராஜ ஈஸ்வர இயக்கம் கோலிவுட்ல கிக்கான படம் பண்ணிருந்தாரு. இதுல மூக்குநீண்ட வில்லன் நடிகரும், அவரோட மனைவியா நமீ நடிகையும் நடிச்சிருந்தாங்க. இந்த படத்தை தெலுங்கு டப் பண்ணியிருக்காரு. இதுல கிளாமர் இன்னும் தூக்கலா வேணும்னு வினியோகஸ்தருங்க கேட்க, புது ஷூட் பண்ணி சில காட்சிகளை இயக்கம் சேர்த¢திருக்காராம்... சேர்த¢திருக்காராம்... அந்த காட்சிகள்ல நடிக்க நமீகிட்ட கேட்டப்போ, ஒரு படத்துக்கான சம்பளம் கேட்டு மிரட்டினாராம்... மிரட்டினாராம்... இதனால சைடு நடிகையை வச்சு அந்த காட்சிகளை இயக்கம் முடிச்சிட்டாராம்... முடிச்சிட்டாராம்...

தன்னோட இந்தி படம் சூப்பர் ஹிட்டானதால பிசின் நடிகை சம்பளத்தை திடீர்னு உயர்த்திட்டாராம்... உயர்த்திட்டாராம்... தமிழ்ல வாய்ப்பு வந்தாலும் இதே சம்பளம்தான்னு சொல்றாராம்... சொல்றாராம்... விஷயத்தை கேள்விப்பட்டு, அவரை ஒப்பந்தம் பண்ண இருந்த ஒரு தமிழ் தயாரிப்பு ஜகா வாங்கிட்டாராம்... வாங்கிட்டாராம்...


 

பிரிட்டிஷ் மாடலுடன் சல்மான் காதல்: ஆச்சரியத்தில் பாலிவுட்


தபாங் பட வெற்றிக்கு பிறகு இனி காதலே வேண்டாம் என்று உறுதிமொழி ஏற்ற சல்மான் கான் மீண்டும் காதலில் விழுந்துள்ளாராம். இந்த முறை அவரது காதலியாகி இருப்பது பிரிட்டிஷ் மாடல் ஹேசல்.

நாற்பதுகளிலும் அசத்தலாய் இளம்பெண்களை கவரும் வகையில் வலம் வந்து கொண்டிருப்பவர் பாலிவுட் ஹீரோ சல்மான் கான். சல்மான் கானுக்கும் காதலுக்கும் ஏக தூரம் போல. படத்துக்குப் படம் சல்மான் சட்டையைக் கழற்றி கடாசுவது போல அவரை விட்டு காதலிகளும் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கிறார்கள்.

அவரது சூப்பர் ஹாட் காதலிகள் அனைவரும் இறுதியில் குட்பை சொல்லிவிட்டு சென்று விடுகின்றனர். ஆனால் மன்மதன் பார்வை அவரை விட்டு நீங்காது இருக்கிறது. ஒரு ஆள் போனால் அடுத்த ஆள் சட்டென்று வந்து உட்கார்ந்து கொள்கிறார். தற்போது சல்மானின் காதலிகள் பட்டியலில் சேர்ந்திருப்பவர் பிரிட்டிஷ் மாடல் ஹேசல்.

அன்மையில் சல்மானுக்கு யாரோ புது காதலி கிடைத்துள்ளதாக கிசுகிசு வந்த வண்ணம் இருந்தன. தற்போது அது உண்மையாகிவிட்டது. அவரும், ஹேசலும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு புனேவில் பைக்கில் பறந்து செல்வதை சிலர் பார்த்திருக்கின்றனர். இருவரும் கணிசமான நேரத்தை ஒன்றாக செலவழிப்பதாகதவும் தெரிகிறது.

தற்போது சல்மான் சித்திக் இயக்கத்தில் பாடிகார்ட் (தமிழில் விஜய் நடித்த காதலன்) படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் ஹேசல் வந்து விடுகிறாராம். அங்கும் இருவரும் ஜோடியாகவே இருக்கிறார்களாம்.

சங்கீதா பிஜ்லானி, சோமி அலி, முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைப் என சல்மானின் காதல் வரிசையில் தற்போது ஹேசல் இணைந்திருப்பதில் ஆச்சரியம் இல்லைதான்.
 

ரஜினி குணம் அடைய வேண்டி ஒன்றரை மணி நேரம் மோகினியாட்டம்


Dancer Hemaletha
கொல்லம்: ரஜினி குணமடைய வேண்டி கேரளாவைச் சேர்ந்த மோகினியாட்ட கலைஞர் ஹேமலதா குருவாயூர் கோயிலில் இன்று நடனமாடி பிரார்த்தனை செய்கிறார்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் சிங்கபூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடைய வேண்டி பல்வேறு ஆலயங்களில் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த புகழ் பெற்ற மோகினியாட்ட கலைஞரான ஹேமலதாவும் விசேஷ பிரார்த்தனை செய்யவிருக்கிறார்.

ரஜினி குணமடைய வேண்டி குருவாயூர் கோயிலில் இன்று ஒன்றரை மணி நேரம் கிருஷ்ணர் பாடல்களுக்கு அவர் நடனமாடி பிரார்த்தனை செய்கிறார். பிற்பகல் 2.45 மணிக்கு நடனம் தொடங்குகிறது. கடந்த ஆண்டில் திருச்சூரில் தொடர்ந்து 123 மணி நேரம் 15 நிமிடங்கள் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த இவர் ரஜினியின் தீவிர ரசிகை.

இது குறித்து ஹேமலதா கூறுகையில்,

ரஜினியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு உடல் நலம் பாதித்ததை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். எனவே அவர் குணமடைய என்னால் ஆன ஒரு பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.
 

ரஜினிக்கு இழுபறியாகும் ஜோடி-ரேகாவும் மறுத்தார்!


ராணா படத்தில் வயதான கெட்டப்பில் வரும் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நடிக்க நடிகை யாரும் இன்னும் அமைந்தபாடில்லை. லேட்டஸ்டாக அணுகிய நடிகை ரேகா, பெரும் சம்பளம் தந்தால் நடிப்பதாக கூறவே அந்த வாய்ப்பு நழுவிப் போய் விட்டதாம்.

ராணா படம் வெளிவருவதற்குள் அதில் நடிக்கவிருப்பவர்கள் மாறிக் கொண்டே இருக்கின்றனர். பாலிவுட் திவா ரேகாவிடம் ராணாவில் வயதான ரஜினிக்கு ஜோடியாக நடிக்க கேட்டதற்கு அவர் 4 விரல்களைக் காட்டினாராம்.

பரவாயில்லையே 40 லட்சம் தான் போல என்று சந்தோஷமாகியுள்ளது படத்தைத் தயாரிக்கும் ஆக்கர் ஸ்டூடியோஸ். ஆனால் ரேகாவோ, ஹலோ, அது நாலு கோடி என்று கூறவே அப்படியெ ஜெர்க் ஆகி, ரேகாவுக்கு பெரிய கும்பிடு போட்டுவிட்டு எஸ் ஆகி விட்டதாம்.

இதையடுத்து தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஹேமமாலியினிடம் பேசியுள்ளனராம். விரைவில் அவரை சந்திக்கவிருக்கிறார்களாம். ஏற்கனவே முழு ஸ்கிரிப்டை காட்ட மறுத்ததால் வித்யா பாலன் குட்பை சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

சில்க் பெயரில் விபச்சாரி கதையைப் படமாக்குகிறார்கள்- கன்னட நடிகை புது குண்டு!


Nikitha
சிலுக்கு என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டு இந்தியில் பெரும் வெற்றி பெற்ற டர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் கன்னட ரீமேக்கில் வீணா மாலிக் நடிக்கவிருப்பது பழைய செய்தி. ஆனால் அதற்கு முன்பு கன்னட பிரபலங்கள் சிலரை அணுகினராம். ஆனால் அய்யய்யோ வேண்டாமே என்று அவர்கள் பயந்து ஓடி விட்டார்களாம்.

தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் தமிழிலும் ரீமேக்காகிறது. அனுஷ்கா, சில்க் அவதாரம் எடுக்கவுள்ளார். இந்த நிலையில் கன்னடத்திலும் இதே ரீமேக்காகுகிறார்கள். டர்ட்டி பிக்சர்ஸ்-சில்க் சக்காத் மகா என்று பெயரிடப்பட்டுள்ள அதில் பாகிஸ்தான் கவர்ச்சி குண்டு வீணா மாலிக் நடிக்கப் போகிறார்.

ஆனால் வீணாவை முயற்சிப்பதற்கு முன்பு கன்னடத்தில் பிரபலமாக உள்ள சிலரை அணுகியுள்ளனர். ஆனால் அவர்கள் பின்வாங்கியதால்தான் வேறு வழியில்லாமல் கவர்ச்சி நிறைந்து வழியும் வீணாவைப் பிடித்துள்ளனர்.

முதலில் அணுகப்பட்டவர்களில் ஒருவர் நிகிதா துக்ரால். ஆனால் நிகிதா தயங்கவே, அடுத்து பூஜா காந்தியை பிடித்துள்ளனர். ஆனால் அவரும் நிராகரித்து விட்டாராம். இதுகுறித்து பூஜாவிடம் கேட்டபோது, என்னை அணுகியது உண்மைதான். ஆனால் அதை நான் பரிசீலிக்கவே இல்லை. என்னைப் பொறுத்தவரை, இந்தியில் அந்தப் படத்தை அருமையாக உருவாக்கியிருந்தனர். அதை ரீமேக் செய்வது என்பது பொருத்தமாக இருக்காது என்பது எனது எண்ணம். இதனால்தான் அதை நான் ஏற்கவில்லை. இத்தோடு விட்டுவிடலாமே இதை... என்கிறார்.

ஏன் சில்க் வேடம் வேண்டாம் என்றீர்கள் என்று நிகிதாவிடம் கேட்டால், சில்க் கதை என்றுதான் சொல்கிறார்கள். படத்தின் பெயரும் அப்படித்தான் உள்ளது. ஆனால் ஒரு விபச்சாரியின் கதையைத்தான் படமாக்கப் போகிறார்கள். கதை அப்படித்தான் செல்கிறது. அதில் எனக்கு உடன்பாடில்லை.

மேலும் இது சில்க் ஸ்மிதாவுக்கும் மரியாதை செய்வதாக இருக்காது. இந்தப் படத்தை நான் செய்தால் அது கன்னட ரசிகர்களை ஏமாற்றுவற்குச் சமம். இந்தப் படத்தில் நான் இல்லை என்பதே மகிழ்ச்சியாக உள்ளது என்று புது குண்டைத் தூக்கிப் போட்டார். ஆனால் இந்தப் புகாரை படத்தின் இயக்குநரான திரிஷூல் மறுத்துள்ளார்.

இதுவே ஒரு பெரிய கதையாக இருக்கும் போலிருக்கே...!
 

படப்பிடிப்பில் விபத்து - அனன்யா கை முறிந்தது!


மலையாளப் பட ஷூட்டிங்கின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகை அனன்யாவுக்கு கை முறிந்தது.

நாடோடிகள் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான அனன்யாவுக்கு, சமீபத்தில் கேரள தொழில் அதிபர் ஆஞ்சநேயனுடன் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் இந்த திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்றுவிட்டது.

தற்போது நாடோடி மன்னன் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார் அனன்யா. விஜிதம்பி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், கேரள மாநிலம் கொச்சி அருகே நடந்தது. அனன்யாவை அபுசலீம் தள்ளி விடுவது போன்ற காட்சியை எடுத்தனர். அப்போது அனன்யா நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த அடிபட்டது. கை மணிக்கட்டிலும் முறிவு ஏற்பட்டது.

உடனடியாக எர்ணாகுளம் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்து கை முறிந்ததை உறுதிப்படுத்தினார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

சிங்கம் 2: சூர்யாவுக்கு அனுஷ்கா - ஹன்ஸிகா ஜோடி!


சிங்கம் 2 படத்தில் சூர்யா நடிப்பார், நடிக்க மாட்டார் என்று பல வித செய்திகள் வந்த நிலையில், சூர்யா நடிப்பதை உறுதி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்.

மாற்றான் முடிந்ததும் அடுத்து சூர்யா நடிக்கப் போவது இந்த சிங்கம் -2 தான். அவருக்கு அனுஷ்கா, ஹன்ஸிகா என இரு ஜோடிகள்.

சிங்கம் படத்தை இயக்கிய ஹரிதான் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார்.

'சிங்கம் 2' படத்திற்கான அனைத்து திரைக்கதை பணிகளையும் முடித்து விட்டாராம் ஹரி. 'மாற்றான்' படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து கொடுத்து விட்டு 'சிங்கம் 2' படத்தில் நடிக்க கால்ஷீட் தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் சூர்யா.

'சிங்கம்' படத்தினை போலவே 'சிங்கம்' 2ம் பாகத்திற்கும் அனுஷ்காவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அவருடன் ஹன்சிகா, விவேக், விஜயகுமார், ராதாரவி, நாசர், ரகுமான் மற்றும் பல புதிய கதாபாத்திரங்கள் இணைய இருக்கிறார்கள். சந்தானம் இப்படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

சென்னை, ஹைதராபாத், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற இருக்கிறது. இயக்குனர் ஹரி முதன் முறையாக படத்தின் சில முக்கிய காட்சிகள், சண்டை காட்சிகள் மற்றும் பாடல்கள் ஆகியவற்றை தென் ஆப்ரிக்கா, கென்யா போன்ற ஆப்ரிக்க நாடுகளில் படமாக்குகிறார்.

'சிங்கம்' படத்திற்கு இசையமைத்த தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க இருக்கிறார். ஒளிப்பதிவுக்கு ப்ரியன், படத்தொகுப்புக்கு V.T.விஜயன் , பாடல்களுக்கு நா,முத்துக்குமார், விவேகா, மதன் கார்க்கி, மக்கள் தொடர்பாளரா ஜான்சன், கலை இயக்குனராக கதிர் ஆகியோர் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

'பிரின்ஸ் பிக்சர்ஸ்' நிறுவனத்தின் சார்பில் லக்ஷ்மணன் இப்படத்தினை தயாரிக்கிறார்.