பெண்களை இழிவுபடுத்தவில்லை – தனுஷ் விளக்கம்

சென்னை: சமீப காலமாக பரபரப்பாகப் பேசப்படும் தனுஷின் ஒய் திஸ் கொலவெறி டி பாடல் பெண்களுக்கு எதிரானது அல்ல என்று நடிகர் தனுஷ் விளக்கமளித்துள்ளார்.

சமீபத்திய சினிமா படங்கள் பலவற்றில் பெண்களை இழிவுபடுத்தி பாடல்கள் எழுதப்படுவதாக மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. சிம்பு பாடிய “எவண்டி உன்ன பெத்தான் கையில கிடைச்சா செத்தான்” என்ற பாடலும் ‘லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே…’ பாடலும் பெண்களுக்கு எதிரானவை என்று கண்டிக்கப்பட்டன.

அந்த வரிசையில் தனுஷ் பெண்களை இழிவுபடுத்தி 3 என்ற படத்தில் ஒய் திஸ் கொலை வெறிடி பாடலை எழுதி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாடல் வெளியான 5 நாட்களில் இண்டர்நெட்டில் 20 லட்சம் பேர் இந்தப் பாடலைக் கேட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து தனுஷிடம் கேட்டபோது, “எனது மனைவி ஐஸ்வர்யா 3 படத்தை இயக்குகிறார். பாடலுக்கான சூழ்நிலையை அவர் விளக்கியதும் இந்த பாட்டை எழுதினேன். படத்தில் இடம் பெறும் ஒரு பெண் கேரக்டரை பற்றிய பாடல் அது. ஒட்டு மொத்த பெண்களையும் இழிவுபடுத்தி அந்த பாடலை எழுதவில்லை. ஒரு பெண்ணை மட்டும் குறிப்பிட்டு எழுதி இருக்கிறேன். ‘கேர்ள்’ என்று ஒருமையில்தான் எழுதினேன். ‘கேர்ள்ஸ்’ என்று எல்லா பெண்களையும் குறிப்பிடவில்லை” என்றார்.
 
'டேம்999 படத்துக்கு கிடைத்ததில் 25% தியேட்டர்கள் கூட கிடைக்கலியே!' -பாலை படக் குழு

தமிழருக்கு எதிரான டேம்999 படத்துக்கு கிடைத்த தியேட்டர்களில் 25 சதவீதம் கூட தமிழகத்தில் எங்களின் பாலை படத்துக்குக் கிடைக்கவில்லையே என அந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் குழுவினர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் செந்தமிழன் ஊடகங்களுக்கு எழுதியுள்ள கடிதம்:

முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்.

‘பாலை’ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவன் நான். ‘பாலை’ படத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது, ‘பிழைப்போமா அழிவோமா தெரியாது… வாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ என்பது.

‘பாலை’ குழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே. ‘பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாது… இப்படி ஒரு படம் எடுத்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’.

சில நாட்களுக்கு முன் பாலையின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா, “பாலை உலகத் திரைப்பட வரலாற்றில் குறிக்கத்தக்க இந்தியப் படமாக இருக்கும். இது ஒரு தமிழ்ப் படம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட கர்வம் உண்டு. எனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தப் படத்தைப் பார்த்தும் 'இந்தப் படத்தை நான் இயக்கவில்லையே’ என ஆதங்கப்பட்டதில்லை. பாலை படம் என்னை அப்படி ஏங்கச் செய்கிறது’” என்று கடிதம் எழுதிக் கொடுத்தார்.

சத்தியமாக இவ்வார்த்தைகளுக்கான தகுதி எனக்கில்லை. இவை ஒரு மூத்த படைப்பாளியின் உணர்ச்சிவய வார்த்தைகள்.

முன்னோட்டக் காட்சி பார்த்த கார்ட்டூனிஸ்ட் பாலா முதல் மென்பொருள் இளம் பொறியாளர் விர்ஜினியா ஜோசபின் வரை பாலையை மனமார வாழ்த்துகிறார்கள்.

இவர்கள் அனைவரின் வேண்டுகோளும் மக்களை நோக்கி இருக்கிறது. ‘அவசியம் பாலை படத்தைப் பாருங்கள்’ என்கிறார்கள் இவர்கள்.

எனக்கும் என் குழுவினருக்குமான வேண்டுகோள் மக்களை நோக்கி இல்லை. அதற்கான சூழலும் எழவில்லை. எங்கள் வேண்டுகோள் திரையுலகை நோக்கி இருக்கிறது.

தமிழகத்தின் சரி பாதி பகுதிகளில் பாலையைத் திரையிட ஒரு திரை அரங்கு கூட கிடைக்கவில்லை. இதற்கான காரணங்கள் நிறைய. அவற்றை நான் அடுக்க விரும்பவும் இல்லை; இப்போது அதற்கான அவகாசமும் இல்லை.

ஓர் உண்மையை உரத்துச் சொல்ல விரும்புகிறேன்.

‘அதிகாரமும் பெரும் பணமும் இருந்தால் குப்பைகளுக்கும் திரையரங்குகள் திறக்கும். இல்லையென்றால், இயக்குனர், தயாரிப்பாளர் முகங்களில் குப்பை வீசப்படும்’

இன்றைக்குத் தமிழகத்தில் உள்ள ஆயிரத்து இருநூறு திரையரங்குகளில் சரி பாதியை மிகச் சில படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இவை ஓடும் திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள். மக்கள் கூட்டம் அலைமோதுகிறதா அல்லது இவை வெறுமனே பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளனவா என்பதை நீங்களே உணரலாம்.

ஒவ்வொரு அரங்கத்துக்கும் இலட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டு, அவ்வரங்குகளில் வேறு படங்கள் வராமல் பாதுகாக்கப்படுகின்றன.

திரைப்படங்களால் நிரம்ப வேண்டிய அவ்வரங்குகள் மிகச் சில முதலைகளின் கழிவுகளால் நாற்றமெடுத்துக் கிடக்கின்றன.

தமிழகத்தில் DAM-999 என்ற படத்துக்குக் கிடைத்த திரையரங்குகளில் 25% கூட பாலைக்குக் கிடைக்கவில்லை! முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை மலையாளிகளுக்குப் பிடுங்கித் தரும் படமாக இருந்தாலும் பரவாயில்லை; தமிழரின் வரலாற்றைப் பதிவு செய்யும் படத்துக்கு அரங்கு இல்லை. அழுவதைத் தவிர வேறு என்ன வழி?

இப்போது DAM-999 படம் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் அந்தத் திரை அரங்குகளில் மிகச் சில கூட பாலைக்குக் கிடைக்கவில்லை. அவ்வரங்கங்கள், வேறு ஒரு Warner Brothers தயாரிப்புப் படத்துக்காகக் காத்திருக்கின்றன. ஜாக்கிசானின் 1911 படத்துக்குக் கிடைத்த அரங்குகளின் எச்சில் துளி கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை.

கிடைத்த அரங்குகளில் பாலை இன்று (25/11/11) வெளியாகிறது. எமக்கு அரங்கு கொடுத்த அரங்க உரிமையாளர்கள், மேலாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் இப்பணியில் தம்மை அளவுக்கு மீறி ஈடுபடுத்திக் கொண்டதால் மிக மோசமான உடல் உபாதையில் சிக்கித் தவிக்கும் என் இனிய நண்பர் ‘செங்கோட்டை’ திரைப்பட இயக்குனர் சசிகுமார் உள்ளிட்ட அனைவருக்கும் எமது மனமுருகிய நன்றிகள்!

இக்கடிதத்தை எழுதுவதால் என்ன பலன் என எனக்குப் புரியவில்லை.

ஆனால், நான் ஒரு போதும் நம்பிக்கையை விடுவதில்லை. இயற்கையின் பேராற்றலை வேண்டுகிறேன். அப்பேராற்றலின் அங்கங்களாகவும் படைப்புகளாகவும் விளங்கும் மக்களை நம்புகிறேன்.

நாங்கள் பந்தயத்தில் பரிசு கேட்கவில்லை

நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்!,” என்று கூறியுள்ளார்.
 
தமிழக அரசின் தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு- டேம் 999 இயக்குனர் பேச்சு

கொல்லம்: டேம் 999 படத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக படத்தின் இயக்குனர் சோஹன்ராய் தெரிவித்துள்ளார்.

மலையாள இயக்குனர் சோஹன்ராய் இயக்கிய டேம் 999 படத்தில் முல்லைப்பெரியாறு அணை உடைவது போல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இந்த படத்தை திரையிட தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த படம் நேற்று துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் திரையிடப்பட்டது.

இதையொட்டி சோஹன்ராய் அளித்த பேட்டியில் கூறியதாவது,

என்னுடைய படத்தில் ஒரு இடத்தில் கூட முல்லைப்பெரியாறு என்ற வார்த்தையை பயன்படுத்தவி்ல்லை. அணைக் கட்டுகள் ஒரு தண்ணீர் வெடிகுண்டாகும். இந்த அணைக்கட்டுகளால் ஏற்படும் சமுதாய பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் இந்த படத்தின் நோக்கம்.

போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் அணையால் ஏற்படும் இழப்புகள் குறித்து தான் இந்த படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.

இதை புரிந்து கொள்ளாமல் தமிழ்நாட்டில் இந்த படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு சென்சார் போர்டு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும் இந்த படத்திற்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது முறையல்ல. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன் என்றார்.
 
ஆப்கன் தீவிரவாதியாக நடிக்கிறார் கமல்!

விஸ்வரூபம் படத்தில் ஆப்கன் தீவிரவாதியாக நடிக்கிறார் நடிகர் கமல்ஹாஸன்.

கமல் – பூஜா குமார் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் ஜோர்டான் நாட்டில் படமாகின்றன.

தமிழ் மற்றும் ஹிந்தி என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தில் ஆப்கனில் இயங்கி வரும் முஜாஹிதீன் தீவிரவாதியாக நடிக்கிறாராம் கமல் ஹாசன்.

இப்படத்தில் அமெரிக்காவாழ் இந்தியரான பூஜா குமார், இந்திய மாடல் அழகி இஷா ஷெர்வானி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் கமல் படத்தை தயாரிக்கும் கூடுதல் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

சங்கர் இஷான்லாய் இசையமைக்கிறார்கள்.
 
மயக்கம் என்ன... தனுஷ்- செல்வராகவனுக்கு ரஜினி பாராட்டு

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “மயக்கம் என்ன” படத்தின் சிறப்புக் காட்சியை ரஜினி பார்த்தார்.

மயக்கம் என்ன படம் இன்று ரிலீசானது. இப்படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார். இதன் சிறப்பு காட்சி ரஜினிக்கு பிரத்யேகமாக ரியல் இமேஜ் அரங்கில் திரையிட்டு காட்டப்பட்டது.

வழக்கமாக செல்வராகவன் படம் ரிலீசுக்கு முன் சிறப்பு காட்சிகள் திரையிடுவது இல்லை. ஆனால் ரஜினிக்காக ஏற்பாடு செய்து இருந்தார்.

படம் ரஜினிக்கு மிகவும் பிடித்துப் போனதாம். இப்படத்தில் தனுஷ் ‘ஓட ஓட ஓட தூரம் பாட பாட பாட பாட்டு முடியல…’ என்ற பாடலை எழுதி பாடி உள்ளார். இப்பாட்டு ரஜினியை மிகவும் கவர்ந்து விட்டதாம். படம் முடிந்ததும் தனுசையும், செல்வராகவனையும் ரஜினி பாராட்டினார். தனுசுக்கு இப்படம் இன்னொரு மகுடம் என்று கூறி வாழ்த்தினார்.

செல்வராகவனையும் நீண்ட நேரம் பாராட்டினார் ரஜினி.
 
கேரளத்திலும் 'டேம் 999' படத்தை தடை செய்ய வேண்டும்- காங்கிரஸ் தவிர்த்த பிற கட்சிகள் கோரிக்கை

சென்னை: முல்லைப் பெரியாறு அணை உடைவதுபோல் காட்டும் 'டேம் 999' படத்தைத் திரையிட தமிழக அரசு தடை விதித்தாலும், தேசிய அளவிலும் இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தவிர பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

எந்தப் பிரச்சனையை எடுத்துக் கொண்டாலும் வாய்ஸ் கொடுக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்ற 'மாபெரும் தேசத் தலைவர்கள்' இந்த விஷயத்தில் தொடர்ந்து மெளம் காத்து வருகின்றனர். அவர் ஏதும் கருத்து சொன்னதாக தகவல் இல்லை.

திமுக எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க மறுக்கும் கேரள அரசு, அணை பலவீனமாக உள்ளது என்ற கருத்தை மக்களிடம் திணிக்க முற்படுகிறது.

இந்த படத்தை கர்நாடகத்தில் பார்க்கும் மக்கள் கிருஷ்ணராஜ சாகர் அணை பகுதிகளில் வாழவே பயப்படுவார்கள் என்றார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், தமிழக அரசு டேம் 999 படத்தைத் தடை செய்திருப்பதை வரவேற்கிறேன். இந்திய ஒருமைப்பாட்டுக்கே பேராபத்தை விளைவிக்கக்கூடிய இந்தப் படத்துக்கு நாடு முழுவதும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்றார்.

பாமக தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், இந்தப் படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்தான் முதலில் குரல் கொடுத்தார். தமிழகத்தின் உரிமையைப் பறிக்கும் வகையிலும் கேரளத்துக்கு உரிமையைக் கொடுக்கும் வகையிலும் இந்த படம் அமைந்துள்ளது.

எனவே, மத்திய அரசு தலையிட்டு எந்த மாநிலத்திலும், எந்த மொழியிலும் இந்தப் படம் திரையிட அனுமதிக்கக்கூடாது என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான காட்சிகளுடன் டேம் 999ம் படத்தை வெளியிட முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. இந்தப் படத்துக்குத் தமிழக அரசு தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது. மேலும் நாடு முழுவதும் இந்தப் படத்துக்குத் தடை விதிக்க வேண்டும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், தமிழக, கேரள மக்களிடையே பகைமை உணர்வை ஏற்படுத்தவே இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய துரோகம் இது. இந்தத் திரைப்படத்தை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன் என்றார்.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதை கேரள அரசு ஏற்க மறுப்பதோடு, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அணை உடைவதுபோல காட்சிகள் கொண்ட படத்தை வெளியிடுகிறது. இந்தப் படத்தை தடை செய்தது சரியான நடவடிக்கை. அதே போல இந்தப் படத்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்றார்.

பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறுகையில், குறிப்பிட்ட அணை உடைவதுபோல திரைப்படம் எடுத்திருப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். கேரளத்திலும் இந்தப் படத்தை கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார்.

காங்கிரஸ் கட்சிக்கு காது கேக்குதா?
 
சந்திரபாபு வாழ்க்கைதான் 'அந்த 7 நாட்கள்' - கே பாக்யராஜ்

"சந்திரபாபு வாழ்க்கையைத்தான் அந்த 7 நாட்கள் என்று படமாக எடுத்து வெற்றி பெற்றேன்'' என்று இயக்குநர் கே.பாக்யராஜ் கூறினார்.

ஒரு கிராமத்து சிறுமிக்கும், உலக சினிமாவின் ஒப்பற்ற நகைச்சுவை கலைஞரான சார்லி சாப்ளினுக்குமான உணர்வுப்பூர்வமான தொடர்பை வைத்து 'சாப்ளின் சாமந்தி' என்ற படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள 'ஃபேம் நேஷனல்' தியேட்டரில் நேற்று காலை நடந்தது. பாடல்களை, இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட்டுப் பேசினார்.

வழக்கம் போல மிக சுவாரஸ்யமாக அமைந்தது அவர் பேச்சு. அவர் கூறுகையில், "சாப்ளின் சாமந்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழை இந்த படத்தின் டைரக்டர் பிரகாஷ் என்னிடம் கொண்டுவந்து கொடுத்தபோது, படத்தின் கதையை சொன்னார்.

கதையை கேட்டு முடித்ததும், அவர் மீது எனக்கு பொறாமை ஏற்பட்டது. இப்படி ஒரு கதையை நாம் யோசிக்கவில்லையே என்பதால் ஏற்பட்ட பொறாமை அது.

எப்போதுமே நிஜ வாழ்க்கையில் நாம் சந்தித்த கதாபாத்திரங்களை படமாக்கினால், நிச்சயம் வெற்றி பெறலாம். நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையை கருவாக வைத்துதான் 'அந்த 7 நாட்கள்' படத்தை எடுத்தேன். முதல் இரவு அன்றே மனைவியின் காதல் பற்றி கேள்விப்பட்டு, மனைவியை காதலருடன் அனுப்பி விட்டவர் சந்திரபாபு.

அந்த சம்பவத்தை மையப்படுத்தி எடுத்த 'அந்த 7 நாட்கள்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுபோல் இந்த படமும் நிச்சயம் வெற்றி பெறும்,'' என்றார்.

விழாவில் பட அதிபர் ஆர்.பி.சவுத்ரி, டைரக்டர்கள் ஜனநாதன், பாலாஜி சக்திவேல், சசி, கரு.பழனியப்பன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, பாலசேகரன் ஆகியோரும் பேசினார்கள்.

இயக்குநர் ஆர்.பிரகாஷ் வரவேற்று பேசினார். தயாரிப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.
 
கள்ள உறவு: அதிமுக ஆதரவு கவிஞர் சினேகன் கைது செய்யப்படுவாரா?

சென்னை: மடிப்பாக்கம் எஞ்ஜினீயர் மனைவியை கடத்தியதாக கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில், சினேகன் கைது செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.

பிரபல சினிமா பாடல் ஆசிரியரும், நடிகருமான சினேகன் மீது, எஞ்ஜினீயர் பிரபாகரன் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.

அதில், தனது மனைவியையும், குழந்தையையும் கடத்திச் சென்றுவிட்டதாக கூறியிருந்தார். அந்த புகார் மனு அடிப்படையில் பிரபாகரனிடமும், அவரது மனைவியிடமும் வரதட்சணை ஒழிப்பு போலீசார் கவுன்சிலிங் மூலம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த புகார் அடிப்படையில் கவிஞர் சினேகன் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று சென்னை நகர சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் தாமரைக்கண்ணனிடம் நேற்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், "சினேகன் மீது புகார் கொடுத்த பிரபாகரனிடமும், அவரது மனைவியிடமும் வரதட்சணை ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அடுத்த கட்டமாக சினேகனிடமும் விசாரணை நடத்தப்படும். தவறு செய்திருந்தால் கண்டிப்பாக சட்டபூர்வ கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என்றார்.

சினேகன் அதிமுக ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
'விக்ரம் நடிக்கும் கரிகாலன் என் கதை' - டிவி இசையமைப்பாளர் புகார்

சென்னை: நடிகர் விக்ரம் நடிக்கும் 'கரிகாலன்' படக்கதை என்னுடையது என சொந்தம் கொண்டாடி டி.வி. தொடர் இசையமைப்பாளர் ராஜசேகரன் என்பவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.

ராஜசேகரன் என்ற நாகராஜ் (வயது 41) சென்னை போரூரை சேர்ந்தவர். நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் கொடுத்த பரபரப்பான புகார்:

நான் டி.வி. தொடர் இசையமைப்பாளராக உள்ளேன். நடிகர் விக்ரம் நடித்து, விரைவில் வெளிவரவுள்ள 'கரிகாலன்' படக்கதை என்னுடைய கதையாகும். அந்த கதையை நான் முறையாக பதிவு செய்து வைத்துள்ளேன்.

இந்தக் கதையை வைத்து படம் எடுக்க பல்வேறு படக்கம்பெனிகளை தொடர்பு கொண்டு வந்தேன். இப்போது அந்த கதையை வைத்து என்னிடம் அனுமதி பெறாமல் 'கரிகாலன்' படம் எடுக்கப்படுகிறது. விரைவில் அந்த படம் வெளிவர உள்ளது.

இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். 'கரிகாலன்' படம் வெளிவருவதற்கு முன்பு உரிய நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.