நான் போட்டதெல்லாம் ஒரு சண்டையா... எல்லையில் ராணுவத்தினர் போடுவதே பெருமைக்குரிய சண்டை! - அஜீத்


எந்த மீடியாவைத் திருப்பினாலும் அஜீத்தின் பில்லா 2 செய்திகள்தான். படத்தின் விற்பனை, அஜீத்தின் சண்டைக் காட்சிகள், பிரமாண்ட ரிலீஸ் குறித்துதான் பலரும் பேசுகிறார்கள். இன்னொரு பக்கம் படத்தைப் பற்றி பேச மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே, முன்னணி இதழ்களுக்கு பேட்டிகள் தர ஆரம்பித்துள்ளார் அஜீத்.

இப்படத்தில் ஆபத்தான ஹெலிகாப்டர் சண்டை காட்சியொன்றில் அஜீத் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளது பற்றி நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். அஜீத்தின் இந்த த்ரில் பைட் அவரது ரசிகர்களுக்கு பெரும் ஷாக் தருவதாக இருந்தது. ஆனால் இந்த ரிஸ்க்கான பைட் குறித்து அஜீத் என்ன சொல்கிறார் தெரியுமா...?

"ஹெலிகாப்டர் சண்டை காட்சியில் நான் உயிரை பணயம் வைத்து சண்டை போட்டது பெரிதாக பேசப்படுகிறது. இதற்கான பெருமை மொத்த படக் குழுவினரையும் சேரும். இந்த சண்டைக்காட்சியை படமாக்கிய ஜெர்மன் ஸ்டன்ட் மாஸ்டர் ஸ்டிபன் ரிச்டருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

வாங்குகிற சம்பளத்துக்கு வேலை செய்கிறேன். எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன ராணுவ வீரர்களை விட பெரிதாக சாதித்து விடவில்லை. ராணுவ வீரர்கள் தான் நிஜ ஹீரோக்கள். அவர்கள் சண்டைதான் பெருமைக்குரியது.

என் படங்கள் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. படம் எப்படிப்பட்டது என்று ரசிகர்கள் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்.

நான் தேர்வு செய்யும் கதைகள் இயக்குனர், தயாரிப்பாளருக்கும் பிடித்து இருக்க வேண்டும். மூவரையும் கதை கவர்ந்தால்தான் படம் சிறப்பாக வரும். நல்ல கதை சொல்பவர்கள் எல்லோரும் சிறந்த இயக்குனர்கள் என்று கூறிவிட முடியாது. அது போல் கதை சொல்ல தெரியாதவர்கள் கூட சிறந்த இயக்குனர்களாக இருப்பார்கள் என் அனுபவம் மூலம் இதை உணர்ந்துள்ளேன்," என்றார்.
Posted by: Shankar
 

சொந்த அனுபவங்களை படமாக்கப் போறேன் - சோனா போடும் 'எம்டன்' குண்டு!


சினிமா நடிகைகள் தங்களின் சொந்தக் கதைகளை உள்ளது உள்ளபடி படமாக எடுத்தால் எப்படி இருக்கும்? பல முக்கியப் புள்ளிகள் பதுங்க வேண்டிய அளவுக்கு படு ஹாட்டாகவே இருக்கும்.

அட, அதில் 10 பர்சென்ட் உண்மையிருந்தால் கூடப் போதும், படம் ஆயுசுக்கும் வெளியாக முடியாத அளவுக்கு கேஸ் போட்டுவிடுவார்கள். இந்த நிலையில், சோனா போன்ற கவர்ச்சி ப்ளஸ் கான்ட்ராவர்சி நடிகைகள் சொந்தக் கதையை படமாக்கினால் என்ன ஆகும்?

அந்த கூத்துக்களையும் பார்க்க ஒரு வாய்ப்பு காத்திருக்கிறது.

ஆம்... சோனா சொந்தப் படம் எடுக்கப் போகிறார், அதுவும் தன் சொந்த வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை வைத்து, அதையும் அவரே இயக்கப் போகிறாராம்!

இதுகுறித்து அவர் கூறுகையில், "என் வாழ்க்கையில் நிறைய சம்பவங்கள் நடந்து விட்டன. அவற்றை சினிமா படமாக எடுக்க முடிவு செய்துள்ளேன். அந்த படத்தை நானே இயக்கப் போகிறேன். வேறு யாரையும் வைத்தால் நான் நினைப்பதை சொல்ல முடியாமல் போகும்.

இதற்காக உடல் எடையை குறைத்து, கொஞ்சம் சிக்கென்று ஆகியுள்ளேன். யுனிக் நிறுவனத்தை தொடர்ந்து பரபரப்பாக நடத்தி வருகிறேன்.

சமீபத்தில் பேஷன் டிசைனர் சிட்னி ஸ்லேடனுடன் இணைந்து ஷோ நடத்தினேன். நல்ல ரெஸ்பான்ஸ். அடுத்து ஆஸ்திரேலியாவில் கண்காட்சி மற்றும் பேஷன் ஷோ நடத்தப் போகிறேன். இதற்காக மாடல் அழகிகளுடன் விரைவில் ஆஸ்திரேலியா செல்கிறேன்," என்றார்.

இந்த ஷோ கதையையும் படத்தில் சொல்வீங்களா சோனா?!
Posted by: Shankar
 

ஆதியின் உயரத்தை ரசித்த ரஜினி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-தின் 'கோச்சடையான்' படத்தின் சூட்டிங் படுவேகமாக நடந்து வருகிறது. சிறிது காலம் உடல்நிலை பாதிக்கப்பட்ட ரஜினி, மீண்டும் கோச்சடையான் படம் மூலம் தன்னுடைய பழைய வேகத்தில் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில், 'கோச்சடையான்' படத்தின் ஷூட்டிங் போது தன்னுடன் நடித்த ஆதியின் (ஈரம் படத்தின் ஹீரோ) உயரத்தை ரசித்த ரஜினி அவரிடம் உங்கள் உயரம் என்ன என்று விசாரிக்க 6 அடி 2 இன்ச் என்றதும் வெரிகுட் என்று பாராட்டினாராம்.


 

பட வாய்ப்புகளை இழந்தது ஏன்? வடிவேலு விளக்கம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பட வாய்ப்புகளை இழந்தது ஏன் என்றதற்கு பதில் அளித்தார் வடிவேலு. காமெடியில் தனக்கென தனிபாணி வகுத்து நடித்து வந்தார் வடிவேலு. கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது நிறைய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து சினிமாவில் அவருக்கு இடைவெளி ஏற்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் வடிவேலு.  சிம்புதேவன் இயக்கிய 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' என்ற படத்தில் அவர் இரட்டை வேடம் ஏற்று நடித்திருந்தார். அப்படம் ரூ.4 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. வெற்றிகரமாக ஓடி ரூ.16 கோடி வரை சம்பாதித்தது. 18ம் நூற்றாண்டையொட்டிய காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்கள்போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் 2ம் பாகம் உருவாகிறது. சமீபத்தில் வடிவேலுவை சந்தித்த சிம்புதேவன் 2ம் பாக கதையை அவரிடம் கூறினார். அது பிடித்திருந்ததை அடுத்து நடிக்க ஒப்புக்கொண்டார்.

இதுபற்றி வடிவேலு கூறும்போது, ''சிம்புதேவன் கூறிய 'இம்சை அரசன்' படத்தின் 2ம் பாக கதை பிடித்திருந்தது. முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தில் அதிகபட்சமாக நகைச்சுவை காட்சிகள் சேர்த்திருக்கிறார். இதுபற்றி இருவரும் பேசி வருகிறோம். ஷூட்டிங் பற்றி விரைவில் முடிவு செய்யப்படும். சமீபகாலமாக படங்களில் நடிக்காமல் இடைவெளிவிட்டிருந்தேன். நிறைய படங்களில் நடிக்க முடியாமல் போனது. அதுபற்றி கவலை இல்லை. இந்த வருடம் முழுவதும் பிஸியாகவே இருக்கிறேன். இடைவெளி எடுத்துக்கொண்ட நேரத்தில் என் குடும்பத்தினருடன் பொழுதை கழித்தேன்'' என்றார்.


 

தனுஷின் "வேங்கை சாமி"

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சிம்பு நடிக்கும் 'வடசென்னை' படத்தை வெற்றிமாறன் இயக்குவதாக இருந்தது. இதில் தெலுங்கு நடிகர் ராணாவும் முக்கியமான கேரக்டரில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. திடீரென்று, ராணா விலகினார். இதையடுத்து சிம்பு அமெரிக்கா சென்றதால் படப்பிடிப்பு தள்ளிப் போனது. சென்னை திரும்பிய சிம்பு, 'வேட்டை மன்னன்', 'போடா போடி' படங்களில் கவனம் செலுத்தி வருவதால் 'வடசென்னை' ஷூட்டிங் தள்ளிப்போனதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தனுஷ் நடிக்கும் படத்தை வெற்றிமாறன் மீண்டும் இயக்குகிறார். படத்துக்கு வேங்கை சாமி என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.


 

மீண்டும் தயாரிப்பில் இறங்கும் ஷங்கர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சிறிது காலம் தயாரிப்பில் ஈடுபடாத பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், தற்போத மீண்டும் படம் தயாரிக்கிறார். லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக இருந்த பத்தி‌ரிகையாளர் ராஜு முருகன் இயக்கும் படத்தை ஷங்கர் தயா‌ரிக்கிறார். முருகன் சொன்ன கதையை கேட்ட ஷங்கர் தனது கொள்ளையை தளர்த்தி மீண்டும் தயா‌ரிப்பாளராக முடிவு செய்திருக்கிறார்.



 

கவர்ச்சி நடிகைக்கு முக்கியத்துவம் தருவதா?

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
கவர்ச்சி நடிகைக்கு முக்கியத்துவம் தந்து எங்களை ஒதுக்குவதா? என்று இயக்குனர் ராம் கோபால் வர்மா மீது 2 ஹீரோயின்கள் கோபம் அடைந்தனர். ராம்கோபால் வர்மா இயக்கும் படம் 'டிபார்ட்மென்ட்'. இதில் அஞ்சனா சுகானி, லட்சுமி மன்சு, நாதாலியா கவுர் என 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் புரமோஷனில் அஞ்சனா, லட்சுமி இருவரையும் ஓரம்கட்டிவிட்டு கவர்ச்சி நடிகை நாதாலியா கவுருக்கு வர்மா முக்கியத்துவம் தருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து அஞ்சனா, லட்சுமி இருவரும் இயக்குனர் மீது கோபமாக இருக்கிறார்கள், 'இதுபழிவாங்கும் செயல்' என்று லட்சுமி மன்சு கூறியதாக தகவல் வெளியானது.

இதுபற்றி மன்சுவிடம் கேட்டபோது, ''இது வர்மாவின் படம். அவருடைய படத்தை எப்படி புரமோஷன் செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அவர் படத்தில் நடித்தது சந்தோஷம். இன்னும் சொல்லப்போனால் அவர் படத்தில் நடித்தது பெருமை. ராம்கோபால் வர்மாவைவிட வேறு யாரும் தன் படத்தில் நடிக்கும் ஹீரோயின்களை கவுரவமாக நடத்த மாட்டார்கள். தற்போது தமிழ், தெலுங்கில் 'மறந்தேன் மன்னித்தேன்' என்ற படத்தை தயாரித்து வருகிறேன். ஆந்திராவின் உட்புற பகுதிகளில் ஷூட்டிங் நடந்துள்ளது. டாப்ஸி, சுதீப் கிஷன் மற்றும் ஆதி நடித்துள்ளனர். 1986ம் ஆண்டு கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது நடந்த முக்கிய சம்பவமொன்றை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது'' என்றார்.


 

பாலிவுட் ஹீரோ நிபந்தனை லிங்குசாமிக்கு புது தலைவலி

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் சாஹித் கபூர் நிபந்தனை விதித்ததால் வசனகர்த்தா மாற்றப்பட்டார். மாதவன், ஆர்யா நடித்த படம் 'வேட்டை'. லிங்குசாமி இயக்கினார். இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் நடிக்க மாதவன், அசின் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்களை அணுகியபோது கால்ஷீட் தர மறுத்துவிட்டனர். இந்நிலையில் சாஹித் கபூர் ஒப்பந்தம் ஆனார். ஸ்கிரிப்ட் பணி முடிந்து ஷூட்டிங் செல்லும் நேரத்தில் திடீரென்று சாஹித் நிபந்தனை விதித்தார். 'தமிழில் எழுதப்பட்ட வசனங்களை அப்படியே இந்திக்கு மொழி பெயர்த்திருப்பதை ஏற்க முடியாது. இந்தி ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப வசனத்தை மாற்றினால்தான் நடிப்பேன்' என்றார். இதனால் லிங்குசாமிக்கு புது தலைவலி ஏற்பட்டது. இதையடுத்து இந்தி படங்களுக்கு வசனம் எழுதும் பிரசூன் ஜோஷி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்பிறகே சாஹித் நடிக்க ஒப்புதல் அளித்தார்.

இதுபற்றி லிங்குசாமி கூறும்போது,''எனக்கு இந்தியில் மற்றவர்களுடன் எளிதாக தொடர்புகொண்டு பேச தெரியாது. இந்நிலையில்தான் தமிழ் வசனங்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது. அது திருப்தியாக அமையவில்லை. இதுதான் முக்கிய பிரச்னையாக இருந்தது. இதையடுத்து மற்றொரு வசனகர்த்தாவை ஒப்பந்தம் செய்தோம். அவர் தமிழ் படத்துக்கு வசனம் எழுதியவருடன் அமர்ந்து ஆலோசித்து வசனத்தின் உட்பொருளை கேட்டறிந்து அதற்கேற்ப வசனம் எழுதினார். இதையடுத்து பிரச்னை தீர்ந்தது. இதற்குமுன் நான் இந்தி படம் இயக்கியதில்லை. இது புது அனுபவம் என்பதால் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறேன். இந்தி 'வேட்டை' தமிழிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். சர்வதேச மார்க்கெட்டுக்கு ஏற்ப இது உருவாகும். ஆர்யா நடித்த வேடத்தில் சாஹித் நடிக்கிறார். மாதவன் நடித்த வேடத்தில் பாகிஸ்தான் இசை அமைப்பாளர் அலி நடிக்கிறார். ஹீரோயின் இலியானா'' என்றார்.


 

ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு


Vvadivelu
நகைச்சுவைப் புயல் தன் ஓய்வு காலத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அடுத்த படத்துக்கான வேலைகளில் பரபரப்பாகிவிட்டார்.

அவரது அடுத்த படம், இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் 2-ம் பாகம்தான் என நாம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இப்போது சிம்பு தேவனுடன் கதை விவாதம் நடத்தியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள வடிவேலு, புதிய பொலிவுடன், அசத்தலான திரைக்கதையுடன் கூடிய படத்தில் நாயகனாக நடிக்கவிருப்பதாகக் கூறியுள்ளார்.

தனது அடுத்த படம் குறித்து வடிவேலு கூறுகையில், "சினிமாவில் சில காலம் இடைவெளி விட்டு விட்டேன். இதனால் நிறைய படங்களில் நடிக்க இயலாமல் போனது. இதற்காக நான் வருத்தப்படவில்லை. சினிமாவில் பல வருடங்களாக பிசியாக நடித்து வந்தேன். இதனால் எனது குடும்பத்தினருடன் செலவிட நேரம் இல்லாமல் போனது. இப்போது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகிறேன்.

இந்த வாய்ப்புக்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.

ரெஸ்ட் போதும்னு முடிவு பண்ணி, மீண்டும் சினிமாவில் நடிக்க கதை தேடுகிறேன். சிலர் பல கதைகள் சொல்லி உள்ளனர். சிம்புத்தேவன் பிரமாதமான கதையொன்று சொல்லி இருக்கிறார். விரைவில் அறிவிப்பை வெளியிடுவேன்," என்றார்.

இந்த ஓய்வு நேரத்தில் வடிவேலு இணையதளங்களின் பயன்பாடு, அதில் வரும் செய்திகள் பார்ப்பது போன்றவற்றை முழுமையாகத் தெரிந்து கொண்டுவிட்டாராம்.

பேஸ்புக், ட்விட்டர்ல எப்போ அப்டேட் பண்ணப் போறீங்க?
Posted by: Shankar
 

ஜூன் 14-ல் சிரஞ்சீவி மகன் ராம் சரண் - உபாசனா திருமணம்


Ram Charan Upasana Engagement Photos
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மகனும், முன்னணி நடிகருமான ராம் சரணுக்கும் அப்பல்லோ பிரதாப் ரெட்டியின் பேத்தி உபாசனா காமினேனிக்கும் வரும் ஜூன் 14-ம் தேதி திருமணம் நடக்கிறது.

ராம்சரண் - உபாசனா காமினேனி திருமண நிச்சயம் கடந்த டிசம்பரில் நடந்தது. அப்போது திருமண தேதி அறிவிக்கப்படவில்லை. இப்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வருகிற ஜூன் மாதம் 14-ந்தேதி ஹைதராபாத் கான்டிபேட்டாவில் உள்ள பண்ணை வீட்டில் திருமணம் வெகு விமரிசையாக நடைபெறும் என நேற்று இரு வீட்டு பெற்றோரும் அறிவித்தனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியை திருப்பதியில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். மறுநாள் ஜூன் 15-ல் வரவேற்பு நடைபெறும் என தெரிகிறது. வரவேற்புக்கு ரசிகர்களை அழைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

கைவசம் உள்ள படங்களை திருமணத்துக்கு முன்பு முடித்து கொடுத்து விடுவதற்காக இரவும் பகலும் விறு விறுப்பாக் படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார்.
Posted by: Shankar
 

விஜயகாந்த் மகனுக்காக பெரும் விலை கொடுத்து வாங்கப்பட்ட தெலுங்குப் படம்!


நடிகர் விஜய் உள்ளிட்ட தமிழின் முன்னணி நடிகர்கள் கேட்டும் கூட கொடுக்காமலிருந்த ஒரு படத்தின் ரீமேக் உரிமையை, விஜயகாந்த் மகனுக்காக கொடுத்திருக்கிறார் தெலுங்கு தயாரிப்பாளர்.

அந்தப் படம் என்டிஆர் நடித்த தெலுங்குப் படம் பிருந்தாவனம்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நாயகனாக அறிமுகமாகிறார். இதனை விஜயகாந்தே அறிவித்திருந்தார்.

இதற்காக பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார் விஜய்காந்த். ஆனால் எதுவும் சரியாக வராததால், ஒரு தெலுங்குப் படத்தை ரீமேக் பண்ணும் பாதுகாப்பான முயற்சியில் இறங்கிவிட்டார்.

அதுதான் ஜூனியர் என்டிஆர் நடித்த பிருந்தாவனம். விஜயகாந்தின் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தமிழில் சண்முகபாண்டியனின் அறிமுகப் படமாக ரீமேக் செய்கிறது.

படத்தில் சண்முக பாண்டியனுக்கு இரண்டு நாயகிகளாம். முன்னணி இளம் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

பிருந்தாவனம் படத்தின் ரீமேக் உரிமைக்கு விஜய் உள்ளிட்ட தமிழ் முன்னணி நடிகர்களிடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் அவர்களுக்கெல்லாம் தராத தயாரிப்பாளர், விஜயகாந்த் மகனுக்கு என்றதும் பேரம் பேசாமல் கொடுத்துவிட்டாராம்!
Posted by: Shankar
 

நார்வே திரைப்பட விழா 2012: 5 குறும்படங்கள் தேர்வு - சென்னை இளைஞர் தயாரித்த படத்துக்கு விருது!


The Messiah Short Film
நார்வே திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 20 குறும்படங்களில் 5 படங்கள் தமிழர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சென்னையைச் சேர்ந்த இளைஞர் எஸ் பிரவீண்குமார் தயாரித்த தி மெசையா படம் நடிப்புக்கான சிறந்த குறும்படமாக விருது வென்றுள்ளது. இந்தப் படத்தில் நடித்த தேசப்பன் என்ற சிறுவனுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த படமாக ரோட்சைட் அம்பானிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த கேமிராமேன் விருது கள்ளத்தோணி படத்துக்காக பிரபல ஒளிப்பதிவாளர் செழியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நார்வே திரைப்பட விழாவில் அனைவரது கவனத்தையும் கவர்ந்தவை குறும்படங்கள் போட்டிப் பிரிவுதான். ஏராளமான இளைஞர்கள், புதிய படைப்பாளிகள் ஆர்வத்துடன் தங்கள் படங்களை இதற்கு அனுப்பி வைத்தனர்.

போட்டிக்கு வந்த 50க்கும் மேற்பட்ட படங்களில் 20 படங்களை மட்டும் விழாவில் திரையிட தேர்வு செய்தனர் விழாக் குழுவினர். இந்தப் படங்கள் ஏப்ரல் 25 மற்றும் 26-ம் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் திரையிடப்பட்டன. Kultursalen, Nedre Fossum Gård, Osloதமிழர்கள் மற்றும் நாரேவேயைச் சேர்ந்தவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்தப் படங்களைப் பார்க்க வந்தனர்.

இரண்டு நாட்கள் திரையிடலின் முடிவில் 5 படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.

அவை:

சிறந்த குறும்படம் - நடிப்பு
படம்: தி மெசையா
நடிப்பு: தேசப்பன்
தயாரிப்பாளர்: எஸ் பிரவீண்குமார்
இயக்கம்: ஷரத் ஜோதி.

சிறந்த குறும்படம்
படம்: ரோட்சைட் அம்பானிஸ்
இயக்கம்: கமல் சேது

சிறந்த குறும்படம் - இயக்குநர்
படம்: நகல்
இயக்குநர்: பொன் தயா


சிறந்த குறும்படம் - கதை
படம்: பூச்சாண்டி
இயக்குநர்: சைமன் ஜார்ஜ்

சிறந்த குறும்படம் - ஒளிப்பதிவு
படம்: கள்ளத்தோணி.
ஒளிப்பதிவு: செழியன்
இயக்கம்: அருள் எழிலன்

விருதுக்கான குறும்படங்களை குளோரியானா செல்வநாதன் தலைமையிலான குழுவினர் தேர்வு செய்தனர்.
Posted by: Shankar
 

தமிழ் - தெலுங்கு மட்டும்தான், இந்தி இல்லை! - கவுதம் மேனன்


Goutham Menon
நீதானே என் பொன்வசந்தம் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் மட்டுமே உருவாக்கப் போவதாகவும், இந்தியில் இயக்கப் போவதில்லை என்றும் இயக்குநர் கவுதம் மேனன் முடிவு செய்துள்ளார்.

கெளதம் மேனன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தயாராவதாக அறிவிக்கப்பட்ட படம் 'நீதானே என் பொன்வசந்தம்'.

தமிழில் ஜீவா, தெலுங்கில் நானி, இந்தியில் ஆதித்யா ராய் கபூர் ஆகியோர் நடித்து வந்தார்கள். மூன்றிலுமே நாயகியாக சமந்தா நடித்து வந்தார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கெளதம் மேனன் தற்போது 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் இந்தி பதிப்பை கைவிட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இந்தி ரீமேக்கான 'ஏக் தீவானா தா' படத்தின்தோல்விதான் இதற்கு காரணம் என்கிறார்கள்.

நீதானே என் பொன் வசந்தத்தை முதலில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் செய்து, அதன் ரிசல்டைப் பொறுத்து இந்தியில் வெளியிடப் போவதாகக் கூறப்படுகிறது.
Posted by: Shankar
 

ஜூனில் "சிங்கம் 2"

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஹாலிவுட் பாணியில் சூப்பர்ஹிட் படங்களின் 2-ம் பாகம் மோகம் அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் தற்போது பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் படம் அஜீத் நடிக்கும் 'பில்லா 2'. ரஜினி நடித்து 25 ஆண்டுகளுக்கு முன்பு திரைக்கு வந்த 'பில்லா' படத்தின் ரீமேக்கில் அஜீத் நடித்தார். இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கினார். இது ஹிட் ஆனது. இதையடுத்து 'பில்லா 2' உருவாகிறது. சக்ரி இயக்குகிறார். அதேபோல் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த 'சிங்கம்' படத்தின் 2-ம் பாகம் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக தெரிகிறது. ஆறு, வேல், சிங்கம் என ஹ‌ரி இயக்கத்தில் சூர்யா நடித்த மூன்று படங்களுமே ஹிட். இருந்தும் சிங்கம் இரண்டாம் பாகத்தில் நடிக்க சூர்யா அதிக ஆர்வம் காட்டவில்லை என கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வந்தது. மேலும், கௌதம் போன்ற இயக்குனர்கள் தற்போது பிஸி என்பதால் ஹ‌ரிக்கு சூர்யா கால்ஷீட் ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது. சிங்கம் இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா, ஹன்சிகா இருவரும் நடிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுடன் ராதாரவி, நாசர், விவேக், விஜயகுமார் ஆகியோரும் நடிக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசை.


 

மூன்று மொழிகளிலும் அசத்தும் தல

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நம்ம தல அஜீத்தின் 'பில்லா 2' படத்தை தென்னிந்திய திரையுலகம் முழுவதும் எதிர்பார்த்து வரும் நிலையில், திரையரங்கு உ‌ரிமை, தொலைக்காட்சி உ‌ரிமை என போட்டிகள் இப்போதே தொடங்கிவிட்டது. தெலுங்கில் 'டேவிட் பில்லா' என்று வெளியாகும் இந்த படம், கன்னடத்திலும், மலையாளத்திலும் டப்பிங் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் திரையரங்கு உ‌ரிமை மற்றும் தொலைக்காட்சி உ‌ரிமை பெற தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரையுலக விநியோகஸ்தர்கள் போட்டிகளை தொடங்கிவிட்டன. தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழக திரையரங்கு உ‌ரிமைகளில் மட்டும் 41 கோடிக்கு மேல் சபாதித்திருக்கிறது இப்படம். ‌ரிலீஸுக்கு முன்பு அ‌‌ஜீத் படம் ஒன்று இவ்வளவு பெ‌ரிய தொகையை கலெக்ட் செய்திருப்பது இதுவே முதல்முறை.



 

சொந்த நிலத்தில் படம் எடுக்கும் பாலா..

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பரதேசி படத்தின் இரண்டாவது ஷெட்யூலை வரும் 2ஆம் தேதி பாலா தொடங்குகிறார். லொகேஷன் தேனி. அதர்வா, வேதிகா, பூஜா நடிக்கும் இந்தப் படத்தின் தேனி ஷெட்யூலை பாலாவுக்கு சொந்தமான நிலத்தில் நடக்கயிருப்பதாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன. கிராமம் மாதி‌ரி அரங்கு அமைத்து இங்கு படப்பிடிப்பு நடக்கவுள்ளது.


 

வெற்றிமாறன் கதையில் சித்தார்த்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வெற்றிமாறன் முதலில் இயக்குவதாக இருந்தப் படம் தேசிய நெடுஞ்சாலை. ஆனால் தனுஷுக்கு பொல்லாதவன் ஸ்கி‌ரிப்ட் பிடிக்க தேசிய நெடுஞ்சாலை பெட்டிக்குள் முடங்கியது. இப்போது அதே பெய‌ரில் ஒரு படத்தை தயா‌ரிக்கிறார் வெற்றிமாறன். இயக்கம் அவரது உதவியாளர் மணிகண்டன். கதை, திரைக்கதை வெற்றிமாறன். இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பவர் சித்தார்த். படப்பிடிப்புக்கான ஆரம்ப வேலைகள் முடிந்த நிலையில் வரும் மே 2 ஆம் தேதி முதல் படப்பிடிப்புக்கு கிளம்புகிறார்கள். ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லையாம்.


 

தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'3' படத்தில் தனுஷூக்கு நண்பனாக சிவகார்த்திகேயன் நடித்து அசத்தினார். இவர்களது கூட்டணி செம காமெடியாக இருந்தது. இதனையடுத்து, வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட் செந்தில்தான் இயக்கும் படத்தை தனுஷ் தயாரிக்கிறார். ரொமாண்டிக் காதல் கதையான இந்த படத்தில் சிவாகார்த்திகேயனை ஹீரோவாக்கியிருக்கிறார் தனுஷ். விரைவில் அதிகாரபூர்வமாக இந்தப் படத்தை அறிவிக்கிறார் தனுஷ்.


 

இந்த வெள்ளிக்கிழமை கோடம்பாக்கம் கொஞ்சம் டல்லுதான்!


வாராவாரம் வெள்ளிக்கிழமை வந்தாலே கோடம்பாக்கம் கொஞ்சம் உற்சாகமாகிவிடும். சின்னதும் பெரியதுமாக படங்கள் வந்துவிடும். படம் வெளியாகும் சந்தோஷம், அதைப் பார்க்கப் போகும் சந்தோஷம் (பார்த்தபிறகு இருக்கும் மனநிலை வேறு!) என கொஞ்சம் கலகலப்பாக இருக்கும்.

இந்த வாரம் அது கொஞ்சம் மிஸ்ஸிங். பெரிதாகப் படங்கள் ஏதுமில்லை. தொடர்ந்து மூன்றாவது வாரமாக உதயநிதியின் ஒரு கல் ஒரு கண்ணாடிதான் ஆதிக்கம் செலுத்துகிறது. எந்தப் படம் போட்டாலும் இரண்டாவது வாரத்தில் டல்லடிக்கும் காசியில் கூட வார நாட்களிலேயே 90 சதவீத கூட்டம் வருகிறது இந்தப் படத்துக்கு.

இந்த வாரம் 3 சிறிய படங்கள் வெளியாகின்றன. அவை, ஆதி நாராயானா, நீண்ட நாள் தயாரிப்பிலிருந்த லீலை மற்றும் படம் பார்த்து கதை சொல் ஆகியவைதான்.

இவை தவிர, அவெஞ்சர்ஸ் 3 டி படம் ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியாகிறது. இந்தப் படம் ஆங்கிலத்தில் 20 அரங்குகளிலும், தமிழில் 10 அரங்குகளிலும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

ஜூனியர் என்டிஆரின் தெலுங்கு படம் தம்மு 10 அரங்குகளில் வெளியாகிறது. ப்ரியதர்ஷனின் தேஜ் இந்திப் படம் கூட 10 அரங்குகளில் வெளியாகிறது.

தமிழில் நட்சத்திர மதிப்பு கொண்ட படங்கள் எதுவும் இல்லாததன் விளைவுதான் இது. அடுத்த வாரம் நிலைமை மாறுமா.. பார்க்கலாம்!
Posted by: Shankar