விமலின் மாப்ள சிங்கம் "காமெடி" டிரெய்லர்.. இன்று முதல்

சென்னை: விமல் - அஞ்சலி நடிப்பில் உருவாகியிருக்கும் மாப்ள சிங்கம் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 7 மணியளவில் வெளியாகும், என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது சோனி நிறுவனம்.

காவல் படத்தின் மாபெரும் தோல்விக்குப் பின் விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாப்ள சிங்கம், விமலுடன் இணைந்து அஞ்சலி, சூரி ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை ராஜசேகர் இயக்கியிருக்கிறார்.

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை உருவாகியிருக்கிறார் இயக்குநர் ராஜசேகர், விமலுக்கு நல்லதொரு பிரேக்கை கொடுத்த தேசிங்குராஜா படத்தைப் போன்று இந்தப் படமும் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இன்று மாலை சரியாக 7 மணிக்கு மாப்ள சிங்கம் படத்தின் டிரெய்லர் வெளியாகின்றது, காமெடி கலந்த மாப்ள சிங்கம் டிரெய்லரை கண்டுகளிக்கத் தயாராகுங்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருக்கிறது சோனி நிறுவனம்.

டான் அசோக் வசனத்தில் உருவாகியிருக்கும் மாப்ள சிங்கம் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் இளம் இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன்.

காமெடி + காதல் கலந்து உருவாகியிருக்கும் இந்தப் படத்தை நாயகன் விமலும், நாயகி அஞ்சலியும் மிகவும் நம்பியிருக்கின்றனர். இருவரின் நம்பிக்கையையும் மாப்ள சிங்கம் காப்பாற்றுவாரா? பார்க்கலாம்.

 

அக்டோபரில் தனியாக வரும் அனுஷ்கா

ஹைதராபாத்: அனுஷ்கா (கதையின்) ராணியாக நடித்திருக்கும் ருத்ரமாதேவி படம் அக்டோபர் மாதம் 9 ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

டோலிவுட் இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் இசைஞானியின் இசையில் அனுஷ்கா, அல்லு அர்ஜுன், ராணா, கேத்ரீன் தெரசா, நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ருத்ரமாதேவி திரைப்படம் அக்டோபர் 9ம் தேதி கண்டிப்பாக வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Anushka Shetty Returns in October's

செப்டம்பர் 4 ம்தேதி வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட ருத்ரமாதேவி வழக்கம் போல தள்ளிப் போனது, மறுபடியும் செப்டம்பர் 17 ம் தேதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் செப்டம்பர் மாதத்தில் எந்த ஒரு தேதியையும் படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் அக்டோபர் 9 ம் தேதி ருத்ரமாதேவியை கண்டிப்பாக வெளியிட்டு விடுவோம் என்று தற்போது சூடம் ஏற்றாத குறையாக சத்தியம் செய்திருக்கின்றனர் படக்குழுவினர்.

எனவே இந்தமுறை ருத்ரமாதேவியை தரிசித்து விடலாம் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர், இதற்குத் தகுந்தார் போல போட்டிகள் எதுவும் இன்றி அக்டோபர் 9 ல் தனியாகக் களமிறங்குகிறார் அனுஷ்கா.

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் ருத்ரமாதேவி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

தூங்காமல் காத்திருங்கள்.. இன்னும் இரண்டே தினங்களில் "தூங்காவனம்" டிரெய்லர்!

சென்னை: கமல் நடிப்பில் சைக்கோ திரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் தூங்கா வனம் திரைப்படத்தின் டிரெய்லர் செப்டெம்பர் 4 ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.

‘பாபநாசம்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் கமல் நடித்திருக்கும் படம் ‘தூங்காவனம்', இதில் கமலுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார்.

Kamal haasan’s Thoongavanam Trailer Release Date

மேலும் ஆஷா சரத், பிரகாஷ் ராஜ், கிஷோர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். கமலின் உதவியாளர் ராஜேஷ் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இதையடுத்து படத்திற்கான பின்னணி வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

சமீபத்தில் கமலின் மேன்லி லுக்கில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது, இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை செப்டம்பர் 4ம் தேதி படக்குழுவினர் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன, செப்டெம்பர் 17 விநாயகர் சதுர்த்தி அன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று முதலில் கூறியிருந்தனர்.

தற்போது அந்த தேதியை மாற்றி வரும் வெள்ளியன்று டிரெய்லரை வெளியிட இருக்கின்றனர் தூங்காவனம் படக்குழுவினர், எது எப்படியோ கமலின் இந்த முடிவால் அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான்.

 

வதந்திகளை நம்பாதீங்க.. "நம்மாளு" கண்டிப்பா வரும்...சிம்பு

சென்னை: இது நம்ம ஆளு திரைப்படம் கண்டிப்பாக வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிம்பு அறிவித்து இருக்கிறார்.

சிம்பு - நயன்தாரா நடிப்பில் உருவான இது நம்ம ஆளு திரைப்படம் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்து வருகிறது, இந்நிலையில் படத்தை முடித்து வெளியிட படத்தின் தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் முடிவெடுத்தார்.

இதற்காக படத்தின் நாயகி நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டு அவர் தர மறுத்ததாக நயன்தாரா மீது டி.ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.

Don't Believe any Rumors - Simbu Says in Twitter

டி.ராஜேந்தர் புகார் அளித்த சிறிது நேரத்திலேயே நயன்தாரா மீது எந்தத் தவறும் இல்லை, சிம்புவும் அவரது அப்பா டி.ராஜேந்தரும் சேர்ந்து நயன்தாராவின் கால்ஷீட்டை வீணடித்தனர் என்று படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் பேட்டி தட்டினார்.

இதனால் நேற்று முழுவதும் தமிழ்த் திரையுலகமே பரபரத்துக் கிடந்தது, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நயன்தாராவோ "சட்டப்படி நான்தான் அவர்கள் மீது புகார் கொடுக்க வேண்டும்" என்று ஒரு அறிக்கை விட என்னடா நடக்குது இங்க என்று ரசிகர்கள் ஒன்றும் புரியாமல் குழம்பிக் கிடந்தனர்.

இந்த விவகாரத்தில் உச்சகட்டமாக நேற்று பிரச்சினை பற்றி எரிந்தபோது எதுவும் சொல்லாமல் இருந்த படத்தின் நாயகன் சிம்பு தற்போது இது நம்ம ஆளு திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.


சற்று நேரத்திற்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் 'இது நம்ம ஆளு' குறித்து வெளியாகும் எந்தச் செய்தியையும் நம்ப வேண்டாம். அதெல்லாம் வதந்தி. கண்டிப்பாக திட்டமிட்டபடி படம் வெளியாகும் . நாங்கள் எல்லாம் ஒரே குடும்பம்" எனக் கூறியுள்ளார்.

தற்போது தமிழனின் மனநிலை இதுவாகத்தான் இருக்கும் அவ்வளவும் நடிப்பா?

 

கவர்ச்சி நடிகை பாபிலோனா காதல் திருமணம்- 9ம் தேதி சென்னையில்!

சென்னை: கோலிவுட்டில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த கவர்ச்சி நடிகை பாபிலோனா தொழில் அதிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொள்கிறார். இவர்கள் திருமணம் வருகிற 9 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது.

தை பொறந்தாச்சு, என்னம்மா கண்ணு, அசத்தல், என் புருஷன் குழந்தை மாதிரி, வட்டாரம், சிறுவாணி உள்பட பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர் பாபிலோனா. இவருக்கும் ஆரணியை சேர்ந்த தொழில் அதிபர் சுந்தர் பபுல்ராஜ் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

Actress babilona's marriage in Chennai on 9th

இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். இவர்கள் திருமணத்துக்கு இரண்டு பேரின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தார்கள். அதைத்தொடர்ந்து பாபிலோனா-சுந்தர் பபுல்ராஜ் ஆகிய இருவருக்கும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாபிலோனா வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது.

அதன்படி பாபிலோனா-சுந்தர் பபுல்ராஜ் திருமணம் வருகிற 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள ஆதித்யா ஓட்டலில், கிறிஸ்தவ முறைப்படி நடக்கிறது. ‘‘திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்'' என்று பாபிலோனா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தனி ஒருவன் வெற்றி... தலை வணங்கும் மோகன் ராஜா!

ஜெயம் ராஜாவா... அவர் என்னதான் வெற்றிப் படம் கொடுத்தாலும், அது ரீமேக்தானே... அவர் ரீமேக் ராஜா என்றுதான் தமிழ் சினிமாவில் பேச்சு நிலவியது.

அதை உடைத்தெறிய வேண்டும் என்பதில் ராஜா மிகத் தீவிரமாக இருந்தார். வேலாயுதம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போதே, எனது அடுத்த படம் நிச்சயம் ஒரிஜினல் கதை, திரைக்கதையுடன் வரும் என்று அறிவித்தார்.

Mohan Raja thanked frans for Thani Oruvan success

அதற்கேற்ப தொடர்ந்து நான்கு ஆண்டுகள் மிகத் தீவிரமாக கதை - திரைக்கதையை உருவாக்கி வந்தார். அந்தப் படம்தான் தனி ஒருவன். இந்தப் படத்துக்கான வசனங்களையும் எழுத்தாளர்கள் சுபாவுடன் இணைந்து ராஜா எழுதினார். இத்தனை காலமும் ஜெயம் ராஜா என்ற பெயரில் தன் படங்களை இயக்கியவர், இந்த முறை தன் தந்தை மோகனின் பெயரைச் சேர்த்துக் கொண்டு மோகன் ராஜாவாக வந்தார்.

இதுவரை ராஜா இயக்கிய படங்களிலேயே பெரிய வெற்றிப் படம் என்ற பெயரைப் பெற்றுள்ளது இந்த தனி ஒருவன். அதேபோல ஜெயம் நடித்த படங்களிலேயே, பேராண்மைக்கு நிகரான படம் என்ற பாராட்டும் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது.

Mohan Raja thanked frans for Thani Oruvan success

தனி ஒருவனின் வெற்றி பிற மொழி தயாரிப்பாளர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்தியில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய பலரும் போட்டி போடுகின்றனர். சல்மான் கான் வெளிப்படையாகவே விருப்பம் தெரிவித்துள்ளார். நிச்சயம் அங்கும் இந்தப் படம் பெரும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

Mohan Raja thanked frans for Thani Oruvan success

இப்படத்தின் வெற்றிக்கு ரசிகர்கள்தான் காரணம் என்று மோகன் ராஜா கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், "என் வளர்ச்சியில் மீடியாவின் பங்கு அதிகம். என் மீதான விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் கூட என் வளர்ச்சியில் கொண்ட அக்கறையின் வெளிப்பாடாகவே இருக்கும். அப்படித்தான் இருக்க வேண்டும். என்னுடைய கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்திலும் ரசிகர்களுக்கும் மீடியாவுக்கும் பங்கிருக்கிறது. அதற்கு நான் தலை வணங்குகிறேன்.. சொந்தக் கதை முயற்சி தொடரும்," என்றார்.

 

ஐஸ்... இது அருண்விஜய் ஆரம்பித்திருக்கும் தயாரிப்பு நிறுவனம்

ஐஸ் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார் நடிகர் அருண் விஜய்.

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய், திரையுலகில் தனக்கென ஒரு இடத்துக்காக போராடியவர். தடையறத் தாக்க படத்தில் அவருக்கு பெரும் திருப்பம் கிடைத்தது. அஜீத்துக்கு வில்லனாக அவர் நடித்த என்னை அறிந்தால் படம் அவரை முன்னணி நாயகனாக மாற்றியது. அடுத்து இவர் நடித்துள்ள வா படம் விரைவில் வெளியாக உள்ளது.

Arun Vijay starts own production company

இப்போது சொந்தமாக பட நிறுவனம் தொடங்கியுள்ளார் அருண் விஜய். ‘இன் சினிமாஸ் என்டர்டெயின்மென்ட் (ICE)' என்று அதற்கு பெயரிட்டுள்ளார்.

இதன் மூலம் புதிய கலைஞர்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், திறமையிருந்தும் சாதிக்க வாய்ப்பிலாமல் இருக்கும் இளைஞர்களுக்கு உதவுவதற்காகவே இந்த சினிமா நிறுவனத்தை தொடங்கியுள்ளதாகவும் நேற்று அறிவித்தார்.

Arun Vijay starts own production company

வா படத்துக்குப் பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் அருண் விஜய் மீண்டும் நடிக்க இருக்கிறார். தெலுங்கில் ராம் சரண் மற்றும் கன்னடத்தில் புனீத் ராஜ்குமார் ஆகியோரின் படங்களிலும் அருண் விஜய் நடித்து வருகிறார்.

 

முடிஞ்சா இவன புடி... கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கிச்சா சுதீப்!

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கிச்சா சுதீப் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்தப் படத்துக்கு முடிஞ்சா இவன புடி என தலைப்பிட்டுள்ளனர்.

நான் ஈ படத்தின் மூலம் தமிழில் புகழ்பெற்றவர் சுதீப். கன்னடத்தில் முன்னணி நடிகராகத் திகழ்கிறார்.

KS Ravikumar - Sudeep's Mudincha Ivana Pudi

இவர் தனது அடுத்த படத்தை நேரடி தமிழ் மற்றும் கன்னடப் படமாக நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்குகிறார்.

சுதீப்புக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். சமீபத்தில் தொடங்கிய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


லிங்கா படத்துக்குப் பிறகு கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் இந்தப் படம் பெரிய வெற்றிப் படமாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் மிகக் கவனத்துடன் இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

 

படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய சுதீப்... நடிகர் நடிகைகள் வாழ்த்து!

நடிகர் சுதீப் இன்று தனது பிறந்த நாளை முடிஞ்சா இவன புடி படத்தின் ஷூட்டிங்கில் கேக் வெட்டிக் கொண்டாடினார். அவருக்கு நடிகர் நடிகைகள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழில் வெளிவந்த ‘நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் சுதீப். கன்னடத்தில் மிகப்பெரிய ஸ்டாரான சுதீப், தமிழுக்கு இந்த படத்தின் மூலம்தான் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து இவர் தமிழில் தற்போது விஜய்யுடன் இணைந்து ‘புலி' படத்தில் நடித்துள்ளார். மேலும், ‘பாகுபலி' படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Sudeep celebrates birthday at Mudincha Ivana Pudi set

இப்படங்களை தொடர்ந்து தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் ‘முடிஞ்சா இவன புடி' என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்து வருகிறார்.

இன்று பிறந்தநாள் காணும் சுதீப், தனது பிறந்தநாளை ‘முடிஞ்சா இவன புடி' படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகை நித்யா மேனன் ஆகியோர் கேக் ஊட்டி, தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Sudeep celebrates birthday at Mudincha Ivana Pudi set

நடிகை திவ்யா ஸ்பாந்தனா (குத்து ரம்யா), தயாரிப்பாளர் ராம்பாபு உள்ளிட்டோரும் சுதீப்புக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

ஒரே டீல் ஓஹோன்னு வாழ்க்கை... 'நவரச திலகம்' சிருஷ்டி டாங்கே!

கன்னக் குழியழகி சிருஷ்டி டாங்கே நடிக்கும் புதிய படம் நவரச திலகம் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. பர்மா படத்தைத் தயாரித்த ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் சுதர்சன வெம்புட்டி, கே.ஜெயச்சதிரன் ராவுடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

இந்த படத்தில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் மா.கா.பா.ஆனந்த் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் கருணாகரன், ஜெயபிரகாஷ், இளவரசு, பாவா லட்சுமணன், மீராகிருஷ்ணன்,லஷ்மி, மகாதேவன் ஆகியோர் நடிக்கிறார்கள். வித்தியாசமான வேடம் ஒன்றில், இதற்குத் தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களின் இசையமைப்பாளர் சித்தார்த் விபின் நடிக்கிறார்.

Srushti Dange in Navarasa Thilagam

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் காம்ரன்.

படம் பற்றி இயக்குநர் காம்ரன் கூறியதாவது...

"மூர்த்திக்கு ஒரே ஒரு ஆசை. ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய சாதனை செய்து உலக அளவில் புகழ் பெற வேண்டும் என்பது தான்.

அவனது தாரக மந்திரமாக இருப்பது 'ஒரே டீல் ஓஹோன்னுவாழ்க்கை' என்பதுதான். அரை குறையாகத் தெரிந்த தொழிலை எல்லாம் தெரிந்த மாதிரி காட்டிக்கொண்டு அப்பா பன்னீர் சேர்த்த சொத்து எல்லாவற்றையும் காலி செய்து கொண்டிருக்கும் அதிபுத்திசாலி. இந்த கதாப்பாத்திரத்தில் மா.கா.பா.ஆனந்த் தூள் கிளப்பி இருக்கிறார். உடன் கருணாகரன்... கேட்கவா வேண்டும். சமீபத்தில் மா.கா.பா.ஆனந்த் - சிருஷ்டி டாங்கே பங்கேற்ற
'கொள்ள அழகுக்காரி போறாலே முன்னால நல்லா இருந்தவன வழி மாற வெச்சாளே...' என்ற பாடல் காட்சியை தென்காசி, குற்றாலம் போன்ற பகுதிகளில் படமாக்கினோம்.செம ஜாலியான படமாக நவரச திலகம் உருவாகி உள்ளது," என்றார்.

 

சொந்தப் படமா ஆளை விடுங்க பயந்து போன ஹீரோ

சென்னை: சுமாரான மூஞ்சி கொண்ட அந்த நடிகர் சமீபத்தில் தயாரித்த மிட்டாய் திரைப்படம் நடிகரின் கையை நன்றாக சுட்டு விட்டது, நம்பித் தயாரித்தேன் ஆனால் படம் ஓடவில்லையே என்று நடிகர் தற்போது புலம்பி வருகிறாராம்.

படம் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீளாத அந்த நடிகரிடம் சமீபத்தில் ஒரு இயக்குநர் கதை சொல்லியிருக்கிறார், கதையைக் கேட்ட நடிகர் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டாராம்.

Actor Reluctant to Produce Own Movie

ஆனால் அதற்கு அடுத்து இயக்குநர் வைத்த கோரிக்கையில் நடிகர் அய்யோ சாமி ஆளை விடுங்க என்று சொல்லியிருக்கிறார். அப்படி என்ன தான் கேட்டார் அந்த இயக்குநர் வேறு ஒன்றுமில்லை இந்தப் படத்தை நீங்களே தயாரித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினாராம்.

இயக்குனரின் கோரிக்கையைக் கேட்ட நடிகர் கதை எனக்குப் பிடித்திருக்கிறது ஆனால் சொந்தப் படம் தயாரிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று கூறிவிட்டாராம்.

இதனால் தற்போது தயாரிப்பாளரை தீவிரமாகத் தேட ஆரம்பித்து இருக்கிறாராம் இயக்குநர்.

 

டோலிவுட் நடிகை அடா சர்மாவின் "கிளிக்கி" டப்ஸ்மாஷ்

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகையான அடா சர்மா பாகுபலி படத்தில் இடம்பெறும் கிளிக்கி மொழியை, டப்ஸ்மாஷ் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

பாகுபலி படத்தின் வசூல் மற்றும் காட்சிகளை விட ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது மதன் கார்க்கி உருவாக்கிய கிளிக்கி மொழி, படத்தில் ஆதிவாசி மக்கள் பேசுகின்ற மொழியாக இதனைப் பயன்படுத்தி இருந்தனர்.

படம் வெளிவந்த புதிதில் ரசிகர்களின் ஆராவாரத்தையும் தாண்டி ஒரு சிலரின் எதிர்ப்புகளையும் பெற்றது இந்த மொழி, தற்போது இந்த மொழியை டப்ஸ்மாஷ் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் அடா சர்மா.

தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த டப்ஸ் மாஷை வெளியிட்டு இருக்கும் அடா சர்மா பாகுபலி 3 படத்தில் லேடி காலகேயா (ஆதிவாசி தலைவன்) கதாபாத்திரத்திற்கு விண்ணப்பிக்கவே இந்த டப்ஸ்மாஷ் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

ஹிந்தியில் 1920 என்னும் திகில் படத்தின் மூலமாக அறிமுகமான அடா சர்மா அடுத்து நடித்த ஹார்ட் அட்டாக்(தெலுங்கு) திரைப்படம் மூலமாக ரசிகர்களிடையே புகழடைந்தவர்.

தற்போது சுப்பிரமணியம் பார்சேல் மற்றும் கரம் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார், இதில் சுப்பிரமணியம் பார்சேல் விரைவில் வெளியாகவிருக்கிறது.

தற்போது ரசிகர்களிடையே வேகமாக பிரபலமடைந்து வருகிறது அடா சர்மாவின் கிளிக்கி டப்ஸ்மாஷ்.

பாகுபலி 3 என்னமா இப்படிப் பண்றீங்களேமா..

 

இறுதிக் கட்டத்தை நெருங்கும் இறைவி... தீபாவளி ரேஸில் நுழையத் திட்டமா?

சென்னை: ஜிகர்தண்டாவைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வந்த இறைவி திரைப்படம் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தான் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் அங்கீகாரம் பெற்ற கார்த்திக் சுப்புராஜ் தற்போது அடுத்தபடியாக இறைவியைக் கையில் எடுத்திருக்கிறார்.

Karthik Subbaraj's Iraivi Shooting Entered Final Stage

தன் முதல் பட நாயகனான விஜய் சேதுபதியையும் இரண்டாவது படத்தில் அசால்ட் சேதுவாக மிரட்டிய பாபி சிம்ஹாவையும் இந்தப் படத்தில் முக்கியமான வேடங்களில் நடிக்க வைத்திருக்கிறார் கார்த்திக்.

மேலும் எஸ்.ஜே.சூர்யா, கமாலினி முகர்ஜி மற்றும் அஞ்சலி போன்றோரும் படத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

முன்னணி நடிகர்கள் இணைந்து நடிப்பது மற்றும் பீட்ஸா, ஜிகர்தண்டா படங்களின் வெற்றி போன்ற காரணங்களால் இறைவி படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாகியிருக்கிறது.

தற்போது கிடைத்த தகவல்களின் படி இன்னும் 2 வாரங்கள் படப்பிடிப்புடன் இறைவி திரைப்படத்தின் மொத்த சூட்டிங்கும் முடிவிற்கு வந்து விடும் என்று கூறுகின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இந்தப் படத்தை தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இறைவி தீபாவளி ரேஸில் கலந்து கொள்ளுமா? பார்க்கலாம்.

 

கபாலி ஷூட்டிங்... சென்னை விமான நிலையத்தில் இருந்து தொடங்குகிறது

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பை சென்னை விமான நிலையத்தில் இருந்து தொடங்க இயக்குநர் ரஞ்சித் முடிவு செய்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, தன்ஷிகா, ராதிகா ஆப்தே, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் ஆகியோர் இணைந்து நடிக்கும் கபாலி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Rajini's Kabali Shooting Start in Chennai Airport

கபாலி படத்தின் படப்பிடிப்பு முதலில் மலேசியாவில் நடத்தப்படும் என்று படக்குழுவினர் அறிவித்து இருந்தனர் தற்போது அது சென்னையாக மாறியிருக்கிறது.

செப்டம்பர் 17 ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று சென்னையில் படப்பிடிப்பைத் துவங்க இருக்கும் ரஞ்சித், படப்பிடிப்பை சென்னை விமான நிலையத்தில் இருந்து தொடங்கப் போகிறார் என்று தற்போது புதிய செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

கபாலி கதைப்படி சென்னை மற்றும் மலேசியா 2 இடங்களுமே திரைக்கதையில் முக்கிய பங்கு வகிப்பதால் இரு நாட்டின் விமான நிலையங்களுக்கும் படப்பிடிப்பில் முக்கிய இடமுண்டு என்று கூறுகின்றனர்.

செப்டம்பர் 17 ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் அதே நாளில் கபாலி படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கூரை வேற அடிக்கடி இடிஞ்சி விழுகுது, படப்பிடிப்பை (விமான நிலையத்தில்) கொஞ்சம் பார்த்து நடத்துங்க ரஞ்சித்.

 

சினிமா சிரமம்தான்... - இயக்குநர் சுசீந்திரன் பேட்டி

தமிழ்ச்சினிமாவில் நம்பிக்கை தரும் இயக்குநர்களில் சுசீந்திரனும் ஒருவர். இதுவரை அவர் எட்டுப் படங்களை இயக்கியுள்ளார்.

விஷால் நடித்துள்ள 'பாயும்புலி' சுசீந்திரனின் எட்டாவது படம். இது செப்டம்பர் 4-ல் வெளியாகிறது.

சுசீந்திரனைச் சந்தித்தோம்.

வெளிவரவிருக்கும் 'பாயும்புலி' என்ன மாதிரியான படம்?

இது ஒரு போலீஸ் சம்பந்தப் பட்டகதை. விஷால் ஏற்கெனவே போலீஸ் கதையில் நடித்திருந்தாலும் இதில் விஷால் வேறுபட்டுத் தெரிவார்.

போலீஸின் கம்பீரம் மற்றும் உணர்ச்சிகளை காட்டும் கதை. தன் மீது கை வைத்தால் சாதாரண ஆளே சும்மா விடமாட்டான். போலீஸ் மீது கை வைத்தால் என்னாகும் என்று சொல்கிற கதை. விஷால் இதில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்து இருக்கிறார். இதில் யாரும் எதிர்பார்க்காத ஒரு நடிகர் நடித்திருக்கிறார். படம் பார்ப்பவருக்கு சர்ப்ரைசாக இருக்கும்.

'பாண்டிய நாடு' விஷால், 'பாயும்புலி' விஷால்... என்ன மாற்றம்?

'பாண்டிய நாடு' படத்தில் விஷால் பயந்த சுபாவம் கொண்டவராக வருவார். இதில் அதற்கு நேர் எதிர். இரண்டுமே மதுரைப் பின்னணிக் கதைதான். இருந்தாலும் படத்தின் முதல் பத்து நிமிடத்திலேயே வேறுபாட்டை உணரமுடியும். இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் முற்றிலும் புதிய விஷாலை்ப பார்க்கலாம்.

Director Suseenthiran's interview

'பாண்டியநாடு' படம் இயக்கிய போது எது சொன்னாலும் விஷால் எப்படி எடுத்துக் கொள்வாரோ என்கிற தயக்கம் என்னிடம் இருந்தது. இதில் அப்படியில்லை. நான் விரும்புகிறதை தயங்காமல் கேட்கிற அளவுக்கு நெருக்கமும் புரிதலும் வந்து விட்டது.

இது உண்மைக் கதையா?

கற்பனைதான். ஆனால் எந்தக் கதையும் யாரையாவது இது நம் கதைதான் என்று சொல்லவைக்கும் அல்லவா? அப்படி ஒரு கதை இது. இது கற்பனைக் கதைதான், ஆனால் எங்கேயோ கேட்ட கதை போல, பார்த்த கதைபோலத் தோன்றலாம்.

Director Suseenthiran's interview

எடுத்த எட்டுப் படங்களில் உங்கள் அனுபவம் எப்படி?

எட்டும் எட்டு மாதிரியான அனுபவங்கள் எட்டு மாதிரியான களங்கள். ஒவ்வொரு பட அனுபவமும் சுவாரஸ்யமானது. அந்த அனுபவங்கள் எனக்குள் நிறைய பாடங்கள் கற்றுக் கொடுத்தவை. எட்டுப் படங்களில் நிறையவே கற்றுக் கொண்டிருக்கிறேன்.

Director Suseenthiran's interview

இந்தப் படங்களில் பரவசம் தந்தது எது?

நிச்சயமாக என் முதல் படமான 'வெண்ணிலா கபடி குழு' தான். உதவி இயக்குநராக இருக்கும் போது நமக்குப் படம் வருமா? வராதா? அதை நினைத்த மாதிரி எடுக்க முடியுமா? வெளிவருமா? வெற்றி பெறுமா? போன்று கேள்விகள் ஏக்கங்கள் இருக்கும். போராட்டங்கள் இருக்கும். அப்படி முதல் பிரசவமாய் வெளிவரும் முதல்படமே முதல் பரவசம். எனக்கு அப்படிப் பரவசம் தந்த படம் 'வெண்ணிலா கபடி குழு 'தான். அதன் திருப்தி, பெருமை, மகிழ்ச்சி, பூரிப்பு, பெருமிதம் தனி. கனவு நிறைவேறிய அந்த பரவசத்தை வேறு படங்கள் தந்ததில்லை.இனியும் தராது.

கதைகளை எப்படி உருவாக்குகிறீர்கள்?

முதலில் திரைக்கதையை தயார் செய்த பிறகுதான் யார் நடிப்பது யார் தயாரிப்பது என்று அடுத்த கட்டத்துக்குச் செல்கிறேன். ஆனால் 'பாயும்புலி' மட்டும் விஷால்தான் கதாநாயகன் என்று மனதில் வைத்துக் கொண்டு பிறகு கதை எழுதினேன். இப்படி எழுதுவது ஒரு வகையில் சிரமம்தான். எது யோசித்தாலும் அவரது கதாநாயக பிம்பம் கண்முன் நிற்கும். 'பாண்டியநாடு' வெளியாகும் முன்பே இந்தப் படத்துக்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டார். எனவே அவருக்காக கதை எழுதினேன்.

சொந்தக் கதை தவிர்த்து மற்றவர் கதைகளில் 2 படங்கள் இயக்கி உள்ளீர்கள். அந்த இரண்டுமே ஓடவில்லையே?

மற்றவர் கதைகளில் எடுத்ததில் 'அழகர்சாமியின் குதிரை' ஓடவில்லை என்றாலும் தேசிய விருது பெற்றது. 'ராஜபாட்டை' ஓடவும் இல்லை. பெயரும் இல்லை. ஒரு கட்டத்தில் 'ராஜபாட்டை' படப்பிடிப்பின் போதே இது சரியாக வராது என்று எனக்கே தோன்றியது.

Director Suseenthiran's interview

அடுத்த கதை தயாராகிவிட்டதா? யாருக்கான கதை?

பொதுவாக நான் கதை திரைக்கதை உருவாக்க நாலைந்து மாதங்கள் எடுத்துக் கொள்வேன். அடுத்த கதை தயாராகி விட்டது. இது விஜய், அஜீத், மோகன்பாபு, பவன் கல்யாண் மாதிரி நடிகர்களுக்கான கதை.

என் படங்களில் எப்போதும் ஒரு செண்டிமெண்டல் டச் இருக்கும். எவ்வளவோ காட்சிகள் இருந்தாலும் ஏதாவது ஒரு காட்சியாவது கண்கலங்க வைக்க,ஒருதுளி கண்ணீர் சிந்தவைக்க வேண்டும். கண்ணோரம் நீர் கசியவைக்க வேண்டும்; நீர் கசிய வைக்கும் அப்படி. வைத்தால்தான் அது சினிமா. செண்டிமெண்ட் இல்லாமல் சினிமா இல்லை. அப்படி இப்படத்திலும் காட்சிகள் இருக்கும்.

சினிமா சிரமமா?

சினிமா சிரமம்தான் உதவி இயக்குநராக இருந்தபோது ஒரு வகையான போராட்டம் என்றால், முதல்பட வாய்ப்பின் போது இன்னொரு வகையான போராட்டம். ஒரு படம் வெற்றி பெற்றால் வேறுவகை, வெற்றிகளை தக்க வைக்க இன்னொரு வகை என்று போராட்டமும் பதற்றமும் தொடர்ந்து கொண்டே வரும்.

நான் உதவி இயக்குநராக 11 ஆண்டுகள் இருந்திருக்கிறேன். பல மாதிரி அனுபவம் பெற்று இருக்கிறேன். அதனால் போராட்ட ம் எதையும் எதிர் கொள்ளும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. திடீரென இயக்குநர் ஆனவர்களுக்கு இது இருக்காது.

நண்பர்களுக்கு பட இயக்குநர் வாய்ப்பு கொடுத்து தயாரிக்கிறீர்களே?

என்னுடன் ஒரே அறையில் 11 ஆண்டுகள் இருந்தவர் ரமேஷ் சுப்ரமணியன். அவருக்காக 'வில் அம்பு' படம் தயாரிக்கிறேன். 'வீரதீரசூரன்' கதையை நண்பர் சங்கர் தயாளுக்காக கொடுத்திருக்கிறேன்.

 

அயயோ.. நான் நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை.. எஸ்.ஜே.சூர்யா மறுப்பு

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் எங்கள் அணியின் சார்பாக நடிகர் சிம்புவும் எஸ்.ஜே.சூர்யாவும் போட்டியிடுகிறார்கள் என்று ராதாரவி சொல்லி அரை நாள் கூட ஆகவில்லை.

அதற்குள் நான் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று ராதாரவி கூறியதற்கு மறுப்புத் தெரிவித்து பேட்டி அளித்திருக்கிறார் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா.

'கோவை சினிமா நடன, நாடக, நடிகர்கள் சங்கம்' என்ற புதிய சங்கத் தொடக்க நிகழ்ச்சி கோவையில் நடந்தது. இதை தொடங்கி வைப்பதற்காக தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி கோவை வந்தார்.

S.J.Surya Says

நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தபின் நடிகர் ராதாரவி அளித்த பேட்டியில் "நடிகர்சங்கத் தேர்தலில் எங்கள் அணியில் தலைவர் பதவிக்கு சரத்குமாரும் பொதுச்செயலாளர் பதவிக்கு நானும் போட்டியிடுகிறோம் எங்கள்அணி சார்பில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்" என்று கூறினார்.

ராதாரவியின் பேச்சுக்கு எஸ்.ஜே.சூர்யா தற்போது மறுப்புத் தெரிவித்து இருக்கிறார் நடிகர் சங்கத் தேர்தல் குறித்து அவர் பின் வருமாறு தனது விளக்கத்தை ஊடகங்களுக்கு அளித்திருக்கிறார்.

நான் இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள்சங்கம், இசையமைப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர்சங்கம் ஆகியனவற்றில் உறுப்பினராக இருக்கிறேன். எல்லாச் சங்கங்களிலும் நான் உறுப்பினராக மட்டுமே இருக்கிறேன்.

எந்தச் சங்கத்திலும் எந்தப்பொறுப்புக்கும் வர நான் விரும்பியதில்லை. இப்போதைய நடிகர்சங்கத் தேர்தலையொட்டி, எங்கள் அணியை ஆதரித்து ஓட்டுப்போட வேண்டும் என்று கேட்டார்கள், நான் ஓட்டுப்போடுகிறேன் என்று சொன்னேன்.

தேர்தலில் போட்டியிடுவதாக நான் சொல்லவில்லை, எல்லாச் சங்கங்களையும் போல இந்தச் சங்கத்திலும் நான் உறுப்பினராக மட்டுமே இருக்க விரும்புகிறேன்.

என்று தெளிவாக தான் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதை எஸ்.ஜே.சூர்யா எடுத்துரைத்திருக்கிறார்.

நடிகர் சங்கத் தேர்தல் கன்னித்தீவு கணக்கா நீண்டுகிட்டே போகுதே....

 

பட்டாலும் திருந்தாத விரல் நடிகரின் சேட்டைக்கு மட்டும் குறைச்சலே இல்லையாம்

சென்னை: விரல் நடிகர் கீழே விழுந்தாலும் மீசையில் மட்டும் மண் ஒட்டவில்லை என்று ஓவர் சேட்டை செய்கிறாராம்.

விரல் நடிகரின் படம் இரண்டு எழுத்து பெயர் கொண்ட படம் படாதபாடு பட்டு ஒரு வகையாக அண்மையில் ரிலீஸானது. படம் சூப்பர் என்று ரசிகர்கள்

தெரிவித்துள்ளனர். சிலரோ படத்தில் ஹீரோயினின் உடல்வாகு சில காட்சிகளில் குண்டாக இருந்ததையும், சில காட்சிகளில் ஒல்லியாக இருந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

A young actor irks media

நடிகர் படம் ரிலீஸான அன்று சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றுக்கு சென்று ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்தார். ட்விட்டர், ஃபேஸ்புக்கில் ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடித் தீர்த்துவிட்டனர்.

அந்த படம் லீடரின் தலையீட்டால் பிரச்சனை தீர்ந்து வெளியானது. இதனால் விரல் நடிகரின் தந்தை லீடரை கண்டமேனிக்கு புகழ்ந்து தள்ளிவிட்டார். லீடரின் புதிய படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விரல் நடிகரின் தந்தை லீடரை புகழ்ந்து தள்ளியதை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.

படம் பல பிரச்சனைகளைத் தாண்டி ரிலீஸானபோதிலும் நடிகரின் கெத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லையாம். படத்தின் வெற்றி சந்திப்பிற்கு நடிகர் இரண்டரை மணிநேரம் தாமதமாக வந்தாராம். நடிகரின் வரவை எதிர்பார்த்து பத்திரிக்கையாளர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து எரிச்சல் அடைந்தது தான் மிச்சமாம்.

 

பிரான்மலை பாடல்கள் இணையதளங்களில் வெளியானது… படக்குழுவினர் அதிர்ச்சி

பிரான்மலை படத்தின் பாடல்கள் அனைத்தும் இணையதளங்களில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாராகி வரும் பிரான்மலை படத்தில் ஆதவா பாண்டியன் அறிமுக நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் இளம்நாயகி நேகா கதாநாயகியாகவும், மதயானை கூட்டம், கொம்பன் படத்தில் நடித்த எழுத்தாளர் வேலராமமூர்த்தி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Piranmalai Movie songs leaked

சிறிய இடைவெளிக்கு பின்பு கஞ்சா கருப்பு பிரான்மலை படத்தில் நடிக்கிறார். கமெடிக்கு ப்ளாக் பாண்டி,முத்துகாளை இருவரும் நடிக்கின்றனர். பிரான்மலை தலைப்பிற்கு ஏற்ப கதையின் நம்பகதன்மையை மேம்படுத்த அப்பகுதி மக்களுக்கே நடிப்பு பயிற்சி அளித்து இப்படத்தில் நடிக்க வைத்துள்ளனர்.

பிரான்மலை படத்தின் கதை அம்சத்தை அறிந்து கவிப்பேரரசு வைரமுத்துவே அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார். மேலும் வைரமுத்து இப்படத்தின் அறிமுக இசை அமைப்பாளர் பாரதி விஸ்காரிடம் "நீண்ட இடைவெளிக்கு பின் அருமையான இசையை அனுபவித்ததாக" மனமகிழ்ந்து பாராட்டி இருக்கிறார் வைரமுத்து.

அறிமுக இயக்குநர் அகரம்காமுரா இப்படத்தை இயக்க, "வளரி கலைக்கூடம்" - R.P.பாண்டியன் தயாரிப்பில் பிரான்மலை திரைப்படம் விரைவில் திரைக்கு வர தயாராகி வருகிறது.

இந்தப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் பாடல்கள் இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக பிரான்மலை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

சண்டைக் காட்சியில் அடிபட்டேன்- பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டு அனுதாபம் தேடிய ராய் லட்சுமி

சென்னை: ராய் லட்சுமி - ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகி வரும் சவுகார்பேட்டை, பேய்ப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.

இந்தப் படத்தில் ராய் லட்சுமி பேயாக நடித்து வருகிறார்,சமீபத்தில் படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன. இந்த சண்டைக் காட்சிகளில் பேயாக நடிக்கும் ராய் லட்சுமி பறந்து பறந்து சண்டை போட்டு நடித்திருக்கிறார்.

இந்த சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் ராய் லட்சுமி நடித்தபோது பாதுகாப்பிற்காக அவரது இடுப்பில் கட்டியிருந்த கயிறு லேசாக கைகளில் உராய்ந்து விட்டதாம்.

think I can't fight without getting hurt 󾌩 minor injuries, badly bruised while doing stunts 󾍔 #noteasy 󾌻#Sawkarpettai

Posted by Raai Laxmi on Monday, August 31, 2015

உடனே இதனை போட்டோ எடுத்து தனது பேஸ்புக்கில் பதிவிட்டு "சண்டைக் காட்சிகளில் நடித்தபோது விபத்தில் சிக்கி விட்டேன் சின்னதாக சிராய்ப்பு கையில் ஏற்பட்டது. அடிபடாமல் ஒரு சண்டைக்காட்சியில் நடிக்க முடியாது என்று நினைக்கிறேன்" என்று கூறி தனது ரசிகர்களின் அனுதாபங்களைப் பெற்று வருகிறார்.

ராய் லட்சுமியே பேஸ்புக்கில் தான் அடிபட்டதாக கூறியதால் பதறிப் போன ரசிகர்கள், நீங்கள் சீக்கிரம் குணமாக வேண்டும் என்று தற்போது தீவிரமாக வேண்டி வருகின்றனர்.

எல்லாம் ஒரு வெளம்பரம் தான்....

 

குடும்பத்தில் புதுவரவு... மகிழ்ச்சியில் திளைக்கும் ராணி முகர்ஜி

சென்னை: பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்த நடிகை ராணி முகர்ஜி விரைவில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக மாறப் போகிறார்.

இந்தத் தகவலை அவரது உறவினர் ஜோதி முகர்ஜி உறுதிபடுத்தி இருக்கிறார். கடந்த ஆண்டு இயக்குநர் ஆதித்யா சோப்ராவை மணந்து கொண்ட ராணி முகர்ஜி, சமீபத்தில் வெளியான மர்தாணி படத்தின் மூலம் பாலிவுட்டில் மறுபிரவேசம் செய்தார்.

Actress Rani Mukerji is Pregnant, Says Her Sister-in-Law

தொடர்ந்து வேறு எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகாத நிலையில் தனது திருமண வாழ்க்கைக்கு அடையாளமாக ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார் ராணி முகர்ஜி.

அடுத்த வருடம் 2016 ஜனவரி மாதத்தில் ராணி முகர்ஜிக்கு குழந்தை பிறக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர், மர்தாணி படத்திற்குப் பின்பு புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளாத ராணி முகர்ஜி தற்போது இந்த சந்தோஷ தருணத்தை லண்டனில் தன் கணவருடன் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்.

 

கோடம்பாக்கத்தில் பேயாட்சி நடக்குது!- ஏஎம் ரத்னம்

கோடம்பாக்கத்தில் இப்போது பேயாட்சி நடக்கிறது என்று தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் கூறினார்.

புதுமுகங்கள் நடித்து தயாராகியுள்ள படம், ‘உனக்கென்ன வேணும் சொல்லு.' இது ஒரு பேய் படம். படத்தை என் சண்முகசுந்தரம், கே முகமது யாசின் தயாரிக்க, அவுரா சினிமாஸ் மகேஷ் வெளியிடுகிறார். ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கியுள்ளார்.

Ghost movies ruling Kollywood, says AM Rathnam

இதன் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. பாடல்களை பட அதிபர் ஏ.எம்.ரத்னம் வெளியிட, இயக்குநர் வெங்கட்பிரபு பெற்றுக் கொண்டார்.

விழாவில் ஏ.எம்.ரத்னம் பேசுகையில், "முன்பு பாம்புகளை வைத்து படம் தயாரித்தால், அந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. பாம்புகளை வைத்து தயாரிக்கப்பட்ட படங்கள் வெள்ளிவிழா கொண்டாடின.

இப்போது பேய் கதைகளை படமாக்கினால் நிச்சய வெற்றி என்று சொல்லும் நிலை இருந்து வருகிறது. திகில் படங்கள் வரிசையாக வெற்றி பெற்று வருகின்றன.

தமிழ் பட உலகில் இப்போது பேய் யுகம் நடக்கிறது. பேய் படங்களில் நகைச்சுவையும் கலந்திருப்பதால், குழந்தைகள் ரசிக்கிறார்கள். பேய் இருக்கிறதா, இல்லையா? என்பது தெரியாது. ஆனால், பேய் படங்களின் வெற்றி ஆச்சரியப்பட வைக்கிறது,'' என்றார்.

நிகழ்ச்சியில் இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம் நன்றி கூறினார்.

 

ஓமைகாட்: இந்த பர்ஃபிக்கு செல்ஃபியே பிடிக்காதாம்!

சென்னை: ஊர், உலகம் எல்லாம் செல்ஃபி மோகம் பிடித்து திரிகையில் நடிகை இலியானாவுக்கு செல்ஃபி என்றாலே பிடிக்காதாம்.

டோலிவுட்டில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார் இலியானா. கோடிகளில் சம்பளம் வாங்கிய அவருக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு வந்தது. பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்த நேரம் அவருக்கு டோலிவுட் திரும்ப விருப்பம் இல்லை.

Ileana is not fond of selfie

இதையடுத்து ஹைதராபாத்தில் இருந்து மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு சென்று மும்பையில் செட்டில் ஆனார். அவரது நடிப்பை அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலரும் பாராட்டியபோதிலும் புதுப்பட வாய்ப்புகள் இல்லை. காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி என்று நினைத்த இலி மீண்டும் டோலிவுட் திரும்ப முடிவு செய்துள்ளார்.

சரி நாம் மேட்டருக்கு வருவோம். ஊர், உலகம் எல்லாம் செல்ஃபி மோகம் பிடித்து திரிகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் செல்ஃபி எடுத்து தள்ளுகிறார்கள்.

இந்நிலையில் இலியானாவுக்கு செல்ஃபி எடுக்க பிடிக்காதாம். ரசிகர்கள், ரசிகைகள் கேட்டுக் கொண்டால் அவர்களுடன் சேர்ந்து செல்ஃபிக்கு போஸ் கொடுப்பாராம். மற்றபடி தானாக விரும்பி செல்ஃபி எடுக்கும் பழக்கம் இல்லையாம்.

 

'கபாலி' ஏன் மலேசியா போகவில்லை தெரியுமா?

மலேசியாவில் வரும் 17-ம் தேதி தொடங்குவகாக இருந்த ரஜினியின் கபாலி, இப்போது சென்னையிலேயே ஆரம்பமாகிறது.

கடந்த மூன்று மாதங்களாக மலேசியா மலேசியா என்று கூறி வந்தவர்கள், திடீரென சென்னையிலேயே படப்பிடிப்பைத் தொடங்குவது ஏன்?

Why Kabali not going to Malaysia?

இந்தக் கேள்வியை ரசிகர்களும் ஊடகங்களும் தொடர்ந்து எழுப்பி வருகின்றன.

நாம் விசாரித்த வரையில்... இதற்கு இரண்டு காரணங்களை பிரதானமாகச் சொல்கிறார்கள்.

ஒன்று மலேசியாவில் உள்ள அரசியல் சூழல். அங்கு அரசியல் நிலையற்ற தன்மை உள்ளதாலும், அடிக்கடி போராட்டங்கள் வெடிப்பதாலும், உடனடியாக அங்கு படப்பிடிப்பை வைத்துக் கொள்வது உசிதமில்லை என்று படக்குழு முடிவு செய்ததாம்.

இரண்டாவது, ரஜினியின் ஏவிஎம் பிள்ளையார் கோயில் சென்டிமென்ட். கடந்த பல ஆண்டுகளாக ரஜினியின் வெற்றிப் படங்களின் முதல் நாள் முதல் காட்சி ஏவிஎம் பிள்ளையார் கோயிலில் ரஜினி தேங்காய் உடைப்பது போலத்தான் தொடங்கும். இந்தப் படத்துக்கும் அப்படி ஒரு காட்சி எடுக்கப்படும் என்கிறார்கள்.

எது உண்மை என்பதை இயக்குநர் ரஞ்சித் வழக்கம் போல ட்விட்டரில் தெளிவுபடுத்தக் கூடும்!

 

"மன்மோகன் சிங்" வைத்த பொளேர் கொட்டு.. இனியாவது திருந்துவாரா ராம் கோபால் வர்மா?

ஷோலே படத்தை அனுமதியின்றி ரீமேக் செய்த ராம்கோபால் வர்மாவுக்கு ரூ 10 லட்சம் அபராதம் விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்தப் படத்தை அவர் தெரிந்தே, வேண்டுமென்றே ரீமேக் செய்து சிதைத்ததாக கண்டித்துள்ளது.

1975-ம் ஆண்டு வெளியான இந்திப் படம் ஷோலே. தர்மேந்திரா, அமிதாப்பச்சன், அம்ஜத்கான், ஹேமமாலினி. ஜெயாபச்சன் நடித்த இந்த படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்திய சினிமாவின் உன்னதமான திரைக்காவியங்களுள் ஒன்றாகக் கொண்டாடப்படும் இந்தப் படத்தை, ராம்கோபால் வர்மா கி ஷோலே என்ற பெயரில் ரீமேக் செய்தார் இயக்குநர் ராம்கோபால் வர்மா.

Delhi HC slaps on RGV for Sholay remake

ஷோலே படத்தின் தயாரிப்பாளரான ஜி.பி.சிப்பியின் பேரன் சாஷா சிப்பி இந்தப் படத்துக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

"ஷோலே படத்தின் பிரத்யேக உரிமை எங்களிடம் இருக்கிறது. எங்களிடம் அனுமதி பெறாமல் அதை மீண்டும் தயாரித்தது விதிமுறை மீறலாகும்," என்று தனது மனுவில் சாஷா சிப்பி குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி மன்மோகன்சிங் விசாரித்தார். ராம்கோபால் வர்மா தெரிந்தே இந்த தவறைச் செய்ததாகக் குறிப்பிட்டார். மேலும் வேண்டுமென்றே, உள்நோக்கத்துடன் இந்தப் படத்தை ரீமேக் செய்து கெடுத்ததாகக் கண்டித்தார் நீதிபதி.

ராம்கோபால் வர்மா எடுத்த ஷோலே ரீமேக் படு மோசமான தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

 

இனி அதிகபட்சம் 40 நாட்கள்தான்! - கமலின் புது முடிவு

இனி ஒரு படத்தின் ஷூட்டிங்கை 100 நாட்கள், 200 நாட்கள் என இழுக்கப் போவதில்லை. அதிகபட்சம் நாற்பது நாட்களில் முடிக்கப் போகிறேன், என்று கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாஸன் படங்கள் முன்பெல்லாம் நூறுக்கும் அதிகமான நாட்களுக்கு படப்பிடிப்பு நடப்பது வழக்கம். ஆனால் அவரது சமீபத்திய படமான பாபநாசம் வெறும் 40 நாட்களில் எடுக்கப்பட்டு, நல்ல லாபம் சம்பாதித்துக் கொடுத்தது.

இப்போது அவர் நடித்து வரும் தூங்கா நகரம் படத்தின் படப்பிடிப்பும் நாற்பது நாட்களுக்குள் முடிக்கப்பட்டுவிட்டது. விரைவில் வெளியாகத் தயாராகி வருகிறது.

Kamal's new decision in movie shooting

இப்போது மட்டும் எப்படி நாற்பது நாட்களில் படம் எடுக்க முடிகிறது?

இதற்கு கமல் கூறும் பதில் இது:

இத்தனை நாட்கள் ஒரு தவறான பாதையில் போய்க் கொண்டிருந்தோம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். 100 நாட்கள், 200 நாட்கள் படமெடுத்தால்தான் பிரமாண்டம் காட்ட முடியும் என்று சொன்னதைக் கேட்டு அப்படி எடுத்தோம். ஆனால் ஹாலிவுட்டில் 50 நாட்களுக்குள் ஜேம்ஸ்பாண்ட் படங்களையே எடுத்து முடித்துவிடுகிறார்கள்.

எனவே இருநூறுநாட்கள் எதற்குப் படப்பிடிப்பு நடத்தவேண்டும்... படமே அதிகபட்சம் நூறுநாட்கள்தான் ஓடுகிறது.

எனவே இனிவரும் படங்களையும் இதேபோல் குறுகிய காலத்தில் வேகமாக எடுத்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்," என்றார்.

 

கால்ஷீட்டை வீணடிச்சதுக்காக நான்தான் புகார் தரணும்! - நயன்தாரா

என் கால்ஷீட்டை வீணடிச்சதுக்காக டி ராஜேந்தர் மேல நான்தான் புகார் தந்திருக்கணும் என்று நடிகை நயன்தாரா பதில் அளித்துள்ளார்.

சிம்பு நடிக்கும் இது நம்ம ஆளு படம் இறுதிக்கட்ட வேலைகள் முடிந்து, இரண்டு பாடல் காட்சிகள் எடுக்கப்படாததால் வெளியாகாமல் நிற்கிறது.

T Rajendar wanted my dates, says Nayanthara

இந்தப் பாடல் காட்சிகளில் நடிக்க நாயகி நயன்தாரா மறுப்பதாகவும், மீதிப் பணம் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று அடம்பிடிப்பதாகவும் தயாரிப்பாளர் டி ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத்தில் நயன்தாரா மீது புகார் கொடுத்துள்ளார்.

T Rajendar wanted my dates, says Nayanthara

இந்தப் புகாருக்கு நயன்தாரா பதில் அளித்துள்ளார்.

அதில், "நான் இந்தப் படத்தின் பாடல் காட்சிகளுக்காக பல முறை தேதிகள் ஒதுக்கிக் கொடுத்துவிட்டேன். ஆனால் ஒருமுறை கூட அவற்றை சிம்புவும் அவர் தந்தை ராஜேந்தரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இப்போது நான் வேறு படங்களில் பிஸியாக இருப்பதால் அவர்கள் கேட்கும் தேதியில் நடிக்க முடியவில்லை.

T Rajendar wanted my dates, says Nayanthara

நியாயமாக என் கால்ஷீட்டை வீணடித்ததற்காக நான்தான் புகார் தந்திருக்க வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

தயாரிப்பாளரை தலைதெறிக்க ஓடவைத்த காமெடி நடிகர்

சென்னை: நாயகி விண்ணைத்தாண்டி வராத அந்த காதல் படத்தில் அறிமுகமான காமெடி நடிகர், சமீபத்தில் ஒரு தயாரிப்பாளரை தலை தெறிக்க ஓடவைத்திருக்கிறார்.

விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள் அவரா அப்படி செய்தார் என்று ஆச்சரியப் படுகிறார்களாம். விஷயம் இதுதான் தன்னுடைய கரகர குரலால் ரசிகர்களை சிரிக்க வைத்து வரும் காமெடி நடிகரிடம், தயாரிப்பாளர் ஒருவர் தன்னுடைய படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க வைக்க அணுகினாராம்.

அப்போது, படத்தில் நடிக்க 25 லட்சம் சம்பளமாக கொடுங்கள் என்று காமெடி நடிகர் கேட்டிருக்கிறார், இதை கேட்ட தயாரிப்பாளர் அதிர்ச்சியடைந்து விட்டாராம்.

மற்ற படங்களில் நட்புடன் நடித்து வருகிறேன் அதற்கு சம்பளம் என்று எதுவும் வாங்குவதில்லை, இந்த மாதிரி ஆட்கள் கிட்டத்தானே நான் பில்லைப் போட முடியும்? என்று அந்த தயாரிப்பாளரை அழைத்து வந்தவரிடம் நியாயம் வேறு பேசினாராம் காமெடி நடிகர்.

வர வர தமிழ் சினிமாவில காமெடிக்கும் பஞ்சம் வந்துருச்சி...