ஷங்கர் டென்ஷனானால் என்ன செய்வார்?

What Will Shankar Do While Tensed

சென்னை: இயக்குனர் ஷங்கர் டென்ஷனானால் என்ன செய்வார் என்பது பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

இயக்குனர் ஷங்கர் விக்ரம், ஏமி ஜாக்சனை வைத்து ஐ படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்திற்காக விக்ரம் உடல் எடையை வெகுவாகக் குறைத்துள்ளார். உடல் எடையை படத்துக்கேற்ப கூட்டுவதும், குறைப்பதும் விக்ரமுக்கு ஒன்றும் புதிதன்று. சேது படத்தில் அவர் எந்த அளவுக்கு தனது எடையைக் குறைத்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

இயக்குனர்கள் என்றால் டென்ஷன் இல்லாமல் இருக்காது. டென்ஷன் ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி நடந்து கொள்வார்கள். சிலர் அருகில் உள்ளவர்களை திட்டித் தீர்த்துவிடுவார்கள், சிலர் அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்திருப்பார்கள். ஆனால் ஷங்கர் டென்ஷனானால் உடனே ஒரு காமெடி படத்தைப் பார்க்க சென்றுவிடுவாராம்.

நல்ல டெக்னிக் தான், சிரிப்பை வைத்து கோபத்தை விரட்டுகிறாரே ஷங்கர்.

 

பெண்ணுக்கு லிப் டு லிப் அடித்து பரபரப்பு கிளப்பிய பிரபல நடிகை!

Riya Sen Lip Lock With Girl At Night Party

பார்ட்டியில் சக பெண்ணுக்கு பிரபல நடிகை ரியா சென் லிப் டு லிப் கிஸ் அடித்த போட்டோ வெளியாகியதால் பரபரப்பு கிளம்பியுள்ளது.

நடிகை ரியா சென் தமிழில் தாஜ்மகால் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். பாலிவுட்டில் தாராள கவர்ச்சி காட்டி நடித்தவர்.

அதே நேரம், பலான சமாச்சாரங்களில் கொஞ்சம் ஓவராகவே அடிபட்டவர் ரியா. பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் காதலியாக கொஞ்ச காலம் சுற்றிவந்தார். பின்னர் அஸ்மித் படேல் என்பவருடன் நெருக்கமாக இருந்தார். இருவரும் நெருக்கமாக இருந்த பல எம்எம்எஸ்கள் சமீப காலமாக இணையத்தில் உலா வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் ரியா சென்னும் அவரது நண்பர்களும் இரவு விருந்து ஒன்றில் கலந்து கொண்டனர்.

அப்போது ஆண் நண்பர்கள் பக்கத்திலிருக்க, கவர்ச்சியாக வந்திருந்த இன்னொரு இளம் பெண்ணை கட்டிப்பிடித்து லிப் டு லிப் முத்தமிட்டார் ரியா சென். நீண்ட நேரம் நீடித்த இந்த முத்தக் காட்சியை போட்டோகிராபர்களும் சுட்டுத் தள்ளிவிட்டனர்.

பாலிவுட்டில் இதுதான் இன்றைக்கு 'ஃபயர்' மேட்டர்!

 

இப்போது அமைச்சர் சசி தரூருடன் சந்திப்பு... அடுத்து சோனியாவுடனா? - த்ரிஷா ப்ளான் என்ன?

Actress Trisha Meets Minister Sashi Tharoor

மத்திய அமைச்சர் சசிதரூரைச் சந்தித்துப் பேசினார் நடிகை த்ரிஷா. நகைக் கடை திறப்பு விழா ஒன்றிற்காக திருவனந்தபுரத்துக்கு த்ரிஷா சென்றபோது இந்த சந்திப்பு நடந்தது.

இருவருமே அந்த விழாவுக்கு சிறபர்பு விருந்தினர்கள் என்பதால், சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

இதுகுறித்து திரிஷா கூறும்போது, "அமைச்சர் சசிதரூர் எல்லோரையும் வசீகரிக்ககூடிய தலைவர். நல்ல சிந்தனையாளர். அவரை திருவனந்தபுரத்தில் சந்தித்தது இனிமையாக இருந்தது. எனது நடிப்பை பாராட்டினார்," என்றார்.

த்ரிஷா நடிக்க வந்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஆகின்றன. கிட்டத்தட்டட 10 ஆண்டுகாலம் தொடர்ந்து முதல் நிலை நாயகியாக இருந்து வருகிறார்.

இப்போதும் அவர் கைவசம் தமிழில் மூன்று பெரிய பட்ஜெட் படங்கள் உள்ளன. தெலுங்கிலும் மூன்று படங்களில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் தயாராகும் ரம் என்ற படத்திலும் இவர்தான் நாயகி.

இத்தனை ஆண்டுகள் சினிமாவில் புகழோடு உள்ள த்ரிஷாவுக்கு சமூக நலப் பணிகளில் ஆர்வம் அதிகம். இப்போதுதான் அமைச்சருடன் சந்திப்பு நடந்திருக்கிறது. அடுத்து சோனியாவுடனா? என்றால் புன்னகையோடு நழுவுகிறார்!!

 

தமிழ், தெலுங்கு, இந்தி மூன்றிலுமே டிடிஎச்சில் ரிலீசாகிறது விஸ்வரூபம்!

Vishwaroopam Be Aired Tamil Telugu And Hindi

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலுமே டிடிஎச்சில் வெளியாகிறது கமலின் விஸ்வரூபம்.

வரும் ஜனவரி 10-ம் தேதி இரவு 9.30 மணிக்கு இந்தப் படத்தை இந்தியா முழுவதும் டிடிஎச்சில் பார்க்கலாம்.

தமிழ் மற்றும் தெலுங்கு விஸ்வரூபத்தை ஏர்டெல் டிடிஎச்சின் பணம் கட்டிப் பார்க்கலாம். தமிழுக்கு ரூ 1000 ம், தெலுங்குக்கு ரூ 500 ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கமல் அறிவிப்புப்படி, தியேட்டர்களில் வெளியாவதற்கு (வெளியாகுமா?!) 12 மணி நேரம் முன்னதாக டிடிஎச்சில் தமிழ், தெலுங்கு விஸ்வரூபத்தைக் காணலாம்.

இந்தியில் விஸ்வரூப் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ரூ 500 கட்டணமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது,

இதுகுறித்து கமல் விடுத்துள்ள அறிக்கையில், "ஏர்டெல்லுடன் இணைந்து நாட்டிலேயே முதல் முறையாக புதிய முறையில் விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தொழில்நுட்பமும் பொழுதுபோக்கும் கைகோர்த்தால் மேலும் பெரிய உயரங்களை அடை முடியும் என்பதற்கு உதாரணமைாக விஸ்வரூபம் திகழும். அதிக பார்வையாளர்கள் அவர்கள் வீடுகளிலிருந்தபடியே வசதியாக விஸ்வரூபத்தைப் பார்க்கலாம்," என்று தெரிவித்துள்ளார்.

ஏர்டெல்லுடன் வீடியோகானும் இணைந்து விஸ்வரூபத்தை டிடிஎச்சில் வெளியிடுகிறது. வீடியோகான்தான் அதிக டிடிஎச் சந்தாதாரர்களை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

போராட்டங்களில் கலந்து கொள்ளாவிட்டால் எங்களுக்கு அக்கறையில்லை என்று அர்த்தமா? - ப்ரியங்கா சோப்ரா

Bollywood Also Concern On Delhi Rape Case

டெல்லி: பெண் பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பான போராட்டங்களில் பங்கேற்காததால், பாலிவுட்காரர்களுக்கு பிரச்சினையில் அக்கறையில்லை என்று கூறுவது தவறு, என்றார் நடிகை ப்ரியங்கா சோப்ரா.

டெல்லியில், ஐ.நா.வின் ‘யுனிசெப்' சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரசார நிகழ்ச்சியில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.

அங்கு அவர் அளித்த பேட்டி:

டெல்லியில் மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம், மிகக்கொடிய குற்றம். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். முதல்முறையாக இளைஞர்கள் ஒன்றாக போராட முன்வந்துள்ளனர். அதே சமயத்தில், போராட்டம் அமைதியாக நடக்க வேண்டும்.

பெண்ணுரிமை குறித்து தேசிய அளவில் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதே என விருப்பம். ஆண்களுக்கு பெண்கள் குறித்த அணுகுமுறை மாற வேண்டும். ஆணுக்கு சமமாக பெண்களை மதிக்க வேண்டும்.

குற்றம் சாட்டுவதா?

இதுபோன்ற பிரச்சினைகளில் இந்தி திரையுலகம் உதட்டளவில் மட்டும் குரல் கொடுப்பதாகக் கூறுவது தவறு. திரையுலகினர், இத்தகைய போராட்டங்களில் கலந்து கொள்ளாவிட்டாலும், எங்களுக்கும் இந்த உணர்வு உள்ளது. எங்களுக்கு பணிச்சுமை இருப்பதால், போராட்ட களத்தில் எங்களால் இருக்க இயலாது. அதற்காக எங்களுக்கு அப்பிரச்சினைகளில் அக்கறை இல்லை என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.

நாங்களும் விவாதத்தில் பங்கேற்றுதான் வருகிறோம். ஆனால், பிரபலமாக இருக்கும் ஒரே காரணத்துக்காக, பாலிவுட் திரையுலகம் குறி வைக்கப்படுவது ஏன் என்று எனக்கு புரியவில்லை," என்றார்.

 

இளையராஜாவாக பிரகாஷ்ராஜ்... ரஹ்மானாக எஸ்ஜே சூர்யா?

Sj Surya Isai Based On Ilayaraaja Rahman Clash   

பப்ளிசிட்டியை மனதில் வைத்து பிரபலங்களின் மோதல் அல்லது அவர்கள் தொடர்பான சர்ச்சையை மையப்படுத்தி படமெடுப்பது கோடம்பாக்கத்தில் அடிக்கடி நடப்பது.

இப்போது இயக்குநர் எஸ் ஜே சூர்யா அந்த வேலையைக் கையிலெடுத்துள்ளார். இளையராஜா உச்சத்திலிருந்த போது, அவரிடம் பணியாற்றி வந்த ஏ ஆர் ரஹ்மான் திரையுலகில் தனி இசையமைப்பாளராக புயலாய் நுழைந்தார்.

அன்றிலிருந்து இளையராஜா Vs ரஹ்மான் என்ற சூழல் மீடியாவில் தோன்றிவிட்டது. நிஜத்தில் இந்த இருவரும் ஒன்றாக மேடைகளைப் பகிர்ந்து கொண்ட போதும், ரசிகர்கள் இரு பிரிவாக பிரிந்து நிற்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்த மோதலைத்தான் இசை என்ற பெயரில் படமாக எடுக்கிறாராம் எஸ் ஜே சூர்யா.
ஏ.ஆர். ரஹ்மான் வேடத்தில் எஸ்.ஜே. சூர்யாவும், இளையராஜாவாக பிரகாஷ் ராஜும் நடிக்கின்றனர்.

இந்தப் படம் குறித்தும், கதை குறித்தும் எஸ்ஜே சூர்யா கூறுகையில், "இந்தப் படத்தின் கதை இரண்டு இசையமைப்பாளர்களை பற்றியதுதான்.

ஆனால் அது இளையராஜா, ரஹ்மான் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. காரணம், புது இசையமைப்பாளர் அறிமுகமாகும்போது மூத்த இசையமைப்பாளர் தனக்கு பாதிப்பு நேரும் என கருதுவது இயல்புதான். சினிமாவில் இது பொதுவான பிரச்சினைதான். கே.வி.மகாதேவன் உச்சத்தில் இருந்தபோது எம்.எஸ்.விஸ்வநாதன் வந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் உச்சத்திலிருந்தபோது இளையராஜா அதிரடியாக சாதிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான்.

இது சினிமாவில் தொன்று தொட்டு இருந்துவரும் மாறுதல்கள். இந்த நான்கு இசையமைப்பாளர்களுக்கும் நான் ரசிகன். அதனால் பொதுவான ஒரு ட்ரெண்டை படமாக்குகிறேன். அதில் இளையராஜா - ரஹ்மான் என அர்த்தப்படுத்திப் பார்ப்பது தேவையற்றது," என்றார்.