3/31/2011 10:56:13 AM
நடிகை விந்தியா அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் வடிவேலு கடுமையாக விமர்சித்து வருவதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று அவர் பிரச்சாரம் அமைந்ததது. தனது பிரச்சாரத்தின்போது விந்தியா பேசுகையில், "வடிவேலு ஒரு காமெடி பீஸ். இவரு வந்து கேப்டனை ஒழிச்சிக் கட்டுவாராம். இதை விட மிகப் பெரிய காமெடி ஒண்ணுமே இல்லைங்க. சினிமாவில கூட இந்த மாதிரி காமெடியை நான் பார்த்ததில்லை. மக்களுக்கு நல்லது செய்ய அம்மாவுடன் சேர்ந்திருக்கிற நல்லவர் கேப்டன். கேப்டனின் லெக் கிக்; பஞ்ச் பவர் பற்றி தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரியும். அவர் அரசியலில் இன்னும் அடிவாங்கல. இப்போ அதுக்கான நேரம் வந்துடுச்சி போலிருக்கு. அடி வாங்குறதுக்காகத்தான் இப்படி பேசுறாரு," என்றார்.