3/1/2011 12:08:38 PM
யுவனுக்கு பதில் ஹாரிஸ் ஜெயராஜ்-யை தேர்வு செய்த ராஜேஷ்!
3/1/2011 12:08:38 PM
‘கோ’ படத்தின் அரசியல் டச்!
3/1/2011 11:58:26 AM
செல்வராகவனின் புது குழப்பம்!
3/1/2011 11:53:04 AM
‘பவானி’ 4ம் தேதி ரிலீஸ்
3/1/2011 11:36:48 AM
ஸ்ரீகாந்த்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நண்பன் படக்குழு
3/1/2011 12:56:07 PM
ஷங்கர் இயக்கத்தில் விஜய், சத்யராஜ், இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே. சூர்யா என நட்சத்திர பட்டாளம் நடிக்கும் படம் ‘நண்பன்’. இதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் இலியானா. சமீபத்தில் டேராடூன்னில் நடந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் நண்பன் படக்குழு ஸ்ரீகாந்த்திற்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளித்தது. நடிகர் ஸ்ரீகாந்த்தின் பிறந்தநாள் தினமான நேற்று (28 பிப்ரவரி) நண்பன் படக்குழு பிறந்தநாள் கேக் வெட்டி ஸ்ரீகாந்த்தின் பிறந்தநாளை கொண்டாடியது. தன்னுடைய சினிமா கேரியரில் கிடைத்த நண்பன் பட வாய்ப்பை மறக்க முடியாத எனக் கருதிய ஸ்ரீகாந்த், இந்த பிறந்தநாளை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என்று கூறினார்.
நடிகர்கள் விழாவில் டான்ஸ் ஆட நயன்தாரா மறுப்பு
3/1/2011 11:00:00 AM
பெங்களூரில் நடக்கவிருந்த மலையாள நட்சத்திரங்களின் கலைவிழா உலக கோப்பை கிரிக்கெட் போட்டியால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து கோழிக்கோடில் இந்நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மம்மூட்டி, மோகன்லால் உள்பட அனைத்து ஹீரோ, ஹீரோயின்கள் இதில் கலந்து கொள்கின்றனர். இப்போட்டியில் நடனம் ஆட வேண்டும் என நயன்தாராவிடம் கேட்டிருந்தனர். முதலில் ஒப்புக்கொண்டிருந்த அவர், திடீரென்று பின்வாங்கிவிட்டாராம். 'விரைவில் பிரபுதேவாவுடன் திருமணம் நடக்க உள்ளதால் மேடை நிகழ்ச்சிகளில் தோன்றுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்Õ என கூறியதாக திரையுலக பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
அதே நேரம் மீரா ஜாஸ்மினும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. மலையாள படங்களில் நடித்து வரும் அவர், இதுவரை மலையை£ள நடிகர் சங்கம் நடத்திய நிகழ்ச்சிகளில் பங்கேற்றதில்லை. இதனால் அவர் மீது கோபமாக இருந்த நிர்வாகிகள், அவரை மலையாள படங்களில் 1 வருடம் நடிக்க மறைமுக தடை விதித்திருந்தனர். பின்னர் இந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனாலும் சங்கத்தினர் மீது மீரா ஜாஸ்மின் கோபம் அப்படியேதான் இருக்கிறதாம். இந்நிலையில் நடிகர் சங்கம் ஏற்பாடு செய்திருக்கும் விழாவில் மீரா ஜாஸ்மின் பங்கேற்க மாட்டார் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பூர்ணாவின் நல்ல உள்ளம்!
3/1/2011 11:32:36 AM
'முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு' படத்தில் அறிமுகமாகி, அடுத்த அசின் என்ற செல்லப்பெயரையும் பெற்றவர் பூர்ணா ரொம்ப மென்மையானவர். சமீபத்தில் ஷூட்டிங்க்காக காரில் சென்ற பூர்ணா சாலையில் அடிபட்டு கிடந்த அணில் குட்டியை பார்த்து பரிதாபப்பட்டாராம், பரிதாப்ட்டது இல்லாமல் அதற்கு சிகிச்சை அளித்து ப்ளூ கிராஸிடம் ஒப்படைத்தாராம் பூர்ணா.
தெலுங்கில் அவன் இவன்
3/1/2011 11:45:04 AM
பாலாவின் அவன் இவன் ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பாலா படத்துக்கு தமிழகத்தில் மட்டுமின்றி கேரளா, ஆந்திராவிலும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதனால் அவன் இவனை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து அதே ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியிடுகிறார்கள். தற்போது அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. தெலுங்கு பதிப்பிற்கு வாடு வீடு என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
விஜய் படம் vsவிஷால் படம்!
3/1/2011 11:50:44 AM
பொதுவாக விஜய் நடித்த படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படுவது வழக்கம். விஜய்யிக்கு ஆந்திராவில் தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு, அதே போல் விஷாலுக்கும் ஆந்திராவில் ரசிகர் கூட்டம் உண்டு. விஷாலின் திமிரு, சண்டைக்கோழி படங்கள் தமிழைவிட தெலுங்கில்தான் மிகப் பிரமாதமாக ஓடின. ஏப்ரலில் வெளியாகும் அவன் இவனும் தெலுங்கில் வெளியாகிறது. அதற்குமுன் அதாவது மார்ச் 5ஆம் தேதி விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளையை கில்லாடி என்ற பெயரில் தெலுங்கில் வெளியிடுகின்றனர். இதேநாள் விஜய்யின் வேட்டைக்காரன் படத்தை புலி வேட்டா என்ற பெயரில் தெலுங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதில் யாருடைய படம் வசூலை அள்ளும் என்பது பொருதிருந்ததான் பார்க்க வேண்டும்.
கிசு கிசு -வாய்ப்பை பறித்த இயக்குனர்
3/1/2011 12:18:12 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
மாதேச இயக்குனரு சான்டல்வுட் ஹீரோவை கவர்ந்துட்டாராம்… கவர்ந்துட்டாராம்… சிவமான அந்த ஹீரோவோட படத்தை வேற இயக்குனரு இயக்குறதா முடிவாச்சாம். ஆனா இடையில நுழைஞ்ச மாதேச இயக்கம், அந்த வாய்ப்பை கேட்ச் பண்ணிட்டாராம்… பண்ணிட்டாராம்… இதனால சான்டல்வுட் இயக்கம் நொந்து நூடுல்சாகி புலம்புறாராம்… புலம்புறாராம்…
புதுவரவுகளின் போட்டியை ராய் நடிகை சாமர்த்தியமா சமாளிக்கிறாராம்… சமாளிக்கிறாராம்… இளம் ஹீரோக்கள் மேலே வச்ச பார்வையை, இப்போ மூத்த ஹீரோக்கள் பக்கம் திருப்பி இருக்க¤றாராம்… இருக்கிறாராம்… அதுக்கு நல்ல பலனும் க¤டைச்சிருக்காம். மல்லுவுட்ல பெரும்பாலும் தலைமுடி நரைச்ச ஹீரோக்கள்தான் பல படங்கள்ல நடிக்கிறாங்க. அவங்களோட படத்துக்கு முதல் சாய்ஸ் ராய் நடிகைதானாம்… நடிகைதானாம்…
பிரெண்ட் படத்துல கெஸ்ட் ரோல் பண்றது தெரிஞ்சுகிட்டு, அனுய நடிகைக்கு அந்த மாதிரி ரோல்கள் வருதாம்… வருதாம்… அதுல நடிக்க பல காரணங்கள் இருக்கு. அந்த மாதிரியெல்லாம் மத்த படங்கள்ல நடிக்க முடியாதுன்னு நடிகை மறுக்கிறாராம்… மறுக்கிறாராம்…