மீரா ஜாஸ்மின் மாண்டலின் ராஜேஷை மணக்கவில்லை: உதவியாளர்

Meera Jasmine Is Not Married Assistant Jayaraman   
நடிகை மீரா ஜாஸ்மின் மாண்டலின் இசைக் கலைஞர் ராஜேஷை மணக்கவில்லை என்று அவரது உதவியாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

நடிகை மீரா ஜாஸ்மின் மாண்டலின் இசைக் கலைஞர் ராஜேஷை காதலித்து அவரை அண்மையில் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. திருமணத்திற்கு பிறகு அவர் படங்களில் நடிப்பதைக் குறைத்துள்ளார் என்றும், மெதுவாக திரையுலகை விட்டு விலகப் போவதாகவும் பேச்சு அடிபட்டது. மேலும் அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்துவதாகவும் பேசப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து மீரா ஜாஸ்மினின் உதவியாளர் ஜெயராமன் கூறுகையில்,

மீரா ஜாஸ்மினுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கு திருமணம் நடக்கையில் நி்ச்சயம் அனைவருக்கும் சொல்லிவி்ட்டு தான் செய்வார். தனது திருமணம் குறித்து வரும் கிசு கிசுக்களை அவர் விரும்பவில்லை என்றார்.

மீரா ஜாஸ்மின் திருமணம் பற்றி கிசு கிசுக்கள் நீண்ட நாட்களாகவே வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Close
 
 

புதுக்கோட்டை அதிமுக வேட்பாளருக்கு போட்டியிலிருந்து விலகிய ரஜினி மன்ற செயலாளர் ஆதரவு!

Pudukottai Rajini Fans Club Secretary Extends Supports
புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிட மனு செய்து பி்ன்னர் ரஜினிகாந்த்தின் வேண்டுகோளின் படி போட்டியிலிருந்து விலகிய மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் ஸ்ரீதர், தனது சக ரசிகர்களோடு அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் கே.ஸ்ரீதர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதை அறிந்ததும் அவரை உடனே போட்டியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு ரஜினிகாந்த் கட்டளையிட்டிருந்தார்.

ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் மூலமாக இந்த உத்தரவு போனது. இதையடுத்து ஸ்ரீதர் தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் போட்டியில் இருந்து விலக முடிவு செய்தேன் என்றார்.

இந்த நிலையில், தற்போது அதிமுக வேட்பாளருக்கு ஸ்ரீதர் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முதலமைச்சர் ஜெயலலிதா பாடுபட்டு வருவதால் அவருக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளோம். பாபா படம் திரையிடப்பட்டபோது பாமகவினர் மிரட்டல் விடுத்தனர். அப்போது தியேட்டர்களுக்கு போதிய பாதுகாப்பை கொடுத்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்றார்.

பின்னர் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை நேரில் சந்தித்தும் தனது ஆதரவை அவர் தெரிவித்தார். அவருடன் ஏராளமான ரசிகர்களும் உடன் சென்றனர். அதிமுக தேர்தல் அலுவலகத்திற்கு சென்று அமைச்சர்களும், நிர்வாகிகளுமான ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோரையும் சந்தித்து தங்கள் மன்றத்தின் ஆதரவையும் ஸ்ரீதர் தெரிவித்தார்.
Close
 
 

லக்ஷ்மி ராயின் ஆசையை நிறைவேற்றிய விஜய்

Vijay Fulfills Lakshmi Rai S Desire
இளைய தளபதியுடன் நடிக்க வேண்டும் என்ற லக்ஷ்மி ராயின் ஆசையை இயக்குனர் விஜய் நிறைவேற்றியுள்ளார்.

சீயான் விக்ரமை வைத்து தாண்டவம் படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் விஜய் அடுத்ததாக இளைய தளபதி விஜயை வைத்து தலைவன் படத்தை இயக்குகிறார். தாண்டவம் படத்தில் நடித்து வரும் லக்ஷ்மி ராய் தனது நீண்ட நாள் ஆசை ஒன்றை இயக்குனர் விஜயிடம் தெரிவித்துள்ளார். அதை கேட்ட விஜய் உடனே அவரது ஆசையை நிறைவேற்றிவிட்டாராம்.

இளைய தளபதியுடன் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையைத் தான் லக்ஷ்மி ராய் தெரிவித்துள்ளார். அதற்கு விஜய் தான் எடுக்கும் தலைவன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் தருவதாக வாக்களித்துள்ளார்.

தாண்டவம் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அனுஷ்கா, ஏமி ஜாக்சன் இருக்கையில் லக்ஷ்மிராய் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த படத்தில் தான் விக்ரமை காதலிக்காவிட்டாலும் தன்னுடைய கதாபாத்திரம் பேசப்படும் என்று நம்பிக்கையுடன் பணியாற்றுகிறார்.
Close
 
 

ஈகோவே இல்லாதவர் 'தல': ஆர்யா புகழாரம்

Arya Praises Thala Ajith
அஜீத் குமார் புகழ் பாடும் நடிகர்கள் பட்டியிலில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் ஆர்யா.

அஜீத் குமாரை வைத்து இயக்குனர் விஷ்ணுவர்தன் எடுக்கும் படத்தில் ஆர்யாவும் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் நடிக்க ஆர்யா ஓவர் ஆர்வமாக உள்ளார்.

இந்நிலையில் அஜீத் குறித்து ஆர்யா கூறுகையில்,

எனக்கு அஜீத் படங்கள் மிகவும் பிடிக்கும். அவருக்கு ஈகோவே கிடையாது. மங்காத்தா நடிகர்களுடன் அவர் பழகிய விதத்தை பார்க்க வேண்டுமே. அவர் டெக்னீஷயன் முதல் சக நடிகர்கள் வரை அனைவரையும் சரிசமமாக பார்ப்பார். எனது பிறந்தநாளைக்கு எனக்கு வாழ்த்து கூறினார். நம் கூட்டணி சிறப்பாக இருக்கப் போகிறது என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.

விஷ்ணுவர்தன் எனக்கு நல்ல நண்பர். அவர் கேட்டால் நான் அவருக்காக துணை நடிகராகக் கூட நடிக்க தயங்கமாட்டேன் என்றார்.

தல கூட பழகும் அனைவருமே அவர் புகழ் பாடும் மாயம் தான் என்ன?
Close
 
 

நடிகர் ஷாருக்கான் எங்களை ஏமாற்றிவிட்டார்-கொல்கத்தா ரசிகர்கள் கொதிப்பு

கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றி ஊர்வலத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை காண பல மணிநேரமாக வெயிலில் காத்திருந்தோம். ஆனால் அவர் ஊர்வலத்தில் வராமல் எங்களை ஏமாற்றிவிட்டார் என்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் புலம்பினர்.

ஐபிஎல் 5 தொடரின் சாம்பியன்ஸான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றி கொண்டாட்டம் மூலம் இன்று கொல்கத்தா நகரமே அதிர்ந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்களை காண கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாளமும், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை காண சினிமா ரசிகர்களும், அரசியல் சார்ந்த தொண்டர்களும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கொல்கத்தாவில் சாலைகளில் 5 கி.மீ. தூரம் வெற்றி ஊர்வலம் வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், அணி உரிமையாளர் ஷாருக்கானும் வருவார் என்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் வெற்றி ஊர்வலத்தில் ஷாருக்கான் வரவில்லை.

இந்த நிலையில் வெற்றி ஊர்வலம் நடைபெற்ற பாதையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்களை பாராட்டும் வகையில், உள்ளூர் கவுன்சிலர்கள் சார்பாக ஜடுபாபு பஸர் பகுதியில் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் வெற்றி ஊர்வலத்தில் நடிகர் ஷாருக்கான் கலந்து கொள்ளாததால், ரசிகர்களின் உற்சாகம் குறைந்தது. மேலும் ரசிகர்களின் தள்ளுமுள்ளு காரணமாக மேடையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.

இதனால் பாதுகாப்பு கருதி வெற்றி ஊர்வலம் வந்த பஸ்சில் வந்த வீரர்கள் யாரும் மேடை இருந்த பகுதியில் கீழே இறங்கவில்லை. இதனையடுத்து அங்கு காத்திருந்த ரசிகர்கள் மற்றும் கவுன்சிலர்கள் தங்கள் கைகளில் இருந்து பூச்செண்டுகளை வீரர்களை நோக்கி ஏறிந்தனர்.

அப்போது நடிகர் ஷாருக்கானை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் கூறியதாவது,

நடிகர் ஷாருக்கான் மிகவும் கோர குணம் கொண்டவர். நாங்கள் அவரை காண வேண்டும் என்ற ஆசையில், பல மணிநேரமாக கடும் வெயிலில் காத்திருந்தோம். ஆனால் அவர் ஊர்வலத்தில் வராததால் ஏமாற்றம் அடைந்தோம். ஷாருக்கானை காண வந்த நாங்கள் முட்டாள் ஆனோம் என்றனர்.

ஆனால் ஈடன் கார்டனில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ஷாருக்கான், கிரிக்கெட் வீரர்களுடன் சேர்ந்து ஆடி பாடினார்.

அதன்பிறகு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறிய மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறுகையில், உங்களால் (ஷாருக்கான்) நாங்கள் பெருமை அடைகிறோம். முழு மேற்கு வங்க மாநிலமும் பெருமை அடைந்தது. இந்த நாடே உங்களால் பெருமை அடைந்துள்ளது என்றார்.

மேடையில் பேசிய நடிகர் ஷாருக்கான், இந்த வெற்றி முழு மேற்கு வங்க மாநிலத்தின் வெற்றி. கொல்கத்தா அணிக்கு ஆதரவு அளித்த அனைத்து மக்களுக்கும், தீதிக்கும் எங்களின் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கம்பிர், கொல்கத்தா மற்றும் மேற்கு வங்க மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.
Close
 
 

ஐஐஎப்ஏவில் அண்ணாத்த ஆடுறார், அப்படி போடு பாடல்களுக்கு ஆடும் ஷாஹித்

Shahid Kapoor Working Hard Impress Kamal Hassan
பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் கமல் ஹாசனை இம்ப்ரஸ் பண்ண கடுமையான நடனப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்.

சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழா சிங்கப்பூரில் வரும் ஜூன் 7ம் தேதி நடக்கிறது. இதில் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் உலக நாயகன் கமல் ஹாசன் 3 ரோல்களில் கலக்கிய அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ பாடல், இளைய தளபதி விஜயின் கில்லி படத்தில் வரும் அப்படி போடு பாடல் உள்பட 4 பாடல்களுக்கு டான்ஸ் ஆடுகிறார்.

டான்ஸ் ஆடுவது ஷாஹித்துக்கு ஒன்றும் பெரிய கஷ்டம் எல்லாம் கிடையாது. ஆனால் இந்த விழாவில் கமல் ஹாசன் கலந்து கொள்கிறார். அதனால் அவர் ஆடிய பாடலுக்கு தான் சிறப்பாக ஆடி அவரை இம்ப்ரஸ் பண்ண வேண்டுமே என்று கடுமையாக நடன பயிற்சி செய்து வருகிறாராம் ஷாஹித். வாரத்திற்கு 2 முதல் 4 முறை நடனப் பயிற்சி செய்கிறாராம். கமல் நடிப்புக்கு மட்டுமல்ல நடனத்திற்கும் பெயர் போனவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் ஷாஹித் எப்படி ஆடப் போகிறோமோ என்று ஒரே டென்ஷனாக இருக்கிறாராம்.

கமல ஹாசனின் விஸ்வரூபம் இந்த விழாவில் திரையிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Close
 
 

என் ஸ்டைல் தனி ஸ்டைல்: அமலா பால்

I Have My Own Style Amala Paul   
தனக்கென்று ஒரு ஸ்டைல் வைத்திருப்பதாக மைனா புகழ் அமலா பால் தெரிவித்துள்ளார்.

சிந்து சமவெளி மூலம் கோலிவுட்டுக்கு வந்த அமலா பால் மைனா படம் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். இதையடுத்து விகடகவி, தெய்வத் திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் வாய்ப்புகள் வராததால் தெலுங்கு, மலையாளப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தனது நடிப்பு பற்றி அமலா பால் கூறுகையில்,

எனக்கென்று ஒரு ஸ்டைல் இருக்கு. நான் யாரையும் காப்பியடித்து நடிப்பதில்லை. என் ஸ்டைலில் நடிப்பதால் தான் எனக்கென்று ஒரு பெயர் கிடைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல நடிகைகள் வருகிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே நினைவில் நிற்கிறார்கள். அவ்வாறு நினைவில் நிற்க தனக்கென்று ஒரு அடையாளம் வேண்டும் என்றார்.

அமலா பால் என்றால் நம் நினைவுக்கு வருவதென்னவோ அவர் கண்கள் தான். சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜாவுடன் சேர்ந்து ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவிருக்கிறார்.
Close
 
 

அண்ணாமலை ரீமேக்கி்ல் விஜய்?

Vijay Do Rajini S Annamalai Remake
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படம் அண்ணாமலையை ரீமேக் செய்கிறார்கள் என்றும், அதில் விஜய் நடிக்கிறார் என்றும் செய்தி பரப்பியுள்ளனர்.

1992ம் ஆண்டு வெளிவந்த படம் அண்ணாமலை. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்பாவி பால்காரராக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக குஷ்பு நடித்திருந்தார். அவர்கள் கெமிஸ்ட்ரி அப்போது சூப்பர் ஹிட்டானது. தற்போது அண்ணாமலை படத்தை ரீமேக் செய்கிறார்கள் என்று கோலிவுட்டில் பேச்சு அடிபட்டது. மேலும் அதில் ரஜினி ரோலில் நடிக்க விஜய் ஆர்வமாக உள்ளார் என்றும் கூறப்பட்டது.

படத்தை எடுப்பவர்கள் குஷ்பு ரோலில் சின்ன குஷ்பு என்று அழைக்கப்படும் ஹன்சிகாவை நடிக்க வைக்க வலியுறுத்தினர் என்று செய்தி வெளியானது. வேலாயுதம் படத்தின் மூலம் விஜய்-ஹன்சிகா ஜோடி வெற்றி ஜோடியாக ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே பேச்சாக கிடக்கிறதே என்று இளைய தளபதி விஜயிடமே கேட்டதற்கு, அண்ணாமலை படத்தை ரீமேக் செய்வது பற்றி நான் எதுவும் கேள்விப்படவில்லையே என்றார்.

சரி ஹன்சிகாவிடம் கேட்டுப் பார்க்கலாமே என்று சென்றால், எனக்கே இது புது செய்தி. நானே சில இணையதளங்களில் வந்த செய்தியைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்றார்.

யாரப்பா இந்த புரளியைக் கிளப்பிவிட்டது?
Close
 
 

ஷாருக்கான் வாழக்கையில் என்ன தான் நடக்குது?

What S Going On Shahrukh Khan S Life
பாலிவுட் கிங் ஷாருக்கானின் திருமண வாழ்க்கை சிக்கலில் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

சீரியல்களில் நடிக்கும் போதே கௌரியைப் பார்த்து காதலில் விழுந்து அவரையே திருமணம் செய்தவர் ஷாருக்கான். மனைவியின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்று பெயர் எடுத்திருந்தார். எங்கு சென்றாலும் கணவனும், மனைவியும் ஜோடியாக செல்வார்கள். இந்நிலையில் ஷாருக் நடிகை பிரியங்கா சோப்ராவுடன் மிகவும் நெருங்கிப் பழக ஆரம்பித்தார்.

இது கௌரிக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. இந்த விவகாரத்தால் அவர்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தற்போது பார்ட்டி, விருது விழா என்று எங்கு சென்றாலும் ஷாருக் தனியாகத் தான் செல்கிறார். கடந்த ஆண்டு ஐபில் போட்டிகளில் அரங்கிற்கு வந்து வீரர்களை ஊக்குவித்த கௌரி இந்த சீசனில் ஆளையே காணோம்.

ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபில் கோப்பையை கைப்பற்றிதற்காக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடத்தினார். அந்த விழாவிற்கும் ஷாருக் கான் தனியாகத் தான் வந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார். கௌரியைக் காணவில்லை.
Close
 
 

ஷங்கர் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் சமந்தா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சமந்தாவிற்கு இந்த வருடம் சூப்பராக தான் அமைந்துள்ளது போல, கௌதம் மேனன், மணிரத்னம் போன்ற மெகா இயக்குனர்களின் படங்களில் ஹீரோயினாக நடிக்கிறார். இதனையடுத்து, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். இது சம்ந்தாவிற்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு. தமிழ் சினிமாவில் ஒரு வலம் வருவதற்கு முன்பே இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள். ஷங்கர் இயக்கும் இந்த படத்திற்கு 'தேர்தல்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், படத்திற்கு ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராமும், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமானும் பணியாற்றுகின்றனர்.


 

பிரபுதேவா நைட் பார்ட்டி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரவுடி ரத்தோர் இந்திப் படத்தை இயக்கியுளள பிரபுதேவா நைட் பார்ட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் நடிகர்கள் விஜய், அக்ஷய்குமார், சஞ்சய் கபூர், காமெடியன் விவேக், நடிகை திரிஷா உள்பட பலரும் கலந்து கொண்டு கேக் வெட்டி சாப்பிட்டு கலகலப்பாக்கியுள்ளனர். இந்த நள்ளிரவு பார்ட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கானும், கொல்கத்தா அணியின் ஆதரவாளர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

ரவுடி ரத்தோர் படக் குழு சார்பில் தமிழ் மற்றும் இந்தி நடிகர், நடிகைகளுக்கு ஒரு பார்ட்டிய ஏற்பாடு செய்திருந்தார் பிரபுதேவா. இதில் அக்ஷய் குமார், சபீனா கான், சோனாக்ஷி சின்ஹா, ஷாருக் கான், அவரது மனைவி கெளரி, ரித்தேஷ், அவருடய மனைவி ஜெனிலியா, சங்கி பாண்டே, கரீம் மொரானி, சஞ்சய் கபூர், சாஜத் கான், நடிகர்கள் விஜய், விவேக், சுதீப், பிரசன்னா, பிரகாஷ் ராஜ், ஜெயம் ரவி, சுந்தர்.சி, சித்தார், நடிகைகள் திரிஷா, சிம்ரன், சோனியா அகர்வால், சார்மி, சினேகா, குத்து ரம்யா, லட்சுமி மஞ்சு, பிரியா ஆனந்த், பூனம் கெளர், பிரகாஷ் ராஜ் மனைவி போனி வர்மா, இசையமைப்பாளர்கள் தேவி ஸ்ரீ பிரசாத், விஜய் ஆண்டனி, நடிகை சங்கீதா அவருடைய கணவர் கிருஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆடல், பாடல், விருந்து என தடபுடலாக போனதாம் விருந்து. இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் இறுதிப் போட்டியில் தோற்ற அன்று இரவு நடந்த இந்த பார்ட்டி சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. போட்டியில் வென்ற கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கானையும் கொல்கத்தா ஆதரவாளர்களையும் அழைத்து விருந்து வைத்துள்ளார் பிரபுதேவா என்று சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


 

தேனிலவு தள்ளி வைப்பு: சினேகா மீண்டும் நடிக்கிறார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சினேகா- பிரசன்னா திருமணம் சமீபத்தில் நடந்தது. திருமணத்துக்கு பின் சினேகா சினிமாவில் நடிப்பாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அவர் விரும்பினால் தொடர்ந்து நடிக்கலாம் என்று பிரசன்னா கூறினார். நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று சினேகா தெரிவித்தார்.

திருமணம் முடிந்து ஓரிரு வாரங்கள் ஆன நிலையில் சினேகா தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கும் ஹரிதாஸ் படத்தில் நடிக்கிறார். அதில் சினேகாவுக்கு வித்தியாசமான வேடமாம். கேரக்டர் ரொம்ப பிடித்து போனதால் நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளதால் தேனிலவுக்கு போவதை சினேகாவும், பிரசன்னாவும் தள்ளி வைத்துள்ளனர்.


 

விஜய், ஷாருக்கான், பிரபுதேவா பங்கேற்ற 'ரவுடி' பார்ட்டி!

Prabu Deva Hosts Party Foractors From Tamil And Hindi   
ரவுடி ரத்தோர் இந்திப் படத்தை இயக்கியுளள பிரபுதேவா நைட் பார்ட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் நடிகர்கள் விஜய், அக்ஷய்குமார், சஞ்சய் கபூர், காமெடியன் விவேக், நடிகை திரிஷா உள்பட பலரும் கலந்து கொண்டு கேக் வெட்டி சாப்பிட்டு கலகலப்பாக்கியுள்ளனர்.

இந்த நள்ளிரவு பார்ட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கானும், கொல்கத்தா அணியின் ஆதரவாளர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டதால் விருந்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

ரவுடி ரத்தோர் படக் குழு சார்பில் தமிழ் மற்றும் இந்தி நடிகர், நடிகைகளுக்கு ஒரு பார்ட்டிய ஏற்பாடு செய்திருந்தார் பிரபுதேவா. இதில் அக்ஷய் குமார், சபீனா கான், சோனாக்ஷி சின்ஹா, ஷாருக் கான், அவரது மனைவி கெளரி, ரித்தேஷ், அவருடய மனைவி ஜெனிலியா, சங்கி பாண்டே, கரீம் மொரானி, சஞ்சய் கபூர், சாஜத் கான், நடிகர்கள் விஜய், விவேக், சுதீப், பிரசன்னா, பிரகாஷ் ராஜ், ஜெயம் ரவி, சுந்தர்.சி, சித்தார், நடிகைகள் திரிஷா, சிம்ரன், சோனியா அகர்வால், சார்மி, சினேகா, குத்து ரம்யா, லட்சுமி மஞ்சு, பிரியா ஆனந்த், பூனம் கெளர், பிரகாஷ் ராஜ் மனைவி போனி வர்மா, இசையமைப்பாளர்கள் தேவி ஸ்ரீ பிரசாத், விஜய் ஆண்டனி, நடிகை சங்கீதா அவருடைய கணவர் கிருஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆடல், பாடல், விருந்து என தடபுடலாக போனதாம் விருந்து. இதற்கிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் இறுதிப் போட்டியில் தோற்ற அன்று இரவு நடந்த இந்த பார்ட்டி சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. போட்டியில் வென்ற கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கானையும் கொல்கத்தா ஆதரவாளர்களையும் அழைத்து விருந்து வைத்துள்ளார் பிரபுதேவா என்று சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Close
 
 

விவேக்கின் பசுமை கலாம் திட்டத்தில் 13 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை

13 Lakh Saplings Planted Under Vivek
சென்னை: நடிகர் விவேக் தொடங்கி வைத்த பசுமை கலாம் திட்டத்தை வரும் ஜூன் மாதம் 13ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நிறைவு செய்கிறார். இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 13 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓராண்டுக்கு முன்பு நடிகர் விவேக் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்தார். அப்போது கலாம், நீங்கள் ஏன் உங்கள் படத்தில் மரக்கன்றுகள் நடுவதின் அவசியம் பற்றி கூறக்கூடாது என்று கேட்க அதற்கு விவேக் நான் படத்தில் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன், நீங்கள் கூறினால் ஒரு இயக்கம் அமைத்து மரக்கன்றுகள் நடுவேன் என்றார்.

அதற்கு கலாம் ஓ.கே. சொல்லி எத்தனை கன்றுகள் நடுவீர்கள் என்று கேட்டதற்கு 10 லட்சம் என்று பதில் அளித்தார் விவேக். இதையடுத்து விவேக் பசுமை கலாம் என்ற திட்டத்தை துவங்கினார். இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் இதுவரை 13 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு சாதனை படைத்துள்ளனர்.

இந்த திட்டத்தின் நிறைவு விழா வரும் ஜூன் மாதம் 13ம் தேதி கடலூரில் உள்ள கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது.

இது குறித்து விவேக் கூறுகையில்,

பசுமை கலாம் திட்டத்தை அப்துல் கலாம் துவங்கி வைத்தார். என்னையும் அறியாமல் இத்திட்டத்தில் அதிகம் பிடிப்பு ஏற்பட்டுவிட்டது. 13 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளது எனது முயற்சியின் முதல் கட்டம் மட்டுமே. மேலும் பல லட்சம் கன்றுகளை நட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன். மரவளத்தை பெருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

ராமருக்கு பாலம் கட்ட அணில் உதவியதாக இதிகாசங்களில் உள்ளது. அதே போன்று அரசின் மரவளம் பெருக்கும் பணிக்கு நான் அணில் போல் பணியாற்றுவேன் என்றார்.
Close
 
 

ஒய். ஜி. மகேந்திரன் நடிக்கும் `ஆல் இன்ஆல் ஆறுமுகம்'

Y G Mahendran S Serial In Arumugam
நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் நடித்த நெடுந்தொடர் என்றாலே நகைச்சுவைக்கும் கலகலப்பிற்கும் பஞ்சமிருக்காது. தற்போது இரட்டை வேடத்தில் புதிய நகைச்சுவை தொடர் ஒன்றில் நடித்து வருகிறார் ஒய்.ஜி. மகேந்திரன். ‘ஆல் இன் ஆல் ஆறுமுகம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் இரட்டை வேடத்தில் ஆர்பாட்டமான நடிப்பை வெளிபடுத்தியுள்ளாராம் மகேந்திரன்.

சென்னையில் வசிக்கும் ரவுடி, கிராமத்தில் வசிக்கும் ரவுடி என மாறுபட்ட கதாபாத்திரகளில் வரும் ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஜோடியாக யுவஸ்ரீ நடித்துள்ளார். இந்த தொடரில் ரவுடியை சமாளிக்கும் போலீஸ் அதிகாரியாக காத்தாடி ராமமூர்த்தி நடித்துள்ளார். வியட்நாம் வீடு சுந்தரமும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். வசந்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள இந்த நகைச்சுவைத் தொடரை ஜெயமணி இயக்கியுள்ளார்.
Close