ஸ்கிரிப்ட் எழுதவில்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சொந்தமாக கதை எழுதி, படம் தயாரித்து நடிப்பதாக வரும் தகவல் குறித்து நந்தா கூறியதாவது:
'திருப்பங்கள்' படம் முடிந்து, ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அடுத்து அமீர் உதவியாளர் ஆனந்த் மூர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கிறேன். இந்த கதையை நான் எழுதி, தயாரித்து நடிப்பதாக வரும் தகவல்கள் தவறானவை. வெளிநாட்டில் இருக்கும் என் நண்பர் தயாரிக்கிறார். அவரால் இங்கு வர முடியாததால், மேற்பார்வை பணிகளை கவனிக்கிறேன். ஆனந்த் மூர்த்தியின் ஸ்கிரிப்ட் இது. சென்னையில் சில நாட்கள் ஷூட்டிங் நடந்தது. டைட்டில் முடிவாகவில்லை.



 

வெஸ்டர்ன் பாடலில் கானா உலகநாதன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இதுவரை கானா பாடல்களை மட்டுமே பாடி வந்த உலகநாதன், 'கொத்தனார்' படத்தில் மேற்கத்திய ஸ்டைலில் பாடல் பாடியுள்ளார். இந்தப் படத்தை எம்.இ.பிரபு எழுதி இயக்குகிறார். புதுமுகம் லண்டன் அர்ஜுனா, ஹீரோவாக நடிக்கிறார். தஷி இசையமைக்கிறார். 'அடடா அடடா, அண்ணன் தம்பி நானடா' என்று தொடங்கும் பாடலை வெஸ்டர்ன் இசையில் உருவாக்கிய தஷி, இதை கானா உலகநாதன் பாடினால் நன்றாக இருக்கும் என்று கூறினாராம். இதையடுத்து அவர் பாடியுள்ளார்.
இதுபற்றி உலகநாதன் கூறும்போது, ''வழக்கமாக கானா பாடல் பாடத்தான் என்னை அழைப்பார்கள். வித்தியாசமாக, வெஸ்டர்ன் பாடல் பாட இசையமைப்பாளர் தஷி அழைத்தார். எனக்கும் இப்படியொரு பாடல் பாட ஆசைதான். பாடினேன். என் குரல் நன்றாக இருந்ததாகக் கூறினார்கள்' என்றார்.


 

பத்திரிகையாளர் சந்தியா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மலையாளப் படத்தில் நிருபராக நடிக்கிறார் சந்தியா. இதுகுறித்து அவர் கூறும்போது, ''தற்போது 'வீண்டும் கண்ணனூர்' என்ற படத்தில் அனுப் மேனம் ஜோடியாக நடித்து வருகிறேன். அரசியலை மையமாக கொண்டு தயாரிக்கப்படும் இதில் பத்திரிகையாளராக நடிக்கிறேன். எனக்கு நிறைய பத்திரிகை நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களின் மேனரிசம் எனக்கு தெரியும். அதை மனதில் வைத்து நடிக்கிறேன். தமிழில் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்'' என்றார்.


 

நல்ல இயக்குனர்கள் நடிகர்களுக்கு வரம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
லிங்குசாமி இயக்கும் படம் 'வேட்டை'. மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலாபால் நடிக்கிறார்கள். அடுத்த மாதம் வெளிவருகிறது. படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதில் மாதவன் கூறியதாவது:
பத்து வருடத்துக்கு முன்பு நானும் லிங்குசாமியும் இணைந்து பணியாற்றினோம். சாக்லெட் ஹீரோவாக இருந்த என்னை 'ரன்' மூலம் ஆக்ஷன் ஹீரோவாக ஆக்கினார். பிறகு பல படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கிறேன். எத்தனையோ பெரிய இயக்குனர்களிடம் பணியாற்றி இருந்தாலும் சொன்ன கதையை அப்படியே படம் எடுப்பவர் லிங்குசாமி.

சினிமாவை நேசிக்கும் இயக்குனர்கள் கிடைப்பது நடிகர்களுக்கு வரம் கிடைத்த மாதிரி. எனக்கு கிடைத்த வரம் லிங்குசாமி. இந்த படத்துக்கு அவர் அழைத்தபோது காலில் அடிபட்டிருக்கிறது, ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க முடியாது என்றேன். அப்படியானால் இந்தப் படத்தை எடுக்கவில்லை என்றார். என்மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்காக நடித்தேன். படத்தில் ஆர்யாவின் அண்ணனாக நடித்தாலும் நிஜத்திலும் அண்ணனாக மாறிவிட்டேன். அந்த அளவுக்கு அன்பானவர் அவர். எனக்கு 'ரன்' படம் மாதிரி அவருக்கு இந்தப் படம் அமையும். அவரும் நானும் போட்டிப் போட்டு நடித்தோம். சமீரா ரெட்டி எனக்கு பொருத்தமான ஜோடிகளில் ஒருவர். அமலா பாலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் படம். இவ்வாறு அவர் கூறினார்.


 

கதையை மாற்றினார் சித்தார்த் கால்ஷீட் மறுத்தார் சமந்தா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கதையை கேட்டு ஒப்பந்தம் போட்ட பின், கதையை மாற்றியதால் படத்திலிருந்து ஹீரோயின் சமந்தா வெளியேறினார். தெலுங்கு இயக்குனர் நந்தி ரெட்டி படம் ஒன்றை இயக்குகிறார். இதில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார் என்று ஹீரோயின் சமந்தாவிடம் கதை சொன்னார். கதை பிடித்திருந்ததால் சமந்தா ஒ.கே சொன்னார். பிறகு சித்தார்த்திடம் கதையை சொன்னார் நந்தி ரெட்டி. அவர் கேரக்டரை விட, சமந்தாவின் கேரக்டர் சிறப்பாக இருந்ததாம். இதை ஏற்காத சித்தார்த், சமந்தா கேரக்டரில் சில மாற்றங்களை சொன்னதாகவும் அதை செய்தால் மட்டும் நடிப்பேன் என்று கூறியதாகவும் தெரிகிறது.

இதையடுத்து கதையை மாற்றினார் இயக்குனர். விஷயம் கேள்விபட்டு மீண்டும் கதையை கேட்ட சமந்தாவுக்கு ஷாக். முதலில் சொன்னதற்கும் இப்போதைய கதைக்கும் அதிக வித்தியாசம். இதையடுத்து நடிக்க மறுத்தார் சமந்தா. இதுகுறித்து தயாரிப்பாளர் பெல்லங்கொண்டா சுரேஷ், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார். 'முதலில் நடிக்க ஒப்புக்கொண்டு அக்ரிமென்ட் போட்டார் சமந்தா. ஷூட்டிங் தொடங்கும் நேரத்தில் நடிக்க முடியாது என வெளியேறிவிட்டார்' என்றது அவர் புகார் மனு.

இதையடுத்து விசாரித்த தயாரிப்பாளர் சங்கம், 'இயக்குனரும் ஹீரோயினும் முதலில் கதை விஷயத்தில் சமரசமாக பிரச்னையை முடித்துக்கொள்ளுங்கள். பிரச்னை முடியும்வரை மீடியாவிடம் கருத்து சொல்லக் கூடாது' என்று கூறியுள்ளது.இதுபற்றி சமந்தா தரப்பில் விசாரித்தால், 'நடிக்க அவர் ரெடியாகவே இருக்கிறார். ஆனால், முதலில் சொன்ன கதையை மட்டுமே படமாக்க வேண்டும்' என்று தெரிவித்தனர். பேச்சுவார்த்தை தொடர்ந்துகொண்டிருக்கிறது.


 

ஒரே படத்தில் விஷால், ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இளம் முன்னணி ஹீரோக்கள் விஷால், ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி இணைந்து ஒரே படத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதுகுறித்து வெங்கட் பிரபு கூறியதாவது:
'மங்காத்தா' ரிலீசுக்குப் பிறகு நான் இயக்கும் படத்துக்கான கதை விவாதம் நடந்து வருகிறது. அதன் ஹீரோ, தலைப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வரும். இதையடுத்து, ஒரே படத்தில் எனது நெருங்கிய நண்பர்கள் விஷால், ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி இணைந்து நடிக்கும் படத்தை இயக்க உள்ளேன். இதற்கான 'ஒன் லைன்' கதையை அவர்களிடம் சொன்னேன். அவர்களும் எனது இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கின்றனர். தயாரிப்பு நிறுவனம் முடிவாகவில்லை.


 

தாஜ்மகாலில் ரகுமான் இசை நிகழ்ச்சி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ள இந்தி பட பாடல் கேசட் வெளியீட்டு விழா தாஜ்மகாலில் நடக்கிறது. அங்கு அவர் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். சிம்பு, த்ரிஷா ஜோடியாக நடித்த படம் 'விண்ணை தாண்டி வருவாயா'. கவுதம் மேனன் இயக்க¤னார். ஏ.ஆர்.ரகுமான் இசை. இப்படம் இந்தியில் 'ஏக் தீவானா தா' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. பிரதீக், எமி ஜாக்ஸன் நடிக்கின்றனர். கவுதம் மேனன் இயக்கும் இப்படத்துக்கும் ரகுமானே இசை அமைக்கிறார்.

காதல் கதை என்பதால், பாடல் வெளியீட்டு விழாவை காதல் நினைவுச் சின்னமான தாஜ்மகாலில் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். இது குறித்து கவுதம் மேனன் கூறும்போது, 'தாஜ்மகாலில் பாடல் கேசட் ரிலீஸ் செய்யப்படுகிறது. அப்போது ரகுமான் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இதில் பிரதீக், எமி ஜாக்ஸனின் நடன நிகழ்ச்சியும் நடக்கிறது' என்றார்.


 

டிஜிட்டல் சினிமா சாதகமா பாதகமா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழ் சினிமா டிஜிட்டல் மயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உயர்ரக கேமராவான ரெட்ஒன்னின் பயன்பாடு அதிகரித்து விட்டது. முன்பு மும்பையில் மட்டுமே கிடைக்கும் இந்த கேமரா, இப்போது சென்னையிலேயே கிடைக்கிறது. தற்போது தயாரிப்பில் உள்ள படங்களில் 60 சதவிகிதம் டிஜிட்டல் முறையில் படமாக்கப்படுகிறது. படத் தயாரிப்பு பட்ஜெட்டில் பெரும்பகுதி பிலிமுக்கே ஒதுக்கப்படும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அது தேவையில்லை என்பதால் சிறு முதலீட்டு படங்களின் தயாரிப்பு அதிகரித்துள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு 150 படங்களின் படப்பிடிப்பு, தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த கணக்கு குறும்படங்களையும் சேர்த்து என்கிறார்கள். முன்பு சில தியேட்டர்களில் மட்டுமே டிஜிட்டல் சினிமாவை திரையிடும் வசதி இருந்தது. இப்போது 75 சதவிகித தியேட்டர்கள் இந்த வசதிகளை கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் நடந்த பிக்கி மாநாட்டில் பேசிய கமல்ஹாசன், 'டிஜிட்டல் சினிமா தவிர்க்க முடியாத ஒன்று. நாளைக்கு செல்போனில் சினிமா வெளியாகும். ரசிகனின் வீட்டுக்கே ரிலீஸ் தேதியன்று படம் முறையாகச் சென்று சேரும் காலம் வரும். இதற்கு டிஜிட்டல் தவிர்க்க முடியாத ஒன்று' என்றார். 'சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்ல, படைப்பாளிகளுக்கும் டிஜிட்டல் வரப்பிரசாதம். ஒரு பிலிம் பிரிண்டுக்கு, 60 ஆயிரம் வரை செலவாகிறது. டிஜிட்டல் வடிவத்துக்கு பத்தாயிரத்திற்கும் குறைவுதான்'' என்கிறார் தயாரிப்பாளரும், இயக்குனருமான ராம.நாராயணன்.

டிஜிட்டல் சினிமா சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்களிடையே வரவேற்பை பெற்றாலும் ஒளிப்பதிவாளர்களிடம் அதிக வரவேற்பை பெறவில்லை. முன்னணி ஒளிப்பதிவாளர்கள் டிஜிடலுக்கு தயக்கம் காட்டுகிறார்கள். 50 கோடிக்கு மேல் செலவு செய்யும் நிறுவனத்துக்கு பிலிம் செலவு பொருட்டல்ல என்பது இவர்கள் வாதம். பெரும் பொருட்செலவில் டிஜிட்டலில் படமாக்கப்பட்ட காட்சிகள், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மீண்டும் ஷூட் பண்ண வேண்டிய நிலைமை வந்ததை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

'என்னதான் டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும் பிலிமுக்கு மாற்று வரவில்லை. டிஜிட்டல் கேமரா, வெளிநாட்டின் குளிர் தட்பவெட்பத்தை கருத்தில் கொண்டு தயாரிக்கப்படுபவை. 'பருத்தி வீரன்' படத்தை டிஜிட்டலில் எடுத்திருக்கவே முடியாது. காரணம் ஷூட்டிங் முழுவதும் 100 டிகிரிக்கும் கூடுதலான வெயிலில் நடந்தது. செலவு அதிகம் என்பதை தவிர, பிலிமில் வேறுகுறைபாடு இல்லை, அப்படி இருக்க, ஏன் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற வேண்டும்?' என்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி.

இந்த விவாதங்கள் ஒருபக்கம் இருந்தாலும் டிஜிட்டல் சினிமா அதிகரித்துள்ள நிலையில் பல புதிய கோரிக்கைகள் எழுந்துள்ளன. முன்பு டிஜிட்டல் முறையில் தணிக்கை குழுவினர் படம் பார்த்தால் அதற்கு, 'டிஜிட்டல் சினிமா' என்று சான்றிதழ் கொடுத்து வந்தனர். 'பியூச்சர் பிலிம்' சான்றிதழ் வாங்க வேண்டுமானால் டிஜிட்டலில் படம் எடுத்தாலும் அதை பிலிமுக்கு மாற்றி சென்சாருக்கு அனுப்ப வேண்டும். சமீபத்தில்தான் இந்த முறை மாற்றப்பட்டிருக்கிறது. அதேபோல டிஜிட்டல் சினிமாவின் வியாபார மதிப்பு மிகவும் குறைவு என்கிறார்கள்.

'டிஜிட்டல் சினிமாவுக்கும் அரசு மானியம் வழங்க வேண்டும், விருது பரிசீலனை பட்டியலில் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. டிஜிட்டல் தொழில் நுட்பத்தால் சில லட்சங்களிலேயே ஒரு படத்தை எடுத்து விடலாம் என்ற நிலை உள்ளதால் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யாமல் பல படங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அதில் பெப்சி தொழிலாளர்கள் பணியாற்றாமல், புதியவர்கள் பணியாற்றுகிறார்கள். இதை எப்படி ஒழுங்குபடுத்துவது என்பதும் திரையுலகம் அடுத்து சந்திக்கப் போகும் பிரச்னை' என்கிறார்கள்.


 

முப்பொழுதும் உன் கற்பனைகள் பாடல் வெளியீடு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெயராமன், எல்ரெட் குமார், ஜேம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம், 'முப்பொழுதும் உன் கற்பனைகள்'. அதர்வா, அமலா பால் ஜோடி. ஒளிப்பதிவு, சக்தி. இசை, ஜி.வி.பிரகாஷ் குமார். பாடல்கள், தாமரை. எல்ரெட் குமார்  இயக்குகிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட, கே.வி.ஆனந்த் பெற்றுக்கொண்டார். ஜீவா, வெற்றிமாறன், ஏ.எல்.விஜய், சிந்து, அனுபமா, ஸ்டண்ட் மாஸ்டர் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஜெயராமன், எல்ரெட் குமார், ஜேம்ஸ் நன்றி கூறினர்.


 

மணிரத்னம் படத்தில் மோகன்பாபு மகள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இயக்குனர் மணிரத்னம் இயக்கும் புதிய படம் 'பூக்கடை'. இதில் ஹீரோவாக கார்த்திக் மகன் கவுதம் நடிக்கிறார்.  தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மன்ச் இதில் அறிமுகமாக உள்ளார். இது பற்றி லட்சுமி மன்ச் கூறியதாவது:

மணிரத்னம் 2 மாதம் முன்பே என்னிடம் படத்தின் ஸ்கிரிப்ட் கொடுத்தார். படித்தேன். பிடித்திருந்தது. தற்போது தமிழ், தெலுங்கில் என் சகோதரர் மனோஜ் மன்ச் நடிக்கும் படத்தை தயாரிக்கிறேன். அதன் பூஜைக்கு இம்மாதம் 15-ம் தேதி சென்னை வந்தேன். அப்போதுதான் மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். இது கிராமத்து பின்னணியிலான கதை. பக்கா தமிழ் பெண்ணாக நடிக்கிறேன். சுத்த தமிழ் பேசி நடிக்க வேண்டும் என்பதால் இது எனக்கு சவாலான வேடம். ஜனவரியில் ஷூட்டிங் தொடங்குகிறது. மணிரத்னம் இயக்கிய படம் ஒன்றுவிடாமல் பார்த்திருக்கிறேன். அவர் படத்தில் நடிப்பது அதிர்ஷ்டம். இவ்வாறு லட்சுமி மன்ச் கூறினார்.