சென்னை: தன் ஆசைப்படி நடிக்க வந்த காட்டு ராஜாவின் தம்பி தனது தந்தையின் ஆசைப்படி இயக்குனர் ஆவாரா?
காட்டு ராஜாவைத் தொடர்ந்து அவரது தம்பியும் நடிக்க வந்தார். முதல் படத்திலேயே யாருடா இந்த பையன், நடிப்பில் பின்னுகிறானே என்று பேச வைத்தார். வந்த வேகத்தில் வளரவும் செய்தார். தற்போது கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்.
காட்டு ராஜாவை ஒரு தொழில் அதிபராகவும், அவரது தம்பியை ஒரு இயக்குனராகவும் ஆக்கிப் பார்க்க தான் அவரது நடிகர் தந்தை ஆசைப்பட்டாராம். ஆனால் அண்ணன், தம்பி இரண்டு பேருமே சொல்லி வைத்த மாதிரி நடிக்க வந்துவிட்டார்கள்.
இந்நிலையில் தம்பி நடிகர் நிச்சயம் ஒரு நாள் இயக்குனர் ஆவார் என்று அண்ணன் நம்புகிறார். முன்னதாக தம்பி நடிகருக்கு நடிக்க வாய்ப்பு வந்தபோது நான் கேமராவுக்கு பின்னே இருக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படி என்றால் அவர் ஒரு நாள் இயக்குனர் ஆவார் என்று நாமும் எதிர்பார்க்கலாம். தம்பி சார் உங்களிடம் கதை சொல்லி அதை ஓகே பண்ணுவதற்குள் இயக்குனர்களின் டவுசர் கிழிந்துவிடுகிறது. நீங்கள் இயக்குனர் ஆனால் உங்களுக்கும் யாராவது இது போன்று செய்யலாம். அதனால் இப்பொழுதில் இருந்தே இயக்குனர்கள் மீது கொஞ்சம் கருணை காட்டுங்கள்.