அவன் இவன்- பட விமர்சனம்


நடிப்பு: விஷால், ஆர்யா, ஜிஎம் குமார், ஆர்கே, அம்பிகா, பிரபா ரமேஷ், ஜனனி, மதுஷாலினி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு: ஆர்தர் வில்சன்
வசனம்: எஸ் ராமகிருஷ்ணன்
கதை-திரைக்கதை-இயக்கம்: பாலா
தயாரிப்பு: கல்பாத்தி எஸ் அகோரம்
மக்கள் தொடர்பு: நிகில்

பாலாவிடமிருந்து வந்திருக்கும் முதல் கமர்ஷியல் படம் அவன் இவன். கதை, லாஜிக் என எதைப் பற்றியும் கவலைப்படாமல், சிரிக்கச் சிரிக்க காட்சிகள் அமைத்து, கடைசியில் தனது வழக்கமான வன்முறை க்ளைமாக்ஸில் முடித்திருக்கிறார் பாலா.

கதைக்காக எந்த மெனக்கெடலும் இதில் தெரியவில்லை. 'வால்டர் வணங்காமுடி' விஷால், 'கும்புடறேன் சாமி' ஆர்யா இருவரும் அண்ணன் தம்பிகள். ஆனால் அம்மாக்கள் வேறு. என்னதான் சக்களத்திச் சண்டை என்றாலும், பகை என்று வந்தாலும் உறவையும் பாசத்தையும் விட்டுக் கொடுக்காத முரட்டு அம்மாக்கள் (அம்பிகா, பிரபா ரமேஷ்)! இவர்களுக்கு திருட்டுதான் தொழில்.

இந்தக் குடும்பத்தை தன் உறவாக நினைக்கும் வாழ்ந்து கெட்ட ஜமீன் ஜிஎம் குமார். விஷாலையும் ஆர்யாவையும் சொந்தப் பிள்ளைகளாகக் கருதி பாசம் பொழிகிறார், அவர்களுடன் இம்பாலா காரில் ஊர் சுற்றுகிறார். படத்தின் கடைசி ரீலுக்கு முன்பு வரை விடிய விடிய குடிக்கிறார். அவ்வப்போது திருட்டை விட்டுவிடச் சொல்லி அட்வைஸ் பண்ணுகிறார்.

இப்படி குடியும் கும்மாளமுமாக போய்க் கொண்டிருக்கும் இவர்கள், கசாப்புக் கடைக்கு அடிமாடுகளை அனுப்பும் ஆர்கே வழியில் குறுக்கிடுகிறார்கள் (கவனிக்க: வில்லன் குறுக்கிடவில்லை... இவர்கள்தான் வில்லன் வழியில் குறுக்கிடுகிறார்கள்!). அதன் பிறகு நடப்பது வழக்கமான ரணகள க்ளைமாக்ஸ்!

விஷால் தனது ப்ரொஃபைலாக இனி புகைப்படங்கள் எதையும் காட்டத் தேவையில்லை. இந்தப் படத்தை போட்டுக் காட்டிவிடலாம். அந்த அளவுக்கு நடிப்பில் பின்னிப் பெடலெடுக்கிறார். எல்லா காட்சியிலும் ஒரு மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு ஆக்ஷன் படங்களில் வந்த விஷாலையா இப்படி மாற்றியிருக்கிறார் பாலா என்ற வியப்பு படம் முடிந்த பிறகும் அடங்கவில்லை.

அதுவும் அந்த ஆரம்ப ஆட்டமும், நவரச ஒரங்க நாடகமும் அட்டகாசம். விஷாலுக்கு இந்தப் படம் நிஜமாகவே ஒரு மைல்கல்.

ஆர்யா இரண்டாவது நாயகனாக வருகிறார். ஆனால் அவருக்கே உரிய அந்த குறும்புத்தனம் குறையாத நடிப்பு. ஜட்ஜ் வீட்டு பர்மாபெட்டி பூட்டைத் திறக்க அவர் கேட்கும் பரிசும், அதன் பிறகு செய்யும் அலப்பறைகளும் தமிழ் சினிமாவுக்கு புதுசு.

கதாநாயகிகளாக வரும் ஜனனி, மதுஷாலினியை விட, அம்மாக்களாக வரும் அம்பிகாவும் பிரபா ரமேஷும் அலட்டிக் கொள்ளாத நடிப்பைத் தந்து அசத்துகிறார்கள். அம்பிகாவுக்கு அந்தக் குரல் ஒரு பெரிய ப்ளஸ்.

ஜமீனுக்கு துரோகம் செய்த நபர் தேடி வரும் காட்சியில் அம்பிகா சீறும் காட்சி, பார்ப்பவர்களை நெகிழ வைக்கிறது.

ஜிஎம் குமாருக்கு இது ஒரு 'லைஃப்டைம்' படம். ஆனால் பாவம், அதைச் சொல்லிக் கொள்ள முடியாத அளவுக்கு அந்த கடைசி காட்சி அமைந்துவிட்டது. அந்தக் காட்சியில் அந்த நிர்வாணம் ஆத்திரத்துக்கு பதில் பரிதாபத்தையே கிளப்புகிறது.

வில்லனாக கடைசி 20 நிமிடங்கள் வரும் ஆர்கே அலட்டலில்லாத நடிப்பைத் தந்திருக்கிறார். தன்னைக் காட்டிக் கொடுத்த ஜிஎம் குமாரை அவர் பார்க்கும் பார்வையிலேயே க்ளைமாக்ஸ் தெரிந்துவிடுகிறது.

பொதுவாக பாலா படங்களில் வரும் குறியீடுகள் இந்தப் படத்திலும் உண்டு. சிரிப்பு போலீஸ், காட்சிக்குக் காட்சி கரைபுரளும் சீமைச் சாராயம், லூசுப் பெண்களாக வரும் கதாநாயகிகள்...

ஆர்யாவும் ஜிஎம் குமாரும் குடித்துவிட்டு லூட்டியடிக்கும் அந்த நீ...ள காட்சியை தயவுதாட்சண்யமின்றி கத்தரித்து வீசியிருக்கலாம்.

இருந்தாலும் திருடர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தரும் கிடாவிருந்து செம ரகளை. சூர்யா வரும் அந்தக் காட்சி தேவையே இல்லை. ஆனால் விஷாலின் நடிப்பை வெளிப்படுத்த ஒரு காரணமாக இருப்பதால் பொறுத்துக் கொள்ளலாம்.

யுவன் இசை ஆரம்ப- இறுதிக் காட்சிகளில் ஆஹா... பாடல்களை மொத்தமாக கத்தரித்துவிட்டிருப்பது பரிதாபம்.

ஆர்தர் வில்சனின் கேமரா 'சிம்ப்ளி ஃபென்டாஸ்டிக்'!.

படத்தின் முடிவில் 'என்ன இது பாலா படம் மாதிரி இல்லையே'... என்ற கமெண்டை பலரும் உதிர்ப்பதைக் கேட்க முடிந்தது. பாலா இப்படித்தான் படம் எடுக்க வேண்டும் என்று யாரும் நிர்ப்பந்தப்படுத்த முடியாது. ஒரு படைப்பாளியாக அது அவரது சுதந்திரம். தனது மனதில் உள்ள பலவித படிமங்களையும் காட்சிப்படுத்த முயல்கிறார் அவர். அதில் யாருக்காகவும் சமரசம் செய்து கொள்வதில்லை.

அதனால்தான், கதை இல்லை, தீவிரத்தன்மை இல்லை, பாலாவின் முத்திரை இல்லை என ஆயிரம் விமர்சனங்கள் வைத்தபோதும், அவன் இவனை ரசிக்க முடிகிறது!
 

அஜீத் முத்தம் தர மறுக்க நான் என்ன பேயா பிசாசா? - த்ரிஷா சீறல்


மங்காத்தா படத்தில் த்ரிஷாவின் உதட்டோடு உதடு பதித்து முத்தம் தரும் காட்சி ஒன்று இருந்ததாகவும் அதற்கு த்ரிஷா தயாராக இருந்தும் அஜீத்தான் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கிசுகிசு பரவி வருகிறது.

இந்தச் செய்தியால் கொந்தளித்துப் போயுள்ளார் த்ரிஷா.

இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் இப்படிக் கூறியுள்ளார்:

"மங்காத்தா படத்தில் எனக்கும் அஜீத்துக்கும் அப்படி ஒரு காட்சியே கிடையாது. அப்படியே இருந்தாலும் எனக்கு முத்தம் தர அஜீத் ஏன் பயப்படப் போகிறார். நான் என்ன பேயா பிசாசா... இதெல்லாம் ரொம்ப ஓவர்...!"

தமிழில் சுத்தமாக படமே இல்லை த்ரிஷாவுக்கு. எப்போதோ ஒப்பந்தமான கவுதம் மேனனின் சென்னையில் ஒரு மழைக்காலத்தை தூசு தட்ட ஆரம்பித்துள்ளார்களாம். இதன் மூலம் விண்ணைத் தாண்டி வருவாயாவுக்குப் பின் ஏற்பட்ட கவுதம் - த்ரிஷா மனக்கசப்பு தீர்ந்து விட்டதாம்.

"இந்தியில் கவுதம் படத்தில் நடிக்காமல் போனதன் காரணம் வேறு. ஆனால் சென்னையில் ஒரு மழைக்காலம் ஸ்பெஷல் படம். நிச்சயம் விண்ணைத் தாண்டி வருவாயா மாதிரி பேசப்படும்", என்கிறார்.
 

பில்லா 2: இருபது வயது இளைஞனாகும் அஜித்!


சென்னை: பில்லா - 2 படத்தில் நடிக்கவிருக்கும் அஜித் அதில் 20 வயது இளைஞனாக வருகிறார். அதற்காக எடையைக் குறைக்கும் வேலையில் இறங்கியுள்ளார் அஜீத்.

அஜித் குமாரின் 50வது படமான மங்கத்தா வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த படத்திற்காக அஜித் கடுமையாக உழைத்துள்ளார். அடுத்த படமான பில்லா 2 படப்பிடிப்பை மங்காத்தா வெளியீட்டிற்கு முன்பே துவங்குமாறு இயக்குநர் சக்ரியை அஜித் கேட்டுக் கொண்டுள்ளாராம்.

மங்காத்தாவில் வெள்ளி நரையுடன் வரும் அஜித் பில்லா 2-ல் 20 வயது இளைஞனாக வருகிறாராம். அதற்காக உடல் எடையைக் குறைக்கும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளார். முகச்சுருக்கங்களை நீக்க பிரத்யேக பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

அஜித்தை இளைஞனாக சிக்கென்று காட்ட ஹாலிவுட்டில் இருந்து மேக்கப்மேன் வரவிருக்கிறார். அவர் அஜித்துடன் சென்னையில் தங்கி தேவையான டிப்ஸ்கள் கொடுப்பார். பில்லா 2 படத்தின் முதல் போட்டோ ஷூட் கடந்த வாரம் முடிந்துள்ளது. பிரபல புகைப்பட கலைஞர் வெங்கட்ராம் தான் போட்டோ ஷூட் நடத்தியவர்.
 

செங்கடல்: கட் இல்லாமல் அப்படியே அனுமதித்த ட்ரிப்யூனல்!


இலங்கையை விமர்சிக்கும் வசனங்கள் இருப்பதாகக் கூறி சென்னை சென்சாரால் அனுமதி மறுக்கப்பட்ட லீனா மணிமேகலையின் செங்கடல் திரைப்படத்துக்கு, ட்ரிப்யூனலில் எந்த கட்டும் இல்லாமல் அனுமதி கிடைத்துள்ளது.

இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டு தமிழகத்துக்கு வரும் அகதிகளின் நிலை, இங்குள்ள மீனவர்களை இலங்கை ராணுவம் படுத்தும் பாடு, இலங்கையில் தமிழ் போராளிக் குழுக்களின் அரசியல் போன்றவற்றை மையப்படுத்தி லீனா மணிமேகலை உருவாக்கிய படம் செங்கடல்.

இந்தப் படத்துக்கு சென்னை சென்சார் அனுமதி மறுத்துவிட்டது. இலங்கையை விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதால் அனுமதி தர முடியாது எனக் கூறிவிட்டதால், படத்தை மத்திய தீர்ப்பாயத்துக்கு கொண்டுபோனார் லீனா.

அங்கே படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், ஒரு கட் கூட கொடுக்காமல் திரையிட அனுமதி கொடுத்துள்ளனர்.

விரைவில் இந்தப் படம் திரைக்கு வர உள்ளது.
 

ஜூலை 3-ம் தேதி நட்சத்திர திருமணங்கள்... களைகட்டும் கோலிவுட்!


நடிகர் கார்த்தி - ரஞ்சனி திருமணம் மற்றும் இயக்குநர் செல்வராகவன் - கீதாஞ்சலி திருமணம் வருகிற 3-ந்தேதி நடக்கிறது. நட்சத்திர தம்பதிகளை வாழ்த்த கோடம்பாக்கமே தயாராகிறது.

நடிகர் சிவகுமார் மகனும் நடிகருமான கார்த்திக்கும், ஈரோட்டைச் சேர்ந்த சின்னசாமி ஜோதி மீனாட்சி தம்பதியின் மகள் ரஞ்சனிக்கும் சமீபத்தில் ஈரோட்டில் உள்ள மணமகள் வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது.

திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. கோவை கொடீசியா அரங்கில் இந்த திருமணம் நடக்கிறது.திருமணத்துக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ்களை வைத்து வருகின்றனர் மணமகன் - மணமகள் வீட்டினர்.

மணப்பெண் மற்றும் குடும்பத்தினருக்கான புடவைகள், நகைகள் தேர்வு செய்யும் பணியில் அண்ணன் சூர்யா மனைவி ஜோதிகா தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

நகைகளை பாரம்பரிய டிசைனில் தேர்வு செய்துள்ளனர். காஞ்சீபுரத்திலும் பட்டுப் புடவைகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் 7-ந்தேதி மாலை 7 மணிக்கு நடக்கிறது. இதில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் திரளாக பங்கேற்று வாழ்த்துகின்றனர்.

செல்வராகவன் - கீதாஞ்சலி திருமணம்

கார்த்திக்கு திருமணமாகும் அதே ஜூலை 3-ம் தேதி இயக்குநர் செல்வராகவனுக்கும் அவரது காதலி கீதாஞ்சலிக்கும் திருமணம் நடக்கிறது.

இந்தத் திருமணத்துக்கும் தீவிரமாக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்கக் கூடும் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது.
 

சமூக சேவை நடிகைகளுக்கு பிரியா அழைப்பு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சமூக சேவை நடிகைகளுக்கு பிரியா அழைப்பு!

6/23/2011 12:54:04 PM

சமூக சேவையில் குதிக்கும் தென்னிந்திய நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அதில் புதிதாக இணைந்திருப்பவர் 'வாமனன்' பட ஹீரோயின் பிரியா ஆனந்த். இது பற்றி பிரியா கூறியது: குழந்தைகள் மீது எப்போதுமே எனக்கு ஈர்ப்பு அதிகம். அதனால் தென்னிந்தியாவில் இயங்கும் ஒரு தொண்டு நிறுவனத்தில் சேர்ந்தேன். அந்நிறுவனம் மூலம் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். இணையதளம் மூலம் எனது நண்பர்களையும் இதில் உதவ கேட்டிருக்கிறேன். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் ஆந்திராவிலுள்ள ஒரு கிராமத்துக்கு சென்றேன். அங்கே தொழிற்சாலைகளில் வேலை செய்த குழந்தைகளை மீட்க நானும் எனது குழுவினரும் நடவடிக்கை எடுத்தோம். இது எனக்கு பெருமையாக இருக்கிறது. குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். அதற்காக மற்ற நடிகைகளும் முயற்சி எடுக்க முன் வரவேண்டும்.

 

போட்டோகிராபர் மீது பாய்ச்சலா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

போட்டோகிராபர் மீது பாய்ச்சலா?

6/23/2011 12:52:39 PM

சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்றார் ஸ்ரேயா. அப்போது போட்டோகிராபர்கள் அவரை படம் பிடித்தனர். இதைக் கண்டு ஸ்ரேயா கோபம் அடைந்ததாகவும் ‘கேமரா ஃபிளாஷ் விழுவது தனக்கு பிடிக்கவில்லை’ என்று போட்டோகிராபர்களை கடிந்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இது குறித்து ஸ்ரேயா கூறியது: இது போல் ஒரு வதந்தி பரவும் என நான் நினைக்கவே இல்லை. சமீபத்தில் நடந்த விழாவில் என்னை போட்டோ எடுக்க நிறைய பேர் வந்தனர். அனைவருக்கும் சிரித்தபடிதான் போஸ் கொடுத்தேன். அதற்குள் இப்படியெல்லாம் கதை  கட்டிவிட்டார்கள். இதுபோல் கீழ்த்தரமாக நான் எப்போதும் நடந்தது கிடையாது. நடக்கவும் மாட்டேன். தமிழில் 'ரவுத்திரம்' படத்தில் ஜீவாவுடன் நடிக்கிறேன். இந்தியில் தீபா மேத்தாவின் ‘மிட்நைட் சில்ட்ரன்’ படம் உள்ளது. மேலும் 2 படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறது. இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.

 

ஜூலை 15ந் தேதி "தெய்வத்திருமகள்" ரிலீஸ்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஜூலை 15ந் தேதி 'தெய்வத்திருமகள்' ரிலீஸ்!

6/23/2011 12:47:05 PM

எப்படியோ 'தெய்வத்திருமகள்' என்று தலைப்பை மாற்றி ரிலீசுக்கு தயாரான 'தெய்வத்திருமகள்' டீம்மிற்கு ஏகப்பட்ட சிக்கல்கள். விக்ரமுக்கு ஆக்ஷன் படங்கள்தான் எடுபடும் என எண்ணிய விநியோகஸ்தர்கள் மனவளர்ச்சி குன்றிய இளைஞன் கேரக்டரில் விக்ரம் நடித்ததால் படத்தை வாங்க யோசனை செய்ததாக தகவல்கள் வெளியாகின. இப்படி ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்த 'தெய்வத்திருமகள்' ஒருவழியாக ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது. படத்தை ஜூலை 15ந் தேதி வெளியீடுகின்றனர். 




 

வரலட்சுமி மாதிரி நடிகையோடு நடித்தது உற்சாகமான அனுபவம் : சிம்பு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வரலட்சுமி மாதிரி நடிகையோடு நடித்தது உற்சாகமான அனுபவம் : சிம்பு!

6/23/2011 12:32:38 PM

சிம்பு நடிக்கும் ‘போடா போடி’ படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. படத்தை பற்றி சிம்புவிடம் கேட்டபோது, ‘ஏறத்தாழ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளது. வரலட்சுமி மாதிரி இளமையான நடிகையோடு நடித்தது உற்சாகமான அனுபவம். அவரின் அமர்க்களமான நடனத்தை பார்த்து, ரசித்து அசந்து போனேன்’ என்று கூறினார்.

 

சிங்கப்பூருக்கே சென்று, ரஜினியை நலம் விசாரித்த சிரஞ்சீவி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சிங்கப்பூருக்கே சென்று, ரஜினியை நலம் விசாரித்த சிரஞ்சீவி!

6/23/2011 12:16:07 PM

ரஜினியின் நீண்ட கால நண்பரான பிரஜா ராஜ்யம் கட்சியின் தலைவர் சிரஞ்சீவி சிங்கப்பூருக்கே சென்று, ரஜினியை நலம் விசாரித்துள்ளார். சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ரஜினி, சமீபத்தில் டிஸ்சார்ஜ் ஆகி இப்போது சிங்கப்பூரிலேயே ஓய்வெடுத்து வருகிறார். இதனையடுத்து தனது சொந்த வேலைக்காக சென்ற சிரஞ்சீவி சிங்கப்பூரில் ரஜினி தங்கியுள்ள வீட்டுக்குப் போய் அவரைப் பார்த்துப் நலம் விசாரித்துள்ளார். இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த சிரஞ்சீவி, ரஜினி விரைவில் சென்னைக்கு வர உள்ளதாகவும், ரசிகர்களை சந்திக்க அவர் ஆர்வமாக உள்ளதாகவும் கூறினார்.

 

ராணாவில் மீண்டும் வடிவேலு?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ராணாவில் மீண்டும் வடிவேலு?

6/23/2011 12:03:43 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ராணா’ படத்தின் ஷூட்டிங் விரைவில்
தொடங்கவுள்ள நிலையில், படத்தில் வடிவேலு நடிக்க மீண்டும் வாய்ப்பு
கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராணாவில் வடிவேலுவுக்கு
தருவதாக இருந்த பாத்திரத்தை அரசியல் காரணங்களால் கஞ்சா கருப்புக்கு
கொடுத்தார். இதற்கிடையே, ராணா பற்றிய தனது கருத்துக்களுக்கு வருத்தம்
தெரிவித்த வடிவேலு, ரஜினியை சந்திக்க முயன்றார். ஆனால் உடல்நிலையால்
பாதிக்கப்பட்ட சூப்பர் ஸ்டாரை, நடிக்க வடிவேலு பார்க்க முடியாமல் போனது.
தற்போது உடல்நலம் சீரடைந்து, மீண்டும் ராணா பட வேலைகளில் கவனம் செலுத்த
ஆரம்பித்துள்ள ரஜினிக்கு, வடிவேலுவின் நிலை சொல்லப்பட்டதாம், இதைத்
தொடர்ந்து, ராணாவில் மீண்டும் வடிவேலுவை சேர்க்க முடிவு செய்து, அதை
இயக்குநர் ரவிக்குமாரிடமும் ரஜினி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேநேரம், வடிவேலுவுக்கு பதில் சேர்க்கப்பட்ட கஞ்சா கருப்புவும் படத்தில்
இருக்கட்டும் என்று கூறிவிட்டாராம். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது
இயக்குனர் ரவிக்குமாரிடம் தான் கேட்க வேண்டும்.

 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்!

6/23/2011 11:50:49 AM

இளைய தளபதி விஜய்-க்கு அடுத்த அடுத்த பெரிய படங்கள் கையில் உள்ளன. தற்போது ஷங்கர் இயக்கும் ‘நண்பன்’ படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க போகிறாராம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்த படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் மற்றும் (விஜய்)அவரது தந்தை சந்திரசேகர் இணைந்து தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் விஜய்-க்கு ஜோடியாக இந்தி நடிகை சோனம் கபூர் தேர்வு செய்ய வாய்ப்புகள் உள்ளதாம். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார், நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் இதை பற்றி முழுமையான விவரம் வெளிவரும் என எதிர்பார்க்கபடுகின்றன.

 

மலையாளத்துக்கு முக்கியத்துவமா? - அலறும் அமலா!


'தமிழில் பெரிய வாய்ப்புகளெல்லாம் தேடி வந்து கதவைத் தட்ட, நடிகை அமலா பாலோ தாய்மொழியான மலையாளப் படவுலகுக்கு முக்கியத்துவம் தருகிறார். பிருத்விராஜ் படத்தில் நடிக்கிறார்' என்றெல்லாம் செய்திகள் வர, அலறியடித்துக் கொண்டு மறுப்பு வெளியிட்டுள்ளார் அமலா.

தமிழில் விக்ரம், ஆர்யா, மாதவன் என பெரிய நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார் அமலா.

இந்த நேரத்தில் இப்படி ஒரு செய்தி வந்தால், தமிழ் சினிமாவில் தனது எதிர்காலம் பாதிக்கும் என்பதால் இந்த மறுப்பை அவசரமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "மலையாளத்தில் வாய்ப்புகள் வந்தது உண்மைதான். ஆனால் அவற்றை நான் ஒப்புக் கொள்ளவில்லை. மலையாளத்தை வெறுக்கவில்லை. ஆனால் இப்போதைக்கு தமிழுக்குதான் முக்கியத்துவம்," என்று கூறியுள்ளார்.

தெலுங்கிலும் நிறைய வாய்ப்புகள் வந்துள்ளனவாம். அவற்றில் இரண்டு படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

முடிந்தவரை சம்பாதிக்க தமிழ்-தெலுங்கு, ரிட்டயர்மெண்டை நெருங்கும்போது மலையாளம் என்பது அமலா பால் பாலிசி போலிருக்கிறது!
 

அவன் இவன்.... வசூலில் சாதனை!


அவன் படம் குறித்து மாறுபட்ட கருத்துக்களை விமர்சகர்கள் முன்வைத்தாலும் படத்தின் வசூல் திருப்திகரமாக உள்ளதாக தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் தெரிவித்துள்ளார்.

பாலாவின் அவன் இவன் படம் கடந்த வாரம் வெளியானது. விஷால், ஆர்யா, ஆர்கே, ஜிஎம் குமார் என பலர் நடித்துள்ள இந்தப் படம் பி மற்றும் சி சென்டர்களில் அமோக வசூலுடன் ஓடிக் கொண்டுள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் கூறுகையில், " அவன் இவன் படத்துக்கான ஓபனிங் பிரமாண்டமாக இருந்தது. எந்திரனுக்குப் பிறகு இந்த அளவு ஓபனிங் அவன் இவனுக்குத்தான். எப்படியும் ரூ 35 கோடி வரை இந்த வாரம் வசூலாகிவிடும், என்றார்.

இந்தப் படத்துக்கு தென் மாவட்டங்களில் சற்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதேநேரம் இந்தப் பகுதிகளில்தான் ரசிகர்கள் அதிகம் குவிகிறார்களாம் படம் பார்க்க!
 

ஐஸ்வர்யா மூலம் பேரன்தான் பிறப்பான்-அமிதாப் பச்சன் நம்பிக்கை!


ஆண் என்ன, பெண் என்ன என்றாகி விட்ட காலகட்டத்தில், பேரன்தான் எனக்குப் பிறப்பான் என்று பட்டவர்த்தனமாக தெரிவித்துள்ளார் நடிகர் அமிதாப் பச்சன்.

இதுகுறித்து அவர் தனது பிளாக்கில் கூறுகையில், எனது சகோதரர் மற்றும் எனக்கு அடுத்து, பச்சன் பரம்பரையில் பிறக்கப் போகும் முதல் பச்சன் ஐஸ்வர்யா ராய், அபிஷேக்கின் குழந்தைதான் என்று கூறியுள்ளார் அமிதாப்.

அமிதாப்பச்சனுக்கு ஒரே ஒரு சகோதரர் மட்டுமே இருக்கிறார். அவர் அஜிதாப் பச்சன். மூன்றாவது பச்சன் என்று கூறியுள்ளதன் மூலம் ஐஸ்வர்யாவுக்கு மகன்தான் பிறப்பான் என்று அமிதாப் மறைமுகமாக கூறியுள்ளார். இதன் மூலம் அவர் பேரனையே விரும்புவதாகவும் கருதப்படுகிறது.

பேரனோ, பேத்தியோ, அது அமிதாப்பின் பெயர் சொல்லும் பிள்ளையாகத்தான் வளரப் போகிறது. அதை விட முக்கியமாக ஐஸ்வர்யாவின் குழந்தை என்ற எக்ஸ்ட்ரா பெருமையும் கூடவே கிடைக்கப் போகிறது.
 

ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு?


ரஜினியின் ராணா படத்தில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு தர ரஜினி முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, நடிகர் வடிவேலு தாறுமாறாக விஜயகாந்தை விமர்சித்தார். அவரது இந்தப் போக்கால் அதிருப்தியடைந்த ரஜினி, ராணாவில் வடிவேலுவுக்கு தருவதாக இருந்த பாத்திரத்தை கஞ்சா கருப்புக்கு கொடுத்தார்.

திரையுலகில் இது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. ஏற்கெனவே அரசியல் காரணங்களால் வாய்ப்புகளை இழந்துவிட்ட வடிவேலுவுக்கு இது பெரும் சரிவாகவும் பார்க்கப்பட்டது.

இதற்கிடையே, தனது நிலை குறித்து விளக்கமும், ராணா பற்றிய தனது கருத்துக்களுக்கு வருத்தமும் தெரிவித்திருந்தார். உடல்நலம் சீரடைந்து, மீண்டும் ராணா பட வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ள ரஜினிக்கு, வடிவேலுவின் நிலை சொல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ராணாவில் மீண்டும் வடிவேலுவை சேர்க்க முடிவு செய்து, அதை இயக்குநர் ரவிக்குமாரிடமும் கூறிவிட்டாராம். அதேநேரம், வடிவேலுவுக்கு பதில் சேர்க்கப்பட்ட கஞ்சா கருப்புவும் படத்தில் இருக்கட்டும் என்று கூறிவிட்டாராம்.

 

தாய்மடைந்ததற்காக வாழ்த்தியதற்கு நன்றி-ஐஸ்வர்யா, அபிஷேக்


நான் தாய்மயடைந்த செய்தியைத் தொடர்ந்து என்னை வாழ்த்திய அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றிகள் என்று ஐஸ்வர்யா ராயும், அவரது கணவர் அபிஷேக் பச்சனும் தெரிவித்துள்ளனர்.

நீண்ட காலத்திற்குப் பிறகு முதல் முறையாக தாய்மயடைந்துள்ளார் ஐஸ்வர்யா ராய். இந்த செய்தியை அவரது மாமனார் அமிதாப் பச்சன் தனது பிளாக் மூலம் தெரிவித்தார். இதையடுத்து ஐஸ்வர்யாவுக்கும், அபிஷேக் பச்சனுக்கும் வாழ்த்துகள் குவிந்து விட்டன. இதனால் இருவரும் நெகிழ்ச்சியடைந்து திக்குமுக்காடிப் போயுள்ளனராம்.

இதையடுத்து இருவரும் தங்களை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் வெளியிட்டுள்ள செய்தியில், வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எங்களது இதயப்பூர்வமான வாழ்த்துகள். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். எங்களை வாழ்த்திய அனைவரின் அன்பு, ஆதரவு, வாழ்த்துகளுக்கு மீண்டும் நன்றிகள் என்று கூறியுள்ளனர்.