தனுஷ் அளித்த பரிசை வாழ்க்கையில் மறக்க முடியாது : தமன்னா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'என்னுடைய பிறந்த நாளில் தனுஷ் அளித்த பரிசை வாழ்க்கையில் மறக்க முடியாது' என்று தமன்னா கூறினார். தமன்னா கூறியதாவது: சமீபத்தில் மும்பையில் எனது பிறந்தநாள் விழா கொண்டாடினேன். இதில் இலியானா, ஸ்ருதி ஹாசன், தனுஷ், அக்ஷரா உள்பட நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக இலியானாவும், ஸ்ருதியும் என் உயிர்த் தோழிகள். அடிக்கடி மும்பையில் சந்திப்போம். எங்களுக்குள் ரகசியம் கிடையாது. எல்லா விஷயங்களையும் மனம்விட்டு பேசுவோம். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷ் எனக்காக 'ஒய் திஸ் கொலை வெறிடி' பாடலை பாடினார். இதை என் பிறந்த நாளுக்கு அவர் அளித்த மறக்க முடியாத பரிசு.


 

பிரதமர் விருந்தில் தனுஷ் ‘ஒய் திஸ் கொலை வெறிடி" பாடலை பாடுகிறார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிரதமர் மன்மோகன் சிங் தரும் விருந்தில் நடிகர் தனுஷ் பங்கேற்கிறார். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கும் '3' படத்தில் நடிக்கிறார் தனுஷ். இப்படத்துக்காக அவர் பாடிய 'ஒய் திஸ் கொலை வெறிடி' பாடல் சர்வதேச அளவில் பிரபலமாகி உள்ளது. மும்பை, கொல்கத்தா என வெவ்வேறு நகரங்களில்  நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அப்பாடலை பாடி வருகிறார் தனுஷ்.
இந்நிலையில் நாளை, புதுடெல்லியில் ஜப்பான் நாட்டு பிரதமர் யாஷிஹிகோ நோடாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் விருந்து அளிக்கிறார். இவ்விருந்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ள தனுஷுக்கு அழைப்பு வந்துள்ளது. அதையேற்று தனுஷ் கலந்து கொள்கிறார். விழாவில் 'ஒய் திஸ் கொலை வெறிடி' பாடலை அவர் பாடுவார் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி தனுஷ் கூறும்போது, ''எந்த மொழி பாடலையும் நான் பாட தயார். கொலை வெறி பாடல் அந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தி தந்திருக்கிறது. கொலை வெறி பாடல் ஹிட்டானதற்கு 3 காரணங்கள் உண்டு. அப்பாடலில் உள்ள ஆங்கில வார்த்தைகள், நகைச்சுவை உணர்வு, எல்லா இளைஞர்களும் பாடுவதற்கு ஏற்றாற்போன்ற எளிமை'' என்றார். கொல்கத்தா சென்றிருந்த தனுஷ் இன்று டெல்லி வருகிறார். அங்கு தேசிய தொலைக்காட்சிக்காக நடக்கும் விழாவில் பங்கேற்கிறார். நாளை பிரதமர் தரும் விருந்தில் கலந்துகொள்கிறார்.


 

தமிழர் விரோத அமைப்பு என நிரூபித்தால் : சுவிஸ் விழாவை ரத்து செய்ய தயார்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
''சுவிட்சர்லாந்தில் விழா நடத்தும் அமைப்பு தமிழர்களுக்கு விரோதமான அமைப்பு என நிரூபித்தால் விழாவை ரத்து செய்ய தயார்'' என்றார் சங்கீதா. புத்தாண்டு தினத்தன்று சுவிட்சர்லாந்தில் தமிழர் அமைப்பு ஒன்று நடத்தும் விழாவில் கலந்துகொள்கின்றனர் நடிகை சங்கீதா அவரது கணவர்-பாடகர் கிரீஷ். இதற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுபற்றி சங்கீதா கூறியதாவது:
எனக்கு நடிப்பதும், கிரிஷுக்கு பாடுவதும்தான் தொழில். இதைவிட்டால் எங்களுக்கு வேறு வேலை தெரியாது. சுவிட்சர்லாந்தில் நடக்கும் புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளோம். ஆனால் அந்த அமைப்புக்கு எதிரான மற்றொரு அமைப்பு எங்களை தடுக்க முயற்சிக்கிறது. போனிலும், இமெயிலும், 'உங்களை அழித்துவிடுவோம்' என்று கொலை மிரட்டல் வருகிறது.

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அமைப்பு தாங்கள் உண்மையான தமிழர் ஆதரவு அமைப்பு என்பதை ஆதாரங்கள் மூலம் நிரூபித்திருக்கிறது. மற்றொரு அமைப்பு அதை மறுத்து எந்த ஆதாரமும் தரவில்லை. இந்நிலையில் உண்மையான அமைப்பு நடத்தும் விழாவில் கலந்துகொள்வதை யாரும் தடுக்க முடியாது. ஒருவேளை விழாவுக்கு ஏற்பாடு செய்த அமைப்பு தமிழர் விரோத அமைப்பு என்பதற்கு யாராவது சரியான ஆதாரம் காட்டினால் அந்த விழாவை புறக்கணிக்க தயார்.


 

விஜய் சொன்ன அஸ்க் லஸ்கா... மதன் கார்க்கி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இலியானாவைப் பார்த்து சிரித்த விஜய், 'அஸ்க் லஸ்கா' என்று பாடியதும் இலியும் சிரித்தார். இந்த ரகளையான பாடல் இடம் பெற்ற படம் ஜெமினி பிலிம் சர்க்யூட்டுக்காக ஷங்கர் இயக்கியிருக்கும் 'நண்பன்'. அதென்ன 'அஸ்க் லஸ்கா?' என்று தேடிப் பார்த்தால், அதற்கு அநேகமாக இந்தியாவுக்குள் அர்த்தம் தேட முடியாது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைந்திருப்பதால் 'ஒமகசீயா' போல பொத்தாம் பொதுவில் எழுதப்பட்ட வார்த்தையும் கிடையாது. இதன் பொருள் சொல்லக்கூடிய ஒரே ஒருவர், பாடலை எழுதியிருக்கும் மதன் கார்க்கி மட்டுமே.

'கோ'வில் இடம்பெற்ற 'என்னமோ, ஏதோ...' பாடலில் அரிதான தமிழ் வார்த்தைகளைக் கொண்டே அசத்திய மதன் கார்க்கி, 'ஏழாம் அறிவி'ல் முதல் முதலாக தமிழ்ப் படத்தில் சீன மொழிப் பாடலை எழுதி சிலிர்க்க வைத்தார். அந்த வரிசையில் இடம்பெறத் தக்க பாடலாகிறது 'அஸ்க் லஸ்கா'.

''இதுல 'அஸ்க்'ங்கிறது துருக்கிய மொழி வார்த்தை. 'லஸ்கா' ங்கிறது ஸ்லோவேக்கிய மொழி வார்த்தை. இரண்டுக்கும் அர்த்தம் ஒன்றேதான். அது, 'காதல்'... இதே போல இந்தப் பாடல்ல பதினாறு உலக மொழிகள்ல காதலைக் குறிக்கிற வார்த்தைகள் இடம் பெற்றிருக்கு..!'' என்று சிரித்த கார்க்கி தொடர்ந்தார்...

''இலியானாகிட்ட தன் காதலை விஜய் சொல்ற பாடலானதால, அதுக்கு வித்தியாசமான கான்செப்ட் யோசிச்சு இப்படி உலக மொழிகள்ல காதலைச் சொல்ல முடிவாச்சு. இதுக்காக 60 மொழிகள்ல இருந்து காதலுக்கான வார்த்தைகளை சேகரிச்சு அதுல ஹாரிஸோட இசைக்குப் பொருந்தி வர்ற ஒலிகளோடயும், எதுகை மோனைக்குப் பொருத்தமா வர்றது போலவும் இப்படி பதினாறு மொழி வார்த்தைகளைப் பயன்படுத்தினேன். உலக மொழிகளோட தொடர்ற பாடல் அப்படியே இந்திய மொழிகளுக்கும் வந்து தமிழ்ப்பாடலா ஒலிக்கிற விதத்துல எழுதினேன். விஜய் ஒருமுறை அப்பாவை சந்திச்சப்ப இந்தப் பாடலைச் சொல்லி, 'கார்க்கி நல்லா எழுதியிருக்கார்'னு பாராட்டி யிருக்கார்..!''

மேற்படி பாடலோடு ஒரு மாணவனின் ஏமாற்ற மனநிலையைக் குறிக்கும், 'எந்தன் கண்முன்னே காணாமல் போனேனே...' என்ற பாடலையும் எழுதியிருக்கும் கார்க்கி, 'எந்திரனை'த் தொடர்ந்து இந்தப்படத்தில் ஷங்கருடன் சேர்ந்து வசனங்களையும் எழுதியிருக்கிறார்.

''ரோபோ தொழில்நுட்பம் 'எந்திரன்' வசனங்களுக்குத் தேவைப்பட்டதைப் போல இன்றைய கல்வி முறையைப் பற்றிய செய்தி சொல்ற இது எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களோட கதையா ஆனதால அப்படி மாணவர்களோடவே பழகி வர்ற பேராசிரியரான எனக்கு இதுல எழுத வாய்ப்புக் கொடுத்தார் ஷங்கர். நான் முழுப்படத்துக்கும் வசனம் எழுத, அவரும் ஒரு லேயர் எழுதி ரெண்டிலும் சிறந்ததை எடுத்துக்கிட்டோம். ஒரிஜினல் 'த்ரீ இடியட்ஸ்' படத்தோட செய்திகளை மாற்றாம இன்னும் சிறந்ததை ஹானஸ்டா சொல்லியிருக்கோம்..!'' என்றார் கல்லூரியில் கல்விக்கும், படங்களில் காதலுக்கும் அர்த்தம் பல சொல்லும் பேராசிரியர் மதன் கார்க்கி.


 

ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் கமல்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆஸ்கர் பிலிம்ஸ்ல மீண்டும் கமல் நடிக்கவிருக்கார். ஏற்கனவே 'தசாவதாரம்'னு பிரமாண்ட படம் தந்துட்டதால, இதை அதைவிட பிரமாண்டமா ப்ளான் பண்ணிக்கிட்டிருக்காங்க. டைரக்டர், தி ஸேம் கே.எஸ்.ரவிகுமாரா இருக்கலாம். ஆனால் யார் இயக்குனர்?... எப்போது ஷூட்டிங் விரைவில் தெரிய வரும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அநேகமாக இது ஆக்ஷன் படமாக அமையலாம் என தெரிகிறது. சதாவதாரம் எடுப்பீங்களா..?


 

இன்டர்நெட்டில் கொலை மிரட்டல் : தமிழர்களுக்கு எதிரான நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டோம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வெளிநாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது என்று கொலை மிரட்டல் விடுப்பதாக, நடிகை சங்கீதாவும், அவரது கணவர் பாடகர் கிரிஷும் பரபரப்பு பேட்டி அளித்தனர். நடிகை சங்கீதாவும், அவரது கணவரும் பாடகருமான கிரிஷும், ஜனவரி 1ம் தேதி சுவிட்சர்லாந்தில் தனியார் அமைப்பு நடத்தும் புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் ஆண்டுதோறும் புத்தாண்டு விழா நடத்தும் இன்னொரு தமிழ் அமைப்பு, சங்கீதா கலந்து கொள்ளும் விழாவின் அமைப்பாளர், இலங்கை அரசின் ஆதரவாளர் என்றும் அவர் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது என்றும், இணைய தளத்தில் செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து சங்கீதாவும், கிரிஷும் இலங்கை அரசின் ஆதரவுடன் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள் என்ற வதந்தி பரவியது. இதுகுறித்து, இருவரும் நேற்று நிருபர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: கடந்த ஆண்டு இதே அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அப்போது எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. இந்த ஆண்டு திடீரென பல புரளிகளை கிளப்பி விடுகிறார்கள். விழா நடத்தும் அமைப்பினர், தாங்கள் இலங்கை அரசின் ஆதரவாளர்கள் இல்லை. தமிழ் உணர்வாளர்கள்தான் என்பதை ஆதாரத்துடன் எங்களுக்கு விளக்கி கூறிய பிறகே, நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதித்தோம். இப்போது, எதிர் அமைப்பினர் தேவையில்லாத வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இதை உண்மை என்று நம்பி பலரும் எங்களை போனிலும், இணைய தளத்திலும் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். இதனால், கடந்த பத்து நாட்களாக, நிம்மதி இழந்து விட்டோம். நாங்கள் கலைஞர்கள். எங்களுக்கு அரசியல் தெரியாது. இருந்தாலும் தமிழர்களுக்கு எதிரான எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டோம். இதுதொடர்பாக நடிகர் சங்கத்துக்கும், போலீசுக்கும் தகவல் சொல்லியிருக்கிறோம்.  இவ்வாறு இருவரும் கூறினர்.


 

ஷங்கரின் அடுத்த படம் ரெடி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆடியோ ரிலீசாகிட்ட 'நண்பன்' ரிலீசுக்கும் ரெடியாகிட, ஷங்கரோட அடுத்த படம் யாருக்குன்ற சஸ்பென்ஸ் இப்ப கிளியர் ஆகிடுச்சு. ஏ.ஜி.எஸ்ஸுக்காக ஒரு படம் பண்ண அட்வான்ஸ் வாங்கியிருக்காராம் 'எஸ்'. இப்போதைக்கு ஹீரோ சஸ்பென்ஸ்..!... நண்பன் ரிலீசுக்குப் பிறகு சிறிது காலம் குடும்பத்துடன் ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர். இதன் பின் கதை விவாதமும், ஹீரோ யார் என்பது முடிவு செய்யப்படும் என தெரிகிறது.


 

போலீஸ் மீது தாக்கு : நடிகர் கலாபவன்மணி மீது வழக்கு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணியின் சொந்த ஊர் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியாகும். அங்குள்ள குடாப்புழா முருகன் கோயிலில் காவடி திருவிழா நடந்தது. இதில் நடிகர் கலாபவன் மணியும் கலந்து கொண்டார். சாலக்குடி- ஆதிரப்பள்ளி சாலையில் காவடி ஊர்வலம் செல்லும்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த  போலீஸ்காரர் உமேஷ் வாகனங்களுக்கு வழிவிடுமாறு கூறியுள்ளார். இதற்கு விழா குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நடிகர் கலாபவன் மணி உமேஷை பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் மீது   போலீஸ்காரரை தாக்கியதாக  வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.


 

2வது இன்னிங்சை தொடங்கிய நயன்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தன்னுடைய கடைசிப் படம் என்ற அறிவிப்போடு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'ஸ்ரீராம ராஜ்ஜியம்' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் தயாராகும் இராமாயணம் சரித்திரப் படத்தில் ராவணன் மனைவி மண்டோதரியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம் நயன். முதலில் ஒப்புக் கொள்ளாத பிரபுதேவாவும், நயனும், ராம் கோபால் வர்மா தொடர்ந்து கேட்டுக் கொண்டதால் கடைசி ஓகே என்று சொல்லிவிட்டார்களாம். ஹீரோவாக அதாவது ராவணனாக நாக அர்ஜூன் நடிக்கிறார்.


 

பரபரப்பா ஆரம்பமாயிடுச்சு ‘இரண்டாம் உலகம்’

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
செல்வராகவனோட 'இரண்டாம் உலகம்' பரபரப்பா ஆரம்பமாயிடுச்சு. இதுக்காக 'வேட்டை' முடிச்ச கையோட ஆர்யாவும், கார்த்தியோட நடிச்சுக்கிட்டிருந்த அனுஷ்காவும் ஹைதராபாத் பறந்துட்டாங்க. முதல் ஷெட்யூல் அங்கேதான் ஆரம்பம்..!


 

ஆஸ்திரேலியாவில் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துல எஞ்சியிருக்க ஒரு பாடலை ஷூட் பண்ண உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா உள்ளிட்ட யூனிட் ஆஸ்திரேலியா போயிருக்கு.