'நடிகர்களின் முதல்வர்' கமல்: ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

திருச்சி: திருச்சியில் கமலின் பிறந்தநாளையொட்டி அவரை நடிகர்களின் முதல்வர் என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கமல் ஹாஸன் தனது 60வது பிறந்தநாளை வரும் 7ம் தேதி கொண்டாடுகிறார். ஆண்டுதோறும் அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்கூட்டியே துவங்கிவிடுவது திருச்சி ரசிகர்களின் வழக்கம். கமலை வாழ்த்தி போஸ்டர் ஒட்டுவது, ரத்ததான முகாம் நடத்துவது என்று ரசிகர்கள் அமர்க்களப்படுத்துவார்கள்.

'நடிகர்களின் முதல்வர்' கமல்: ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

இந்நிலையில் கமலின் 60வது பிறந்தநாளையொட்டி திருச்சி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள் ஒட்டிய அந்த போஸ்டரில் அரசியல் வாடையே அடிக்காமல் ஒதுங்கி இருக்கும் கமலை நடிகர்களின் முதல்வர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ரஜினி புதிய கட்சி துவங்குவார், அடுத்த முதல்வர் ஆவார் என்று அவரின் ரசிகர்கள் கூட்டம் எதிர்பார்க்கிறது. அவர்கள் இந்த போஸ்டரை பார்த்து கடுப்பாகியுள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் முதல்வர், மக்களின் முதல்வர் உள்ளனர். இந்நிலையில் நடிகர்களின் முதல்வர் வேறா? இம்சையை கூட்ட எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க என்று போஸ்டரை கடந்து செல்பவர்கள் கூறுவதை கேட்க முடிகிறது.

கமல் ஹாஸன் தனது பிறந்தநாள் அன்று சுத்தமான இந்தியா சவாலை ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.