புதன்கிழமை சென்னை வருகிறார் ரஜினி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
புதன்கிழமை சென்னை வருகிறார் ரஜினி

7/11/2011 5:33:17 PM

வரும் புதன்கிழமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ரசிகர்கள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் ஆகி அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். சில வாரங்கள் டாக்டர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதால் சென்னை திரும்பவில்லை. தற்போது அவரது உடல்நிலை நூறு சதவீதம் குணமாகி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரை அழைத்து வர மூத்த மகள் ஐஸ்வர்யா நேற்று சிங்கப்பூர் சென்றார். புதன்கிழமை இரவு விமானத்தில் அவர் சென்னை திரும்புகிறார். அவர் சென்னை திரும்பியதும் ராணா படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்கபடுகின்றது .

ரஜினி வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்த ரசிகர்கள், அவருக்கு பிரமாண்ட வரவேற்பளிக்கும் ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கியுள்ளனர். விமான நிலையத்திலிருந்து அவரது வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் வரை வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.




 

மேம்பாலத்துக்காக இடிக்கப்படுகிறது விஜய்யின் திருமண மண்டபம்?


சென்னை: போக்குவரத்து நெரிசலைக் குறைக்க விரைவில் கட்டப்படவிருக்கும் மேம்பாலப் பணிகளுக்கு இடம் தேவைப்படுவதால், நடிகர் விஜய்யின் திருமண மண்டபம் இடிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

போரூர் சிக்னல் அருகே போக்குவரத்து நெரிசல் மிக அதிகம். இப் பிரச்சனையை போக்க அந்த பகுதியில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, ரூ.34 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பாலம் கட்டுவதற்கு இடம் தேவைப்படுவதால் அங்குள்ள கடைகளை அகற்ற உத்தரவிடப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நஷ்டஈடு வழங்கியது. கடைகளை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டும் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் கடைகளை காலி செய்யவில்லை.

இந்நிலையில் மேம்பாலம் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஆரம்பித்துவிட்டன. இன்று காலை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தலைமையில் 100க்கு அதிகமான ஊழியர்கள் வந்தனர். ஜேசிபி இயந்திரம் மூலம் கடைகளை இடித்து அப்புறப்படுத்தினர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதே பகுதியில் நடிகர் விஜய்க்கு சொந்தமான சங்கீதா திருமண மண்டபம் உள்ளது. மேம்பால பணிகளுக்காக திருமண மண்டபத்தின் முன்பக்கம் இடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், கடைகள் இடிக்கப்படுவதால் வியாபாரிகள் திரண்டு வந்தனர். பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். கடைகள் இடிக்கப்பட்டு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதேபோன்றதொரு மேம்பாலப் பணிகளுக்காகத்தான் முன்பு விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் மண்டபம் இடிக்கப்பட்டது. அதுவே அவரை அன்றைய ஆளுங்கட்சியான திமுக வுக்கு எதிராக பொங்கவைத்தது.

இப்போது விஜய்யின் மண்டபத்துக்கு அப்படி ஒரு ஆபத்து வந்துள்ளது.

விஜய்க்கு சொந்தமாக பல திருமண மண்டபங்கள் உள்ளன. மாவட்டந்தோறும் ஒன்று மண்டபத்தை உருவாக்கும் திட்டமும் அவருக்குள்ளது. சென்னையில் மட்டும் ஷோபா, ஜேஎஸ்ஆர் உள்பட சில திருமண மண்டபங்கள் உள்ளன.
 

சக்சேனா மீது மாப்பிள்ளை படத் தயாரிப்பாளரும் வழக்கு!!


சென்னை: சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் ராஜ் சக்சேனா மீது 3 வது வழக்கு பதிவாகியுள்ளது.

இந்த முறை புகார் கொடுத்திருப்பவர் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் நேமிச்சந்த் ஜெபக்.

தான் தயாரித்த மாப்பிளஅளை படத்தை சன் பிக்சர்சுக்கு 17 கோடி ரூபாய்க்கு விற்றதாகவும், பின்னர் படம் சரியாக போகவில்லை எனக்கூறி 3.37 கோடிரூபாயை மிரட்டி பறித்ததாகவும் கூறியுள்ளார்.

இதனை பெற்றுக்கொண்ட கோடம்பாக்கம் போலீசார் சக்சேனா மீது மிரட்டல் மற்றும் ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே இவர் மீது 2 வழக்குகள் உள்ளன, தற்போது 3வதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு வழக்கு பதிவு செய்து அவரை குண்டர் சட்டத்தில் அடைக்கக் கூடும் என்கிறார்கள்.

தம்பித்துரை முன்ஜாமீன் மனு

இதற்கிடையே சேலம் திரைப்பட விநியோகஸ்தர் சண்முகவேல் தீராத விளையாட்டுப் பிள்ளை பட வழக்கில் தங்களை கைது செய்யாமல் இருக்க முகமதுசாதிக், சசிகுமார், தம்பித்துரை ஆகிய 3 பேர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
 

'கனிமொழி' ஆகும் லட்சுமி ராமகிருஷ்ணன்!


பாஸ் என்கிற பாஸ்கரன், நான் மகான் அல்ல, யுத்தம் செய், பொன்னர் சங்கர், திரு திரு திரு உள்ளிட்ட படங்கள் மூலம் களையான முகம் கொண்ட அம்மா வேடத்தில் நடித்து பிரபலமான லட்சுமி ராமகிருஷ்ணனைத் தேடி வெயிட்டான கதாபாத்திரம் ஓடி வந்துள்ளது.

அது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி திஹார் சிறையில் அடைபட்டுள்ள கனிமொழி கதாபாத்திரம்.

தமிழ் சினிமாவில் இப்போது வயதான அம்மாக்களுக்கு யாரும் வாய்ப்பு தருவதில்லை. மனோரமா போன்றோர்கள் கோலோச்சி வந்த அம்மா கேரக்டர்களில் இப்போது இளம் வயதுடைய நடிகைகள்தான் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட அம்மா நடிகைகளில் ஒருவர்தான் இந்த லட்சுமி ராமகிருஷ்ணன். அடிப்படையில் மலையாளியான லட்சுமி, தமிழ் சினிமாவின் இளம் நாயகர்களின் அம்மாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நான் மகான் அல்ல படத்தில் கார்த்திக்கு அம்மாவாக நடித்தார். பாஸ் என்கிற பாஸ்கரனில் ஆர்யாவுக்கு அம்மாவானார். யுத்தம் செய் படத்தில் மொட்டைத் தலையுடன் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்தார்.

இந்த நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை அடிப்பையாக வைத்து தயாரிக்கப்படவுள்ள புதிய படத்தில் கனிமொழி வேடத்தில் நடிக்க இவரைக் கேட்டுள்ளனராம்.

சூடான அரசியல் நிகழ்வுகளை சுடச் சுட படமாக்குவதில் தமிழ் சினிமாக்காரர்களும், தெலுங்குப் படத்துறையினரும் கில்லாடிகள். அந்த வகையில் இப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை படமாக்கப் போகின்றனர்.

இதில் கனிமொழி வேடத்தில் நடிக்குமாறு லட்சுமி ராமகிருஷ்ணனை அணுகியுள்ளனராம். ஜான் மனோகர் என்ற பத்திரிக்கையாளர் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கியது.

இப்படத்தில் நீரா ராடியா வேடத்தில் மலேசிய நடிகை சாந்தினி நடிக்கவுள்ளார். இவர் சசிக்குமாரின் நாடோடிகள் படத்தில் நடித்துள்ளார். ரியாஸ் கான், முன்னாள் அமைச்சர் ராசா வேடத்தில் வரப் போகிறாராம். காமடி நடிகர் செந்தில், சிங்கமுத்து ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனராம்.

அனேகமாக மு.க.அழகிரி வேடத்தில் சிங்கமுத்து நடிப்பார் என்று தெரிகிறது. சத்தியராஜை தலைமை தேர்தல் ஆணையர் வேடத்திற்குக் கூப்பிட்டுள்ளனராம்.

கனிமொழி வேடத்தில் நடிப்பது குறித்து லட்சுமி கூறுகையில், எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தபோது நான் வெளியூரில் இருந்தேன். இப்போது படத் தொடக்க விழாவில் பங்கேற்க சென்னை வந்துள்ளேன். விரைவில் இதுகுறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவேன் என்றார்.

இந்த வேடத்தில் நடிப்பதால் பிரச்சினை வந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு நான் ஒரு நடிகை. எந்த வேடத்தில் நடிப்பது என்பதி்ல எனக்குப் பிரச்சினை இல்லை. எனது பணி நடிப்பது என்றார் லட்சுமி புன்னகையுடன்.
 

முகமூடியில் ஜீவா ஜோடி அமலா பால்?


அமலா பால்தான் இன்றைய ஹீரோக்களின் சாய்ஸ் எனும் அளவுக்கு முன்னணி நடிகர்கள் அவரையே நாடுகின்றனர்.

மிஷ்கின் இயக்கும் முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க அமலா பாலிடம் பேச்சு நடப்பதாகத் தெரிகிறது.

சூப்பர் ஹீரோ சப்ஜெக்டான முகமூடியில் ஜீவாவுக்கு இணையான வேடத்தில் நடிக்கிறார் நரேன். இந்த இருவரையும் பேலன்ஸ் செய்யும் அளவுக்கு வலுவான பாத்திரம் என்பதாலும், மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பதால் கிடைக்கும் இமேஜையும் நினைத்துப் பார்த்தவர், கால்ஷீட்டுகளை அட்ஜஸ்ட் செய்து தர சம்மதித்துள்ளாராம்.

ஆனாலும் சம்பளம் உள்ளிட்ட பிற விஷயங்களை விக்ரமுடன் நடித்துள்ள தெய்வத் திருமகள் படம் வந்தபிறகு பேசிக் கொள்ளலாம் என்கிறாராம் அமலா. காரணம், அந்தப் படம் நன்றாக ஓடினால் சில லட்சங்களை தாராளமாகக் கூட்டலாம் அல்லவா... அதான்!

நல்ல டெக்னிக்தான்!
 

புதன்கிழமை சென்னை வருகிறார் ரஜினி.. ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு!!


சென்னை: வரும் புதன்கிழமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார். இதையொட்டி அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இரு மாதங்களுக்கு முன் ராணா என்ற புதிய படத்துக்கு பூஜை போட்டார் ரஜினி. இந்தப் படத்துக்கு பட்ஜெட் 120 கோடி ரூபாய். ரஜினியின் மகள் சௌந்தர்யாவும் ஈராஸ் இன்டர்நேஷனலும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் ரஜினி. தீபிகா படுகோன் ஜோடி. கேஎஸ் ரவிக்குமார் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் துவக்க விழாவன்றுதான் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மூச்சுத் திணறல், செரிமானக் கோளாறு என்று ஆரம்பித்தது பிரச்சனை.

படப்பிடிப்புத் தளத்திலிருந்து உடனே வெளியேறிய ரஜினி, உடனடியாக சென்னை இசபெல்லா மருத்துமனையில் சேர்ந்தார். அன்று மாலையே அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். ஆனால் மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட, மீண்டும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒரு வார சிகிச்சைக்குப் பின் காளிகாம்பாள் கோயிலுக்குப் போய் சிறப்பு பூஜையும் பெசன்ட் நகர் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடும் முடித்து வீட்டுக்கு வந்தார்.

ஆனால் மே 13ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்தது. உடனடியாக அவர் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முழு உடல் பரிசோதனை நடத்தி, பிரச்சனைகளைக் கண்டறிந்தனர்.

அவருக்கு சிறுநீரகக் கோளாறும், நுரையீரலில் நீர்க்கோர்ப்பும் இருப்பது தெரிய வந்தது. நுரையீரலில் இருந்த நீரை வெளியேற்றினர். ஆனாலும் சீராகவில்லை. எனவே உடனடியாக அவருக்கு டயாலிஸிஸ் செய்யப்பட்டது.

சென்னையில் மட்டும் தொடர்ந்து 5 முறை டயாலிஸிஸ் செய்யப்பட்ட பிறகு, அவர் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பினார். ஆனாலும், அவரது சிறுநீரகங்கள் இயங்கவில்லை.

எனவே சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உடன் சென்னையிலிருந்து சிறுநீரக ஸ்பெஷலிஸ்டுகளும் சென்றனர். மே 28ம் தேதி அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கும் அவருக்கு மூன்று முறை டயாலிஸிஸ் செய்தனர். அதன் பிறகு இந்த பிரச்சினையின் மூல காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டனர் சிங்கப்பூர் மருத்துவர்கள்.

அதன் பிறகு, அந்த பிரச்சனைக்கு மட்டும் சிகிச்சை அளிக்க, படிப்படியாக அவரது உடல்நிலை சீரடையத் தொடங்கியது.

ரசிகர்கள் கண்ணீர் பிரார்த்தனை

இதற்கிடையே ரஜினியின் உடல்நிலை சீரடைய வேண்டி, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பிரார்த்தனையில் தீவிரமாக ஈடுபட்டனர்.

கோயில்களில் அன்னதானம், மண்சோறு சாப்பிடுதல், தீமிதித்தல், சர்வமத பிரார்த்தனைகள், உலகளாவிய கூட்டுப் பிரார்த்தனைகள், பாதயாத்திரை என அவரவருக்குத் தெரிந்த வழிகளில் பிரார்த்தனை நடத்தினர். இதுவரை கிட்டத்த 2 லட்சத்துக்கும் அதிகமான முறை பிரார்த்தனைகள் ரஜினிக்காக நடத்தப்பட்டன.

நலமடைந்தார்...

இன்னொரு பக்கம் சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி பூரண நலமடைந்தார், கடந்த ஜூன் 14ம் தேதியே அவர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். ஆனாலும் தொடர்ந்து அவரது உடல்நிலையைக் கண்காணிக்க, சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அருகாமையில் உள்ள குடியிருப்பில் வாடகை வீட்டில் ஒரு மாத காலம் தங்கி மருத்துவ ஆலோசனை பெற்றார். பூரண ஓய்வெடுத்து வந்தார்.

சில தினங்களுக்கு முன் அவரை சோதித்த மருத்துவர்கள், இனி அவர் சென்னை திரும்பலாம். படங்களில் முன்புபோல நடிக்கலாம் என கிரீன் சிக்னல் கொடுத்தனர்.

இந்தத் தகவல் அவரது ரசிகர்களை துள்ள வைத்தது.

எப்போது அவர் சென்னை திரும்புவார் என காத்திருந்தனர் ரசிகர்கள். அவர் திரும்பும் தேதியை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என லதா ரஜினியிடம் நேரில் தெரிவித்தனர். அவரும் அதற்கு தனது ஒப்புதலைத் தெரிவித்தார்.

இப்போது ரஜினி சென்னை திரும்பும் தேதி ஜூலை 13 என உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரமாண்ட வரவேற்பு

இந்த செய்திக்காகவே காத்திருந்த அவரது ரசிகர்கள், சென்னையில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பளிக்க தயாராகி வருகின்றனர். சென்னை மன்ற நிர்வாகிகள் என் ராமதாஸ், சைதை ஜி ரவி போன்றவர்கள் கட் அவுட்கள், பேனர்களை தயார் செய்து வருகின்றனர்.

மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து அவரது வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் வரை வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

புதன்கிழமை இரவு விமானத்தில் அவர் சென்னை திரும்புகிறார். அவர் சென்னை திரும்பியதும் ராணா படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ரஜினியிடமிருந்து விரிவான அறிக்கை வரக்கூடும் என்று தெரிகிறது.
 

கோலிவுட் திரும்பிய மம்தா மோகன்தாஸ்!


சிவப்பதிகாரம் படத்தில் அறிமுகமானவர் மம்தா. ஆனால் அந்தப் படம் படுதோல்வியைத் தழுவியதால், தெலுங்குப் பக்கம் போனார்.

அங்கு நடிகை என்பதைவிட, பின்னணிப் பாடகியாக ஜொலிக்க ஆரம்பித்தார். அரசு வி்ருதெல்லாம் வாங்கினார் சிறந்த பாடகிக்கான பிரிவில், தமிழிலும் கோவா, காளை போன்ற படங்களில் பாடினார்.

குரு என் ஆளு படம் மூலம் திரும்ப தமிழுக்கு வந்தார். அந்த முயற்சியும் தோற்றுப் போனது. சொந்த ஊரான கேரளாவில் வாய்ப்புகள் வர, அங்கும் சில படங்கள் செய்தார்.

இருந்தாலும், தமிழில் தனக்கான இடத்தைப் பிடிக்காமல் விடுவதில்லை என்பதில் தெளிவாக இருந்த அவருக்கு நல்ல வாய்ப்பாக வந்தது, தடையற தாக்க படம்.

இந்தப் படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி பின் அருண் விஜய் ராசிக்கு பயந்து ஓடிப்போன பிராச்சி தேசாய்க்குப் பதில், மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார்.

இதே படத்தில் இன்னொரு ஹீரோயினா முன்னாள் மிஸ் இந்தியா ராகுல் பிரீத் சிங் நடிக்கிறார்.
 

'விஜய்'யுடன் இணையும் அஜீத்!!


அஜீத்தும் விஜய்யும் சேர்ந்துதான் அடுத்தபடம் பண்ணுகிறார்களோ என தப்பா நினைத்துவிட வேண்டாம். இந்த விஜய் இயக்குநர். மதராசபட்டணம் பட இயக்குநர் விஜய்யும் அஜீத்தும் மீண்டும் சேரப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய்க்கு அறிமுகப் படம் தந்தவரே அஜீத்தான். இவர் நடித்த கிரீடம் படமே விஜய்யின் முதல் படம்.

மதராசப்பட்டணம் படத்தைப் பார்த்ததிலிருந்தே, விஜய்யுடன் மீண்டும் இணைய வேண்டும் என கூறிவந்தாராம் அஜீத். பில்லா 2 படம்தான் அஜீத்தின் அடுத்த படம் என எல்லாரும் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென விஜய்யை அலுவலகத்துக்கு வரவழைத்த அஜீத், அதிரடி ஆக்ஷன் கதையோடு வாங்க, நாம படம் பண்றோம் என்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அடுத்தடுத்த சந்திப்புகளில் விஜய்யின் கதை, அதற்கு அவர் கொடுத்திருந்த ட்ரீட்மெண்ட் எல்லாமே பிடித்துப் போனதால், படத்தை துவங்க பச்சைக் கொடியும் காட்டிவிட்டார் 'தல.'

அப்படியானால் பில்லா 2?

அதுவும் உண்டாம். ஆனால் அதற்கு முன்பே விஜய்யின் படத்தை முடித்துவிடத் திட்டமிட்டுள்ளார்களாம்.
 

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு ரூ 8 லட்சம் உதவி!


சென்னை: வருகிற ஜூலை 17-ம் தேதி சேலம் மாவட்ட மாணவ மாணவிகளுக்கு ரூ 8 லட்சம் மதிப்பிலான உதவிகளை வழங்குகிறார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கி வருகிறார். மாணவ- மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களும் துவங்கியுள்ளார்.

சென்னை, புதுக்கோட்டா, புதுச்சேரி, பொள்ளாச்சி என பல்வேறு பகுதிகளில் இந்த உதவி வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தினார்.

இப்போது சேலத்தில் வருகிற 17-ந்தேதி ஏழை மாணவ- மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு தட்டுகள், மேஜை நாற்காலி ஆகிய பொருட்களும் வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்றுப் பேசுகிறார். விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் விஜய் ரசிகர்மன்ற நிர்வாகிகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மூன்று ரோடு பகுதியில் இதற்கான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
 

'கடைசியா ஒரு குத்தாட்டம் போட முடியுமா!' - நயனுக்கு வலை விரித்த சிம்பு, தரணி!!


'எல்லாம் முடிஞ்சி போச்சு' என சிம்புவின் வாய்தான் சொல்கிறதே தவிர, எப்படியாவது நயனுடன் மீண்டும் பேசிப் பழக வாய்ப்பைத் தேடுகிறது அவர் மனசு. விரைவில் நயன், பிரபுதேவாவின் மனைவியாகப் போகிறார் என்பது தெரிந்தும்.

சூர்யாவை திருமணம் செய்யப் போகிறார் ஜோதிகா என்று உறுதியான பிறகு சரவணாவில் அவரை ஜோடியாக்கி டூயட் பாடியதைப் போல, நயன்தாராவையும் கடைசியாக தனது ஒஸ்தி படத்தில் ஒரேயொரு பாட்டுக்கு நடிக்குமாறு வேண்டி விரும்பி அழைத்தாராம் சிம்பு. அவரது இந்த ஆசையை எந்த விலை கொடுத்தும் நிறைவேற்ற தயாராக நின்றாராம் இயக்குநர் தரணி.

சரி, என்னதான் சொன்னார் நயன்?

"ரொம்ப ஸாரி... எனது கடைசி ரிலீஸாக ஸ்ரீராமராஜ்யம் படம்தான் இருக்க வேண்டும். அதில் எனது வேடம் சீதா தேவி. அந்த புனிதமான இமேஜோடு சினிமாவுக்கு குட்பை சொல்லவே விரும்புகிறேன். கண்டபடி குத்தாட்டம் போட என்னைக் கூப்பிடாதீர்கள்" என்று சொல்லிவிட்டாராம் 'கட் அண்ட் ரைட்டாக'.

ஆனால் இதற்காக மனம் தளராமல், அந்த ஆஃபரை அப்படியே ஸ்ரேயாவுக்கு கொடுத்துள்ளார் சிம்பு!
 

ஜான் ஆபிரகாமுடன் கல்யாணமா? - ஜெனிலியா ஆவேசம்


ஏதாவது ஒரு படத்தில் ஹீரோ ஹீரோயின் திருமணம் செய்து கொள்வது போல, படுக்கையில் இருப்பது போல அல்லது முத்தம் கொடுப்பது போல புகைப்படங்கள் முதலில் வெளியான உடன், இருவரும் ரகசியமாய் திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பு கிளம்பும்.

அடுத்த இரு தினங்களில், அந்த ஸ்டில் படத்தில் வரும் ஒரு காட்சி என்பது தெரிய வருவதற்குள், வேறு பரபரப்பு வந்து அதை மறக்கடித்துவிடும்.

தமிழ், பாலிவுட் சினிமாக்களில் வெளியாகும் ஹீரோ ஹீரோயின் கிசுகிசுக்களின் தன்மை இப்படித்தான் உள்ளது.

அசின், த்ரிஷா, பிபாஷா பாசு போன்றவர்கள் இதற்கு முன்பு இப்படி கிசுக்கப்பட்டார்கள். ஆனால் இன்னமும் அதே ரக கிசுகிசுக்கள் அவர்களைத் துரத்திக் கொண்டுதான் உள்ளன.

இப்போது ஜெனிலியா சிக்கியுள்ளார் இந்த ரக கிசுகிசு ஒன்றில்.

அவருக்கும் பாலிவுட் முன்னணி நடிகர் ஜான் ஆபிரகாமுக்கும் திருமணம் நடந்து விட்டதாகக் கூறி ஒரு படத்தையும் வெளியிட்டுள்ளனர் பத்திரிகை மற்றும் இணையங்களில்.

இதைக் கேள்விப்பட்டதும் கடுப்பான ஜெனிலியா, "போர்ஸ் என்ற படத்துக்காக எடுக்கப்பட்ட ஸ்டில் அது. புரோகிதரை வைத்து நிஜ திருமணம் போலவே அந்தக் காட்சியை எடுத்தனர். ஆனால் அது சினிமா காட்சி என்று புரோகிதருக்கு சொல்லவில்லை போலிருக்கிறது. அதற்காக என்ன ஏது என்று விசாரிக்காமலேயே செய்தி வெளியிடலாமா?" என்றார்.

ஜெனிலியாவுக்கும் ரிதேஷ் தேஷ்முக்கும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் செய்தி வெளியாகியுள்ளதும், அதை ஜெனிலியா மறுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

ரஜினிக்காக காத்திருக்கிறேன் - தீபிகா படுகோன்


ரஜினிக்காக காத்திருக்கிறார் தீபிகா... இது சாதாரண காத்திருப்பல்ல. காஸ்ட்லி காத்திருப்பு.

ரஜினியின் நாயகியாக ராணாவில் ஒப்பந்தமான பிறகு தீபிகா வேறு எந்தப் படத்திலும் கவனம் செலுத்துவதை நிறுத்திக் கொண்டார்.

ரஜினியின் கனவுப் படமான இது, இந்தியா முழுக்க தனது கவுரவத்தை பெரிய அளவு உயர்த்தும் என்பதே அதற்குக் காரணம். ஆனால் எதிர்பாராத விதமாக ரஜினிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு இரண்டு மாதங்கள் தாமதமாகிவிட்டது.

ஒரு நடிகையாக இது அவருக்கு மிகப் பெரிய இழப்பு. ஆனால் இதை அவர் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

இந்த நேரம் பார்த்து அவருக்கு ரஜினியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வர, இருந்த கொஞ்ச நஞ்ச வருத்தமும் பறந்துவிட்டது தீபிகாவுக்கு.

அவர் கூறுகையில், "ரஜினி சார் குரலை தொலைபேசியில் கேட்டேன். படப்பிடிப்புக்கு முன்பு என்னிடம் போனில் அவர் பேசியபோது கேட்ட அதே உற்சாகக் குரல். உண்மையிலேயே அன்று அதைவிட சந்தோஷமான விஷயமே இல்லை என்று தோன்றியது.

இது எந்தப் படத்தில் நடிக்கும் முன்பும் இல்லாத ஒரு எதிர்ப்பார்ப்பும், பரபரப்பும் எனக்கு உள்ளது. இந்தப் படத்தின் நாயகி வாய்ப்பை எனக்குத் தந்த சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு நன்றி. அவருடன் சேர்ந்து நடிக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன்," என்றார்.
 

தடையற தாக்கவில் பிராச்சிக்கு பதில் மம்தா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தடையற தாக்கவில் பிராச்சிக்கு பதில் மம்தா!

7/11/2011 10:11:36 AM

அருண்விஜய் ஹீரோவாக நடிக்கும் படம், 'தடையற தாக்க'. மகிழ் திருமேனி இயக்குகிறார். இந்த படத்துக்கு இந்தி நடிகை பிராச்சி தேசாய் ஹீரோயினாக ஒப்பந்தமானார். சென்னையில் ஷூட்டிங்குக்கு வந்த பிராச்சி, தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, மும்பை திரும்பினார். பின்னர் படக்குழுவினருடன் தொடர்பு கொள்ளவில்லை. இப்போது அவரை நீக்கி விட்டு மம்தாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இதுபற்றி அருண்விஜய்யிடம் கேட்டபோது, 'படத்துக்கு முதலில் மம்தாவிடம்தான் கேட்டோம். அவர் தமிழ்ப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் என்றும் மலையாளத்தில் மட்டுமே நடிக்கிறார் என்றும் அவர் தரப்பில் தகவல் வந்தது. இதனால் இந்தி நடிகையை தேர்ந்தெடுத்தோம். இப்போது மம்தாவிடம் கேட்டபோது நடிக்க சம்மதித்தார். இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன் போட்டோ ஷூட் நடந்தது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும்' என்றார். இதில் ராகுல் பிரீத் சிங் என்ற இன்னொரு ஹீரோயினும் நடிக்கிறார்.




 

போலீஸ் கேரக்டரில் நடிக்க ஹீரோக்கள் ஆர்வம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

போலீஸ் கேரக்டரில் நடிக்க ஹீரோக்கள் ஆர்வம்!

7/11/2011 10:07:36 AM

போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்க, சமீப காலமாக ஹீரோக்களிடம் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 'சிங்கம்' படத்தில் சூர்யா நடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதே கேரக்டரை இந்தியில் அஜய்தேவ்கன் நடித்து விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. அதைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளிவந்த 'சிறுத்தை' படத்தில் அவர் ஏற்ற போலீஸ் வேடமும் வரவேற்பை பெற்றது. இந்த கேரக்டரை இந்தியில் பிரபுதேவா இயக்கத்தில் அக்ஷய்குமார் செய்கிறார்.

'யுத்தம் செய்' படத்தில் சேரன் சி.பி.சி.ஐ.டி போலீஸ் அதிகாரியாக நடித்தார். 'விருத்தகிரி'யில் விஜயகாந்த்தும் 'பயணம்' படத்தில் நாகார்ஜுனாவும், பிரகாஷ்ராஜும் அதிரடிப்படை அதிகாரிகளாக நடித்தார்கள். 'பவானி' படத்தில் சினேகா பெண் போலீஸ் அதிகாரியாக நடித்தார். மிடுக்கான நடை, ஸ்டைலான மேனரிசம் போன்றவற்றை காட்ட முடியும் என்பதாலும் லாஜிக் மீறாத ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கலாம் என்பதாலும் போலீஸ் அதிகாரிகள் கேரக்டரில் நடிக்க ஹீரோக்களுக்கு ஆர்வம் இருக்கிறது.

தற்போது தயாரிப்பில் உள்ள 'வித்தகன்' படத்தில் பார்த்திபனும், 'ஒஸ்தி' படத்தில் சிம்புவும் போலீஸ் அதிகாரிகளாக நடித்து வருகிறார்கள். ரிலீஸ் ஆக உள்ள 'மாசி' படத்தில் அர்ஜுன் போலீஸ் அதிகாரி வேடம் ஏற்றுள்ளார். போலீஸ் அதிகாரிகள் கேரக்டரில் நடிக்க ஹீரோக்கள் ஆர்வமாக இருப்பதால், பெரிய ஹீரோக்களுக்கு பொருந்துகிற போலீஸ் அதிகாரிகள் கேரக்டர் கொண்ட கதைகளை உதவி இயக்குனர்கள் வைத்துக்கொண்டு வாய்ப்பு தேடி வருகிறார்கள். போலீஸ் அதிகாரிகள் கேரக்டரில் ஹீரோக்கள் நடிக்கும் படம் ஓரளவுக்கு வரவேற்பை பெறுகிறது என்கிற சென்டிமென்டும் இந்த டிரண்டுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

 

தமிழில் டப் ஆகிறது மேக்னாவின் இந்தி படம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழில் டப் ஆகிறது மேக்னாவின் இந்தி படம்!

7/11/2011 10:05:26 AM

இந்தியில் ரிலீசான 'மாஷுகா' படம், தமிழில் 'மோக மந்திரம்' பெயரில் டப் ஆகிறது. ஆதித்யா பால் ஹீரோ. மேக்னா நாயுடு, வைத்யா மாலவடே ஹீரோயின்கள். ஒளிப்பதிவு, அப்சல் கவுர். இசை, சாஜித் வாஜித். அப்சல் அஹமத் இயக்குகிறார். தமிழில் தீபு சினி ஆர்ட்ஸ் சார்பில் தீபக்குமார் வெளியிடுகிறார். இரு பெண்களுக்கும், ஓர் ஆணுக்கும் இடையே நடக்கும் உணர்ச்சிகரமான காதல் போராட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம், ஜூலை 15ம் தேதி ரிலீசாகிறது.

 

முத்தக் காட்சியை தப்பாக பார்க்காதீர்கள்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

முத்தக் காட்சியை தப்பாக பார்க்காதீர்கள்!

7/11/2011 10:04:17 AM

ரம்யா நம்பீசன் 'சப்பா குரிசுÕ மலையாள படத்தில் முத்தக் காட்சியில் நடித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ஒரு கதையை முதலில் கேட்டு ஒப்புக் கொண்ட பிறகு, அந்த கதைக்கு தேவையான காட்சியில் நடித்துக் கொடுப்பதுதான் ஒரு நடிகையின் கடமை. அதைத்தான் நான் செய்திருக்கிறேன். Ôசப்பா குரிசுÕ படத்தில் நானும் இயக்குனர் பாசில் மகன் சகத் பாசிலும் நடிக்கிறோம். இருவருக்கும் இடையிலான காதல் உணர்வினை வெளிப்படுத்த ஓர் இடத்தில் லிப் லாக் கிஸ் காட்சி வேண்டும் என இயக்குனர் சொன்னார். நடித்தேன். இதை ஏன் பெரிய விஷயமாக பார்க்கிறார்கள் என தெரியவில்லை. காதலர்களுக்கு இடையே சர்வசாதாரணமாக நடக்கும் ஒரு விஷயத்தை சினிமாவில் மட்டும் தப்பாக பார்க்காதீர்கள். கதைக்கு தேவையான எந்த காட்சியிலும் நடிப்பேன் என்பதுதான் எனது பாலிசி. மலையாளத்தில் இரு படங்களில் நடித்து வருகிறேன். கன்னடத்தில் இரு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். இவற்றை முடித்து விட்டு தமிழ் படத்தில் நடிப்பேன்.

 

பிகினியில் நடிக்க மாட்டேன்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பிகினியில் நடிக்க மாட்டேன்!

7/11/2011 10:02:49 AM

'சிங்கம்' ரீமேக்கில் அஜய்தேவ்கன் ஜோடியாக இந்தியில் அறிமுகமாகிறார் காஜல் அகர்வால். இந்தப் படம் ஜூலை 22-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் நடித்தது பற்றி காஜல் கூறியதாவது: அஜய்தேவ்கனுடன் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. ஏற்கனவே தமிழில் அனுஷ்கா நடித்த வேடம்தான் என்றாலும் நான் எனது பாணியில் நடித்தேன். எல்லாருக்குமே இந்தியில் நடிக்கும் ஆசை இருக்கும். அந்த ஆசை எனக்கும் இருந்தது என்றாலும் தென்னிந்திய படங்கள்தான் என் வளர்ச்சிக்கு காரணம். இந்தியில் நடிக்க வந்துவிட்டதால் பிகினியில் நடிப்பீர்களா? இந்தி படங்களில் முத்தக்காட்சி இருக்குமே என்றெல்லாம் கேட்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் கண்டிப்பாக பிகினியில் நடிக்க மாட்டேன். அதேபோல முத்தக்காட்சியிலும் நடிக்க மாட்டேன். நான் நடித்த படத்தை என் குடும்பத்தினர் பார்க்கும்போது முகம் சுழிக்காமல் இருக்க வேண்டும். அதற்காகதான் சில கட்டுப்பாடுகளுடன் நடித்து வருகிறேன். இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

 

மாடர்ன் தியேட்டர்ஸில் நட்சத்திரங்களின் மலரும் நினைவுகள்!


தமிழ் சினிமாவில் மாடர்ன் தியேட்டர்ஸ் பங்கு மகத்தானது. தமிழில் முதல் பேசும் உருவானது இங்குதான். பெயர் கவி அகல்யா. முதல் வண்ணப்படம் அலிபாபாவும் 40 திருடர்களையும் உருவாக்கியது இதே மாடர்ன் தியேட்டர்ஸ்தான்.

எம்ஜிஆர், என்டிஆர், கருணாநிதி, ஜானகி எம்ஜிஆர் என நான்கு முதல்வர்களின் முதல் படங்களை உருவாக்கிய பெருமை இந்த மாடர்ன் தியேட்டர்ஸுக்கு உண்டு.

1935-ல் நிறுவப்பட்ட மாடர்ன் தியேட்டர்ஸ், 102 தமிழ் படங்கள், 1 இந்திப் படம், 1 ஆங்கிலப் படம், பல தென்னிந்திய மொழிப் படங்களின் தயாரிப்புக் கூடமாக திகழ்ந்தது. காளி கோயில் கபாலி என்ற படத்தோடு தனது தயாரிப்புப் பணியை நிறுத்திக் கொண்டது.

அதன் பிறகு மாடர்ன் தியேட்டர்ஸ் இருந்த இடம் குடியிருப்புப் பகுதியாக மாறிப் போனது. இன்று மிச்சமிருப்பது மாடர்ன் தியேட்டர்ஸின் கம்பீரமான முகப்புப் பகுதி மட்டுமே.

ஒருகாலத்தில் சினிமாவின் தலைமைப் பீடமாகத் திகழ்ந்த அந்தப் பிரதேசத்தின் நினைவுகளை அசைபோட தமிழ் சினிமா ஆர்வலர்கள் இப்போதும் தவறுவதில்லை. சிலர், மாடர் தியேட்டர்ஸுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்றும் தங்கள் படங்களின் துவக்க காட்சியை இங்கே வைப்பதும் உண்டு.

அந்த வகையில், சமீபத்தில் 'அழகு மகன்' என்ற சினிமா படப்பிடிப்புக்கான பூஜை ஞாயிற்றுக்கிழமை காலை சேலம் ஏற்காடு சாலையில் அமைந்துள்ள மாடர்ன் தியேட்டர்ஸில் நடந்தது.

இதில் நடிகைகள் சி.ஐ.டி.சகுந்தலா, ஜெயக்குமாரி, பின்னணி பாடகி எல்.ஆர். ஈஸ்வரி, இசை அமைப்பாளர் சங்கர்கணேஷ், நடிகர்கள் இளவரசு, சிங்கம்புலி, இயக்குனர் கவுதமன், ஆசைத்தம்பி, விஜய்ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிஐடி சகுந்தலா கூறுகையில், "சேலம் மாடர்ன் தியேட்டர்ஸை வாழ்நாளெல்லாம் மறக்கமாட்டேன். சாகும்போது கூட மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவுடன் தான் சாவேன். அந்தளவிற்கு என் வாழ்க்கையிலும், என்னை போல் மற்றவர்கள் வாழ்க்கையிலும் மாடர்ன் தியேட்டர்ஸ் அங்கம் வகித்துள்ளது. மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத்தையும் நாங்கள் மறக்க மாட்டோம். பல கலைஞர்களை உருவாக்கிய மாமனிதர். அவர் கையால் குட்டுப்பட்டவர்கள் தான் இன்று திரையுலகில் இருப்பவர்கள். பல சாதனை கலைஞர்களை இந்த மாடர்ன் தியேட்டர்ஸ்தான் உருவாக்கி இருந்தது. இந்த இடத்தில் நிற்பதையே பெருமையாக கருதுகிறேன்," என்றார்.

விழாவில் கலந்து கொண்ட சங்கர் கணேஷ், "மாடர்ன் தியேட்ர்ஸின் மிச்சமாக இப்போதுள்ள இந்த முதப்புப்பகுதிதான் தமிழ் சினிமாவின் அடையாளம். மாடர்ன் தியேட்டர் தயாரித்த பல படங்களை பார்த்து வியந்திருக்கிறேன். மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம் பணியாற்றிய இந்த இடத்தில் நிற்பதே பெருமை," என்றார்.
 

விஜய் ரசிகர்கள் 50 பேர் கண்தானம்


விஜய் பிறந்த நாளைக் கொண்டாடும் விதத்தில் அவரது ரசிகர்கள் 50 பேர் நேற்று கண்தானம் செய்தனர்.

நாகர்கோயில் அருகே ஆசாரி பள்ளத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டம் ஆசாரி பள்ளத்தில் நடந்தது. இதில் இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் கலந்து கொண்டார். கூட்டத்தில் 50 பேர் கண் தானம் செய்வதாக முடிவு எடுக்கப்பட்டது.

இதையடுத்து ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் முன்னிலையில் விஜய் ரசிகர்கள் 50 பேரும் கண் தானம் செய்தனர்.

கண்தானம் அளித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய சந்திரசேகரன், உங்களைப் போன்ற ரசிகர்கள் கிடைப்பது மிகவும் அரிதான விஷயம். இந்த நல்ல காரியத்தை தொடர்ந்து செய்யுங்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலத்தை விஜய் அமைத்துத் தருவார், என்றார்.
 

ரஜினிகாந்த்தை அழைத்து வர சிங்கப்பூர் போனார் மகள் ஐஸ்வர்யா


சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தை அழைத்து வர சிங்கப்பூர் சென்றார் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி, 'ராணா' படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது, திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னையில் குணப்படுத்த முடியாததால், அவர் சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்குள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிங்கப்பூர் டாக்டர்கள், அவருடைய நோய்க்கான மூலகாரணத்தை கண்டுபிடித்து சிகிச்சை அளித்தார்கள். அதன் பிறகு அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

என்றாலும், அவர் ஒருமாத காலம் சிங்கப்பூரிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் கேட்டுக்கொண்டார்கள். அதன்படி, ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் சிங்கப்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். டாக்டர்கள் தினமும் அந்த வீட்டிற்கு சென்று ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளித்து வந்தார்கள்.

சிகிச்சை முழுவதும் முடிவடைந்து ரஜினிகாந்த் பூரண குணமடைந்ததால், அவர் சென்னை திரும்பலாம் என டாக்டர்கள் கூறிவிட்டனர். ஆனாலும் அவர் சென்னை திரும்பும் தேதி இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே ரஜினிகாந்த் சென்னை திரும்புவது பற்றி அவருடைய மருமகன் நடிகர் தனுஷிடம் கேட்டபோது, 'ரஜினிகாந்த் உடல்நிலை முழுவதுமாக தேறிவிட்டது. அவர் விரைவில் சென்னை திரும்புவார். அவரை அழைத்து வருவதற்காகத்தான் என் மனைவி ஐஸ்வர்யா நேற்று சிங்கப்பூர் புறப்பட்டு போய் இருக்கிறார்' என்று தெரிவித்தார்.