ரஜினியின் கோச்சடையான் - படப்பிடிப்பு முடிந்தது... போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் மும்முரம்!

Rajini S Kochadaiyaan Shooting Over    | ரஜினி  
ரஜினி, தீபிகா படுகோனே ஜோடியாக நடிக்கும் ‘கோச்சடையான்‘ படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. லண்டனில் 20 நாட்கள் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. பின்னர் திருவனந்தபுரத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தினர். அங்கு உள்ள சித்ராஞ்சலி மற்றும் மோகன்லால் ஸ்டூடியோக்களில் பெரும் பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டன.

கிராபிக்ஸ் பணிகளில் ஒரு பகுதியையும் இங்கு நடத்தின். உண்மையில் இந்தப் பணிகள் லண்டனில் நடந்திருக்க வேண்டும். ஆதி மற்றும் தீபிகோ படுகோனுக்கு விசா கிடைக்க தாமதமானால், அந்தக் காட்சிகள் கேரளாவில் எடுக்கப்பட்டன.

இறுதிக்கட்ட படப்பிடிப்பை ஹாங்காங்கில் நடத்தி முடித்துள்ளார் சௌந்தர்யா. தற்போது டப்பிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், மிக்சிங், ரீ-ரிக்கார்டிங் பணிகள் நடந்து வருகின்றன.

லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், ஹாங்காங் ஸ்டூடியோக்களில் ஒரே நேரத்தில் இப்பணிகள் நடந்து வருவதாக படத்தின் இணை தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் தெரிவித்துள்ளார்.

படத்தை வெளியிடுவதற்கான தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்றார். இந்த வருடம் இறுதிக்குள் படம் வெளியாகி விடும் என்றும் அவர் கூறினார்.

ஜப்பான், தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் படம் வெளியாகிறது. இதுபோல் பிரெஞ்சு, ஸ்பானிஷ் மொழிகளிலும் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடக்கிறது.
 

தொகுப்பாளினிகளே கொஞ்சம் டிரஸ்ல கவனம் செலுத்துங்க!

Tv Anchors Other Side Their Dress Codes
தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என்றாலே உடையைப்பற்றி கவலைப்பட வேண்டாம் என்று விட்டு விட்டார்கள் போலிருக்கிறது. எந்த ஒரு பணிக்கும் டிரஸ்கோடு என்று இருக்கிறது. இது தொலைக்காட்சி தொகுப்பாளர்களுக்கும், செய்தி வாசிப்பாளர்களுக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன். ஆனால் இன்றைக்கு நூற்றுக்கு எண்பது சதவிகித நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் டிரஸ் கோடு என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்குத்தான் இருக்கின்றனர். அதைப்பற்றி சின்னதாய் ஒரு அலசல்

தொலைக்காட்சி நிறுவனத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு தேர்வு செய்யும் போது அழகான தோற்றம், உச்சரிப்பு, உடை அலங்காரம் இதை எல்லாம் பார்த்துதான் தேர்வு செய்கின்றனர். ஆனால் சில தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினிகளின் உடை அலங்காரத்தைப் பார்க்கும் போது உடனே சேனலை மாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் ஏற்படும். குறிப்பாக பாடல்களை மட்டுமே ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளை எடுத்துக்கொண்டால் டைட் டி சர்ட், டைட் லெக்கின்ஸ் இதுதான் உடை என்றாகிவிட்டது. ஆனால் கண்ணியமாக உடை அணிந்து வந்த செய்தி சேனல்களிலேயே டைட் டிசர்ட் போட்டு செய்தி கேட்க வேண்டும் என்ற எண்ணத்தையே மாற்றிவிட்டார்கள் என்று சில நேயர்கள் புலம்புவது காதில் விழுகிறது. செய்தி வாசிப்பாளர்கள் இந்த மாதிரியான டிரஸ்போடுவதற்கு முதலில் கோடு போட்டது புதிய தலைமுறைதான்.

இப்பொழுது மக்கள் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், ஜெயா டிவியில் தேன் கிண்ணம் மற்றும் ஒரு சில சமையல் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்கள் மட்டுமே புடவை கட்டிக்கொண்டு நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக வலம் வருவது பாந்தமாக கொஞ்சம் பார்க்கலாம் போல இருக்கிறது.

இதெல்லாம் விட ஒரு கொடுமை இந்த ஆண் தொகுப்பாளர்கள் பாடுதான் பாவம். கோட் போட்டுதான் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்க வேண்டும் என்பது எந்த சம்பிரதாயமும் இல்லை ஆனால் முதன் முதலில் டாப் 10 நிகழ்ச்சி செய்த ஜேம்ஸ்வசந்தன்தான் கோட் போட்டு கால்மேல் கால்போட்டு நிகழ்ச்சி தொகுக்கும் வேலையை தொடங்கி வைத்தார். இன்னமும் அவர் அந்த கோட்டினை கழற்றவே இல்லை போல இப்பவும் விஜய் டிவியில் ‘ஒரு வார்த்தை ஒரு லட்சம்’ நிகழ்ச்சியை கோட் சூட் போட்டுதான் நடத்துகிறார்.

அதேபோல் நீயா நானா, நடந்தது என்ன? நடத்தும் கோபிநாத், சன் டிவியில் டாப் 10 கூறும் விஜயகுமார், பெரும்பாலான செய்திவாசிப்பாளர்களும் அக்னி நட்சத்திர வெயிலில் உருகி ஊற்றினாலும் கோட் போட்டுதான் வாசிக்கின்றனர். ஆனால் ஸ்டார் விஜய் டிவியில் சத்யமேவ ஜெயதே நடத்தும் அமீர்கான் டி சர்ட் போட்டு தொகுப்பாளர்களுக்கு உரிய பிம்பத்தையே உடைத்து எறிந்துவிட்டார் என்றே கூறலாம்.

எனவே தொகுப்பாளர்களே, தொகுப்பாளினிகளே கொஞ்சம் இயல்பாய் இருந்தால் நிகழ்ச்சியை பார்க்கும் எங்களுக்கும் கொஞ்சம் ஆறுதலாய் இருக்கும் என்கின்றனர். சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்தினர் கவனிப்பார்களா?
 

ஜாக்பாட் நிகழ்ச்சியின் 500 வது எபிசோட்!

Jackpot 500 Special Episode
எந்த ஒரு நிகழ்ச்சியுமே வெற்றிகரமானதாக மாற அதன் தொகுப்பாளர், பங்கேற்பாளர்கள் இருவருக்குமே சமமான பங்குண்டு. அதுபோன்ற ஒரு மக்களை கவர்ந்த நிகழ்ச்சியான ஜாக்பாட் ஜூன் 3 ம் தேதியோடு 500 வது எபிசோடினை நிறைவு செய்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஸ்பெசல் என்பதால் துபாயில் படப்பதிவு நடைபெற்றது.

துபாய் நேயர்களின் மத்தியில் சிம்ரனின் கொஞ்சும் தமிழ் கேள்விகளும் பங்கேற்பாளர்களின் பதிலும் ஆரவாரமாய் அமைந்திருந்தது. 500 வது எபிசோடு என்பதால் சிம்ரன் அதிக சிரத்தை எடுத்து உடை அலங்காரம், நகை அலங்காரம் செய்திருந்தார்.

ஜாக்பாட் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தொகுப்பாளராக வந்த குஷ்பூவும் தன் ஜாக்கெட்டினால் ஜாக்பாட் நிகழ்ச்சிக்கு ஒரு நல்ல மார்க்கெட்டினை தக்க வைத்தார். அதன்பின் நதியா சில வாரங்கள் இதனை தொகுத்து வழங்கினார். தற்போது இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகை சிம்ரனின் கொஞ்சு தமிழும், போட்டியாளர்களிடம் அவர் கேட்கும் இயல்பான கேள்விகளும் நேயர்களிடையே வரவேற்பினை பெற்றுள்ளது என்றே கூறலாம்.

ஜாக்பாட் நிகழ்ச்சியின் சிறப்பு ஜெயிப்பவர்களுக்கு மட்டுமே பரிசு என்பதில்லை. பார்வையாளர்களுக்கும், நேயர்களுக்கும் கூட பரிசுகள் உண்டு.இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு கேள்விகளும், வீடு மற்றும் வெளி உலகத்தில் நடக்கும் அனைத்து சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை.

நிகழ்ச்சியை தயாரிக்கும் ‘டெலிசூம்’ நிறுவனத்திற்கு வரும் விண்ணப்பங்களின் அடிப்படையில் அணிகள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள். நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் அணியினர், இயக்குநர் மற்றும் தேர்வுக்குழுவினாரால் தேர்ந்தெடுக்கப்படுவதாக கூறுகிறார் தயாரிப்பாளர் ஹேமா சுனில்.
 

நீங்க சிவாஜி, உங்க அண்ணன் எம்ஜிஆராமே... - நிருபரின் கேள்வியால் பதறிய கார்த்தி!

Dont Compare Us With Mgr Sivaji
கார்த்தியின் சகுனி பட ஆடியோ வெளியீட்டை பெரிய அளவில் நடத்தினர். சத்யம் சினிமாஸில் நடந்த இந்த இசை வெளியீட்டுக்கு திரளான கூட்டம் வந்திருந்தது. எக்கச்சக்க கார்த்தி ரசிகர்கள் வேறு.

படத்தின் போஸ்டர்கள், பேனர்களில் அரசியல்வாதி ரேஞ்சுக்கு கைகளை தலைக்கு மேல் கும்பிடு போட்டபடி போஸ் கொடுத்துள்ளார் கார்த்தி. ரசிகர்கள் உற்சாகமாக அவரையும் தலைவராக்கிக் கொண்டிருந்தனர்.

ஆடியோ ரிலீசுக்குப் பிறகு நடந்த பிரஸ் மீட்டில் ஒரு மூத்த நிருபர் திடீரென அந்த கேள்வியைக் கேட்டார்.

ஆமா கார்த்தி... தமிழ் சினிமாவுல நீங்கதான் சிவாஜியாம்... கார்த்தி எம்ஜிராமே... நிஜமாவா? என்று கேட்டார்.

அதிர்ந்த கார்த்தி, 'அய்யய்யோ.... ஆளை விடுங்க சாமி. இந்த ஆட்டத்துக்கே நான் வரல. அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. இது தவறான கம்பேரிசனும்கூட', என்றார்.
 

எஸ்.பி.பிக்கு வயசு 66: குவியும் வாழ்த்துக்கள்

Spb Turns 66 Today
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று தனது 66வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

தமிழ் திரையுலகம் இருக்கும் வரை பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் தேனிசை குரலும், புகழும் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அவர் இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளையொட்டி திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஃபேஸ்புக், டுவிட்டரிலும் வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன.

எஸ்.பி.பி. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் இதுவரை 40,000க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். உலகில் உள்ள பாடகர்களில் அதிக அளவிலான பாடல்களை பாடிய பாடகர் என்ற பெருமை எஸ்.பி.பி.யையே சேரும்.

இன்று நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யாவும் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் எஸ்.பி.பி., சத்யா...
 

சகுனி அரசியல் படமா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் படம், 'சகுனி'. கார்த்தி, பிரணீதா, பிரகாஷ்ராஜ், சந்தானம் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் என்.ஷங்கர் தயாள் கூறியதாவது: 'சகுனி' அரசியல் படம் அல்ல. அரசியலை விமர்சிக்கும் படமும் இல்லை. ஹீரோ சந்திக்கின்ற நபர்கள் அரசியல் தொடர்பானவர்களாக இருப்பார்கள். பிரகாஷ் ராஜ், ராதிகா, கோட்டா சீனிவாசராவ் ஆகியோர் அரசியல்வாதிகளாக நடித்துள்ளனர். இந்த கதைக்கு அரசியல் களம்தான் சரியாக இருக்கும் என்பதால் அரசியல் பின்னணியை வைத்திருக்கிறோம். எல்லாவற்றையும் காமெடியாகவே சொல்கிறோம். ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் நிறைந்த கமர்சியல் படம். கார்த்தியின் மாஸ் ஆடியன்ஸை மனதில் கொண்டு அவர்களை திருப்திப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இம்மாத இறுதியில் படம் வெளியாகும். இவ்வாறு கூறினார்.


 

தெரியாம உன்ன காதலிச்சிட்டேன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ட்ரிபுள் வி ரெகார்ட்ஸ் நிறுவனத்துக்காக வினோத்குமார் தயாரிக்கும் படம், 'தெரியாம உன்ன காதலிச்சிட்டேன்'. விஜய் வசந்த் ஹீரோ. அவர் ஜோடி ரத்னா. மற்றும் மயில்சாமி, பவன், நிழல்கள் ரவி, பாண்டு உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, எல்.கே.விஜய். இசை, ஸ்ரீநாத். பாடல்கள், நா.முத்துக்குமார். பிரியதர்ஷன் உதவியாளர் சிவா இயக்குகிறார். படம் பற்றி விஜய் வசந்த் கூறுகையில், 'வாழ்க்கையில் ஒவ்வொருவரும் காதலிக்க துடிக்கின்றனர். ஆனால் காதலித்த பிறகுதான், ஏன் காதலித்தோம் என்று தவிக்கின்றனர். அப்படியொரு காதலனாக நடிக்கிறேன். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாகிறது' என்றார்.


 

வரிவிலக்குக்கு இன்னொரு குழு ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
எம்.கே என்டர்பிரைசஸ் வழங்க, ஸ்ரீ முவி மேக்கர்ஸ் சார்பில் இயக்குனர் ஜி.கிச்சா தயாரிக்கும் படம், 'எப்படி மனசுக்குள் வந்தாய்'. புதுமுகங்கள் விஷ்வா, தன்வி வியாஸ், இர்பான் ரவிகாளே, சதீஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி பி.வி.பிரசாத் இயக்கியுள்ளார். இதன் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி வெளியிட, தயாரிப்பாளர் சங்க அட்ஹாக் கமிட்டி தலைவர் இப்ராகிம் ராவுத்தர் பெற்றார். விழாவில் வசந்தபாலன் பேசியதாவது: படம் தொடங்கும்போதே, 'புகைப்பிடித்தல் உடல்நலத்துக்கு தீங்கானது' என்றும், 'மது அருந்துதல் நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு' என்றும் டைட்டிலில் இடம்பெறச் செய்துவிடுகிறோம். ஆனால், இதுபோன்ற காட்சிகள் வரும்போதெல்லாம் இந்த வாசகங்கள் வரவேண்டும் என்கிறார்கள். ஒரு படத்தை கதையோட்டத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்போது, திடீரென வரும் இதுபோன்ற டைட்டில்கள் கவனத்தை திசை திருப்புகிறது. மேலும், 'யு' சர்டிபிகேட் அளிக்கப்பட்ட படத்துக்கு உடனே வரிவிலக்கு தர வேண்டும். ஆனால், படத்தை மீண்டும் ஒரு குழு பார்த்த பிறகே வரிவிலக்கு கிடைக்கும் நிலை இருக்கிறது. இது சிரமமாக இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கம் இந்த விஷயத்தில் தலையிட்டு, ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி, டி.சிவா, மனோஜ்குமார், ஜெயம் ராஜா, தமிழ்க்குமரன், விஷ்வா, தன்வி வியாஸ், ரவிகாளே உட்பட பலர் பேசினர். ஜி.கிச்சா நன்றி கூறினார்.



 

இசைக்காக இணையதளம் தொடங்குகிறார் இளையராஜா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு நேற்று முன்தினம் 69-வது பிறந்த நாள், இதையொட்டி நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இசை தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு புதிய இணையதளம் ஒன்றை தொடங்க இருக்கிறேன். என் பெயரில் மற்றவர்கள் ஏற்கனவே இணையதளம் நடத்தி வந்தாலும் இது எனது தனிப்பட்ட இணையதளமாக இருக்கும். இதில் இசை குறித்த சந்தேகங்களை யாரும் கேட்கலாம். அதற்கு பதில் சொல்வேன். கற்பிப்பதற்கும், நான் கற்றுக் கொள்வதற்கும் இதை தொடங்கியிருக்கிறேன். எனது இசை வாரிசுகளும் இதில் பங்கேற்பார்கள். எனக்கு தெரிந்த இசை என்னோடு போய்விட நான் விரும்பவில்லை. அதை மற்றவர்களுக்கும் கொடுத்துவிட்டுச் செல்ல விரும்புகிறேன். 950 படங்களுக்கு நான் இசை அமைத்திருப்பது இசை என்ற விருந்தில் வத்தலும் ஊறுகாயும் மட்டுந்தான். சோறு போடவே இல்லை. இவ்வாறு அவர் கூறினார். கார்த்திக் ராஜா, பவதாரிணி உட்பட பலர் உடன் இருந்தனர்.


 

மீண்டும் நவ்யா நாயர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழில் 'அழகிய தீயே', 'சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி', 'மாயக்கண்ணாடி', 'பாசக்கிளிகள்' உட்பட பல படங்களில் நடித்தவர், மலையாள நடிகை நவ்யா நாயர். இரு வருடங்களுக்கு முன், சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறினார். இவர்களுக்கு சாய் கிருஷ்ணா என்ற மகன் இருக்கிறான். குழந்தையை கவனிப்பதற்காக தற்காலிகமாக நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த நவ்யா நாயர், மீண்டும் மலையாளத்தில் நடிக்க வந்துள்ளார். 'சீன் ஒண்ணு நம்மோட வீடு' என்ற படத்தில் லால் மனைவியாக நடிக்கும் அவர், அடுத்த மாதம் இதன் ஷூட்டிங்கில் கலந்துகொள்கிறார்.


 

மலையாளத்தில் சில்க் ஆகிறார் சனா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மலையாள படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடிக்கிறார் சனா கான். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு இந்தியில் 'தி டர்ட்டி பிக்சர்' என்ற பெயரில் வெளியாகி ஹிட் ஆனது. இதையடுத்து கன்னடத்தில் அவரது வாழ்க்கை படமாக்கப்படுகிறது. இதில் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், சில்க் ஆக நடிக்கிறார். இந்நிலையில் மலையாளத்திலும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை, 'புரொஃபைல்' என்ற பெயரில் படமாகிறது. இதில் சனாகான், சில்க்காக நடிக்கிறார். இவர், தமிழில் 'சிலம்பாட்டம்', 'தம்பிக்கு இந்த ஊரு', 'ஆயிரம் விளக்கு' உட்பட சில படங்களில் நடித்தவர். மலையாளத்தில் சில்க்கை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆண்டனி ஈஸ்ட்மேன் கதை எழுதுகிறார். அனில் இயக்குகிறார். நிஷான், பாபு ராஜ், சுரேஷ் கிருஷ்ணா, ராஜஸ்ரீ உட்பட பலர் நடிக்கின்றனர். ''டர்ட்டி பிக்சர் படத்துக்கும் இதற்கும் சம்மந்தமில்லை. ஆண்டனி, சில்க் ஸ்மிதாவுடன் நெருங்கி பழகியவர். அவருக்கு சில்க்கை பற்றி நன்றாக தெரியும் என்பதால் அவர் கதை எழுதுகிறார். இது உண்மை கதையாக இருக்கும். ஜூலை மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது'' என்று இயக்குனர் அனில் தெரிவித்தார்.


 

கிருஷ்ணா ஜோடியாக மோனல் கஜ்ஜார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' படத்தை தொடர்ந்து ராஜமோகன், இயக்கும் படம் 'வானவராயன் வல்லவராயன்'. கிருஷ்ணா, ஆனந்த், எஸ்.பி.சரண், தம்பி ராமய்யா, கோவை சரளா உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பழனிகுமார். இசை, யுவன்சங்கர்ராஜா. பாடல்கள், சினேகன். இதன் ஷூட்டிங் அடுத்த வாரம் நாகர்கோவிலில் தொடங்குகிறது. 2 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இதில் கிருஷ்ணா ஜோடியாக மோனல் கஜ்ஜார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்னொரு ஹீரோயின் முடிவாகவில்லை.


 

பிரியாமணியின் சாருலதா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
குளோபல் ஒன் ஸ்டூடியோஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிக்கும் படம், 'சாருலதா'. இதில் இரண்டு வேடங்களில் பிரியாமணி நடிக்கிறார். மற்றும் மலையாள நடிகர் ஸ்கந்தா, சீதா, சரண்யா பொன்வண்ணன், ஆர்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர். கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய பொன் குமரன் இயக்குகிறார். வசனம் சபரிநாதன், யோகானந்த், எம்.வி.பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார். சுந்தர்.சி. பாபு இசை அமைக்கிறார். தாய்லாந்து படமான 'அலோன்' என்ற படத்தின் இன்ஸ்பிரேஷனில் இது உருவாக்கப்படுகிறது. ஒட்டிப்பிறந்த இரண்டு பெண்குழந்தைகளை பற்றிய கதையான இதன் தெலுங்கு பதிப்பை அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ், கன்னடப் பதிப்பை துவாரகிஷும் தயாரிக்கின்றனர்.