சென்னை: பீட்சா, ஜிகர்தண்டா படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்தப் படத்திற்கு வைத்திற்கும் தலைப்பு என்னவென்று தெரியுமா? அவியல்.
தொடர்ந்து வித்தியாசமான படங்களைக் கொடுத்து வரும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ஸ்டோன் பெஞ்ச் என்ற பெயரில் சொந்தப் படநிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.
இந்த நிறுவனத்தின் சார்பாக பெஞ்ச் டாக்கீஸ் என்ற பெயரில் 6 குறும்படங்களை ஒன்றிணைத்து ஒரு திரைப்படமாக வெளியிட்டார், இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக 5 குறும்படங்களை ஒன்றிணைத்து ஒரு திரைப்படமாக வெளியிடவிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ், இதற்காக ரசிகர்களிடம் தலைப்பு கேட்டு ஒரு போட்டி ஒன்றையும் நடத்தியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
இவரது படத் தலைப்புகள் பீட்சா, ஜிகர்தண்டா என்று உணவு சார்ந்தே இருப்பதால் ரசிகர்களும் உணவுப் பெயர்களின் பெயர்களையே தலைப்புகளாக அனுப்பி இருக்கின்றனர்.
வந்து குவிந்த தலைப்புகளில் இருந்து அவியல் என்ற தலைப்பை தேர்ந்தெடுத்து இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ், இந்தத் தலைப்பை திருச்சி வாசகர் ராஜ்குமார் என்பவர் அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்த முறை உலமெங்கும் இதனை வெளியிட இருப்பதால் அதிக உழைப்பு, அதிக சிரிப்பு, அதிக பொழுதுபோக்கு கலந்து இருக்கும் என்று உறுதிமொழி கொடுக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
உங்கள் அபிமானத் திரையரங்குகளில் விரைவில் வெளியாக இருக்கிறது அவியல்....