நடிகை அஞ்சலி ஜெர்மனியில் தலைமறைவாக உள்ளாரா?

சென்னை: நடிகை அஞ்சலி ஜெர்மனியில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

அண்மையில் நடிகை அஞ்சலி திடீர் என்று தலைமறைவாகிவிட்டு பின்னர் அவராகவே வந்து காவல் நிலையத்தில் ஆஜரானார். அதன் பிறகு அவரை தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை. தெலுங்கு படங்களில் நடித்து வருவதாகக் கூறப்பட்டது. ஆனால் அப்படி நடிப்பதையும் உறுதிப்படுத்த முடியவில்லையாம்.

நடிகை அஞ்சலி ஜெர்மனியில் தலைமறைவாக உள்ளாரா?  

இந்நிலையில் அஞ்சலிக்கு திருமணமாகிவிட்டது என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை அஞ்சலி மறுத்தார். இயக்குனர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது.

அஞ்சலியை தங்கள் படங்களில் நடிக்க வைக்க தமிழ் இயக்குனர்கள் விரும்புகிறார்களாம். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லையாம். இந்நிலையில் அவர் ஜெர்மனியில் தலைமறைவாக இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

 

நஸ்ரியாவை மடக்கிய ஜெய்... அனுமதியில்லாமல் காதல் காட்சியில் நடிக்க தடை!

கோடம்பாக்கத்தின் இன்றைய ஹாட் ஜோடி ஜெய் - நஸ்ரியாதான். இவர் அனுமதியில்லாமல் அவர் காதல் காட்சியில் கூட நடிக்க மறுக்கும் அளவுக்கு பின்னிப் பிணைந்த உறவுக்குள் போய்விட்டார்களாம் இருவரும்.

ஜெய்யின் கையில் அப்படியொன்றும் வெயிட்டாக ஒரு படமும் இல்லை. திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் இவருடன் இணைந்து நடிக்கிறார் நஸ்ரியா. அதற்கு முன் ராஜா ராணி படத்தில் இருவரும் சிறப்புத் தோற்றத்தில் வருகின்றனர்.

நஸ்ரியாவை மடக்கிய ஜெய்... அனுமதியில்லாமல் காதல் காட்சியில் நடிக்க தடை!

இந்த இரு படங்களிலும் நடித்த போது, ஜெய்யின் காதலில் சிக்கிக் கொண்டாராம் நஸ்ரியா.

இப்போது இருவரையும் தினமும் ஏதாவது ஒரு ஹோட்டல் அல்லது பார்ட்டியில் பார்க்க முடியும். சினிமா நிகழ்ச்சிகளுக்கும் கூட சேர்ந்தே வருகிறார்களாம்.

இது அவர்கள் காதல் விவகாரம்.. எப்படியோ போகட்டும் என்று பார்த்தால், இப்போது நஸ்ரியா உருவில் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் புதிய பிரச்சினை.

தான் ஹீரோயினாக நடிக்கும் படங்களில் நாயகனுடன் நெருக்கமான காதல் காட்சி அல்லது முத்தக் காட்சியில் நடிக்க முடியாது என்றும், அப்படியே அந்தக் காட்சி அவசிமெயன்றால் ஜெய்யிடம் பர்மிஷன் வாங்க வேண்டும் என்றும் கறாராகச் சொல்லி கதிகலங்க வைக்கிறாராம் நஸ்ரியா.

சமீபத்தில் ஒரு முன்னணி ஹீரோவின் படத்தில் முதலிரவுக் காட்சியில் நடிக்க வேண்டியிருந்ததாம். விஷயம் கேள்விப்பட்டதும் நைஸாக நழுவிவிட்டாராம் நஸ்ரியா. பின்னர் ஒருவழியாக அவரை தேடிப் பிடித்து நடிக்க அழைத்த போது, இந்தமாதிரி காட்சிகள் இனி படத்தில் இருக்காது என எழுதிக் கொடுத்தால்தான் நடிக்க வருவேன் என்றாராம்.

என்ன செய்வதென்று கைபிசைந்து நின்றதாம் யூனிட்.

எல்லாம் நேரம்தான்!

 

ரஜினி வழியில் தன் வீட்டில் வேலைப் பார்ப்பவர்களுக்கு வீடு கட்டித் தரும் அஜீத்!

ரஜினியை தன் வழிகாட்டியாக அறிவித்ததோடு நில்லாமல், உதவி செய்வதிலும் அவர் வழியையே கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளார் நடிகர் அஜீத்.

தனது வீட்டில் வேலை பார்க்கும் 10 பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கிறார்.

ரஜினி வழியில் தன் வீட்டில் வேலைப் பார்ப்பவர்களுக்கு வீடு கட்டித் தரும் அஜீத்!

அஜீத்திடம் நீண்டகாலமாக சமையல் வேலை, வீட்டு வேலை, தோட்ட வேலை செய்யும் 10 ஊழியர்களுக்கு சொந்தமாக வீடு இல்லை. இவர்களுக்கு உதவ முடிவு செய்த அஜீத், இதற்காக பழைய மாமல்லபுரம் (ஓஎம்ஆர்) சாலையில் உள்ள கேளம்பாக்கத்தில் நிலம் வாங்கினார். அந்த நிலம் வீட்டில் பணியாற்றும் 10 பேர் பெயருக்கும் தனித்தனியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது.

இதில் 10 பேருக்கும் அஜீத் சொந்த செலவிலேயே வீடுகள் கட்டி கொடுக்கிறார். இதற்கான பூமி பூஜை சமீபத்தில் நடந்தது.

இந்த நேரம் பார்த்து படப்பிடிப்புக்காக அஜீத் ஹைதராபாத் சென்று விட்டார். தான் இல்லாவிட்டாலும் நல்ல காரியம் தடைப்படக்கூடாது என அஜீத் கூறியதால், அவர் சார்பில் அவரது மனைவி ஷாலினி கலந்து கொண்டார். விரைவில் வீட்டுக்கான கட்டுமான பணிகள் துவங்க உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன் தன்னிடம் பணியாற்றிய 50 பேருக்கு கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணையில் 50 கிரவுண்ட் நிலம் ஒதுக்கி, அதில் வீடும் கட்டிக் கொடுத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி என்பது நினைவிருக்கலாம்.

 

பல கோடி நிலமோசடி... இயக்குநர் மீது குற்றப்பத்திரிகை!

சென்னை: அந்த இயக்குநர் தொன்னூறுகளில் பிரபலமாக இருந்தவர். தான் அறிமுகப்படுத்திய நடிகையையே திருமணம் செய்தவர்.

இங்கே அவர் தமிழ், தமிழர் உரிமை, தமிழ் தேசியம் என்றெல்லாம் முழங்கினாலும், மனைவி பக்கத்து மாநிலத்தில் இவர் கடுமையாக எதிர்க்கும் கட்சியில்தான் குப்பை கொட்டுகிறார்.

அறிமுகம் போதுமல்லவா...

இந்த இயக்குநருக்கு நிலத்தை பட்டா போட்டுக் கொள்வதில் அப்படி ஒரு பேராசையாம். இதுவரை இவர் குவித்துள்ள நிலங்களின் மதிப்பு மட்டும் ரூ 200 கோடியைத் தாண்டும் என்கிறார்கள்.

குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டுமே ரூ 100 கோடிக்கு மேல் பல நூறு ஏக்கர் நிலங்களை மடக்கி வைத்துள்ளாராம் இயக்குநர். இந்த நிலங்கள் ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளில் அமைந்துள்ளவானம்.

அரசுப் புறம்போக்கு, அவசரத்துக்கு காசு தேவைப்படும் ஏழைகள் நிலங்கள், வாரிசற்றவர்கள் நிலங்கள் என வகை தொகை இல்லாமல் வளைத்துப் போட்டுள்ளாராம் இயக்குநர்.

இதில் ஏற்படும் வில்லங்கங்களை சரிக்கட்ட ஒரு முக்கியமான அரசியல் தலைவரை கைக்குள் போட்டுக் கொண்டுள்ளாராம் இயக்குநர். இருவரும் கிட்டத்தட்ட தினசரி சந்தித்துக் கொள்வதோடு, அன்றாட நிலப் பஞ்சாயத்துக்களை தங்கள் ஆட்களை வைத்து சாமதானபேத தண்ட முறையில் சமாளிக்கிறார்களாம்.

கமிஷனர் அலுவலகத்தில் உள்ள நில மோசடி பிரிவு எப்போ வேணும்னாலும் புலன் விசாரணையில் குதிக்கும் என்கிறார்கள், அரசியல் தலைவரின் அடிப்பொடிகள்!

 

காந்தி பிறந்த நாளில்... இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா வரும் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காந்தி பிறந்த நாளில்... இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!

கடந்த ஆண்டிலிருந்து அடுத்தடுத்து நான்கு வெற்றிப் படங்களில் நடித்தவர் விஜய் சேதுபதி. சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், பீட்சா, சூது கவ்வும் என அவரது வெற்றிகள் தொடர்வதால், கோடம்பாக்கத்தில் அதிகம் கவனிக்கப்படும் நடிகராகிவிட்டார்.

'சூது கவ்வும்' படத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் படம் 'இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா'. இவருடன் அஸ்வின், நந்திதா மற்றும் சுவாதி ஆகியோர் நடித்துள்ளனர்.

காந்தி பிறந்த நாளில்... இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!

இப்படத்தை லியோ விஷன் நிறுவனம் தயாரிக்க கோகுல் இயக்கியிருக்கிறார். சித்தார்த் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை இந்த மாதம் 27-ந்தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர். அன்றைய தேதி ராஜா ராணி' போன்ற படங்கள் ரிலீஸ் ஆவதால், காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி ரிலீஸ் செய்கின்றனர்.

 

குழப்பத்தில் விஜய்.. 'எதுக்கு வம்பு.. நான் இமயமலைக்கு எஸ்கேப்' - எஸ்ஏசி

குழப்பத்தில் விஜய்.. 'எதுக்கு வம்பு.. நான் இமயமலைக்கு எஸ்கேப்' - எஸ்ஏசி

சென்னை: முதல்வர் கலந்து கொள்ளும் சினிமா நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டாலும் பிரச்சினை... கலந்து கொள்ளாவிட்டாலும் பிரச்சினை. எதுக்கு வம்பு என்று இமயமலைக்கு பறந்துவிட்டாராம் விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகரன்.

தலைவா படப் பிரச்சினையில் பெரிய அவமானத்துக்கு உள்ளானார்கள், விஜய்யும் அவர் தந்தையும்.

கொடநாடு தேடி வந்தபோதும் விஜய்யைச் சந்திக்க முடியாதென்று திருப்பி அனுப்பி விட்டார் ஜெயலலிதா.

அந்தப் பிரச்சினைக்குப் பிறகு இப்போது சினிமா நூற்றாண்டு விழாவுக்கு வருகிறார் முதல்வர். சொல்லப் போனால் இந்த முறை பதவி ஏற்ற பிறகு அவர் பங்கேற்கும் முதல் சினிமா நிகழ்ச்சி இது.

இந்த நிகழ்ச்சியில் யார் யாரை அழைக்கலாம் அழைக்கக் கூடாது என பெரிய பட்டியலே தயாரித்துள்ளார்களாம்.

இதில் தனக்கும் அழைப்பு வருமா... வந்தாலும் அதை நம்பிப் போகலாமா என்றெல்லாம் விஜய்க்கு பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளதாம்.

அழைப்பு வந்தாலும் வராவிட்டாலும் விழாவில் கலந்து கொள்வது சரியாக வராது என்று கருதிய எஸ்ஏ சந்திரசேகரன், இரண்டு நாட்கள் முன்கூட்டியே இமயமலைக்குப் பறந்துவிட்டார். சினிமா 100 நிகழ்ச்சிகள் முடிந்து 5 நாட்கள் கழித்தே அவர் சென்னை திரும்புகிறார்.

விஜய் சென்னையில்தான் இருக்கிறார். படப்பிடிப்பில் கலந்து கொண்டேன் என்று சொல்லவும் வழியில்லை. காரணம் 1 வாரம் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இப்போது விஜய் வேண்டுவதெல்லாம், நமக்கு அழைப்பிதழ் வராமலிருக்க வேண்டுமே என்றுதானாம்!

 

நண்பருக்காக பெங்களூர் மாநகராட்சிக்கு பிரச்சாரம் செய்வாரா ரஜினிகாந்த்?

நண்பருக்காக பெங்களூர் மாநகராட்சிக்கு பிரச்சாரம் செய்வாரா ரஜினிகாந்த்?

பெங்களூர்: ப்ரூஹத் பெங்களூர் மகாநகர பாலிகே(பிபிஎம்பி) ரஜினிகாந்தை தனது பிராண்ட் அம்பாசிடராக்க திட்டமிட்டுள்ளது.

கார்டன் சிட்டி எனப்படும் பெங்களூர் குப்பை நகரமாக உள்ளது. இந்நிலையில் குப்பையை உலர்ந்த மற்றும் ஈரப்பதம் உள்ள குப்பைகள் என இரண்டாக பிரித்து மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களிடம் வழங்குமாறு பெங்களூர் மாநகராட்சி அண்மையில் அறிவித்தது.

இந்நிலையில் பெங்களூர் மாநகராட்சியான ப்ரூஹத் பெங்களூர் மகாநகர பாலிகே(பிபிஎம்பி)வின் பிராண்ட் அம்பாசிடராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆக்க திட்டமிட்டுள்ளனர். அவர் குப்பையை இரண்டு வகையாக பிரித்து வழங்குவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவார் என்று கூறப்படுகிறது.

பிபிஎம்பியின் புதிய மேயரான பிஎஸ் சத்யநாராயணா ரஜினியின் பள்ளித் தோழர் ஆவார்.

அவர் இது குறித்து கூறுகையில்,

நான் மாகராட்சி ஊழியர்கள் சிலருடன் சேர்ந்து சென்னைக்கு சென்று ரஜினியை அழைக்கவிருக்கிறேன். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு கன்னட நடிகர் உபேந்திராவையும் அழைக்க திட்டமிட்டுள்ளோம். அவர் கேஆர் மார்க்கெட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வியாபாரிகள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவார் என்றார்.

ரஜினி வந்து கூறினால் கேஆர் மார்க்கெட் வியாபாரிகளிடம் நல்ல மாற்றம் ஏற்படும் என்று பெங்களூர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் குணசேகர் (எ) குணா தெரிவித்தார்.

 

இந்தாங்க சினிமா நூற்றாண்டு விழா பத்திரிக்கை: ப்ளீஸ் வந்துடாதீங்க

சென்னை: முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளும் சினிமா நூற்றாண்டு விழா பத்திரிக்கை சிலருக்கு வைக்கப்பட்டு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்களாம்.

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சினிமா நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றார்கள். ரஜினிகாந்த், கலம் ஹாஸன், அஜீத் குமார் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில் சிலருக்கு விழாவுக்கான பத்திரிக்கை வைத்து வந்துவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாம்.

ஒரு கட்சிக்கு ஆதரவாக கண்டமேனிக்கு பிரச்சாரம் செய்து தனது திரையுலக பயணத்திற்கு ஆப்பு வைத்துக் கொண்ட சிரிப்பு நடிகர், கோவைப் பழம் போல் சிவந்த கண்களை உடைய அந்த அரசியல்வாதி நடிகர் மற்றும் ஒரு முன்னணி நடிகருக்கு விழாவுக்கான பத்திரிக்கை வைக்கப்பட்டதாம். பத்திரிக்கையை அளித்த கையோடு தயவு செய்து விழா நடக்கும் இடத்தின் பக்கம் மட்டும் வந்து விடாதீர்கள் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில் இந்த வம்பே வேண்டாம் என்று லீடரின் தந்தை ஏற்கனவே எஸ்கேப் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த ஆளு வருகிற வாய்ப்பை வாயாலேயே துரத்திடுறாரே: முணுமுணுக்கும் கோடம்பாக்கம்

சென்னை: அண்மையில் வெளியான காஸ்ட்லி உலோக மீன் படத்தின் இயக்குனர் தன் வாயாலேயே வரும் வாய்ப்புகளை துரத்திவிடுகிறார் என்று கோடம்பாக்கத்தில் முணுமுணுக்கிறார்கள்.

அந்த இரண்டு எழுத்து இயக்குனரின் பாசத்தை வெளிப்படுத்தும் காஸ்ட்லி உலோக மீன் படம் வெளியானது. படம் நன்றாக இருந்தாலும் விமர்சகர்கள் குறைவான மதிப்பெண்களே அளித்துள்ளனர். இது இயக்குனருக்கு வருத்தமாம். தமிழக ஊடகங்களுக்கு சினிமாவை எப்படி பார்க்க வேண்டிம் என்றே தெரியவில்லை. சும்மா ஒரு முறை பார்த்துவிட்டு விமர்சிக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் படத்தை போட்டுக் காட்டவே கூடாது என்று புலம்பித் தள்ளுகிறாராம்.

அவரே அவரது படத்தை புகழ்ந்து கொண்டிருக்கிறாராம். இந்த மனுஷன் வருகிற வாய்ப்பை எல்லாம் வாயாலேயே துரத்துகிறார் பார் என்று கோடம்பாகத்தில் உள்ளவர்கள் முணுமுணுக்கிறார்களாம்.

 

மதகஜராஜா சிக்கல்... உயர்நீதிமன்றம் புது உத்தரவு!

சென்னை: மதகஜராஜா படப்பிடிப்புக்கு உதவிய ஆஸ்திரேலிய நிறுவனத்துக்கு தரவேண்டிய தொகையில் பாதிக்கு வங்கி உத்தரவாதம் கொடுத்தால் படத்தை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த கே.கே.சந்தானம் தாக்கல் செய்துள்ள மனுவில், "கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவுக்கு வந்த மதகஜராஜா படக்குழுவினர், ஷூட்டிங் நடத்தத் தேவையான அனைத்து வசதிகளையும் எனது நிறுவனம் செய்து கொடுத்தது.

இதற்காக எனக்கு ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம், ஆஸ்திரேலியா டாலர் மதிப்பில் ரூ.72 ஆயிரத்து 900 தரவேண்டும். ஆனால், இந்த தொகையை தராமல், மதகஜராஜா படத்தை வெளியிட உள்ளனர். எனவே எனக்கு தரவேண்டிய பணத்தை கொடுக்காமல், படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்," என்று கோரியிருந்தார்.

மதகஜராஜா சிக்கல்... உயர்நீதிமன்றம் புது உத்தரவு!

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுதாகர், ‘மதகஜ ராஜா' படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து கடந்த 5-ந்தேதி உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சுதாகர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "ஆஸ்திரேலியாவில் மனுதாரர் வழங்கிய சேவைகளை பயன்படுத்திக் கொண்டு, இப்போது அதற்குரிய பணத்தை கொடுக்க முடியாது என்று ஜெமினி நிறுவனம் கூறமுடியாது. இப்போது மதகஜ ராஜா படத்தை வெளியிட ஜெமினி நிறுவனம் விரும்பினால், பணம் எவ்வளவு கொடுக்க வேண்டுமோ அதில் பாதி தொகைக்கு வங்கி உத்தரவாதம் கொடுக்கவேண்டும்," என்றார்.

 

சினிமா நூற்றாண்டு விழா... நாளை முதல் ஒரு வாரம் 'சினிமா விடுமுறை'!

சென்னை: சென்னையில் நடக்கும் இந்திய சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி நாளை முதல் ஒரு வாரத்துக்கு திரையுலகின் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்படுகின்றன.

வெளியூர், வெளிநாடுகளில் நடக்கும் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டு, நடிகர் நடிகைகள் சென்னை திரும்புகின்றனர்.

சினிமா நூற்றாண்டு விழா... நாளை முதல் ஒரு வாரம் 'சினிமா விடுமுறை'!

இந்திய சினிமா நூற்றாண்டு விழா வருகிற 21-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை சென்னையில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி பங்கேற்கிறார்.

நூற்றாண்டு விழாவையொட்டி 21-ந்தேதி மாலை 5.30 மணிக்கு தமிழ், நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சியும் 22-ந்தேதி காலை கன்னட நடிகர், நடிகையர் கலை நிகழ்ச்சியும் 22-ந்தேதி மாலை தெலுங்கு நடிகர், நடிகையர் கலை நிகழ்ச்சியும் 23-ந்தேதி காலை மலையாள சினிமா உலகினர் கலை நிகழ்ச்சியும் நடக்கின்றன.

நயன்தாரா, திரிஷா, ஸ்ரேயா, காஜல்அகர்வால், ஹன்சிகா, அனுஷ்கா, தமன்னா, சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடனம் ஆடுகின்றனர்.

நூற்றாண்டு விழாவை யொட்டி சினிமா படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகள் நாளை முதல் 24-ந் தேதி வரை 7 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது. வெளியூர் படப்பிடிப்புகளில் இருக்கும் நடிகர் நடிகைகள் இன்று இரவே சென்னை திரும்புகிறார்கள்.

விழாவின் இறுதி நாளன்று மட்டும் பகலில் திரைப்படக் காட்சிகளையும் ரத்து செய்கின்றனர்.