சம்பள பாக்கி கேட்டதால் கேவலமாகப் பேசினார் - தயாரிப்பாளர் மீது நடிகை ரேஷ்மி புகார்!

Reshmi Complaints On Kannada Producer

சம்பள பாக்கியைக் கேட்ட போது, கேவலமாகப் பேசியதாக தயாரிப்பாளர் மீது புகார் கூறியுள்ளார் நடிகை ரேஷ்மி.

தமிழில் தேனீர் விடுதி படத்தில் நடித்துள்ளார் ரேஷ்மி. கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஸ்வராஞ்சலி என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் சம்பள பாக்கி வைத்துவிட்டாராம். இதைக் கேட்டதற்கு தாறுமாறாக பேசிவிட்டாராம் ஸ்ரீனிவாஸ்.

இதுகுறித்து ரேஷ்மி கூறுகையில், "கன்னடத்தில் ஸ்வராஞ்சலி படத்தில் நடிக்க தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் என்னை அணுகினார். ரூ.4 லட்சம் சம்பளம் தருவதாக கூறினார். படப்பிடிப்பு முடிந்து விட்டது. எனக்கு பேசிய சம்பளத்தை முழுவதும் தரவில்லை. பாக்கி வைத்துவிட்டார்.

அந்த பணத்தை கேட்டபோது என்னை ரொம்ப கேவலமாக பேசிவிட்டார். பணத்தையும் தர மறுக்கிறார். அவர் மீது நடிகர் சங்கத்தில் புகார் செய்துள்ளேன்," என்றார்.

 

காமெடி நடிகர் சங்கர் - மோனிகா நந்தினி திருமணம் - வடிவேலு, விவேக் வாழ்த்து!

Young Comedian Sankar Marriage

வடிவேலு, விவேக் உள்ளிட்ட முன்னணி காமெடியன்களுடன் இணைந்து நகைச்சுவை வேடங்களில் நடித்து வரும் இளம் கலைஞர் சங்கர் - மோனிகா நந்தினி திருமணம் மதுரை திருமங்கலத்தில் நடந்தது.

ஜூன் 10-ம் தேதி நடந்த இந்த திருமணத்துக்கு வடிவேலு, விவேக், கஞ்சா கருப்பு, பெரிய கருப்புத் தேவர், சிங்கமுத்து, போன்டா மணி, இயக்குநர் ராசு மதுரவன் உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்கள் நேரில் வந்து பரிசு கொடுத்து வாழ்த்தினர்.

மதுரையைச் சேர்ந்தவர் சங்கர். கருப்பசாமி குத்தகைதாரர், அம்பாசமுத்திரம் அம்பானி, முரட்டுக்காளை உள்பட 35 படங்களில் நடித்துள்ளார். இப்போது பரிமளா திரையரங்கம், கள்ளச் சிரிப்பழகா, மைக் செட் பாண்டி உள்பட 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

 

26 வருஷமா யானைத் தந்தம் வச்சிருக்கேன்.. பதுக்கி வைக்கவில்லை! - மோகன்லால்

Mohan Lal Denies Illegal Possession Of Tusks

என் வீட்டில் 26 ஆண்டுகளாக யானை தந்தங்களை வைத்திருக்கிறேன். அவற்றை நான் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கவில்லை. அவை எனக்கு சொந்தமானவை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன, என்றார் மோகன்லால்.

மலையாள நடிகர் மோகன்லால் வீட்டிலிருந்து யானை தந்தங்களை வருமான வரி அதிகாரிகள் சமீபத்தில் கைப்பற்றினர். கொச்சி தேவரையில் உள்ள மோகன்லால் வீட்டின் பூஜை அறையில் இருந்து இந்த தந்தங்கள் எடுக்கப்பட்டன.

இதையடுத்து மோகன்லால் மீது சட்டவிரோதமாக யானை தந்தங்களை பதுக்கி வைத்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்துவதற்கு தனி போலீஸ்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அங்குள்ள போலீஸ் கமிஷனர் பிஜுஅலெக்சாண்டர் கூறுகையில், "'நடிகர் மோகன்லால் வீட்டில் கைப்பற்றப்பட்ட யானை தந்தம் உண்மையானதாக இருந்தால் அதை யாரிடம் இருந்து வாங்கினார், கடத்தப்பட்டு அந்த தந்தம் மோகன்லாலுக்கு விற்பனை செய்யப்பட்டதா என்றெல்லாம் அவரிடம் விசாரிக்கப்படும்", என்றார்.

இதுகுறித்து மோகன்லாலிடம் கேட்டபோது, "வருமான வரி அதிகாரிகள் பறிமுதல் செய்த யானை தந்தம் என்னிடம் 26 வருடங்களாக இருக்கிறது. அது எனக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆவணங்களை வைத்து இருக்கிறேன். ஆனால் அவற்றை நான் பதுக்கி வைத்து இருந்ததாக அவதூறு செய்திகள் பரப்புகின்றனர்.

யானை தந்தத்தை சட்டவிரோதமாகவோ நேர்மையற்ற முறையிலோ நான் பதுக்கி வைக்கவில்லை. யானையை கொன்று அந்த தந்தங்களை நான் எடுத்து வந்ததாகவா நினைக்கிறீர்கள்.... உண்மையை கண்டறியாமல் என் மீது அவதூறு செய்திகள் பரப்பலாமா?", என்றார்.

 

ராம் சரண் திருமணத்தில் ஆட காசு வாங்கினேனா...? - சீறும் தமன்னா

I Wasn T Danced Money Ram Charan Marriage Tamanna   

சமீபத்தில் நடந்த ராம்சரண் தேஜா - உபாசனா திருமணத்தில் அனைவரையும் கவர்ந்த ஒரு விஷயம், தமன்னாவின் சூப்பர் ஆட்டம்!

ராம் சரண் - உபாசனாவுக்கு திருமணத்துக்கு முன் நடந்த சங்கீத் நிகழ்ச்சியில்தான் அவர் அசத்தல் ஆட்டம் போட்டார்.

அவருடன் சேர்ந்து ஸ்ரேயாவும் ஆடினார்.

இப்படி நடனமாட அவர்களுக்கு பெரிய தொகை விலையாகத் தரப்பட்டது என ஆந்திரத் திரையுலகில் செய்தி பரவ கொதித்துப் போயுள்ளார் தமன்னா.

"திருமண நிகழ்ச்சிகளில் காசு வாங்கிக் கொண்டு ஆடினேன் என்பது எத்தனை கேவலமான பிரச்சாரம்... நான் அந்த மாதிரி பொண்ணா? எங்க வீட்டில் இப்படி ஒரு விசேஷம் நடந்தா எப்படி சந்தோஷமா ஆடிப் பாடுவோமோ அப்படித்தான் ராம் சரண் திருமணத்திலும் ஆடினோம். இப்படியெல்லாம் அதை கொச்சைப்படுத்துவார்கள் என எதிர்ப்பார்க்கவில்லை," என்றார்.

அடுத்து பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பவன் கல்யாண் ஜோடியாக நடிக்கிறார் தமன்னா. தமிழில்?

"கடவுள் அருள் இருந்தால் அது நடக்கும்?" என்றார்.

என்னடா இது... கடவுள் அருள் தமன்னாவுக்கு கிடைப்பதில் பெரிய சிக்கலா இருக்கும் போலிருக்கே!

 

காதல் ஆரம்பித்த இடத்துக்கே ஹனிமூன் கொண்டாடப் போயிருக்கும் சினேகா - பிரசன்னா ஜோடி!

Sneha Prasanna Fly Off Us

சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் காதல் ஆரம்பமானது, இருவரும் ஜோடி சேர்ந்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்திலிருந்துதான்.

இந்தப் படத்தில் நடிக்க ஒத்திகை பார்க்க, இருவரும் அமெரிக்காவில் ஒரே வீட்டில் தங்கியிருந்தனர். கணவன் - மனைவியாக நடிக்க ஒத்திகை பார்த்தனர்.

அப்போதுதான் இருவருக்கும் காதல் பூத்தது. இரண்டு ஆண்டுகளுக்குமேல் காதலித்து, கடந்த மாதம் தம்பதிகளாகினர்.

திருமணமாகிவிட்டாலும் அவர்களால் ஹனிமூனை உடனடியாகக் கொண்டாட முடியவில்லை.

தான் நடிக்க வேண்டிய பட வேலைகளில் பிஸியாகிவிட்டார் சினேகா. ஒருவழியாக இரவு பகல் பார்க்காமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு, இப்போதுதான் இல்லற வேலைகளை ஆரம்பித்துள்ளனர் புதுமணத் தம்பதிகள்.

தேனிலவுக்காக எங்கே போகலாம் என்ற குழப்பமே இருவருக்கும் இல்லையாம். காரணம், தங்கள் காதல் ஆரம்பித்த அமெரிக்காவுக்கே செல்ல முடிவெடுத்திருந்தார்களாம்.

தங்கள் முடிவை இரு தினங்களுக்கு முன் அமைதியாக செயல்படுத்தினர் சினேகாவும் பிரசன்னாவும்.

இருவரும் நேற்று முன்தினம் ஹனிமூனுக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றனர்!

 

தமிழ் - கன்னடத்தில் 'சந்திரா'... ஸ்ரேயாவுக்கு ஜோடியாக கணேஷ் வெங்கட்ராம்!

Shriya Ganesh Venkatram Chandra

ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார் ஸ்ரேயா.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரேயா. தமிழில் இவர் கடைசியாக ஜீவா உடன் 'ரௌத்திரம்' படத்தில் நடித்திருந்தார்.

சீயான் விக்ரமின் 'ராஜபாட்டை' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்தார். அதன் பிறகு தமிழில் இவருக்குப் படங்கள் இல்லை. மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

இப்போது மீண்டும் தமிழில் களமிறங்குகிறார் ஸ்ரேயா. அந்தப் படம் சந்திரா. கன்னடத்திலும் ஒரே நேரத்தில் இந்தப் படம் தயாராகிறது.

இப்படத்தில் ஸ்ரேயாவிற்கு ஜோடியாக கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கிறார். இவர் 'அபியும் நானும்' படத்தில் திரிஷாவின் காதலனாக நடித்தவர். கமலின் 'உன்னைப் போல் ஒருவன்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர். 'பனித்துளி' படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தின் மூலம் இவர் மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார். கன்னட நடிகர் பிரேம் இப்படத்தின் மற்றொரு நாயகனாக நடிக்கிறார். ஒரு அரசபரம்பரையின் கடைசி இளவரசியாக ஸ்ரேயா இப்படத்தில் நடிக்கிறார்.

 

ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு ஆலேசானை தரும் கலைஞர் செய்திகள்

A One Stop Solution The Woes Aspiring Ias Students

ஐ.ஏ.எஸ் ஆவது என்பது இன்றைக்கு பெரும்பாலோனோரின் கனவாக, லட்சியமாக இருக்கிறது. இந்த லட்சிய வழியை அடைவதற்கான பாதை தெரியாமல் இருப்பவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்காக `கலைஞர் செய்திகள்' தொலைக்காட்சியில், நாள்தோறும் மாலை 4.30 மணிக்கு "ஐ.ஏ.எஸ். ஆவது எப்படி?'' என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

கணேஷ் ஐஏஎஸ் அகாடமியின் தலைவர் கணேச சுப்பிரமணியன் இந்த நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்று ஐ.ஏ.எஸ். ஆவதற்கான வழிமுறைகள் குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார். நேயர்களின் சந்தேகங்களுக்கும் இந்த நிகழ்ச்சியில் அவர் பதில் அளிக்கிறார்.

யு.பி.எஸ்.சி., தேர்வு முறைகள், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் விதம், தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பாடங்கள், தயார்படுத்திக் கொள்ள வேண்டிய முறைகள், வெற்றிக்கான அடிப்படைகள் போன்றவை குறித்த தகவல்களை இந்நிகழ்ச்சியில் கணேச சுப்பிரமணியன் வழங்குகிறார்.

தற்போது தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 10 ஆயிரம் பேர் ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக தங்களைத் தயார்படுத்திக் கொண்டு வருகிறார்கள். ஆனால் தகுதி, திறமை வாய்ந்த, லட்சக்கணக்கானோர் சரியான வழி தெரியாமல் மத்திய அரசுத் தேர்வாணையம் நடத்தும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதில்லை. எனவே, இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதாக கணேஷ் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சி சனி, ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

 

ரஜினியும் நானும் நடித்தால் அந்தப் பட வியாபாரம் எப்படி இருக்கும் தெரியுமா? - கமல் பேட்டி

If Rajini Me Coming Together A Film Kamal

ரஜினியும் நானும் இணைந்து நடித்தால், அந்தப் படத்தின் வியாபாரத்துக்கு வானமே எல்லையாக இருக்கும் என்று கூறியுள்ளார் கமல் ஹாஸன்.

கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் படம் விரைவில் வெளிவர உள்ளது. படத்தின் வெள்ளோட்டத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

அந்த மகிழ்ச்சியில் கமல் அளித்துள்ள பேட்டி:

"நான் ஒவ்வொரு படத்தில் பணியாற்றும் போதும் அதை கடைசி படமாகத்தான் பார்ப்பேன். அடுத்த படத்தை செய்வோம் என்று யாருக்கு தெரியும். சினிமாவில் எதுவும் நடக்கலாம். ஆனால் ரசிகர்களுக்கு ஒவ்வொரு படமும் கடைசி படமாக இல்லை. நடிகர்களுக்கு மட்டுமே கடைசி படம் என்ற நிலை உள்ளது.

நான் ஒவ்வொரு படத்தையும் நல்ல படமாக கொண்டு வரவேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காகவே உழைக்கிறேன். 200 கோடி பட்ஜெட்டில் படம் எடுப்பவர்களுக்கு கூட அதே அளவு பிரச்சினைகள் சுற்றி இருக்கின்றன.

ஐம்பது வயதை தாண்டியும் நான் அழகாக இருப்பதாக கூறுகின்றனர். அதற்காக என் தந்தைக்குதான் நன்றி சொல்ல வேண்டும். அழகாக இருப்பதற்கு நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளவில்லை. அப்படி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டால் என் தோற்றத்திற்காக அதையும் செய்யத் தயங்க மாட்டேன்!

விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியை படமாக்கப் போவதாக செய்திகள் பரவி உள்ளன. அபபடியொரு சிந்தனை பரிசீலனையில் உள்ளது உண்மைதான்.

நான் படங்களை குறைத்து கொண்டதற்கு நல்ல தயாரிப்பாளர்கள் இல்லாததே காரணம். பணமும் மரியாதையும் ஒருவரை தகுதியான தயாரிப்பாளராக ஆக்கி விடாது. தயாரிப்பு என்பது கூட ஒரு டெக்னிக்தான். நடிப்பை போல படங்களை தயாரிக்கவும் திறமை வேண்டும்.

200 படங்களில் நான் நடித்து இருக்கிறேன் என்றால் அதில் 100 தயாரிப்பாளர்கள்தான் சிறந்தவர்கள். சில தயாரிப்பாளர்கள் படத்தையே கெடுத்து உள்ளனர். மோசமான தயாரிப்பாளர்களைச் சந்திக்கும்போது நல்ல தயாரிப்பாளர்களையும் பார்க்கிறேன்.

ரஜினியும் நானும்...

ரஜினியும், நானும் இணைந்து நடிப்பது பற்றி கேட்கிறார்கள். நாங்கள் சேர்ந்து நடித்தால் வியாபாரத்தில் அந்த படத்துக்கு வானமே எல்லையாக இருக்கும். ஆனால் எங்கள் இருவருக்கும் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். சம்பளம் போக படத்தை எடுப்பவர்களுக்கு என்ன மிச்சம் இருக்கும்?!"

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

கருணாநிதியை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ரஜினி!

Rajini Calls On Karunanidhi

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று (16.06.2012) காலை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தயாளு அம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.

இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, "திமுக தலைவர் கலைஞரின் பிறந்த நாளின்போது நான் பெங்களூரில் இருந்தேன். நேற்றுதான் சென்னை வந்தேன். இன்று காலை அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல நேரில் சந்தித்தேன். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு," என்றார்.

கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி பெங்களூரிலிருந்து தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்திருந்தார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

 

வேணாம் வேணாம்... எனக்கு கோயில் வேணாம்! - ஹன்ஸிகா

Hansika Denies Permission Build Her Temple   

குஷ்புவுக்கும் நமீதாவுக்கும் கோயில் கட்டி பாப்புலர் ஆன தமிழ் ரசிகமகாஜனங்கள், சின்ன குஷ்பு என்ற அடைமொழியுடன் வலம் வரும் ஹன்ஸிகாவுக்கும் கோயில் கட்டத் தயாராக நிற்கிறார்கள்.

இடமெல்லாம் பார்த்து, செங்கல், கருங்கல்லுக்குக் கூட ஆர்டர் கொடுத்துவிட்டதாக செய்தி வந்த நிலையில், 'வேணாம்... வேணாம் எனக்கு கோயில் கட்ட வேணாம்' என தெரிவித்துள்ளார் அம்மணி!

ஹன்சிகாவுக்கு மதுரையில் உள்ள உசிலம்பட்டியில் ரசிகர்கள் கோவில் கட்டுகிறார்கள். இதற்காக அங்கு இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. கட்டுமானத்துக்கான செங்கல், ஜல்லி வாங்குவதற்காக அப்பகுதியில் ரசிகர்கள் நன்கொடை வசூலித்து வருகிறார்கள்.

செப்டம்பரில் கோவில் கட்டிட வேலைகள் துவங்கும் என்றும் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையில் ஹன்சிகா கோவில் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கோவிலுக்குள் ஹன்சிகாவின் உருவச்சிலை மற்றும் அவரது படங்களை வைக்கின்றனர். பூஜை செய்ய பூசாரியும் நியமிக்கப்பட உள்ளார்.

இது குறித்து ஹன்சிகாவிடம் கேட்டபோது, "சில மாதங்களுக்கு முன் மதுரை ரசிகர்கள் என்னை அணுகி கோவில் கட்ட அனுமதி கேட்டனர். எனக்கு கோவில் கட்டப்போவதாக அவர்கள் சொன்னதும் என் மீது வைத்துள்ள அன்பை புரிந்து கொண்டேன்.

ஆனால் மனிதனை கடவுளுக்கு சமமாக ஒப்பிடுவது தவறானது. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனக்கு ரசிகர்கள் கோவில் கட்டக்கூடாது. அதற்கு அனுமதி கொடுக்க மாட்டேன்," என்றார்.

 

ஆர்யாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த நயன்தாரா!

Nayan Be Paired With Arya   

'நயனும் ஆர்யாவும் நிஜ வாழ்க்கையில் ரொம்ப ரொம்ப நெருக்கம்' என்று கோடம்பாக்கமே கண்சிமிட்டிக் கொண்டிருக்கையில், அதை இன்னும் உறுதிப்படுத்தும் வகையில், இருவரும் திரையில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லீ இயக்கும் புதிய படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர்.

தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக மவுசு குறையாமல் இருப்பவர் நயன்தாராதான்.

இப்போதும் அவர்தான் நம்பர் ஒன். கையில் மெகா பட்ஜெட் படங்கள். தெலுங்கில், ராணா, கோபிசந்த் உள்ளிட்டோருடன் நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் ஏற்கெனவே அஜீத்துடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழில் அவர் நடிக்கும் இரண்டாவது படம்தான் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இதனைத் தயாரிக்கிறது. இவை தவிர, மேலும் இரு தமிழ்ப் படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறதாம்.

நயன்தாராவும் ஆர்யாவும் ஏற்கெனவே பாஸ் என்கிற பாஸ்கரனில் நடித்தனர். அந்தப் படம் பட்டையைக் கிளப்பியது வசூலில். நிஜ வாழ்க்கையில் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

இப்போது நட்பு என்ற நிலையைத் தாண்டி, அடுத்த கட்டத்துக்குப் போய்விட்டதாக மீடியா கிசுகிசுக்கிறது. இந்தப் புதுப்பட அறிவிப்பு அந்த கிசுகிசு நெருப்புக்கு பெட்ரோல் ஊற்றியுள்ளது!!

 

அதிகம் சம்பாதிக்கும் நெடுந்தொடர் அப்பாக்கள்?

Tv Dads Real Life Salaries Nearly 200 Dollar

தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் அப்பா நடிகர்கள் அதிக அளவில் சம்பாதிப்பதாக சேலரி டாட் காம் என்ற இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது. தொலைக்காட்சிகளில் நடித்து அவர்கள் பிரபலமடைந்துள்ளதால் ரியல் எஸ்டேட் அதிபராகவும், மருத்துவராகவும், வக்கீலாகவும் தங்களில் சொந்த தொழில்களில் அதிக அளவில் பணம் சம்பாதிக்க முடிவதாகவும் அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.

அப்பா கதாபாத்திரம் என்றாலே சினிமாக்களில் சாதாரணமாக ஒரு சீனுக்கு வந்து போவார்கள். ஆனால் நெடுந்தொடர்களில் வரும் அப்பாக்கள் அப்படி இல்லை. இரண்டு திருமணம் செய்திருப்பார்கள். ஊருக்கு நாட்டாமையாக இருப்பார்கள். இல்லை என்றால் நடுத்தர குடும்பத்தில் மகளை படிக்க வைக்க கஷ்டப்படும் அப்பாவியாக இருப்பார்கள். இதுதான் சீரியல் அப்பாக்களின் நிலை.

அப்பா என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று கூறாமல் எப்படி இருக்கக் கூடாது என்பதற்காக இதுபோன்ற கதாபாத்திரங்களை நெடுந்தொடர்களில் உருவாக்கின்றனவோ என்னவே?

அதுவும் இரண்டு மனைவிகளை திருமணம் செய்து கொண்டுள்ள அப்பாக்கள் படும் பாடு இருக்க்கிறதே அப்பப்பா ! அதுவும் முதல் மனைவிக்கு பிறந்த பிள்ளைகளிடமும், இரண்டாம் மனைவிக்குப் பிறந்த பிள்ளைகளிடமும் சிக்கிக்கொண்டு அவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. தங்கம் தொடரில் விஜயகுமார் பரவாயில்லை அந்த கதாபாத்திரம் அப்படியே அவரின் நிஜ கதையை பிரதிபலிப்பது போல இருப்பதால் எப்படியோ சமாளித்து வருகிறார்.

ஆனால் முந்தானை முடிச்சு, தென்றல் தொடர்களில் வரும் அப்பாக்கள்தான் பாவம். அவர்களின் அந்தோ பரிதாப நிலை அப்படியே அவர்களின் முகத்தில் எதிரொலிக்கிறது. இதை எல்லாம் விட இரண்டு மனைவிகளிடமும் சிக்கிக்கொண்டு தவிக்கும் அப்பாக்கள்தான் அந்தோ பரிதாபம். வளர்ந்த குழந்தைகளை வீட்டிற்குள் வைத்துக்கொண்டு இரண்டு மனைவிகளையும் ஒரே வீட்டிற்குள் வைத்துக்கொண்டு குடும்பம் நடத்துகிறாராம் ஒருவர். அதை நாமும் வேலை மெனக்கெட்டு உட்கார்ந்து பார்க்க வேண்டுமாம்.

அப்பா என்றாலே அம்மாவின் அடிமை என்று சினிமாக்களின் சித்தரித்தனர். கடைசி ஒரு சீனில் அப்பாவிற்கு வீரம் வந்து அம்மாவை ஓங்கி அறைவார். அதற்கு ரசிகர்கள் கை தட்டுவார்கள். ஆனால் சீரியலில் அப்படி எல்லாம் எதிர்பார்க்க முடியாது இரண்டு மனைவிகளிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் அப்பாக்கள்தான் அதிகம் உள்ளனர்.

ஒரு சில அப்பாக்கள்தான் பரம்பரை நடிகர்கள் பிற அப்பாக்கள் நடிகர்களாக மட்டுமல்லாது வக்கீலாகவோ, டாக்டராகவோ, ரியல் எஸ்டேட் அதிபராகவோ இருப்பார்கள். தொலைக்காட்சித் தொடர்களில் கிடைக்கும் புகழைவைத்து ரியல் எஸ்டேட் விளம்பரங்கள், மட்டுமல்லாது தங்களில் சொந்த துறையிலும் அதிகம் சம்பாதிக்கின்றனர் என்று சேலரி டாட் காம் இணையதளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தந்தையர்களை போற்றும் இந்த தந்தையர் தினத்திலாவது தந்தையரை மதிக்கும் வகையிலான தொடர்களை எடுக்கா விட்டாலும் தந்தையர்களை அவமானப்படுத்தும் விதமான தொடர்களை எடுக்க வேண்டாத் தந்தை நடிகர்கள் கதறுவது இயக்குநர்களின் காதில் கேட்குமா?

 

அலட்டல் இல்லாத ஆட்டோ ராணி கல்யாணி!

Beautiful Character Actress Becomes Auto Driver

"தென்​றல்' தொட​ரில் ஆட்டோ டிரைவர் கல்யாணியாக வந்து ரசி​கர்​கள் மன​தில் இடம் பிடித்தவர் சுசை​னி. மைனாவில் வில்லியாக நடித்து அதிரவைத்தார். சீரியலிலும் சினிமாவிலும் நடிக்கும் ஆசை எப்படி வந்தது என்பது பற்றி அவரிடமே கேட்டு தெரிந்து கொள்வோம்.

நான் வளர்ந்​தது,​​ படித்​த​தெல்​லாம் பெங்​க​ளு​ரில்.​ நான் நடிப்​ப​தற்கு எங்கள் வீட்டினரை சம்​ம​திக்க வைத்​தது ரொம்ப பெரிய கதை.​ ​டிப்ளமோ சாப்ட்​வேர் படிச்​சேன்.​ இறுதி ஆண்டு படிக்​கும் போது​தான் சென்​னைக்கு வந்​தேன்.​ ​நான் சென்​னைக்கு படிக்க வந்த போது ஜெயா​டி​வி​யில் இருந்து எங்க கல்​லூ​ரி​யில் நிகழ்ச்சி தொகுப்​பா​ளினி தேர்வு செய்​தார்​கள்.​ அதில் தேர்வு ஆனேன்.​

அம்மா, ​​ அண்​ணன்,​​ நான் மட்​டும்​தான்.​ அப்பா இறந்​து​விட்​டார்.​ அம்மா கல்​லூரி பேரா​சி​ரி​யை​யாக இருந்​த​வங்க.​ இப்போ வேலையை விட்​டு​விட்டு வீட்​டில்​தான் இருக்​கி​றார்​.​ அண்​ணன் ஸ்கி​ரிப்ட் ரைட்​டர்.​

படிப்​பில் சாதிக்க வேண்​டும் என்று நினைக்​கிற குடும்​பம்.​ அத​னால அம்மா கண்​டிப்​பாக டி.வியில தோன்ற ஒத்​துக்க மாட்​டாங்க,​​ என்ன செய்​வது என்று யோசித்​தேன்.​ ஆனால் என்​னோட தோழி​கள் எல்​லாம் கிடைத்த வாய்ப்பை நழு​வ​விட வேண்​டாம் என்று சொன்​னார்​கள்.​ அதனால​ அம்மா​வுக்​குத் தெரி​யாம ஜெயாடி.வி.யில காலைல வரும் "தக​வல்.காம்' என்ற நிகழ்ச்​சி​யைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தேன்.​

ஒரு​நாள் அம்மா டி.வியில் என்​னைப் பார்த்​து​விட்டு ரொம்ப சத்​தம் போட்​டார்​கள்.​ பிறகு அம்​மா​வி​டம் பேசி ஒரு வழியா சம்​ம​தம் வாங்​கி​விட்​டேன்.​ அம்மா எப்​ப​வுமே ரொம்ப பிராக்​டிக்​கலா யோசிப்​ப​வங்க.​

எப்​ப​வுமே ரொம்ப என்​கரேஜ் செய்​வாங்க.​ அத​னால என்​னோட ஆசையைப் புரிந்து கொண்டு சரின்னு சொல்​லிட்​டாங்க.​ ஆனா தோற்றுப் போய் மட்​டும் வரக் கூடாது என்று.

பிரம்மா சார் முல​மா​கத்​தான் முதன் முத​லில் தொலைக்​காட்​சிக்கு வந்​தேன்.​ விஜய் டிவி​யில் வி.ஜே.வாக நிகழ்ச்​சி​கள் தொகுத்து வழங்கி கொண்​டி​ருந்​தேன்.​ அப்போ "தென்​றல்' தொட​ரில் என் கேரக்​ட​ருக்கு நடிக்க ஒப்​பந்​த​மாகி இருந்​த​வங்க வரா​த​தால்,​​ நான் அந்த கேரக்​ட​ருக்கு பொருத்தமாக இருப்​ப​தாக என்​னைக் கேட்​டாங்க.​ ​

முத​லில் தயக்​க​மா​கத்​தான் இருந்​தது.​ என்​னால அந்த கேரக்​டர் செய்ய முடி​யுமா என்று நினைத்​தேன்.​ இதற்காக நிஜ​மா​கவே ஆட்டோ ஓட்ட கற்​றுக் கொண்​டேன்.​ ஆட்டோ ஓட்டு​வது அவ்​வ​ளவு ஈசி​யான விஷ​ய​மல்ல.​ ​அவங்க பாடி லாங்​வேஜ்,​​ அந்​தக் குரல் எல்​லாம் ரொம்ப கஷ்டப்​பட்டு ஹோம் ஒர்க் செய்ய வேண்​டி​யி​ருந்​தது.​ இருந்தாலும் ஆட்டோ ஓட்​டு​வது ரொம்ப பிடிச்​சி​ருக்கு.​ தொடர் இல்​லைன்னா கூட கைவ​சம் ஒரு தொழில் இருக்​குங்க ​(சிரிக்​கி​றார்)​.​

மைனா திரைப்படத்தில் வில்​லத்​த​ன​மான கேரக்​டர்​கூட யோசிக்​கா​மல் செய்​து​விட்​டேன்.​ ஆனால் ஆட்​டோ​கா​ரி​யாக மேக்​கப்பே இல்​லாம நடிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.​​ வெளி​யில் எங்​கா​வது சென்​றால் ரசி​கர் தெரிந்து கொண்டு ஆட்டோ வருமா என்று கேட்​கி​றார்​கள்.​ அதுவே எனக்கு கிடைத்த வெற்​றி​யாக நினைக்​கி​றேன்.​ ​

தென்றலின் வெற்றியைத் தொடர்ந்து வேட்டை, தியாகம், மூன்று முகம், உயிரின் நிறம் ஊதா, போன்ற பல்வேறு தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

பெரிய திரையில் "மைனா", படத்தில் வில்லி கதாபாத்திரம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அதுபோன்ற பேசப்படும் கதாபாத்திரங்கள் கிடைத்தால் சினிமாவிலும் நடிப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறி சிரிக்கிறார் ஆட்டோ ராணி கல்யாணி.

 

பாலிவுட் நடிகைகளைவிட தென்னிந்திய நடிகைகளுக்கு மது-சிகரெட் பழக்கம் அதிகம்' - சனாக்கான்

Sana Khan Takes Dig On South Actresses   

"பாலிவுட் நடிகைகளைவிட, தென்னிந்திய நடிகைகளுக்கு மது-சிகரெட் பழக்கம் அதிகமாக இருக்கிறது'' என்கிறார் நடிகை சனா.

'சிலம்பாட்டம்', 'தம்பிக்கு எந்த ஊரு', 'ஆயிரம் விளக்கு', 'பயணம்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சனாக்கான்.

ஒரு நிகழ்ச்சிக்காக சென்னை வந்த அவர் நிருபர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், "நான் மும்பை பெண்ணாக இருந்தாலும், எனக்கு ஒரு பாய் பிரண்ட் கூட கிடையாது. தினமும் 5 வேளை தொழுகை நடத்துகிறேன். வருடத்தில் 30 நாட்கள் விரதம் இருக்கிறேன். எனக்கு சிகரெட் பழக்கம் கிடையாது. குடிபழக்கமும் இல்லை.

பொதுவாகவே இந்தி நடிகைகளிடம்தான் சிகரெட்-மது பழக்கம் அதிகமாக இருக்கிறது என்று கருதுகிறார்கள். இந்தி நடிகைகளைவிட, தென்னிந்திய நடிகைகளுக்கு சிகரெட், மது பழக்கம் அதிகமாக இருக்கிறது. குடித்துவிட்டு தள்ளாடிக்கொண்டே போவதை நான் என் கண்களால் பார்த்திருக்கிறேன். ஆனால் அதெல்லாம் வெளியில் தெரிவதில்லை. மறைத்துவிடுகிறார்கள்.

மும்பைப் பெண், சென்னைப் பெண் என்றெல்லாம் எதுவும் கிடையாது. எல்லாம் நாம் வளரும் விதம், சூழ்நிலைக்கு பலியாகாமல் இருப்பதைப் பொருத்தே அமைகிறது," என்றார்.