தேதியை ஏன் மாத்தணும்... சொன்னபடி கச்சேரியை நடத்தலாமே! - இளையராஜா

சென்னை: இசைஞானி பக்தர்கள், அன்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் இப்போதைக்கு இனிப்பான செய்தி, அவர் எந்த சிக்கலும் இல்லாமல் பூரணமாக குணமடைந்து வருகிறார் என்பதுதான்.

ஆம்.. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த இளையராஜாவை இப்போது சாதாரண வார்டுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.

தேதியை ஏன் மாத்தணும்... சொன்னபடி கச்சேரியை நடத்தலாமே! - இளையராஜா

குடும்பத்தினர் அருகிலிருந்து கவனிக்க, மிக நெருக்கமான நண்பரான எஸ்பி பாலசுப்ரமணியம் நேரில் பார்த்து கண்கலங்க நலம்விசாரித்துவிட்டுச் சென்றார்.

நண்பர்களிடமிருந்தும் திரைத்துறை பிரபலங்களிடமிருந்தும் ஏராளமான போன் கால்கள்.. விசாரிப்புகள். அத்தனை பேருக்கும் அப்பா நல்லாருக்கார் என பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார் கார்த்திக் ராஜா.

வரும் 28-ம் தேதி ராஜாவின் கிங் ஆப் கிங்ஸ் இசை நிகழ்ச்சி மலேசியாவில் நடக்கவிருக்கிறது. இதற்கான ஒத்திகையின்போதுதான் இளையராஜாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. நிகழ்ச்சிக்கு இன்னும் நான்கு தினங்கள்தான் உள்ளன.

இளையராஜா இப்போதைக்கு ஓய்வெடுத்தால் நன்றாக இருக்கும் என மருத்துவர்கள் சொல்கிறார்கள். எனவே புத்தாண்டுக்குப் பிறகு கச்சேரியை நடத்தலாமா என விழா ஏற்பாட்டாளர்கள் கேட்க, 'சொன்னபடி நடத்தலாம் என்றுதான் தோன்றுகிறது. எனக்கு ஒன்றுமில்லை... சீக்கிரம் வந்துடறேன்,' என்றே இளையராஜா பதிலளித்துள்ளார்.

 

ரோமில் புத்தாண்டைக் கொண்டாடும் அமலா பால்!

நடிகை ரோமில் புத்தாண்டைக் கொண்டாடும் அமலா பால்!  

மலையாளத்தில் அவர் நடித்த ஒரு இந்தியன் ப்ரயாணகதாவை சமீபத்தில் சென்னையிலுள்ள தன் நண்பர்கள், இயக்குநர்களுக்கு போட்டுக் காட்டினார் அமலா பல்.

படத்தில் அவர் நடிப்பை பெரிதாக பாராட்டினார்களாம் அத்தனை பேரும். இன்னொரு பக்கம் தமிழில் ஜெயம் ரவியோடு அவர் நடித்துள்ள நிமிர்ந்து நில் படமும் சிறப்பாக வந்துள்ளதாம்.

ரோமில் புத்தாண்டைக் கொண்டாடும் அமலா பால்!

இந்த சந்தோஷத்தோடு புத்தாண்டை இத்தாலி தலைநகர் ரோமில் கொண்டாட குடும்பத்துடன் பறக்கவிருக்கிறார் அமலா.

புத்தாண்டு அன்று வாடிகனில் நடக்கும் போப்பாண்டவர் பிரார்த்தனையிலும் கலந்து கொள்கிறாராம்.

 

ஃபேஸ்புக்ல இருக்கீங்களா? டி.வி. நடிகைக்கு நடுரோட்டில் தொந்தரவு கொடுத்த ஆசாமி

மும்பை: மும்பையில் பிரபல டிவி நடிகைக்கு நடு ரோட்டில் காரில் வந்த ஆசாமி தொந்தரவு கொடுத்தது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனக்கு தொந்தரவு கொடுத்த நபரைப் பற்றி ஃபேஸ்புக்கில் போட்டு பிரச்சினையை கொட்டி தீர்த்துள்ளார் அந்த நடிகை.

மும்பை பைசுல்லா பகுதியில் வசித்து வரும் தொலைக்காட்சி நடிகை அலெபியா கபாடியா(28), சனிக்கிழமை மாலை பந்த்ரா குர்லா காம்ப்ளச்சில் இருந்து வீட்டிற்கு தனது குழந்தையுடன் காரில் சென்றுகொண்டிருந்தார். உடன் அவரது தோழியும் சென்றார். தாராவி வழியாக அவர் சென்றபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஃபேஸ்புக்ல இருக்கீங்களா? டி.வி. நடிகைக்கு நடுரோட்டில் தொந்தரவு கொடுத்த ஆசாமி

இதனால் கார் ஜன்னல் கண்ணாடிகளை கபாடியா இறக்கி விட்டார். அப்போது ஒரு சொகுசு காரில் வந்த நபர், கபாடியாவின் காரின் அருகே தனது காரை உரசியபடி நிறுத்தினான். பின்னர், அந்த நபர் கபாடியாவிடம், நீங்கள் பேஸ்புக்கில் இருக்கிறீர்களா? நான் உங்களுடன் பேஸ்புக் நண்பராகலாமா? என்று கேட்டு நச்சரித்துள்ளார்.

ஃபேஸ்புக்ல இருக்கீங்களா? டி.வி. நடிகைக்கு நடுரோட்டில் தொந்தரவு கொடுத்த ஆசாமி

கபாடியா மறுத்தபோதும் விடாமல் அவருடன் பேச விரும்புவதாக அந்த நபர் கூறியுள்ளார். இதனால் அவரை போட்டோ எடுத்த கபாடியா, பேசாமல் சென்றுவிடும்படி கூறியுள்ளார். இந்த மிரட்டலுக்கும் பயப்படாத அந்த நபர் மீண்டும் தொந்தரவு கொடுத்தார். பின்னர் அவர் தனது செல்போனை எடுத்து உதவிக்கு சிலரை அழைத்ததும், அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

ஃபேஸ்புக்ல இருக்கீங்களா? டி.வி. நடிகைக்கு நடுரோட்டில் தொந்தரவு கொடுத்த ஆசாமி

இதையடுத்து சாகு நகர் காவல் நிலையத்தில் கபாடியா புகார் அளித்தார். மேலும் தனக்கு தொந்தரவு கொடுத்த நபரின் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு, தான் சந்தித்த பிரச்சினை குறித்து விவரித்துள்ளார்.

 

பத்மஸ்ரீ பட்டத்தை இழக்கும் மோகன் பாபு, பிரம்மானந்தம்!!

ஹைதராபாத்: நாட்டின் பெருமைக்குரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீயை இழக்கிறார்கள் நடிகர்கள் மோகன் பாபு மற்றும் பிரேமானந்தம்.

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான மோகன்பாபு மற்றும் நகைச்சுவை நடிகர் பிரமானந்தம் ஆகிய இருவருக்கும் 2007 மற்றும் 2009-ம் ஆண்டு முறையே பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு மோகன்பாபு தயாரித்த 'தேனிகைனா ரெடி' என்ற திரைப்படைத்தில் அவரது மகன் விஷ்ணு மஞ்சு, ஹன்சிகா மோத்வானி நடித்திருந்தனர்.

பத்மஸ்ரீ பட்டத்தை இழக்கும் மோகன் பாபு, பிரம்மானந்தம்!!

நகைச்சுவை படமான இதில் பிரபலமான நடிகர் பிரமானந்தாவும் நடித்திருந்தார். இந்த பட நன்மதிப்பிற்காக பத்மஸ்ரீ பட்டத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தியதாக பாரதிய ஜனதா தலைவர் இந்திரசேனா ரெட்டி என்பவர் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த மனுவை நேற்று நீதிபதிகள் கல்யாண் ஜோதி சென்குப்தா மற்றும் சஞ்சய்குமார் விசாரித்தனர். இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், சர்ச்சைக்குரிய இந்த படத்தின் விளம்பரத்திற்காக பத்மஸ்ரீ பட்டத்தை நடிகர் மோகன்பாபுவும், பிரமானந்தாவும் தவறாக பயன்படுத்தியிருக்கின்றனர். இது அந்த பட்டத்தை அவமதிக்கும் செயலாகும். எனவே அவர்கள் இருவரும் பத்மஸ்ரீ பட்டத்தை கவுரவமாக நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறினர்.

இதுகுறித்த அடுத்த விசாரணை வரும் 30-ம் தேதி நடக்கும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

 

25வது ஆண்டில் கேஎஸ் ரவிக்குமார்- பிரமாண்ட பாராட்டு விழா

சென்னை: இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆவதையொட்டி அவருக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.

தமிழ் சினிமாவில் இருபத்தைந்து வருடங்களாக இயக்குநராக வலம் வருபவர் கேஎஸ் ரவிக்குமார்.

புரியாத புதிர் என்ற படம்தான் இயக்குநராக அவருக்கு முதல் படம். அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் உள்பட அத்தனை நட்சத்திரங்களையும் வைத்து படங்கள் இயக்கிவிட்டார். சூப்பர் ஸ்டாருடன் நடிகர் திலகம் சிவாஜியை வைத்து படையப்பாவையும் இயக்கினார்.

25வது ஆண்டில் கேஎஸ் ரவிக்குமார்- பிரமாண்ட பாராட்டு விழா

இந்த ஆண்டு, திரைத்துறையில் அவருக்கு வெள்ளி விழா ஆண்டு. இதனை கொண்டாட பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது ராஜ் டிவி.

இந்த விழா 2014 ஜனவரி 4-ம் ஆண்டு தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது.

கே.எஸ்.ரவிகுமாருக்கு நினைவுப் பரிசை வழங்கி கவுரவிக்கிறார் கமல்ஹாஸன்.

விழாவில் திரையுலகை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்கிறார்கள்.