12/16/2010 11:33:42 AM
தமிழ்ப் புத்தாண்டுக்கு ‘அவன் இவன்’
12/16/2010 11:33:42 AM
நிறைவேறுமா ரஜினியின் ஆசை?
விஸ்வநாத் படத்தில் நான் நடித்திருந்தால் அவர் என்னை வேறு பரிமாணத்தில் காட்டியிருப்பார். என் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இருந்திருக்கும்…” என்றார் ரஜினி.
ரஜினி விருப்பம் பற்றி விஸ்வநாத்திடம் கேட்ட போது, ரஜினியை வைத்து படம் எடுக்க இப்போது கூட காலம் கடந்து விடவில்லை, என்றார்.
ரஜினியின் இந்த ஆசை நிறைவேறுமா என்பதை பொருத்திருந்ததான் பார்க்க வேண்டும்…
நிறைவேறுமா ரஜினியின் ஆசை?
19ஆம் தேதி சிறுத்தை பாடல் வெளியீடு!
இளம் நடிகர் ஒருவரை காதலிக்கிறேன்
12/16/2010 10:58:52 AM
பாவனாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியான நிலையில் தான் ஒரு இளம் நடிகர் ஒருவரை காதலிப்பதாக பாவனா தெரிவித்துள்ளார். அவர் யார் என்று கேட்டதற்கு, தனது காதலர் மலையாளி அல்ல என்ற பதில் மட்டும் சொன்னார். ஆனால் சினிமாவில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். இரு வருடங்களுக்கு பிறகே திருமணத்தைப் பற்றி யோசிப்பேன்.
சரித்திர கதையை இயக்குகிறார் மணிரத்னம்!
12/16/2010 11:53:05 AM
தனது நெருங்கிய நண்பர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை கருவாக வைத்து புதிய படத்துக்கான கதையை உருவாக்கியிருக்கிறார் மணிரத்னம். இந்த படத்தை மணிரத்னம் தயாரிக்க, அவரது அசிஸ்டென்ட் சிவா இயக்க உள்ளார்.
இந்நிலையில் மணிரத்னம் அடுத்து கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை படமாக்குகிறார். சரித்திர கதையான இதன் திரைக்கதையை எழுதுவதில் மணிரத்னத்துடன் இணைந்திருப்பவர் எழுத்தாளர் ஜெயமோகன். 15ம் நூற்றாண்டு பின்னணியிலான கதையை படமாக்குவதற்கான ஸ்கிரிப்ட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார் மணிரத்னம். இப்படம் கேரளாவில் படமாகிறது. தன்னுடைய ஸ்கிரிப்ட்டுக்கு ஹீரோவை தேடி வருகிறார் மணிரத்னம்.
விஜய் அரசியலுக்கு வர மாட்டார்!
12/16/2010 3:29:33 PM
விரைவில் விஜய் அரசியல் பிரவேசம் செய்வார் என்று கூறப்படுகிறது. அரசியலுக்கு வருவேன் என்று வெளிப்படையாக ஏற்கனவே கூறியுள்ளார் விஜய். இருப்பினும் அதற்கேற்ற சமயம் வரும்போது முடிவெடுப்பேன் என்றும் ரசிகர்களிடம் கூறி வைத்துள்ளார். இடையில் அவரை காங்கிரஸ் கட்சியில் சேரலாம் என செய்திகள் வெளியாகின. மேலும் திடீரென தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தியுள்ளார் விஜய். ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து அரசியல் இயக்கமாக மாற்றுவது குறித்தும், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களது நிலைப்பாடு குறித்தும், தலைமை அலுவலகம் அமைப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் தன் மகன் அரசியலுக்கு வர மாட்டார் என தெரிவித்துள்ளார். நான் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். எனக்குள்ள சில பிரச்சினைகள் குறித்தும் மக்கள் தலைவர் என்ற முறையில் அவரிடம் சொன்னேன். இதில் மறைத்துப்பேச ஒன்றுமில்லை. என்று கூறிய அவர், தனக்கு காமராஜரைத் தெரியும், காங்கிரசை தெரியாது, எம்.ஜி.ஆரை தெரியும், அ.தி.மு.க.வை தெரியாது. கலைஞரை தெரியும், திமுகவைத் தெரியாது. விஜயகாந்தை தெரியும், தேமுதிக தெரியாது… என்று கூறினார். தற்போது விஜய் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார். அரசியல் கட்சியும் உடனடியாகத் தொடங்க மாட்டார். அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். அதற்கு அஸ்திவாரம் நன்றாக இருக்க வேண்டும். தற்போது அதற்கான அஸ்திவாரம் போட்டு வருகிறேன்…”, என்றார்.
ஓர் இரவில் நடக்கும் கதை
12/16/2010 12:05:05 PM
தனது சொந்த தயாரிப்பில் நடுநிசி நாய்கள் படத்தை இயக்கி முடித்துள்ளார் கௌதம் மேனன். க்ரைம் கலந்த த்ரில்லர் கதைக்கு பாடல்கள், பின்னணி இசை எதும் கிடையாது. படத்தை ஜனவரியில் வெளியிட முயிற்சிகள் நடந்து வருகின்றன. 90 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில் ஓர் இரவில் நடக்கும் கதையை படமாக்கியுள்ளார் கௌதம். இதையடுத்து அவர் தெலுங்குப் படம் இயக்குவார் என்று தெரிகிறது. இந்தப் படங்களுக்குப் பிறகு அவர் சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவார் என தெரிகிறது.
வெளிநாடுகளில் வசூல் குவிக்கும் ஆர்யா படங்கள்!
12/16/2010 12:17:11 PM
பொதுவாக சூப்பர் ஸ்டார், உலக நாயகன் தொடங்கி விஜய், சூர்யா, அஜீத் நடித்த படங்கள் வெளிநாடுகளில் வெளியிடப்படுகின்றன. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் படம் ஓடினால் தான் மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்த்தை ஒரு ஹீரோ பெற முடிகிறது. அப்படி மாஸ் ஹீரோ வரிசையில் ஆர்யாவும் இடம் பிடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘நான் கடவுள்’, ‘மதராசப்பட்டினம்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ போன்ற ஆர்யாவின் படங்கள் வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் அந்த படங்கள் அனைத்தும் ஓரளவிற்கு வசூல் செய்து வந்தது. குறிப்பாக யுகே-யில் அதிக வசூல் செய்தது. இவற்றைத் தொடர்ந்து ஆர்யாவின் சிக்கு புக்குவும் யுகே-யில் திரையிடப்பட்டது. இப்படம் வெளியான முதல் வாரத்தில் யுகே பாக்ஸ் ஆஃபிஸில் 26வது இடத்தைப் பிடித்தது. மூன்று நாட்களில் இதன் வசூல் ஏறக்குறைய 8.56 லட்சங்கள்.
காதலர் தினத்தில் வானம்?
12/16/2010 11:28:00 AM
யங் சூப்பர் ஸ்டார் சிம்பு, பரத், அனுஷ்கா நடித்துள்ள படம் 'வானம்’. புதுமுக இயக்குனர் க்ரிஷ் இயக்கியுள்ளார். வழக்கமாக படத்தில் இருக்கும் எல்லா பாடல்களை வெளியிடுவது தான் வழக்கம் ஆனால் வானம் படத்தில் சிம்பு-யுவன்சங்கர்ராஜா இணைந்து பாடியுள்ள ஒரு பாடல் மட்டும் கொண்ட சிடி ரிலீஸ் செய்யப்பட்டது. மற்ற பாடல்கள் பின்னர் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்தது. இதனை தொடர்ந்து வானம் படத்தை காதலர் தினத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தவகல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த படத்தை தொடங்கினார் பிரபுதேவா!
12/16/2010 11:47:54 AM
தமிழில் இளைய தளபதியை அடுத்து ஜெயம் ரவியை வைத்து (‘எங்கேயும் காதல்’) இயக்கி முடித்துள்ளார். ‘எங்கேயும் காதல்’ படம் வெளிவராத நிலையில் தனது அடுத்த பட ஷூட்டிங்கை தொடங்கியுள்ளார் பிரபுதேவா. பெயரிடப்படாத இந்த படத்திற்கு விஷால் ஹீரோவாக நடிக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக சமீரா ரெட்டி நடிக்கின்றனர். படத்தின் ஹீரோ விஷால் அவன் இவன் படத்தில் பிஸியாக இருப்பதால் சமீரா ரெட்டி சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் எடுத்து வருகிறார் பிரபுதேவா.
ஏ.ஆர்.ரகுமானின் சர்வதேச இசை ஆல்பம்!
12/14/2010 12:41:44 PM
மாளவிகாவுக்கு பெண் குழந்தை
12/15/2010 10:31:33 AM
நடிகை மாளவிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழில் 'வெற்றிக்கொடி கட்டு', அய்யா, சந்திரமுகி உட்பட பல்வேறு படங்களில் நடித்தவர் மாளவிகா. இவர் இந்தியில் 'சீ யூ அட் 9', 'நைனா' உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர், மும்பை தொழிலதிபர் சுமேஷ் மேனனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மும்பையில் வசித்து வரும் இவர்களுக்கு ஆரவ் என்ற மகன் இருக்கிறார். இதற்கிடையே மீண்டும் கர்ப்பமானார் மாளவிகா. அவருக்கு நேற்றுமுன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று காலை பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பிறப்பதற்கு முன்பே அவர்கள் 'ஆன்யா' என்று பெயர் வைத்துள்ளனர்.
இயக்குனர்களை வற்புறுத்த மாட்டேன்!
12/15/2010 11:52:13 AM
தன்னுடைய படங்களில் ஏதாவது ஒரு பாடலை பாடி விடுகிறார் சிம்பு. சிம்புவின் வற்புறுத்தல் காரணமாகவே அவரது ஒவ்வொரு படத்திலும் பாடி வருகிறார் என கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. ஆனால் சிம்பு இதனையை மறுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் ‘இசையை கற்றதில்லை. ஆனால் என் குரல் பலருக்கு பிடித்திருப்பதால் பாடுவதற்கு வாய்ப்புகள் வருகிறது தவிர நான் எந்த இயக்குனர்களையும் வற்புறுத்தியதே இல்லை’ என்கிறார் சிம்பு.
சண்டை காட்சிகளில் நடிக்க சூர்யா மறுப்பு?
12/15/2010 12:01:06 PM
உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சூர்யா, ஸ்ருதி ஹாசன் நடிக்கும் படம் 7ஆம் அறிவு. முருகதாஸ் இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சமீபத்தில் சென்னையில் நடந்த ஆக்ஷன் காட்சியில் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டது. ஒருவாரம் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்த சூர்யா சண்டை காட்சிகளில் தொடர்ந்து நடிக்க மறுப்பு தெரிவித்தாக செய்திகள் வெளியாகின. இதுபற்றி சூர்யாவிடம் கேட்டதற்கு, ‘ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும்போது முதுகெலும்பில் அடிபட்டது. இதனால் 1 மாதத்துக்கு பின்பே சண்டை காட்சிகளில் நடிப்பேன்’ என்று கூறினார்.
10 நிமிடத்துக்கு ஒரு புதிய கதாபாத்திரம்
12/15/2010 12:11:02 PM
தம்பிக்கோட்டை ராஜேஸ்வரி பிலிம்ஸ் சார்பில் ஆர்.கே.ரமேஷ் தயாரிக்கும் படம் 'தம்பிக்கோட்டை'. நரேன், பூனம் பஜ்வா, மீனா, பிரபு, சங்கீதா நடிக்கிறார்கள். படத்தை ரிலீஸ் செய்ய தாமதம் ஆகி வரும் நிலையில் படத்தில் ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒரு புதிய கதாபாத்திரம் வந்து கொண்டே இருக்கும் என்கிறார் டைரக்டர் அம்மு ரமேஷ்.
கோல்டன் கோளப் விருதுக்கு மீண்டும் ரகுமான் தேர்வு!
12/15/2010 11:29:11 AM
இந்த வருடத்துக்கான கோல்டன் கோளப் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ’127 ஹவர்ஸ்’ படத்தில் இசையமைத்த ஏ.ஆர்.ரகுமானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த பாடல் பட்டியலில் 127 ஹவர்ஸ் படத்தில் இடம்பெறும் ” என்ற பாடலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் அப்படத்தில் நடித்த ஜேம்ஸ் பிரான்கோவிற்கு சிறந்த நடிகர் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல், என மொத்தம் 4 விருதுகள் ’127 ஹவர்ஸ்’ படத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே கூட்டணி ஸ்லம்டாக் மில்லியினர் படத்திற்காக கோல்டன் கோளப் மற்றும் ஆஸ்கார் விருதுகள் தட்டிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கிளாமர் இமேஜுக்கு குட்பை
12/15/2010 10:34:39 AM
தமிழில் 'சக்கரவியூகம்' படத்தில் ஹீரோயினாக நடித்தவர் டெய்சி. இப்போது இந்தி மற்றும் கன்னடப் படங்களில் நடித்து வரும் அவர் கூறியதாவது: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் நடித்து வருகிறேன். இந்தி, கன்னடத்தில் கிளாமர் டெய்சி என்கிறார்கள். சில படங்களில் அப்படி நடித்துவிட்டேன். இனி அப்படி நடிக்க மாட்டேன். அந்த இமேஜ் எனக்கு தேவையில்லை. நான் நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவள். சிறந்த கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால், சில படங்கள் எனது இமேஜை மாற்றிவிட்டன. இந்தியில் 'கரம் மசாலா' படத்துக்கு பிறகு சில கதைகளை கேட்டுள்ளேன். புதுமுகங்களுடன் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். நடிப்பது யாராக இருந்தாலும் கதை நன்றாக இருந்தால் மட்டுமே இன்று படம் ஓடுகிறது. ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் போன்ற புகழ்பெற்ற ஹீரோ, ஹீரோயின் நடித்திருந்தாலும் 'குஜாரிஸ்' இந்தி படம் சரியான வசூலை தரவில்லை. ஆனால், புதுமுகங்கள் நடித்த பல படங்கள் ஹிட்டாகியுள்ளன. அதனால் கதை மட்டுமே சினிமாவில் ஹீரோ. மும்பையில் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டதாக வரும் தகவல்களில் உண்மையில்லை. இப்போதைக்கு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். இவ்வாறு டெய்சி கூறினார்.
திருநங்கை ஹீரோயினாகும் நர்த்தகி
12/15/2010 10:24:52 AM
புன்னகைப்பூ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் படம், 'நர்த்தகி'. விஜயபத்மா இயக்குகிறார். திருநங்கைகளை கவுரவப்படுத்தும் வகையில் இதன் கதை அமைந்துள்ளது. கல்கி என்ற திருநங்கை ஹீரோயின்.
திருநங்கைகளின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு சேவை செய்யும் இவரை, சமீபத்தில் அமெரிக்க அரசு கவுரவப்படுத்தியது. விவின் ஹீரோ. 'மைனா' சூஸன், கிரீஷ் கர்னாட் மற்றும் லீமா, சுவாதி உட்பட 10 சிறுவர், சிறுமியர் நடித்துள்ளனர். சின்ன விஷயங்களையும் சந்தோஷமாக எடுத்துக்கொள்ளும் திருநங்கைகளின் வாழ்க்கை கொண்டாட்டமே கதை. திருநங்கைகள் பேசுகிற 'கவுடி' என்ற மொழி, படத்தில் இடம்பெறுகிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். கேசவன் ஒளிப்பதிவு. நா.முத்துக்குமார் பாடல்கள்.
முத்தக் காட்சியில் நடிக்க ஹீரோ மறுப்பு
12/15/2010 10:24:07 AM
'ஆண்மை தவறேல்' படத்தின் ஹீரோ த்ருவா நிருபர்களிடம் கூறியதாவது: கார்மென்ட் பிசினஸ் செய்து வருகிறேன். இந்த படத்தின் இயக்குனர் குழந்தை வேலப்பன் எனது நண்பர். அதனால் என்னை ஹீரோவாக்கிவிட்டார். படத்தில் கால்சென்டர் ஊழியராக வருகிறேன். ஜோடி ஸ்ருதி. ஒரு பாடல் காட்சியில் ஸ்ருதிக்கு உதட்டில் முத்தமிட வேண்டும் என்றார் இயக்குனர். அதற்கு ஸ்ருதி சம்மதித்தும் நான் சம்மதிக்கவில்லை. சில விஷயங்களை இலைமறை காயாக உணர்த்தினால் போதும். பளிச்சென்று காட்டி மற்றவர்களை சங்கடப்படுத்த வேண்டாம் என்று மறுத்தேன். பின்னர் அந்த காட்சி மாற்றப்பட்டது. சினிமாவில், ஆக்ஷன் ஹீரோவாக வளர ஆசை.
ஆக்ஷன் படத்தில் நடித்தது ஏன்?
12/15/2010 10:25:55 AM
கிச்சா இயக்கியுள்ள 'பவானி' படம், வரும் 24&ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் ஹீரோயினாக நடித்துள்ள சினேகா நிருபர்களிடம் கூறியதாவது: விஜயசாந்தி நடித்த 'வைஜயந்தி ஐ.பி.எஸ்' படத்தின் ரீமேக் இது. முழுமையான ஆக்ஷன் படம். கடுமையாக பயிற்சி செய்து சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளேன். நான் நடிக்கும் முதல் ஆக்ஷன் படம். வழக்கமாக நான் நடித்த படங்களில் காதலுக்கு முக்கியத்துவம் இருந்தது. இதில் ஆக்ஷன் இருந்ததால் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்த படத்தை ரசிகர்கள் வரவேற்றால் ஆக்ஷன் படங்களுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுப்பேன்.
இதில் அரசியல்வாதிகளை எதிர்க்கும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். முந்தைய படத்தில் நடித்த விஜயசாந்தி அரசியல்வாதியாகி விட்டார். நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா என்கிறார்கள். எனக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை. அது எனக்கு தேவையுமில்லை. இதில் நடிக்க முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண்பேடியை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டேன். எனக்கு பிடித்த படங்களில் இதுவும் ஒன்று.