காதல் தோல்வி விரக்தியால் தமிழ் சினிமாவுக்கு முழுக்கா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
காதல் முறிவு ஏற்பட்டதால்தான் தமிழ் படங்களில் தமன்னா நடிக்க மறுக்கிறார் என்று பரபரப்பாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் விளக்கம் அளித்தார். நடிகர் ஒருவரை தமன்னா காதலித்ததாகவும் அது தோல்வியில் முடிந்த தாகவும் பேசப்பட்டது.  இந்நிலையில்,   'இனி தமிழில் நடிப்பதில்லை' என்று அதற்கு பிறகுதான் தமன்னா முடிவு எடுத்தார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அஹமத் இயக்க ஜீவா ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் தமன்னா நடிக்கிறார் என்று கோலிவுட்டில் தகவல் பரவியது. இதை தமன்னா மறுத்திருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது: என்னை பற்றி பல வதந்திகள் வருவது தெரியும். தமிழில் நடிக்காததற்கும் ஒரு வதந்தி பரப்புகிறார்கள். தமிழில் நடிக்கக் கேட்டு யாரும் என்னை அணுகவில்லை. அதனால்தான் நடிக்கவில்லை. மற்றபடி, வேறு எந்த காரணமும் இல்லை. கடைசியாக 'வேங்கை' படத்தில் நடித்தேன். அதற்கு பிறகு வாய்ப்பு வரவில்லை. தமிழில் நான் ஒரு படம் ஒப்புக்கொண்டிருப்பதாக வரும் தகவலும் வதந்திதான். வாய்ப்பு வந்தாலும் மார்ச், ஏப்ரலுக்கு பிறகுதான் கால்ஷீட் தர முடியும். தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறேன். இந்தியிலும் நிறைய வாய்ப்பு வருகிறது. நல்ல கதைக்காக காத்திருக்கிறேன். இவ்வாறு தமன்னா கூறினார்.



 

கிசு கிசு - ஹீரோ டென்ஷன் வில்லன் அப்செட்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

எமி நடிகையும் இந்தி நடிகரும் நெருங்கி பழகுறதை கேள்விப்பட்டு ஐ காட் ஹீரோ டென்ஷன் ஆயிட்டாராம்... ஆயிட்டாராம்... நடிகைகிட்ட பேசுறதையே விட்டுட்டாராம். நடிகை போன் செஞ்சாலும் எடுக்கிறதில்லையாம். நடிகரோட மனசு உடைஞ்சு போச்சுன்னு நட்பு வட்டாரங்கள் கிண்டலா கமென்ட் அடிக்கிறாங்களாம்... அடிக்கிறாங்களாம்...

நயன நடிகையும் டான்ஸ் மாஸ்டரும் முட்டிக்கிட¢டதுல பிரகாச வில்லன்தான் ரொம்பவே அப்செட்டா இருக்காராம்... இருக்காராம்... எப்படி இப்புடின்னு பாக்கிறவங்ககிட்டயெல்லாம் புலம்புறாராம்... புலம்புறாராம்... இது பற்றி மாஸ்டர்கிட்ட பேசின நடிகரு, ரெண்டு பேரும் மனம் விட்டு பேசினா எல்லாம் சரியாயிடும்னு ஃபிரீ அட்வைசும் தந்தாராம்... தந்தாராம்...

கன் படத்தோட ஷூட்டிங்ல முருக இயக்கத்தோட வாய்ஸை விட சந்தோஷ கேமராமேன் வாய்ஸ்தான் தூக்கலா இருக்காம்... இருக்காம்... இயக்கம் ஒரு கோணத்துல கேமரா வைக¢கச் சொன்னா, சந்தோஷம் வேற கோணத்துல வச்சு இதுதான் சரின்னு விளக்கம் தர்றாராம்... தர்றாராம்... ஸ்பாட்ல டெக்னீஷியன்களை விரட்டி விரட்டி சந்தோஷம் வேலை வாங்குறாராம்... வாங்குறாராம்... பஞ்ச் நடிகர் உள்பட எல்லோருமே நொந்து போயிருக்காங்களாம்... போயிருக்காங்களாம்...


 

நிஜமாகவே கர்ப்பம்தானா? படத்தில் இருந்து கரீனா திடீர் விலகல்

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
பாலிவுட் ஹீரோ சைப் அலிகான், கரீனா கபூர் நீண்ட கால காதலர்கள். 'ஏஜென்ட் வினோத்' என்ற படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கிறார்கள். சைப் தயாரிக்கிறார். இதனால் இருவருக்கும் நெருக்கம் அதிகமானது. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் கரீனா கபூர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் போட்டோ இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. டிஷர்ட், ஜீன்ஸ் அணிந்திருந்த கரீனாவின் வயிறு பெரிதாக காணப்பட்டது. துப்பட்டாவில் வயிற்றை மூடியபடி அவர் நடந்து சென்றார். அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவியது. இதை அவரது மேனேஜர் மறுத்தார். 'கரீனா புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இம்மாத கடைசியில் இருந்து 30 நாள் தொடர்ந்து ஷூட்டிங் இருக்கிறது' என்றும் கூறியிருந்தார்.

இதற்கிடையில் ஜெனிலியா திருமண விழாவில் சைப் அலியுடன் கரீனா கலந்துகொண்டார். சேலை அணிந்து வந்த அவர், முந்தானையால் வயிற்றை மறைத்திருந்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' என்ற படத்தை தயாரித்த ஏக்தா கபூர் அடுத்து 'எ டைம் இன் மும்பை' என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் ஹீரோயினாக கரீனா நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில் அப்படத்தில் இருந்து திடீரென வெளியேறியிருக்கிறார் கரீனா. இதையடுத்து, கரீனா நிஜமாகவே கர்ப்பம்தானா என்ற சந்தேகம் பாலிவுட்டில் அதிகரித்திருக்கிறது. சைப் அலிகானுக்கும், கரீனாவுக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனர். இந்த ஆண்டில் இவர்களது திருமணம் நடத்த திட்டமிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


 

பிரதமர் அளித்த விருந்தில் ஸ்ருதி ஹாசன் பங்கேற்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தனுஷை தொடர்ந்து, நடிகை ஸ்ருதி ஹாசனும் பிரதமர் அளித்த விருந்தில் பங்கேற்றார். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் '3' படத்தில் தனுஷ் பாடியிருக்கும் 'ஒய் திஸ் கொல வெறிடி' பாடல் உலகம் முழுக்க பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்பாடல் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் அளித்த விருந்தில் பங்கேற்க தனுஷுக்கு அழைப்பு வந்தது. அவர் பங்கேற்றார். இதையடுத்து, '3' பட ஹீரோயின் ஸ்ருதி ஹாசனுக்கும் பிரதமர் அளிக்கும் விருந்தில் பங்கேற்க அழைப்பு வந்தது. பிரதமர் அளித்த விருந்தில் அவரும் கலந்துகொண்டார். இதுபற்றி அவர் கூறியதாவது: டெல்லியில் உள்ள ஐதராபாத் ஹவுஸில் மொரீஷியஸ் பிரதமருக்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை விருந்தளித்தார். அதில் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்தது. பங்கேற்றேன். இது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம். இதில் பங்கேற்றதை பரவசமாகவும், கவுரவமாகவும் கருதுகிறேன். விருந்தின்போது, பிரதமரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தனர். அவருடன் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பாலிவுட் ஹீரோ இம்ரான் கானும் கலந்துகொண்டார். இருவரும் 'லக்' என்ற படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறோம். இவ்வாறு ஸ்ருதி ஹாசன் கூறினார்.


 

சற்குணம் இயக்கத்தில் விக்ரம் பிரபு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சற்குணம் இயக்கும் படத்தில் பிரபு மகன் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார். 'களவாணி', 'வாகை சூட வா' படங்களை அடுத்து சற்குணம் இயக்கும் படத்துக்கு, 'கோவத்தை அள்ளி கொஞ்சுகிறேன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கிறார். இதில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மற்ற நடிகர், நடிகை தேர்வு நடந்து வருகிறது. இந்தப் படத்தை அடுத்து தமிழ், தெலுங்கில் சற்குணம் இயக்கும் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இதற்கு 'நேர்-நில்' என்று பெயரிடப்பட்டுள்ளது.


 

நரசிம்மன் ஐ.பி.எஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பூரணி பிலிம்ஸ் சார்பில் அருணாசலம் தயாரிக்கும் படம், 'நரசிம்மன் ஐ.பி.எஸ்'. மலையாளத்தில் 'அச்சன்ட ஆண்மக்கள்' என்ற பெயரில் ரிலீசாகிறது. சரத்குமார், மேக்னா ராஜ், நெடுமுடி வேணு, யுவராணி உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, திலீப் ராமன். இசை, ஜாஸிகிப்ட். வசனம், ஆர்.எஸ்.நித்திஷ். இயக்கம், சந்திரசேகரன். அவர் கூறும்போது, 'நேர்மையான போலீஸ் அதிகாரி, நெடுமுடி வேணு. அவர் மகள், மேக்னா ராஜ். அவரை திருமணம் செய்யும் போலீஸ் அதிகாரி சரத்குமார் நெடுமுடி வேணுவின் எதிரிகளை எப்படி வெல்கிறார் என்பது கதை' என்றார்.


 

தனுஷின் சச்சின் கீதம் வெளியீடு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சச்சின் டெண்டுல்கருக்காக, தனுஷ் உருவாக்கியுள்ள, 'சச்சின் ஆன்தம்' என்ற ஆல்பம் யூடியூப்பில் நேற்று வெளியிடப்பட்டது. ஸ்ருதிஹாசனுடன் நடிக்கும் '3' படத்துக்காக, தனுஷ் எழுதி பாடிய, 'ஒய் திஸ் கொலவெறிடி' உலகம் முழுவதும் பரபரப்பானது. இதையடுத்து, இப்போது சச்சினுக்காக தனுஷ் ஒரு ஆல்பம் உருவாக்கியுள்ளார். 'பூஸ்ட்' நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஆல்பத்துக்கு 'சச்சின் ஆன்தம்' என்று பெயிரிடப்பட்டுள்ளது. பாடலில், அனுஷ்கா, இசை அமைப்பாளர் அனிருத் உட்பட பலர் ஆடியுள்ளனர். ரயில்வே ஸ்டேஷனில் ஆடிப்பாடுவது போல் காட்சியமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலையும் தனுஷ் எழுதியுள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது நேற்று மாலை, யூடியூப்பில் வெளியிடப்பட்டது. வெளியான சிறிது நேரத்திலேயே, பல்லாயிரக்கணக்கானோர் இதை பார்த்து ரசித்துள்ளனர். இதுபற்றி தனுஷ் கூறும்போது, "சச்சினுக்காக, சாதாரண ரசிகனின் எளிய முயற்சி இது. கண்டிப்பாக இதுவும் பேசப்படும்" என்றார்.


 

அட்வான்சை திருப்பி கொடுத்தார் பூர்ணா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தத்வமஸி ஆர்ட்ஸ் சார்பில் ஜெய்ஸ்ரீ, கே.எஸ்.லோகநாதன் தயாரிக்கும் படம், 'கருவாச்சி'. அகில், பூர்ணா ஜோடி. எழுதி, இயக்கும் ஏ.ஆர்.சிவா கூறும்போது, "சினிமாவில் காதலுக்கு தடையாக ஜாதி, மதம், அந்தஸ்து போன்றவை இருந்தது. இதில், காதலுக்கு தடையாக காமம் இருப்பதாகச் சொல்லியிருக்கிறோம். கதையும், கேரக்டரும் பிடித்து விட்டதால், வாங்கிய அட்வான்சை திருப்பிக் கொடுத்துவிட்டார் பூர்ணா. ரிலீசான பிறகு சம்பளம் வாங்கிக்கொள்வதாக சொன்னார். ஷூட்டிங் முடிந்துவிட்டது" என்றார்.


 

தமிழ், தெலுங்கு போதும்: தீக்ஷா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விக்ரம் ஜோடியாக 'ராஜபாட்டை' படத்தில் நடித்தவர் தீக்ஷா சேத். இப்போது சிம்பு ஜோடியாக, 'வேட்டை மன்னன்' படத்தில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: 'ராஜபாட்டை' எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றதும் வருத்தமாகத்தான் இருந்தது. இருந்தாலும் எனது அறிமுகப் படம் விக்ரமுடன் அமைந்ததை பெருமையாக கருதுகிறேன். 'வேட்டைமன்னன்' படம் தமிழில் எனக்கு சிறந்த இடத்தை தரும் என்று நம்புகிறேன். இப்போது தெலுங்கில் நான்கு படங்களில் நடித்து வருகிறேன். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொருவிதமான கேரக்டரில் நடிக்கிறேன். தமிழ், தெலுங்கில் நடிப்பதே திருப்தியாக இருப்பதால் இந்திக்குப் போகும் எண்ணமில்லை. 'அழகான ஹீரோயின்' என்று இன்டஸ்ட்ரியில் சொல்வது பற்றி கேட்கிறார்கள். அதற்கு, எனது மேக்கப் ஆர்டிஸ்ட்டுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். இருந்தாலும் எனது நடிப்பு பேசப்பட்டால் இன்னும் மகிழ்வேன்.


 

கவர்ச்சியாக இருப்பது ஈசியல்ல

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழில், 'ராமன் தேடிய சீதை', 'ஆட்டநாயகன்', 'குள்ளநரிக்கூட்டம்' உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ரம்யா நம்பீசன். அவர் கூறியதாவது: தமிழில் நான் நடித்துள்ள 'முறியடி' படம் ரிலீஸ் ஆக வேண்டி இருக்கிறது. மலையாளத்தில், 'பேச்சலர் பார்ட்டி', 'ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா' படங்களில் நடித்து வருகிறேன். 'சாப்பா குரிசு' என்ற மலையாள படத்தில் நான் நடித்துள்ள முத்தக் காட்சி பற்றி கேட்கிறார்கள். இந்த காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. சிலரிடமிருந்து எதிர்ப்பும் வந்தது.

இதையடுத்து செக்ஸியான நடிகை என்று சொல்கிறார்கள். இப்படி சொல்வதை ஏற்பதில் எனக்கு தயக்கம் ஏதும் இல்லை. ஏனென்றால் கவர்ச்சியாக இருப்பது ஒன்றும் ஈசியில்லை. இதை எனக்கான பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன். எனக்கு வரும் கதைகளில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்தே நடிக்கிறேன். வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க எப்போதும் தயாராக இருக்கிறேன். ஆனால், அதற்கான கதைகள் வரவேண்டும். இவ்வாறு ரம்யா நம்பீசன் கூறினார்.


 

ஒரே நாளில் 9 படங்கள் ரிலீஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வரும் வெள்ளிக்கிழமை ஒன்பது படங்கள் ரிலீஸ் ஆகின்றன. 'பெரிய ஹீரோ நடித்த மற்றும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே தியேட்டர் கிடைக்கிறது. சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது' என்று சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களை வருடத்தில் 5 நாட்கள் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்திருந்தது. இது பின்னர் 8 நாட்கள் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சின்ன பட்ஜெட் படங்களை தியேட்டர் கிடைத்தால் எப்போது வேண்டுமானாலும் ரிலீஸ் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மாதம் 21 சிறு பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது. வரும் வெள்ளிக்கிழமை மட்டும், 'தோனி', 'ஒரு நடிகையின் வாக்குமூலம்', 'விளையாட வா', 'ஒரு மழை நான்கு சாரல்', 'சூழ்நிலை', 'ருத்ரபூமி', 'வாச்சாத்தி', 'எங்கடா உங்க மந்திரி' ஆகிய படங்களும், 'உச்சிதனை முகர்ந்தால்' படம் ரீ ரிலீஸும் ஆகின்றன.


 

நடிப்புக்குத்தான் முக்கியத்துவம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
எப்போதும் நடிப்புக்குத்தான் முக்கியத்துவம் தருவேன் என்று பிரகாஷ்ராஜ் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: 'அபியும் நானும்' படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்து இயக்கினேன். இப்போது 'தோனி'யை இயக்கியுள்ளேன். பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் மன இறுக்கத்தையும், அவர்களைப் படிக்க வைக்க, பெற்றோர்கள் சந்திக்கும் சிரமங்களையும் சொல்லியிருக்கிறேன். கல்வி கற்கும் நிலையும், கற்பிக்கப்படும் முறையும் மாற வேண்டும் என்ற கருத்தையும் படம் சொல்கிறது. இனி நான் டைரக்டரா, நடிகரா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. சிறந்த கதை அமைந்தால், தொடர்ந்து இயக்குவேன். ஆனால், நடிப்புக்குத்தான் முக்கியத்துவம் தருவேன்.


 

எந்த நடிகையையும் தாக்கவில்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'ஒரு நடிகையின் வாக்குமூலம்' பட இயக்குனர் ராஜ் கிருஷ்ணா கூறியதாவது: ஹீரோயினாகும் ஆர்வத்தில் சென்னை வரும் இளம்பெண், என்னென்ன போராட்டங்களை சந்திக்கிறாள்? பிறகு எப்படி ஹீரோயினாகிறாள் என்பதை சொல்லியிருக்கிறேன். எந்த நடிகையின் வாழ்க்கையையும் இன்ஸ்பிரேஷனாக வைத்து இதை உருவாக்கவில்லை. கதை கேட்டதும் சோனியா அகர்வால் நடிக்க ஒப்புக்கொண்டார். புன்னகைப்பூ கீதா தயாரிப்பதுடன், முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கமர்ஷியலுக்காக கிளாமர் சேர்க்க வேண்டிய கட்டாயம் இருந்தும், தவிர்த்தேன். ஒரு நடிகையின் வாழ்க்கையை, அவள் சந்திக்கும் வலியை, குடும்பத்துடன் பார்க்கும் வகையில் சொல்லியிருக்கிறேன்.


 

கிளாமராக நடிக்க பாமா முடிவு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'சேவற்கொடி' படத்தில் நடித்துவரும், பாமா கூறியதாவது: கிளாமராக நடிக்கக் கூடாது என்ற நிபந்தனையோடுதான் சினிமாவுக்கு வந்தேன். இதுவரை அப்படித்தான் நடித்துள்ளேன். இப்படியே சினிமாவில் நிலைக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கிறேன். அதனால் கதைக்கு தேவையென்றால் கிளாமராக நடிக்க முடிவு செய்துள்ளேன். உடல்வாகு அனுமதிக்கிற அளவுக்கு மாடர்ன் உடைகள் அணிந்து நடிப்பேன்.