'விஜய்'யை வைத்து ஆர்ட் படமோ, குடும்ப படமோ எடுக்க முடியாது: ஆர்.பி. சௌத்ரி

'விஜய்'யை வைத்து ஆர்ட் படமோ, குடும்ப படமோ எடுக்க முடியாது: ஆர்.பி. சௌத்ரி

சென்னை: நடிகர் விஜய்யை வைத்து ஆர்ட் படம் எடுக்க முடியாது என்று ஜில்லா படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி தெரிவித்துள்ளார்.

ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் விஜய், மோகன்லால் நடித்த ஜில்லா படம் கடந்த 10ம் தேதி ரிலீஸாகி வசூலை குவித்துக் கொண்டிருக்கிறது. படம் கேரளாவில் வசூலில் புதிய சாதனையே படைத்துள்ளது.

இந்நிலையில் ஜில்லா வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஆர்.பி. சௌத்ரி கூறுகையில்,

விஜய்யை வைத்து படம் எடுக்கையில் அவருக்கு இருக்கும் ஏராளமான ரசிகர்களையும் மனதில் வைத்து தான் படம் எடுக்க வேண்டும். அவரின் ரசிகர்களை திருப்திபடுத்துவது மிகவும் முக்கியம். விஜய்யை வைத்து ஆர்ட் படமோ, குடும்ப படமோ எடுக்க முடியாது. ஏனென்றால் அத்தகைய படங்களில் விஜய் நடித்தால் அதை அவரது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ரசிகர்களை திருப்திபடுத்த விஜய்யை வைத்து கமர்ஷியல் படங்கள் மட்டும் தான் எடுக்க முடியும். ஜில்லா படம் வெற்றி பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி என்றார்.

 

பிரதமர் பதவிக்கு ஏற்றவரை கடவுள் முடிவு செய்வார்: நடிகர் சல்மான் கான்

அகமதாபாத்: பிரதமர் பதவிக்கு ஏற்ற சிறந்த மனிதரை கடவுள் முடிவு செய்வார் என்று நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார். மக்களை மோடிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்ட சல்மான் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பாராம்.

குஜராத்தில் நேற்று பட்டம் விடும் பண்டிகை நடைபெற்றது. இதில் நடிகர் சல்மான் கான் கலந்து கொண்டு அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியுடன் சேர்ந்து பட்டம் விட்டார்.

பிரதமர் பதவிக்கு ஏற்றவரை கடவுள் முடிவு செய்வார்: நடிகர் சல்மான் கான்

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சல்மான் கூறுகையில்,

நாட்டுக்கு ஏற்ற சிறந்த மனிதர் யார் என்பதை கடவுள் முடிவு செய்வார்.
அந்த சிறந்த மனிதர் வெற்றி பெறட்டும். நமக்கும், நாட்டுக்கும் சிறந்த மனிதராக இருப்பவர் தான் பிரதமர் ஆக வேண்டும். மோடி அரசியலில் நல்ல மனிதர். நாடு மற்றும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக மோடியால் உழைக்க முடியும் என்பதால் எனக்கு அவரை பிடிக்கும்.

மோடி சிறந்த மனிதர் என்று நீங்கள் நினைத்தால் அவருக்கு வாக்களியுங்கள். நான் அவரை இன்று தான் முதல் முறையாக சந்தித்தேன். இனி அவரை அடிக்கடி சந்திப்பேன் என்று நம்புகிறேன். குஜராத் போன்ற முன்னேற்றத்தை நான் வேறு எங்கும் பார்க்கவில்லை.

நான் மும்பைக்காரன். என் தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. பிரியா தத் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாபா சித்திக்கி ஆகியோர் சிறந்த மனிதர்கள். அவர்களுக்கே எனது ஓட்டு என்றார்.

பிரதமர் வேட்பாளர் பற்றி சல்மானிடம் கேட்கப்பட்டதற்கு, அவர் கூறுகையில், நான் ஒரு நடிகன். எனக்கு அரசியல் பற்றி அவ்வளவாக தெரியாது என்றார்.