எல்லாரும் அப்பவே சொன்னாங்க... நான்தான் உஷாரா இல்லாம போயிட்டேன்! - ஹன்சிகா

கிட்டத்தட்ட லிவ் இன் பார்ட்னர்கள் போல இருந்து பின்னர் பிரிந்துபோன சிம்புவையும் நயன்தாராவையும் ஜோடி போட வைத்ததன் மூலம் படத்துக்கு ஏக பப்ளிசிட்டி பைசா செலவில்லாமல் கிடைத்துவிட்டதாக இயக்குநர் பாண்டிராஜ் தெம்பாக இருக்க, மகா எரிச்சலில் புலம்பித் தள்ள ஆரம்பித்துவிட்டாராம் இப்போதைய காதலியான ஹன்சிகா.

எல்லாரும் அப்பவே சொன்னாங்க... நான்தான் உஷாரா இல்லாம போயிட்டேன் என்பதுதான் இப்போது அவர் அடிக்கடி தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லும் வசனமாம்!

எல்லாரும் அப்பவே சொன்னாங்க... நான்தான் உஷாரா இல்லாம போயிட்டேன்!  - ஹன்சிகா

பிரபுதேவாவை விட்டு நயன்தாரா விலகிவிட்டார் என்று தெரிந்ததிலிருந்தே, சிம்புவுக்கு நயன்தாராவை ஜோடியாக்க முயற்சி நடந்து வந்தது.

வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நயன்தாராவுடன் ஜோடியாக நடிப்பேன் என்று அவரும் சொல்லிவிட்டார். நயன்தாராவும் நடிக்க மறுப்பு தெரிவிக்கவில்லை.

இந்க நிலையில் நயன்தாரா பிறந்த நாளன்று சிம்பு அவருக்கு வாழ்த்துச் சொன்னதோடு, இந்த வாய்ப்பையும் சொல்லி வைக்க, அவரும் சந்தோஷமாக ஒப்புக் கொண்டு கதையையும் கேட்டு முடித்துவிட்டார்.

ஏற்கெனவே சிம்புவை வைத்து ஒரு ஷெட்யூல் முடித்துவிட்டார் பாண்டிராஜ். இப்போது நயன் - சிம்பு பகுதிகளை இயக்குகிறார்.

விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து கலவரமாகிப் போயிருக்கும் ஹன்சிகா, 'எல்லாரும் அப்பவே உஷாரா இருக்கச் சொன்னாங்க... அவங்க சொன்ன மாதிரியே ஆகிடுச்சே,' என புலம்பி வருகிறாராம்.

தோழிகளின் சமாதானம் எதுவும் எடுபடவில்லையாம்!

சரி விடுங்க... பிரபு தேவா படத்துல கமிட் ஆனா கவலை குறைஞ்சிடப் போகுது!

 

குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடும் சீனியர் இசையமைப்பாளர்!

குத்துப்பாடல் ஒன்றில் டான்ஸ் ஆடப் போகிறார் 65 வயது சீனியர் இசையமைப்பாளர். அவர்... நிறையப் படங்களில் இசையமைப்பாளராகவே தோன்றிய (சங்கர்) கணேஷ்.

இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகமாகி 50 ஆண்டுகள் ஆகின்றன.

அவரது 50 ஆண்டு கால கலைச்சேவையை பாராட்டியும், அவரது 65-வது பிறந்த நாளையும் கொண்டாடி, அவரை கௌரவிக்கும் விதமாக 48 மணி நேர உலக சாதனை இசை நிகழ்ச்சி ஒன்று சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடும் சீனியர் இசையமைப்பாளர்!

இந்த விழாவிற்கு இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், பாலு ஆனந்த், நடிகர் சின்னிஜெயந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் வந்து இசையமைப்பாளர் கணேஷுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவரது பணிகளை நினைவு கூர்ந்தனர்.

இந்த விழாவில் ஸ்ரீகிருஷ்ணாவின் ஸரிகமபதநி இசைக்குழுவினர் சங்கர்-கணேஷ் இசையமைத்த பாடல்களைப் பாடினர்.

கணேஷ் பேசும்போது, "1963-ம் ஆண்டு ‘மகராசி' என்ற திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் வரிகளுக்கு இசையமைத்ததன் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானேன். அதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன்.

‘ஒத்தையடி பாதையிலே' என்ற படத்தைத் தொடர்ந்து ஏழு படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளேன். ‘ஜெகதல பிரதாபன்‘ ‘நான உன்ன நெனச்சேன்' போன்ற படங்களையும் இயக்கியுள்ளேன். ‘சட்டம் ஒரு இருட்டறை', தேவியின் திருவிளையாடல்', ‘வரவேற்பு' ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடித்தேன்.

இப்போது ‘பப்பு கொப்பம்மா', ‘கருவேலன்', ‘இயக்குனர்' போன்ற படங்களுக்கு இசையமைக்கிறேன். இதுதவிர தற்போது ‘வின்' என்ற படத்தில் குத்து பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியிருக்கிறேன்," என்றார்.

 

அருள்நிதிய நினைச்சு ஆரம்பத்துல பயந்தேன்- பள பளப்பா திரும்பியிருக்கும் பூர்ணா பேச்சு

அருள்நிதியை நினைத்து ஆரம்பத்தில் பயமாகத்தான் இருந்தது. ஆனா பழகின பிறகுதான் அவர் குழந்தை மனசுக்காரர்னு புரிஞ்சது, என்றார் நடிகை பூர்ணா.

மவுன குரு படத்துக்குப் பிறகு அருள்நிதி - பூர்ணா நடிக்கும் படம் தகராறு. ரொம்ப நாளைக்குப் பிறகு இந்தப் படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொண்ட பூர்ணா பேசுகையில், "இதுவரை நான் நடித்த படங்களிலேயே இதுதான் பெரிய பட்ஜெட், பெரிய கம்பெனி படம்.

அருள்நிதிய நினைச்சு ஆரம்பத்துல பயந்தேன்- பள பளப்பா திரும்பியிருக்கும் பூர்ணா பேச்சு

இந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்க முக்கிய காரணம் நடிகை பூஜா. அவங்க நடிக்க வேண்டிய ரோல். அவங்க நடிக்க முடியாததால என்னை பரிந்துரைத்தார். அவருக்கு நான் சொல்லியாக வேண்டும்.

ஹிட் படத்தில நடிக்கலையேன்னு என்னைப் பார்க்கும் ரிப்போர்ட்டர்ஸ் கேட்பாங்க. அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் இந்தப் படம் இருக்கும். எனக்கு அப்படி ஒரு அருமையான வேடம்.

அருள்நிதிய நினைச்சு ஆரம்பத்துல பயந்தேன்- பள பளப்பா திரும்பியிருக்கும் பூர்ணா பேச்சு

இந்தப் படத்தோட ஷூட்டிங்குக்கு முதல்நாள் வந்தபோது எனக்கு கொஞ்சம் பதட்டமாத்தான் இருந்துச்சி. காரணம் ஹீரோ அருள்நிதி. பெரிய குடும்பத்திலிருந்து வந்திருப்பவர். அதையெல்லாம் நினைத்து பயப்பட்டேன். ஆனால் அவருடன் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் அவர் எந்த அளவு குழந்தை மனசுக்காரர்னு புரிஞ்சிக்கிட்டேன்.

அருள்நிதிய நினைச்சு ஆரம்பத்துல பயந்தேன்- பள பளப்பா திரும்பியிருக்கும் பூர்ணா பேச்சு

இந்தப் படத்துல என்னைப் பார்க்கும்போதெல்லாம் அவர் ஒரு சிரிப்பு சிரிப்பார்.. அது அவ்வளவு க்யூட்டா இருக்கும்.. தயவு செஞ்சி அதை நீங்க பார்க்கணும்," என்றார்.

 

தந்தையின் வழியில் நல்ல காரியங்கள் செய்யும் 'டாக்டர்' விஜய்

சென்னை: மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் மகன் டாக்டர் விஜய் சங்கர் சினிமா தயாரிப்பாளர்களுக்காக இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினார்.

மறைந்த நடிகர் ஜெய்சங்கர் தன் வாழ்நாளில் பலருக்கு சத்தமில்லாமல் உதவி செய்துள்ளார். இந்நிலையில் அவரின் மகன் பிரபல கண் மருத்துவரான விஜய் சங்கரும் தந்தை வழியில் நல்ல காரியங்களை செய்து வருகிறார்.

அவர் பல சமூக சேவை அமைப்புகளுடன் தன்னை இணைத்துக் கொண்டு மருத்துவ சேவை செய்து வருகிறார். மேலும் தனது தந்தையை வாழ வைத்த திரை உலகைச் சேர்ந்தவர்களுக்கும் இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறார்.

தந்தையின் வழியில் நல்ல காரியங்கள் செய்யும் 'டாக்டர்' விஜய்

இந்நிலையில் அவர் தயாரிப்பாளர் சங்கத்தினருக்காக கடந்த 17ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்றை நடத்தினார். இந்த முகாமில் பல தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.


விஜய் சங்கர் நடத்திய முகாமில் நடிகர்கள் சோ, சிவகுமார், அவரது மூத்த மகன் சூர்யா, மோகன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் உள்ளிட்ட நிர்வாகிகள், போலீஸ் ஏ.டி.ஜி.பி சஞ்சை அரோரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

வெள்ளித்திரை, சின்னத்திரை... அடுத்து இணையத் திரைக்கும் படமெடுக்கும் ஏவிஎம்!

சென்னை: தமிழ் சினிமாவுக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்த மிக முக்கியமான தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் அடுத்து ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்த முறை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் மட்டுமே ஓடக்கூடிய சிறு படங்களை, இணையத்துக்காக தயாரிக்கிறது.

தங்களின் முதல் இணையத் தயாரிப்புக்கு ஏவிஎம் நிறுவனம் வைத்துள்ள பெயர் 'இதுவும் கடந்து போகும்'.

வெள்ளித்திரை, சின்னத்திரை... அடுத்து இணையத் திரைக்கும் படமெடுக்கும் ஏவிஎம்!

இந்தப் படம் 55 நிமிடங்கள் ஓடக்கூடியது. சிவாஜியின் பேரனான சிவாஜி தேவ், ஷில்பா பட், ரவி ராகவேந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் முழுமையாக முடிந்து, வெளியீட்டுக்கும் தயாராக உள்ளது.

படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீஹரி பிரபாகர் எழுத, அவருடன் இணைந்து படத்தை இயக்கியுள்ளார் அனில் கிருஷ்ணன்.

இந்தப் புதிய முயற்சிக்கு ஏவிஎம் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம்:

"சின்னத் திரைப்படம் மற்றும் திரைப்படங்களுக்கு எதிர்கால ஊடகமாக இணையம் வளர்ந்து வருகிறது. அதனை உணர்ந்து, அந்த வளர்ச்சியில் பங்கு பெற ஏவிஎம் அதற்கான படங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது. அதன் முதற்படிதான் இதுவும் கடந்து போகும் என்ற ஒரு மணி நேரப் படம்!"

இந்தப் படத்தின் அறிமுக நிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை நடக்கிறது.

 

அவனுங்க கிடக்கிறானுங்க லூசுப் பயலுக..! - ரசிகர்கள் பற்றிய பிரபல நடிகரின் கமெண்ட்

தூத்துக்குடியில் சமீபத்தில் வெளியான ஒரு படத்தின் காட்சி ஓடிக் கொண்டிருந்த தியேட்டர்... திடீரென்று சில இளைஞர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து மோதிக் கொண்டார்கள். ரசிகர்கள்தான். அவரவர் அபிமான நடிகருக்காக அடித்துக் கொண்டார்கள்.

'எங்காளு படத்துக்கு நீ ஏன்டா வந்தே... வந்தவன் மூடிட்டு படத்தைப் பாக்காம கமெண்ட் என்னடா' என ஒரு குரூப் ஆரம்பிக்க, அது கைகலப்பு, மண்டை உடைப்பு என முடிந்தது.

விஷயம் லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் பஞ்சாயத்தோடு முடிந்துபோனது. இந்த தகராறு சம்பந்தப்பட்ட நடிகரின் (அதாவது படம் வெளியான ஹீரோ) காதுக்குக் கொண்டு போகப்பட்டது.

'நம்ம ரசிகரோட மண்டை உடைஞ்சிருக்கு.. நாம ஏதாவது செய்யலன்னா எப்படி?' - என மெல்ல ஆரம்பித்திருக்கிறார் நடிகர் கைத்தடி.

"யோவ்... அவனுங்க கிடக்கிறானுங்க லூசுப் பயலுங்க... நான்தான் வேணாம் போங்கடான்னு சொன்னாலும் கேக்காம எதுக்கு இப்படி அடிச்சிக்கிறானுங்க... அதெல்லாம் நாம ஒண்ணும் செய்யத் தேவையில்ல. இவனுங்கள அப்படி லூஸ்ல விடுங்க.. யாராவது இது சம்பந்தமா போன் பண்ணாலும் கண்டுக்காதீங்க..," என்று கூற, 'ஆகட்டும் சார்' என்று மண்டையை ஆட்டி, சிரித்தாராம் கைத்தடி!

நடிகர் சொன்னதில் தவறேதுமில்லையே.. அவங்க தெளிவா இருக்காங்க.. நீங்களும் சூதானமா இருந்துக்கங்கப்பு!

 

'அட சிநேகா இன்னும் கர்ப்பம் ஆகலைங்க.. ஆனா முதல்ல உங்களுக்குத்தான் சொல்வேன்!'

சென்னை: நடிகையும் தன் மனைவியுமான சிநேகா கர்ப்பம் என்று வந்த செய்திகளை மீண்டும் மறுத்துள்ளார் நடிகர் பிரசன்னா.

புன்னகை இளவரசி என்ற பட்டப்பெயருக்கு சொந்தமான நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்துக்குப் பின்னரும் சிநேகா தொடர்ந்து நடித்து வருகிறார். பிரசன்னாவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன் சிநேகா தாய்மையடைந்திருப்பதாக நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் செய்தி வெளியாகின. ஆனால் பின்னர் அதை பிரசன்னா மறுத்து அறிக்கை வெளியிட்டார்.

'அட சிநேகா இன்னும் கர்ப்பம் ஆகலைங்க.. ஆனா முதல்ல உங்களுக்குத்தான் சொல்வேன்!'

இந்நிலையில், சிநேகா கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில தினங்களாகவே தகவல் பரவி வந்தது. அதுவே செய்தியாக வெளியானது. இதுகுறித்து விசாரிக்க முயன்றபோது, பிரசன்னா மற்றும் சிநேகா இருவருமை தொடர்பில் வரவில்லை. இதுவே செய்தி வெளியானது.

இதைத் தொடர்ந்து சிநேகாவுக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவிக்க ஆரம்பித்தனர். அப்போதுதான் இந்த செய்தி உண்மையில்லை என்று பிரசன்னா மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: பத்திரிக்கை மற்றும் சில ஊடகங்களில் சிநேகா கர்ப்பமாக இருக்கிறார் என வெளிவரும் செய்திகள் உண்மையில்லை. தொடர்ந்து நாங்கள் படங்களில் பிஸியாக நடித்து வருவதால் இப்போதைக்கு குழந்தை பிறப்பை தள்ளி வைத்திருக்கிறோம்.

அப்படி ஒரு சுபசெய்தி இருந்தால் பத்திரிகையாளர்களான உங்களை அழைத்துத்தான் முதலில் பகிர்ந்து கொள்வோம்,' என்று கூறியுள்ளார்.

சிநேகா தற்போது பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் மூன்று மொழிகளில் உருவாகி வரும் ‘உன் சமையல் அறையில்' என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு படமொன்றிலும் நடித்து வருகிறார்.

 

கே பாலச்சந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

சென்னை: இயக்குநர் கே பாலச்சந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.

மழைத்துளி என்னும் சமூக அமைப்பு இந்த விருதினை வழங்குகிறது.

இது தொடர்பாக ரெய்ன் டிராப்ஸ் சமுக் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

"கடந்த பல ஆண்டுகளாக சினிமா உலகில் அளப்பறிய பங்களிப்பை ஆற்றிவரும் இயக்குநர் கே பாலச்சந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.

கே பாலச்சந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

இந்த விருது வழங்கும் விழாவில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், எஸ்.பி.பாலசுப்ரமணியம், மற்றும் மனோரமா ஆகியோருடன் தமிழ் நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களான ஆர்.அஸ்வின் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில்" மாற்றம் தேடி 'be the change-2014' என்ற ஆண்டு நாட்காட்டியை உலக எய்ட்ஸ் தினத்தில் வெளியிடப்படுகிறது.

இந்த நாட்காட்டியில் சாதனையாளர்களை பற்றிய தகவல்களும் சிறந்த சமூக கருத்துகளும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி நிதி குறித்த விவரங்களும் அடங்கியிருக்கும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நடிகர் கிருஷ்ணாவுக்கு திருமண நிச்சயதார்த்தம்!

சென்னை: அலிபாபா, கழுகு படங்களில் நடித்த கிருஷ்ணாவுக்கும் கோவை கைவல்யாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

பிரபல தயாரிப்பாளர் பட்டியல் சேகர் - மதுபாலா தம்பதியரின் மகன் நடிகர் கிருஷ்ணா. பிரபல இயக்குநர் விஷ்ணுவர்தனின் உடன் பிறந்த தம்பி.

கற்றது களவு, அலிபாபா, கழுகு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர், விரைவில் திரைக்கு வர உள்ள வானவராயன் வல்லவராயன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

விழித்திரு, இல்ல ஆனாலும் இருக்கு, வன்மம் போன்ற படங்களிலும் நாயகனாக நடித்து வருகிறார் கிருஷ்ணா.

நடிகர் கிருஷ்ணாவுக்கு திருமண நிச்சயதார்த்தம்!

நடிகர் கிருஷ்ணாவுக்கும் கோவையை சேர்ந்த ரங்கநாதன் - வாசுகி தம்பதியரின் மகள் கைவல்யாவுக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் ஏற்பாடு செய்துள்ளனர்.

இவர்களது திருமண நிச்சயதார்த்த விழா நவம்பர் 20 (இம்மாதம்)ஆம் தேதி புதன் மாலை 6 மணியளவில் கோவை ஜெனீஸ் கிளப்பில் நடைபெற உள்ளது.

திருமணம் பிப்ரவரி 6 ந் தேதி அன்று கோவையில் நடைபெறுகிறது. திருமண வரவேற்பு சென்னையில் நடைபெறுகிறது.