கத்ரீனாவுக்கு போஸ் கொடுக்க தெரியலைன்னு நான் சொல்லல: கரண் ஜோஹார்

Didn T Say Anything About Kat Kjo   
பாலிவுட் நடிகை கத்ரீனா கைபுக்கு போட்டோவுக்கு போஸ் கொடுக்கவே தெரியவில்லை என்று நான் சொல்லவே இல்லை என்று இந்தி இயக்குனர் கரண் ஜோஹார் தெரிவித்துள்ளார்.

நடிகை கத்ரீனா கைபுக்கு பத்திரிக்கை அட்டைப் படங்களுக்கு எப்படி போஸ் கொடுப்பது என்றே தெரியவில்லை என்று பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் தெரிவித்தார் என்று செய்தி வெளியானது.

எந்த பத்திரிக்கையாக இருந்தாலும் சரி, எந்த பின்னணியில் நின்றாலும் சரி கத்ரீனா எப்பொழுதுமே ஒரே மாதிரியான போஸ் தான் கொடுக்கிறார். அவருக்கு போட்டோவுக்கு போஸ் கொடுக்கவே தெரியவில்லை என்று கரண் ஒரு பார்ட்டியில் தெரிவித்ததாகவும், அவர் எப்படி போஸ் கொடுப்பார் என்றும் செய்து காட்டியதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் இதை படித்த கரண் ஊடகங்கள் மீது கடுப்பாகிவிட்டாராம்.

உடனே இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தி,

கத்ரீனாவுக்கு போஸ் கொடுக்க தெரியவில்லை என்று நான் சொல்லவேயில்லை. அது அப்பட்டமான பொய். அவர் எனக்கு நல்ல தோழி. மேலும் அவர் திறமையானவர், கடினமாக உழைக்கும் மெகாஸ்டார் என்று தெரிவித்துள்ளார்.
 

கோச்சடையானில் நாகேஷ், ராணாவில் வடிவேலு!- கே.எஸ். ரவிக்குமார் தகவல்

Nagesh Kochadaiyaan Vadivelu Raana
ரஜினியின் கோச்சடையான் படத்தில், மறைந்த நடிகர் நாகேஷ் 'நடிக்கிறார்.' அனிமேஷன் முறையில் இந்தக் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் கோச்சடையானுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் மெகா பட்ஜெட் படமான ராணாவில், வடிவேலு மற்றும் விவேக் நடிக்கின்றனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இதைத் தெரிவித்தார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "ரஜினிக்கு மாமாவாக ஒரு காமெடி கேரக்டர் வருகிறது கோச்சடையானில். அதில் சந்தானம் போன்ற நடிகர்கள் நடித்தால் சரியாக வராது... வாடா போடா என்று கூப்பிட முடியாது என்பதால், மறைந்த நாகேஷை அனிமேஷனில் மீண்டும் உருவாக்கியிருக்கிறோம். கஷ்டமான காட்சி என்றாலும், மிகுந்த சிரமப்பட்டு உருவாக்கி வருகிறார்கள் சௌந்தர்யா குழுவினர்.

ராணாவில் வடிவேலு, விவேக் என பெரிய காமெடியன்கள் உள்ளனர். அதற்கு நிகராக வரவேண்டும் என்பதால் கோச்சடையானில் இப்படிச் செய்திருக்கிறோம்," என்றார்.
 

தல கையால பிரியாணி சாப்பிட முடியலையே: பில்லா வி்ல்லன் வருத்தம்

Ajith Is Such Helpful Co Star Sudhanshu   
தல அஜீத் குமார் கையால பிரியாணி சாப்பிடும் பாக்கியம் கிடைக்கவில்லையே என்று பில்லா 2 படத்தில் நடிக்கும் இந்தி நடிகர் சுதான்ஷு பாண்டே தெரிவி்த்துள்ளார்.

சக்ரி டோலாட்டியின் பில்லா 2 படம் மூலம் தமிழிழுக்கு வரும் இந்தி வில்லன் சுதான்ஷு பாண்டே. அவர் தனது பில்லா 2 அனுபவங்களைப் பற்றி கூறுகையில்,

பில்லா 2 படத்தில் அப்பாஸி கேரக்டருக்கு சரியான ஆளைத் தேடிக் கொண்டிருந்தார் சக்ரி டோலாட்டி. இணையதளத்தில் எனது புகைப்படத்தை பார்த்த அவர் உடனே என்னை போனில் தொடர்பு கொண்டார். நாங்கள் சந்தித்தபோது நீதான்ய்யா அப்பாஸி என்றார்.

பில்லா 2ல் மது, மாதுவுடன் சொகுசு வாழ்க்கை வாழும் டான் நான். இந்த கதாபாத்திரத்திற்காக நிறைய சாக்லேட், மில்க் ஷேக், காரமான உணவு வகைகள் சாப்பிட்டு எடையைக் கூட்டினேன். அஜீத் குமார் தான் ஒரு பெரிய ஸ்டார் போன்றே நடந்துகொள்ளமாட்டார். அவ்வளவு எளிமையானவர். அனைவருக்கும் உதவக்கூடியவர்.

தல கையால செய்யும் சுவையான பிரியாணி பற்றி பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்னும் சாப்பிட கொடுத்து வைக்கவில்லை. எனக்கும், சென்னைக்கும் உள்ள ஒரே தொடர்பு பில்லா 2 தான். மேலும் பல தமிழ் படங்களில் ஒப்பந்தமாவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

பில்லா 2 குழுவினருக்கு அஜீத் குமார் தன் கையாலேயே சமைத்து சுவையான பிரியாணி விருந்து வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.
 

ரஞ்சிதா வழக்கில் 16ம் தேதி ஆஜராக ஜெயேந்திரருக்கு நீதிமன்றம் உத்தரவு!

Court Orders Jayendirar Appear On 16th In Ranjitha Case
சென்னை: நடிகை ரஞ்சிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரருக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நித்யானந்தா மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பு ஏற்றதற்கு காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் எதிர்ப்பு தெரிவித்தார்.

ரஞ்சிதா என்ற பெண்ணை எப்போதும் பக்கத்தில் வைத்துக் கொண்டு சுற்றும் நித்யானந்தாவுக்கு ஆதீனம் பட்டம் வழங்கியதை ஏற்க முடியாது என்று ஜெயேந்திரர் கமெண்ட் அடித்தார். இதற்கு நித்யானந்தா எதிர்ப்பு தெரிவித்தார். தனக்கு எதிரான கருத்தை பத்து நாட்களில் ஜெயேந்திரர் வாபஸ் பெறவேண்டும் என்றும் கெடு விதித்தார்.

ரஞ்சிதாவும் ஜெயேந்திரர் கருத்தை கண்டித்து எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். மனுவில் அவர் ஜெயேந்திரர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 499 மற்றும் 500-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

'நல்ல பெயருக்கு களங்கம் கற்பிதத ஜெயேந்திரர்'

"நான் தமிழ், தெலுங்கு மலையாள மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் எனக்கு ரசிகர்கள் உள்ளனர். சமுதாயத்தில் நல்ல பெயருடன் வாழ்கிறேன். நித்யானந்தாவின் மாநாடுகள், விழாக்களில் கலந்து கொண்டுள்ளேன்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் அளித்த பேட்டியில் ரஞ்சிதா என்பவர் நித்தியானந்தாவுடன் எப்போதும் இருக்கிறார் என்று கூறி இருக்கிறார். இது எனக்கும் நித்யானந்தாவுக்கும் உள்ள குரு, சீடர் உறவை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது. நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். என்னைப்பற்றி பேச அவருக்கு எந்த தகுதியும் இல்லை," என்றெல்லாம் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு ரவீந்திரன் முன்பு ரஞ்சிதா இன்று ஆஜரானார். நீதிமன்ற கூண்டில் ஏறி நின்று மாஜிஸ்திரேட்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார். பின்பு விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

16-ந்தேதி வழக்கு விசாரணையின்போது ஜெயேந்திரருக்கு கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த ரஞ்சிதாவிடம் ஜெயேந்திரர் சமரச தூது அனுப்பி உள்ளதாக நித்யானந்தா கூறியுள்ளாரே சமாதானமாக வந்தால் ஏற்பீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்து ரஞ்சிதா கூறும்போது, "இப்போது நான் அவதூறு வழக்கு போட்டுள்ளேன். அந்த மாதிரி ஒரு சூழல் வந்தால் பிறகு யோசிக்கலாம்," என்றார்.

இதற்கிடையே, தன் கருத்தை ஜெயேந்திரர் வாபஸ் பெறுவது குறித்து யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
 

இனி மும்பையிலேயே தங்கப் போகிறாராம் பிரபு தேவா.. நயன்தாரா காரணமா?

Prabhu Deva Decides Stay Mumbai    | பிரபுதேவா  
இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன். மீண்டும் தமிழ்ப் படங்களை இயக்க 15 ஆண்டுகளாகளாம், என்கிறார் பிரபு தேவா.

பிரபுதேவா இந்தியில் சல்மான்கானை வைத்து இயக்கிய 'வாண்டட்' படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து அவருக்கு நிறைய வாய்ப்புகள் பாலிவுட்டில் வந்தவண்ணம் உள்ளது.

இப்போது அக்ஷய்குமார் நடிக்கும் 'ரவுடி ரத்தோர்' படத்தை தற்போது இயக்கி வருகிறார். இப்படம் ஜூன் மாதம் ரிலீசாகிறது. அடுத்து 'எனிபடி கேன் டான்ஸ்' என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

மேலும் சல்மான்கான், அக்ஷய்குமார் ஆகியோருக்கு தலா ஒரு படங்கள் இயக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

பிரபுதேவாவுடன் படம் பண்ண ஷாரூக்கான் ஆர்வமாக உள்ளாராம்.

தொடர்ந்து பாலிவுட்டியலேயே வாய்ப்புகள் இருப்பதால் மும்பையிலேயே ஒரு வீடு வாங்கும் திட்டத்தில் உள்ளாராம் பிரபுதேவா.

இதுகுறித்து பிரபு தேவா கூறுகையில், "தமிழில் இப்போதைக்கு படம் செய்யும் சூழல் இல்லை. இந்தியில் ஏகப்பட்ட கமிட்மென்ட்கள் உள்ளன. அதையெல்லாம் முடித்துவிட்டு தமிழுக்கு நான் திரும்ப 15 ஆண்டுகள்கூட ஆகலாம்.

அதுவரை வாடகை வீட்டிலா தங்க முடியும். அதான் சொந்தமா மும்பையில் வீடு வாங்குகிறேன்," என்றார்.

நயன்தாராவுடனான பிரிவுதான் இந்த முடிவுக்குக் காரணமா என்று கேட்டதற்கு, "பேட்டியை முதல் கேள்வியோடு முடிச்சிக்கிட்டேனே," என்றார்.
 

என் விஷயத்தில் அம்மா தலையிடுவதே இல்லை: கார்த்திகா

I M Director S Girl Karthika
தனது விஷயத்தில் அம்மா ராதா தலையிடுவதில்லை என்று நடிகை கார்த்திகா தெரிவித்துள்ளார்.

முன்னாள் நடிகை ராதா தனது மகள் கார்த்திகாவுடன் வந்து ஷூட்டிங்கில் தலையிடுவதாக பேச்சு அடிபட்டது. ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் அவர் தனது மகளை கவர்ச்சியாக நடிக்க வைக்கக் கூடாது என்று இயக்குனர்களுக்கு கன்டஷன் போடுவதாகவும் பேசப்பட்டது. இதை தாயும், மகளும் மறுத்துள்ளனர்.

இது குறித்து கார்த்திகா கூறுகையில்,

என் தனிபட்ட விஷயங்களிலும் சரி, நடிப்பிலும் சரி என் அம்மா ராதா தலையிடுவது இல்லை. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டால் நான் இயக்குனரின் குழந்தை. அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி தான் நடிப்பேன். என் அம்மா 150 படங்களில் நடித்துள்ளார். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தார். உச்சத்தில் இருக்கையிலேயே குடும்பம் தான் முக்கியம் என்று செட்டிலாகிவிட்டார். சினிமாத்துறையில் அவருக்கு இன்றும் மதிப்பும், மரியாதையும் உள்ளது என்றார்.

ராதா கூறுகையில்,

சினிமா முன்பு போன்று இல்லை. எவ்வளவோ மாறிவிட்டது. தற்போதுள்ள இளம் நடிகர், நடிகைகளுக்கு நடிப்பு குறித்த அனைத்து விஷயங்களும் நன்றாகத் தெரிகிறது. தங்கள் சொந்த முயற்சியில் முன்னேறுகிறார்கள். என் மகளும் சாதிப்பார் என்றார்.
 

ஷூட்டிங்கால் அன்னையர் தினத்தை மிஸ் பண்ண த்ரிஷா

Trisha Misses Mother Day An Ad Shoot   
விளம்பர பட ஷூட்டிங்கில் நடிக்க மைசூர் சென்றதால் த்ரிஷாவால் அன்னையர் தினத்தை அம்மாவுடன் கொண்டாட முடியாமல் போனது.

நடிகை த்ரிஷா அம்மா உமாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அம்மா, மகள் பாசம் அனைவரும் அறிந்ததே. த்ரிஷா இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு காரணம் யார் என்று யாரைக் கேட்டாலும் உமா என்பார்கள். த்ரிஷாவும் அடிக்கடி இதைத் தான் கூறி வருகிறார். நான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன் என்றால் அதற்கு என் அம்மா தான் காரணம் என்று பெருமையாக சொல்வார்.

நேற்று அன்னையர் தினமாச்சே த்ரிஷா எப்படி கொண்டாடினார் என்று கேட்காதீர்கள். ஏனென்றால் விளம்பர பட ஷூட்டிங்கில் நடிப்பதற்காக த்ரிஷா மைசூருக்கு சென்றுவிட்டாராம். இதனால் அம்மாவுடன் அன்னையர் தினம் கொண்டாட முடியவில்லையாம். இருப்பினும் டுவிட்டரில் அவர் தனது அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

த்ரிஷா டுவீட்:

நான் அதிகம் நேசிக்கும் மற்றும் நான் இன்றைக்கு நானாக இருக்க காரணமான எனது அம்மாவுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள். ஐ லவ் யூ அம்மா.

மேலும் செல்போனில் தொடர்பு கொண்டும் அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

த்ரிஷா ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்த தம்மு படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. தமிழில் சமர், என்றென்றும் புன்னகை மற்றும் பூலோகம் ஆகிய 3 படங்களில் நடிக்கிறார்.
 

ஜெயம் ரவிக்காக ரவி தேஜா படத்திலிருந்து அமலா பால் விலகல்!

Amala Paul Opts From Ravi Teja Film   
ஒரு படத்தில் ஒப்பந்தமாகி விலகுவதில் குறுகிய காலத்தில் பெயர் பெற்ற நடிகையாகிவிட்டார் அமலா பால்.

தமிழ், தெலுங்கில் பிஸியாக உள்ள அவர், லேட்டஸ்டாக விலகியுள்ள படம் ரவி தேஜாவின் 'சார் ஒஸ்தாரா'!

காரணம், அதை விட பெரிய படமான, அதுவும் தமிழ் - தெலுங்கில் தயாராகும் ஜெயம் ரவியின் பூலோகம். ராம் சரண் படத்துக்கு வேறு தொடர்ச்சியாக கால்ஷீட் தர வேண்டியிருந்ததால், ரவி தேஜா படத்தை வேண்டாம் என்று கூறிவிட்டாராம் அமலா.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ராம் சரண் பட ஷூட்டிங் லண்டனில் நடக்கிறது. அதற்கு 20 நாட்கள். அதற்கடுத்து ஜெயம் ரவி படம். இதற்கு தொடர்ச்சியாக தேதிகள் கொடுத்தாக வேண்டும். அதான் ரவிதேஜா படத்தை கைவிட வேண்டியதாகிவிட்டது. வேறு பிரச்சினை இல்லை," என்றார்.

அமலா பால் ஏற்கெனவே தனுஷின் 3 உள்பட மூன்று படங்களில் முதலில் நடிக்க ஒப்புக் கொண்டு பின் விலகிக் கொண்டது நினைவிருக்கலாம்.
 

2 லட்சம் பிரதிகள் விற்ற ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம்!

Neeya Naana Gopinath Please Do Not Bye This Book
விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் எழுதிய ‘ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க!’ என்ற புத்தகம் விற்பனையில் சாதனை படைத்து, 2 லட்சம் பிரதிகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ஊடகத்துறையில் கோபிநாத் என்ற பெயரை விட நீயா நானா கோபிநாத் என்ற பெயர்தான் பிரபலம். அந்த அளவிற்கு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது அந்த நிகழ்ச்சி. ஒரு டாக் ஷோ எப்படி இருக்க வேண்டும் என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளும் வகையில் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறார்.

தான் நிகழ்ச்சி நடத்துநர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளர் என்பதையும் தனது நூலின் வாயிலாக நிரூபித்துள்ளார் கோபிநாத். அவர் தனது அனுபவங்களையும், தான் சந்தித்த மனிதர்களையும் தனது எழுத்துக்களில் வடித்துள்ளார்.

2007ம் ஆண்டு தனது முதல் புத்தகமான ‘ தெருவெல்லாம் தேவதைகள்’ என்ற நூலை எழுதினார். அதைத் தொடர்ந்து எழுதிய ‘ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க !’ என்ற நூல் வாசகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலில் பதிப்பிக்கப்பட்டது.

தற்போது அந்த நூல் 16வது முறையாக பதிப்பிக்கப்பட்டு 2 லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. அந்த புத்தகம் அனைவரும் கவர முதல் காரணம் அதன் தலைப்பே அதை வாங்கத் தூண்டுவதாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தை வாசித்தால் மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் ஏற்படுவதாக கூறுகின்றனர் வாசகர்கள்.
 

தமிழ் சீரியல்களை நிறுத்துங்கள்: மலேசியா நுகர்வோர் அமைப்பு கொதிப்பு

Call Ban On Violent Tamil Tv Serials In Malaysia
தமிழ்நாட்டில் உள்ள பிரபல தமிழ் சேனல்கள் மலேசியாவில் ஒளிபரப்பாகின்றன. இவை பெரும்பாலும் சீரியல்களையும், சில தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்திகளையும் ஒளிபரப்புகின்றன.

இந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பும் நெடுந்தொடர்கள் மலேசியாவில் வசிக்கும் தமிழ் வம்சாவளியினரை பெரிதும் பாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மலேசியாவில் 28 லட்சத்திற்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர். இவர்களின் பெரும்பாலோனோர் இந்த டிவி சீரியல்களை பார்க்கின்றனர்.

இந்த டிவி சீரியல்களில் அழுகையும், வன்முறையுமே அதிகம் காணப்படுகிறது என்று மலேசியாவின் பினாங்கு பகுதி நுகர்வோர் அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த டிவி சீரியல்களைப் பார்க்கும் இளம் தலைமுறையினர் குற்றவாளிகளாக மாறவும் வாய்ப்புள்ளது. அது மட்டுமல்லாது பெண்கள் தங்கள் குடும்பத்தை கவனிக்காமல் டிவி சீரியல் பார்ப்பதிலேயே நேரத்தை செலவிடுகின்றனர். எனவே வன்முறை காட்சிகள் அடங்கிய டி.வி சீரியல்களை தடை செய்யவேண்டும் அல்லது தணிக்கை செய்யவேண்டும் என்று நுகர்வோர் அமைப்பின் நிர்வாகி என்.வி. சுப்பாராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

தேன் நிலவுக்கு அமெரிக்காவுக்கு கிளம்பிய சினேகா-பிரசன்னா

Sneha Prasanna Honeymooning Us   
நடிகை சினேகா, பிரசன்னா ஜோடி தேன் நிலவுக்கு அமெரிக்காவுக்கு பறந்துவிட்டார்களாம்.

நடிகை Sneha and Prasanna Wedding Video
 

''ஆவிகளுக்குப் பிரியமானவள்'': மூட நம்பிக்கையை வளர்க்கும் தொடர்கள்

Sundra Travels Radha New Television Serial
சில காலம் பேய், பூதம், ஆவி போன்ற மர்ம தொடர்களை ஒதுக்கி வைத்திருந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் மீண்டும் அவற்றை கையில் எடுத்திருக்கின்றன.

சிவசங்கரி (சன் டிவி), ருத்ரம் (ஜெயா டிவி) ஆகிய ஆவி தொடர்கள் வரிசையில் தற்போது புதிதாக பைரவி (சன் டிவி) சேர்ந்திருக்கிறது.

பாம்பு பற்றி ஒரு காலத்தில் தொடர்கள் அதிகம் வெளிவந்த நிலையில் மீண்டும் டிஆர்பி ரேட்டிங்கிற்காக இப்போது ஆவி, பேய், சாமி என கையில் எடுத்துக் கொண்டிருக்கின்றனர் தொலைக்காட்சி நிறுவனத்தினர்.

பைரவி என்ற தொடர் தற்போது ஞாயிறு தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் கதாநாயகியாக நடித்திருப்பவர் சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராதா. இதில் கதாநாயகியின் அம்மாவாக பெரியதிரையின் முன்னாள் கதாநாயாகி ஊர்வசி நடித்திருக்கிறார்.

கதாநாயகியின் கண்களுக்கு மட்டுமே ஆவி தெரிகிறதாம்! அவருக்கு மட்டுமே அந்த அபூர்வ சக்தி இருக்கிறதாம்! அவர் அந்த ஆவிகளின் பிரச்சனையை தீர்த்து வைக்கிறாராம்.

சிறுவர்கள் உதறலோடு இந்த தொடரை பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சரிகம நிறுவனம் இந்த நெடுந்தொடரை தயாரித்துள்ளது. சண்முகம் இயக்கியுள்ளார். இது போன்ற தொடர்களை ஒளிபரப்புவதன் மூலம் தொலைக்காட்சி நிறுவனங்கள் என்ன சொல்ல வருகின்றனர் என்பது தெரியவில்லை.
 

அழகு ராஜா கார்த்தி.. அழகு ராணி காஜல்!

Kajal Is Karthi S Azhagu Rani   
கார்த்தி நடிக்கும் அழகு ராஜா படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறாராம்.

காஜல் அகர்வால் தெலுங்கில் உச்சத்தில் இருக்கிறார். டோலிவுட் ஹீரோக்களின் மனம் கவரும் நாயகி யார் என்றால் அது காஜல் தான். அவர் தமிழிலும் ஒரு ரவுண்ட் வரலாமே என்று முடிவு செய்துள்ளார். அவர் முடிவு செய்த நேரம் ரொம்ப நல்ல நேரம் போலும். அது தான் கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களான விஜயுடன் துப்பாக்கி, சூர்யாவுடன் மாற்றான் என்று நடித்து வருகிறார்.

பார்த்தியா முதல்ல சூர்யா, இப்ப விஜயுடன் நடிக்கிறேன் என்று தனது தோழிகளிடம் சொல்லி, சொல்லி பெருமைப்படுகிறாராம். காஜலும், கார்த்தியும் சேர்ந்து நான் மகான் அல்ல படத்தில் நடித்தார்கள். அவர்கள் ஜோடிப் பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு என்று கூறப்பட்டது. புரூ காபி விளம்பரத்தில் கூட அந்த கியூட் ஜோடி தான் வருகிறார்கள்.

இந்நிலையில் இயக்குனர் ராஜேஷ் கார்த்தியை வைத்து இயக்கும் அழகு ராஜா படத்தில் காஜல் அகர்வால் தான் ஹீரோயினாம். இதன் மூலம் அவர் இரண்டாவது முறையாக கார்த்தியுடன் ஜோடி சேர்கிறார்.

இந்த படத்தில் காமெடி சந்தானமும் உள்ளார். சந்தானம், கார்த்தி கூட்டணி சிறுத்தை படம் மூலம் வெற்றிக் கூட்டணி ஆகியுள்ளது. இந்த படத்தில் எப்படி என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
 

ராஜேஷுடன் காமெடியில் கலக்கப் போகிறார் விஜய்?

Vijay Join Hands With Rajesh
முன்பெல்லாம் விஜய்யின் படத்தை யாராவது புதியவர் அல்லது குறைந்த அளவே அறியப்பட்ட இயக்குநர்கள்தான் இயக்குவார்கள். புதிய இயக்குநர்களுக்கு அதிக வாய்ப்பளித்தவர் என்ற பெருமையே அவருக்கு உண்டு.

இப்போது நிலைமை தலைகீழ்!

இனி வரும் அவரது எல்லாப் படங்களுமே பிரபல இயக்குநர்களின் கைவண்ணத்தில்தான் உருவாகின்றன.

ஏ ஆர் முருகதாஸ், கவுதம் மேனன், ஏ எல் விஜய் படங்களில் நடிக்கும் விஜய், அடுத்து ஒரு கல் ஒரு கண்ணாடி ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கப் போவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தை உடனே தொடங்க ஆசைப்படுகிறாராம் விஜய். காரணம், ஒரு முழு நீள காமெடி படம் தந்தால் ரசிகர்கள் வரவேற்பார்கள் என்பதால், இந்தப் படத்துக்கு முக்கியத்துவம் தருகிறாராம் விஜய். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பார் என்கிறார்கள்.

ஆனால் அடுத்து கார்த்தியை வைத்து படம் பண்ணத் திட்டமிட்டுள்ள ராஜேஷால் உடனடியாக இந்தப் படத்துக்கு வர முடியாது என்பதால், விஜய் படம் தொடங்க சில மாதங்கள் ஆகும் என்கிறார்கள். அநேகமாக யோகனை முடித்துவிட்சடு விஜய் இந்தப் படத்தை ஆரம்பிக்கக் கூடும் என்று தெரிகிறது.

ராஜேஷின் ஆஸ்தான காமெடியன் சந்தானமும் படத்தில் உண்டு!
 

கேப்டன் டிவியில் மக்கள் பிரச்சனையைத் தீர்க்க வரும் குட்டி பத்மினி

Kutti Padmini Manathodu Pesungal
இப்பொழுதெல்லாம் வீட்டுப் பிரச்சனையை வீதிக்கு கொண்டு வருவதை இந்த ஊடகங்கள் தெளிவாக செய்கின்றன. அந்த புண்ணியத்தை விஜய், ஜீ தமிழ், வரிசையில் கேப்டன் டிவியும் செய்து கொண்டிருக்கிறது.

நடிகை லட்சுமி, நிர்மலா பெரியசாமி வரிசையில் குட்டி பத்மினியும் பொதுமக்களின் சொந்தக் கதை, சோகக் கதைகளை லைவ் ஆக கேட்டு அதற்கு தீர்வு சொல்ல முயற்சி செய்கிறார்.

சின்னத்திரையில் நெடுந்தொடர்கள் மூலம் கலைசேவை புரிந்த குட்டி பத்மினி மனதோடு பேசுங்கள் என்ற நிகழ்ச்சியின் மூலம் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

ஞாயிறுதோறும் இரவு ஒன்பது மணிக்கு ‘மனதோடு பேசுங்கள்’ ஒளிபரப்பாகிறது. இதில் கிரியேட்டிவ் ஹெட் மற்றும் நிகழ்ச்சி நடத்துனர் என்ற இரட்டை சுமை குட்டி பத்மினிக்கு. இந்த நிகழ்ச்சி எந்த அளவிற்கு ரசிகர்களிடம் சென்றடைகிறது என்பது போகப் போகத் தான் தெரியும்.
 

ஓகே ஓகே, கலகலப்பு.... பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் காமெடி படங்கள்!

Comedy Movies Rock Tamil Box Office    | ஓகே ஓகே  
தமிழில் ஒரு படம் வென்றால், அந்தப் படப் பாணியை கொஞ்ச நாளைக்கு பின்பற்றுவது வழக்கம்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் இன்னும் கொஞ்ச காலத்துக்கு எங்கு திரும்பினாலும் காமெடி படங்களாகவே இருக்கும் போலிருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் நடித்து சமீபத்தில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. தியேட்டருக்கு வந்து அதிகம்பேர் பார்த்த படம் என்ற வகையில், சூர்யாவின் ஏழாம் அறிவுக்கு அருகில் வந்துவிட்டது (முதலிடம் எந்திரன்தான்!).

6 வாரங்களாகியும் திருப்தியான வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது ஓகேஓகே.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான கலகலப்பு - மசாலா கபேயும் சூப்பர் ஹிட் படமாகியுள்ளது பாக்ஸ் ஆபீஸில். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் இந்தப் படம் கிட்டத்தட்ட அனைத்து ஏரியாக்களிலுமே ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இன்னொன்று மற்ற படங்களைவிட, காமெடி படங்களைத்தான் மக்கள் தியேட்டரில் வந்து அதிகம் பார்க்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

விளைவு, சுந்தர் சி, ராஜேஷ் எம், சற்குணம் ஆகிய இயக்குநர்களை நாடும் தயாரிப்பாளர்கள், 'நல்ல காமெடியா எனக்கு ஒரு படம் பண்ணிக் கொடுங்க பாஸ்' என கேட்க ஆரம்பித்துள்ளார்களாம்.

சினிமா எடுக்கலாமா வேண்டாமா என்ற தயக்கத்தோடு உள்ள ஏவிஎம் போன்ற ஜாம்பவான் நிறுவனங்கள், சின்ன பட்ஜெட்டில் காமெடி படம் முயற்சிக்கலாமா என்ற யோசனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய ட்ரெண்டில், சந்தானம் காட்டில்தான் பேய் மழை. இதற்கு முன் எந்த காமெடியனும் வாங்காத அளவுக்கு பெரிய சம்பளத்துக்கு அவர் தாவிவிட, இன்னொரு சந்தானத்தை உருவாக்கிட்டா போச்சு என, அடுத்த கட்ட காமெடியன்களைப் பிடிக்க ஆரம்பித்துள்ளனர் முன்னணி இயக்குநர்கள்.

இவர்களின் சாய்ஸ் இப்போது பரோட்டா சூரிதான். டைமிங் காமெடி மற்றும் வடிவேலு மாதிரி உடல்மொழி உள்ள நடிகர் என்பதால் இவர் கைவசம் ஏகப்பட்ட படங்கள்.

இன்னொரு பக்கம் புதிய காமெடி நடிகர்களைத் தேட ஆரம்பித்துள்ளனர் பிரபல இயக்குநர்கள்.

எப்படியோ மக்களைச் சிரிக்க வைத்தால் சரி!
 

ஷங்கரின் அடுத்த டார்கெட் 'ஓட்டுக்கு பணம்' - தலைப்பு 'தென்றல்'!

Shankar Take Vote Money This Time
கறுப்புப் பணம், ஊழல், சமூக ஒழுக்கமின்மையை தொடர்ந்து தன் படங்களில் சாடி வரும் இயக்குநர் ஷங்கர் அடுத்து குறி வைத்திருப்பது... பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் மோசமான வாக்காளர்களையும், அவர்களுக்கு பணத்தை அள்ளிவிடும் வேட்பாளர்களையும்!

விக்ரம் - பிசி ஸ்ரீராம் - ஏ ஆர் ரஹ்மான் என மீண்டும் ஒரு மெகா கூட்டணியோடு ஆரம்பிக்கும் தன் அடுத்த படத்தின் கதைக் களம் 'ஓட்டுக்குப் பணம்' என்பதுதான்.

இந்தப் பின்னணியில் ஆக்ஷன் - காதல் - காமெடி என்ற கட்டமைப்பில் திரைக்கதையை உருவாக்கி வருகின்றனர் எழுத்தாளர்கள் சுபா.

இந்தப் படத்துக்கு தென்றல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இதே பெயரில் 2003-ல் பார்த்திபன் நடிப்பில் ஒரு படம் வெளியானது நினைவிருக்கலாம்.

பாலிவுட்டிலிருந்து ப்ரியங்கா சோப்ரா மாதிரி ஒருவரை இந்தப் படத்தில் ஹீரோயினாக்க வேண்டும் என முயற்சித்து வருகிறாராம் ஷங்கர். அசினுடனும் பேசியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் என்கிறார்கள். ஆனால் இன்னமும் இறுதியாகவில்லையாம்.

யாராக இருந்தாலும் கேள்வி கேட்காமல் எக்கச்சக்க பணம் செலவழிக்கத் தயாராக இருக்க வேண்டும்!
 

சினேகா - பிரசன்னாவை வாழ்த்திய கருணாநிதி

Karunanidhi Blesses Sneha Prasanna
புதுமணத் தம்பதிகள் சினேகாவையும், பிரசன்னாவையும் நேரில் வந்து வாழ்த்தினார் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி.

தமிழ் திரையுலகில் கடந்த ஒரு வாரமும் சினேகா - பிரசன்னா திருமண விசேஷம்தான். நலங்கு, நிச்சயதார்த்தம், வரவேற்பு, திருமணம், நடிகர்கள் - முக்கிய பிரமுகர்களுக்காக ஸ்பெஷல் வரவேற்பு - விருந்து என தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள்.

இந்த சிறப்பு வரவேற்பு மற்றும் விருந்து சென்னை கிண்டியில் உள்ள புதிய நட்சத்திர ஹோட்டலில் சனிக்கிழமை இரவு நடந்தது.

முன்பு நடந்த வரவேற்பு மற்றும் திருமணத்துக்கு வராத நட்சத்திரங்கள், முக்கிய பிரமுகர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்து புதுமணத் தம்பதிகளை வாழ்த்தினர்.

எப்போதும்போல வாழ்த்துவதில் முதலில் நின்றது இந்த முறையும் நடிகர் சிவகுமார் குடும்பம்தான். சிவகுமார் தன் மனைவியோடு வந்திருந்தார்.

நடிகர் சூர்யா தன் மனைவி ஜோதிகாவுடன் வந்து வாழ்த்தினார். நடிகர் ஜெயம் ரவி, பிரபு, விவேக், சின்னிஜெயந்த், இயக்குநர்கள் கே பாலச்சந்தர், லிங்குசாமி, தரணி, வசந்த், ஹரி, சேரன் உள்பட ஏராளமானோர் வந்திருந்து வாழ்த்தினர்.

தயாரிப்பாளரும் எம்ஜிஆர் கழகத் தலைவருமான ஆர்எம் வீரப்பன் நேரில் வந்து வாழ்த்தினார்.

கருணாநிதி வாழ்த்து

இந்த நிகழ்ச்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்தது திமுக தலைவர் கருணாநிதி வருகை. மனைவி ராஜாத்தி அம்மாள் மற்றும் மகள் கனிமொழியுடன் வந்த கருணாநிதி, மணமக்களை வாழ்த்தினார். சினேகா - பிரசன்னாவின் திருமணப் படம் ஒன்றில் கையெழுத்தும் போட்டுக் கொடுத்தார் கருணாநிதி.