‘சித்தி’யிடம் பிரகாஷ்ராஜ் கேட்ட கேள்வி!

Radhika S Special Vijay Tv Nvok

தமிழ்நாட்டில் அம்மாவின் தங்கையை எப்படி அழைப்பார்கள்?

பெரியம்மா, அக்கா, சித்தி

இது என்ன என்று பார்க்கிறீர்களா? நடிகர் பிரகாஷ் ராஜ் தொகுத்து வழங்கும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராதிகாவிடம் பிரகாஷ் ராஜ் கேட்ட கேள்வி இது.

சூரியனுக்கே டார்ச்சா என்பது போல சிரித்த ராதிகா. எப்படி சொல்லலாம்? சித்தீ.... இப்படி சொல்லவா? என்று கேட்டுவிட்டு சித்தி சீரியல் பற்றி கதை சொன்னார்.

சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்து முதல்முதலாக சீரியல் தயாரிக்கும் போது சித்தி தொடரினை தயாரித்து வெற்றி பெற்றதாக கூறினார்.

சித்தி தொடரின் இறுதி எபிசோடினை பார்க்கும் போது திருப்பதியில் லட்டு தயாரிக்கும் பணியைக் கூட நிறுத்திவைத்து விட்டு சீரியலைப் பார்க்க பணியாளர்கள் போனதாக பெருமையுடன் கூறினார்.

நிகழ்ச்சியின் இடையே தன்னுடைய நடித்த நடிகைகள், ஸ்ரீதேவி, ராதா, போன்ற நடிகைகளுடன் இணைந்து நடித்தைப் பகிர்ந்து கொண்டார்.

முதல்மரியாதை படத்தில் நடிக்க அழைப்பு வந்த போது முதன் முறையாக நடிகர் கமல்ஹாசனுடன் நடிக்க வந்த வாய்ப்பினை கூறிய ராதிகா முன்பே ஒத்துக்கொண்ட பணி என்பதால் கமலுடன் நடிக்க நேரிட்டதாகவும் கூறிய ராதிகா, பாரதிராஜாவின் அழைப்பை ஏற்று முதல்மரியாதையில் ராதாவிற்கு குரல் மட்டுமே கொடுத்ததாக கூறினார்.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் ஜெயிக்கும் பணத்தை ஏழை குழந்தைகளின் கல்விக்காகவும், சின்னத்திரைக் கலைஞர்களுக்காகவும் கொடுக்கப் போவதாக கூறினார் ராதிகா. இந்த நிகழ்ச்சி திங்கட்கிழமையும் தொடர்கிறது. ராதிகா ஒரு கோடி வெல்வாரா? என்று பார்க்கலாம்.

 

துருவ நட்சத்திரத்தில் சூர்யாவுடன் சிம்ரன்!

Simran Act Surya Dhuruva Nakshathiram

சூர்யா நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சிம்ரன்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சூர்யா படத்தில் நடிக்க வருகிறார் சிம்ரன்.

கௌதம் மேனன் - சூர்யா மூன்றாவது முறையாக கைகோர்த்திருக்கும் படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படத்திற்கான பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது.

பட பூஜையை தொடர்ந்து சூர்யா சம்மந்தப்பட்ட ஒருசில காட்சிகளை கௌதம் படமாக்கினார். 'துருவ நட்சத்திரம்' படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சிம்ரன், பார்த்திபன் ஆகியோர் நடிக்கின்றனர்.

சூர்யா அறிமுகமான நேருக்கு நேர் படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் சிம்ரன். பின்னர் வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா ஜோடியானார்.

இப்போது மூன்றாம் முறையாக சூர்யாவுடன் இணைகிறார். ஆனால் இந்த முறை சூர்யாவுக்கு ஜோடியாக அல்ல.

படத்தில் சூர்யாவின் ஜோடியாக நடிக்க நன்கு தமிழ் பேசத் தெரிந்த ஒரு நாயகியை தேடி வருகிறார்களாம்.

வாரணம் ஆயிரம், ஏக் தீவானா தா படங்களுக்குப் பிறகு கவுதம் மேனனும் ரஹ்மானும் இந்தப் படத்தில் இணைகின்றனர்.

 

'எம்ஜிஆர்' சிவா மரணம்!

Mgr Siva Passed Away

சென்னை: அமரர் எம்ஜிஆர் போல வேடமிட்டு மேடைகளில் ஆடி நடித்தவரும், வாலிபன் சுற்றும் உலகம் படத்தில் நடித்தவருமான எம்ஜிஆர் சிவா இன்று மரணமடைந்தார்.

கிளியோபாட்ரா நடன குழுவில் எம்.ஜி.ஆர் வேடம் இட்டு நடித்து வந்தவர் எம்.ஜி.ஆர்.சிவா. வாலிபன் சுற்றும் உலகம் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். பல இசைக் கச்சேரிகளில் இவர் எம்ஜிஆர் பாடல்களுக்கு அவரைப் போல வேடமிட்டு ஆடினார்.

திண்டுக்கல்லை சேர்ந்த சிவா, மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்தார். அவருடைய சொந்த ஊரான பழனியில் இன்று அதிகாலை 3:30 மணிக்கு மரணம் அடைந்தார்.

அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 5மணிக்கு திண்டுக்கல்லில் நடக்கிறது.