படத்தை நல்ல விலைக்கு கேட்கிறார்களா... அப்படின்னா இன்னும் 2 கோடி எடுத்து வை!!

பெயர் வைக்காத படத்தில் நடிக்கும் 'பிரியாணி' நடிகரை ஊரே நல்லவர்னு சொல்லுது. தயாரிப்பாளரும் ஆரம்பத்தில் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் இப்போதும் அதே மனநிலையில் இருக்கிறாரா என்றால்... நஹி!

காரணம் சம்பள விஷயத்தில் நடிகரின் அணுகுமுறை அப்படி.

ஆரம்பத்தில் ஆயிரம் ரூபாய் கொடுங்க போதும் என்றுதான் சொன்னாராம். ஷூட்டிங் முடிந்ததும் சம்பளம் வாங்கிக் கொள்கிறேன் என்றதும், மகா சந்தோஷத்துடன் ஊரெல்லாம் நடிகரின் புகழைப் பரப்பிக் கொண்டிருந்தார் தயாரிப்பு.

முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்ததும் கிட்டத்தட்ட பாதித் தொகையை கேட்டு வாங்கிவிட்டாராம் நடிகர்.

இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முடிவதற்குள்ளாகவே மீதித் தொகையையும் கேட்டு வாங்கியிருக்கிறார்.

இப்போது சம்பள பாக்கி எதுவும் இல்லை. இத்தனைக்கும் படப்பிடிப்பு இன்னும் போய்க் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் கடும் போட்டி போடுகிறார்களாம். பெரிய விலைக்கு பேசி வைத்து அட்வான்ஸ் பெற்றுள்ளாராம் தயாரிப்பாளர். சம்பள விஷயத்தில் ஹீரோ செய்த டார்ச்சரிலிருந்து இப்போதுதான் நிம்மதி என்று பெருமூச்சு விட்டவரை, அப்படி இருக்க விடவில்லை ஹீரோ.

படத்தை நல்ல விலைக்குத்தானே பேசியிருக்கிறீர்கள்... அப்படீன்னா..இன்னொரு 2 சியை எடுத்து வைங்க. இல்லன்னா ஏதாவது ஒரு ரைட்ஸை கொடுங்க, என்கிறாராம்.

டென்ஷனில் இருக்கிறார் தயாரிப்பாளர்!

 

மீண்டும் படம் இயக்க வருகிறார் ஸ்ரீப்ரியா!

Sripriya Set Wield The Megaphone

சென்னை: எழுபதுகளில் கலக்கிய நடிகை ஸ்ரீப்ரியா, இப்போது படம் இயக்க வருகிறார்.

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் நடித்தவர் ஸ்ரீப்ரியா. ஸ்ரீதேவிக்கு இணையாக ரஜினியுடன் அதிகப் படங்களில் நடித்தவர்.

சினிமா இயக்குவது ஸ்ரீப்ரியாவுக்கு புதிதல்ல. ஏற்கெனவே சாந்தி முகூர்த்தம் என்ற படத்தை இயக்கியுள்ளார். கன்னடத்திலும் இரு படங்களை இயக்கியுள்ள ஸ்ரீப்ரியா, 5 சீரியல்களையும் இயக்கியுள்ளார்.

இப்போது மீண்டும் சினிமா இயக்க வருகிறார். மலையாளத்தில் வெளியான 22 ஃபீமேல் கோட்டயம் என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் ஸ்ரீப்ரியா.

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் நித்யா மேனன். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை ஜூலையில் ஆரம்பித்து, டிசம்பரில் வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம் ஸ்ரீப்ரியா.

 

ஓல்டு ஹீரோவா... இனி வேணவே வேணாம்!- நயன்தாரா

இனி வயதான ஹீரோக்களுடன் ஜோடியாக நடிப்பதில்லை என புதிய முடிவு எடுத்துள்ளாராம் நயன்தாரா.

சமீபத்தில் அப்படி வந்த சில பெரிய பட வாய்ப்புகளையும் உதறியுள்ளார்.

சமீபத்தில் நாகார்ஜுனாவுடன் ஜோடி சேர்ந்து அவர் நடித்த ஒரு படம் தோல்வியைத் தழுவியது.

nayanthara denies old heroes

தமிழில் அஜீத், ஆர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவரும் அவரை, தெலுங்கில் பாலகிருஷ்ணா, நாகார்ஜூனா, வெங்கடேஷ் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக கேட்கிறார்களாம்.

இன்னொரு பக்கம் இளம் ஹீரோக்கள் ராம் சரண், நானி, சித்தார்த் போன்ற நடிகர்களுடன் இளம் ஹீரோயின்கள் நடிக்கும் படங்கள் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன.

எனவே இனி இளம் ஹீரோக்களுக்கு மட்டுமே ஜோடியாக நடிப்பது என்ற புதிய முடிவை எடுத்துள்ளாராம் நயன்.

ஆனால் இந்த முடிவு தெலுங்குக்கு மட்டும்தானாம். தமிழில் அஜீத், விஜய் என 'வயதான' ஹீரோக்களுடன் நடிக்கவே முன்னுரிமை தருகிறாராம்.

நயன்தாரா அறிமுகமானவே 50 வயதைத் தாண்டிய பிறகு சரத்குமார் நடித்த ஐயா படத்தில் அவருக்கு ஜோடியாகத்தான். அதன் பிறகு சந்திரமுகியில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.

 

ஹீரோ கமலா... மம்முட்டியா? இது என்ன புதுக் குழப்பம்!

Kamal Direct Mammootty Lingusamy

சென்னை: லிங்குசாமி தயாரிக்க, கமல் இயக்கவிருக்கும் புதிய படத்தில் மம்முட்டி ஹீரோவாகவும் கமல் முக்கிய வேடத்திலும் நடிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வரூபம் 2 முடிந்த பிறகு ஹாலிவுட்டுக்குப் போய்விடுவார் கமல் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை.

தமிழிலேயே அவர் மேலும் இரு படங்களை இயக்குவார் எனத் தெரிகிறது. விஸ்வரூபம் 2-க்குப் பிறகு அவர் லிங்குசாமி தயாரிக்கும் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இதனை அண்மையில் லிங்குசாமியே அறிவித்திருந்தார். இதில் கமல் நாயகனாகவும், காஜல் அகர்வால் நாயகியாகவும் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. லிங்குசாமியும் இதை மறுக்கவில்லை.

இந்நிலையில் இந்தப் படத்தில் மலையாள நடிகர் மம்மூட்டிதான் நாயகன் என்றும், கமல் முக்கிய வேடத்தில் நடிப்பார் என்றும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. லிங்குசாமியின் முதல் பட நாயகன் மம்முட்டிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ 45 கோடியில் தயாராகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்களாம்.

பார்த்துங்க... மன்மதன் அம்புவில் ஓவியா நடிச்ச 'முக்கிய பாத்திரம்' மாதிரி இருந்திடப் போகுது!!

 

நடிகை ஜியா கான் 8 மாதத்திற்கு முன்பே கையை கிழித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்

மும்பை: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கான் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நிஷப்த் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக பாலிவுட்டில் அறிமுகமானவர் ஜியா கான்(25). அவர் கடந்த 3 ஆண்டுகளாக படத்தில் நடிக்கவில்லை. பட வாய்ப்புகள் கிடைக்காததால் இன்டீரியர் டிசைனிங் படிக்க ஆசைப்பட்டுள்ளார். இந்நிலையில் காதல் தோல்வி, பட வாய்ப்புகள் இல்லாமல் விரக்தியில் இருந்த ஜியா நேற்று முன்தினம் இரவு மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

jiah khan tried taking her life 8 months ago

அவர் தூக்கு போட்டுக் கொண்டதால் தான் மூச்சுத் திணறி இறந்தார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பே தனது கையை கிழித்துக் கொண்டு தற்கொலை முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் ஜியாவின் படுக்கையறையில் ஆயுர்வேத தூக்க மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட ஜியாவின் லேப்டாப், செல்போன்களை போலீசார் சோதனை செய்யவிருக்கின்றனர்.

 

பிறந்த நாளில் ரூ 1 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விஜய்!

Vijay Distribute Rs 1 Cr Welfare Aids

சென்னை: தனது பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி ரூ 1 கோடி மதிப்புள்ள உதவிகளை வழங்குகிறார் நடிகர் விஜய்.

விஜய்யின் மக்கள் இயக்கத்தை சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய இளைஞரணி கிளை மன்ற நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து இந்த விழாவை வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு நடத்துகின்றனர்.

சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடக்கும் இந்த விழாவில், சென்னை உயர்நீதிமன்ற பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கி, விழாவை தொடங்கி வைக்கிறார்.

நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டு 3,900 ஏழைகளுக்கு கம்ப்யூட்டர்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகளும், தையல் எந்திரங்களும் வழங்கி பேசுகிறார்.

விழாவில் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனும் கலந்து கொள்கிறார்.

 

ஹீரோவாகிறார் நாமக்கல் லாரி பாடி பில்டிங் உரிமையாளர்!

நாமக்கல்லில் பாடி பில்டிங் தொழிற்சாலை வைத்துள்ள குமார், சந்தித்ததும் சிந்தித்ததும் மூலம் ஹீரோவாக மாறியுள்ளார்.

சசிகுமார் நடித்த 'நாடோடிகள்' படத்தில் இடம்பெற்ற ஸ்ரீகௌரி அம்மன் இண்டஸ்ட்ரீஸ் லாரி பாடி பில்டிங் நிறுவனம் நாமக்கல் குமாரின் சொந்த கம்பெனி.

lorry body building shop owner turned hero

சிறு வயதிலிருந்தே நடிப்பு மீது இருந்த ஆர்வம், ‘நாடோடிகள்' படப்பிடிப்பைப் பார்த்தவுடன் அதிகமாகிவிட்டதாம். உடனே நடிப்பு, நடனம், சண்டைப் பயிற்சியை முறையாகக் கற்றுக் கொண்ட குமார், இயக்குனர் பாலு ஆனந்த் இயக்கும் ‘சந்தித்ததும் சிந்தித்ததும்' படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

முதல் நாள் படப்பிடிப்பில் சுற்றியிருப்பவர்களைப் பார்த்து நடிக்கக் கூச்சப்பட்டாராம். உடனே இயக்குனர் பாலு ஆனந்த், "சுற்றியிருப்பவர்களை மறந்துவிடு. உன் முன்னால் கேமிரா இருப்பதையும் மறந்து விடு. இந்தப் படத்தின் கதை உண்மைச் சம்பவம். அதனால் அந்தக் கேரக்டராகவே மாறி, உணர்வுப்பூர்வமாக நடி," எனக் கூறி நடித்துக் காட்டினாராம்.

இந்தப் படம் வெளிவரும் முன்பே, ‘துப்பார்க்கு துப்பாய', ‘ரெண்டுல ஒண்ணு' ஆகிய படங்களிலும் கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்துள்ளதாம் நாமக்கல் குமாருக்கு.

 

அக்கினேனி குடும்பத்தின் தாத்தா, மகன், பேரன் நடிக்கும் தெலுங்குப் படம்!

ஹைதராபாத்: புதிதாக உருவாகும் தெலுங்கு படம் ஒன்றில் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் சேர்ந்து நடிக்கின்றனர்.

ஒரே குடும்பத்திலிருந்து வந்த மூன்று தலைமுறையை சேர்ந்த கலைஞர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூத்த நடிகர் நாகேஸ்வரராவ் குடும்பத்துக்கு ‘அக்கினேனி' என்று பெயர். நாகேஸ்வரராவ், அவருடைய மகன் நாகார்ஜுனா, பேரன் நாக சைதன்யா என மூன்று தலைமுறையாக திரையில் கொடிகட்டிப் பறக்கின்றனர்.

akkineni family multi starrer manam

இந்த மூன்று தலைமுறையைச் சேர்ந்த நடிகர்களும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.

நாகேஸ்வரராவ், அவருடைய மகன் நாகார்ஜுனா, பேரன் நாக சைதன்யா ஆகிய மூவரும் ‘மனம்' என்ற புதிய தெலுங்குப் படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

விக்ரம் குமார் இயக்கும் இப்படத்திற்கு அனூப் ரூபன்ஸ் இசையமைக்கிறார். நாக சைதன்யா ஜோடியாக சமந்தாவும், நாகார்ஜுனா ஜோடியாக ஸ்ரேயாவும் நடிக்கிறார்கள்.

பெரிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஸ்ரேயாவுக்கு இந்தப் படம் மறு வாழ்வு அளித்துள்ளது.

அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை நேற்று ஹைதராபாதில் எளிமையாக நடந்தது. தெலுங்குத் திரையுலகினர் வாழ்த்தினர்.

 

ரூ.1000 கோடி மோசடி புகார்: பவர்ஸ்டார் சீனிவாசனை கைது செய்த டெல்லி போலீஸ்

Cheating Case Power Star Srinivasan Arrested

சென்னை: ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.5 கோடி கமிஷன் பெற்றுக் கொண்டு டெல்லி தொழில் அதிபரை ஏமாற்றியதாக எழுந்த புகாரின் பேரில் பவர்ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

அடுத்தடுத்து மோசடி புகார். கோடிக்கணக்கில் கடன் வாங்கித்தர லட்சக்கணக்கில் கமிஷன் பெற்றுக் கொண்டு ஏமாற்றினார் என்பது பவர்ஸ்டார் சீனிவாசன் மீதான புகார்.

ஆந்திரா தொழிலதிபர் ஒருவருக்கு 20 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.50 லட்சம் கமிஷன் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய குற்றச்சாட்டின் பேரில் ஏப்ரல் 26ம் தேதி பவர்ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து புகார்கள் வரவே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சீனிவாசன் மீது 6 வழக்குகள் பதிவு செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் புளு கோஸ் கட்டமைப்பு நிறுவனம் நடத்தி வந்த திலீப் பத்வானி என்பவர் சீனிவாசனை 1,000 கோடி ரூபாய் கடன் கேட்டுள்ளார். அவரிடம் 5 கோடி ரூபாய் கமிஷன் தொகை வாங்கியுள்ளார் சீனிவாசன்.

ஆனால் வழக்கம் போல திலிப்பையும் பவர்ஸ்டார் ஏமாற்றிவிட்டார். இது தொடர்பாக டெல்லி போலீசில் புகார் தெரிவித்தார் திலீப் இதனைத் தொடர்ந்து டெல்லி போலீசார் சீனிவாசனை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபின்னர் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

 

'ஓவிய கவிஞராக' மாறிய லிங்குசாமி... முதல் வெளியீடு லிங்கூ!

சென்னை: இத்தனை ஆண்டுகளாக தான் வரைந்த ஓவியங்கள் மற்றும் கவிதைகளை இணைத்து ஒரு ஓவியக் கவிதைப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார் முன்னணி இயக்குநர் லிங்குசாமி. புத்தகத்தின் பெயர் லிங்கூ!

ஆனந்தம், ரன், சண்டக்கோழி, வேட்டை உள்பட பல படங்களை இயக்கியவர். இன்றைய முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் லிங்குசாமி.

இவர், கடந்த 23 வருடங்களாக எழுதிய கவிதை மற்றும் ஓவியங்கள், ‘லிங்கூ' என்ற பெயரில் நூலாக தயாராகி இருக்கிறது. ஒவ்வொரு கவிதைக்கும் பொருத்தமாக அவரே வரைந்த ஓவியங்களை வைத்திருக்கிறார்.

lingusami s painting poetry lingoo

இதன் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. ‘மெட்டல் டிபோசிஷன்' என்ற புதிய தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ள இந்த நூலை பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் வெளியிட்டார். நடிகர் மோகன்லால் பெற்றுக் கொண்டார். இயக்குநர் கே.பாலசந்தர் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்.

இயக்குநர் லிங்குசாமி இதுவரை வரைந்த ஓவியங்களை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆர்ட் ஹவுசில் கண்காட்சியாக வைத்துள்ளார்.

இதன் திறப்பு விழாவில் நடிகர் ஜோமல்லூரி, ஓவியர் ஸ்ரீதர், ஆர்ட் ஹவுஸ் வின்சென்ட் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

 

குட்டிப் பாம்போடு தில்லாக விளையாடிய நயன்தாரா

Nayanthara Babu

சென்னை: நயன்தாரா இது கதிர்வேலன் காதல் படப்பிடிப்பின்போது குட்டிப் பாம்புடன் தைரியமாக விளையாடியுள்ளார்.

நயன்தாரா உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவையில் நடந்து வருகிறது. கரப்பான் பூச்சியைக் கண்டாலே பயப்படும் பல பெண்கள் இருக்கையில் நயன்தாராவோ படப்பிடிப்பின்போது ஒரு குட்டி பாம்பை தைரியமாக கையில் எடுத்து விளையாடியுள்ளார்.

மேலும் அந்த பாம்புக்கு பாபு என்று பெயர் வைத்துள்ளார். நயன்தாரா தைரியமாக விளையாடுவதைப் பார்த்த படக்குழுவினரும் அந்த பாம்போடு விளையாடியுள்ளனர்.

ஒரு பாம்பு கிடைத்தால் அதை இந்த பாடா படுத்துவது?

 

ஸ்ரீ சங்கரா டிவியில் பிரம்மரிஷி… ஆன்மீகத் தொடர்

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி பிரம்ம ரிஷி என்ற மற்றொரு பிரம்மாண்டமான ஆன்மீக தொடரை ஒளிபரப்ப உள்ளது.

ஆன்மீக கதைகளையும், தொடர்களையும் ஒளிபரப்பிவரும் ஸ்ரீ சங்கரா டிவியில் மற்றொரு மெகா தொலைக்காட்சி தொடர் ஒன்றினை தயாரித்துள்ளது.

sankara tv new mega serial brammari

சாந்தோக்யோ உபநிஷத்தின் பல்வேறு க்ரந்தங்களை ஆதாரமாக கொண்டு இயற்றபட்ட, அனைத்து காலங்களிலும் அனைவராலும் விரும்பப்படும் சத்ய காம ஜாபாலி எனும் சத்ய கதையை குறித்த ‘பிரம்மரிஷி' என்ற தொடரை ஞாயிறுக்கிழமைகளில் ஒளிபரப்ப உள்ளது.

ஞாயிறு தோறும் காலை 8.00 மணிமுதல் 9.00 மணிவரை கன்னடம் மற்றும் தமிழ் மொழியில் பிரம்ம ரிஷி தொடர் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.