கிசு கிசு - டான்ஸ் ஆட நடிகைக்கு தடை!

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

டான்ஸ் ஆட நடிகைக்கு தடை!

7/1/2011 2:28:25 PM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

அனுஷ்க ஹீரோயின் தனது மேக்கப் மேனுக்கு படங்கள்ல நடிக்க சிபாரிசு பண்றாராம்… பண்றாராம்… ஸ்கை படத்துல ஒரு கேரக்டருக்கு ஆள் தேடினப்போ இவரை நடிக்க வையுங்கன்னு சிபாரிசு பண்ண¤னாரு. இப்போ அடுத்தடுத்து தான் நடிக்கிற படங்கள்ல அவருக்கும் ஒரு கேரக்டர் உருவாக்க டைரக்டருங்கிட்ட கேட்க¤றாராம்… கேட்க¤றாராம்…

லீலை பட செல்வ இயக்குனரு ரொம்பவே நொந்து போயிருக்க¤றாராம்… போயிருக்க¤றாராம்… ரெண்டு வருஷம் கடந்தும் லீலை படம் ரிலீஸாகாததால அடுத்து எந்த கம்பெனிலேயும் வாய்ப்பு தர மறுக்க¤றாங்களாம்… மறுக்கிறாங்களாம்… உர்ரான இயக்கம், லீலை பட தயாரிப்பு மேல புகார் கொடுக்க முடிவு பண்ணியிருக்காராம்… பண்ணியிருக்காராம்…

கவர்ச்சியா நடிச்சாலும், பாட்டுக்கு டான்ஸ் ஆடி சோன நடிகை நடிக்க மாட்டாராம்… மாட்டாராம்… மூட்டு பெயின் இருக்க¤றதால டான்ஸ் ஆடக் கூடாதுன்னு டாக்டருங்க சொல்லிட்டாங்களாம்… சொல்லிட்டாங்களாம்… அதனாலதான் இந்த முடிவாம்… முடிவாம்…

 

சிம்புக்கு கவுதம் மேனன் மறுப்பு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சிம்புக்கு கவுதம் மேனன் மறுப்பு!

7/1/2011 2:27:05 PM

'விண்ணைத்தாண்டி வருவாயா’ இந்தியில் உருவாகிறது. இதற்கிடையில் இப்படத்தின் 2ம் பாகம் தமிழில் உருவாகிறது. நவம்பரில் ஷூட்டிங் என தகவல் பரவியது. இது பற்றி சிம்புவிடம் கேட்டபோது, ‘'முதல் பாகத்தில் சாஃப்ட் கேரக்டரில் நடித்ததுபோல் இரண்டாம் பாகத்திலும் அதே போல் நடிக்கிறேன். எனக்கு ஜோடியாக 'மதராசபட்டினம்’ ஹீரோயின் எமி ஜாக்ஸன் நடிப்பார். இதில் ஆக்ஷனும் இருக்கும்’ என்று கூறியிருந்தார். இது பற்றி கவுதம் மேனன் கூறும்போது, '’விண்ணைத்தாண்டி வருவாயா 2ம் பாகம் உருவாகிறது என்பது உறுதி செய்யப்படவில்லை. நவம்பரில் ஷூட்டிங் தொடங்கும் என்பதும் தவறு. சிம்புவுடன் நான் பேசியபோது அடுத்த ஆண்டு ஜூனில் இணைந்து படம் செய்வது பற்றித்தான் பேசினேன். அது ‘வி.தா.வ’வின் இரண்டாம் பாகம் கிடையாது. மேலும் எமி ஜாக்ஸனை ஹீரோயினாக்குவது பற்றியும் பேசவில்லை. படத்தின் ஸ்கிரிப்ட், நடிகர்கள், பட குழுவினர் என்று யாருமே முடிவாகவில்லை” என்றார்.

 

இந்தி 'சிங்க'த்தை தடை செய்யக் கோரி வழக்கு


இந்தியில் தயாராகியுள்ள சிங்கம் படத்தின் ரீமேக்கை வெளியிடத் தடை கோரி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சூர்யா, அனுஷ்கா ஜோடியாக நடித்த படம் சிங்கம். இதனை சூர்யாவின் உறவினர் ஞானவேல்ராஜா தயாரித்தார். இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அஜய்தேவ்கன், காஜல் அகர்வால் நடித்துள்ளனர்.

வருகிற 22-ந்தேதி இப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்இந்தப் படத்துக்கு தடை கோரி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், "சிங்கம் படத்தை இந்தியில் தயாரிக்கும் உரிமை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அப்போது படத்தை விற்கும்போது 25 சதவீதம் பங்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டோம். தற்போது இப்படம் ரூ. 80 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளது. அதில் 25 சதவீதம் பங்காக ரூ. 12.5 கோடி தர வேண்டும்.

ஆனால் அப்பணத்தை தராமல் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.

ஞானவேல்ராஜா சார்பில் வக்கீல்கள் மனோகர், சகாதேவன் ஆகியோர் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியன் இவ்வழக்கில் பதில் அளிக்கும்படி ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
 

பமீலாவுக்கு 44 வயசு!


உலகப் புகழ் கவர்ச்சிப் புயல் பமீலா ஆண்டர்சனுக்கு 44 வயது பிறந்துள்ளது. இதை அமைதியான முறையில் அவர் கொண்டாடியுள்ளார்.

படு செக்ஸியான பெண்ணாக ஒரு காலத்தில் உலகை வலம் வந்தவர் பமீலா. பேவாட்ச் என்ற ஒரே டிவி சீரியல் மூலம் உலக இளைஞர்களை வாட்டி வதைத்த பெருமைக்குரியவர் பமீலா. இப்போதும் கவர்ச்சியுடன் வலம் வரும் பமீலாவுக்கு இன்று 44 வயது பிறந்துள்ளது.

1967ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பிறந்தவர் பமீலா. இவர் பிறந்தபோதே பிரபலமாகி விட்டார். காரணம், கனடா நாட்டின் 100வது பிறந்த நாளின்போதுதான் பமீலாவும் பிறந்தார் என்பதால்.

கனடாவின் நூறாவது பிறந்த நாளின்போது இவர் பிறந்ததால் இவரது பெற்றோர் பேரி, கரோலுக்கு அப்போது பரிசுகள் எல்லாம் கொடுத்து அசத்தினராம்.

இளம் வயதிலேயே பல திரைப்படங்களில் துணை நடிகையாக தலை பிளஸ் கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்தார் பமீலா. அவரது கவர்ச்சிக்கு தனித்துவம் இருப்பதாக தெரிந்ததால் நிறைய வாய்ப்புகள்.

பமீலாவிடம் ஏகப்பட்ட கவர்ச்சி கொட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்த பிளேபாய் இதழ் அவரை அணுகி போஸ் கொடுக்க கோரியது. முதல் முறையாக பமீலாவின் கவர்ச்சிப் படங்களைத் தாங்கி வெளியானது பிளேபாய். அதன் பின்னர் 6 முறை பிளேபாய்க்காக போஸ் கொடுத்தார் பமீலா.

அதன் பின்னர் டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். 1992ம் ஆண்டு அவரைத் தேடி பேவாட்ச் சீரியல் வாய்ப்பு வந்தது. அதில் நடிக்க ஆரம்பித்த பின்னர்தான் பமீலாவின் பிரமாண்ட கவர்ச்சி உலகம் முழுவதும் பளிச்சிட ஆரம்பித்தது.

தொடர்ந்து நிறைய தொடர்களில் நடித்தார். இருந்தாலும் இன்று வரை பமீலாவை பேவாட்ச்தான் உலக மக்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது.

பமீலா நிறையப் பேருடன் கிசுகிசுக்கப்பட்டவர். டீன் கெய்ன், சில்வஸ்டர் ஸ்டலோன், ஸ்காட் பயோ, மார்க்ஸ் செக்கன்பெர்க், டாமி லீ ஆகியோர் அவர்களில் சிலர். இதில் டாமி லீயை அவர் மணந்து கொண்டார். பின்னர் டாமி லீ தன்னை அடித்து சித்திரவதை செய்வதாக கூறி விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

டாமி லீ மூலம் பமீலாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சர்வதேசப் புகழ் பெற்ற பமீலா கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த பிக் பாஸ் 4 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு இந்திய இதயங்களையும் சற்று குளிர வைத்து விட்டுச் சென்றார்.
 

மலையாளப் படத்தில் நடிக்கும் 'சுப்பிரமணியபுரம்' சசிகுமார்- 5 நாயகிகள்


சுப்ரமணியபுரம் புகழ் இயக்குனர், நடிகர் சசிகுமார் மாஸ்டர்ஸ் என்ற படத்தின் மூலம் மாலிவுட் எனப்படும் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகிறார்.

மலையாள இயக்குனர் ஜான் அந்தோணியின் அடுத்த படம் மாஸ்டர்ஸ். இரண்டு உயிர் நண்பர்கள் பற்றிய கதை. இதில் நடிகர் பிரித்விராஜ் மற்றும் இயக்குனர் சசிகுமார் ஆகியோர் நண்பர்களாக நடிக்கின்றனர். தமிழில் சுப்ரமணியபுரம், பசங்க மற்றும் நாடோடிகள் படங்கள் கொடுத்த சசிகுமார் மாஸ்டர்ஸ் மூலம் மலையாளத்தில் காலடி எடுத்து வைக்கிறார்.

கல்லூரியில் ஒன்றாக ஒரே வகுப்பில் படிக்கும் 2 நண்பர்கள் படிப்பிற்கு பிறகு எவ்வாறு வெவ்வேறு துறைகளில் பணிக்கு செல்கின்றனர் என்பது தான் கதை. கதை பிடித்திருந்ததால் தான் இந்த படத்தில் நடிக்க உடனே சம்மதித்ததாக சசிகுமார் கூறியுள்ளார்.

இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் 5 கதாநாயகிகள் நடிக்கின்றனர். அதில் பியா பாஜ்பாய் மற்றும் அனன்யா அடக்கம். மற்ற 3 நாயகிகள் தேர்வு விரைவில் முடியும். மாஸ்டர்ஸ் படபிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் கோட்டயத்தில் துவங்குகிறது.
 

இலியானாவின் 'டிஸ்கவுன்ட் ஆஃபர்'!


தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்ததன் விளைவு, சம்பள விஷயத்தில் உச்சத்திலிருந்த இலியானா தடாலடியாக தனது சம்பளத்தைக் குறைத்துக் கொண்டுள்ளார்.

இதுவரை ரூ 1 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வந்தவர் இலியானா. ஆனால் அவரது சமீபத்திய படங்கள் சில தோல்வி படங்களாக அமைந்துவிட்டன. இதனால் புதுப்பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின.

தெலுங்கில் இப்போதைக்கு அவரது மார்க்கெட் டல்லடிக்க ஆரம்பித்துவிட்டது. தமிழ் உள்ளிட்ட வேறு மொழிப் பட வாய்ப்புகளைத் தேடி வருகிறார். கூடவே சம்பள குறைப்பையும் அறிவித்துள்ளார்.

இனி 50 லட்சம் கொடுத்தாலே போதும், நடிக்கத் தயார் என்கிறாராம்.

இந்த அறிவிப்பு அவருக்கு புதிய வாய்ப்புகளைக் கொடுப்பதற்கு பதில், இருந்த ஒரு வாய்ப்பையும் பறித்துக் கொண்டதுதான் சோகம்.

நடிகர் அல்லு அர்ஜூன் தனது அடுத்த படத்தில் இலியானாவை ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் இலியானாவின் சம்பள குறைப்பைக் கண்டு தனது புதுப்படத்திலிருந்து அவரை நீக்கிவிட்டாராம்.
 

ரம்லத்துக்கு இன்னும் சொத்துக்களை மாற்றவில்லை? -விவாகரத்தில் சிக்கல்


மனைவி ரம்லத்துக்கு தருவதாகக் கூறிய சொத்துக்களை இன்னும் பிரபுதேவா மாற்றிக் கொடுக்காததாலேயே வழக்கு தாமதமாவதாக தெரியவந்துள்ளது.

சென்னை குடும்ப நல கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்த பிரபுதேவா-ரம்லத் விவாகரத்து வழக்கில் இருவருமே நேற்று ஆஜராகவில்லை. இதற்குப் பின்னணியில் பரபரப்பான காரணங்கள் சொல்லப்படுகின்றன.

பிரபுதேவாவும், நயன்தாராவும் கடந்த வருடம் இறுதியில் திருமணத்துக்கு தயாரானதும் ரம்லத்துதான் கோர்ட்டுக்கு போனார். நயன்தாரா கணவரை பிரிக்க முயற்சிப்பதாகவும் பிரபுதேவாவை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பின்னர் பிரபுதேவா- ரம்லத் இடையே சமரசம் ஏற்பட்டது. இருவரும் மனம் ஒத்து பிரிவதாக மனுதாக்கல் செய்தனர்.

அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடு, அண்ணா நகரில் உள்ள வீடு மற்றும் ஐதராபாத்தில் உள்ள பிளாட்கள் போன்றவற்றை மனைவி மற்றும் மகன்களுக்கு வழங்குவதாக பிரபுதேவா உறுதி அளித்தார். ஜூன் 30-ந்தேதிக்குள் பத்திரப்பதிவு செய்யப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால் இன்னும் சொத்து பத்திரங்கள் ரம்லத் வசம் வரவில்லை என்று கூறப்படுகிறது.

வருகிற 10-ந்தேதி வழக்கு விசாரணையின்போது ரம்லத் மற்றும் குழந்தைகள் பெயரில் ஏற்கனவே குறிப்பிட்டப்படி சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டு விட்டதா? என்ற தகவல் பிரபுதேவா தரப்பில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்.
 

ஒத்தவீடு... ஷூட்டிங் ஆரம்பம்!


பேய், பிசாசு, காத்து கருப்பு என கிராமத்து நம்பிக்கைகள் எப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சீரழிக்கிறது, இதற்கு தீர்வுதான் என்ன? என்ற கருத்தை மையமாக வைத்து புதிய இயக்குநர் பாலு மலர்வண்ணன் இயக்கும் படம் ஒத்தவீடு.

இந்தப் படத்தின் நாயகனாக திலீப்குமார் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக ஜானவி நடிக்கிறார். வடிவுக்கரசி, எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி என பரிச்சயமான நடிகர்கள் பலர் நடிக்கிறார்கள்.

படம்குறித்து பாலு மலர்வண்ணன் கூறுகையில், "பேய் பிசாசு என அமானுஷ்ய சக்திகள் பற்றி எல்லோருக்கும் ஒரு பயம் உண்டு. அந்த பயமே மிகக் கொடிய மனநோயாகிவிடுகிறது.

பொதுவாக இம்மாதிரி கதைகளை பார்ப்பவர்களை பயமுறுத்தத்தான் பயன்படுத்துவார்கள். அதற்கான தீர்வைச் சொல்ல மாட்டார்கள். ஆனால் இந்தப் படத்தில் இந்த பயத்தைப் போக்க ஒரு தீர்வை முன்வைத்துள்ளேன். படத்தில் ஆறு பாடல்கள் இடம் பெறுகிறது. ஒரு பாடலை கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அண்ணன் மகன் சண்முகசுந்தரம் எழுதுகிறார். வி தஷி இசையமைக்கிறார்'' என்றார்.

பாலு மலர்வண்ணன் இயக்குநராகத்தான் புதுமுகமே தவிர, சினிமாவில் அவரை அறியாதவர்கள் குறைவு. பத்திரிகையாளராக, மக்கள் தொடர்பாளராக பலரிடமும் பணியாற்றியவர் இவர்.
 

கன்னடத்தைக் கலக்கும் லேடி ப்ருஸ்லீ!


தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என்று ஒரு காலத்தில் ஜெய்சங்கரை வர்ணித்தார்கள். அதேபோல லேடி சூப்பர்ஸ்டார், அதிரடி நாயகி என்று விஜயசாந்திக்கு ஒரு காலத்தில் பெயர் இருந்தது. இந்த வரிசையில் இப்போது கன்னட சினிமாவைக் கலக்கி வருகிறார் ஆயிஷா. இவருக்கு லேடி ப்ரூஸ்லீ என்று செல்லப் பெயர் வேறு வைத்து விட்டனர்.

ரிவால்வர் ரீட்டா, புல்லட் பூமா என்று அந்தக் காலத்து தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் அதிரடி நாயகிகள் கலக்கினர் ஒருகாலத்தில். நாயகர்களுக்கு இணையாக இந்த நாயகிகளும் அதிரடியாக சண்டை போடுவார்கள். பெல்ஸும், டைட்டான ஜீன்ஸும் போட்டுக் கொண்டு கவர்ச்சிகரமான சண்டைக் காட்சிகளில் இவர் போட்ட சண்டைகள் இப்போதைய தலைமுறையினருக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை.

விஜயசாந்தி மட்டுமே இந்த அதிரடி நாயகிகள் வரிசையில் இன்னும் மறக்காமல் உள்ளவர். அவரைப் போலவே கன்னடத்தில் அதிரடி வேடங்களில் நடித்தவர் மாலாஸ்ரீ. இப்போது ஆயிஷா என்ற நடிகை இந்த வரிசையில் இணைந்துள்ளார்.

திரில்லர் மஞ்சுவின் இயக்கத்தில் கன்னடத்தில் உருவாகும் ஜெயஹே என்ற படத்தில் நடித்தவர் ஆயிஷா. இவர் திருப்பதியைச் சேர்ந்தவர். கராத்தேவில் கருப்பு பெல்ட் வாங்கியவர். அதிரடியாக சண்டை போடக் கூடிய உடல் வாகும், ஸ்டெமினாவும் உள்ளவர்.

ஒரு வயதாக இருந்தபோதிலிருந்தே தனது தந்தை ஹபீப்பிடம் கராத்தே பயிற்சி பெற்றவராம் ஆயிஷா. ஆண்களுக்கு நிகராக அசகாயமாக சண்டை போடுவதில் வல்லவர் ஆயிஷா.

ஏழு வருடங்களுக்கு முன்பு திரில்லர் மஞ்சு இயக்கிய ஷப்தா என்ற படத்தில் சில சண்டைக் காட்சிகளுக்கு ஆயிஷாவை பயன்படுத்தியிருந்தார் திரில்லர் மஞ்சு. இந்த நிலையில் இப்போது ஆயிஷாவை நாயகியாகப் போட்டு ஜெயஹே படத்தை இயக்கினார்.

இந்த நிலையில் தற்போது சென்னம்மா ஐபிஎஸ் என்ற படத்தில் நடித்துள்ளார் ஆயிஷா. ராமநகரத்தைக் கலக்கும் ரவுடிகளை ஒழித்துக் கட்டும் உதவி போலீஸ் கமிஷனராக இதில் அதகளம் செய்துள்ளாராம் ஆயிஷா. வைஜெயந்தி ஐபிஎஸ் கதைதான் இந்தப் படத்தின் கதையும்.

நம்ம ஊர் 'வைஜெயந்தி' சினேகாவுடன் ஒப்பிடுகையில், இந்த லேடி ப்ரூஸ்லீ ஆயிஷா, படு அதிரடியாகத்தான் தெரிகிறார்!
 

இந்தி டிவி தயாரிப்பாளர் கொலை- கன்னட நடிகைக்கு 3 ஆண்டு சிறை- காதலருக்கு 10 வருடம்


மும்பை: டிவி தயாரிப்பாளர் நீரஜ் குரோவர் கொலை வழக்கில் கன்னட நடிகை மரியா சூசைராஜுக்கு 3 ஆண்டும், அவரது காதலர் எமிலி ஜெரோமுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் இன்று விதிக்கப்பட்டது. மரியா ஏற்கனவே சிறைக் காலத்தை அனுபவித்து விட்டதால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

மும்பையைச் சேர்ந்த டிவி தயாரிப்பாளர் குரோவர். அப்போது வளர்ந்து வரும் இளம் நடிகையாக திகழ்ந்தவர் மரியா சூசைராஜ். இந்தித் திரையுலகில் முக்கிய இடத்தைப் பிடிக்க மும்முரமாக இருந்தவர். இவருக்கும் குரோவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு நட்பானது. இதை மரியாவின் காதலர் எமிலி ஜெரோம் விரும்பவில்லை.

இந்த நிலையில், 2008ம் ஆண்டு மே 27ம் தேதி இரவு மும்பை புறநகர்ப் பகுதியான மலட் பகுதியில் உள்ள மரியாவின் வீட்டுக்கு சென்றார் ஜெரோம். அங்கு தங்கியிருந்த குரோமுக்கும் அவருக்கும் இடையே மோதல் மூண்டது. பின்னர் ஜெரோம், குரோவை கத்தியால் குத்தி படுகொலை செய்தார்.

இதையடுத்து மரியா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரும், ஜெரோமும் சேர்ந்து குரோவரின் உடலை துண்டு துண்டாக வெட்டினர். கிட்டத்தட்ட 300 துண்டுகளாக உடலை குதறி எடுத்த இருவரும், அதை தானே அருகே ஒரு காட்டில் போட்டு விட்டனர்.

இந்த வழக்கில் இருவரும் பின்னர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான விசாரணை மும்பை கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த விசாரணையில் ஜெரோம் கொலையாளி என்றும், அவருக்கு உடந்தையாக இருந்து ஆதாரங்களை அழித்ததாக மரியா குற்றவாளி என்றும் மும்பை கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. இன்று தண்டனை விவரம் வெளியிடப்பட்டது.

அதன்படி ஜெரோமுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மரியாவுக்கு 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. மரியா 3 ஆண்டுகளை ஏற்கனவே சிறையில் கழித்து விட்டதால் அவரை விடுதலை செய்ய கோர்ட் உத்தரவிட்டது.

தண்டனை விவரத்தைக் கேட்டதும் குரோவரின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல அரசு வக்கீல் ஆர்.வி.கினியும் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கினி கூறுகையில், இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து மேல் முறையீடு செய்யப்படும் என்றார்.

குரோவரின் தந்தை அமர்நாத் குரோவர் கூறுகையில் இதுதான் தீர்ப்பா?. மிக அதிர்ச்சியாக உள்ளது. கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என இந்தக் கொலையாளிகளுக்கு தீர்ப்பளிக்க வேண்டும். எனது மகனைக் கொன்ற மரியாவும், ஜெரோமும் சாக வேண்டும். அவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும். இந்த தீர்ப்பு பெரும் ஏமாற்றமளிக்கிறது என்றார் கோபத்துடன்.

குரோவர் கொலை வழக்கில் ஜெரோமுக்கும், மரியாவுக்கும் மிகச் சாதாரணமான தண்டனை வழங்கப்பட்டுள்ளது அனைவரையும் வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. அதிலும், மரியாவை விடுதலை செய்திருப்பது அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 

'பசுமை கலாம்' திட்டத்துக்கு இலவச மரக்கன்றுகள்! - முதல்வருக்கு நடிகர் விவேக் கோரிக்கை


சென்னை: தமிழகம் முழுவதும் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் 'பசுமை கலாம்' திட்டத்துக்கு, தமிழக அரசு இலவசமாக மரக்கன்றுகள் தரவேண்டும் என்று நடிகர் விவேக் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், இந்தியா முழுவதும் 100 கோடி மரக்கன்றுகள் நடப்பட வேண்டுமென்று அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். இதைத்தொடர்ந்து நடிகர் விவேக் தன்னுடைய பெயரில் செயல்படும் நற்பணி மன்றங்களும், எக்ஸ்னோரா அமைப்பும் சேர்ந்து, தமிழ்நாட்டில் வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் 10 லட்சம் மரக்கன்றுகள் நட ஏற்பாடு செய்யும் என்று அறிவித்திருந்தார்.

இந்த திட்டத்துக்கு `பசுமை கலாம்' திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த திட்டத்தின் எதிரொலியாக முதல் மரக்கன்று திருச்சியில் நடப்பட்டது.

தொடர்ந்து ஆங்காங்கு உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்ற வளாகங்களில் இந்த மரக்கன்றுகளை, மாணவர்களை பயன்படுத்தி நடுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. பல தனியார் நிறுவனங்கள், தனியார் இந்த திட்டத்தில் பங்கு பெற ஆர்வத்தோடு இருக்கிறார்கள். வாகை, வேம்பு, பிளேம் ஆப் த பாரஸ்ட் போன்ற வகையான மரக்கன்றுகள் இந்த திட்டத்தின்கீழ் நடப்படுகின்றன.

இந்த நிலையில், நடிகர் விவேக் நேற்று தமிழக அரசு வனத்துறை அமைச்சர் பச்சைமால் சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தார்.

இந்த திட்டத்தை நிறைவேற்ற மாணவர்கள், இளைஞர்கள் உள்பட ஏராளமானவர்கள் தயாராக இருக்கிறார்கள். மொத்தத்தில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான திட்டம் இருக்கிறது. வனத்துறை மூலமாக எவ்வளவு மரக்கன்றுகளை இலவசமாக தர முடியுமோ, அவ்வளவு மரக்கன்றுகளை தருவதற்கு பரிசீலிக்க வேண்டும் என்று ஒரு மனுவை கொடுத்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் பச்சைமால், இதுகுறித்து முதல்வரின் உத்தரவை பெற்று தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று உறுதி அளித்ததாக விவேக் கூறினார்.
 

மங்காத்தா சீரியஸ் த்ரில்லர்! - வெங்கட் பிரபு


பொதுவாக தனது படங்கள் பற்றி பெரிதாக பில்டப் கொடுக்காதவர் வெங்கட் பிரபு. ஆனால் விதிவிலக்காக, தனது இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படமான மங்காத்தா குறித்து பல்வேறு செய்திகளை பேஸ்புக், ட்விட்டர் மூலம் வெளியிட்டு ரசிகர்களை பெரிய எதிர்ப்பார்ப்புக்குள்ளாக்கி வருகிறார்.

சமீபத்தில் தனது ட்விட்டரில் இப்படிக்கூறியுள்ளார் வெங்கட் பிரபு:

"மங்காத்தா படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதை. கொஞ்சம் ரிலாக்சுக்காக சிறு சிறு காமெடி சீன்கள் இருக்கும். ஆனால் படம் கண்டிப்பாக வெகு சீரியஸான த்ரில்லர்.

அஜீத் இப்படத்தில் வித்தியசமாக இருப்பார். படத்தின் இரண்டரை மணி நேரமும் பரபரவென்று இருக்கும்.. இது இதுவரை வந்த 'தல' படங்களை விட இது வித்யாசமான படமாக இருக்கும்.. தயாராக இருங்கள் ! " என்கிறார்.

ஆரம்பத்தில் அஜீத் பிறந்த நாளில் படம் வரும் என்றார்கள். பின்னர் ஆகஸ்ட் 15ம் தேதி என்றார்கள். இப்போது, 'ஆகஸ்ட் 12 அல்லது 19-ல் 'மங்காத்தா' ஆட்டம் துவங்கும் ' என கூறியுள்ளார்.

எல்லாம் சரி... இசை வெளியீட்டுத் தேதியையாவது சரியா சொல்லுங்கப்பா என்கிறார்கள் காத்திருக்கும் தல ரசிகர்கள்...!
 

அமிதாப் சொன்னதால் முடிவை மாத்திக்கிட்டேன்... மீண்டும் நடிக்கிறேன்! - சிரஞ்சீவி


ஹைதராபாத்: சினிமாவிலிருந்து ஓய்வு பெறும் தனது முடிவை மாற்றிக் கொண்டதாகவும், மீண்டும் நடிக்கப் போவதாகவும் நடிகர் சிரஞ்சீவி அறிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் இணையற்ற நடிகராகத் திகழ்பவர் சிரஞ்சீவி. இப்போது அரசியலில் பரபரப்பாகிவிட்டார். இதுவரை 149 படங்களில் நடித்துள்ள அவர், 150வது படத்தை கடந்த ஆண்டு அறிவித்தார்.

ஆனால் திடீரென, இரு தினங்களுக்கு முன்பு சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மக்கள் என்னை நிஜத்திலும் முதல்வராகப் பார்க்க விரும்புவதால், அரசியல் பணிகளை கவனிக்கிறேன் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று ஹைதராபாதில், அமிதாப் நடித்த புத்தா - ஹோகா தேரா பாப் படத்தின் பிரிமியர் காட்சி பிரசாத் மல்டிப்ளெக்ஸில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சிரஞ்சீவி கலந்து கொண்டார். அமிதாப் பச்சன், ராம்கோபால் வர்மா உள்பட பலரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமிதாப் பச்சன், "சிரஞ்சீவி சினிமாவிருந்து ஓய்வு பெறக் கூடாது. அவர் நடிக்க வேண்டும். அவரது அடுத்த படத்தில் நான் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுக்க தயாராக உள்ளேன்," என்றார்.

உடனே மைக் பிடித்த சிரஞ்சீவி, "அமிதாப்ஜி சொன்னதற்காக எனது முடிவை மாற்றிக் கொள்கிறேன். நிச்சயம் நான் 150வது படத்தை நடிக்கிறேன். அதை பூரி ஜெகன்னாத் இயக்குவார்" என அறிவிக்க, அரங்கம் அதிர்ந்தது கைதட்டலில்.

அடுத்து பேசிய இயக்குநர் ராம் கோபால் வர்மா, சிரஞ்சீவி தொடர்ந்து நடித்தால், அவரது 151வது படத்தை நானே இயக்குகிறேன் என்றார்.

சிரஞ்சீவியின் அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஏற்கெனவே அறிவித்தபடி, சிரஞ்சீவியின் 150 வது படத்தை அவரது மகன் ராம்சரண் தேஜா தயாரிக்கிறார். பூரி ஜெகன்னாத் இயக்குகிறார். ராம்சரணை சிறுத்த படத்தில் அறிமுகப்படுத்தியவர் பூரி ஜெகன்னாத் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ஜீவா படத்தை இயக்குகிறேன் டைரக்டர் பெருமிதம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஜீவா படத்தை இயக்குகிறேன் டைரக்டர் பெருமிதம்

6/30/2011 12:05:54 PM

‘யுவன் யுவதி’ பட இயக்குனர் ஜிஎன்ஆர் குமரவேல் கூறியது: பிருத்விராஜ் நடித்த 'நினைத்தாலே இனிக்கும்’ படத்தை சஸ்பென்ஸ், காதல் இரண்டும் கலந்து இயக்கினேன். அடுத்து நகைச்சுவையுடன் காதல் கதையாக உருவாகிறது 'யுவன் யுவதி’. இதன் கதை, வசனத்தை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். படிப்பு நண்பர்களை எப்படி சேர்க்கிறது, பிரிக்கிறது என்ற கருவுடன் தந்தை-மகன், காதலன்-காதலிக்கு இடையே நடக்கும் பிரச்னையை படம் சொல்கிறது. பரத், ரீமா கல்லிங்கல், சம்பத் நடிக்கின்றனர்.

மறைந்த இயக்குனர் ஜீவாதான் இக்கதையை முதலில் இயக்குவதாக இருந்தது. திரைக்கதை கூட உருவாக்கி இருந்தார். இது பற்றி என்னிடம் ராமகிருஷ்ணன் கூறியபோது கதையை கேட்டேன். நன்றாக இருந்தது. அதன் திரைக்கதையில் மாற்றம் செய்து இயக்கும் பொறுப்பை ஏற்றேன். கிராமத்தில் ஷூட்டிங் தொடங்கி சீசல்ஸ் கடற்கரை தீவில் முடிந்துள்ளது. ஜீவா இயக்க வேண்டிய படத்தை நான் இயக்குவது பெருமை. விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார்.

 

முதல்முறையாக மராத்தி படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா!


உலகின் மிக சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான இளையராஜா, இதுவரை 950-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவருடைய இசையில், 4,500 பாடல்கள் வெளிவந்துள்ளன.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 6 மொழி படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். இப்போது முதன்முதலாக அவர் ஒரு மராத்தி படத்துக்கு இசையமைக்கிறார்.

'ஹலோ ஜெய்ஹிந்த்'

அந்த படத்தின் பெயர், 'ஹலோ ஜெய்ஹிந்த்.' இந்த படத்தை கஜேந்திரா அஹைர் டைரக்டு செய்கிறார். நடிகை திருப்தி போயிர் தயாரிக்கிறார்.

மூத்த பாடகர்கள் சுக்விந்தர் சிங், ஹரிஹரன், கைலாஷ் கேர், அனில் ஷின்டே ஆகியோர் இளையராஜா இசையில், மராத்தி பாடல்களை பாடியிருக்கிறார்கள். இந்த பாடல்கள் மும்பையிலும், சென்னையிலும் பதிவு செய்யப்பட்டன.

மராத்தி படத்துக்கு இளையராஜா இசையமைப்பது பற்றி அந்த படத்தின் டைரக்டர் கஜேந்திரா அஹைர் கூறுகையில், "ஹலோ ஜெய்ஹிந்த், மும்பையில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட கதை. எங்கள் படத்துக்கு இளையராஜா இசையமைக்க சம்மதித்தது, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர், மிக எளிமையானவர். படத்தின் கதையைkd கேட்ட அடுத்த நிமிடமே அவர் இசையமைக்க சம்மதித்து விட்டார்.

இளையராஜா இசையமைப்பதால், எங்கள் படத்துக்கு தனி மரியாதை கிடைத்துள்ளது. படத்தின் தரம் உயர்ந்திருக்கிறது. இது எங்களுக்குப் பெருமையாக உள்ளது,'' என்றார்.

கலைத்துறை சாதனையாளர்களுக்கு மராட்டிய அரசு வழங்கும் உயரிய லதா மங்கேஷ்கர் விருதினைப் பெற்றவர் இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
 

கவிஞர் வைரமுத்துவுடன் போனில் பேசினார் ரஜினி!


சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது நெருங்கிய நண்பரான கவிஞர் வைரமுத்துவுடன் தொலைபேசியில் பேசினார்.

அப்போது, ரஜினியின் உடல்நிலை குறித்து வைரமுத்து அக்கறையுடன் விசாரித்தார். ராணா பற்றி கவலைப்படாமல், நல்ல ஓய்வெடுத்துவிட்டு திரும்புமாறு வைரமுத்து கூறினார்.

கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி சென்னையில் நடந்த 'ராணா' படப்பிடிப்பின் போது, ரஜினிகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் இரண்டு முறை சென்னை இசபெல்லா மருத்துவமனையிலும், பின்னர் போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.

அவருடைய உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதித்த போது, அவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டிருப்பதை கண்டு பிடித்தார்கள். நிலைமை டயாலிஸிஸ் செய்யும் அளவுக்குப் போனது.

மேலும் அவருக்கு நவீன சிகிச்சை தேவைப்பட்டதால், சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

சிங்கப்பூர் டாக்டர்கள் அவரை பரிசோதித்து, அவருடைய நோய்க்கான மூலகாரணத்தை கண்டறிந்து சிகிச்சை அளித்தார்கள். அதன்பிறகு, ரஜினிகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

ஆஸ்பத்திரியில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட அவர், டாக்டர்களின் அறிவுரைப்படி சிங்கப்பூரிலேயே ஒரு வீடு எடுத்து தங்கி சிகிச்சையுடன் ஓய்வு பெற்று வருகிறார்.

முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, இயக்குநர் பாலச்சந்தர், ராணா இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், ஷங்கர் ஆகியோரிடம் தொலைபேசியில் பேசி, தனது உடல்நிலை குறித்து தகவல் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இந்திய நேரப்படி மாலை 6.45 மணிக்கு கவிஞர் வைரமுத்துவுடன் போனில் பேசினார் சூப்பர் ஸ்டார்.

ரஜினி போனில் பேசியது பற்றி வைரமுத்து அளித்துள்ள பேட்டி இது:

"நேற்று முன்தினம் (புதன்கிழமை) மாலை 6.45 மணிக்கு ரஜினிகாந்த் என்னுடன் போனில் பேசினார். அவர் குரல் தெளிவாக இருந்தது. பழைய குரலைப்போல் இளமையாகவும், வளமாகவும் இருந்தது. அவருடைய குரலில் தெளிவு இருந்தது. ஆரோக்கியம் தெரிந்தது. என்னிடம் அவர் நலம் விசாரித்தார்.

அவருடைய நலம் பற்றி நான் விசாரித்தேன். உடல்நிலை நன்றாக தேறியிருப்பதாக அவர் கூறினார். மருத்துவர்களின் அறிவுரைப்படி, உணவு சாப்பிட்டு வருவதாகவும், சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்து வருவதாகவும் சொன்னார். ஆரோக்கியமாக இருப்பதாக உணர்கிறேன் என்று கூறினார்.

வாழ்த்துக்கள்

"பூரண உடல் நலம் பெறும் வரை, சிங்கப்பூரிலேயே ஓய்வு எடுங்கள். படப்பிடிப்பை விட, உங்கள் உடல்நலம் முக்கியம். நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்கள் உங்களுக்கு கூடுதல் பலமாக இருக்கிறது. நீங்கள் பூரண நலத்துடன் சென்னை திரும்புவீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்'' என்று நான் ரஜினிகாந்திடம் கூறினேன்.''

இவ்வாறு கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.