இனிமேல் எனக்கு 'ஐட்டம்' வேண்டாம்... 'ரேணிகுண்டா' சஞ்சனா சிங்!

No More Item Numbers Renigunta Star   

ரேணிகுண்டா படத்தில் கலக்கலான கவர்ச்சி வேடத்தில் அறிமுகமாகி, பின்னர் குத்துப்பாட்டுக்களில் புகுந்த சஞ்சனா சிங் இனிமேல் தான் அதுபோல நடிக்கப் போவதில்லை, ஆடப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

ரேணிகுண்டா படத்தில் விபச்சாரப் பெண்ணாக நடித்திதருந்தார் சஞ்சனா சிங். பின்னர் குத்துப் பாட்டுகளுக்கு ஆடி வந்த அவர், சமீபத்தில் வெளியான மறுபடியும் ஒரு காதல் படத்திலும் களேபரமான ஆட்டத்தைப் போட்டிருந்தார். இருப்பினும் இனிமேல் குத்துப்பாட்டுகளுக்கு ஆடப் போவதில்லை என்று டிக்ளேர் செய்துள்ளார் சஞ்சனா.

சஞ்சனா சிங்கின் நடிப்பில் ரகளைபுரம், ரெண்டாவது படம், வெற்றிச் செல்வன் என படங்கள் அணிவகுத்து நிற்கின்றனவாம். தனக்குள் இருக்கும் நல்ல நடிகையை வெளிக் கொணருவதில்தான் இப்போதைக்கு சஞ்சனாவின் ஒரே லட்சியமாம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், முதலில் நான் எல்லோருக்கும் தெரிந்த பெண்ணாக மாற வேண்டும் என்று விரும்பினேன். இதனால்தான் குத்துப் பாட்டுக்கள் என்னைத் தேடி வந்தபோது அதை நான் தட்டவில்லை. இப்போது எல்லோருக்கும் தெரிந்த முகமாகி விட்டேன். எனவே மறுபடியும் குத்துப்பாட்டுக்களுக்குப் போக விரும்பவில்லை என்றார்

ரகளைபுரத்தில் கான்ஸ்டபிள் வேடத்தில் வருகிறாராம். கருணாஸை விழுந்து விழுந்து காதலிப்பவராக வருகிறாராம். மேலும் படத்தில் காமெடியிலும் கலக்கியுள்ளாராம் சஞ்சனா சிங்.

அதேபோல ரெண்டாவது படம் படத்தில் அரசியல்வாதி வேடமாம். கஞ்சா கருப்புடன் இணைந்து வெற்றிச்செல்வனில் காமெடி செய்துள்ளாராம். அப்படத்தில் அவர் தொழிலதிபராக வருகிறாராம். அவரைக் கவரை கடுமையாக முயற்சிப்பவராக வருகிறாராம் கஞ்சா கருப்பு.

இதுபோல அமளிதுமளி என்ற படத்தில் 2வது நாயகியாகவும் நடிக்கிறாரம் சஞ்சனா சிங்.

 

இரண்டாம் உலகத்தில் 2 அனுஷ்கா!

Anushka Dons Double Roles Irandam Ulagam    | அனுஷ்கா  

செல்வராகவன் இயக்கி வரும் இரண்டாம் உலகம் படத்தில் அனுஷ்கா இரண்டு வேடத்தில் நடிக்கிறாராம்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், ராதிகா, சிவ கார்த்திகேயன் உள்ளிட்டோரின் நடிப்பில், செல்வராகவன் இயக்கும் படம்தான் இந்த இரண்டாம் உலகம்.இப்படத்தில் அனுஷ்காதான் நாயகி. அவருக்கு இரண்டு வேடமாம்.

ரெண்டு படம் மூலமாக தமிழில் அறிமுகமான அனுஷ்கா இதுவரை தமிழில் இரட்டை வேடத்தில் நடித்ததில்லை. தற்போதுதான் முதல் முறையாக டபுள் ஆக்ட் கொடுக்கப் போகிறார். இதனால் கலக்கலாக நடிக்க அவர் ஆர்வமாக உள்ளாராம்.

ஒரு வேடம் குடும்பப் பெண்ணாம், இன்னொரு வேடம் பழங்குடியினப் பெண்ணாம். எனவே சரியான முறையில் வித்தியாசம் காட்டி நடிக்க ஆர்வமாக ஹோம் ஒர்க் எல்லாம் செய்து கொண்டிருக்கிறாராம் அனுஷ்கா.

ஒரு அனுஷ்காவைப் பார்த்தாலே ரசிகர்களுக்குப் பத்திக்கும், இதில் இரண்டு அனுஷ்காவா...

 

விஸ்வரூபம் சமஸ்கிருதப் பெயர், மாற்றுங்கள்.. கமலுக்குக் கோரிக்கை

Hmk Wants Change The Name Viswaroopam   

விஸ்வரூபம் என்பது சமஸ்கிருதப் பெயர், எனவே அதை கமல்ஹாசன் மாற்ற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்து கமல்ஹாசனுக்கு கடிதமும் அனுப்பியுள்ளது.

கமல்ஹாசனின் புதிய படங்களுக்கு ஏதாவது பிரச்சினை கிளம்புவது வாடிக்கையாகி விட்டது. சண்டியர் படத் தலைப்புக்கு புதிய தமிழகம் கட்சியினர் பிரச்சினை எழுப்பினர். இதையடுத்து படத் தலைப்பை விருமாண்டி என மாற்றினார் கமல். அந்தத் தலைப்புக்கும், படத்துக்கும் அபாரமான வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து தசாவதாரம் படத்துக்கும், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்துக்கும் கூட சிக்கல்கள் வந்தன. இந்த நிலையில் விஸ்வரூபம் படத்துக்கும் ஒரு சின்னப் பிரச்சினை கிளம்பியுள்ளது.

இந்து மக்கள் கட்சதியின் தலைவரான கண்ணன் இதுதொடர்பாக சர்ச்சையை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் கமல்ஹாசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

நீங்கள் தமிழகத்தில் வாழ்கிறீர்கள். பேரும் புகழும் தமிழ் படங்கள் மூலமே உங்களுக்கு கிடைத்துள்ளது. பிறகு தமிழ் மொழியை கண்டுகொள்ளாதது ஏன்?

விஸ்வரூபம் என்பது சமஸ்கிருத வார்த்தை. அதை மாற்றி நல்ல தமிழ் பெயராக வைத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

எங்களது எண்ணங்களை கமல் புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழ் மொழி மீதான அக்கறையால் இதை தெரிவிக்கிறோம். தமிழில் பெயர் வைக்காத நிலையில் அதற்கு அரசின் கேளிக்கை வரி சலுகையும் கிடைக்க வாய்ப்பில்லை என்றார் அவர்.

 

அதிவேக பைக்கில் ஊர் சுற்றும் நமீதா

Namitha Loves Superbikes   

நமீதாவுக்கு அதிவேக பைக்குகளில் ஊர் சுற்றுவது என்றால் மிகவும் பிடிக்குமாம்.

வழக்கமாக ஆண்கள் தான் அதிவேக பைக்குகளில் ஊர் சுற்றுவார்கள். ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக நமீதா அப்படி ஊர் சுற்றுகிறார். நமீதா கையில் அவ்வளவாக படங்கள் இல்லை. ஆனாலும் அம்மணி கடை திறப்பு விழா, வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கை நிறைய பணம் சம்பாதிக்கிறார். நமீதாவின் பொது சேவையை நம்மாட்கள் கண்டு கொள்ளாவிட்டாலும் வெளிநாடு வாழ் தமிழர்கள் அவரைப் புகழந்து தள்ளுகிறார்கள். நமீதா போல வருமா என்கிறார்கள்.

இந்நிலையில் நமீதா பற்றி இன்னும் ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது நமீதா ஷூட்டிங் இல்லாத நேரங்களி்ல் சூரத் மற்றும் ஹம்பிவேலியில் அதிவேக பைக்கில் பறக்கிறாராம். நமீதாக்குள் இப்படி ஒரு வீரியா என்று ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

நீங்கள் சூரத் அல்லது ஹம்பிவேலியில் இருக்கிறீர்களா? பார்த்து, ரோட்டில் பைக்கில் யாராவது பறந்தால் அது நமீதாவாக கூட இருக்கலாம்.

 

ஜூலை 13ல் பில்லா 2 ரிலீஸ்?

Billa 2 Hit Screens On July 13th    | அஜீத்  

அஜீத் குமாரின் பில்லா 2 படம் வரும் ஜூலை மாதம் 13ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

அஜீத் குமார், பார்வதி ஓமனக்குட்டன், புரூனா அப்துல்லா ஆகியோர் நடித்துள்ள பில்லா 2 படம் பல சோதனைகளை சந்தித்து வருகிறது. சென்சாருக்கு போன இடத்தில் பல இடங்களில் கை வைக்கப்பட்டது. மேலும் 'ஏ' சான்றிதழ் கிடைத்தது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதி இந்தா அந்தா என்று இழுத்துக் கொண்டே போகிறது. ஜூன் 22ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் கார்த்தியின் சகுனி அதே நாளி்ல் ரிலீஸானதால் படத்தின் வியாபாரத்தை கணக்கில் கொண்டு ரிலீஸ் தேதி ஜூன் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது ஜூன் 29ம் தேதியும் படம் ரிலீஸ் இல்லையாம். மாறாக வரும் ஜூலை மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமையன்று படத்தை ரிலீஸ் செய்யப் போகிறார்களாம்.

ஜூலை 13லாவது ரிலீஸ் செய்துவிடுவார்களா என்று அஜீத் ரசிகர்கள் ஏக்கத்துடன் உள்ளனர்.

இதற்கிடையே விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத பட ஷூட்டிங் பெங்களூரில் நடந்தது. இதில் அஜீத் குமார் கலந்து கொண்டார். இந்த செய்தி அறிந்த அவரது ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் குவிந்துவிட்டார்களாம். அவர்களை கட்டுப்படுத்துவதற்குள் போலீசாருக்கு போதும், போதும் என்றாகிவிட்டதாம்.

 

காஷ்மீரில் காணாமல் போன பாக். நடிகை துபாயில் தாவூத் கூட்டாளியுடன் குடித்தனம்!

Missing Bollywood Starlet Laila Khan Alive In Dubai

பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்கு வந்து காணாமல் போனதாக கூறப்பட்ட நடிகை லைலா கான், தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளி ஒருவனை மணந்து கொண்டு துபாயில் குடித்தனம் நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் லைலா கான். இவர் ஒரு நடிகை. வங்கதேசத்தைச் சேர்ந்த தீவிரவாதக் கும்பலுக்கும், இவருக்கும் தொடர்பு இருப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உண்டு. இந்தநிலையில், ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இவர் தனது தாயார் மற்றும் தங்கை, குடும்பத்தினருடன் காஷ்மீர் வந்தார். வந்த இடத்தில் காணாமல் போனார்.

அவரை யாராவது கடத்தியிருக்கலாம், கொன்றிருக்கலாம் என்று சந்தேகம் வலுத்தது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பர்வேஸ் அகமது தக் என்பவரை காஷ்மீர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

காணாமல் போன நடிகை லைலாகான் உயிரோடுதான் இருக்கிறாராம். துபாயில் அவர் தற்போது வசித்து வருவதாகவும், நிழல் உலகதாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியை மணந்து கொண்டு அவருடன் குடித்தனம் இருந்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுதொடர்பாக பர்வேஸ் கூறுகையில், லைலாவும் அவரது குடும்பத்தினர் ஐந்து பேரும் போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவை விட்டு தப்பி விட்டனர். அவர்கள் தற்போது துபாயில் உள்ளனர்.

லைலா, தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி சோனு என்பவரை மணந்து கொண்டுள்ளார். அவருடன் வசித்து வருகிறார் என்றார் பர்வேஸ்.

பர்வேஸ்தான் லைலா கானை கார் மூலம் கிஷ்த்வார் என்ற இடத்திற்குக் கொண்டு போய் விட்டவர் ஆவார். இத்தனை நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த அவரைப் பிடித்து விசாரித்த பிறகே லைலா கான் மர்மம் விலகியுள்ளது.