நடிகர் திடீர் கண்ணையா மரணம்!

நடிகர் திடீர் கண்ணையா மரணம்!

சென்னை: பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் திடீர் கண்ணையா நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 76.

நுரையீரல் நோய்த் தொற்று காரணமாக சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த "திடீர்' கண்ணையாவுக்கு கடந்த மாதம் நுரையீரலில் சளி அதிகமானதால் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதற்காக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவர் காலமானார்.

சென்னையைச் சேர்ந்த கண்ணையா சிறு வயதில் இருந்தே பல்வேறு நாடகக் குழுக்களில் பணியாற்றியுள்ளார்.

'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் முதன் முதலாக திரைத்துறைக்கு அறிமுகமான அவர், இதுவரை 500-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.

நாடகத் துறையில் இருந்தபோது அதில் வரும் திருப்புமுனை காட்சிகளில் கண்ணையா தோன்றுவதாக காட்சிகள் அமைக்கப்படுவது வழக்கமாக இருந்தது. இதனால் அவர் 'திடீர்' கண்ணையா என்றழைக்கப்பட்டார்.

ஒரு படத்தில் வடிவேலுவிடம் தனது ஆட்டைப் பறிகொடுத்துவிட்டு, பின் பஞ்சாயத்தில் அதைச் சொல்லமுடியாமல் அவர் படும்பாடு மிகப் பிரபலமான நகைச்சுவையாக இன்று வரை திகழ்கிறது.

கண்ணயாவுக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர்.

அயனாவரம் சக்ரவர்த்தி நகரில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு திங்கள்கிழமை (நவம்பர் 18) காலை நடைபெறுகிறது.

 

டிசம்பர் 20-ம் தேதி பிரியாணி!

நாம் முன்பே சொன்னதுபோல கார்த்தி - ஹன்சிகா நடித்த பிரியாணி படத்தை வரும் டிசம்பர் 20-ம் தேதி வெளியிடுகின்றனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு ரஜினியின் ‘கோச்சடையான்' படம் வருகிறது.

வேறு சில படங்களும் வெளியாகப் போவதாக அறிவித்துள்ளன. இவற்றுக்கெல்லாம் முன்பாகவே வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘பிரியாணி' படத்தையும் பொங்கலுக்கு களமிறக்க திட்டமிட்டிருந்தனர்.

டிசம்பர் 20-ம் தேதி பிரியாணி!

ஆனால், போட்டியில்லாத சூழலில் வெளியாக வேண்டும் என்ற காரணத்தால், பிரியாணி படத்தை டிசம்பர்-20ந் தேதியே வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். அரையாண்டு விடுமுறையை மனதில் வைத்து இந்த படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘பிரியாணி' படத்தில் கார்த்தியுடன் பிரேம்ஜி, ராம்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கார்த்தியின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டடிக்க முடியாத நிலையில், அவர் இந்த பிரியாணியை மிகவும் நம்பியுள்ளார்.

 

தனுஷை காதலிக்கப் போகும் காஜல் அகர்வால்

சென்னை: காஜல் அகர்வால் தனுஷுடன் ஜோடி சேர்கிறார்.

காஜல் அகர்வால் தற்போது கோலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விஜய், சூர்யா, கமல் என்று பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து வருகிறார்.

விஜய் மற்றும் கார்த்தியுடன் அவர் இரண்டு முறை ஜோடி சேர்ந்துவிட்டார். இந்நிலையில் அடுத்ததாக அவர் தனுஷின் நாயகி ஆகிறார். தனுஷ் வேலையில்லா பட்டதாரி, அனேகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வேங்கை சாமி படத்தில் நடிக்கிறார்.

தனுஷை காதலிக்கப் போகும் காஜல் அகர்வால்

அதை முடித்த பிறகு தன்னை வைத்து படிக்காதவன், மாப்பிள்ளை ஆகிய படங்களை இயக்கிய சுராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார். இந்த படத்தில் தான் தனுஷுக்கு காஜல் அகர்வால் ஜோடியாம்.

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனுஷ் மற்றும் காஜல் அகர்வால் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகின. அதன் அர்த்தம் தற்போது புரிந்துள்ளது. தனுஷும் காஜலும் முதன்முறையாக ஜோடியாக நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சத்தியம் டிவியில் சத்தியம் சினிமாஸ்

சினிமா படப்பிடிப்புகள், திரை உலகில் நடைபெறும் நிகழ்வுகளை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தும் நிகழ்ச்சி .... சத்தியம் சினிமாஸ்.

சினிமாதுறையில் அன்றாடம் நடக்கும் சுவாரஸ்ய தகவல்களை தாங்கிவரும் இந்நிகழ்ச்சியில் அண்மையில் நடந்த முக்கியநிகழ்வுகள், திரை உலகப் பிரபலங்களைப் பற்றிய சுவாரஸ்யமான செய்திகள்,

சமீபத்தில் வெளிவர இருக்கும் திரைப்படத்தை ற்றிய தகவல்கள் என திரை உலக செய்திகளை கூறுகிறது சத்தியம் சினிமாஸ்.

சத்தியம் டிவியில் சத்தியம் சினிமாஸ்

சினிமா உலக நிகழ்வுகள் அனைத்தும் உங்கள் கண் முன் காட்சிபடுத்தி உங்களை பரவசப்படுத்தும்சத்தியம் சினிமாஸ்.

சத்தியம்தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. செவ்வாய்மதியம் 2.30 மணிக்கு மறு ஒளிப்பரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் உங்களுக்கான சினிமா உலகசெய்திகள்ஏராளம்.

 

சஞ்சய் லீலா பன்சாலியின் ராம் லீலா... மூன்று நாட்களில் ரூ 50 கோடி!

சஞ்சய் லீலா பன்சாலியின் ராம்லீலா திரைப்படம் வெளிவந்த மூன்றே தினங்களில் ரூ 50 கோடியைத் தாண்டியிருக்கிறது.

ரண்வீர் சிங், தீபிகா படுகோன் நடித்துள்ள இந்தப் படம் கடந்த வெள்ளியன்று உலகமெங்கும் வெளியானது.

சஞ்சய் லீலா பன்சாலியே தயாரித்து இயக்கியிருந்தார்.

சஞ்சய் லீலா பன்சாலியின் ராம் லீலா... மூன்று நாட்களில் ரூ 50 கோடி!

பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியான இந்தப் படம், அனைத்து தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

வெளியான மூன்றே தினங்களில் ரூ 50 கோடியைக் குவித்துள்ளது. முதல் நாள் வசூல் ரூ 16 கோடி. இந்தப் படம் வார இறுதிக்குள் ரூ 100 கோடி வசூலைத் தொட்டுவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ 35 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது இவரது வண்ணமிகு ஒளிப்பதிவு. வட இந்திய ஊடகங்களில் ரவிவர்மனுக்கு பெரும் பாராட்டு கிடைத்துள்ளது.