2/3/2011 3:51:33 PM
‘ஆடு புலி’ இம்மாதம் ரிலீஸ்
2/3/2011 3:51:33 PM
விஜய்யுடன் சண்டை போட தயார்...
2/3/2011 3:58:10 PM
திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் :நயன்
2/5/2011 11:56:55 AM
திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா கூறியுள்ளார். பிரபுதேவா இயக்கிய 'வில்லு' படத்தில் நடித்தார் நயன்தாரா. அப்போது இருவரும் காதல் வயப்பட்டனர். இதை பிரபுதேவாவின் மனைவி ரமலத் எதிர்த்தார். பின்னர் விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்து, இருவரும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஜுன் மாதம் இதற்கான தீர்ப்பு வருகிறது. இதையடுத்து அதே மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். தற்போது, 'ராமராஜ்யம்' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த படத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலக அவர் முடிவு செய்துள்ளார். இதுபற்றி ஐதராபாத்தில் நயன்தாரா கூறியதாவது:
இனி, சினிமாவில் நடிக்க வேண்டாம் என பிரபுதேவா கூறியிருக்கிறார். அதனால் திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன். 'ராமராஜ்யம்' படம் தான் கடைசி படம். இதில் சீதையாக நடித்து வருகிறேன். சினிமா வாழ்வில் இந்த கேரக்டரில் நான் நடித்ததை மறக்க முடியாது. பிரபுதேவாவுக்கும், எனக்கும் தகராறு நடப்பதாக செய்திகள் வருவதில் உண்மையில்லை. எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. இப்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். திருமணத்துக்கு பின் நல்ல மனைவியாக இருக்க விரும்புகிறேன். இவ்வாறு நயன்தாரா கூறியுள்ளார்.
இயக்குனர் மித்ரன் ஜவஹர் ரகசிய திருமணம்
2/5/2011 11:59:53 AM
இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹர் ரகசிய திருமணம் செய்துகொண்டார். 'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கியவர், மித்ரன் ஆர்.ஜவஹர். திருச்சியை சேர்ந்த இவர், சென்னை நெசப்பாக்கத்தில் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ஜபீன் பானு. இவரது தந்தை புல்லட் பாபு, சினிமா ஸ்டண்ட் காட்சிகளுக்கு ஸ்பெஷல் எபெக்ட் செய்பவர். இருவீட்டு பெற்றோர்கள் சம்மதத்தின் பேரில் மித்ரன் ஜவஹருக்கும், ஜபீன் பானுவுக்கும் கடந்த மாதம் 5&ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து இவர்களின் திருமணம், கடந்த 2ம் தேதி சென்னை ஆல்பட் தியேட்டர் அருகிலுள்ள சிராஜ் மஹாலில் நடந்தது. இயக்குனர் ஷங்கர், பிரசன்னா, விவேக், விஜய் ஆண்டனி ஆகியோர் கலந்து கொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி, இன்று இரவு 7.30 மணியளவில், வடபழனியிலுள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறுகிறது. திடீர் திருமணம் குறித்து, தினகரன் நிருபரிடம் மித்ரன் ஜவஹர் கூறுகையில், 'இது காதல் திருமணமோ, ரகசிய திருமணமோ கிடையாது. குறுகிய காலத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதால், யாரையும் அழைக்க முடியவில்லை' என்றார்.
ஜீவிதா இயக்கத்தில் மீண்டும் ராஜசேகர்
2/5/2011 12:01:37 PM
'என் மனைவி ஜீவிதா இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறேன்' என்றார் டாக்டர் ராஜசேகர். இதுகுறித்து அவர் கூறியதாவது: நேற்று என் பிறந்த நாள். வழக்கமாக சென்னை வருவேன். ஜீவிதா இயக்கும் படத்தின் ஷூட்டிங் நடப்பதால், இம்முறை வர முடியவில்லை. 'சேது'வின் தெலுங்கு ரீமேக்கான 'சேஷு', 'எவடைதே நாக்கேன்டி', 'உடம்பு எப்படி இருக்கு', 'சத்யமேவ ஜெயதே' படங்களில் ஜீவிதா டைரக்ஷனில் நடித்தேன். இப்போது 'மஹன்காளி'யில் நடிக்கிறேன். ஆந்திராவில் பிரபலமான கடவுள் பெயரில் தயாராகும் இப்படம், தமிழிலும் உருவாகிறது. இதற்கு 'மாகாளி' என்று பெயரிட்டுள்ளோம். நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் ஆபீசராக நடிக்கிறேன். இன்றைய சமூக பிரச்னைகளை சொல்கிறோம். தமிழகத்தை சேர்ந்த நான், தமிழில் 'புதுமைப்பெண்' மூலம் அறிமுகமானேன். ஆனால், தெலுங்கில் செட்டிலாகி விட்டேன். நேரடி தமிழ் படத்தில் ஹீரோவாக நடித்து, நானே தமிழில் டப்பிங் பேசி நடிக்க ஆசை. அது எப்போது நிறைவேறும் என்று தெரியவில்லை.
பெங்காலி படம் இயக்குகிறார் சாயாசிங்
2/5/2011 12:03:03 PM
பெங்காலி படத்தை இயக்கி, ஹீரோயினாக நடித்து வருகிறேன் என்றார் சாயாசிங். 'அனந்தபுரத்து வீடு' படத்துக்குப் பிறகு சாயா சிங்குக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லை. இப்போது அவர் பெங்காலி படத்தை இயக்கி வருகிறார். இதுபற்றி சாயா சிங் கூறியதாவது: சினிமாவில் நடிகையாக, வழக்கமான காதலையும் டான்சையும் மட்டுமே செய்து வந்தேன். அதனால், தேடி வந்த சில வாய்ப்புகளை மறுத்துவிட்டேன். சினிமாவில், நடிப்பின் அடுத்தக் கட்டமாக டைரக்ஷனை பார்க்கிறேன். இதில் எனது திறமையை நிரூபிக்க வேண்டும். படம் இயக்குவது சிறப்பாக இருக்கிறது. இது என் கனவு என்று கூட சொல்லலாம். என் கனவு நிறைவேற இப்போதுதான் நேரம் வந்திருக்கிறது. இதில் நானே ஹீரோயினாக நடிக்கிறேன். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தொடர்ந்து படம் இயக்குவேனா என்பது தெரியாது. கன்னடத்தில் சில வாய்ப்புகள் வந்துள்ளது. அங்கு நடிப்பேன். இவ்வாறு சாயா சிங் கூறினார்.
பெண்களுக்கு சீடனை சமர்ப்பிக்கிறேன் :தனுஷ்
2/5/2011 12:04:48 PM
மித் புரொடக்ஷன்ஸ் சார்பில் அமித் மோகன் தயாரிக்கும் படம், 'சீடன்'. தனுஷ், கிருஷ்ணா, அனன்யா நடிக்கின்றனர். சுப்ரமணியம் சிவா இயக்குகிறார். இப்படத்தில் நடித்தது குறித்து, நிருபர்களிடம் தனுஷ் கூறியதாவது: மலையாளத்தில் வந்த 'நந்தனம்' படத்தின் ரீமேக் இது. ஏற்கனவே சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் 'திருடா திருடி' படத்தில் நடித்தேன். இப்போது 'சீடன்' படத்தில் சிறப்பான தோற்றத்தில் நடித்துள்ளேன். இதில் நான் ஹீரோ இல்லை. கிருஷ்ணா ஹீரோ, அனன்யா ஹீரோயின். படம் முழுவதும் வருவேன். 25 நாட்களுக்கு மேல் கால்ஷீட் கொடுத்து நடித்துள்ளேன். 40 நிமிடம் என் காட்சிகள் இடம்பெறும். பாடல் கூட இருக்கிறது. இதில் முதல்முறையாக சமையல்காரன் வேடத்தில் நடிக்கிறேன். இப்படத்தை பெண்களுக்கு குறிப்பாக, என் அம்மா, மனைவி ஐஸ்வர்யா, லதாம்மா போன்றோருக்கு சமர்ப்பிக்கிறேன். அனைவரையும் கவரும் வகையில் ஒவ்வொரு காட்சியும் ஜனரஞ்சமாக இருக்கும். இவ்வாறு தனுஷ் கூறினார்.
புதுமுக இயக்குனர்களிடம் கதை கேட்கும் கார்த்தி!
2/4/2011 5:23:03 PM
சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘சிறுத்தை’ கார்த்திக்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது. காமெடி காட்சிகளில் கார்த்தியின் வளர்ச்சி வியக்க வைக்கிறது. அதுமட்டுமின்றி புதுமுக இயக்குனர்களுக்கு கார்த்தி சிறப்பான வரவேற்பு அளிப்பதாக கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. அடுத்த படத்துக்காக சில புதுமுக இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார் கார்த்தி.
தனுஷுக்கும் இயக்குனருக்கும் மோதலா?
2/4/2011 3:02:04 PM
தனுஷ் கவுரவ வேடத்தில் தோன்றும் படம் 'சீடன்'. மலையாளத்தில் ரிலீஸான 'நந்தனம்' ரீமேக்கான இதை சுப்ரமணியம் சிவா இயக்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, இயக்குனர் சுப்ரமணியம் சிவாவிற்கும், தனுஷக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தனுஷ் அதை மறுத்துள்ளார். மேலும், சிலர் சொல்வது போல் இதில் எனக்கு கவுரவ வேடம் இல்லை, ஒரு மணி நேரம் வரை வருகிறேன். ஒரு பாடல்கூட இருக்கிறது எனக் கூறினார். ஆனால் சிறப்பான தோற்றத்தில் தனஷ் என்ற அடைமொழியோடு இவரது படத்தைப் போட்டுதான் விளம்பரமே செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமீர் இயக்கத்தில் விஜய்?
2/4/2011 3:09:43 PM
பருத்தி வீரன் படத்திற்கு மீண்டும் அமீர் இயக்கும் ‘ஆதிபகவான்’ படத்தில், ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சுதா சந்திரன், தெலுங்கு நடிகை கருணா நடிக்கின்றனர். ஜெ.அன்பழகன் தயாரிக்கிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார். இதையடுத்து இளைய தளபதி விஜய்யை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் விஜய்யை சந்தித்த அமீர் அவரிடம் கதையொன்றை கூறியிருக்கிறார். விஜயக்கு கதை பிடித்திருக்கிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது விஜய் வேலாயுதம், நண்பன் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் சரண்யா மோகன்
2/4/2011 3:32:41 PM
ஏற்கனவே தெலுங்கில் நடித்த சரண்யா மோகன், மீண்டும் அங்கு நடிக்க வந்த அழைப்புகளை மறுத்திருக்கிறார். தமிழில் நல்ல இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே ஆசை. அதற்காக, தாய்மொழி மலையாளத்தில் கூட புதுப்படம் ஏற்கவில்லையாம். 'வேலாயுதம்' படத்தில் மீண்டும் தங்கையாக, விஜய்யுடன் நடித்து வருகிறார். இதனால், ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமே என்ற கவலை இல்லை என்கிறார். ஓய்வு நேரத்தில் 'வெண்ணிலா கபடி குழு', 'யாரடி நீ மோகினி' படங்களை மீண்டும் மீண்டும் பார்க்கிறாராம். மூன்று வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொள்வாராம்.
கதையுடன் இணைந்த நகைச்சுவைக்கே முக்கியத்துவம்
2/4/2011 3:39:14 PM
பிஸியாக இருக்கிறார் சந்தானம். எல்லா படத்திலும் ஒரே மாதிரி கெட்டப் இல்லாமல் பார்த்துக் கொள்கிறாராம். எந்த கேரக்டருக்கு எந்த மாதிரி வசனம் பேசினால் பொருத்தமாக இருக்கும் என்று யோசிக்கும் அவர், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டால், தனியாக அமர்ந்து, ஒவ்வொரு காட்சிக்கும் இயக்குநர் கொடுத்த வசனத்துடன் தனது ஆலோசனையை சேர்த்து எழுதுகிறார். அதற்கு இயக்குநரும் உடன்பட்டால், அந்த காமெடியை செய்கிறார். தனி டிராக்காக இல்லாமல், கதையுடன் இணைந்த நகைச்சுவைக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்.
ஹீரோயின் கனவு
2/4/2011 3:41:53 PM
கோலிவுட்டில் ஹீரோயினாக நடிக்கும் கனவில் சென்னை வந்த மும்பை வரவு சஞ்சனா, 'ரேனிகுண்டா'வில் ஹீரோயினுக்கு அக்காவாக நடித்தார். பிறகு 'மறுபடியும் ஒரு காதல்', 'கோ', 'கஜன்' படங்களில் ஒரு பாடலுக்கு ஆடினார். 'ரதம்' படத்தில் தலைவாசல் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில், அவரது ஹீரோயின் கனவு நிறை வேறியுள்ளது. 'விலை'யை தொடர்ந்து காமராஜ் இயக்கும் படத்தில், ஹீரோயினாக நடிக்கிறார். இதில் ஹீரோயினாகி விட்டதால், இனி சஞ்சனா ஒரு பாடலுக்கு ஆட மாட்டாராம்.
பென்சில் அசின்...
2/4/2011 3:44:42 PM
'காவலன்' படத்தில் பென்சில் மாதிரி ஒல்லியாக இருக்கிறீர்களே… என்றதும் பொங்கிவிட்டார் அசின். 'இந்தி படத்தில் நடிப்பதற்காக உடல் மெலிந்திருக்கிறேன். பாலிவுட் ரசிகர்களுக்கு ஸ்லிம்மாக இருந்தால்தான் பிடிக்கும். ரீமேக் படத்தில் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். தெலுங்கில் நான் நடித்த படம், தமிழில் 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி'யாக ரீமேக் ஆனது. இரண்டிலும் நான்தான் ஹீரோயின். தமிழில் நடித்த 'கஜினி' இந்தியில் ரீமேக் ஆனபோது, அதிலும் நானே நடித்தேன். தமிழில் வந்த 'காக்க காக்க' தெலுங்கில் ரீமேக் ஆனபோது, ஜோதிகா கேரக்டரில் நடித்தேன். மலையாளத்தில் 'பாடிகார்ட்' தயாரானபோது, முதலில் என்னை கேட்டனர். இந்தியில் பிஸியாக இருந்ததால் முடியவில்லை. பிறகு அதன் ரீமேக்கான 'காவலன்' படத்தில் நடித்தேன். தெலுங்கு 'ரெடி', தமிழில் 'உத்தமபுத்திரன்' பெயரில் ரிலீசானது. இப்போது இந்தியிலும் உருவாகிறது. அதில் சல்மான் ஜோடியாக நடிக்கிறேன். ரீமேக் படங்களில் வாய்ப்பு வருவது தானாக அமைவதுதான். நானாக விரும்பி ரீமேக் படங்களில் நடிக்கவில்லை' என்கிறார் அசின்.
ரீமேக்கில் குறைகளை சரி செய்யும் சித்திக்!
2/4/2011 5:16:54 PM
மலையாள பட உலகின் முன்னணி இயக்குனரான சித்திக் தமிழிலும் அசத்தி வருகிறார். தன்னுடைய படங்கள் காமெடி காட்சிகளை சூப்பராக அமைத்து கடைசியில் சென்டிமேன்ட்டையும் அழகாக சேர்த்துவிடுவார் சித்திக்க. தற்போது விஜய் வைத்து காவலன் ஹிட் படத்தை கொடுத்த சித்திக், வழக்கமான குணம் ஒன்றை பின்பற்றி வருகிறார். அதாவது தன்னுடைய படங்கள் வேறுமொழிகளில் ரீமேக் எடுக்கும்போது முந்தைய படத்திலிருந்த குறைகளை சரி செய்து கொள்வாராம் டைரக்டர் சித்திக்.