புதுச்சேரியில் தயாரான ‘லைப் ஆப் பை' ஆங்கில படத்துக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது. இந்த படம் ஆஸ்கார் விருதுக்கு ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
70 வது கோல்டன் குளோப் விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த திரைப்படம், இயக்குநர், உள்ளிட்ட பிரிவுக்கு லைப் ஆப் பை பரிந்துரைக்கப்பட்டது. இந்த நிலையில் பின்னணி இசைக்காக கோல்டன் குளோப் விருதை லைப் ஆப் பை வென்றுள்ளது.
இதில் சிறந்த திரைப்படமாக அர்கோ தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்படத்தை இயக்கியும் இருந்த பென் அஃப்லெக் சிறந்த இயக்குநர் விருதையும் வென்றார்.
லிங்கன் சிறந்த நடிகர்
சிறந்த திரைப்பட நடிகர் விருதை லிங்கன் படத்தில் ஆப்ரஹாம் லிங்கனாக நடித்த டேனியல் டே லூயிஸ் பெற்றார். இந்த திரைப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நகைச்சுவைப் படத்தில் நடித்த ஜெனிஃபர் லாரன்ஸ், சில்வர் லைனிங்ஸ் படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்
ஸ்கைஃபால் படத்தின் பாடல்
ஸ்கைஃபால் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் ஸ்கைஃபால் பாடலைப் பாடிய அடெலுக்கு சிறந்த திரைப்படப் பாடலுக்கான விருது கிடைத்துள்ளது.இசை நடனத் திரைப்படப் பிரிவில் சிறந்த நடிகர் விருதை லே மிசெராப்லில் தோன்றிய ஹியூ ஜேக்மன் வென்றார்.
சிறந்த பின்னணி இசை
லைப் ஆப் பை படத்திற்கு சிறந்த பின்னணி இசை( ஒரிஜினல் ஸ்கோர்) விருது கிடைத்துள்ளது.
இவ்விருதுக்கு 5 படங்கள் போட்டியிட்டன. இதில் ‘லைப் ஆப் பை' இசையமைப்பாளர் டன்னா இந்திய இசை வாத்தியங்களை சேர்த்து படத்தில் அமைத்திருந்த பின்னணி இசை வித்தியாசமாக இருந்ததால் விருதுக்கு தேர்வானது. ‘லைப் ஆப் பை' படத்தில் இந்தியாவை சேர்ந்த சூரஜ்சர்மா, இர்பான்கான், தபு, உள்ளிட்ட நடிகர், நடிகைகள் பலர் நடித்துள்ளனர். இதில் பாம்பே ஜெயஸ்ரீ ஒரு பாடலை பாடி உள்ளார். இப்பாடல் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. ‘ லைப் ஆப் பை' படத்தை ஆங்க்லீ இயக்கி உள்ளார்.
ஏற்கனவே ‘ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரகுமான் கோல்டன் குளோப் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைக்காட்சி நடிகர்கள்
சிறந்த தொலைக்காட்சி நகைச்சுவைத் தொடர் பிரிவில் கர்ல்ஸ் தொடர் விருது வென்றது. அத்தொடரை எழுதியும் நடித்த லினா டன்ஹாமுடன் நடிகையர் ஸொஸியா மமெட் மற்றும் ஆலிசன் வில்லியம்ஸ்.
இசை நடனத் திரைப்படங்களில் தோன்றிய சிறந்த துணை நடிகை விருதை ஆன் ஹேதவே வென்றார். லே மிசெராப்ல் என்ற படத்துக்காக இவருக்கு இவ்விருது கிடைத்தது.
சிறந்த தொலைக்காட்சி நடிகை விருதை ஹோம்லண்ட் என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக கிளேர் டேன்ஸ் வாங்கினார்
தொலைக்காட்சியில் வெளியான திரைப்படப் பிரிவில் சிறந்த நடிகை விருதை கேம் சேஞ்ச் படத்துக்காக ஜூலியன் மூர் வென்றார்.
ஹோம்லண்ட் தொலைக்காட்சித் தொடரில் நடித்த டேமியன் லூயிஸ் சிறந்த தொலைக்காட்சி நடிகர் விருதை வென்றார்.