ஒரு போன் செய்த தமன்னா: வாய்ப்பை இழந்த ஹன்சிகா

Naga Chaitanya Prefers Tamanna Over    | ஹன்சிகா  

ஹைதராபாத்: தமன்னா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கு வாழ்த்துச் சொல்ல போன் செய்துள்ளார். அதன் பிறகு நாக சைதன்யா படத்தில் நடிக்கவிருந்த ஹன்சிகாவின் வாய்ப்பு தமன்னாவுக்கு சென்றுவிட்டது.

ஆர்யா, மாதவன், சமீரா ரெட்டி, அமலா பால் ஆகியோர் நடித்த வேட்டை படம் தெலுங்கில் ரீ மேக் செய்யப்படுகிறது. அதில் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யா, சுனில், ஆன்ட்ரியா, ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்கின்றனர் என்று செய்தி வெளியானது. ஆனால் தற்போது ஹன்சிகாவுக்கு பதில் தமன்னா நடிக்கிறார். எனக்கு டேட் பிராப்லம் அதனால் தான் இந்த படத்தில் இருந்து விலகுகிறேன் என்று ஹன்சிகா தெரிவி்த்துள்ளார்.

ஆனால் அலசி, ஆராய்ந்தபோது தான் தமன்னாவுக்கு வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது தெரிய வந்தது. வேட்டை ரீமேக்கில் நாக சைதன்யா நடிக்கிறார் என்ற தகவல் அறிந்த தமன்னா ஹீரோவுக்கு போன் போட்டு வாழ்த்துக்கள் சொல்லியுள்ளார். ஏற்கனவே 100% லவ் என்ற தெலுங்கு படத்தி்ல் நாக சைதன்யா, தமன்னா ஜோடி சேர்ந்தனர். அதிலும் ஒரு காட்சியில் பரீட்சை ஹாலில் முன் பெஞ்சில் இருக்கும் தமன்னாவின் திறந்த முதுகில் எழுதியிருக்கும் பதிலைப் பார்த்து ஹீரோ காப்பியடிப்பார். இந்த காட்சியைக் கண்டித்து ஆந்திர மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்தின.

இத்தனை பிரபலமான ஜோடி தான் நாகசைதன்யாவும், தமன்னாவும். தமன்னா போன் செய்த பிறகு என்னாச்சு, ஏதாச்சுன்னு தெரியவில்லை ஹன்சிகாவின் வாய்ப்பு தமன்னாவுக்கு சென்றுவிட்டது.

 

'வெள்ளச்சி' படத்திற்கு இசையமைக்கிறார் பவதாரிணி!

Vellachi Music Bhavatharani

கிராமத்து கதையை களமாகக் கொண்ட ‘வெள்ளச்சி' திரைப்படத்திற்கு பவதாரிணி இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளையராஜாவின் இசை வாரிசான பவதாரிணி தந்தையின் இசையில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். சில படங்களுக்கு இசை அமைத்தும் இருக்கிறார் நீண்ட நாட்களுக்குப்பின்னர் மீண்டும் வெள்ளச்சி என்ற திரைப்படத்திற்கு இசை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக பாண்டுவின் மகன் பிண்டு நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே நதியா நடித்த பட்டாளம் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக சுஜிதா உன்னி நடிக்கிறார். கஞ்சா கருப்பு சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். கிராம கதைக் கருவை மையமாகக் கொண்ட இந்த திரைப்படத்தை வேலு விஸ்வநாதன் இயக்க இசை அமைக்கிறார் பவதாரிணி. ஜூன் மாதம் தொடங்கிய இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

 

கர்ணனைத் தொடர்ந்து திருவிளையாடலும் டிஜிட்டலாகிறது: விரைவில் ரிலீஸ்

Tiruvilaiyadal Set Digital Re Run

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த கர்ணன் படத்தைத் தொடர்ந்து திருவிளையாடல் திரைப்படமும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியாக உள்ளது.

1965ஆம் ஆண்டில் சிவாஜி, சாவித்திரி நடிப்பில் வெளியான ‘திருவிளையாடல்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது.

சிவபெருமானின் திருவிளையாடல்களை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் சிவனாக சிவாஜியும், பார்வதியாக சாவித்திரியும் நடித்துள்ளனர். செண்பகபாண்டியனாக முத்துராமன், அவ்வையாராக, கே.பி.சுந்தராம்பாள், ஹேமநாத பாகவதராக டி.எஸ்.பாலையா, பானபட்டராக டி.ஆர். மகாலிங்கம் ஆகியோரும் நடித்து இருந்தனர். ஏ.பி. நாகராஜன் டைரக்டு செய்து இருந்தார். புலவர் நக்கீரன் வேடத்தில் இயக்குனர் ஏ.பி.நாகராஜனே நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தில் புலவர் தருமியாக வரும் நாகேஷின் நகைச்சுவை வேடம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

டிஜிட்டல் தொழில் நுட்பம்

பிரமாண்ட அரங்குகள் அமைத்து மெகா பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘திருவிளையாடல்' திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தற்போது புதுப்பிக்கப்பட்டு உள்ளது. கலரையும் மெருகூட்டியுள்ளனர். விரைவில் தமிழ்நாடு முழுவதும் மீண்டும் ரிலீசாக உள்ளது. கர்ணன் திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியாகி 100 நாட்கள் வரை வெற்றிகரமாக ஓடியது. அதேபோல் திருவிளையாடல் திரைப்படமும் சிவாஜி ரசிகர்களை பெரிதும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

'மைதிலி'க்காக 'பிகினி'க்குத் தாவிய சதா!

Sada Dons Bikini Maithili   

சென்னை: சுத்தமாக ஓய்ந்து போய்க் கிடக்கிறது சதாவின் சினிமா மார்க்கெட். எந்த சினிமாவை எடுத்தாலும் அங்கு சதாவுக்கு இடமில்லை என்ற நிலை. இந்த நிலையில்தான் தமிழ் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகும் மைதிலி என்ற படத்தில் வரலாறு காணாத கவர்ச்சியைக் கட்டவிழ்த்து விட்டுள்ளாராம் சதா.

பெருகி வரும் இளம் நடிகைகளுக்கு இணையாக தானும் கவர்ச்சிக் களத்தில் இறங்க தீர்மானித்த சதா, அதை மைதிலியில் அரங்கேற்றியுள்ளார். இப்படத்தில் நாயகன் நவ்தீப்புடன் இணைந்து பின்னிப் பிணைந்து ரசிகர்களை மெய் சிலிர்க்க வைக்கும் அளவுக்கு கவர்ச்சியில் பிரளயம் செய்துள்ளாராம்.

நவ்தீப்புடன் இணைந்து நடித்துள்ள ஒரு பாடல் காட்சியில் பிகினியிலும் பின்னி எடுத்திருக்கிறார் சதா.

படம் முழுக்க சதாவின் கவர்ச்சி மழைதானாம். அந்த அளவுக்கு சதாவை புதிய உருவத்தில் காட்டியுள்ளாராம் இயக்குநர் சூரிய ராஜா. சும்மா சொல்லக் கூடாது, கவர்ச்சி உடையிலும், பிகினியிலும் பிரமாதமாகவே இருக்கிறார் சதா.

ஒரு இளம் பெண்ணுக்கும், ஆணுக்கும் இடையிலான உறவு குறித்த கதையாம் இது.... அதைச் சொல்லுங்க முதல்ல!

 

கிம்மின் 'கும்' வீடியோ.. 'புரமோட்' செய்யும் காதலர் கென்யே!

Kanye West Boasts About Kim Kardas

நியூயார்க்: கவர்ச்சித் திலகம் கிம் கர்தஷியாவின் செக்ஸ் டேப் குறித்து தனது பாடலில் ஒரு வரியைச் சேர்த்துள்ளாராம் அவரது லேட்டஸ்ட் காதலரான கென்யே வெஸ்ட்.

கிம் கர்தஷியான் யார், அவர் எப்படியாப்பட்டவர் என்பதையெல்லாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. போதும் போதும் என்கிற அளவுக்கு அவர் அறிமுகமானவர்தான். அதனால் நேரடியாக மேட்டருக்குப் போய் விடலாம்....

கிம் கர்தஷியானை முன்னொரு காலத்தில் காதலித்து வந்தவர் ரே ஜே. இருவரும் படு நெருக்கமாக இருந்து வந்தனர். அந்த நெருக்கமான படுக்கை அறைக் காட்சிகளை ரே ஜே வீடியோவிலும் எடுத்திருந்தார். பின்னர் இந்த வீடியோ 2007ம் ஆண்டு இன்டர்நெட்டில் வெளியாகி விடவே பெரும் பாப்புலராகி விட்டார் கிம். அதன் பின்னர் அவரது வளர்ச்சி ஓஹோவென ஓடிக் கொண்டுள்ளது.

நிற்க...

தற்போது கிம்மைக் காதலித்து வருபவர் கென்யே வெஸ்ட். இருவரும் கடந்த சில மாதங்களாக நெருக்கமாக உலா வந்து கொண்டுள்ளனர். முன்பு ஒருமுறை வெஸ்ட்டிடம், கிம்மின் செக்ஸ் டேப்பைப் பார்த்தீர்களா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டபோது அதைப் பார்க்க விரும்பவில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தனது புதிய ஆல்பம் ஒன்றில் இடம் பெறும் பாடலில் இந்த செக்ஸ் டேப் குறித்து மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் வெஸ்ட்.

கென்யே வெஸ்ட் ஒரு ராப் பாடகர் ஆவார். அவர் புதிதாக கிளிக் Clique என்ற பெயரில் புதிய ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். அதில்தான் கிம்மின் பலான வீடியோ குறித்த வரியை இணைத்துள்ளார்.

அதில் வரும் ஒரு பாடலில், Eat breakfast at Gucci. My girl a superstar all from a home movie என்ற வரியைப் போட்டுள்ளார் கென்யே. இது கிம்மின் செக்ஸ் வீடியோவைக் குறிப்பதாக தெரிகிறது. இதன் மூலம் கிம்மின் அந்த ஆபாச வீடியோவை கென்யேவும் பார்த்திருக்கலாம் என்று எழுத ஆரம்பித்துள்ளனர் நியூயார்க் மீடியாக்கள்.

 

யூ டியூபில் ஆர்யா, ஹன்சிகா சேட்டையைப் பார்த்த 4.5 லட்சம் பேர்

Settai Trailer Gets Massive Response On Youtube   

சென்னை: அண்மையில் வெளியிடப்பட்ட சேட்டை பட டிரெய்லருக்கு யூ டியூப்பில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆர்யா, அஞ்சலி, ஹன்சிகா, சந்தானம், பிரேம்ஜி அமரன், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சேட்டை. இம்ரான் கான் நடித்த டெல்லி பெல்லி இந்தி படத்தின் ரீமேக். ஆனால் டெல்லி பெல்லி போன்று இல்லாமல் இதை குடும்பத்தோடு சேர்ந்து பார்க்குமாறு எடுத்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது. அந்த டிரெய்லர் வெளியானதில் இருந்து தற்போது வரைக்கும் அதை யூ டியூபில் 4,45,321 பேர் பார்த்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் டிரெய்லர் வெளியான 48 மணிநேரத்திற்குள் 2,79,139 பேர் பார்த்துள்ளனர். கௌதம் மேனனின் நீ தானே என் பொன்வசந்தம் டிரெய்லரை அதிகபட்சமாக 5.5 லட்சம் பேர் யூ டியூபில் பார்த்துள்ளனர். அஜீத் குமாரின் பில்லா 2 டீசரை 5.15 லட்சம் பேர் யூ டியூபில் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சேட்டை யூ டியூபில் தனது பலத்தை காண்பித்துவிட்டது. மெயின் பிக்சர் வந்தால் தான் படம் எப்படி என்று சொல்ல முடியும்.

 

வெற்றிக்கு பரிசாக கணவருக்கு ஆடி கார் பரிசளித்த குஷ்பு

Khushboo S Gift Sundar C   

சமீபத்தில் வெளியான கலகலப்பு படத்தின் வெற்றிக்கு பரிசாக விலை உயர்ந்த ஆடி கியூ 5 காரை தனது கணவரும் இயக்குநருமான சுந்தர். சி க்கு பரிசாக அளித்துள்ளார் குஷ்பு.

கார் பரிசளித்தது குறித்து கூறியுள்ள குஷ்பு என் காதலின் வெளிப்பாடாகவே ஆடி காரை பரிசளித்தேன் என்று கூறியுள்ளார்.

சுந்தர்.சி இயக்கிய ‘கலகலப்பு' படம் இந்த வருடத்தின் பெரிய ஹிட் படமாக இது அமைந்தது. நான் இப்படத்தின் தயாரிப்பாளர் இதில் பணியாற்றியதற்காக சுந்தர் சிக்கு ஊதியம் அளிக்கவில்லை. அதற்கு பதில் ஆடி கார் அளித்துள்ளேன்.

சுந்தர்.சிக்கு கார்கள் மீது அதிக பிரியம். அவருக்கு ஏதாவது பரிசு பொருளை கொடுத்து ஆச்சரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தது எனவேதான் கார் பரிசளித்தேன் என்று குஷ்பு மேலும் கூறியுள்ளார். வெற்றிகரமான படங்களை இயக்குவதற்கு என் கணவரை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த பரிசு அமையும் என்றும் குஷ்பு கூறியுள்ளார்.

 

பெண்ணாக மாறிய மேட்ரிக்ஸ் இயக்குனர்..!

Matrix Director Calls Talks About

வாஷிங்டன்: ஹாலிவுட்டில் பிரபல மேட்ரிக்ஸ் படங்களை இயக்கிய லாரன்ஸ் என்ற லாரி கடந்த 2002ம் ஆண்டு ஆபரேஷன் செய்து பெண்ணாக மாறினார். இத்தனை ஆண்டுகளாக அதைப் பற்றி பேசாதவர் முதல் முறையாக தன்னுடைய உணர்வுகளை வெளியுலகிற்கு தெரிவித்துள்ளார்.

பிரமாண்டமான தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட ஹாலி்வுட் படங்கள் மேட்ரிக்ஸ் சீரிஸ். அந்தப் படங்களை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. அதை இயக்கிய லாரி கடந்த 2002ம் ஆண்டு அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறி தனது பெயரை லானா வாசோவ்ஸ்கி என்று வைத்துக் கொண்டார். பெண்ணாக மாறிய அனுபவம் குறித்து இத்தனை ஆண்டுகளாக மௌனம் சாதித்த லானா தற்போது முதன் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

நடிகர் டாம் ஹாங்க்ஸை வைத்து லானா எழுதி, இயக்கியுள்ள கிளவுட் அட்லஸ் விளம்பர நிகழ்ச்சி கடந்த ஜூலை மாதம் நடந்தது. அந்த நிகழ்சசியில் தான் தான் ஒரு பெண்ணாக மாறியதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். அவர் பெண்ணாக மாறிய பிறகு அவர் கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சியும் (கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்) இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, நான் பெண்ணாக மாறியது குறித்து உறவினர்களிடம் எப்படி தெரிவிப்பது என்று தெரியாமல் பல நாள் தூக்கமின்றி தவித்துள்ளேன். எனது பெற்றோர், சகோதரர், சகோதரிகளிடம் இது குறித்து எப்படி சொல்வது என்ற பயத்திலேயே பல நாட்கள் தூங்கவில்லை.

ஆனால் நான் ஒரு பெண் என்பதை எனது தாயிடம் தெரிவித்தபோது அவர் எனக்கு ஆதரவாகப் பேசினார். எனது குடும்பத்தார் அளித்த ஆதரவைப் பார்த்து மிகவும் சந்தோஷமாக இருந்தது. எங்கே எனது குடும்பத்தார் என்னை ஒதுக்கி விடுவார்களோ என்று பயந்தேன். ஆனால் அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டதில் பெருமகிழ்ச்சி என்றார்.

 

ஷோபா ராணி கையில் விஜய்யின் தெலுங்கு 'துப்பாக்கி'!

Whopping Price Thuppakki Telugu Theatrical Rights

இளைய தளபதி விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகலாம் என்ற எதிர்பார்க்கப்படும் ஆக்ஷ்ன் திரைப்படம் துப்பாக்கி. இந்தப் படத்தின் விற்பனை இப்போது சடுதியாக நடந்து வருகிறது. படத்தின் ஆந்திர மாநில விநியோக உரிமையை மிகப் பெரிய விலைக்கு வாங்கியுள்ளார் ஷோபா ராணி.

படத் தலைப்பு குறித்து கோர்ட்டில் பஞ்சாயத்து ஒருபக்கம் நடந்தாலும் கூட படத்திற்கான எதிர்பார்ப்பில் சற்றும் தொய்வில்லை. இப்போது தெலுங்கு விநியோக உரிமையை பெரும் தொகைக்கு விற்றுள்ளனராம்.

விஜய் படங்களிலேயே தெலுங்கு விநியோக உரிமை அதிகம் போன படமாக துப்பாக்கி உருவெடுத்துள்ளதாம். துப்பாக்கியை தெலுங்கில் வெளியிட ரூ. 15 கோடிக்கு விலை பேசி விற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இவ்வளவு பெரிய விலைக்கு அந்தப் படத்தை வாங்கக் காரணம், படத்தின் நாயகி காஜல் அகர்வாலுக்கு தெலுங்கில் இருக்கும் கிராக்கிதானாம். மற்றபடி விஜய்க்காக இப்படத்தை ஷோபா ராணி வாங்கவில்லையாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விக்ரம், சூர்யா ஆகியோர் நடித்த படங்களின் விநியோக உரிமைதான் வழக்கமாக அதிக விலைக்குப் போகும். இந்த நிலையில் விஜய்யும் அந்த வரிசையில் இணைந்துள்ளார்.

துப்பாக்கி தெலுங்கு விநியோக உரிமையை வாங்க பிலம்கொண்டா சுரேஷின் சாய் கணேஷ் தயாரிப்பு நிறுவனம், அல்லு அரவிந்த்தின் கீதா பிலீம்ஸ், சுரேஷ் பாபுவின் சுரேஷ் பிலிம்ஸ் ஆகிய பெரும் பட நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவியதாம். இருப்பினும் ஷோபா ராணியின் எஸ்விஆர் மீடியா நிறுவனம் டப்பிங் உரிமையை வாங்கி விட்டதாம்.

துப்பாக்கி படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

சரி, இந்த ஷோபா ராணி யார் என்று தெரிகிறதா?.. சில வருடங்களுக்கு முன்பு பிரகாஷ் ராஜுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டாரே அவரேதான்...!!

 

என் இயக்கத்தில் விஜய் நடிக்கவில்லை.. கன்பர்ம் செய்தார் கெளதம் மேனன்

I Am Not Directing Vijays Film Gautham Menon

சென்னை: நடிகர் விஜய், அடுத்து இயக்குநர் விஜய்யின் படத்தில் நடிக்கப் போகிறார். எனது படத்தில் அவர் இல்லை. எனது அடுத்த படம் குறித்த விவரங்களை விரைவில் வெளியிடுவேன் என்று இயக்குநர் கெளதம் வாசுதேவ மேனன் கூறி விட்டார். இதன் மூலம் அவரது யோஹன் அத்தியாயம் ஒன்று கைவிடப்படுவது உறுதியாகி விட்டது.

பெரும் எதிபார்ப்பை ஏற்படுத்திய படம்தான் இந்த யோஹன் அத்தியாயம் ஒன்று. துப்பறியும் கதையான இதை கெளதம் மேனன் இயக்க, விஜய் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்படத்தைத் தொடங்கும் அறிகுறியே தெரியவில்லை.

விஜய் முருகதாஸின் துப்பாக்கி படத்தில் பிசியாக இருந்து வந்தார். மேனனும், இசைஞானி இளையராஜாவின் நீதானே பொன்வசந்தம் படத்தில் படு பிசியாக இருந்து வந்தார். தற்போது இந்த இரு படங்களும் முடிந்து விட்டன. இதனால் யோஹன் படத்தை மேனன் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் அந்தப் படம் கைவிடப்படுவதாக கெளதம் மேனன் சமீபத்தில் சூசகமாக தெரிவித்திருந்தார். தற்போது அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நான் விஜய் படத்தை இயக்கவில்லை. விஜய்யின் அடுத்த படத்தை ஏ.எல். விஜய் இயக்குவார். எனது அடுத்த படம் குறித்த விவரங்களை விரைவில் வெளியிடுகிறேன் என்று கூறியுள்ளார் மேனன். மேலும் யோஹன் அத்தியாயம் ஒன்று இப்போதைக்கு இல்லை என்றும் கூறி விட்டார் மேனன்.

ஏற்கனவே இப்படித்தான் அஜீத்துடன் சேருவதாக இருந்தார் மேனன். ஆனால் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது விஜய்யுடனும் நெருங்கி வந்து பின்னர் அது டிராப் ஆகியுள்ளது.

 

நடிப்பில் அசத்தும் யுவினா பார்த்தவி

All Alamelu Child Artist Yuvina Parthavi

ஆல் இன் ஆல் அலமேலு தொடரில் எமதர்மனையே வேலை வாங்கும் சுட்டிக்குழந்தையின் நடிப்பை பாராட்டாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு அசத்தலாய் நடித்து பெயர் வாங்கியிருக்கும் குழந்தை நட்சத்திரம் யுவினா பார்த்தவி.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏவிஎம்மின் ''உறவுக்கு கைகொடுப்போம்'' சீரியலில் 50 வயது அம்மாவின் மறுபிறவிபோல மூன்று வயதேயான யுவினா பார்த்தவி நடித்து ரசிகர்களை அசரவைத்தார். அவளது நடிப்பை கண்டு, யுவினா சாதாரண குழந்தை இல்லை. இப்பொழுதே டைரக்டர் ஆர்டிஸ்டாக மாறிவிட்டாள் என்கிறார் அந்த தொடரை இயக்கிய இயக்குநர் புவனேஷ்.

இந்த குழந்தையை அறிமுகப்படுத்தின டைரக்டரா நான் பெருமைப் படறேன். அவள் வொண்டர்புல் சைல்ட் ஆர்டிஸ்ட். ஆல் இன் ஆல் அலமேலு வில் நளினியின் நடிப்புக்கே சவால் விடும் வகையில் நடித்து வருகிறாள் என்கிறார் புவனேஷ்.

டிவியில் யுவினாவை பார்த்தாலே சிலிக்கும் என்கிறார் அவரது அம்மா தேவி. ஷாப்பிங், பீச், சினிமா என்று எங்கே போனாலும் அவளை அடையாளம் கண்டு பாராட்டறாங்க. கூடவே என் கையை பிடித்துக் கொண்டு அருமையான குழந்தையைப் பெத்திருக்கீங்கன்னு பாராட்டுறாங்க அப்போது என் கண்கள் சந்தோசத்தில் கலங்க ஆரம்பித்துவிடும். ஆல் இன் ஆல் அலமேலுவில் யுவினா நளினிக்குப் பேத்தி ரோல் பண்றா. காரில் போகும்போதே இன்னிக்கு என்ன சீன எடுக்கப் போறாங்கன்னு ரொம்ப பெரிய மனுஷி போல கேட்டுக்குவா. அதுக்கப்புறம் ஒரு ஆர்டிச்டாவே மாறிடுவா என்று பெருமை பொங்க கூறினார் தேவி.

 

ஸ்ருதிக்கு நடனம் கற்றுத்தரும் பிரபுதேவா

Prabhu Deva S Good Words About Shruti Hassan

பாலிவுட் திரைப்படத்தில் சுருதிஹாசனை மறுபிரவேசம் செய்கிறார் நடனக்கலைஞரும் இயக்குநருமான பிரபுதேவா. இதில்தான் ஸ்ருதியின் நடனத்தைப் பார்த்து அசந்து நளினமான நடனம் அசத்தலோ அசத்தல் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார் பிரபுதேவா.

ஸ்ருதிஹாசன் கமலின் மகள் என்பதையும் தாண்டி தனித் திறமையுடன் திகழ்கிறார். உடலை கச்சிதமாக பாதுகாப்பதோடு நடிப்பிலும் தனிகவனம் செலுத்துகிறார் என்று கூறியுள்ளார். நடனத்தைப் பொறுத்தவரை ஸ்ருதிக்கு அதிகம் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. எந்த ஒரு நடனத்தையும் நளினமாக, அழகாக வெளிப்படுத்துகிறார் என்றும் புகழ்ந்துள்ளார் பிரபுதேவா. உனக்கும் எனக்கும் படத்தின் ரீமேக் இந்தியில் தயாராக உள்ளது. அதில்தான் ஸ்ருதி நடிக்க இருக்கிறார். சல்மான்கான் இதில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

இதனிடையே ஸ்ருதி ஏற்கெனவே முறையான நடனப் பயிற்சி பெற்றிருந்தாலும் இந்தப் படத்துக்காக பிரபுதேவாவிடம் தீவிரமாக நடனம் கற்று வருகிறாராம் இதனை அவரே டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். பிரபுதேவாவுடனான நடனப் பயிற்சி, மனதுக்கு நிறைவாகவும் புத்துணர்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார் ஸ்ருதி. இருவரும் மாறி மாறி கூறிக்கொள்வதைப் பார்த்தால் நிஜமாகவே சம்திங் சம்திங் ஆகாமல் இருந்தால் சரிதான்.

 

ஜானை முத்தமிட்டதுதான் ரொம்ப சவுகரியமா இருந்துச்சு.. பிரிஞ்சு போன பிபாஷா பெருமூச்சு!

Bipasha Basu Was Very Comfortable Kissing John Abraham

பிபாஷா பாசு என்றாலே கவர்ச்சிக்கும் முத்தத்திற்கும் குறைவிருக்காது. அந்த அளவிற்கு ரசிகர்களை கிறங்கடித்து விடுவார். இவருக்கு தன்னுடைய முன்னாள் காதலர் ஜான் ஆப்ரகாமை இன்னும் கூட மறக்க முடியவில்லை போலும். ஜானுக்கு சினிமாவில் முத்தமிடுவது என்றால் ரொம்ப வசதியாக இருக்குமாம். இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

எவ்வளவுதான் கவர்ச்சியாக நடித்தாலும் ஆன் ஸ்கிரீனில் முத்தக்காட்சியில் நடிக்கும் போது மட்டும் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும். இதேநிலைதான் பிபாஷா பாசுவுக்கும் ஏற்படுமாம். ஆனால் அவருடைய முன்னாள் காதலர் ஜான் ஆப்ரகாமுடன் முத்தக்காட்சியில் நடிக்கும் போதுமட்டும் எந்த வித தடுமாற்றமோ, தயக்கமோ ஏற்படாதாம். ஜானுடன் முத்தக்காட்சியில் நடிக்கும் போது மட்டும் மிகவும் வசதியாக உணர்வேன் என்று சமீபத்தில் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மிகவும் கூலாக அந்த காட்சியில் நடிக்கமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜான் ஆப்ரகாமுடன் காதலில் திளைத்த போது இருவரும் முத்தக்காட்சியில் நடித்தனர். அந்த 'இதழ்களின்' சந்திப்பு படு இயல்பாக இருந்ததாக 'இதழ்களில்' எழுதப்பட்டன. தற்போது ஆப்ரகாமுடனான பிரிவிற்குப் பின்னரும் கூட அவரது இதழ் சவுகரியத்தை மறக்காமல் பேசியுள்ளாப் பிபாஷா என்பது குறிப்பிடத்தக்து.

ஏற்கனவே ஜிஸ்ம் படத்தில் முத்தக்காட்சியில் கலக்கியிருந்த பிபாஷா, ராஸ் 3 படத்திலும் முத்தமழை பொழிந்திருக்கிறாராம்.

'ஜான்' ஆனாலும் 'ஆண்' ஆச்சே பிபாஷா, மறக்க முடியுமா...!

 

முருகதாஸ் பத்த வைக்கப் போகும் 'வத்திக்குச்சி'..தம்பிதான் ஹீரோ!

A R Murugadoss Introduce His Brohte

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் குடும்பத்திலிருந்து இன்னொருவர் சினிமாவுக்கு வருகிறார். இவர் முருகதாஸின் தம்பி. ஹீரோவாக அறிமுகமாகிறார். முருகதாஸே தனது தம்பியை அறிமுகப்படுத்துகிறார்.

குடும்பத்தில் யாராவது ஒருவர் சினிமாவில் இருந்தால் அவரைத் தொடர்ந்து பலரும் திரைக்கு வருவது புதிய விஷயமல்ல. காலம் காலமாக அது தொன்று தொட்டு இருந்து வரும் ஒரு வழக்கம்தான். அந்த வரிசையில் விஷ்ணுவர்த்தனின் தம்பி கிருஷ்ணா ஹீரோவாக அறிமுகமானார். அதேபோல இப்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் தம்பியும் ஹீரோவாகிறார்.

ஹீரோவாக அறிமுகப்படுத்தவுள்ளதால் நல்ல பெயராக தம்பிக்குத் தேர்வு செய்து கொண்டிருக்கிறாராம். அதற்கு முன்பு படத்தின் பெயரை தீர்மானித்து விட்டார். அதாவது வத்திக்குச்சி என்று வைத்துள்ளாராம்.

இந்த வத்திக்குச்சியை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா... ஏ.ஆர்.முருகதாஸின் முதல் படமான தீனாவில் அஜீத்துக்காக வைக்கப்பட்ட அட்டகாசமான பாடல்தான் வத்திக்குச்சி பத்திக்காதுடா.. அந்த பாடல் வரியிலிருந்துதான் தலைப்பை உருவியுள்ளார் முருகதாஸ்.

முருகதாஸ் பத்த வைக்கப் போகும் இந்த வத்திக்குச்சி எப்படி எரியப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்...

 

வடிவேலுக்கு வாஸ்து பிரச்சினையா?

Vaasthu Haunts Vadivelu

வடிவேலுவை சினிமாவில் பார்த்து நீண்ட நாளாகிவிட்டது. ஆனாலும் சின்னத்திரையில் காமெடி சேனல்களிலும், வடிவேலுவை தொடர்ந்து பார்த்து ரசிக்கின்றனர் ரசிகர்கள்.

தான் இப்படி திரையை விட்டு விலகியிருப்பது வடிவேலுவுக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது போலும். இதனால் தனது நிலைக்கு என்ன காரணம் என்று அவர் மண்டையைப் போட்டு குடைந்து கொண்டிருக்கிறாராம்.

தன்னுடைய இந்த நிலைக்குக் காரணம் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுதான் என்று நினைக்கிறாராம். அதன் காரணமாகவே புதிய வீடு ஒன்றில் குடியேற நினைக்கிறாராம் வடிவேலு.

கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் பங்கேற்ற விழாவில் வடிவேலு பங்கேற்பார் என்று கூறப்பட்டது. ஆனால் மதுரையில் இருந்து மத்திய அழகிரியின் அன்பு கட்டளையை ஏற்று போகாமல் இருந்து விட்டாராம். ஒரு வேளை அவர் மட்டும் முதல்வர் விழாவுக்குப் போயிருந்தால் நிலைமையே மாறியிருக்கும் என்கிறார்கள்.

எல்லாம் வாஸ்து கோளாறுதான் என்று வடிவேலுவின் நலம் விரும்பிகள் கூறி வருவதால், அவர்கள் பேச்சை நம்ப ஆரம்பித்து விட்டாராம் வடிவேலு. இதனால், தனது சொந்த வீட்டிலிருந்து இடம் பெயர முடிவு செய்திருக்கிறார். ஒரு காலத்தில் தனக்குப் போட்டியாக கருதிய காமெடியன் விவேக் வீட்டிற்கு அருகிலேயே இப்போது ஒரு வீடு தயாராகிக் கொண்டிருக்கிறதாம் வடிவேலுவுக்கு.

ஆனால் மறுபக்கம், வாஸ்து பகவான் அவர் வாயிலேயே இருக்கிறார். ஆனால் அது தெரியாமல் எங்கெங்கோ தேடிக் கொண்டிருக்கிறார் வடிவேலு என்கின்றனர் விபரம் தெரிந்தவர்கள்.

 

கந்தக பூமியில் கருகும் உயிர்கள்….

Sivakasi Fireworks Accident Program Puthiya Thalaimurai

குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளைப் போல அங்கு நிகழும் வெடிவிபத்துகளும் இப்பொழுது இந்தியாவின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துள்ளன.

விபத்து நடந்து உயிரிழப்புகள் ஏற்பட்டால் மட்டுமே பட்டாசு விபத்துகள் பற்றிய விவாதங்கள் நடத்தப்படுகின்றன. ஊடகங்கள் இந்த விபத்துகளைப் பற்றி செய்திகளை வெளியிடுவதும். சில நாட்களில் அவை அடங்கிவிடுவதும் வாடிக்கையாகிவிடுகிறது. பின்னர் அதிகாரிகளின் ஆய்வு, பணம் கைமாறுவது என வழக்கமான நிகழ்வுகள் அரங்கேறும்.

புதன்கிழமையன்று முதலிப்பட்டியில் நடந்த பட்டாசு விபத்தில் மட்டும் 38 பேர் உயிரிழந்தனர்.

நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அன்று மாலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பட்டாசு விபத்துக்களைப் பற்றி ‘ரௌத்திரம் பழகு' நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை காண நேரிட்டபோது தினசரி வாழ்வா சாவா என்ற நிலையிலேயே பல லட்சம் மக்கள் சிவகாசியைச் சுற்றி வசிப்பதை காண நேரிட்டது. இது கடந்த ஆண்டு நடந்த கோரவிபத்தின் போது எடுக்கப்பட்டது. மறு ஒளிபரப்புதான் என்றாலும் விபத்துகள் ஆண்டுதோறும் நடப்பதால் பேட்டிகளும், புள்ளிவிபரங்களும் புதிதுபோலவே இருந்தது.

கடந்த 1981 ம் ஆண்டிலிருந்து 2011 ம் ஆண்டுவரை மட்டும் பல நூறு விபத்துக்கள் சிவகாசியில் நடந்து விட்டன. தினசரி வெடிச்சத்தம் கேட்பதைப்போல விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாகிப் போய்விட்டது. ஆனால் விபத்துகள் நடைபெறாமல் தடுக்க எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை என்ற கருத்தை முன்வைத்தது அந்த நிகழ்ச்சி.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வருவாய்த்துறை அதிகாரிகளின் உயிரிழப்பை அடுத்து சில சட்டதிட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் அது சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு நடத்தச் செல்லும் அதிகாரிகளின் கைகளில் பணம் கொடுத்து அவர்களின் வாயை அடைத்துவிடுகின்றனர் பட்டாசு நிறுவன முதலாளிகள். சரியான பாதுகாப்பு இல்லை. ஆம்புலன்ஸ் வசதியில்லை. நகரில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் சரியான சாலை வசதி இல்லாத காரணத்தினால் விபத்து நேரிட்டாலும் அந்த பகுதிக்குச் சென்றடைய தாமதமாகிறது.

சிவகாசியைச் சுற்றி வசிக்கும் பல லட்சம் பேர் திரும்ப வருவோமா என்பதைப் பற்றி தெரியாமலேயே தினசரி பட்டாசுத் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்று வருகின்றனர். அவர்களுக்கு உயிர் பற்றிய அச்சம் இருந்தும் வாழ்ந்தாக வேண்டுமே என்பதனால் ஆபத்து என்று தெரிந்தும் பட்டாசுத் தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்கின்றனர். கண் முன்னே நடந்த கோர விபத்தை பார்த்த பின்னரும் பட்டாசு நிறுவனத்தில் அவர்கள் மீண்டும் வேலைக்குச் செல்வதற்குக் காரணம் வாழவேண்டுமே என்பதற்காகத்தான் தொடர்ந்து வேலைக்குச் செல்வதாக தொலைக்காட்சியின் பேட்டியில் ஒரு பெண் தொழிலாளி கூறியதைக் கேட்டபோது நெஞ்சமெல்லாம் ரணமாகிப்போனது.

ஊழல் அதிகாரிகளும், பொறுப்பற்ற அரசியல்வாதிகள் இருப்பதனால்தான் சிவகாசியிலோ, விருதுநகரிலோ, சாத்தூரிலோ சரியான மருத்துவமனை வசதியில்லை. தீக்காய சிகிச்சைபிரிவு இல்லை. அங்குள்ள மருத்துவமனைகளில் வசதிகள் இல்லாத காரணத்தினால் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதுரைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதனாலேயே உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. அரசிடம் இருந்து அறிவிப்புகள் மட்டுமே வெளியாகின்றன. ஆனால் அவற்றை செயல்படுத்துவதற்குத்தான் சரியான அமைச்சர்களோ, அதிகாரிகளோ இல்லை என்பது பாதிக்கப்பட்டவர்களின் ஆதங்கம்.

ஒவ்வொருமுறையும் வெடி விபத்து ஏற்பட்ட பின்னர் அரசு நிவாரணத்தொகை வழங்குவதை விட அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான பாதுகாப்பை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையோடு நிறைவு பெற்றது ‘ரௌத்திரம் பழகு' நிகழ்ச்சி