ஏம்பா, நாட்டில் ஒருத்தர் முன்னேறினால் பிடிக்காதா?: பிரியங்கா அப்படி என்ன செஞ்சிட்டார்?

மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ஹாலிவுட் தொலைக்காட்சி தொடர் பற்றி பலரும் பலவிதமாக பேசி வருகிறார்கள்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ள பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் ஹீரோயினாக நடித்துள்ளார். குவான்டிகோ என்ற அந்த தொடரில் எப்.பி.ஐ. ஏஜெண்டாக நடித்துள்ளார் பிரியங்கா.

Priyanka Chopra

கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த தொடர் அமெரிக்காவில் ஒளிபரப்பானது. சீரியலை பார்த்த பலரும் பிரியங்காவின் நடிப்பை விட அவரின் லுக்கை பற்றி தான் அதிகம் பேசுகிறார்கள். கூகுளில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை விட பிரியங்கா தான் அதிகமாக டிரெண்டாகியுள்ளார்.

குவான்டிகோவில் பிரியங்கா அமெரிக்கர்களின் உச்சரிப்பில் ஆங்கிலம் பேசியுள்ளார். அது என்ன பிரியங்காவின் ஆங்கிலம் அப்படி இருக்கிறது என்று பலர் அவரை கிண்டல் செய்து வருகிறார்கள். ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் அதுவும் ஹீரோயினாக நடித்துள்ள முதல் இந்திய நடிகை பிரியங்கா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலம் கிடக்கிறது ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் பிரியங்கா அதுவும் ஹீரோயினாக நடித்துள்ளது பெரிய விஷயம் என்கின்றனர் சிலர். பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், அனில் கபூர், இர்பான் கான், நசிருத்தீன் ஷா, சூரஜ் சர்மா உள்ளிட்டோர் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆஸ்கர் விருதுப் போட்டியில் மீண்டும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்த படம்!

இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் படங்களின் பட்டியலில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்த ஒரு படம் மீண்டும் இடம்பிடித்துள்ளது.

அந்தப் படம் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிய, ஆனால் பாராட்டுக்களையும் குவித்த மஜித் மஜிதியின் முகமது: தி மெஸஞ்சர் ஆப் காட்!

Mohammad: Yet another AR Rahman musicalin Oscar race

2008-ல் ஸ்லம்டாக் மில்லியனேர் படத்துக்கு இசையமைத்ததன் மூலம் இரு ஆஸ்கர் விருதுகளை வென்றவர் ஏ ஆர் ரஹ்மான்.

அதன்பிறகு கோச்சடையான் உள்ளிட்ட சில படங்களில் இடம்பெற்ற அவரது இசை ஆஸ்கர் விருதுப் போட்டியில் இடம்பெற்றன.

இப்போது முகமது: தி மெஸஞ்சர் ஆப் காட் படம் சிறந்த வெளிநாட்டு மொழிப் படம் என்ற பிரிவில் ஆஸ்கர் விருதுப் போட்டியில் இடம்பெற்றுள்ளது.

ஈரானில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது முகமது. இதன் அடுத்த இரு பாகங்கள் வரும் ஆண்டுகளில் வெளியாகவிருக்கின்றன.

இந்தப் படத்தை இயக்கியதற்காக இயக்குநர் மஜித் மஜிதி மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு ஃபத்வா விதித்தது மும்பை இஸ்லாமிய அமைப்பு என்பது நினைவிருக்கலாம்.

 

தாரை தப்பட்டை... வெளியீட்டு உரிமையை வாங்கியது லைகா!

பாலா இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் இளையராஜா இசையில் உருவாகி வரும் தாரை தப்பட்டை படத்தின் வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது.

சசிகுமார் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள படம் தாரை தப்பட்டை. இளையராஜா இசையில் உருவாகும் 1000வது படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்தப் படம் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

Lyca bags Thaarai Thappattai

இந்தப் படத்தின் இசை மற்றும் பாலாவின் இயக்கம் போன்றவை படம் குறித்த பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. எனவே படத்தை வாங்க நிறையப் பேர் ஆர்வம் காட்டி வந்தனர்.

இந்நிலையில், லைக்கா மற்று அய்ங்கரன் நிறுவனங்கல் இந்தப் படத்தின் உரிமையைப் பெற்றுள்ளன. விரைவில் படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள், இசை வெளியீடு நடக்கவிருக்கிறது.

லைகா நிறுவனம் ஏற்கெனவே கத்தி படத்தை சொந்தமாகத் தயாரித்தது. அடுத்து இப்போது 'விசாரணை' மற்றும் 'நானும் ரவுடிதான்' படங்களை வாங்கி வெளியிடுகிறது. அடுத்து பாலா படம்.

ரஜினி படத்தின் தயாரிப்பாளர்களும் இதே லைக்காதான்.

தமிழ் சினிமாவில் வலுவாகக் காலூன்ற அஸ்திவாரத்தை பலமாகவே போட்டு வருகிறது லைகா!

 

நண்பராக இருந்து எதிரியாகிட்டாரே!- எலி தயாரிப்பாளர் பற்றி வடிவேலு புலம்பல்

எலி படத் தயாரிப்பாளரை நான் ஏமாற்றவில்லை. என் சம்பளத்தை விட்டுக் கொடுத்தேன். ஆனால் அவரோ திடீரென எதிரியாகிவிட்டாரே என்று பதிலளித்துள்ளார் நடிகர் வடிவேல்.

'எலி' படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் வடிவேலு மீது புகார் அளித்தார்.

I never cheats Eli producer, says Vadivelu

அப்புகாரில், "நடிகர் வடிவேலு, ஜனவரி 6ல், என்னை சந்தித்தார். அப்போது அவர், 'தற்போது நான், எலி படத்தில் நடிக்கிறேன். அதன் தயாரிப்பாளர் ராம்குமாரிடம் செலவு செய்ய பணம் இல்லை. இந்த படம் ரிலீசாகவில்லை என்றால், நான் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. அதனால், ராம்குமார் இதுவரை செலவு செய்த, 90 லட்சம் ரூபாயில், 15 லட்சம் ரூபாயை நீங்கள் கொடுத்து விடுங்கள். மீதித் தொகையான, 75 லட்சம் ரூபாயை நான் தந்து விடுகிறேன். அவர் இந்த படத்தில் இருந்து விலகி விடுவார். பின் நீங்களே இந்த படத்திற்கு தயாரிப்பாளராகி விடுங்கள்' என, கெஞ்சினார்.

நண்பர்களுடன் சேர்ந்து, 17 கோடி ரூபாயில் 'சிட்டி சினி கிரியேஷன்ஸ்' நிறுவனம் மூலம், எலி படத்தை தயாரித்தேன். இந்த படத்தை, 32 கோடிக்கு விற்பனை செய்து தருவதாக, வடிவேலு உறுதி அளித்தார். ஆனால், படம் சரியாக ஓடவில்லை; எனக்கு, ஒன்பது கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. என் மூலம், எலி படத்தை திரையிட்ட, தியேட்டர் உரிமையாளர்கள், பட வினியோகஸ்தர்கள், பொய் கணக்கு காட்டி, கூடுதலாக பணம் கேட்டு மிரட்டினர். இதனால், வடிவேலுவிடம் நஷ்டஈடு கேட்டேன். பணம் தர மறுத்ததோடு வடிவேலுவும் எலி பட இயக்குனர் யுவராஜ், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வி.பி.துரைசாமி, வடிவேலுவின் மேனேஜர் பன்னீர், அக்கவுன்டன்ட் முத்தையா ஆகியோரும் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்," என்று தெரிவித்துள்ளார்.

வடிவேலு பதில்

இது குறித்து நடிகர் வடிவேலு கூறுகையில், "எலி படத்தை, முதலில் ராம்குமார் என்பவர் தயாரிக்க இருந்தார். நிதி வசதி போதாது என்பதால், ஒதுங்கிக் கொண்டார். இதையறிந்த, தயாரிப்பாளர் சதீஷ்குமார், அந்தப் படத்தை தயாரிக்க முன் வந்தார். படம் வெளியான பின்னர் 'எதிர்பார்த்தபடி ஓடவில்லை; நஷ்டமாகி விட்டது. அடுத்து, ஒரு படம் நடித்துக் கொடுத்தால் உதவியாக இருக்கும்,' என்றார். நானும், அதற்கு சம்மதம் தெரிவித்தேன்.

சதீஷ்குமாருக்கும், எனக்கும் இடையே படம் தொடர்பாக எந்தப் பிரச்னையும் இல்லை. நான் அவரை மிரட்ட வேண்டிய அவசியமும் இல்லை. தற்போது நான் மதுரையில் இருக்கிறேன். தயாரிப்பாளர் போலீசில் புகார் செய்துள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளர் நல்ல மனிதர். அவர் இப்படி புகார் கொடுக்க, தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக இருக்கலாம். பைனான்சியர்கள் மிரட்டலால், புகார் மூலம் என்னை காரணம் காட்டி, அவர்களைச் சமாளிக்க முற்பட்டிருக்கலாம். சதீஷ்குமாரின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிப் பிரமுகரை எனக்கு தெரியாது.

எலி படத்திற்கு எனக்குப் பேசிய சம்பளத்தில், இரண்டு கோடி ரூபாய் மட்டும் கொடுத்தார். மீதிச் சம்பளமே தரவில்லை. நஷ்டம் என்று கூறியதும், நானும் பாக்கி சம்பளத்தைக் கேட்கவில்லை. ஒரு நடிகன் என்ற வகையில் இதைத்தான் நான் செய்ய முடியும். நண்பராக இருந்த தயாரிப்பாளர், திடீரென எதிரியை போல் நடந்து கொள்வது வருத்தமாக உள்ளது," என்றார்.

 

குடும்பத்தோடு புலி படம் பார்த்த விஜய்

வரும் அக்டோபர் முதல் தேதி புலி உலகெங்கும் பிரமாண்டமாய் வெளியாகிறது. இந்தப் படத்தை முழுமையாய் பார்த்திராத விஜய், நேற்று தன் குடும்பத்தினருடன் புலி பார்த்து மகிழ்ந்தார்.

Puli (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அரசு இசைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சர்வதேசத் தரம் வாய்ந்த தாகூர் ப்ரிவியூ திரையரங்கில் இந்தப் படத்தைப் பார்த்தனர் விஜய்யும் குடும்பத்தினரும்.

Vijay watched puli with family

விஜய்யுடன் அவரது நெருங்கிய நண்பர்களும் படத்தைப் பார்த்தனர். பார்த்த அனைவரும் படத்தையும் அதில் விஜய்யின் நடிப்பையும் வெகுவாகப் பாராட்டினர்.

நாளை மறுநாள் உலகெங்கும் வெளியாகிறது புலி. சிம்பு தேவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஹன்சிகா, ஸ்ருதிஹாஸன், ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, பிடி செல்வகுமாரும் ஷிபு தமீன்ஸூம் படத்தைத் தயாரித்துள்ளனர்.

 

அல்லு அர்ஜுன் படத்தில் "குத்தாட்டம்" ஆடப்போகும் அனுஷ்கா

ஹைதராபாத்: தெலுங்கின் முன்னணி நடிகையாக விளங்கும் அனுஷ்கா தெலுங்கின் இளம் நடிகர் அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடவிருக்கிறாராம்.

அக்டோபர் 9 ம்தேதி அனுஷ்கா ராணியாக நடித்திருக்கும் ருத்ரமாதேவி திரைப்படம் வெளியாகிறது, இந்தப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

படத்திற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் அல்லு அர்ஜுனின் பாத்திரம் அமைக்கப்பட்டு இருக்கிறது, இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்த படத்தில் நடிகை அனுஷ்கா ஒரு ஐட்டம் பாடலிற்கு ஆடவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Anushka Shetty item song in Allu Arjun's Upcoming Movie

ருத்ரமாதேவி படத்தில் அல்லு அர்ஜுன் நடித்துக் கொடுத்ததற்கு நன்றிக் கடனாக இந்தப் படத்தில் அனுஷ்கா ஐட்டம் பாடலிற்கு ஆடுகிறார் என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனிற்கு ஜோடியாக ராகுல் பரீத் சிங் நாயகியாக நடிக்கவிருக்கிறார். பாகுபலி மற்றும் ருத்ரமாதேவி போன்ற படங்களினால் புகழ்பெற்ற அனுஷ்கா, இந்தப் படத்தில் ஆடுவதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் அதிகரிக்க படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

அனுஷ்காவின் நடிப்பில் அக்டோபர் 9 ம் தேதி ருத்ரமாதேவி மற்றும் இஞ்சி இடுப்பழகி ஆகிய 2 படங்கள் வெளியாகின்றன. இதில் இஞ்சி இடுப்பழகி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.

ருத்ரமாதேவி திரைப்படம் தமிழ், தெலுங்கு தவிர்த்து ஹிந்தி மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

முதல் முறையாக தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகும் விஜய் படம்!

விஜய்யின் திரையுலகப் பயணத்தில் முதல் முறையாக அவர் நடித்த படம் ஒன்று தமிழ், தெலுங்கு, இந்தியில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. அதுதான் சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள புலி.

Puli (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

இதுவரை விஜய் படங்கள் ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகத்தில் வெளியாகும். ஆனால் நேரடி தமிழ்ப் படமாகவே வெளியாகி வந்தன. அதேபோல நேரடித் தமிழ்ப் படமாகவே கேரளாவில் நூறுக்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகு வசூல் குவித்து வந்தன விஜய் படங்கள்.

For the first time Vijay's Puli releasing in 3 languages

இப்போது ஆந்திராவில் தமிழ் மற்றும் தெலுங்கில் புலி படம் வெளியாகிறது. வட மாநிலங்களில் இந்தியில் டப்பாகி வெளியாகிறது.

கர்நாடகத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழிகளிலுமே இந்தப் படம் வெளியாகிறது. வழக்கத்தை விட அதிக அரங்குகளில் மலையாளத்தில் இந்தப் படம் வெளியாகிறது.

மொத்தம் 2000க்கும் அதிகமான அரங்குகளில் புலியை வெளியிடுகின்றனர் தயாரிப்பாளர்கள்.

விஜய் படம் இத்தனை அரங்குகளில், இத்தனை மொழிகளில் உலகெங்கும் வெளியாவது இதுவே முதல் முறை!

 

'அசால்ட்டா' தயாரிப்பாளராகிவிட்ட பாபி சிம்ஹா!

நடிக்க வந்த ஓரிரு ஆண்டுகளிலேயே சர்ச்சைக்குரிய நடிகனாகிவிட்ட பாபி சிம்ஹா, அடுத்து தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

நேரம், ஜிகிர்தண்டா போன்ற படங்களின் மூலம் பாப்புலரான பாபி சிம்ஹா, இப்போது பாம்புச் சட்டை, உறுமீன், இறைவி, மசாலா படம், கோ 2 போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

அடுத்து படம் தயாரிக்கும் முடிவுக்கு வந்துவிட்டார்.

Bobby Simha turns producer

அசால்ட் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துள்ள பாபி, தன் நண்பர் சதீஷுடன் சேர்ந்து வல்லவனுக்கு வல்லவன் என்ற படத்தைத் தயாரிக்கிறார்.

ஜிகிர்தண்டா படத்தில் பாபி சிம்ஹா நடித்த பாத்திரத்தின் பெயர் அசால்ட் சேது. அதே பெயரில் படக் கம்பெனி ஆரம்பித்திருக்கிறார்!

 

வடநாட்டு சாமியாரின் எம்எஸ்ஜி 2 புலியுடன் மோதுகிறதா?

சென்னை: விஜய் நடிப்பில் நாளை மறுநாள் வெளியாகவிருக்கும் புலி திரைப்படத்துடன் எந்தத் தமிழ்ப் படமும் போட்டியிடாத நிலையில், வடநாட்டு சாமியார் நடிப்பில் வெளியான எம்எஸ்ஜி 2 திரைப்படம் தமிழில் வெளியாகிறது.

Puli (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

வட நாட்டில் பிரபலமான குர்மீத் ராம் என்னும் சாமியாரின் நடிப்பில் கடந்த ஆண்டு எம்.எஸ்.ஜி. (மெசேஞ்சர் ஆப் காட்) என்ற பெயரில் படமொன்று வெளியானது.

'MSG 2′ Starring Gurmeet Ram Rahim Singh Releases In Tamil

இவரே இயக்கி, அதில் இவரே நடிக்கவும் செய்திருந்தார். இதில் சாமியார் குர்மீத் ராம் அதிரடி ஆக்க்ஷன் ஹீரோவாக நடித்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.

மேலும் இந்தப் படத்தை தமிழிலும் டப் செய்து வெளியிட்டார். தற்போது அடுத்த அதிர்ச்சியாக இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான எம்எஸ்ஜி 2 திரைப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் விஜயின் புலி திரைப்படம் வெளியாகும், அதே நாளில் சாமியார் தனது படத்தை வெளியிடுவது தான்.

எம்எஸ்ஜி 2 படத்தின் அதிரடியான டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதெல்லாம் தானா நடக்குதா? இல்லை திட்டம் போட்டு செய்றாங்களா...

 

ஓமைகாட்: 'அந்த' படத்திற்கு முன்பே லீடரின் படம் ரிலீஸாக வேண்டியதா?

சென்னை: லீடர் நடிகரின் கால்ஷீட்டிற்காக காத்திருந்து காத்திருந்து காலங்கள் ஓடியதால் தான் விலங்கின் பெயர் கொண்ட இரண்டு எழுத்து படம் மன்னரின் பெயர் கொண்ட பிரமாண்ட படத்திற்கு பிறகு ரிலீஸாகிறதாம்.

லீடர் நடிகர் நடித்துள்ள விலங்கின் பெயர் கொண்ட இரண்டு எழுத்து படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. படத்தின் முக்கிய அம்சமாக விஷுவல் எஃபெக்ட்ஸ் இருக்கும் என்று கூறப்படுகிறது. படம் நிச்சயம் வெற்றி பெறும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Wow, leader's movie got delayed because of him?

இந்த படம் ரிலீஸாக சில மாதங்களுக்கு முன்பு தான் அண்டை மாநிலத்தைச் சேர்ந்த பிரபல இயக்குனர் மன்னரின் பெயர் கொண்ட சரித்திர படத்தை வெளியிட்டு வெற்றி கண்டுள்ளார். ரசிகர்கள் சிலர் லீடரின் படத்தை அந்த சரித்திரப் படத்துடன் ஒப்பிடுகிறார்கள்.

இந்நிலையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது லீடரின் படம் சரித்திர படத்திற்கு முன்பு ரிலீஸாக வேண்டியதாம். இயக்குனர் படத்தின் கதையை எப்பொழுதோ தயார் செய்துவிட்டாராம். அவர் கதையை எழுதும்போதே லீடரை மனதில் வைத்து தான் எழுதினாராம்.

கதை தயாராகியும் லீடரின் கால்ஷீட் கிடைக்கத் தான் தாமதம் ஆகிவிட்டதாம். அதனால் தான் லீடரின் படம் சரித்திர படத்திற்கு பிறகு ரிலீஸாகிறதாம்.

 

'புதுசா தினுசா மாம்பழம் பாரு... அதைப் பறிச்சி கசக்கி ஜூஸைப் போடு' -இது வில்லன் பாட்டு!

தமிழ்ப்பட உலகில் புதிதாக ஒரு வில்லன் அறிமுகமாகிறார். பெயர் கே.ஜி.ஆர். சொந்த ஊர் மேட்டூர் பக்கத்திலுள்ள பூமனூர்.

பரிசல் என்ற படத்தில் அறிமுகமாகும் இவரது சொந்தப் பெயர் கோவிந்தன். தந்தை பெயர், மகன் பெயர் ஆகியவற்றுடன் தன் பெயரையும் இணைத்து கே.ஜி.ஆர். என்று பெயரை மாற்றிக் கொண்டாராம்.

KGR, A new villain launches in Parisal

ஏ-1 பிலிம் மேக்கர்ஸ் என்னும் பட நிறுவனம் தயாரிக்கும் 'பரிசல்' படத்தை சுந்தர் என்ற புதிய இயக்குநர் இயக்குகிறார். இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராகவும் கே.ஜி.ஆர். இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிசல் கதை என்ன?

ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நகரத்திற்குச் செல்ல வேண்டுமென்றால், பரிசலில்தான் செல்ல வேண்டும். இருப்பதோ ஒரே ஒரு பரிசல். ஒரு பாலம் கட்டப்பட்டால், சீக்கிரம் நகரத்திற்குச் செல்லலாம் என்று கிராமத்து மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அதற்கு எதிராக இருக்கிறார் கிராமத்தின் பண்ணையாரான உத்ரபாண்டி. பாலம் கட்டப்பட்டு விட்டால், கிராமத்து மக்கள் வேலை தேடி நகரத்திற்குச் சென்று விடுவார்கள், பிறகு தன் வயல்களில் வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லாமல் போய் விடுவார்கள் என்று அவர் நினைப்பதே காரணம். அதனால் பரிசல் ஓட்டும் 'தலைவாசல்' விஜய்யை அவர் கொன்று விடுகிறார். அந்த ஊரில் டாக்டராக இருக்கும் 'நிழல்கள்' ரவியையும் கொன்று விடுகிறார்.

பாலம் கட்டுவதற்கு ஆதரவாக இருக்கும் யாரையும் தன் அடியாட்களை வைத்து தீர்த்துக் கட்டுவதற்கு தயாராக இருக்கிறார் உத்ரபாண்டி. இறுதியில் என்ன நடந்தது? பாலம் கட்டப்பட்டதா, இல்லையா? இதுதான் 'பரிசல்' படத்தின் கதை. இந்த கொடூர குணம் கொண்ட உத்ரபாண்டியாக நடிப்பவர்தான் கே.ஜி.ஆர்.

KGR, A new villain launches in Parisal

'பரிசல்' படத்தில் கே.ஜி.ஆருக்கு ஒரு பாடல் காட்சியும் இருக்கிறது.

நடன நடிகை ரிச்சாவுடன் இவர் சேர்ந்து ஆடும்.

'புதுசா தினுசா
மாம்பழம் பாரு
அதைப் பறிச்சி
கசக்கி
ஜூஸைப் போடு'

என்ற ஆரம்பிக்கிறது அவருக்கான பாடல்!

ஆரம்ப காலத்தில் கல் வேலை, கிணறு தோண்டும் வேலை, லாரி ஓட்டுநர் என்று பல தொழில்களைச் செய்திருக்கும் கே.ஜி.ஆர்., பின்னர் சொந்தத்தில் வாங்கி ஓட்டினாராம். சொந்த ஊரில் விவசாயமும் செய்கிறார்.

'பரிசல்' படத்தில் மிகவும் அருமையாக இவர் நடித்ததைப் பார்த்து, 'நிழல்கள்' ரவி, 'தலைவாசல்' விஜய் இருவரும் இவரைப் பாராட்டியிருக்கிறார்கள்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து கே.ஜி.ஆர். 'வீர திருவிழா' படத்தில் பொன்வண்ணனின் சம்பந்தியாக நடிக்கிறார். இவர் நடிக்கும் இன்னொரு படம் 'அடையாளம்.'

 

இறைவி: தீபாவளிக்கு முதல் பார்வை, கிறிஸ்துமஸில் படம் ரிலீஸ்

சென்னை: கார்த்திக் சுப்புராஜின் இறைவி திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து படத்தின் முதல் பார்வையை தீபாவளி தினத்திலும், படத்தை கிறிஸ்துமஸ் தினத்திலும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் படம் இறைவி. இந்தப்படத்தில் விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், அஞ்சலி மற்றும் கமாலினி முகர்ஜி என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

Karthik Subbaraj's Iraivi Shooting Wrapped up

இறைவி படத்தைப் பற்றிய முதல் அறிவிப்பு பிப்ரவரியில் வந்தது. படப்பிடிப்பு மே மாதம் இருபதாம்தேதி தொடங்கியது. நடுநடுவே சற்று இடைவெளி விட்டு கார்த்திக் சுப்புராஜ் நடத்திய படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

2 தினங்களுக்கு முன்பாக படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து படத்தின் முதல் பார்வையை தீபாவளி தினத்திலும், படத்தை கிறிஸ்துமஸ் தினத்திலும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.


"இறைவி படப்பிடிப்பு முடிந்தது. இப்படி ஒரு அருமையான குழுவினருடன் பணிபுரியும் வாய்ப்பை அளித்த உங்களுக்கு நன்றி" என்று தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்திருக்கிறார் நடிகர் பாபி சிம்ஹா.

பீட்சா, ஜிகர்தண்டா படங்களின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் இறைவி திரைப்படம் வெளியாகவிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

இறைவி - எதிர்பார்ப்பு அதிகம்...

 

தேவர் மகன் கெட்டப்புக்கு திரும்பினார் கமல்!

தூங்கா வனம் முடித்த கையோடு அடுத்த படத்தின் ஷூட்டிங்கை சத்தமின்றி தொடங்கியேவிட்டார் கமல் ஹாஸன்.

உத்தம வில்லனில் மீசையில்லாமல், பாபநாசத்தில் திருநெல்வேலிக்காரர் கெட்டப்பில், தூங்காவனத்தில் கொஞ்சம் தாடி - முறுக்கிய மீசை என்று வந்தவர், அடுத்த படத்துக்கு அப்படியே முழுசாக வேறு மாதிரி ஆகிவிட்டார்.

Kamal reveals his getup for next movie

தேவர் மகனில் வைத்திருந்தாரே அந்த மாதிரி கிடா மீசையுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார் கமல்.

இந்த கெட்டப்பை முதல் முறையாக, தூங்காவனத்தின் தெலுங்குப் பதிப்பான சீகட்டி ராஜ்ஜியம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வெளிப்படுத்தியிருந்தார் கமல்.

Kamal reveals his getup for next movie

ஹைதராபாதில் நடந்த இந்த விழாவில் கமல் மற்றும் அவரது படக்குழுவினர் பங்கேற்றனர்.

கமலின் அடுத்த படத்தை இயக்குபவரும் தூங்கா வனம் இயக்குநர் ராஜேஷ் எம் செல்வாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal reveals his getup for next movie
 

பாடகர் க்ரிஷ்ஷின் கனவை நனவாக்கிய ரஜினி!

பாடகரும் நடிகருமான க்ரிஷ்ஷின் நெடு நாள் ஆசையை நேற்று நிறைவேற்றி வைத்துள்ளார் ரஜினிகாந்த்.

நடிகை சங்கீதாவின் கணவரும், ஏராளமான பின்னணி பாடல்களைப் பாடியுள்ளவருமான க்ரிஷ், சமீபத்தில் வெளியான புரியாத ஆனந்தம் புதிராக ஆரம்பம் படத்தில் ஹீரோவாகவும் நடித்தார்.

Rajini fulfills singer Krish's wish

இவருக்கு நீண்ட நாட்களாக ரஜினியைச் சந்தித்து ஆசி பெற வேண்டும் என்று ஆசை.

அந்த ஆசை நேற்று நிறைவேறிவிட்டது.

சென்னை அடையாறு பார்க் ஷெரட்டன் ஹோட்டலுக்கு க்ரிஷ்ஷை வரச் சொன்ன ரஜினி, அவருக்கு ஆசி கூறி உடன் நின்று படமெடுத்துக் கொண்டார்!

சமூக வலைத்தளங்களில் படம் வெளியாகி நேற்று இரவே வைரலானது. பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு ட்விட்டரில், "மச்சி எக்ஸ்ட்ராடினரிடா... தலைவர எப்போ பாத்த?" என்று ட்விட்டரில் கேட்க, அதற்கு பதிலளித்த க்ரிஷ், "மச்சி இன்னிக்குதான்டா... வாழ்க்கையில் நான் சந்தித்தவர்களிலேயே மிகச் சிறந்த மனிதர்," என்று பதிலளித்துள்ளார்.