இடம் பொருள் ஏவலுக்கு இசையமைத்ததை பெருமையாக நினைக்கிறேன்!- யுவன்

சீனு ராமசாமி இயக்கியுள்ள இடம் பொருள் ஏவலுக்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா, அதைப் பெருமையாகக் கருதுவதாகக் கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா நடித்துள்ள படம் இடம் பொருள் ஏவல். இந்தப் படத்தில் முதல் முறையாக யுவன் சங்கர் ராஜாவுடன் கைகோர்த்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

பாடல்களுக்கு ஏற்கெனவே பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளது. படம் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ள நிலையில், படத்தின் தயாரிப்பாளர்களான லிங்குசாமி, அவரது சகோதரர் போஸ், இயக்குநர் ரேணிகுண்டா பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் படத்தைப் பார்த்துள்ளனர்.

Yuvan prouds to compose music for Idam Porul Yeval

பார்த்து முடிந்து மனம் நெகிழ்ந்து, 'அற்புதமான படைப்பாக வந்திருக்கிறது இடம் பொருள் ஏவல்' என இயக்குநர் சீனு ராமசாமியைப் பாராட்டியுள்ளனர்.

இந்தப் படத்தின் பின்னணி இசைச் சேர்ப்பு முடிந்ததும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் சீனு ராமசாமிக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில், "இடம் பொருள் ஏவலுக்கு இசையமைத்ததை பெருமையாகக் கருதுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

யுவனின் இசை குறித்து இயக்குநர் சீனு ராமசாமி கூறுகையில், "யுவனின் இசை இடம் பொருள் ஏவலுக்கு உயிர். அமைதியான மனிதரின் சிறு புன்னகை போல அழகு. ஒரு இளைஞன் தந்த வெதுவெதுப்பான முத்தம். நான் அந்த கருத்த இளைஞனை நேசிக்கத் தொடங்கி விட்டேன்," என்று கூறியுள்ளார்.

 

'ஜாதியைப் போற்றும் ஒரு படத்தை நான் எடுக்கவே மாட்டேன்!' - கமல் ஹாஸன்

ஜாதியைப் போற்றும் வகையிலான படத்தை நான் ஒருபோதும் எடுக்கமாட்டேன் என்று நடிகர் கமல் ஹாஸன் கூறினார்.

பாபநாசம் படம் வெளியாவதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை இன்று கமல்ஹாசன் சந்தித்தார்.

அப்போது கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

I never takes a movie glorifies caste, says Kamal

பாபநாசம் படத்தை தமிழில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

நல்லதைச் செய்ய வேண்டும் என்கிற எண்ணம்தான். அப்பாவுக்கு சில நல்ல குணங்கள் இருக்கும். அண்ணனிடம் சில குணங்கள் இருக்கும். அதையெல்லாம் செய்து பார்க்கணும்னு ஆசைதான். இந்த படத்தில் கவுதமியை நடிக்க வைத்ததற்கு நான் காரணமில்லை. இயக்குனர் ஜீத்து ஜோசப்தான் கவுதமி நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றார். நானும் கவுதமியிடம் கேட்டபோது நிறைய தயக்கத்திற்குப் பிறகு ஒப்புக்கொண்டார். இதில் என்னுடைய சுயநலம் எதுவுமில்லை.

ஏழை படும் பாடு என்று ஒரு படம். அந்தப் படத்தை அப்படியே தமிழில் எடுத்தார்கள். அந்த பாதிப்பில் எடுக்கப்பட்டதுதான் மகாநதி. ஏழை படும் பாடு படத்தையே நான் இந்த காலத்தில் எடுக்க நினைத்ததால் உருவான படம்தான் மகாநதி.

ஒரு படத்தில் வேட்டி கட்டி நடித்துவிட்டு, அடுத்த படத்திலும் வேட்டி கட்டும்போது அதே கதையாகதான் இருக்கும் என்று நினைக்கக் கூடாது.

நிஜ வாழ்க்கையில் இரண்டு மகள்களின் அப்பாவாக இருக்கும்போது அதே பாத்திரத்தில் நீங்கள் நடித்த் தருணத்தில் உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

என்னுடைய குடும்பத்தில் நான்தான் தலைவன் என்கிற பொறுப்பை ஏற்றுக் கொள்வேன் என்று அடம் பிடிக்கவில்லை. நான் தலைவன் மட்டுமில்லை. தொண்டனும் கூட. ஐந்து வருடங்களுக்கு அரசியல் தலைமை மாறுவதுபோல அந்தந்த சமயத்திற்கு ஏற்ப தலைமையை விஷயம் தெரிந்தவர்களிடம் மாற்றி கொடுக்க வேண்டியது அவசியம். சமைக்கத் தெரிந்தவர்களிடம் சமையல் வேலையை ஒப்படைப்பது, சாப்பிடுபவர்களைக் கேட்டுக் கொடுக்க வேண்டியதில்லை.

பாபநாசம் படத்தை வட ஆற்காடு, தென் ஆற்காடு பகுதி கதைகளமாக காட்டியிருக்கலாமே?

காட்டியிருக்கலாம். தேவர் மகன் படத்தை கோயம்புத்தூர் பகுதிக் கதையாகத்தான் காட்ட நினைத்தோம். நிஜமாகவே அங்குதான் படம் பிடிக்கப்பட்டது. அதுவேறு விஷயம். வசூல்ராஜா படத்தையே கூட அப்படி எடுத்திருக்கலாம். அந்த நேரத்தில் தோன்றிய முடிவுதான் திருநெல்வேலி பகுதியாக வந்தது.

எஸ்.எஸ்.ஆர் போன்ற மூத்த நடிகர்கள் கொள்கை பிடிப்போடு இருந்தார்கள். கடவுள் வேடங்களில் நடிப்பதில்லை. நீங்கள் உங்கள் கொள்கையைத் தளர்த்திக்கொண்டது போல் தெரிகிறதே ?

என்னைப் பொருத்தவரை என்னுடைய கொள்கை அந்த கதாபாத்திரத்தில் இழையோடுமே தவிர, பாத்திரத்தை அமுக்கி விடாது. எந்தக் காரணத்தைக் கொண்டும் ஜாதியைப் போற்றும் ஒரு படத்தை நான் எடுக்கவே மாட்டேன். அது ஜாதின் பெயரால் வரும் படம் என்றாலும்கூட. ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதியும் செத்துட்டாரு. அதைப் பாடிய சின்ன பாப்பாக்களும் கொள்ளு பாட்டியாகிட்டாங்க. இன்னும் ஜாதியை பிடிச்சுகிட்டு அலையணுமா என்பாதாய் வருமே தவிர ஜாதியை தூக்கிப் பிடிக்காது.

திருநெல்வேலி வட்டார வழக்கை எப்படிக் கற்றுக்கொண்டீர்கள் ?

நல்ல நண்பர்களே எனக்கு வாத்தியாராக அமைந்து விட்டபடியால் இந்தப் படம், அந்த வட்டார வழக்கு சாத்தியமானது.

சமீபத்தில் நாங்குநேரி சென்று மடாதியைச் சந்தித்தீர்களே ?

அவர் அங்கு படப்பிடிப்பிற்கு அனுமதியளித்தார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது என்னுடைய கடமை. அதோடு நான் அங்கு ஒரு விருந்தினராகதான் போயிருந்தேன். அது என் சொந்த வீடு கிடையாது. அங்கு என்னுடைய கொள்கையைக் காட்டப் போகவில்லை. தவிர மதம் பிடிக்காதே, தவிர மனிதம் எனக்குப் பிடிக்கும். என்னைப் பொறுத்தவரை எல்லோரையும் மனிதர்களாகதான் பார்க்கிறேன்.

தொழில்நுட்ப குரற்றங்கள் அதிகமாகிக் கொண்டு வருகிறதே இதை கடும் தண்டணைகள் மூலம் தடுக்கலாமா?

இதை தடுக்கவேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. குப்பையை போடக்கூடாது என்பதைச் சொல்ல அந்த விஷயத்தை பிரதமர் கையிலெடுக்க வேண்டியிருக்கு. காரணம் நாம் நம் கடமையை செய்யவில்லையென்பதால்தான். இதை அவர் சொல்லிதான் நாம் செய்யவேண்டும் என்று நினைத்திருக்கக் கூடாது.

ஹரப்பா, மொஹஞ்சதாரோவில் குப்பைத் தொட்டி வைத்த நம் பரம்பரை அதைக் கூட மறந்துவிட்டது பெரிய சோகம்தான். ஒரு பெண் நள்ளிரவில் நகை அணிந்து கூட அல்ல, தன்னுடைய பாய் பிரண்டோடு போனதற்கே பஸ்ஸில் வைத்து கற்பழிக்கிறார்கள் என்றால் காந்தி சொன்ன சுதந்திரம் இன்னும் வரவே இல்லை என்றுதானே அர்த்தம்.. கடும் தன்டணை என்றால், தூக்கு தண்டனைக்கு முழு எதிரானவன். தூக்குத் தண்டணை என்பது மறுபடியும் திருத்தி எழுத முடியாத தீர்ப்பு. அப்படி திருத்த முடியாத தீர்ப்பை யாரும் இனிமேல் கொடுக்கக் கூடாது.

உங்கள் நண்பர்களான இலக்கியவாதிகள் தொ.மு பரமசிவம், புவியரசு போன்றவர்களின் சிந்தனைகளைப் படமாக்க முயற்சிக்கவில்லையே?

விருமாண்டி என்கிற படம் எடுப்பதற்கு முக்கிய காரணம் தொ.மு. பரமசிவம்தான். மக்களின் தெய்வங்கள் என்ற அவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதே அந்தப் படம்.

மக்களின் தெய்வங்களைப் பறித்தெடுக்கும் உரிமையாருக்கும் கிடையாது. அதே போல் இன்னொரு மதாச்சாரிக்கும் அந்த உரிமை கிடையாது. அவன் முனீஸ்வரனை கும்பிடுறான்னு சொல்லக்கூடாது... அப்படின்னா மொத்தமா நம்பிக்கை இருக்கக் கூடாது. அய்யர் வாழைப் பழம் வெச்சு கும்ம்பிட்டால், அவன் சுருட்டும் சாராயமும் வெச்சு கும்பிடுவான். இதைத் தவறென்று சொல்லக் கூடாது. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி உருகும் கண்ணப்ப நாயனார் பக்தியை ஒத்துகிட்டால் இந்த பக்தியையும் ஒத்துகிட்டுதான் ஆகணும்!

 

"ஓரங்கட்டப்படுகிறாரா" யுவன்ஷங்கர் ராஜா?

சென்னை: தமிழ் சினிமாவில் யுவன்ஷங்கர் ராஜா ஓரம் கட்டப்படுகிறாரா என்ற சலசலப்பு எழுந்துள்ளது.

ஒரு நேரத்தில் இசையமைக்க முடியாத அளவுக்கு கைநிறைய படங்களுடன் இருந்த யுவன் கையில் இன்று ஒரு சில படங்கள் மட்டுமே உள்ளன.

இதுவரை 100 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை புரிந்தாலும் சமீப காலமாக சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் யுவன் கைவசம் இல்லை என்கிறார்கள்.

What Yuvan Shankar Raja is doing

16 வயதில் இசையமைப்பாளராக

16 வயதில் மற்ற சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் வேளையில், யுவன்ஷங்கர் ராஜா அரவிந்தன் படத்திற்கு இசையமைத்து இளம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.

துள்ளுவதோ இளமை

அதற்கு முன்பு நிறைய படங்களுக்கு இசையமைத்து இருந்தாலும் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தான் ஒரு நல்ல பிரேக் கிடைத்தது. தொடர்ந்து இவர் இசையமைத்து வெளிவந்த நந்தா, 7 ஜி ரெயின்போ காலனி, மன்மதன், அறிந்தும் அறியாமலும், காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி, பருத்தி வீரன் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக மாறினார்.

செல்வராகவன் - யுவன்ஷங்கர் கூட்டணி

துள்ளுவதோ இளமையில் தொடங்கிய இந்த இருவர் கூட்டணி தொடர்ந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, 7ஜி ரெயின்போ காலனி போன்ற படங்கள் வரை நீடித்தது. இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்தனர்.

மீண்டும் இணைத்த கான்

7 வருடங்கள் கழித்து செல்வராகவன் சிம்புவை வைத்து இயக்கும் கான் படத்தின் மூலம் செல்வராகவன்-யுவன் கூட்டணி ஒன்று சேர்த்து உள்ளது.

தொடரும் சர்ச்சைகள்

ஏற்கனவே இரண்டுமுறை திருமணம் செய்து அதிலிருந்து மீண்டு வந்த யுவன் மூன்றாவது திருமணத்தில், முஸ்லீமாக மாறி முஸ்லீம் பெண்ணை மணந்துள்ளார்.

பிரியாணி 100 வது படம்

யுவனின் சகோதரர் வெங்கட் பிரபுவின், பிரியாணி படம் யுவனின் 100 வது படமாக அமைந்தது.

சரியும் மார்க்கெட்

யுவன் இசைத்துறையில் அடியெடுத்து வைத்து 19 ஆண்டுகள் முடிந்து விட்டன. 2002ல் தொடங்கி 2013 வரை வருடத்திற்கு சுமார் 8 படங்கள் சில நேரங்களில் அதற்கும் மேற்பட்ட படங்கள் என்று படங்களுக்கு இடைவிடாது இசையமைத்து வந்த யுவன் 2014 l ல் வெறும் 3 படங்களுக்கு மட்டுமே இசையமைத்து இருக்கிறார்.இந்த வருடம் இவர் இசையமைத்து வெளிவந்த ஒரே படம் மாசு மட்டும் தான்.

மீண்டும் செல்வராகவன்- ரசிகர்கள் மகிழ்ச்சி

கான் படத்தின் மூலம் மீண்டும் செல்வராகவனுடன் இணைந்து விட்டார், இனி யுவன் பார்முக்குத் திரும்பி விடுவார் என்று ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

வருத்தத்தில் யுவன்

ஆனால் யுவன் மட்டும் வருத்தத்தில் இருக்கிறார் ஏனெனில் இவருடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர்கள் வேறு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்து வருகின்றனர். அமீர், ஹரி, வசந்த், பாண்டிராஜ், சுசீந்திரன், சீனு ராமசாமி எனப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இதனால் வருத்தத்தில் ஆழ்ந்து இருக்கிறாராம் யுவன். நடப்பதை வைத்துப் பார்க்கும்போது தமிழ்த் திரையுலகில் ஓரங்கட்டப்படுகிறாரா யுவன் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

 

சேதுபதி 'தாத்தா'வின் ஆரஞ்சு மிட்டாய் பாட்டு ரிலீஸ்.. இனிக்குதா, புளிக்குதா.. கேட்டுச் சொல்லுங்களேன்!

சென்னை: விஜய் சேதுபதியின் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆரஞ்சு மிட்டாய் திரைப்படத்தின் பாடல்கள் சற்று நேரத்திற்கு முன்னால் வெளியானது. தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, கதை, வசனம் எழுதி நடித்திருக்கிறார்.

ஆரஞ்சு மிட்டாய் திரைப்படத்தை சொந்தமாகத் தயாரித்து இருக்கும் விஜய் சேதுபதி, படத்தில் 55 வயது முதியவராக நடித்திருக்கிறார். பிஜு விஸ்வநாத் இயக்கியிருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Orange Mittai - Audio Launched

ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்து இருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து திலக், ஆறுமுகம் பாலா, ஆஷிர்தா போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர்.

மொத்தம் 4பாடல்களில் இரண்டு பாடல்களை எழுதிப் பாடி இருக்கிறார் விஜய் சேதுபதி, மீதம் உள்ள 2 பாடல்களை ஜஸ்டின் பிரபாகரனும், கட்டளை ஜெயாவும் எழுதி உள்ளனர். விஜய் சேதுபதியுடன் இணைந்து கார்த்திக், நரேஷ் ஐயர், பத்மலதா ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர்.

ஒரே ஒரு ஊருல, ஸ்டிரைட்டா போயி என்ற 2 பாடல்களை எழுதி பாடி இருக்கிறார் விஜய் சேதுபதி, தீராத ஆசைகள் மற்றும் பயணங்கள் தொடருதே என்ற 2 பாடல்களை கார்த்தி,நரேஷ் ஐயர் மற்றும் பத்மலதா ஆகியோர் பாடியுள்ளனர்.

பாடல்கள் நன்றாக இருப்பதாக மீடியாக்களும், ரசிகர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

பஞ்சாபில் தொடங்குகிறது சல்மானின் “சுல்தான்”

மும்பை: இந்தி உலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவர் சல்மான் கான் , இவர் அடுத்து நடிக்கவுள்ள சுல்தான் படத்தின் படப்பிடிப்பு விரைவில் பஞ்சாபில் தொடங்கப்படவுள்ளது. இந்தி இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் சுல்தான் படத்தை இயக்குகிறார்.

சுல்தான் படம் பஞ்சாபில் தொடங்கப் படவிருக்கிறது என்ற தகவலை தனது ட்விட்டர் பக்கத்திலும், தெரிவித்து இருக்கிறார் இயக்குநர் அலி அப்பாஸ். சுல்தான் படத்தை தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா யஷ்ராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.

படத்தில் சல்மான் கான் ஒரு குத்துச்சண்டை வீரராக நடிக்க விருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன, மேலும் முன்னணி ஹீரோயின் ஒருவரைப் படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன இதனைப் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

சுல்தான் படத்தின் படப்பிடிப்பை நவம்பரில் முடிக்கத் திட்டமிட்டுள்ளார் இயக்குநர் அலி அப்பாஸ், சுல்தான் படம் 2016 ம் ஆண்டில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது.

அடுத்த ஆண்டு வெளிவர இருக்கும் சுல்தான் படம், அதே ஆண்டில் வெளியாகும் ஷாரூக்கானின் ரயீஸ் படத்துடன் மோதவிருக்கிறது.

தற்போது சல்மான் நடிப்பில் வருகின்ற 18 ம் தேதி பஜ்ரங்கி பைஜான் திரைப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

தீபிகா படுகோனை காதலித்து திருமணம் செய்து கொள்ள ஆசை- 40 வயது பிரிட்டிஷ் காமெடியன் ரஸ்ஸல்

மும்பை: மத்திய அரசின் சிரிப்பு விழா நிகழ்ச்சி (2015) பெங்களூரில் ஜூன் 27 ம் தேதி நடைபெற்றது, இதில் பிரிட்டிஷ் நகைச்சுவை நடிகர் ரஸ்ஸல் பிராண்ட்டும் கலந்து கொண்டார். 40 வயதான பிரிட்டிஷ் காமெடியன் ரஸ்ஸல் பிராண்ட் இந்தி நடிகை தீபிகா படுகோனை காதலித்து திருமணம் செய்து கொள்ள ஆசைபடுவதாகக் கூறினார்.

நான் இந்தியாவில் இருந்தால் அவரை நிச்சயம் காதலித்து திருமணம் செய்து கொள்வேன் ,என்று ரஸ்ஸல் கூறியதைக் கேட்டு அங்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

Russell Brand  Wants  'Marry' With Bollywood Actress Deepika Padukone

மேலும் இன்று இரவுக்குள் நான் கைது செய்யப்படவில்லை என்றால் நான் கண்டிப்பாக சென்று தீபிகாவைப் பார்ப்பேன், உங்கள் யாரிடமாவது தீபிகாவின் தொலைபேசி எண் இருந்தால் கண்டிப்பாகக் கொடுங்கள் இன்று மாலைக்குள் நான் அவருக்கு போன் செய்து பேசுகிறேன்.

என்று அங்கு வந்திருந்தவர்களிடம் கேட்டு பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டார் 40 வயது நிரம்பிய இந்தக் காமெடியர்.

ரஸ்ஸல் 2010 ம் ஆண்டு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கேட்டி பெரி என்றப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்திப் படங்களை விடவும் இந்த திருமணத்தின் ஆயுள் மிகக் குறைவாக இருந்ததாக சிரித்துக் கொண்டே மற்றவர்களிடம் சொல்லி இருக்கிறார் ரஸ்ஸல் பிராண்ட்.

இந்த சிரிப்பு விழாவானது மூன்று நாட்கள் இந்தியாவில் நடைபெற்றது, ஜூன் 26 டெல்லியிலும், ஜூன் 27 பெங்களூரிலும் , ஜூன் 28ல் இறுதியாக மும்பையிலும் நடந்து முடிந்தது.

இதில் கலந்து கொண்ட பெரும்பாலோனோர் நிகழ்ச்சி நன்றாக இருந்ததாக ட்விட்டரில் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

 

கல்யாணம் ரத்தானதற்கு கடவுளுக்கு நன்றி சொன்ன நடிகை!

நிச்சயம் பண்ண திருமணம் நின்னுப் போச்சே என்று நடிகை வருத்தப்படுவாரோ என யாராவது நினைத்தால்... நோ.. அந்த நினைப்பை மாத்திக்குங்க. கல்யாணம் நின்றதற்காக கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார் அவர்.

அம்மணி இப்போதுதான் ரொம்ப ஹேப்பியா இருக்காங்களாம். காரணம் இரண்டு.

ஒன்று, ஆரம்பத்திலேயே இருவருக்குமான புரிதல் இல்லை என்பது புரிந்துவிட்டது. இதையும் தாண்டி திருமணம் செய்திருந்தால், அடுத்த சில மாதங்களிலேயே விவாகரத்துக்காக படியேற வேண்டியிருந்திருக்கும் நல்லதாப் போச்சு, என்கிறாராம்.

Actress thanked god for 'saving' her from marriage!

இரண்டு... அம்மணிக்கு உச்ச நட்சத்திரத்துடன் ஒரு படமாவது ஜோடி போட்டுவிட வேண்டும் என்பது அவரது 13 ஆண்டு கால கனவு. கல்யாணம் பண்ணியிருந்தா, அது கனவாகவே இருந்திருக்கும். இப்போது திருமணம் நின்று போனதால், அந்தக் கனவு நனவாகும் வாய்ப்பிருக்கே என சந்தோஷப்படுகிறாராம்.

அடுத்தடுத்து நான்கு படங்கள் நடிக்கப் போகிறாராம் உச்ச நடிகர். அந்த நான்கில் ஒன்றிலாவது வாய்ப்பு வராமலா போகும்?

நடிகையின் பெயரை இதுக்கு மேலயும் சொல்லணுமா என்ன!

 

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் தொடங்கியது.. முன்னணி கலைஞர்கள் இணைகிறார்கள்!

சிவகார்த்திகேயனின் அடுத்த படத் தொடக்கவிழா இன்று சென்னையில் நடந்தது.

24 ஏஎம் ஸ்டுடியோஸ் என்னும் புதிய நிறுவனத்தின் சார்பில் ஆர் டி ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தை பாக்கியராஜ் கண்ணன் என்பவர் இயக்குகிறார்.

இயக்குனர்கள் சுந்தர்.சி, அட்லீ ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் இவர்.

Sivakarthikeyan's next movie launched

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு பிசி ஸ்ரீராம், இசை அமைக்கிறார் அனிருத். அரங்க அமைப்புக்கு டி. முத்துராஜும் படத் தொகுப்புக்கு ரூபனும் பொறுப்பேற்றுள்ளனர்.

Sivakarthikeyan's next movie launched

ஒலி வடிவமைப்பாளர் ஆக ஆஸ்கார் விருதுப் பெற்ற ரசூல் பூக்குட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கதாநாயகி உள்ளிட்ட மற்ற நடிக நடிகையர் தேர்வு நடைப் பெற்று கொண்டு இருக்கிறது.

Sivakarthikeyan's next movie launched

'ஒரு படத்தின் உன்னதமான தொழில் நுட்ப கலைஞர் குழு படத்தின் வெற்றியை பெரிதளவு தீர்மானிக்கிறது. எனது முதல் படத்தில் இத்தகைய பிரசித்திப் பெற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் பணி புரிவது எனக்கு மிக்க பெருமை. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அவர் இதுவரை ஏற்றிராத ஒரு புதிய பாத்திர படைப்பு. இந்த படம் அவரது கலை பயணத்தில் ஒரு முக்கிய படமாக இருக்கும். தொழில் நுட்பகலைஞர்கள் தேர்வைப் போலவே மற்ற நடிக நடிகையர் தேர்வும் மிக மிக பெரியதாக இருக்கும். காதலுக்கும், நகைசுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்தப் படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பதில் ஐயமே இல்லை. என்னுடைய நிறுவனமான 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தரமான படங்களையும் , உன்னதமான தொழில் நுட்ப கலைஞர்களையும் ஆதரித்து ஊக்குவிக்கும்,' என்கிறார் புதிய தயாரிப்பாளரான ஆர் டி ராஜா.

இந்த ராஜா வேறு யாருமல்ல... சிவகார்த்திகேயனின் மேனேஜராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.