பாலா போட்ட போட்டில் ஓடிப் போன 'பவர் ஸ்டார்' சீனிவாசன்!

Bala S Anger Forces Power Star

எப்பவுமே டென்ஷனாக இருக்கும் இயக்குநர் பாலாவை எக்குத்தப்பாக டென்ஷனாக்கி கொந்தளிக்க வைத்து விட்டாராம் நமது 'பவர் ஸ்டார்' சீனிவாசன்.!

அதர்வாவை நாயகனாக வைத்து பரதேசி என்ற படத்தை சிரத்தையாக இயக்கி வருகிறார் பாலா. கூலித் தோட்டத் தொழிலாளர்கள் குறித்த கதை இது. மிகவும் சீரியஸான கதை என்பதால் படப்பிடிப்புத் தளமே படு கவனமாக செயல்பட்டு வருகிறதாம்.

வழக்கமாக பாலா படங்களில் வினோதமான, வித்தியாசமான கதாபாத்திரங்களைப் பார்க்கலாம். நந்தாவில் லொடுக்குப் பாண்டி அதற்கு ஒரு உதாரணம். அதேபோல பரதேசி படத்திலும் இப்படி ஒரு கிராக்குத்தனமான கேரக்டர் இருக்கிறதாம். அதற்கு யாரைப் போடலாம் என்று யோசித்தபோது யார் அவருக்கு ஐடியா கொடுத்தார்களோ தெரியவில்லை, நம்ம பவர் ஸ்டார் சீனிவாசன் பெயரைப் பரிந்துரைத்துள்ளனர். பாலாவும் சீர்தூக்கிப் பார்த்ததில், அதேதான் ... என்று பிக்ஸாகி பவர் ஸ்டாரை கூப்பிட்டு புக் செய்துள்ளார்.

சும்மாவே பஞ்சாக பறக்கும் பவர் ஸ்டார், பாலாவே கூப்பிட்டுவிட்டார் என்பதால் தரையிலிருந்து பத்தடிக்கு மேலேதான் மிதந்தபடி இருக்கிறாராம். சமீபத்தில் படப்பிடிப்புக்குப் போயுள்ளார். வழக்கமாக அவருடன் அடிப்பொடி, அடியடிப்பொடி என கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்டோர் கும்பலாக போவதுதான் வழக்கம். அண்ணன் சிங்கம்ல, கூடமாட ஒத்தைக்கு போகனும்ல...

அதேபோல பாலா படத்துக்கும் பக்கவாக போய் இறங்கியுள்ளது பவர் ஸ்டார் கேங். இதைப் பார்த்த பாலா டென்ஷனாகி விட்டாராம். சிலசமயங்களில் சம்பந்தப்பட்டவர்களை நேரில் திட்ட மாட்டார் பாலா. அவர்களுக்கு உறைப்பது போல வேற யாரையாவது திட்டி தீர்த்து விடுவார். அதே ட்ரீட்மென்ட்தான் பவர் ஸ்டாருக்கும் கிடைத்ததாம்.

பாலா கோபத்தைப் பார்த்த பவர் ஸ்டார், பங்சராகிப் போய் உடனே தனது கேங்கோடு எஸ் ஆகி விட்டாராம் அந்த இடத்தை விட்டே.

மறுபடியும் பவர் வருவாரா, 'இவர்' வர விடுவாரா என்பது அந்த சாமிக்கே வெளிச்சம் என்கிறார்கள்...!

 

ஓடும் ரயிலில் இருந்து குதித்த அனுஷ்கா

Anushka Jumps From Running Train   

அலெக்ஸ் பாண்டியன் படத்திற்காக அனுஷ்கா ஓடும் ரயிலி்ல் இருந்து குதித்துள்ளார்.

சுராஜ் இயக்கத்தில் கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் உள்ளிட்டோர் நடிக்கும் படம் அலெக்ஸ் பாண்டியன். இந்த படத்தின் சண்டை காட்சி ஒன்றை மைசூர் அருகே எடுத்துள்ளனர். அந்த காட்சியில் அனுஷ்கா டூப் போடாமல் ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளார்.

இது குறித்து சுராஜ் கூறுகையில்,

கதைப்படி ரயிலில் செல்லும் கார்த்தியையும், அனுஷ்காவையும் வில்லன்கள் ஹெலிகாப்டரில் துரத்துவார்கள். அந்த காட்சியில் ரயிலின் மேல் கார்த்தியும், அனுஷ்காவும் நடந்தனர். திடீர் என்று அவர்கள் இருவரும் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதிக்க வேண்டும். அப்போது அனுஷ்கா டூப் வேண்டாம் நானே குதிக்கிறேன் என்று கூறினார். அதன் பிறகு ரயிலை மெதுவாக இயக்கச் சொன்னோம். தொடர்ந்து அனுஷ்கா ரயிலில் இருந்து கீழே குதித்தார். இந்த ஒரு சோசிங் காட்சியை ரூ.2 கோடி செலவில் 15 நாட்களில் படமாக்கியுள்ளோம். படத்தில் இந்த காட்சி பேசப்படும் என்றார்.

 

காதலனுக்கு திவ்யா திடீர் நிபந்தனை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிசினஸில் வெற்றி பெற்ற பின்தான் காதலனை மணப்பேன் என்று திடீர் நிபந்தனை விதித்தார் திவ்யா. போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் ரபேலை கடந்த ஒன்றரை வருடமாக காதலித்து வருகிறார் திவ்யா. அவருடன் பல்வேறு இடங்களுக்கு டேட்டிங் சென்றிருக்கிறார். காதலன் பெயரை  பச்சை குத்தி இருக்கிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர் என்று சான்டல்வுட்டில் பரபரப்பு எழுந்தது. இது பற்றி திவ்யா நேற்று கூறியதாவது:

இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் திட்டம் இல்லை. அதற்கான தேதியும் முடிவு செய்யவில்லை. தொடர்ந்து நான் சினிமாவில் நடிக்க ரபேல் துணையாக உள்ளார். அவரது ஊக்கம், மற்ற லட்சியங்களில் என்னை கவனம் செலுத்த வைத்திருக்கிறது. நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வதற்கு முன் ஒரு நிபந்தனையை வகுத்துக் கொண்டிருக்கிறோம். ரபேலும், இருவரும் சமமான தூரத்துடன் விலகி நின்றுதான் உறவை வளர்த்து வருகிறோம். இதற்கு காரணம் ரபேலின் தொழில் முறை திட்டங்கள்தான். அவர் இன்னும் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டி இருக்கிறது. அதேபோல் நானும் எனது பிசினஸில் வெற்றி பெற வேண்டி இருக்கிறது. இதற்கு இருவருக்குமே அவகாசம் தேவைப்படுகிறது. எங்கள் திருமணத்தை தள்ளிப்போடுவதற்கு இதுமட்டும்தான் காரணம். ரபேலை பொறுத்தவரை அவரது தொழிலில் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கிறார். நாங்கள் இருவரும் நல்ல உறவுடன் இருக்கிறோம். அதை திருமணம் என்ற பெயரில் முடித்துக்கொள்ள விரும்பவில்லை. இவ்வாறு திவ்யா கூறினார்.


 

கிசு கிசு - பார்ட்டியில் கிஸ் நடிகைகள்!

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

பஞ்ச் ஹீரோ சிகரெட் புகைக்குற போஸ்டரை ஒட்டக்கூடாதுன்னு குறிப்பிட்ட கட்சிகாரங்க கொடி புடிச்சாங் களாம்... புடிச்சாங்களாம்... இதுக்கு பதில் சொன்ன கஜினி இயக்கம், 'சிகரெட் புகைக¢கிறதை நான் ஆதரிக்கல. ஆனா போஸ்டர்ல புகை பிடிக்க¤றதை எதிர்க்குற கட்சிக்காரங்க ஏன் சிகரெட் தயாரிக்க¤ற கம்பெனியை மூடச் சொல்லி போராட மாட்டேங்கிறாங்க. அட்லீஸ்ட், புகைபிடிக்க தடை விதிக்கற கட்சியோடதான் கூட்டணி வைப்பேன்னாவது ஒரு முடிவு பண்ணாலாமேÕன்னு சீறுறா ராம்... இயக்கம் சீறுறாராம்...

சில மாசத்துக்கு முன்னால சோன நடிகையும் நமீ ஹீரோயினும் கீரியும் பாம்புமா மோதிக்கிட¢டாங்க... மோதிக்கிட்டாங்க... மோதல் நடிகைங்க திடீர்னு ஒண்ணு சேந்துட்டாங்களாம். பர்த்டேவுக்கு சோன நடிகை விட்ட அழைப்பை ஏத்துகிட்டு வந்த நமீ ஹீரோயின், உற்சாக பானத்தோட நடந்த நள்ளிரவு விருந்துலேயும் கலந்துகிட்டாராம¢... கலந்துகிட்டாராம்... அதோட ரெண்டுபேரும் கட்டிப்பிடிச்சி கிஸ்
கொடுத்தாங்களாம்... கொடுத்தாங்களாம்...

காட்டன் ஹீரோவை இயக்குன தவுசண்ட்ல ஒருவன் இயக்கம், அடுத்து பிரகாச ஹீரோவை இயக்க ஸ்கிரிப்ட் ரெடி பண்றாராம்... பண்றாராம்... கால்ஷீட் தராம மத்த இயக்கங்களுக்கு டிமிக்கி கொடுக்க¤ற பிரகாச ஹீரோ, செல்வ இயக்கத்துக்கு கிரீன் சிக்னல் கொடுத்துட்டாராம்... கொடுத்துட்டாராம்...


 

பெரிய ஹீரோயின்கள் குத்தாட்டம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பெரிய ஹீரோயின்கள் சோலோவாக குத்துப்பாட்டுக்கு ஆடக்கூடாது. அதற்கென வேறு நடிகைகள் இருக்கிறார்கள் என்றார் ஹேமமாலினி. மும்பையில் நடந்த இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழாவில், பாலிவுட் கனவு கன்னியாக திகழ்ந்த ஹேமமாலினி பேசியதாவது: படங்களில் பிரபல ஹீரோயின்கள் குத்தாட்டம் போடுவது எனக்கு பிடிக்காது. ஆனால் ரசிகர்கள் பார்க்கிறார்கள். ஆனால் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். ஏற்கனவே நல்ல பெயரை சம்பாதித்து வைத்துள்ள பிரபல ஹீரோயின்கள் குத்தாட்டம் போடுவதை தவிர்க்க வேண்டும். அதை ஆடுவதற்கு எவ்வளவோ நடிகைகள் இருக்கிறார்கள். முன்பெல்லாம் குத்தாட்டத்துக்கு வேறு அர்த்தம் இருந்தது. இப்போது அது முற்றிலும் மாறிவிட்டது. வெவ்வேறு பெயர்களும் வைக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவோ ஹீரோயின்கள் நடனம் ஆடுகிறார்கள். இதில் கைதேர்ந்தவர்கள் மாதுரி தீட்சித், ஸ்ரீதேவி. அவர்களுக்கு பிறகு ஐஸ்வர்யாராய் நன்றாக நடனம் ஆடுகிறார். வித்யாபாலனும் ஓரளவுக்கு பரவாயில்லை. மற்ற எந்த நடிகையையும் இந்த இடத்தில் வைத்துப் பார்க்க முடியவில்லை. இவ்வாறு ஹேமமாலினி கூறினார்.


 

'கிச்சு கிச்சு' மூட்ட வரும் சிரிப்பு லோகம்!

New Comedy Serial Sirippu Lokam

ஒட்டுமொத்த நகைச்சுவை நடிகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நடித்தால் எப்படி இருக்கும்? அதுபோல ஒரு நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

வெண்ணிற ஆடை மூர்த்தி, சின்னி ஜெயந்த், சிட்டிபாபு, ஆர்த்தி கணேஷ்கர் போன்ற நகைச்சுவை பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த நகைச்சுவை தொடரில் எமதர்மனாக சின்னி ஜெயந்த் சித்ரகுப்னாக வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் கலக்கியுள்ளனர். சிரிப்பு லோகம் என்று பெயர் சூட்டியுள்ள இந்த தொடர் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

அழுகை, வஞ்சகம், கள்ளக்காதல், ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் அடுத்தவரின் அந்தரங்கத்தை ஒளிபரப்புவது போன்றவைகளுக்கு நடுவே யாரையும் பாதிக்காத நகைச்சுவை தொடர்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. இந்த சிரிப்பு லோகமும் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

 

சகுனிக்கு யு - 375 அரங்குகளில் ரிலீஸ்!!

Sakuni Gets U Releasing 375 Screens   

கார்த்தி நடிக்கும் சகுனி படத்துக்கு தணிக்கைக் குழுவினர் அனைவரும் பார்க்கலாம் எனும் வகையில் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.

சமீபத்திய படங்களில் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ள படம் சகுனி. அஜீத்தின் பில்லா 2வுடன் மோதும் இந்தப் படத்தில் கார்த்தி - பிரனிதா நடித்துள்ளனர்.

அரசியல் - ஆக்ஷன் - நகைச்சுவை என கார்த்திக்கே உரிய ஜனரஞ்சகத் தன்மையுடன் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கார்த்தியின் அரசியல்வாதி கெட்டப் அவரது ரசிகர்களை உற்சாகத்துடன் 'தலைவா' கோஷத்தை முன்னெடுக்க வைத்துள்ளது.

இந்தப் படத்தை தணிக்கைக் குழுவினர் நேற்று பார்த்தனர். எந்த இடத்தில் கட் கொடுக்காமல், அனைவரும் பார்க்கலாம் எனும் வகையில் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.

ரூ 375 அரங்குகளில்...

வரும் ஜூன் 22-ம் தேதி, பெரிய அளவில் படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன.

375 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. கார்த்தி நடித்த படம் இத்தனை அரங்குகளில் வெளியாவது அநேகமாக இதுதான் முதல் முறையாக இருக்கும்.

சகுனியின் தெலுங்குப் பதிப்பும் ஒரே நேரத்தில் பிரமாண்டமாக வெளியாகிறது!

 

மாமியாராகிறார் மாஜி 'கனவுக் கன்னி' ஹேமமாலினி!

Esha Deol Has Got Engaged Her Boyfriend Bharat Takhtani

ஹேமமாலினியின் மகள் இஷா தியோல், தனது காதலரான பரத் தக்தனி என்ற மும்பை தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளார். இவர்களின் திருமணம் ஜூலை 29 ம் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர் ஹேமாமாலினி -தர்மேந்திரா தம்பதியர்.

ஹேமாமாலியின் மகள் இஷா தியோல் ஏராளமான இந்தி படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், தமிழில் மணிரத்னம் இயக்கிய 'ஆய்த எழுத்து' என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இஷா தியோல் மும்பை தொழிலதிபர் பரத் தக்தனியை காதலிப்பதை அறிந்த தர்மேந்திரா - ஹேமாமாலினி தம்பதியர் இவர்களின் காதலுக்கு, தற்போது பச்சை கொடி காட்டியுள்ளனர். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் (12-02-12) அன்று மும்பையிலுள்ள ஹேமமாலினியின் இல்லத்தில் எளிமையாக நடைபெற்றது.

இதில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். இவர்களுடன் பாலிவுட் பிரபலமான ஜெயா பச்சனும் கலந்து கொண்டார்.

இவர்களின் திருமணம் ஜூலை 29 ம் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. திருமண நாள் நெருங்குவதால் தர்மேந்திரா - ஹேமமாலினி தம்பதியர் பரபரப்பாக உள்ளனராம். இந்த திருமணத்தில் பிரபல அரசியல்வாதிகளும், பாலிவுட் திரையுலக நட்சத்திரங்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகளை விரும்பும் மருமகன் கிடைத்துள்ளதால் மாமியாராகப்போகும் ஹேமமாலினி மகிழ்ச்சியில் திளைக்கின்றாராம்.

 

மறுபடியும் ஒரு காதல் - 'பார்த்த கதை, பார்க்காத கோணத்தில்!'

Marupadiyum Oru Kathal Preview

ஒரு முறை மலேசியா போயிருந்தபோது, ஜெர்மன் வாழ் தமிழரைச் சந்தித்தேன். அவர் இலங்கையைச் சேர்ந்தவர். என்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு, அவரது கதையைச் சொன்னார். திருமணமாகி, குழந்தையெல்லாம் பிறந்து பல ஆண்டுகளுக்குப் பின் தன் முதல் காதலி பற்றி மனைவியிடம் சொல்கிறார். அதாவது முகம் பார்க்காத காதலி.

மனைவிக்கு பதட்டம். முழு கதையையும் சொல்லி முடித்த பிறகு ஆச்சர்யம்... அப்போது கணவனிடம் மனைவி சொல்கிறார்... அந்த முதல் காதலியே நான்தான்," என்று. இப்படி ஒரு சுவாரஸ்யமான முடிச்சை வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம்தான் மறுபடியும் ஒரு காதல்," என்று ஆரம்பித்தார் இயக்குநர் வாசு பாஸ்கர்.

இதற்கு முன் வேதா என்ற படத்தைத் தயாரித்தவர் வாசு பாஸ்கர். இப்போது இயக்குநராக மாறியிருக்கிறார்.

மறுபடியும் ஒரு காதல் படத்தில் விசேஷம், வடிவேலு. தேர்தலுக்கு முன்பே அவர் நடித்த படம்தான் என்றாலும், அதற்குப் பிறகு அவர் தொடர்பான காட்சிகளை மெருகேற்றியுள்ளார்களாம்.

சஞ்சனா சிங் அதிகபட்ச கவர்ச்சியுடன் போடும் குத்தாட்டத்துடன்தான் படமே ஆரம்பிக்கிறதாம்.

அனிருத் கதாநாயகனாகவும், லண்டன் பெண் ஜோஷ்னா நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள் (லண்டன் பெண் என்பதற்காக தெரிந்த தமிழையும் தெரியாத ஆங்கிலம் மாதிரியே பேசுகிறார் அம்மணி!)

'நல்ல பாடல்கள், குலுங்க வைக்கும் நகைச்சுவை, சுவாரஸ்யமான திரைக்கதை... இவை எல்லாமே இந்த்ப படத்தில் பார்க்கலாம். கதை வழக்கமான காதல்தான் என்றாலும், எடுத்துள்ள விதத்தில்தான் இந்தப் படம் உங்கள் மனதில் நிற்கப் போகிறது', என்றார் வாசு பாஸ்கர்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகிறது மறுபடியும் ஒரு காதல்!

 

கமலுடன் ஒரு பரவச அனுபவம்! - சொல்கிறார் ஆன்ட்ரியா

Andrea Shares Her Experience With Kamal Hassan    | விஸ்வரூபம் வால்பேப்பர்   | விஸ்வரூபம் ட்ரெய்லர்  

தமிழ் சினிமா கதாநாயகிகளில் இப்போது உற்சாகத்தின் உச்சியில் இருப்பவர் ஆன்ட்ரியாதான்.

காரணம்...? விரைவில் ஹாலிவுட் நாயகனாகப் போகும் கமல் ஹாஸனுக்கு ஜோடியாக விஸ்வரூபத்தில் நடித்திருப்பதுதானாம்.

தன் அனுபவத்தை இப்படி பரவசத்துடன் பகிர்ந்து கொள்கிறார் ஆன்ட்ரியா.

"கமல் சார் ஒரு லெஜன்ட். ஒரு இயக்குநராக, நடிகராக, எழுத்தாளராக அவரை அப்படி ரசிப்பவள் நான். அவருடன் பணியாற்றும் அனுபவம் வாய்த்தபோது, உற்சாகத்தில் மிதந்தேன்.

அமெரிக்காவில் குளிர்காலத்தில் அவருடன் வேலைப் பார்க்கும் சூழல். கமலுடன் மட்டுமல்ல, அமெரிக்காவில் படப்பிடிப்பில் நான் பங்கேற்பதும் அதுதான் முதல்முறை. அங்கேயே கிறிஸ்துமஸ் தினத்தையும் கொண்டாடினேன். கமல்சார் அருகில் இருக்க, இத்தனை இனிமைகளையும் அனுபவித்தது மறக்க முடியாத நாட்களாக அமைந்துவிட்டது.

இந்தப் படத்தின் இந்தி வடிவத்துக்கும் என்னையே குரல் கொடுக்கச் சொல்லிவிட்டார் கமல் சார். அது என் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் காட்டியது மட்டுமல்ல, என் திறமை மீது எனக்கே புதிய நம்பிக்கையை வரவழைத்துள்ளது," என்கிறார்.

விஸ்வரூபம் வெளியான பிறகாவது இந்த 'புராணம்' நிற்குமா... தெரியவில்லை!

 

ஜூலை முதல் கவுதம் மேனன் - விஜய்யின் 'யோஹன்'!

Yohan Shoot Begin July

கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'யோஹன் அத்தியாயம் ஒன்று' என்ற படத்துக்கு பச்சைக் கலரில் விதவிதமாக விளம்பரங்கள் வெளியானதோடு சரி.

கவுதம் மேனன் தன் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக, விஜய்யும் வேறு வேறு படங்களுக்காக தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸாக வாங்கிக் குவிக்க ஆரம்பித்துவிட்டார்.

இதனால் இந்தப் படம் தொடங்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் கவுதம் மேனன் தன் இலக்கில் தெளிவாக இருந்து, விஜய்யைப் பிடித்துவிட்டார்.

வரும் ஜூலையிலிருந்து படப்பிடிப்பு தொடங்கும் என மீண்டும் விளம்பரங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்.

யோஹன் குறித்து அவர் கூறுகையில், "எனது இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் 'யோஹன்' திரைப்படம் ஜுலை மாதம் முதல் துவங்குகிறது. ஆக்ஷன் படங்களில் ஒரு புதிய அனுபவத்தை இந்தப் படம் தரும் என்பது உறுதி," என்றார்.

யோஹன் படம் தொடங்கும்போதே 'தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும்' என்னும் படத்தினை தயாரிக்கிறார் கவுதம் மேனன். பிரேம் சாய் என்ற புதிய இயக்குனர் இயக்க இருக்கிறார். ஜெய் மற்றும் ரிச்சா தமிழிலும், நிதின் மற்றும் ரிச்சா தெலுங்கிலும் நடிக்கிறார்கள். தெலுங்கில் இந்தப் படத்துக்குப் பெயர் 'கூரியர் பாய் கல்யான்'!

 

பவர் ஸ்டார் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!

Power Star Srinivasan Vs Gobinath

பேஸ்புக், இணையதளம், ப்ளாக்ஸ் என எதை பார்த்தாலும் ஒரே பவர்ஸ்டார் மயம்தான். 'பவர்ஸ்டார்' பெயரை தேடுபொறியில் போட்டாலே டிராபிக் ஆகும் அளவிற்கு ஒரே நாளில் புகழின் உச்சிக்கு ! சென்று விட்டார் அவர். அப்படி என்ன செய்து இப்படி ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார் பவர்ஸ்டார் என்று கேட்கிறீர்களா? அதிகமில்லை ஜென்டில்மேன். ஒரே ஒரு நாள் 'நீயா நானா' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றதுதான் அவர் செய்த காரியம். இது எல்லோரும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிதானே? இதில் அப்படி என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா?

போலி கவுரவம் பற்றி பேசப்பட்ட அந்த நிகழ்ச்சியில் வழக்கம்போல கோட் போட்ட கோபிநாத் சிறப்பு விருந்தினராக வந்த பவர்ஸ்டார் சீனிவாசனை கேள்வி மேல் கேட்டார்.

போலி கவுரவம் அவசியமா? என்ற கேள்விக்கு பதில் கூறிய சீனிவாசன், எனக்கு போலி கவுரவத்தில் நம்பிக்கை இல்லை என்றார். உடனே அடுத்த தாக்குதலை தொடுத்த கோபிநாத் அப்புறம் எதற்கு கேமராவுடன் 11 பேர் கொண்ட குழுவாக வருகிறீர்கள் என்று கேட்டார்.

பவர்ஸ்டார் அதற்கெல்லாம் சளைக்கவில்லை. நான் இதை விரும்பாவிட்டாலும் என்னுடைய ரசிகர்கள் இதை விரும்புகிறார்கள். அதனை என்னால் தடுக்க முடியாது என்று கோபிநாத் வீசிய பந்தை சிக்சருக்கு மாற்றினார் சீனிவாசன்.அவருக்கு 50 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்களாம். அதற்காகவே கலை சேவை செய்ய வந்ததாக கூறினார் பவர்ஸ்டார்.

நீங்கள் டாக்டராகவே இருந்திருக்கலாமே? ஏன் நடிக்கவந்தீர்கள் என்ற கோபிநாத்தின் கேள்விக்கு பதிலளித்த சீனிவாசன், இதில்தான் புகழ் கிடைக்கிறது அதனால்தான் நடிக்க வந்தேன் என்றார். அவர் சொல்வதும் நியாயம்தான் !

இன்னொரு விருந்தினராக வந்திருந்த செல்வ புவியரசு என்பவர் கோபி ஏற்பாடு செய்த ஆள் போலவே பேசினார்.பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு கலை குறித்த அடிப்படை அறிவே இல்லை என்று அவரை அவமானப்படுத்தினார். அத்தனை தாக்குதல்களுக்கும் பவர்ஸ்டார் கன்னியமாகவே பதில் அளித்தார்.முதலில் போலி கவுரவம் வேண்டாம் என்று சொன்னவர் பின் போலி கவுரவம் வேண்டும் என முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிந்தோ தெரியாமலோ அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கோபிநாத், உங்க சொந்த முகத்தை மக்களுக்கு காட்ட நினைக்கிறேன் என்று திரும்ப திரும்ப கூறிவிட்டு கடைசியில் தன்னுடைய சொந்த முகத்தை லட்சோபலட்சம் ரசிகர்களுக்கு காட்டிவிட்டார் என்றே தெரிகிறது. இதில் ஒரு விசயம் என்னவென்றால் நேற்றுவரை கோபிநாத்தின் ரசிகர்களாக இருந்த பலரும் இந்த நிகழ்ச்சியை பார்த்த பின்னர் பவர் ஸ்டார் சீனிவாசனின் ரசிகர்களாக மாறிவிட்டதாக இணையதளத்தில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

பத்து பதினைஞ்சு நிகழ்ச்சியில பேசுனவங்க எல்லாம் பேசாம இருக்கிறப்ப ஒரே ஒரு நிகழ்ச்சியில பேசி ஓஹோன்னு பேர் வாங்கிட்டு போயிட்டார் பவர் ஸ்டார் ( இதை சந்தானத்தின் வாய்ஸ்ல படிக்கவும்).

 

'பிரபுதேவா நீங்க எதுக்கு சென்னைக்கு போறீங்க?'

Prabhu Deva Delights Over Rowdy Rat

பிரபுதேவா இயக்கத்தில் வெளியான இரண்டாவது இந்திப் படம் ரவுடி ரத்தோருக்கு ஏக வரவேற்பு. இந்த வாரம் அந்தப் படத்தின் வசூல் ரூ 100 கோடியை எட்டிவிட்டதாம்.

அக்ஷய் குமார் - சோனாக்ஷி சின்ஹா நடித்த இந்தப் படம் இரண்டாவது வாரத்தில் மட்டும் ரூ 22 கோடி ஈட்டியுள்ளது.

இதன் மூலம் ரூ 100 கோடி வசூல் பட இயக்குநர்கள் பட்டியலில் பிரபுதேவா இடம்பெற்றுவிட்டார்.

இதுகுறித்து பிரபல இந்திப் பட விமர்சகர் தரண் ஆதர்ஷ் கூறுகையில், "மல்டிப் ப்ளெக்ஸ், ஒற்றைத் திரை அரங்குகள் என்ற பேதமின்றி, எங்கும் நல்ல வசூலைப் பெற்று வருகிறது ரவுடி ரத்தோர். இந்த வார இறுதி நிலவரப்படி ரூ 101.5 கோடி வசூல் குவிந்துள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏஆர் முருகதாஸ், சித்திக் ஆகியோருக்குப் பின் ரூ 100 கோடி வசூலைக் குவித்த படம் தந்த மூன்றாவது தென்னிந்திய இயக்குநர் பிரபு தேவாதான்.

ஏற்கெனவே இவர் சல்மான்கானை வைத்து இயக்கிய வான்டட் படமும் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், பிரபு தேவாவைத் தேடி பாலிவுட் வாய்ப்புகள் குவிகின்றனவாம். தமிழ், தெலுங்கிலும் ஓயாமல் அழைப்பு வந்தவண்ணம் உள்ளதாம். இதுபற்றிக் கேள்விப்பட்ட அக்ஷய் குமார் பிரபுதேவாவிடம் சொன்னது, "ஏன் நீங்க சென்னைக்குப் போறீங்க... மும்பையிலேயே செட்டிலாயிடுங்க", என்றாராம்.

பிரபுதேவாவுக்கும் அந்த யோசனை பலமாகவே இருக்கிறதாம்!

 

அஜீத்தின் பில்லா 2: கார்த்தியின் சகுனியுடன் மோதுமா... தள்ளிப் போகுமா?

Billa 2 Vs Sakuni    | சகுனி  

முதலில் ஜூலை மாதம் 6-ம் தேதிதான் கார்த்தி நடித்த சகுனி வெளியாகும் என்றார்கள். ஆனால் திடீரென ஜூன் 22-ம்தேதிக்கு மாற்றிவிட்டார்கள். இது அஜீத் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான்.

காரணம், அன்றுதான் பில்லா 2 வெளியாகும் என்றார்கள்.

தமிழ் சினிமாவில் இரு பெரிய படங்கள் ஒரே நாளில் வெளியானதெல்லாம் அந்தக் காலம். இன்றைக்கு அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. இரண்டு பெரிய படங்களுக்கிடையே இரு வார இடைவெளியாவது தேவைப்படுகிறது.

காரணம், கிட்டத்தட்ட இருக்கிற அரங்குகளில் பாதியை பெரிய படம் எடுத்துக் கொள்வதால், சரியான இடைவெளியில் வெளியிடுவதே பாதுகாப்பானது என்ற நிலை உருவாகியிருப்பதுதான்.

எனவே சகுனி வெளியாகும் தேதியில் பில்லா 2 வெளியாகுமா... தள்ளிப் போகுமா என்று கவலையுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

நாளை மறுதினம் பில்லா 2 சென்சாருக்கு அனுப்பப்படும் என தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் அறிவித்திருந்தாலும், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் கொஞ்சம் தாமதமாகியிருப்பதால் பில்லா 2 தள்ளிப் போகலாம் என்கிறார்கள்.

இதுகுறித்து சுனிர் கேட்டர்பால் கூறுகையில், "அஜீத்துடன் இணைந்து பில்லா 2 பார்த்தேன். ஆக்ஷன் படங்களில் புதிய சாதனையை பில்லா 2 நிகழ்த்தும். அடுத்த வாரம் சென்சார் முடிந்ததும், ரிலீஸ் தேதியை உறுதி செய்கிறோம். ரசிகர்களை ஏமாற்ற மாட்டோம்," என்றார்.

விநியோகஸ்தர்கள் மத்தியிலோ, பில்லா 2 வரும் ஜூன் 21-ம் தேதியே வெளியாகிவிடும் என்ற பேச்சு நிலவுகிறது. திரையரங்குகளும் முன்பதிவுக்கு தயாராகிவருகின்றன.

இவ்வளவு பெரிய படத்தின் வெளியீ்ட்டில், ஏன் கடைசி வரை இத்தனை இழுபறி...?

 

சொந்தக் கதையை சினிமாவாக்கப் போவதாக சொன்னதும் 45 கொலை மிரட்டல்கள்! - சோனா 'திடுக்'

Sona Get 45 Life Threats   

சொந்த வாழ்க்கையை சினிமாவாக எடுப்பதாக அறிவித்ததிலிருந்து எனக்கு 45 கொலை மிரட்டல்கள் வந்துவிட்டன, என்றார் நடிகை சோனா.

கவர்ச்சி நடிகை சோனா தனது சொந்த வாழ்க்கையை சினிமாவாக எடுக்கிறார். இந்த படத்துக்காக கதை, திரைக்கதையை அவரே எழுதுகிறார். திரையுலகில் நடிகர்கள், தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட அனுபவங்கள், கசப்பான சம்பவங்களை படமாக்கப் போகிறாராம்.

இதுகுறித்து சோனா கூறுகையில், "எனது வாழ்க்கையை ஏற்கனவே பத்திரிக்கையில் தொடராக எழுதினேன். அடுத்து படமாக எடுக்கப்போகிறேன். திரையுலகின் இருட்டு பக்கங்களை இந்த படம் வெளிச்சத்துக்கு கொண்டுவரும். நிறைய சினிமா பிரபலங்களின் ரகசியங்களும் வெளிப்படுத்தும்.

என் வாழ்க்கையை படமாக்கப் போவதாக நான் அறிவித்த உடனேயே எனக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. இதுவரை 45 மிரட்டல்கள் வந்துள்ளது. ஆனால் இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.

எனது ஒவ்வொரு பகுதி வாழ்க்கையையும் பிரதிபலிக்கிற கேரக்டர்களில் நடிப்பதற்காக பொருத்தமான நடிகைகள் தேர்வு நடக்கிறது.

ஒரு பாடல் காட்சியில் 14 முன்னணி நடிகர்களை ஆட வைக்கவும் திட்டமிட்டுள்ளேன். கதாநாயகனாக பிரபல நடிகர் ஒருவரும் நடிக்கிறார்," என்றார்.

இந்தப் படத்துக்கு ஒரு சிரிப்பின் அழுகை என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளார் சோனா.

கதை, மற்றும் திரைக்கதையை சோனா எழுதுகிறார். ஒரு நடிகையின் வாக்குமூலத்தை இயக்கிய ராஜ்கிருஷ்ணா, இந்தப் படத்தை இயக்குகிறார் எனத் தெரிகிறது.

 

கெஸ்ட் ரோலில் அனுஷ்கா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கார்த்தி நடிப்பில் வெளியாக உள்ள சகுனி திரைப்படத்தில் அனுஷ்கா கெஸ்ட் ரோலில் வர உள்ளாராம். தற்போது சுராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'அலெக்ஷ் பாண்டியன்' படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் அனுஷ்காவிடம் கெஸ்ட் ரோலில் நடிக்க, இயக்குனர் ஷங்கர் தயாள் கேட்க, அனுஷ்காவும் ஒப்புக் கொண்டு நடித்துள்ளார். இது படம் ரிலீஸ் ஆகும் வரை சீக்ரெட் வைக்க வேண்டும் இயக்குனர் விரும்பினாராம். ஆனால் விஷியம் கோலிவுட் பக்கம் கசிந்துவிட்டது.


 

படப்பிடிப்பில் ஜீவா காயம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே', 'யுத்தம் செய்', 'நந்தலாலா' படங்களை இயக்கியவர் மிஷ்கின். அடுத்து 'ஸ்பைடர்மேன்' பாணியில் 'முகமூடி' என்ற சூப்பர் மேன் கதையை படமாக்கி வருகிறார். ஜீவா, பூஜா ஹெக்டே நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்துக்காக சண்டை காட்சிகளை படமாக்கிக்கொண்டிருந்தார். இந்த சண்டை காட்சியின் போது ஜீவாவிற்கு கழுத்தில் அடிப்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனை ஜீவா கொண்டு செல்லப்பட்டார். இதனையடுத்து ஜீவா சில நாட்கள் ஓய்வில் இருக்குமாறு டாக்டர்கள் கேட்டுக் கொண்டனர்.


 

கைமாறிய அஜீத் கதைக்கு சூர்யா ஹீரோ ஆனார்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அஜீத் பல படங்களை நடிக்க மறுப்பு தெரிவிக்க, அந்த படங்கள் அனைத்தும் சூர்யாவிடம் கைமாறியது. மேலும் அந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. சூர்யாவின் காக்க.. காக்க, கஜினி, மற்றும் ஆர்யாவின் நான் கடவுள் என பல படங்கள் அஜீத்திற்காக எழுதப்பட்ட கதைகள். எல்லா இயக்குநர்களின் செல்ல ஹீரோவாக மாறி வரும் சூர்யாவிற்கு தற்போது அஜீத் கைவிடப்பட்ட படத்திற்கு ஹீரோவாக நடிக்கிறார் என கோலிவுட் பக்கம் ஒரு பேச்சு நிலவுகிறது. அது என்ன படம் தெரியுமா? ,,, கௌதம் மேனனின் 'துப்பறியும் ஆனந்த்'. துப்பறியும் ஆனந்த் என்ற படத்தில் இணைவதாக இருந்த அஜீத்தும், கெளதம் மேனனும் இப்போது திடீரென பிரிந்து விட்டனர். அஜீத்துக்காக கெளதம் மேனன் தயார் செய்த கதைதான் துப்பறியும் ஆனந்த். இதில் அஜீத் துப்பறியும் நிபுணராக நடிப்பார் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சலசலப்பு காரணமாக படம் கைவிடப்பட்டது. சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பவர் எமி ஜாக்சன் நடிப்பார் என தெரிகிறது.  படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான் அமைப்பாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்!



 

சகுனி படத்துக்கு "யூ"

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் படம், 'சகுனி'. கார்த்தி, பிரணீதா, பிரகாஷ்ராஜ், சந்தானம் நடிக்கிறார்கள். படத்திற்கு தணிக்கை குழு 'யூ' சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் பற்றி இயக்குனர் என்.ஷங்கர் தயாள் கூறியதாவது: 'சகுனி' அரசியல் படம் அல்ல. அரசியலை விமர்சிக்கும் படமும் இல்லை. ஹீரோ சந்திக்கின்ற நபர்கள் அரசியல் தொடர்பானவர்களாக இருப்பார்கள். பிரகாஷ் ராஜ், ராதிகா, கோட்டா சீனிவாசராவ் ஆகியோர் அரசியல்வாதிகளாக நடித்துள்ளனர். இந்த கதைக்கு அரசியல் களம்தான் சரியாக இருக்கும் என்பதால் அரசியல் பின்னணியை வைத்திருக்கிறோம். எல்லாவற்றையும் காமெடியாகவே சொல்கிறோம். ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் நிறைந்த கமர்சியல் படம். கார்த்தியின் மாஸ் ஆடியன்ஸை மனதில் கொண்டு அவர்களை திருப்திப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இம்மாத இறுதியில் படம் வெளியாகும். இவ்வாறு கூறினார்.


 

இளையராஜா இசையில் டிஜிட்டலில் மீண்டும் வரும் 'காமராஜ்'!

Kamaraj Movie Be Re Released On His Birth Anniversary

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு, 'காமராஜ்' என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு, 2004-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் அ. பாலகிருஷ்ணன் தயாரித்து இயக்கிய இந்தப் படம், 2004-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் விருதை பெற்றது. இப்போது அந்த படம், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு, பல புதிய காட்சிகளோடு மீண்டும் திரைக்கு வருகிறது.

காமராஜரின் 110-வது பிறந்ததினமான ஜுலை 15-ல் திரையிடவிருக்கிறார்கள்.

இதுகுறித்து இயக்குநர் அ பாலகிருஷ்ணன் கூறுகையில், "காமராஜர் இந்திய விடுதலைக்காக, காந்தியின் வழி நின்று 9 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். மூன்று முறை முதல்வராக இருந்து பொற்கால ஆட்சியைத் தந்தவர். இரண்டு முறை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்து, நாடு முழுவதும் புகழ் பெற்றவர். பாரத ரத்னா விருது பெற்றவர்.

காந்தியவாதியான இவர், இறுதிக்காலம் வரை வாடகை வீட்டில் வாழ்ந்தவர். அவர் மறைந்தபோது அவரிடம் இருந்த சொத்து ரூ.110 மட்டுமே.

தற்போது நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கியுள்ளன. அது, இளைஞர்கள் மத்தியில் மாற்று அரசியல் குறித்த சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் காமராஜரின் நேர்மை, எளிமை, அரசியல் ஆளுமை, நிர்வாக செயல்பாடுகள் குறித்து இன்றைய இளைஞர்கள் அறியும்போது, அது அவர்களுக்கு சிறந்த அரசியல் வழிகாட்டியாக அமையும். நாட்டை வழிநடத்த உதவும்.

இதற்கென தற்போது புதிதாக 15 காட்சிகள் கணினி வரைகலை (கிராபிக்ஸ்) துணையுடன் படமாக்கப்பட்டு வருகிறது. காமராஜரின் ரஷ்யப் பயணம் இணைக்கப்பட்டுள்ளது. நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன், டி.டி.எஸ். ஒலி அமைப்பு மற்றும் புதிய பரிமாணத்துடன் இளையராஜா இசையில் உருவாகி வருகிறது.

ஜுலை 15-ந் தேதி இந்தப் படம் மீண்டும் திரைக்கு வரும்,'' என்றார்.

 

முகமூடி... நடிகர் ஜீவா கழுத்தில் பலத்த அடி!

Actor Jeeva Injured At Mugamoodi Sets   

சென்னை: 'முகமூடி' படத்தின் சண்டை காட்சியில் நடித்தபோது, நடிகர் ஜீவாவுக்கு கழுத்தில் பலத்த அடிபட்டது. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு, ஜீவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மிஷ்கின் இயக்க, யுடிவி தயாரிக்கும் புதிய படம் முகமூடி. சூப்பர் மேன் வகை கதை இது. முழுக்க முழுக்க ஆக்ஷன் சாகஸக் காட்சிகள் நிறைந்தது.

சண்டை காட்சிகளை படமாக்குவதற்காக ஹாங்காங்கில் இருந்து ஸ்டண்ட் மாஸ்டர் டோனி நூம் தலைமையில் 5 ஸ்டண்ட் வீரர்கள் சென்னை வந்தார்கள்.

சென்னை சாந்தோமில் உள்ள ஒரு பள்ளியில், கடந்த 30 நாட்களாக தினமும் இரவில், 'முகமூடி' படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. நேற்று முன்தினம் இரவில் தொடங்கிய படப்பிடிப்பு நேற்று அதிகாலை வரை நடந்தது.

வில்லனாக நடிக்கும் நரேன் மற்றும் அவருடைய கோஷ்டியுடன் ஜீவா மோதும் குங்பூ சண்டை காட்சி படமாகிக் கொண்டிருந்தது. அதிகாலையில் படப்பிடிப்பு முடிவடையப்போகும் நேரத்தில், ஜீவா கழுத்தில் பலத்த அடிபட்டது. ஒரு ஸ்டண்ட் நடிகர் தனது காலினால் ஜீவாவை ஓங்கி உதைப்பது போன்ற காட்சியில், தவறுதலாக நிஜமாகவே ஜீவா கழுத்தில் உதைத்துவிட்டார். இதனால் கழுத்து திருப்பிக் கொண்டது.

வலியினால் துடித்த ஜீவா உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

ஜீவாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். உள்காயம் அதிகமிருப்பதால், அவரை ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

 

சோனாவை நம்பி 'சோக்காலி'!

Sona Sokkali

படம் ரிலீஸ் ஆகிறதோ இல்லையோ... நாளொரு பரபரப்பு செய்தி தன்னைப் பற்றி வெளியாகுமாறு பார்த்துக் கொள்வதில் பவர் ஸ்டாருக்கே குரு சோனாதான்.

இன்றைய முன்னணி நாளிதழ் ஒன்றில், அவர் உள்ளாடை அணியாதது கூட செய்தியாகும் அளவுக்கு பரபரப்பைக் காப்பாற்றிக் கொள்வதில் கவனமாக இருக்கிறார் சோனா.

அதற்கு கைமேல் பலனும் கிடைத்து வருகிறது.

எஸ்பிபி சரண் விவகாரத்துக்குப் பிறகு வாய்ப்பின்றிக் கிடந்தவருக்கு, இப்போது வரிசையாக வாய்ப்புகள். பிஸினஸும் பிக்கப் ஆகிவிட்டதாம் (ஃபேஷன் கடைங்க!).

விரைவில் வரவிருக்கும் புதிய படம் சோக்காலியில் சோனாவுக்கு மிக முக்கிய வேடமாம். இதில் அவர் போதும் போதும் என்ற அளவுக்கு கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறாராம். இவருக்குப் போட்டியாக இல்லை என்றாலும், கூடுதல் கவர்ச்சிக்கு பாபிலோனா வேறு.

சோக்காலி ஒரு ப்ளே பாய் கதை என்பதால், அதற்கேற்ற மாதிரி தாராளம் காட்டியிருப்பதாகவும், இயக்குநர் கேட்டிருந்தால் இன்னும் கூட தாராளமாக நடித்திருப்பேன் என்றும் தெரிவித்தார் சோனா.

அப்படி என்ன கதை?

மீடியா வெளிச்சத்தில் பிரபலமாகத் திகழும் ஒரு ப்ளே பாய், அந்த பாப்புலாரிட்டியை வைத்து எப்படியெல்லாம் பெண்களைச் சீரழிக்கிறான்... பின்னர் அதில் எப்படி சிக்கிக் கொள்கிறான் என்பது கதையாம்.

ஏ சரணா என்ற புதியவர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இசையமைத்துள்ளார் எஸ் ஏ ராஜ்குமார்.

சைதன்யா, ஜெ ராம் என புது ஹீரோக்கள், சுவாசிகா, ரித்து என புதிய நாயகிகள்... இவர்களைக் காப்பாற்றத்தான் சோனா!

 

விண்ணைத்தாண்டி வருவாயாவை விட அதிக விலைக்குப் போன நீதானே என் பொன்வசந்தம்!

Sony Music Acquires Neethane Enn Ponvasantham   

இசைஞானி இளையராஜா இசையில் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ள நீதானே என் பொன்வசந்தம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியது.

சமீபத்தில் எந்தப் பட இசைக்கும் தராத மிகப் பெரிய விலையை நீதானே என் பொன்வசந்தத்துக்கு கொடுத்துள்ளது சோனி.

கவுதம் மேனன் இயக்கத்தில், ஆர் எஸ் இன்போடெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், ஜீவா - சமந்தா நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகிறது.

இளையராஜா இசை என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே, இந்தப் படத்துக்கு ஏக எதிர்ப்பார்ப்பு. படத்துக்காக வெளியான இசை முன்னோட்டம் அந்த எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியது.

ரூ 2.5 கோடிவரை இந்தப் படத்தின் இசை உரிமைக்கு விலை தர சோனி நிறுவனம் முன்வந்ததாகக் கூறப்பட்டது. இது ரஹ்மான் இசையில் வந்த விண்ணைத் தாண்டி வருவாயாவை விட மிக அதிகம்.

இந்த நிலையில், சோனிக்கு நீதானே என் பொன்வசந்தம் இசை உரிமை விற்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூலை 1-ம் தேதி இசை வெளியீடு பிரமாண்டமாக நடக்கவிருப்பதாக கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.