நள்ளிரவு ரெய்டில் பெரும்புள்ளியின் மகனுடன் சிக்கிய மூனு!

சென்னை: அண்மையில் சென்னையில் நள்ளிரவில் போலீசார் நடத்திய ரெய்டில் மூனு, ஆண் நண்பருடன் சிக்கியுள்ளார்.

மூனு நடிகையின் பெயர் ஒரு குறிப்பிட்ட தெலுங்கு நடிகருடன் அடிக்கடி அடிப்படுவது வழக்கம். அதே சமயம் நடிகை இரவு நேர பார்ட்டிகளுக்கு செல்வது, கடற்கரையோரம் இரவில் ஆட்டம் போடுவது, மது அருந்தி போலீசில் சிக்குவது புதிது அல்ல.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திருவான்மியூரில் போலீசார் நள்ளிரவில் ரெய்டு நடத்தியுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்தபோது அதற்குள் மூனும், அவருடைய ஆண் நண்பரும் இருந்துள்ளனர்.

அந்த ஆண் நண்பர் ஒரு பெரும்புள்ளியின் மகன் ஆவார். அதனால் அவர்களுக்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு போலீசார் வாகனத்தை செல்ல அனுமதித்துள்ளார்கள்.

 

'லீடரின்' படத்தை எதிர்க்கும் மாணவர் அமைப்புகளை சமாதானப்படுத்தும் அரசியல்வாதி இயக்குனர்?

சென்னை: லீடர் நடிகரின் ஆயுதம் பெயர் கொண்ட படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாணவர் அமைப்புகளை சமாதானம் செய்யும் வேலையில் அரசியல்வாதியான அந்த இயக்குனர் ஈடுபட்டுள்ளாராம்.

லீடர் நடிகர் நடித்து வரும் குத்தும் ஆயுதத்தின் பெயர் கொண்ட படம் அதன் தயாரிப்பாளரால் பிரச்சனையில் சிக்கியுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இதனால் படம் பிரச்சனையில் சிக்கியுள்ளது.

படத்திற்கு மாணவர் அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அந்த அமைப்புகள் நடிகரின் வீட்டை முற்றுகையிட திட்டமிட்டதால் அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் சில மாணவர் அமைப்புகள் படத்திற்கு ஆதரவு தெரிவித்து லீடர் நடிகரை சந்தித்து பேசியதாகவும் செய்திகள் வெளியாகின.

படம் குத்துபடாமல் ரிலீஸ் ஆகுமா என்ற நிலையில் எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர் அமைப்புகளை சமாதானம் செய்யும் வேலையில் அரசியல்வாதியான அந்த 3 எழுத்து இயக்குனர் மற்றும் ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளார்களாம்.

படத்தில் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளாமல் அதை எதிர்ப்பதா என்று அந்த இயக்குனர் தெரிவித்துள்ளார்.

 

த்ரிஷா, அனுஷ்கா இருந்தும் 'தல 55'ல் ஒரு 'டூயட்' கூட இல்லையாமே!

சென்னை: த்ரிஷா, அனுஷ்கா என்று 2 நாயகிகள் இருந்தும் தல 55 படத்தில் ஒரு டூயட் கூட இல்லை என்று கூறப்படுகிறது.

அஜீத் த்ரிஷா, அனுஷ்கா நடித்து வரும் படம் தல 55. இந்த படத்தில் அஜீத்தின் வில்லனாக அருண் விஜய் நடிக்கிறார். படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

த்ரிஷா, அனுஷ்கா இருந்தும் 'தல 55'ல் ஒரு 'டூயட்' கூட இல்லையாமே!

படத்தில் அஜீத்தை அறிமுகப்படுத்தும் பாடலை மாஸாக இருக்கும்படி படமாக்க விரும்புகிறார்களாம். அப்படி ஒரு மாஸ் பாடலுக்கு ஏற்ற ட்யூனை ஹாரிஸ் ஜெயராஜ்  தயார் செய்கிறாராம்.

மாஸ் பாடல் சரி த்ரிஷா, அனுஷ்கா என்று இரண்டு நாயகிகள் இருக்கிறார்களே அவர்களுடன் அஜீத்துக்கு எத்தனை டூயட் பாடலோ என்று நினைக்கலாம். ஆனால் படத்தில் ஒரு டூயட் பாடல் கூட இல்லை என்று கூறப்படுகிறது.

மாஸ் பாடல் எல்லாம் இருக்கட்டும் படத்திற்கு முதலில் ஒரு தலைப்பை வைங்க பாஸ் என்று கூறுகிறார்கள் அஜீத் ரசிகர்கள்.