'அனேகன்' ஷூட்டிங்கில் தனுஷ் பிசி: பொங்கல் கொண்டாட்டம் மிஸ்

ஹைதராபாத்: அனேகன் படப்பிடிப்பில் இருப்பதால் தனுஷ் பொங்கல் கொண்டாட்டத்தை மிஸ் பண்ணுகிறார்.

கே.வி. ஆனந்த் இயக்கும் அனேகன் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி தமிழகமே விழாக் கோலம் பூண்டுள்ளது.

'அனேகன்' ஷூட்டிங்கில் தனுஷ் பிசி: பொங்கல் கொண்டாட்டம் மிஸ்

இந்நிலையில் தனுஷ் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். என்னதான் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் தனுஷ் படப்பிடிப்பில் ஆர்வமுடன் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பாலிவுட் படமான இஷாக் மூலம் அறிமுகமான அமீரா நடிக்கிறார். அனேகன் படத்தில் தனுஷ் நான்கு வித்தியாசமான லுக்கில் வருவார் என்று கே.வி. ஆனந்த் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

காதல், ஆக்ஷன் கலந்த அனேகன் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசைப் பணியை கவனக்கிறார்.

 

ஜில்லாவுக்கு வரிவிலக்கு.. கடைசி நிமிடம் வரை இழுத்தடித்த தமிழக அரசு!

ஜில்லா படத்துக்கு வரிவிலக்கு வழங்குவதில், கடைசி நிமிடம் வரை இழுத்தடித்திருக்கின்றனர் தமிழக அரசு அதிகாரிகள்.

இதனால் படம் வருமா வராதா என்ற டென்ஷன் நிலவியுள்ளது.

விஜய் நடிப்பில், ஆர்பி சவுத்ரி தயாரித்துள்ள படம் ஜில்லா. பொங்கலையொட்டி கடந்த 10ம் தேதி வெளியாகி ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டுள்ளது.

ஜில்லாவுக்கு வரிவிலக்கு.. கடைசி நிமிடம் வரை இழுத்தடித்த தமிழக அரசு!  

இந்தப் படத்துக்கு சென்சாரில் அனைவரும் பார்க்கத்தகுந்த படம் என்ற யு சான்று அளித்தனர்.

ஆனால் ஜில்லா' ரிலீஸாகும் முதல் நாள்வரை வரிவிலக்கு அளிக்காமல் தமிழக அரசு இழுத்தடித்தது. சம்பந்தப்பட்டவர்கள் ஏன் என்று கேட்டபோது, 'ஜில்லா தமிழ்ச்சொல் அல்ல; உருது வார்த்தை' என்றனர். மேலும் வன்முறைக் காட்சிகள் அதிகம் என்றும் கூறியுள்ளனர்,

'வீரம்' அக்மார்க் தமிழ்ச்சொல், என்றாலும் அந்தப் படத்திலும் அதிக வன்முறைக் காட்சிகள் இருக்கவே செய்தன. அந்தப் படத்துக்கு வரிவிலக்கு கொடுத்து, 'ஜில்லா'வைத் தவிர்த்தால் தமிழக அரசுக்கு விஜய் மீது இருக்கும் கசப்பு இன்னும் தீரவில்லை என்று எண்ணத் தோன்றும். அதனால், இரண்டு படங்களுக்கும் அரசு வரிவிலக்குத் தராமல் இழுத்தடித்து, பின் தந்ததாகக் கூறப்படுகிறது.

 

மகேஷ் பாபுவை வைடுத்து சஸ்பென்ஸ் த்ரில்லர் எடுக்கும் மணிரத்னம்

மகேஷ் பாபுவை வைடுத்து சஸ்பென்ஸ் த்ரில்லர் எடுக்கும் மணிரத்னம்

சென்னை: மணிரத்னம் மகேஷ் பாபுவை வைத்து தெலுங்கு மற்றும் தமிழில் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் ஒன்றை இயக்கவிருக்கிறாராம்.

தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் நே ஒக்கடினே படம் கடந்த 10ம் தேதி ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. மகேஷ் தற்போது ஸ்ரீனு வைட்லாவின் ஆகடு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் இயக்குவது தொடர்பாக மணிரத்னம் அவருடன் கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

ஆனால் நே ஒக்கடினே படத்தில் பிசியாக இருந்ததால் மகேஷ் மணிரத்னத்திடம் பிடி கொடுக்காமல் பேசி வந்தார். இந்நிலையில் நே ஒக்கடினே ரிலீஸாகியுள்ளதால் ஆகடுவை முடித்துவிட்டு மணிரத்னத்தின் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் மகேஷ் பாபு.

சஸ்பென்ஸ் த்ரில்லராக எடுக்கப்படும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸாகுமாம். திரைக்கதை அமைக்கும் பணி வரும் மார்ச் மாதம் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்தும் நன்றாகப் போனால் இந்த ஆண்டே படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

மணிரத்னம் மலையாள நடிகரான பஹத் பாசிலை வைத்து தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரு படத்தை எடுக்க உள்ளார். ஆனால் மகேஷ் பாபு சம்மதம் தெரிவித்துவிட்டதால் முதலில் அவரை வைத்து படம் எடுக்கவிருக்கிறாராம் மணி.

மணிரத்னத்தின் முந்தைய படமான கடல் பப்படமானதால் அவர் மகேஷ் பாபுவின் படத்தை மிகுந்த கவனத்துடன் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

'ஜில்லா மெகா வெற்றி... ரசிகர்களுக்கு நன்றி' - பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய்

சென்னை: ஜில்லா படத்தின் பெரும் வெற்றிக்குப் பாடுபட்ட ரசிகர்கள், ஆரோக்கியமான முறையில் விமர்சித்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி, என்றார் நடிகர் விஜய்.

விஜய் நடித்த ‘ஜில்லா' படம் கடந்த 10-ந்தேதி ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகிறது. இந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி தியாகராய நகரில் உள்ள ரெசிடென்சி டவர்ஸ் நடந்தது.

'ஜில்லா மெகா வெற்றி... ரசிகர்களுக்கு நன்றி' -  பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய்

நடிகர் விஜய், இயக்குநர் நேசன், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, இசையமைப்பாளர் இமான், காமெடி நடிகர் சூரி மற்றும் விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் ‘ஜில்லா' படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் பேசும்போது துப்பாக்கியை விட ஜில்லா படம் அதிக வசூல் ஈட்டியுள்ளது என்றனர்.

சென்னை விநியோகஸ்தர் பேசுகையில், கடந்த மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் இந்தப் படம் ரூ 1.6 கோடிகளை குவித்துள்ளதாகவும், இது விஜய் படங்களின் ஆல்டைம் ரெகார்ட் என்றும் தெரிவித்தார்.

நடிகர் விஜய் பேசுகையில், "ஜில்லா படம் வெற்றிகரமாக ஓடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. என் ரசிகர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தியேட்டர்களில் ரசிகர்கள் காலை 3 மணிக்கே திரண்டு பனி, குளிரையெல்லாம் பொருட்படுத்தாமல் கொடி தோரணம் அமைத்தனர்.

தியேட்டர்களை அலங்காரம் செய்தார்கள். சிரமங்களை பொருட்படுத்தாமல் கடுமையாக வேலை செய்துள்ளனர். இதையெல்லாம் வீடியோவில் பார்த்து நெகிழ்ந்தேன். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இல்லை. ரசிகர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் வந்தேன். இது எனக்கு ரொம்ப முக்கியமான படம்.

‘ஜில்லா' படத்தை ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்து உள்ளது. இந்த நிறுவனம் தயாரித்த 5 படங்களில் நடித்துள்ளேன். எல்லா படங்களும் வெற்றி பெற்றுள்ளன," என்றார்.

 

ஆன்லைனில் ஜில்லா, வீரம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸாகியுள்ள ஜில்லா மற்றும் வீரம் படங்கள் இணையதளத்தில் லீக்காகி உள்ளன.

பொங்கல் விருந்தாக அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் கடந்த 10ம் தேதி ரிலீஸாகின. இரண்டுமே பெரிய நடிகர்களின் படம் என்றாலும் ஜில்லாவும், வீரமும் நல்ல வசூலை அள்ளிக் கொண்டிருக்கின்றன.

ஆன்லைனில் ஜில்லா, வீரம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

தங்கள் தல, தளபதி படங்களை ரசிகர்கள் தியேட்டர்களில் முண்டியடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சிலர் தங்கள் பிரிய நடிகர்களின் படத்தை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டு வீரம், ஜில்லா படங்களை எடுத்துள்ளனர். இந்நிலையில் படம் ரிலீஸான 3 நாட்களுக்குள் இணையதளத்தில் இந்த இரண்டு படங்களும் அப்லோட் செய்யப்பட்டுள்ளன.

இணையதளத்தில் ஜில்லா, வீரம் படத்தை பார்த்துவிட்டோமே, பார்க்கப் போகிறோமே என்று சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரசிகர்களுக்காக ஜில்லாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட 'எப்ப மாமா ரீட்டு' பாடல்

சென்னை: ஜில்லா படத்தில் இருந்து நீக்கப்பட்ட எப்ப மாமா ட்ரீட்டு பாடல் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ஜில்லா படத்தின் நீளம் பெரும் குறையாக கருதப்பட்டது. படம் 2 மணிநேரம் 55 நிமிடங்கள் என்று ஜவ்வாக இழுக்கிறது என்று விமர்சனங்கள் வந்தன. இதையடுத்து படத்தின் நீளம் 10 நிமிடங்கள் குறைக்கப்பட்டது.

ரசிகர்களுக்காக ஜில்லாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட 'எப்ப மாமா ரீட்டு' பாடல்  

அப்படி நீளத்தை குறைக்கையில் கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்பு வரும் எப்ப மாமா ட்ரீட்டு பாடலுக்கும் கத்தரி போடப்பட்டது. ஆனால் இந்த பாடலை மீண்டும் படத்தில் சேர்க்குமாறு விஜய் ரசிகர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தனர்.

அவர்களின் வேண்டுகோளை ஏற்று எப்ப மாமா ட்ரீட்டு பாடல் மீண்டும் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி தெரிவித்தார்.

சூப்பர் குட் பிலிம்ஸ், விஜய் கூட்டணி மீண்டும் ஒரு வெற்றிப் படத்தை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பாஜக முதல்வரைப் பாராட்டும் சல்மான் கான்

இந்தூர்: சிறப்பான வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருவதாக மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் பாராட்டியுள்ளார்.

பாஜக முதல்வரைப் பாராட்டும் சல்மான் கான்

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தனது சொந்த ஊருக்கு வருகை புரிந்தார் இந்தி நடிகர் சல்மான் கான். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாட்டில் நல்ல பணிகளை யார் செய்கிறார்களோ அவர்களுடன் நான் உள்ளேன். உதாரணமாக மத்திய பிரதேச மாநில முதல்வர் நல்ல வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளார்.

எனவே அவரது கட்சிக்கு மக்கள் வாக்களித்து மூன்றாவது முறையாக வெற்றி பெற செய்துள்ளனர். அவர் மிகவும் நல்ல மற்றும் தகுதியான நபர்" எனத் தெரிவித்துள்ளார்.

 

பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி காலமானார்

சென்னை: பழம்பெரும் நடிகையான பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி காலமானார்  

சென்னையில் வசித்து வந்த அஞ்சலி தேவி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்தார். அவருக்கு வயது 86.

இசையமைப்பாளர் ஆதிநாராயண ராவை மணந்த அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அஞ்சலி தேவியின் பேத்தி சைலா ராவ் ஒரு நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.