ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் ராஜகுமாரி… புத்தம் புது சீரியல்!

Ramya Krishnanan S New Serial

சன் டிவியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் ராஜகுமாரி சீரியல் விரைவில் தொடங்க உள்ளது.

சன் டிவியில் ‘தங்கம்' மெகா தொடர் தினசரி இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. கலெக்டர் கங்காவாக நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன், அவரது கணவரும் இதில் கலெக்டர்தான். ஆனால் பல ஆண்டுகளாக ஒரு மாவட்டத்திலேயே நிரந்தரமாக குடியேறிவிட்ட கலெக்டர் அவர். அவருக்கு உதவியாக மனைவி ரம்யா கிருஷ்ணன் இருந்து வருகிறார்.

அவர்களின் குடும்பத்தைச் சுற்றி வரும் கதைதான். இரண்டு மனைவிகளைக் கொண்ட ஐயா விஜயகுமார். அவரது தங்கை முத்தரசியின் கணவர் குலசேகரன் தன்னுடைய ஜென்ம விரோதியாக ஜென்ம விரோதியாக கருதுகிறார். அதற்காக அவர் செய்யும் வில்லத்தனங்கள்தான் கொஞ்சம் அதிகப்படியானதுதான்.

அதேபோல் ஐயாவின் பங்காளி குடும்பத்தினர் சாந்தி வில்லியம்ஸ், அவரின் மகன்கள், மகள் ஆகியோர் செய்யும் வில்லத்தனங்கள் என கதை எங்கெங்கோ சுற்றி குழப்பி கும்மியடித்தார்கள்.

இடையில் குழந்தையில்லாத ரம்யா விற்கு உதவி செய்வதற்காக காயத்ரி கதாபாத்திரம் வேறு வந்தது. ஆனாலும் கதையின் போக்கை எப்படி நகர்த்துவது என்று தெரியாமல் முடிக்கலாம் என்று ஒருவழியாக முடிவு செய்துவிட்டார்கள் போல.

இன்னும் சில தினங்களில் தங்கம் தொடருக்கு மங்களம் பாடிவிட்டு அதே நேரத்தில் புதிய தொடரான ராஜகுமாரியை ஒளிபரப்ப ஆரம்பித்துவிடுவார்கள்.

புதிய தொடர் முன்னோட்டம் போட ஆரம்பித்துவிட்டனர். இந்த தொடருக்காக காசி எல்லாம் போயிருப்பார்கள் போல. முதல் தொடரில் கங்கா என்று பெயர் வைத்திருந்த ரம்யா கிருஷ்ணன் சென்டிமென்ட் ஆக இந்த தொடரை கங்கை நதிக்கரையில் தொடங்குகிறார் போல. அவருடன் சரத்பாபு, கிட்டி உள்ளிட்ட பிரபல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் விரைவில் இந்த புதிய தொடரை சன் டிவியில் எதிர்பார்க்கலாம்.

 

'உதயநிதியை முழுசாக மாற்றிக் காட்டுகிறேன்!' - நயன் சபதம்... கிலியில் கிருத்திகா!

Nayan Owes Change Udhayanithi Completely

கதிர்வேலன் காதலி படம் முடிவதற்குள் உதயநிதி ஸ்டாலினை மாற்றிக் காட்டுகிறேன் என்று உதயநிதி மனைவி கிருத்திகாவிடமே கூறியுள்ளாராம் நயன்தாரா!

பிரபுதேவாவுடன் உறவு முறிந்த பிறகு மீண்டும் முழுவீச்சில் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் நடிகை நயன்தாரா.

இப்போது தமிழில் அஜீத், ஆர்யாவுடன் நடித்துவரும் நயன்தாரா, அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இது கதிர்வேலன் காதலியில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இருவரும் பங்கேற்ற போட்டோ ஷூட்டிங்கில் நயன்தாராவுடன் நெருக்கமாக நடிக்க கூச்சப்பட்டாராம் உதயநிதி. முத்தம் கொடுப்பது போல போஸ் கொடுக்க ரொம்ப தயங்கினாராம்.

இதைப் பார்த்த நயன்தாரா, உதயநிதியின் கூச்சத்தைப் போக்கும் வகையில் அவரிடம் பேசி, சகஜ நிலைக்குக் கொண்டு வந்தாராம்.

ஒருவழியாக போட்டோ ஷூட் முடித்ததும், அங்கு வந்திருந்த உதயநிதியின் மனைவி கிருத்திகாவிடம், சினிமாவில் நடிக்க கூச்சம்தான் முதல் எதிரி. அதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் பார்த்துக்கிட்டே இருங்க.. இந்தப் படம் முடிவதற்குள் உதயநிதியை முழுசாக மாற்றிக் காட்டுகிறேன்," என்றாராம்!

எப்படியோ.. இன்னொரு பிரபுதேவாவாக மாற்றிவிடாமல் இருந்தால் சரி!!

 

ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Power Star Gets 50lakhs Salary

சென்னை: நேற்றுவரை கோமாளியாக நினைத்துக்கொண்டிருந்த பவர்ஸ்டார் சீனிவாசனை இன்றைக்கு அனைவரும் ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர். காரணம் ஒரே படத்தில் அவரின் சம்பளம் 50 லட்சம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளதாம்.

பொங்கலுக்கு ரிலீசான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்படம் மூன்று நாட்களில் 6 கோடி ரூபாய் அளவிற்கு வசூலை எட்டியது. இது சாதனையாக பேசப்பட்டது. இதில் நடித்திருந்த பவர்ஸ்டாரின் நடிப்புதான் பெரும்பாலும் ரசிகர்களை கவர்ந்ததாம். எனவே இயக்குனர்கள் பலரும் பவர் ஸ்டாரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் சிவா- சந்தானம் கூட்டணியுடன் இணைந்திருக்கிறார் பவர்ஸ்டார். இயக்குனர் ராஜேசின் அசிஸ்டன்ட் ராஜசேகர் இயக்கும் இந்தப் படத்தில் பவர் ஸ்டாரின் சம்பளம் 50 இலட்சம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சராசரி ஹீரோக்களுக்கே 50 இலட்சம் வழங்க யோசிக்கும் நிலையில், ஒரே படத்தில் 50 இலட்சம் வாங்கும் அளவுக்கு உயர்ந்து விட்ட பவர் ஸ்டாரை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இயக்குநர் சங்கரின் ‘ஐ' படத்தில் நடித்துவரும் பவர்ஸ்டார் அந்த படத்தின் ஹிட்டிற்குப் பின் சம்பளத்தை ஒருகோடியாக உயர்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று பொறாமையுடன் கிசுகிசுக்கின்றனர் கோலிவுட் வட்டாரங்களில்.

 

'தண்ணிப் பேச்சு'க்கு வருத்தம் தெரிவிக்க மறுத்த த்ரிஷாவுக்கு சரக்கு பாட்டில்கள் பார்சல்!!

Local Political Party Decides Send Liquor Bottlestrisha   

சென்னை: நான் மது அருந்துவது போல நடித்தால் அந்தப் படம் ஹிட் என்று சொன்னதோடு, தானாகத்தான் அப்படி ஒரு காட்சியை வைக்கச் சொன்னேன் என்று கூறிய த்ரிஷாவுக்கு மது பாட்டில்கள் பார்சல் அனுப்பப் போவதாக இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

கோடம்பாக்கத்தில் நடிகர் அல்லது நடிகைகள் எப்போதடா எடக்குமடக்காக பேசுவார்கள் என்று காத்திருந்து அறிக்கை விடும் இந்து மக்கள் கட்சியின் இன்றைய அறிக்கை:

"மது அருந்துவது குறித்து திரிஷா சொன்னவை பண்பாட்டுக்கு எதிரான செயல். பெண்களை மது அருந்த தூண்டுபவை.

பெண்கள் மது அருந்துவது அவரவர் விருப்பம் என்று அவர் சொன்னதன் மூலம், பெண்களையும் குடிக்கத் தூண்டுகிறார்.

இதற்கு வருத்தம் தெரிவிக்க கேட்டும் திரிஷா கண்டு கொள்ளவே இல்லை. எனவே அவருக்கு மது பாட்டில்கள் பார்சலில் அனுப்பப்படும். அதோடு மதுவின் தீமையை விளக்கும் புத்தகமும் வைத்து அனுப்பப்படும்," என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

அனுப்பறதுதான் அனுப்பறீங்க... நல்ல 'சரக்கா' அனுப்புங்கப்பா!!

 

சன் டிவியில் புதிய இசை நிகழ்ச்சி ‘சன் சிங்கர்’

Sun Tv New Musical Programe

சென்னை : சன் டிவியில் ''சன் சிங்கர்'' என்ற குழந்தைகளுக்கான புதிய இசை நிகழ்ச்சி வரும் ஞாயிறு முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதனை பிரபல இசை அமைப்பாளர் கங்கை அமரன் தொகுத்து வழங்குகிறார்.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடம் தனி வரவேற்பு உண்டு. இதனை உணர்ந்து கொண்ட சேனல்கள் பெரும்பாலும் இசை, நடனம் சார்ந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர். இந்த வரிசையில் சன்டிவியும் இணைந்துள்ளது.

சன் டிவியில் வரும் ஞாயிறு முதல் காலை 10மணிக்கு ''சன் சிங்கர்'' என்ற குழந்தைகளுக்கான பிரமாண்டமான புதிய இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 6 முதல் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மட்டும் பங்கு பெறுகின்றனர். இதற்கான குரல் தேர்வு தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் நடைபெற்றுள்ளது. அதில் தேர்வான குழந்தைகள் சன் சிங்கரில் பங்கேற்று பாட உள்ளனர். இந்த நிகழ்ச்சியை பிரபல இசை அமைப்பாளர் கங்கை அமரன் தொகுத்து வழங்குகிறார்.

 

அரசாங்கங்களையே மாற்றும் சக்தி படைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி - இயக்குநர் சேகர் கம்முலா

Rajini Can Change The Govts Sekhar Kammula

சென்னை: அரசாங்கத்தையே மாற்றும் சக்தி மிக்கவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்த மாமனிதரை வைத்து லீடர் படத்தை ரீமேக் செய்ய விரும்புகிறேன், என்று கூறியுள்ளார் பிரபல தெலுங்குப் பட இயக்குநர் சேகர் கம்முலா.

தனது முதல் படமான டாலர் ட்ரீம்ஸுக்காக தேசிய விருது பெற்றவர் சேகர் கம்முலா. தொடர்ந்து அவர் இயக்கிய கோதாவரி, ஹேப்பி டேஸ், லீடர், லைப் ஈஸ் பியூட்டிபுல் படங்கள் விருதுகளையும் வசூலையும் குவித்தவை. குறிப்பாக லீடர் படம் தெலுங்கு தெரியாதவர்களையும் ஈர்த்தது. ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ரஜினியின் வாழ்க்கை வரலாறு குறித்த புதிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் சேகர் கம்முலா பேசுகையில், "இத்தனை ஆண்டுகளில் சூப்பர் ஸ்டார் ரஜினியைப் போன்ற உச்ச நட்சத்திர அந்தஸ்தை அடைந்தவர்கள் யாரும் இல்லை. சினிமா உலகின் அடையாளம் அவர்தான்.

லீடர் படத்தை இயக்கிய பிறகு, எப்படியாவது ரஜினியைச் சந்தித்துவிட முயன்றேன். ஆனால் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. லீடர் படத்தை ரஜினியை வைத்து தமிழில் இயக்க விரும்புகிறேன். அந்த ரோலுக்கு அவரை விட பொருத்தமானவர் யாரும் இல்லை.

என்னைப் பொறுத்தவரை, அரசாங்கங்களையே மாற்றும் சக்தி அவருக்குத்தான் உள்ளதென நம்புகிறேன். அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்., ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பொருத்தமானவர் அவர். யெஸ்.. எனக்கொரு வாய்ப்பு கிடைத்தால் லீடர் ரீமேக்கில் அவரை இயக்க மனசார ஆசைப்படுகிறேன் " என்றார்.

 

ஹாலிவுட்டில் விஸ்வரூபம் ப்ரிமியர் காட்சி... அமெரிக்கா சென்றார் கமல்!

Kamal Attend Viswaroopam Premier Show In Hollywood

சென்னை: விஸ்வரூபம் படத்தின் பிரிமியர் காட்சி நாளை மறுநாள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது.

இந்தக் காட்சியில் பங்கேற்க கமல்ஹாஸன் நேற்று மாலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு ஒருவழியாக கமலின் விஸ்வரூபம் படம் வரும் ஜனவரி 25-ம் தேதி வெளியாகிறது.

தமிழகத்தில் கிட்டத்தட்ட 400 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. படத்துக்கு அட்வான்ஸ் புக்கிங்கும் தொடங்கியுள்ளது.

இந்தப் படத்தின் பிரிமியர் ஷோவை நாளை மறுநாள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடத்துகிறார் கமல்ஹாஸன். ஹாலிவுட் தியேட்டர் க்ரோவ்-ல் இந்தக் காட்சி நடக்கிறது.

இதில் ஹாலிவுட் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டு படத்தைப் பார்க்கின்றனர். பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பாளர் பேரி ஆஸ்போர்ன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

 

சுமாரான படங்கள் ஜெயிக்க பவர் ஸ்டாரே போதும் - இது கேயார் பேச்சு

Power Star Is Enough The Success

சென்னை: சுமாரான படங்கள் ஜெயிக்க சூப்பர் ஸ்டார் தேவையில்லை... பவர் ஸ்டாரே போதும் என்றார் இயக்குநர் கேயார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் 50-வது நாள் வெற்றிவிழா சென்னை ராணி சீதை அரங்கில் நடந்தது. இந்த விழாவில் படத்தில் பணியாற்றியவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பார்த்திபன், கேயார், விமல், தயாரிப்பாளர்கள் சிவா, சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சிறப்புரையாற்றி பேசிய பார்த்திபன், ஒரு சுமாரான படம் சூப்பர் ஹிட் படமாகணும்னா சூப்பர் ஸ்டார் வேணும் என்று பேசிவிட்டு அமர்ந்தார்.

அடுத்து பேசிய கேயார், "பார்த்திபன் சொன்னபடி, சுமாரான படங்களுக்கு சூப்பர் ஸ்டார் தேவையில்லை. இனி வரும் காலங்களில் சின்ன படங்கள் சூப்பர் ஹிட் படமாகணும்னா சூப்பர் ஸ்டார் தேவையில்லை. பவர் ஸ்டாரே போதும். இதற்கு காரணம் இப்பொழுதெல்லாம் படம் நன்றாக இருந்தால் மட்டும்தான் தியேட்டர்களில் ஓடுகின்றன. யார் நடித்திருந்தாலும் படம் நன்றாக இல்லை என்றால் ஓடாது.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் தலைப்பு, ‘என்னது சிவாஜி செத்துட்டாரா?' என்ற டீசர் ஆகியவற்றைப் பார்த்தபோதே இதில் ஏதோ புதுசா முயற்சி பண்ணியிருக்காங்கன்னு தோணுச்சி. அது இப்ப நிரூபணமாகிடுச்சு," என்றார்.

 

தமிழ் சினிமாவின் தாஜ்மகால் பாரதிராஜா! - பார்த்திபன் பேச்சு

Bharathiraja Taj Mahal Tamil Cinema Says Parthiban

காதலின் சின்னம் தாஜ்மகால் என்றால், தமிழ் சினிமாவின் தாஜ்மகால் இயக்குநர் பாரதிராஜாதான், என்றார் நடிகர் பார்த்திபன்.

பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடி வீரனும் பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் பங்கேற்றார்.

இந்தப் படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமாகி, போட்டோ ஷூட் கூட முடிந்த நிலையில் அவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் மாற்றிவிட்டார் பாரதிராஜா. அவருக்குப் பதில் அமீர் நடிப்பார் என அறிவித்தார். ஆனால் கடைசியில் அமீரையும் நீக்கிவிட்டார்.

இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவுக்கு பார்த்திபனை பாரதிராஜா அழைக்க, பழைய நிகழ்வுகளை மனதில் கொள்ளாமல் விழாவுக்குப் போய் நீண்ட வாழ்த்துரையையும் வழங்கினார் பார்த்திபன்.

தான் பேசியதை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பார்த்திபன். அந்த பேச்சு முழுமையாக:

"உலக தர குறியீடு பெற்றிருக்கும் மல்லிகை பூக்களாய் சிதறி கிடக்கும் மதுரை மக்களே, மாலை வணக்கம்!
மாலை மீனாட்சிக்கு
வணக்கம் உங்களுக்கு.

நான் ஒரு கதை சொல்லப் போறேன் ஆனா அது கத உட்ற மாதிரியே இருக்கும்.
சுமார் 1013 வருடங்களுக்கு முன் மதுரையை , பெயர் போன ஒரு ராஜா ஆண்டான்,அதனால் பெயர் தெரியவில்லை. அவன் சகலாகலா வல்லவன் பராக்கிரமசாலி அவனை ஒண்டிக்கு ஒண்டி நின்று ஜெயிக்கமுடியாத எதிரி நாட்டு மன்னன் நயவஞ்சக சூழ்ச்சியால் அவனை சுற்றி வளைத்து சங்கிலியால் கட்டிப்போட்டு தாக்கினான். கைகள்,கால்கள்,கழுத்து, இதயம் இப்படி துண்டுத் துண்டாக வெட்டினான் உயிர் போக வில்லை. பின் ஏதோ ஒரு நரம்பில் தான் அந்த உயிர் ஒட்டிக் கொண்டிருப்பதை அறிந்து அதைத் தேடினான். bomb-ஐ செயலிழக்க செய்யும் ஒரு குறுப்பிட்ட wire-ஐ தேடுவதைப்போல...

முடிவில் 'காதல்' என்ற wire-ஐ வெட்ட அந்த உயிர் பிரிய... பிரியும் முன் "என் உயிருக்குள்ள ஒரு சின்ன ஒயரா காதல் இருந்ததால ஈசியா கட் பண்ணிட்டே, இன்னும் ஆயிரம் வருஷம் கழிச்சி இதே மண்ணுல ஒரு ராஜா காதலே உடலா-உயிரா-உணர்வா இருப்பான் அவனை யாரும் ஒரு மண்ணும் பண்ண முடியாது . இந்த மண்ணுல காதல் இருக்க வரைக்கும் அவனும் இருப்பான். அவன் காதல் சினிமா மேல இருக்கும் அதனால சினிமா இருக்க வரைக்கும் அவனை அழிக்க முடியாது இது சத்..." என செத்தான். அன்று அந்த ராஜா சொன்ன ராஜா இந்த ராஜா-பாரதிராஜா தான்!

காதல் சின்னம் தாஜ் மஹால். தமிழ் சினிமாவின் தாஜ் மஹால் இந்த பாரதிராஜா.
அ.கொ.கொ.வீரனில் நடித்த ஒரு பெண் என்னிடம்"இன்னமும் என்னம்மா காதல நடிச்சி காட்டுறார் தெரியுமா?" என்றார். நான் சொன்னேன், "அடிப்பாவி மோசம் போய்ட்டே அது நடிப்பு இல்லேடி நிஜம்! அவரு எந்த expression-ஐயும் நடிச்சி காட்டுவாரு ஆனா காதல் மட்டும் அவர் கிட்டே நடிப்பா இருக்காது அத்தனையும் அக்மார்க் நிஜம். நம்பி பக்கத்துல போயி மோசம் போய்டாதே," என்றேன்.

இப்பவும் கதவோரமா, ஜன்னலோரமா ஒரு பொண்ணோட பாதி முகம் எட்டிப் பாத்தா, எனக்கு அந்த பொண்ணு முகத்துல பாரதிராஜாவோட முகம் தான் தெரியும் அந்த அளவுக்கு ஒரு பாதிப்பா ஏற்படுத்தி இருக்காரு பாரதிராஜா.

"அடி ஆத்தாடி இள மனசொன்னு றெக்க கட்டி பறக்குது சரிதானா?" இளையராஜாவோட பாட்டும் இந்த ராஜாவோட படமாக்குதலும்... சரியா சொல்லனும்னா, இசையும் காட்சியும் கலவி கொள்வது போல இருக்கும்.

"பொத்தி வச்ச மல்லிகை மொட்டு" பாட்டுல, மஞ்சள உரசும் போது நம்ப மனசையே உரசுற மாதிரி இருக்கும். "ஆயிரம் தாமரை மொட்டுக்களே" சாங்ல ஒரு தாமரை மொட்டு ராதாவோட முகத்தில இருந்து கீழ இறங்கி ஒரு குறிப்பிட்ட ஸ்பாட்டுக்கு வரும் போது ராதாவோட கை அத அழுத்தி பிடிக்கும். ..க்கும் போது அந்த உஷ்ணத்துல பெண்கள் மட்டுமில்லே ஆண்கள் மனசும் கர்ப்பம் ஆயிடும்!!!

மயிலு, பாஞ்சாலி, பஞ்சவர்ணம், முத்துப்பேச்சி,செல்லி,சொக்கி இப்படி அவர் படத்தோட நாயகிகள் பெயர் மட்டுந்தான் நம்ப மனசுல நச்சுன்னு பதிஞ்சிருக்கு. 'நச்சு'ன்னா விஷமா விரவி இருக்கு. ஆனா எந்த நாயகன் பேராவது ஞாபகத்தில இருக்கா? இருக்காது. இருக்கவும் விட மாட்டாரு.

முதல்ல ஹீரோவை சப்பாணி ஆக்கிடுவாரு... முடிவுல அவனை ஜெயிலுக்கு அனுப்பிடுவாரு. அந்த ஆளே கமலா கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு வந்தாலும் ஜெயிலுக்குதான் அனுப்புவாரு சிகப்பு ரோஜாக்கள்-ல! அதுலயும் சுதாகர் மாதிரி இளிச்சவாயன் கிடைச்சிட்டா கரும்புள்ளி,செம்புள்ளி குத்தி கழுத மேல ஏத்தி கேவலப்படுத்திடுவார். எதனாலன்னா?எல்லா ஹீரோயினுக்கும் ஒட்டு மொத்த குத்தகைகாரரான ஹீரோ அவருதான்!

பானை பொதுவா செம்மண் கலர்ல இருக்கும். ஆனா இந்த அழைப்பிதழ்ல கார்த்திகா வெண்ணை கடையிர பானையோட கலரப் பாருங்க கருப்பா இருக்கு... அப்படியே பாரதிராஜா கலரைப் பாருங்க...

ஆக கடையப்படுறது பாரதிராஜா மனசு. கடையிறது கார்த்திகா இல்லே காதல்! இந்தப் படத்திலயும் இப்படி காதல கடைஞ்சா ரசிகர்கள் நொறைத் தள்ளி நிக்கப்போறாங்க. கார்த்திகா கண்ணாலேயே ரசிகர்கள் மனசை வேற கடையப் போறாங்க. கடைஞ்சிட்டு அவுங்க ஹிந்திக்கு போய்டுவாங்க. அம்மாவாவது மும்பைக்குதான் போனாங்க... சரி மும்பைக்கு அவுங்க போகட்டும்.

நாம மதுரைக்கு வருவோம்.

மதுரைய மீட்டது சுந்தர பாண்டியனா இருக்கலாம்,ஆண்டது ஆயிரம் ராஜாவா இருக்கலாம் ஆனா காட்டினது-சினிமாவுல... இந்த மண் வாசனைய ஊட்டினது இந்த பாரதிராஜாதான். ஒரு பா.ராஜாவிடமிருந்து ஒரு பாக்கியராஜா.. அந்த பாக்கியராஜாவிடமிருந்து 100 பார்த்திபன்கள் இப்படி நீ உருவாக்குனவங்க தான் இன்றைய சினிமாவுல. அதனால ஒரு மூதாதையரா உன்ன வணங்குறோம்.

வேஷ்டி விளம்பரத்தில சரத் குமார் நடிக்கலாம், சட்டை விளம்பரத்தில சத்யராஜ் நடிக்கலாம் ஆனா ஜீன்ஸ் விளம்பரத்தில நடிக்க தகுதியான ஒரே ஆளு நம்ம பாரதிராஜாதான்.

இந்த வயசுலயும் என்ன மிடுக்கா இருக்காரு பாருங்க.. வெளிப் பார்வைக்கு இவரும் ஒரு அஞ்சாநெஞ்சன்தான். ஆனா நெருங்கி பாத்தா பாசக்காரப்பய... இந்த பாசத்திற்குரிய பாரதிராஜா. பாசம் பாசம் முழுக்க பாசம். அந்த பாசத்தில வழுக்கி விழுந்தவங்கதான் நாங்க எல்லாம்.

எழ விரும்பாம விழுந்தே கிடக்கிறோம் அடிமைகளா!

அவருக்கு வீட்டுல பிரச்சனை வரும் போதெல்லாம் த(ண்)னி பட்ட முறையில முறையிடுவாறு.. "ஒரு சராசரி மனிஷனுக்கும் இந்த பாரதிராஜாவுக்கும் ஒரு வித்தியாசமே இல்லையா? எவ்வளவு சாதனை பண்ணி இருக்கேன்... எனக்கொரு சலுகை இல்லையா"ன்னு.

உங்களுக்கு மட்டும் ஒரு விசேஷ சலுகையை நாங்க குடுக்குறோம். அது என்னன்னா...

கண்ணதாசன் சொன்ன,
"வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?"
அதுல அந்த கடைசி வரையா நாங்க இருப்போம் சார். நாங்க இருப்போம்.

நாங்கன்ன nothing but சினிமா.

இன்னும் சொல்லப் போனா இனிமே உங்களுக்கு தனிப்பட்ட முறையில மரணமே இல்லே! ஏற்கனவே உங்கள எங்க இதயத்துக்குள்ள பொதச்சிக்கிட்டோம்/விதைச்சிக்கிட்டோம்!

எங்கள் நினைவு தவறும் வரை உங்கள் நினைவும் தவறாது. அது சரி உங்கள் மேடையில் நான் ஏன் வாழ்த்தவேண்டும்?

உங்களை சார்ந்த இத்தனை சாதனையாளர்கள் உள்ள இந்த பெருங்கடலில் நான் ஒரு பெருங்காயம். பெருங்காயம்!

என்னை அழைத்தது உங்கள் பெருந்தன்மை-பேராண்மை. இமயமே! உங்களுக்கு ஒரு
இதயத்தின் நன்றி..," என்றார்.

பாரதிராஜா நெகிழ்ச்சி

பார்த்திபனின் இந்த பேச்சால் நெகிழ்ந்த பாரதிராஜா கூறுகையில், ""இந்த படத்துல நடிக்க வேண்டிய பார்த்திபனை ஒரு வார்த்தை கூட அவன் கிட்ட சொல்லாம மாத்திட்டேன். ஆனா அவன் அதை பத்தி ஒரு வார்த்தை கூட இந்த மேடையில பேசாம என்ன பெருமைப்படுத்தி பேசிட்டு போய்ட்டான். இப்ப நான்தான் குற்ற உணர்ச்சியில இருக்கேன்," என்றார்.

 

''ஒரிஜினலா??'' .. தொட்டுப் பார்த்து மேகான் பாக்ஸை நெளிய வைத்த ஹாலிவுட் நடிகை!

Megan Fox Gets The Giggles As Lesli Mann Jiggles

லாஸ் ஏஞ்செலஸ்: ஹாலிவுட் நடிகை மேகான் பாக்ஸின் மார்பகங்களைத் தொட்டுப் பார்த்தும், அசைத்துப் பார்த்தும் வியந்த நடிகை லெஸ்லினி மான், இது ஒரிஜினலா என்று கேட்டு மேகானை நெளிய வைத்து விட்டார்.

ஹாலிவுட் நடிகை மேகான் பாக்ஸுக்கு உலகம் பூராவும் ஏகப்பட்ட ரசிகர்கள். அப்படிப்பட்ட கவர்ச்சியும், அழகும் நிரம்பியவர் மேகான். உலக அளவில் கவர்ச்சிகரமான பெண்ணாக சில முறை தேர்வானவரும் கூட.

இவர் தற்போது 40 வயதான லெஸ்லி மானுடன் இணைந்து தி இஸ் 40 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குவது லெஸ்லியின் கணவர் ஜூட் அபோடா ஆவார். இதில் பொதிக் கடை உரிமையாளராக லெஸ்லி நடிக்கிறார். அவரது கடையில் வேலை பார்க்கும் பெண்ணாக மேகான் வருகிறார்.

இப்படத்தில் ஒரு காட்சி வருகிறது. இந்தக் காட்சியில் லெஸ்லியும், மேகானும் நடித்தனர். அதில் மேகானின் கவர்ச்சியையும், மார்பழகையும் பார்த்து லெஸ்லி வியந்து பேசுவது போல வசனம். அப்போது உண்மையிலேயே மேகானைப் புகழ்ந்து லெஸ்லி பேசியதால் மேகானுக்கு பெரும் கூச்சமாகி விட்டது, வாய் விட்டு சிரித்து தனது வெட்கத்தை வெளிப்படுத்தினார் மேகான்.

அக்காட்சியில், 26வயதான மேகானின் மார்பில் கை வைத்து வாவ் என்று சொல்கிறார் லெஸ்லி. பின்னர் அவரது மார்பகத்தை இரு கைகளாலும் பிடித்துப் பார்க்கிறார், அசைத்துப் பார்க்கிறார், தடவிப் பார்க்கிறார். பிறகு அவரது மார்பகங்கள் கட்டுக்கோப்பாக இருப்பதைப் பார்த்து வியந்து பேசுகிறார். இதைக் கேட்டு சிலிர்த்து சிரிக்கிறார் மேகான். அவரது முகத்தில் வெட்கம் தாண்டவமாடுகிறது. இக்காட்சியில் உண்மையிலேயே மேகான் வெட்கப்பட்டுப் போனதாக பின்னர் கூறினார் லெஸ்லி.

மேகானின் மார்பழகைப் பார்த்து லெஸ்லி ஏற்கனவே பகிரங்கமாக ஒருமுறை புகழ்ந்து பேசியுள்ளார். முன்பு அவர் கொடுத்த ஒரு பேட்டியில், மேகானுக்கு உண்மையிலேயே கவர்ச்சிகரமான, எழிலான மார்பகங்கள். இப்படி ஒரு மார்பழகை நான் எனது வாழ்க்கையில் யாரிடத்திலும் பார்த்ததில்லை என்று கூறியிருந்தார் லெஸ்லி.

இப்போது அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால், கணவரிடம் சொல்லி மேகானின் மார்பைப் பிடித்துப் பார்ப்பது போன்ற காட்சியை வைக்கச் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டாரோ என்னவோ...

 

மீண்டும் இணையும் அஜீத் - முருகதாஸ்!

Murugadass Join With Ajith Again

தீனா படத்துக்குப் பிறகு மீண்டும் இணைகின்றனர் அஜீத்தும் இயக்குநர் முருகதாஸும்.

அஜீத்துக்கு தல என்ற பெயர் நிலைக்கக் காரணம், முருகதாஸ் இயக்கிய தீனாதான். இது முருகதாஸுக்கு முதல் படம்.

இருவருக்குமே திருப்புமுனையைத் தந்தது தீனா. இந்தப் படத்துக்குப் பிறகுதான் அஜீத்துக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்தே வந்தது.

இந்தப் படம் வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது மீண்டும் அஜீத்தும் முருகதாஸும் இணைந்து படம் பண்ண முடிவு செய்துள்ளனர்.

முருகதாஸ் சொன்ன ஒரு கதையை ஓகே பண்ணி வைத்திருக்கிறாராம் அஜீத். ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை உள்ளவர் ஆஜீத். அவர் கணிப்புப்படி, முருகதாஸுடன் இப்போது இணைந்து படம் செய்தால் பெரிய வெற்றி கிடைக்குமாம். இந்த படத்தில் அஜீத்துக்கு இரட்டை வேடம் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத் ஏற்கெனவே இரட்டை வேடங்களில் நடித்த வாலி, வரலாறு, வில்லன் போன்ற படங்கள் அனைத்துமே பெரிய அளவில் ஹிட்டானவைதான். அந்த சென்டிமென்ட்டும் இந்தப் படத்தை அஜீத் உடனே ஒப்புக் கொள்ளக் காரணம் என்கிறார்கள்.

விஷ்ணுவர்தன் இயக்கும் வலை, சிறுத்தை சிவா இயக்கும் படம் ஆகியவை முடிந்ததும், அஜீத் - முருகதாஸ் படம் தொடங்கவிருக்கிறது!

 

'லட்டுவை' முழுசாக திங்காமல் பாதியில் ஓடிய கெளதம் மேனன்!

Powerstar Forces Goutham Menan Flee From Theater

சென்னை: தமிழ்நாடு முழுவதும் மக்களை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறது கண்ணா லட்டு திங்க ஆசையா திரைப்படம். சந்தானம், பவர்ஸ்டார் ஆகியோரின் நகைச்சுவையில் படம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறதாம்.

ஒரு நாளைக்கு மூணு வேளை 'கண்ணா லட்டு திங்க ஆசையா' பார்த்தால் டென்சன் ஓடிப்போய்விடும் என்று படம் பார்த்தவர்களே விளம்பரம் செய்கின்றனராம். இது இப்படி இருக்க இந்த படத்தை பார்த்துவிட்டு பாதியில் எழுந்து ஓடியிருக்கிறார் இயக்குநர் கெளதம்மேனன். சொல்லப் போனால் இந்தப் படத்தில் அவர் சில காட்சிகளில் நடித்தும் இருக்கிறார் என்பதுதான் அச்சம்.

கடந்த சில தினங்களுக்கு முன் சத்யம் திரையரங்கத்தில் இப்படத்தை காண வந்தார் கெளதம் மேனன். பின் வரிசையின் கடைசி சீட்டில் உட்கார்ந்திருந்த அவருக்கு படம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே மக்களின் உற்சாகமும் கைதட்டல்களும் காதை பிளந்துவிட்டது போல. இடைவேளைக்குப் பிறகு ஆள் எஸ்கேப் ஆகிவிட்டார்.

இத்தனைக்கும் இவர் நடித்த பகுதி இடைவேளைக்குப் பிறகுதான் வருகிறது. அதைக் கூட காண பொறுமையில்லாமல் ஓடிவிட்டார் மனிதர். இதனைக் கண்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

அவரின் சமீபத்திய படமான நீதானே என் பொன் வசந்தம் சரியாக போகாத கடுப்பில், பவர் ஸ்டாருக்கு மக்கள் கொடுத்த கைத்தட்டலை ரசிக்க முடியாமல் போய்விட்டாரோ என்னவோ?

 

என்னை டைட்டா கட்டிப்பிடிக்காதீங்க: சல்மான் கான் கோரிக்கை

Salman Khan Asks His Friends Not Hug Him Tight

மும்பை: குறுக்கு வலியால் அவதிப்படும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடிக்க வேண்டாம் என்று நண்பர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் குறுக்கு வலியால் அவதிப்பட்டு வருகிறார். இருப்பினும் அதைப் பொருட்படுத்தாது சிசிஎல் மூன்றாவது சீசன் அறிமுக விழாவில் கலந்து கொண்டு நடனமும் ஆடினார். அன்றைய தினம் நடனமாட அவரால் பயிற்சி கூட செய்ய முடியாத அளவுக்கு வலி இருந்திருக்கிறது. இதையடுத்து அவர் தான் முறையாக பயிற்சி செய்யவில்லை என்றும், தனது நடனத்தை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் நடிகர் அப்தாப் சிவதசானி சல்மானைப் பார்த்ததும் அவரை கட்டிப்பிடிக்க வந்திருக்கிறார். அப்போது சல்மான் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். அவரது உடல் நலக் குறைவு காரணமாக அவர் இந்த சீசனில் கிரிக்கெட் விளையாடவில்லை.

சல்மான் கான் ஓவராக உடற்பயிற்சி செய்வதால் தான் அவரது உடல் நலம் பாதிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. நள்ளிரவானாலும் உடற்பயிற்சி செய்து விட்டு தான் தூங்குவாராம்.