சூர்ய தொலைக்காட்சியில் காமெடி டைம் தொகுத்து வழங்கிய அர்ச்சனை தொகுப்பாளினி திருமணத்திற்கு பின்னர் பிரேக் விட்டார். மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இப்போது நட்சத்திர சேனலில் திருமண நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.
அவ்வப்போது சினிமா ஆடியோ விழாவையும் தொகுத்து வழங்கி வந்தவர் இப்போது சினிமாவில் நடிக்கப் போகிறாராம். அதற்கான வாய்ப்பு அவர் தொகுத்து வழங்கிய பட இயக்குநர் மூலமே வந்துள்ளதாம். ஹீரோயினியின் அக்காவாக பிரியாணி கடை நடத்தும் அட்ராசிட்டி பெண்ணாக நடிக்கும் அந்த தொகுப்பாளினி ரசிகர்கள் அளிக்கும் வரவேற்பை பொறுத்து நடிப்பை தொடர முடிவு செய்துள்ளாராம்.
அது வேற இதுவேற... பூ வின் கட் அட் ரைட் பேச்சு
பூ நடிகை தேசிய கட்சியில் சேர்ந்தாலும் சேர்ந்தார். அவரை எப்படியாவது தங்கள் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி செய்ய வைத்துவிடவேண்டும் என்று ஆசையோடு அணுகியுள்ளனர் அந்த கட்சியைச் சேர்ந்த இரு சேனல் அதிபர்கள். ஆனால் பாலிடிக்ஸ் வேற... தொழில் வேற என்று கட் அட் ரைட் ஆக கூறி கையெடுத்து கும்பிட்டு விட்டாராம் பூ.
புது தலைவிக்கு வந்த தலைவலி
சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கு தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நளினமான நாயகிக்கு இப்போது ஏகப்பட்ட சிக்கல்கள். டப்பிங் தொடர்கள் மூலம் ஒரு சிக்கல் என்றால் வரும் புகார்கள் எல்லாமே அதேமாதிரியான புகார்கள் தான் வருகிறதாம்.
முன்பெல்லாம் சம்பள பிரச்சினையை விட அந்தமாதிரி பிரச்சினைகள் அதிகமாக வரவே கமுக்கமாக பேசி முடித்தார்களாம். இப்போது புது தலைவிக்கு இது தலைவலியாக போகவே, இதென்னடா இந்த சின்னத்திரை சங்கத்திற்கு வந்த சோதனை... இந்த தலைவலியை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் தவியாய் தவிக்கிறாராம் சின்னப்பாப்பா.
நாட்டாமை ஆளை மாத்து
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட செய்தி சேனல் ரொம்பவே தடுமாறுதாம். அதனால அதிக அளவில் ஆண்களுக்கும் இடம் கொடுத்து கான்செப்டை மாத்த முடிவு செய்துள்ளதாம். இனியாவது 7ஆம் நம்பர் 1ஆம் நம்பருக்கு வருமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்கின்றனர்.