'நடிக்கணும்னு நச்சரிச்சீங்களாமே ஜிவி பிரகாஷ்?'

எப்படியாவது என்னை ஹீரோவாக்குங்க என இயக்குநர்களை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நச்சரித்ததாகக் கூறப்பட்ட புகார்களை மறுத்தார் ஜிவி பிரகாஷ்.

பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் முதல் முறையாக பென்சில் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் ஸ்ரீதிவ்யா.

கவுதம் மேனனிடம் பணியாற்றிய மணி நாகராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்துக்கு இசையமைப்பவரும் ஜிவி பிரகாஷ்தான். .

'நடிக்கணும்னு நச்சரிச்சீங்களாமே ஜிவி பிரகாஷ்?'  

இயக்குனர் மணி நாகராஜ் இந்தப் படம் குறித்து கூறுகையில், "நான் ஜி.வி.பிரகாஷ் ரெக்கார்டிங்ல பாடும்போது கேட்டிருக்கிறேன். அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு பாடுவார். அவருக்குள் ஒரு நடிகன் இருக்கான்னு எனக்கு தெரிஞ்சுது.

என்னுடைய முதல் படத்தில் அவரை நடிக்க வைச்சா என்னன்னு தோணுச்சு. கதையை அவர்கிட்ட சொன்னேன். அவருக்கும் பிடிச்சிருந்தது.

'நடிக்கணும்னு நச்சரிச்சீங்களாமே ஜிவி பிரகாஷ்?'

இந்த படம் ஒரு பள்ளியில் நடக்கிற விஷயத்தை மையமாக வைத்து திரில்லர் கதையாக படமாக்கியுள்ளோம். இதுவரைக்கும் இப்படி ஒரு விஷயத்தை யாருமே தொட்டதில்லை. 12-ம் வகுப்பு வரைக்கும் பள்ளிக்கூடத்தில் பென்சில் என்பது ரொம்ப முக்கியமான விஷயம். எழுதிய பிறகும், தேவைப்படும் போது அழித்துக் கொள்ளலாம். படத்தின் கதைக்கும் அது பொருந்தியதால் இந்த தலைப்பு வைத்தோம்," என்றார்.

ஆனால், தன்னை ஹீரோவாக்க வேண்டும் என ஜிவி பிரகாஷ்தான் நச்சரித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதுகுறித்துக் கேட்டபோது இயக்குநர் மணி நாகராஜ் மறுத்தார்.

இதே கேள்வியை ஜிவி பிரகாஷிடம் கேட்டபோது, "இயக்குனர் மணி நாகராஜும் நானும் விளம்பரங்களுக்கு இசையமைத்த நாட்களிலேயே நல்ல நண்பர்கள்.

அவர் நிறைய படம் ஆரம்பிச்சு பாதியிலேயே ட்ராப் ஆகிடுச்சு. ஒரு படமாவது டைரக்டர் பண்ணிவிட வேண்டும் என முயற்சி செய்துகொண்டு இருந்தார். அவருக்கு கைகொடுக்கணும்னுதான் நட்பு அடிப்படையில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்டேன். நானாக வற்புறுத்தி வாய்ப்பு கேட்கவில்லை," என்றனர்.

 

தமிழ் படத்தில் நடிகை சன்னி லியோனா?: இந்து மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு

தமிழ் படத்தில் நடிகை சன்னி லியோனா?: இந்து மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு  

இந்நிலையில் அவர் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார். சன்னி தமிழ் படத்தில் ஆட இந்து மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சன்னி லியோன் போன்ற நீலப்பட நடிகைகளை அனுமதித்தால் தமிழ்நாடு நீலப்பட நடிகைகள் சுதந்திரமாக நடமாட வசதியாகிவிடும். நீலப்படங்கள் தவறானதல்ல என்ற கருத்து உருவாகிவிடும். இது தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழ் கலாச்சாரத்துக்கே முரணாகிவிடும். ஒரு போதும் சன்னி லியோன் தமிழ் படத்தில் நடிப்பதை அனுமதிக்க மாட்டோம். அதை உரிய வகையில் தடுத்து நிறுத்துவோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

தயாரிப்பாளர்களாக் காப்பாத்துங்க...- அமைதிப்படை தயாரிப்பாளர் வேண்டுகோள்

சென்னை: இன்றைக்கு வந்த வேகத்தில் தயாரிப்பாளர்கள் காணாமல் போகும் நிலை உள்ளது. எனவே தயாரிப்பாளர்களைக் காப்பாற்றுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் அமைதிப்படை 2 படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

ரன்வீர் சிங் கக்வால் வழங்கும் வாரியர்ஸ் கிளான் பிக்சர்ஸ் தயாரிக்கும் என் உயிர் என் கையில் படத்தின் தமிழ் பதிப்பு அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி என் உயிர் என் கையில் படத்தின் டிரைலரை வெளியிட கேரள நாட்டிளம் பெண்களுடனே படத்தின் இயக்குனர் -இசையமைப்பாளர் எஸ் எஸ் குமரன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, "பொதுவாக ஒரு படம் வெளியாகிவிட்டாலே அதில் பங்குபெறும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்துவிடுகின்றன... படம் தோல்வியடைந்து விட்டாலோ முதலில் காணாமல் போவது அதன் தயாரிப்பாளர்தான்.

தயாரிப்பாளர்களாக் காப்பாத்துங்க...-  அமைதிப்படை தயாரிப்பாளர் வேண்டுகோள்

படம் வெளியாகி பத்திரிக்கைகளில் விமர்சனம் வருவதற்குள் படத்தைத் தியேட்டரை விட்டுத் தூக்கி விடுகிறார்கள்... கேட்டால் கேண்டீன்ல வியாபரமே இல்லை என்கிறார்கள. ஒரு படம் நல்ல படம் என்று மக்களுக்குத் தெரியவந்து அந்தப் படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வருவதற்குள் படத்தை எடுத்து விட்டால் எப்படி தயாரிப்பாளர் பிழைக்க முடியும்?

ஒரு நாளைக்கு 100 இயக்குனர்கள் வருகிறார்கள், 100 நடிகர்கள் வருகிறார்கள். ஆனால் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்து கொண்டே வருகிறது. தயாரிப்பாளர்கள் இருந்தால்தானே சினிமா வளரும்... தயாரிப்பாளர்களின் இந்த நிலை மாறவேண்டும்.... அதற்கு நாம் ஏதாவது செய்யவேண்டும்," என்று கேட்டுக் கொண்டதுடன், "புதிய முயற்சிகளுக்கு என்றுமே தமிழ் ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுப்பார்கள், ஒரு பெட்டிக்குள் மாட்டிக்கொண்ட கதாநாயகனின் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒருவரே நடிக்கும் இந்தப்படமும் நிச்சயம் வெற்றிபெறும்," என்று தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.

எஸ்எஸ் குமரன்

இசையமைப்பாளர் - இயகுனர் எஸ் எஸ் குமரன் பேசும் போது, "இந்தப் படத்தில் புதுமையாக என்ன இருக்கிறது என்கிற சிந்தனையுடனேயேதான் ரசிகர்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். அந்த வகையில் இந்தப்படத்தில் புதுமையான கதைக்களத்தைக் கையாண்டிருக்கிறார்கள். படம் வெற்றிபெற வாழ்த்துகள்..." என்றார்.

ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தினை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் எடுத்திருக்கிறார்கள். படத்தின் கதாநாயகன் ஜெய் ஆகாஷ் தமிழகத்தைச் சேர்ந்த டெல்லியில் பணிபுரியும் ஒரு ஆடிட்டராக வருகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் அவர் கண் விழித்துப் பார்க்கும் போது மூன்றுக்கு மூன்று அடி கொண்ட பெட்டியில் அவரை அடைத்திருக்கிறார்கள்... அவர் ஏன்..? எதற்காக..? யாரால்..? இப்படி அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார்களாம்.

படம் முழுவதும் ஒரே நடிகர் தான் மேலும் மிகவும் குறைந்த இடத்தில் படம் பிடிக்கப்பட்ட இந்தியத் திரைப்படம் என்கிற சாதனையை இந்தப்படம் நிகழ்த்தியிருப்பதாக தயாரிப்பாளர் தெரிவித்தார்.

விழாவில் என் உயிர் என் கையில் படத்தின் கதா நாயகன் ஜெய் ஆகாஷ், வசனகர்த்தா சித்தார்த், ஜெய் ஆகாஷுடன் ஆனந்தம் ஆரம்பம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் மிஸ் இந்தியா போட்டியாளர் ஆலிஷா, நடிகை இந்து, அபி சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மீண்டும் மூளை அறுவை சிகிச்சை செய்ய அமெரிக்கா செல்லும் நடிகர் ரித்திக்?

மும்பை: மூளையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகர் ரித்திக் ரோஷன் அமெரிக்கா சென்று மீண்டும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது.

நடிகர் ரித்திக் ரோஷனுக்கு படப்பிடிப்பின்போது தலையில் அடிபட்டது. இதையடுத்து அவரது மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றினர். இந்த அறுவை சிகிச்சை கடந்த ஜூலை மாதம் 8ம் தேதி மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் நடந்தது. இதை அடுத்து உடல் நலம் தேறிய அவர் க்ரிஷ் 3 படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

மீண்டும் மூளை அறுவை சிகிச்சை செய்ய அமெரிக்கா செல்லும் நடிகர் ரித்திக்?   

இந்நிலையில் அவருக்கு தற்போது அடிக்கடி தலைவலி ஏற்படுகிறதாம். இதனால் ஓய்வில் இருக்கும் அவர் அமெரிக்காவுக்கு சென்று மீண்டும் மூளையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர் கத்ரீனா கைஃபுடன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் வரும் 27ம் தேதியும், கரீனா கபூருடன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதமும் துவங்கவிருந்தது. ஆனால் தற்போது ரித்திக்கின் உடல் நிலை காரணமாக இந்த 2 படங்களின் ஷூட்டிங் தள்ளிப்போடப்பட்டுள்ளதாம்.

 

நடிகை ராதாவிடம் போலீசார் 2 மணி நேரம் அதிரடி விசாரணை!

நடிகை ராதாவிடம் போலீசார் 2 மணி நேரம் அதிரடி விசாரணை!

சென்னை: நடிகை ராதாவிடம் சென்னை போலீசார் 2 மணிநேரம் அதிரடி விசாரணை நடத்தினர்.

சென்னையைச் சேர்ந்த வைர வியாபாரி பைசூல் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார் என்றும், அவரை நம்பி 6 ஆண்டுகள் தாலி கட்டாமல் குடித்தனம் நடத்தியதாகவும், தன்னிடமிருந்து நகை மற்றும் பணம் ரூ 50 லட்சத்தை அவர் சுருட்டிக் கொண்டதாகவும் கமிஷனரிடம் புகார் கூறியிருந்தார் நடிகை ராதா.

பைசூல் பேச்சை நம்பி நடிப்பையும் கைவிட்டதாக தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

இவர் சுந்தரா டிராவல்ஸ், காத்தவராயன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இப்போது சென்னை சாலிகிராமத்தில் தாயுடன் வசித்து வருகிறார்.

ராதாவின் குற்றச்சாட்டுகளை மறுத்த பைசூர், ஏற்கெனவே பலரைத் திருமணம் செய்து ஏமாற்றியவர் ராதா என்று பதிலுக்கு குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், ராதாவின் புகாரைப் பதிவு செய்த போலீசார், அதுகுறித்து முதல்கட்டமாக அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். கிட்டத்தட்ட 2 மணி நேரத்துக்கு மேல் அந்த விசாரணை நீடித்தது.

இது தொடர்பாக விசாரணைக்கு வருமாறு வைர வியாபாரி பைசூலுக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர் போலீசார்.

 

கேயார் கேட்கும் 'அம்மா திரையரங்குகள்'... செவிகொடுக்குமா அரசு?

கேயார் கேட்கும் 'அம்மா திரையரங்குகள்'... செவிகொடுக்குமா அரசு?

இப்போதெல்லாம் எந்த சினிமா விழாவுக்குப் போனாலும், கிராமங்கள் தோறும் மினி திரையரங்குகள் அமைத்து, தியேட்டர் பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார்.

சமீபத்தில் நடந்த பண்ணையாரும் பத்மினியும் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் இந்தக் கோரிக்கையை முன் வைத்தார்.

ரூ 50 லட்சத்தில்...

அவர் கூறுகையில், "தமிழ் பட உலகில் இப்போது உள்ள மிக முக்கிய பிரச்சினை, படங்களை திரையிடுவதற்கு தியேட்டர்கள் கிடைக்காததுதான். தியேட்டர்களுக்கு லைசென்சு பெறும் விதிமுறைகளை, அரசு எளிமைப்படுத்த வேண்டும்.

குறைந்த பட்சம் ரூ.50 லட்சம் செலவில், மினி தியேட்டர்கள் உருவாக அரசு உதவி செய்ய வேண்டும். இவற்றை கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் அமைக்க வேண்டும்," என்று அவர் கேட்டுக் கொண்டார்.

சாத்தியமா?

கேயார் கேட்பது போல இந்த மினி திரையரங்குகள் சாத்தியமா? புதுப்படங்கள் வெளியான முதல் வாரத்திலேயே கிட்டத்தட்ட இலவசமாக கேபிள் டிவிக்காரர்கள் ஒளிபரப்பி வரும் நிலையில், கிராமங்களில் முன்பு போல சினிமா ஓட்ட முடியுமா?

டிக்கெட் விலை குறைய வேண்டும்...

இதுகுறித்து நம்மிடம் கருத்து தெரிவித்த தியேட்டர் உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு நிர்வாகி, "இப்போது கிராமப்புறங்களில் உள்ள ஒற்றைத் திரை அரங்குகளில் டிக்கெட் விலை சராசரியாக ரூ 100 என்றாகிவிட்டது புதுப்படங்களுக்கு. இது பெரிய மைனஸ். இதை முதலில் முறைப்படுத்த வேண்டும். புதிதாக சிறு அரங்குகள் அமைக்க லோக்கல் புள்ளிகளுக்கு உடனடியாக லைசென்ஸ் வழங்க முன்வர வேண்டும்.

இன்னொரு 50 லட்சம்...

200 பேர் வரை அமரும் அளவுக்கான சிறு அரங்குகளை ரூ 50 லட்சம் முதலீட்டுக்குள் கட்டிவிட முடியும். ஆனால் அதை இயக்க மேற்கொண்டு ரூ 50 லட்சம் வரை செலவழிக்க வேண்டியுள்ளது. இந்த சிக்கலை மட்டும் அரசு களைந்தால் கிராமப்புறங்கள் சிறு அரங்குகள் கட்ட பலரும் முன்வருவார்கள்.

குறைந்த விலைக்கு...

இந்த சிறு அரங்குகளுக்கு மட்டும் குறைந்த விலைக்கு பட அதிபர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் படங்களைத் தரவேண்டும். பங்கு பிரிப்பதில் அதிக அளவு தர வேண்டும். அப்படி ஒரு பாதுகாப்பான சூழல் உருவானால் உடனடியாக 100 அரங்குகள் வரை கூட உருவாகும் சூழல் உள்ளது," என்றார்.

அம்மா திரையரங்குகள்...

ஒரு பிரபல விநியோகஸ்தரிடம் பேசிய போது, "எதற்கு இத்தனை விவாதம்... இப்போதுள்ள நிலையில் சிறு அரங்குகள் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவற்றை முழுவதுமாக தமிழக அரசின் சுற்றுலாத் துறையே அமைத்து வாடகைக்கு தரட்டும். அம்மா பெயரில் பல நல்ல திட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அம்மா திரையரங்குகள் என்ற பெஞ்சம் குறையுமே," என்றார்.

அடடே!