மகனை களமிறக்குகிறார் நடிகர் மகேஷ் பாபு!

மகன் கவுதம் கிருஷ்ணாவை நடிகராகக் களமிறக்குகிறார் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு. இவர் தந்தை கிருஷ்ணா சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு திகழ்ந்தவர்.

மகேஷ் பாபு பிறந்து வளர்ந்து படித்ததெல்லாம் சென்னைதான். லயோலா கல்லூரியில்தான் பட்டப்படிப்பு முடித்தார்.

mahesh babu s son gautham krishna act

பாலிவுட் நடிகை நம்ரதா ஷிரோத்கரை மணந்துள்ள மகேஷ் பாபுவுக்கு கவுதம் என்ற மகனும், சிதாரா என்ற மகளும் உள்ளனர்.

இவர்களில் கவுதமை குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகபடுத்துகிறார் மகேஷ்பாபு. கவுதம் கிருஷ்ணாவுக்கு 7 வயது ஆகிறது. சுகுமார் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்க உள்ள புதுபடத்தில் கவுதம் நடிக்கிறார்.

எழுபதுகளில் அப்பா கிருஷ்ணா நடித்த படமொன்றில்தான் மகேஷ் பாபுவும் நடிப்பைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மார்ச்சில் கோச்சடையான் இசை, ஏப்ரலில் படம் ரிலீஸ்

Rajinikanth S Kochadaiyaan Release On April

சென்னை: வரும் ஏப்ரல் மாதத்தில் கோச்சடையான் படம் ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிகிறது.

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள படம் கோச்சடையான். இந்த படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அஷ்வின் இயக்கியுள்ளார். பட ஷூட்டிங் முடிந்தும் இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமலேயே இருக்கிறது.

இந்நிலையில் கோச்சடையானை கோடை விடுமுறை ட்ரீட்டாக வரும் ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரம் போல ரிலீஸ் செய்ய சௌந்தர்யா முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளன.

கோச்சடையான் இசை வெளியீடு வரும் மார்ச் மாதத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் நடக்கும். ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று குணமடைந்த பிறகு ரிலீஸாகும் முதல் படம் கோச்சடையான். அதனால் கோச்சடையான் ரிலீஸை ஒரு திருவிழா போன்று கொண்டாட ரஜினி ரசிகர்கள் முடிவு செய்துள்ளார்களாம்.

 

ராணாவிடம் மன்னிப்பு கேட்ட விக்ரம்... விக்ரமிடம் மன்னிப்புக் கேட்ட ராணா!!

Vikram Raana Express Mutual Apology

ராணா பற்றிய தனது கமெண்டுகளுக்கு விக்ரமும், விக்ரம் பற்றி தான் கூறியவற்றுக்கு ராணாவும் பரஸ்பரம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதால், பிரச்சினை அத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.

டெல்லி நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தெலுங்கு நடிகர் ராணா தன் சொந்த மொழியில் காலூன்றுவதை விட்டுவிட்டு இந்திக்கு வந்துவிட்டார். இதனால் அவர் தெலுங்கில் அவர் ஒரு இடத்தைப் பிடிக்க முடியவில்லை. அவரைப் போல என்னால் தமிழை விட்டு விட்டு இந்திக்கு வரமுடியாது என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ராணா, விக்ரம் தன் வேலையைப் பார்த்தால் போதும். பத்து தோல்விப் படங்களைக் கொடுத்த அவர் என்னைப் பற்றி பேசியிருப்பது தேவையற்றது, என்றார்.

இந்த நிலையில் இன்று இருவரும் பரஸ்பர மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ராணாவைப் பற்றி தான் பேசியது தவறுதான். அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், என விக்ரமும், விக்ரம் பற்றி தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்பதாக ராணாவும் தெரிவித்துள்ளனர்.

 

மலேசியாவில் விஸ்வரூபம் படத்துக்கு தடை நீக்கம்

Malaysia Lifts Ban On Viswaroopam   

கோலாலம்பூர்: விஸ்வரூபம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை இன்று மலேசிய அரசு நீக்குவதாக அறிவித்தது.

இன்றுமுதல் அங்கு விஸ்வரூபம் மீண்டும் அரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 25-ம் தேதி இங்கு கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம் வெளியானது. இந்தப் படம் சில காட்சிகள் திரையிடப்பட்ட நிலையில், இஸ்லாமிய அமைப்புகளின் தீவிர எதிர்ப்பு காரணமாக தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

காரணம், அப்போதுதான் தமிழக அரசு, விஸ்வரூபத்தை இருவாரங்களுக்கு தடை செய்திருந்தது.

பல வழக்குகள், பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தமிழகத்தில் இந்தப் படத்துக்கு தடை நீக்கப்பட்டது. ஆனால் மலேசியாவில் மட்டும் தடை தொடர்ந்தது. தமிழகத்தில் தடை நீக்கப்பட்டதைக் காட்டி, மலேசியாவிலும் நீக்க வேண்டுமென கமல் தரப்பில் கேட்டிருந்தனர். படத்தின் மலேசிய விநியோகஸ்தர்களும் தங்களுக்கு ஏற்படவிருக்கும் நஷ்டத்தைக் காட்டி கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் இன்று படத்தின் மீதான தடையை நீக்குவதாக மலேசியா அறிவித்ததால், அந்நாட்டில் பல அரங்குகளில் படம் திரையிடப்பட்டுள்ளது.

 

என்னது கடலில் மூழ்கினேனா...? - தனுஷ் விளக்கம்

Dhanush Denies News On Boat Accident

படப்பிடிப்பின்போது நான் கடலில் மூழ்கியதாகவும், யாரோ காப்பாற்றியதாவும் வந்த செய்தியில் துளியும் உண்மையில்லை. கடல் என்னை பத்திரமாகவே பார்த்துக் கொண்டது என்று கூறியுள்ளார் நடிகர் தனுஷ்.

தனுஷ் - பார்வதி, அப்புக்குட்டி நடிக்கும் படம் மரியான். இந்தப் படத்தில் மீனவராக நடிக்கிறார். படப்பிடிப்பு குமரி மாவட்ட கடலோர கிராமங்களில் நடித்து வருகிறது.

சில தினங்களுக்கு முன் கடலில் படப்பிடிப்பு நடந்த போது தனுஷும் அப்புக்குட்டியும் கடலுக்குள் மூழ்கிவிட்டதாகவும், படக்குழுவினர் காப்பாற்றியதாகவும் செய்தி வந்தது.

ஆனால் இப்போது அவை அனைத்தும் கற்பனைக் கதை என்று தெளிவாக்கியுள்ளார் தனுஷ்.

தனுஷ் இதுகுறித்து கூறுதையில், "கடலில் படப்பிடிப்பு நடந்தது உண்மைதான். ஆனால் படகு கவிழவில்லை. படப்பிடிப்பு சிறப்பாக நடந்தது. என்னை கடல் பத்திரமாகப் பார்த்துக் கொண்டது.

இப்படி வந்த செய்திக்காக நான் கோபப்படவில்லை. இதெல்லாம் சகஜம் என்பது எனக்கும் தெரியும்," என்றார்.

நல்ல மெச்சூரிட்டிதான்!

 

காராச்சேவுக்கு கண்ணாடி போட்ட மாதிரி இருக்கான்!

Actor Director Manobala S Moment With Kamal

சினிமா கலைஞர்களுக்கு புகழ், பணம் எல்லாமே ஒரே இடத்தில் கிடைக்கிறது. அது தவிர அவர்களை கடவுளாக மக்கள் கொண்டாடுகின்றனர் என்று இயக்குநரும், நடிகருமான மனோபாலா தெரிவித்தார்.

சன் டிவியின் சூரியவணக்கம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் பக்கத்தில் பேசிய மனோபாலா, இயக்குநராக, நடிகராக தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

நடிக்கும் போது மட்டுமல்லாது, எப்பொழுதுமே சிரித்துக் கொண்டேதான் இருப்பேன், மற்றவர்களையும் சிரிக்க வைத்துக் கொண்டேதான் இருப்பேன் என்று கூறிய மனோபாலா, சந்திரமுகி படத்தில் படிக்கட்டில் உருண்டு அடிவாங்கிய கதையையும், துப்பாக்கி படத்தில் கதாநாயகியிடம் அடிவாங்கிய கதையையும் நகைச்சுவையாக கூறினார்.

அரை வயிறுக்குத்தான் சாப்பிடுவேன்

உடலை ஒல்லியாக மெயின்டெயின் செய்வது எப்படி என்று தொகுப்பாளர்கள் கேட்டதற்கு, அரை வயிறுதான் சாப்பிடுவேன் அதனால்தான் பல ஆண்டுகளாக இப்படியே இருக்கிறேன் என்றார்.

மருத்துவமனையில் இருந்து எஸ்கேப்

உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆனபோதும், அங்கிருந்து எஸ்கேப் ஆகி படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக கூறினார். பின்னர் அமைதியாக யாருக்கும் தெரியாமல் போய் பெட்டில் படுத்துக் கொண்டதாகவும் கூறினார் மனோபாலா.

நானுறு பாடங்கள்

40 படங்கள் இயக்குநராக பணிபுரிந்துவிட்டு இப்போது 400 படங்கள் வரை நடித்திருக்கிறேன். இதற்கு காரணம் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் என்ற மனோபாலா, அவர்தான் நட்புக்காக படத்தில் தன்னை ஒரு முழு நேர நடிகராக அறிமுகம் செய்தார் என்றார்.

ஜாக்கிரதையா இருக்கணும்

சினிமா உலகில் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் சறுக்கிவிடும் என்று கூறிய அவர், வடிவேலு இரண்டு ஆண்டுகளாக படமில்லாமல் இருப்பது கவலையளிப்பதாக கூறினார். இப்போது அவர் கதாநாயகனாக நடிக்க வருவது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். அவருக்கு உடனே தொலைபேசியில் வாழ்த்து கூறியதாகவும் தெரிவித்தார் மனோபாலா.

கமலுடனான நட்பு

ஆழ்வார் பேட்டை வீட்டில்தான் நாங்கள் வளர்ந்தோம். எனக்கும் கமலுக்கும் மிகப்பெரிய நட்பு இருந்தது. அது ஒரு சமயத்தில் முறிந்து போனது. 14 வருடமாக நாங்கள் பேசிக் கொள்ளவில்லை. விஸ்வரூபம் பிரச்சினையில் நான் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கமல் பேசியதைக் கேட்டு கலங்கிப் போனேன். இதனால் அவர் என்ன வேண்டுமானாலும் திட்டட்டும் என்று நினைத்து அவரை சந்தித்து ஆறுதல் சொல்லப் போனேன். ஆனால், நானும் அவரும் சந்தித்த போது இருவரும் பேச வார்த்தையின்றி கண்ணீர் விட்டு அழுதோம் என்றார் மனோ பாலா.

பாலாவும், ஷங்கரும்...

இயக்குநர் பாலா, ஷங்கர் படத்தில் நடித்த காட்சிகளைப் பற்றி நகைச்சுவையாக குறிப்பிட்ட மனோ பாலா அவர்களின் நுண்ணியமான இயக்கத்தினை குறிப்பிட்டார். மணிக்கணக்கில் பயணம் செய்து போய் ஒரு காட்சியில் நடித்தாலும் மனதிற்கு மனநிறைவு தரும் என்றார் அவர்.

சந்தானத்தின் நகைச்சுவை

சந்தானத்தின் நகைச்சுவை பற்றிய பேசிய மனோபாலா, அவர் திட்டினாலும் நான் கவலைப் படமாட்டேன். ஏனென்றால் நகைச்சுவைக்காகத்தானே அதெல்லாம் பேசுகின்றனர். காராச்சேவுக்கு கண்ணாடி போட்ட மாதிரி இருக்கான், தீய்ஞ்சு போன டயர் மாதிரி இருக்கான் அப்படி எல்லாம் டயலாக் வைப்பதனால் தனக்கு கைத்தட்டல் அதிகம் கிடைப்பதாக தெரிவித்தார்.

வாலியின் ரசிகன் நான்

40 படங்களின் இயக்குநர், 400 படங்களில் நடித்துள்ள அனுபவம் இருந்தும் எப்படி தலைக்கணம் இல்லாமல் இருக்கீறீர்களே என்று கேட்டனர் தொகுப்பாளர்கள். அதற்கு அவர், ‘அடக்கமாகும் வரை அடக்கமாக இரு' என்ற வாலியின் வரிகள்தான் அதற்குக் காரணம் என்றார்.

 

துப்பாக்கி: நாளை சென்ச்சுரி அடிக்கும் விஜய், முருகதாஸ்

Vijay S Thupakki Complete Century

சென்னை: விஜய் நடித்த துப்பாக்கி படம் ரிலீஸாகி நாளையுடன் 100 நாட்கள் ஆகவிருக்கிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்த படம் துப்பாக்கி. இந்த துப்பாக்கி என்ற தலைப்புக்காகவே இப்படம் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி ஒரு வழியாக நவம்பர் 13ம் தேதி தமிழகம் எங்கும் ரிலீஸானது. ராணுவ வீரராக விஜய் நடித்த இந்த படம் ஹிட்டானது.

மும்பையில் வசிக்கும் தமிழரான விஜய் ராணுவத்தில் இருந்து விடுமுறைக்கு வந்த நேரத்தில் ஸ்லீப்பர் செல்கள் என்று அழைக்கப்படும் தீவிரவாதிகளை அழிப்பது தான் கதை. இந்த படத்தில் விஜய் பாடிய கூகுள் கூகுள் பாடல் ரசிகர்களை முணுமுணுக்க வைத்தது. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு பேசப்பட்டது.

வசூலில் துப்பாக்கி ரூ.100 கோடியைத் தாண்டிவிட்டது என்று கூறப்பட்டது. இந்நிலையில் படம் ரிலீஸாகி நாளையுடன் 100 நாட்கள் முடிகின்றது. தீபாவளிக்கு வெளியான படங்களில் துப்பாக்கி வசூலை அள்ளிக் குவித்தது.


 

அடடடா இந்த சல்மான் கான், ஷாருக்கான் பிரச்சனை தீராது போல

Salman Khan Shah Rukh Khan Rivalry

டெல்லி: பாலிவுட் சூப்பர்ஸ்டார்களான இந்த சல்மான் கானும், ஷாருக்கானும் எப்போது தான் தங்களுக்குள் உள்ள பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண்பார்களோ தெரியவில்லை.

பாலிவுட் நடிகர்கள் சல்மான் கானுக்கும், ஷாருக்கானுக்கும் எப்பொழுதுமே ஏழாம் பொருத்தம் தான். ஒருவரைப் பற்றி ஒருவர் ஏதாவது இடித்துக் காட்டி பேசுவது வழக்கமாகிவிட்டது. தற்போது சல்மான் கான் ஷாருக்கானை ஜாடைமாடையாக பேசியுள்ளார்.

அதாவது ஷாருக்கான் தன்னுடைய படம் ரிலீஸாகும் முன்பு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விளம்பரப்படுத்துவார். இதற்காக மெனக்கெட்டு விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார். இது பற்றி தான் சல்லு தற்போது கமெண்ட் அடித்துள்ளார்.

சல்லு கூறுகையில், படங்களை விளம்பரப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. இப்போதெல்லாம் படம் ரிலீஸாகும் முன்பு ஒன்றரை மாதத்தை இந்த விளம்பர நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்க வேண்டி உள்ளது. ஏனென்றால் தயாரிப்பாளர்கள் பல்வேறு பிராண்டுகளுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். எனக்கு படத்தை விளம்பரப்படுத்துவதில் உடன்பாடில்லை, மகிழ்ச்சியும் இல்லை என்றார்.

இதற்கு ஷாருக் என்ன சொல்லவிருக்கிறாரோ?

 

அருண் வைத்தியநாதன் படத்தில் நடிக்கவில்லை.. விஜய்யுடன் மட்டுமே நடிக்கிறேன் - மோகன் லால்

இப்போதைக்கு விஜய்யுடன் ஒரு தமிழ்ப் படத்திலும், ஒரு மலையாளப் படத்திலும் மட்டுமே நடிக்கிறேன். வேறு எந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. என்னை வைத்து வரும் செய்திகளில் உண்மையும் இல்லை என்று மலையாள நடிகர் மோகன் லால் அறிவித்துள்ளார்.

அச்சமுண்டு அச்சமுண்டு படம் இயக்கிய அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் பெருச்சாழி என்ற மலையாளப் படத்தில் மோகன்லால் நடிப்பதாக செய்திகள் வந்தன.

mohan lal denies arun vaidhyanathan project

ஆனால் அதனை மறுக்கும் விதத்தில் மோகன் லால் பேஸ்புக்கில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில், "இப்போதைக்கு விஜய்யுடன் ஒரு தமிழ்ப் படத்திலும், மலையாளத்தில் ஒரு படத்திலும் மட்டுமே நடிக்கிறேன். இவை நான் ஏற்கெனவே ஒப்புக் கொண்டவை. வேறு படங்கள் எதிலும் நான் கமிட் ஆகவில்லை. அதுபற்றி வரும் செய்திகளில் உண்மையில்லை," என்று தெரிவித்துள்ளார்.

தன் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என அருண் தெரிவித்த நிலையில், திடீரென மோகன்லால் மறுப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த வயதிலும் பமீலா இவ்வளவு பிரமாதமா இருக்காரே!

Pamela Anderson Is At Her Bombshell

லாஸ் ஏஞ்சலெஸ்: பேவாட்ச் பமீலா ஆண்டர்சனுக்கு வயதாகி விட்டது. இளமைக் காலத்தைத் தாண்டி வந்து விட்டார். ஆனாலும் அவரின் பெரும் பலமான கவர்ச்சியும், வனப்பும் மட்டும் இன்னும் அப்படியே கட்டுக்கோப்பாக இருப்பது அவரது ரசிகர்களை வியக்க வைக்கிறது.

லாஸ் ஏஞ்செலஸ் விமான நிலையத்தில் தனது நண்பர் ஒருவருடன் வந்த பமீலா, அத்தனை பேரின் கண்களையும் பறித்தார். காரணம், அவர் அணிந்திருந்த கவர்ச்சிகரமான உடை.

பனியன் போன்ற வெள்ளை நிற உடையில் படு கவர்ச்சிகரமாக காணப்பட்டார் பமீலா. அவருடன் வந்திருந்த நபர் யார் என்பது தெரியவில்லை. லாஸ் ஏஞ்செலஸிலிருந்து அவர் எங்கு சென்றார் என்பதும் தெரியவில்லை.

45 வயதாகும் பமீலா, பார்க்க சற்று டயர்டாக காணப்பட்டார். இருந்தாலும் அவரரது கவர்ச்சிக்கு சோர்வு ஏற்பட்டதாக தெரியவில்லை. மேக்கப் இல்லாமல் காணப்பட்ட அவர் விமான நிலையத்தில் உள்ள ஒரு கடைக்குப் போ்ய் ஷாப்பிங் செய்யவும் செய்தார்.

தமிழ் சினிமாவுக்கு படையப்பா போல ..டிவி நிகழ்ச்சிகளுக்கு ஒரு பேவாட்ச்...ரெண்டோட இளமையும் அப்படியேதாம்ப்பா இருக்கு.

 

மிஷ்கினின் 'ஓநாய்க்கு' கிடைத்த புதிய அந்தஸ்து!

Ilayarajaa Score Mysskin S Next Movie

ஒரே ஒரு பெயர் மிஷ்கினின் 'ஓநாய்'க்குப் புதிய நிறத்தை, அந்தஸ்தைக் கொடுத்துவிட்டது. அந்தப் பெயர் இசைஞானி இளையராஜா!

ஆம்... இளையராஜாதான் மிஷ்கினின் அடுத்த படமான ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு இசையமைக்கிறார்.

இருவரும் முதல் முறையாக இணைந்த படம் நந்தலாலா. அபாரமான பின்னணி இசை, மனதை வருடும் பாடல்களால் அந்தப் படத்தை நிறைத்திருந்தார் இளையராஜா.

ஆனால் அந்தப் படத்தில் மிஷ்கின் செய்த ஒரு தவறு படத்தின் மீதான அப்பிராயத்தை மாற்றிவிட்டது. ஜப்பானிய படமொன்றின் அப்பட்டமான தழுவல் என்பது தெரிந்திருந்தும் அதை கடைசி வரை ஒப்புக் கொள்ளவே இல்லை மிஷ்கின்.

அதன் பிறகு வந்த யுத்தம் செய், முகமூடி ஆகிய இரு படங்களுக்கும் இசையமைத்திருந்தார் புதியவர் கே. அவற்றிலும் இசை சோடை போகவில்லை.

இப்போது மீண்டும் இசைஞானியுடன் கைகோர்த்துள்ளார் மிஷ்கின்.

முகமூடி தோல்வியால் மிஷ்கினின் இந்த ஓநாயை சற்றே எள்ளலாகப் பார்த்த அனைவர் மனதிலும், ராஜா இசை என்றதும் இப்போது படம் குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

மதுவினால் வீழும் என் தேசம்…

En Desam En Makkal Diseases Liquor Addiction

மது அரக்கன் பிடியில் சிக்கி எத்தனையோ இளைய தலைமுறையினர் இன்றைக்கு மண்ணோடு மண்ணாகி வருகின்றனர். எத்தனையோ குடும்பங்கள் அவமானத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

பள்ளிச் சிறுவர்கள் முதல் 80 வயதாகும் தாத்தாக்கள் வரை டாஸ்மாக் கடைகளில் மதுவிற்காக கையேந்தும் நிலை இன்றைக்கு தமிழகத்தில் இருந்து கொண்டிருக்கிறது.

18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 6ல் ஒருவர் குடிகாரர் என்கிறது அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிபரம். இந்த மதுவை போதைக்காக தொட்டு அதற்கே அடிமையாகி பணம், பொருள், உறவு என அனைத்தையும் தொலைத்துவிட்டு நிற்கின்றனர் என்று உணர்த்தியது விஜய் டிவியின் என் தேசம் என் மக்கள் நிகழ்ச்சி.

நாற்றம் சகிக்கலையே...

மது குடித்துவிட்டு வருபவர்களின் அருகில் சென்றாலே ஒருவித கெட்ட நாற்றம் வரும். இது எல்லோரும் சகித்துக்கொள்ள முடியாது. இதைத்தான் படித்த பெண்கள் முதல் பாமரப் பெண்கள் வரை நிகழ்ச்சியில் கூறினார்கள். சகிக்க முடியாத நாற்றம் என்றாலும் இந்த நாற்றத்தோடு வரும் கணவரைத்தான் சகித்துக்கொண்டு இருக்கின்றனர் இந்தியப் பெண்மணிகள். போதைக்காக ஆண்கள் குடித்தாலும் பாதிக்கப்படுவது என்னவே பெண்கள்தான்.

குடியேறும் சந்தேகம்...

மதுவினால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார்கள். பலருமே காதலிக்கும் போது அவர் குடிகாரர் என்று தெரியாது. திருமணத்திற்குப் பிறகுதான் அவர் குடிப்பதே தெரியும் என்று கூறினார்கள். குடியினால் புத்தி மாறி கடைசியில் சந்தேகப்பட்டு அடித்து உதைப்பார் என்று கூறினார்கள் பாதிக்கப்பட்ட பெண்கள்.

சந்தேகம் ஏன் வருகிறது

20 வயதில் மது அருந்தும் ஒருவர் 27 வயதில் திருமணம் செய்து கொள்கிறார். அவருக்கு மது போதையினால் ஆண்மை தன்மையில் சிக்கல் ஏற்படும். தன்னுடைய இயலாமையினாலேயே மனைவி மீது சந்தேகம் ஏற்பட்ட காரணமாகிறது என்றனர் நிபுணர்கள்.

ஆரம்பத்திலேயே தடுக்கலாம்

இன்றைக்கு வீட்டில் பெற்றோர்கள் யாருக்கும் தங்கள் பையன் மீது சந்தேகம் வருவதில்லை. பையன் குடிக்கிறானா? என்று தெரிந்தால் உடனே அதனால் ஏற்படும் தீமைகளை பேசி புரியவைக்கவேண்டும். ஆரம்ப கட்டத்திலேயே இதற்கு சிகிச்சை செய்துவிட்டால் எளிதில் குணமாக்கிவிடலாம் என்று கூறினார் உளவியல் நிபுணர்.

நண்பர்களுடன் பார்ட்டி

இன்றைக்கு கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் பலரும் வாரத்திற்கு இரண்டு பார்ட்டியாவது கொண்டாடுகின்றனர். அதில் மது கண்டிப்பாக இடம் பெறுகிறது இதுவே நாளடைவில் பழக்கமாகிவிடுகிறது என்றார் ஒருவர்.

அதிகரிக்கும் டாஸ்மாக் வருமானம்

டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுவிற்பனை தொடங்கியபின்னர் நாளுக்கு நாள், ஆண்டுக்கு ஆண்டு வருமானம் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த 20 வருடங்களுக்கு முன் 30 வயதிற்கு மேல் குடிக்கத் தொடங்கினர். இன்றைக்கோ 19 வயதில் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கிறது புள்ளிவிபரம்.

மாணவர்களுக்கும் குடிக்கு அடிமை

பள்ளி அருகில் டாஸ்மாக் இருக்கக்கூடாது 18 வயதிற்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்பது விதி. ஆனால் பள்ளி மாணவர்கள் மது வாங்குகின்றனர். இந்தியாவில் 12.7 சதவிகிதம் பள்ளி பிள்ளைகள் மது அருந்துகின்றனர். அதிகமாக மது குடிப்பது மருத்துவக் கல்லூரி மாணவர்கள் என்று புள்ளிவிபரம் கூறி அதிரவைத்தார் நிகழ்ச்சி நடத்துனர் கோபிநாத்.

விழிப்புணர்வு இல்லை

இன்றைக்கு மதுவைத் தொடும் இளைஞர்கள் ஜாலிக்காக அதை பழகிக் கொள்கின்றனர். பின்னர் அதுவே பழக்கமாகிவிடுகிறது. அதற்கு அடிமையாகி மது இல்லாவிட்டால் வாழமுடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே இளைய தலைமுறையினருக்கு மனரீதியான சிகிச்சை அவசியம் என்றார் உளவியல் நிபுணர்.

டென்சனை போக்கவேண்டும்

மனஅழுத்தம், கோபம், இயலாமை போன்ற காரணங்களினால் மது அருந்தும் சிலர் நாளடைவில் மதுவிற்கு அடிமையாகிவிடுகின்றனர். எனவே மனஅழுத்தம் ஏற்படும் போது அதற்கான மாற்றுவழிகளை இளைஞர்களுக்கு உணர்த்த வேண்டும் என்றனர் நிபுணர்கள்.

பெற்றோர்களைப் பார்த்து கற்றுக்கொள்ளுதல்..

நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞன், தன் தந்தையைப் பார்த்துதான் மது குடிக்க பழகியதாக கூறினான். பெரியவர் ஒருவர் தன் பேரனை மதுக்கடைக்கு அழைத்து சென்று வருவதாக கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். இது மரபு ரீதியான ரிஸ்க் என்றும் கூறினர்.

பெண்களும் அடிமையாவது ஏன்?

இன்றைக்கு எம்.என்.சி கம்பெனிகளில் பணிபுரியும் பெரும்பாலான பெண்கள் மது அருந்துகின்றனர் என்று புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது. மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதனால் விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்கள் அதிகம். உள்ளூர் சாலைகளில் 3ல் ஒரு பங்கினர் மது குடித்துவிட்டுதான் வண்டி ஓட்டுகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

தமிழகம் 3 வது இடம்

இந்தியாவில் பஞ்சாப், ஆந்திராவிற்கு அடுத்தபடியாக தமிழகம் 3 வது இடத்தில் உள்ளது. வருவாயில் அதிக வரி காரணமாக தமிழகமே முதலிடத்தில் உள்ளது.

மதுவினால் ஏற்படும் நோய்கள்

மது அருந்துவதன் மூலம் உச்சஞ்தலைமுதல் உள்ளங்கால் வரை நோய்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மதுவினால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு அல்சீமர் வியாதி வரும். வாய், தொண்டையில் புற்றுநோய் வரும். இருதயம் பிரச்சினை ஏற்பட்டு மாரடைப்பு, கல்லீரலில் சிக்கல், வயிற்றில் வாய்வு கோளாறு ஏற்படும். கணையம் பாதித்து சர்க்கரை வியாதி ஏற்படும். எலும்புகள் வலுவிழக்கும் மூட்டு வலி வரும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் வரிசையில் காத்திருந்து மதுவை வாங்கி குடித்துவிட்டுதான் வேறு வேலை பார்க்கின்றனர்.

கண்டிப்பாக மீளலாம்

மதுவினால் ஏற்படும் பாதிப்புகளை கூறிய இந்த நிகழ்ச்சியில் மதுவின் கோரப்பிடியில் சிக்கி மீண்டவர்களைப் பற்றியும் கூறினார்கள். மதுவினால் அதீத பாதிப்பிற்குள்ளாகி இரண்டு முறை தற்கொலை முயற்சி செய்து அதில் இருந்து தப்பியவர் இப்போது மதுவின் பிடியில் இருந்து மீண்டுவிட்டதாக கூறினார்.

மது குடிக்கும் பிள்ளையை விஷம் வைத்து கொலை செய்துவிடலாம் என்று நினைக்கும் அளவிற்கு வேதனைப் படுத்திய ஒருவர் தற்போது அந்த போதைப்பழக்கத்தில் இருந்து மீண்டு புது வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.

சுய கட்டுப்பாடு அவசியம்

மது அருந்துபவர்கள் யாராக இருந்தாலும் ஒரு சுய கட்டுப்பாடு இருந்தால் இந்தப் பழக்கத்தில் இருந்து கண்டிப்பாக மீளலாம் என்று கூறினார் உளவியல் நிபுணர். இதற்கான மீட்பு மையங்கள் பலவும் இருக்கின்றன. எனவே எதிர்கால தலைமுறையை கருத்தில் கொண்டு மதுவின் பிடியில் இருந்து விடுபட முயலவேண்டும் என்ற வேண்டுகோளுடன் முடிந்தது இந்த நிகழ்ச்சி.

 

காதலி பிரியா எம்.பி.ஏ. முடித்த உடன் திருமணம்: ஜான் அபிரகாம்

மும்பை: தனது காதலி பிரியா ரஞ்சல் படிப்பு முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ளதாம். அதனால் அவர் படிப்பை முடித்த பிறகே திருமணம் என்று பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் தனது 9 வருட காதலியான நடிகை பிபாஷா பாசுவை பிரிந்த பிறகு வங்கியில் பணிபுரியும் பிரியா ரஞ்சலை காதலித்து வருகிறார். ஜான் பிரியாவை முதன்முதலாக ஜிம்மில் பார்த்ததாக கூறப்பட்டது. ஆனால் அங்கு வைத்து பார்க்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

john abraham spills the beans on his marriage

தனது காதல் வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்து ஜான் கூறுகையில்,

உலக வங்கியின் மும்பை கிளையில் பணிபுரியும் நண்பர்கள் மூலம் தான் நான் பிரியாவை முதன் முதலில் சந்தித்தேன். அதன் பிறகே பிரியா நான் போகும் ஜிம்மிற்கு வந்தார். தற்போது பிரியா லண்டனில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். அவர் படிப்பை முடிக்க இன்னும் 2 ஆண்டுகள் ஆகும். அவர் படிப்பை முடித்த பிறகு தான் திருமணம் என்றார்.

ஜானுக்கு தற்போது 40 வயதாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வாள்சண்டை கற்கும் 'ராணி ருத்ரமா தேவி' அனுஷ்கா!

Anushka Learns Sword Fight Rudrama   

அனுஷ்கா அடுத்து நடிக்கும் சரித்திரப் படம் ராணி ருத்ரமாதேவி. இது ஒரு தெலுங்குப் படம். தமிழிலும் வெளியாகிறது.

படத்தின் சிறப்பு... இசைஞானி இளையராஜா இந்தப் படத்துக்கு சிம்பொனி இசைக் குழுவை வைத்து பாடல் பதிவு செய்வதுதான்.

ராணி ‘ருத்ரமாதேவி'யின் வீர வாழ்க்கையை பதிவு செய்கிறார்களாம் இந்தப் படத்தில். ராணா, அஞ்சலி என முன்னணிக் கலைஞர்கள் நடிக்கின்றனர். தோட்டா தரணி கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். அஜய் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் எதிரி மன்னர்களுடன் ருத்ரமாதேவி போரில் சண்டையிடும் காட்சிகள் நிறையவே உள்ளன. எனவே அந்த வேடத்தில் நடிக்கும் அனுஷ்கா முறையான வாள் சண்டை பயிற்சி எடுத்து வருகிறார்.

பிரபல திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர்கள் இருவரை வைத்து அவருக்கு வாள் பயிற்சி அளிக்கிறார்கள். கத்திச் சண்டை, குதிரை சவாரியும் கற்கிறாராம் அனுஷ்கா.

தக்காண தேசத்தில் 1259-1289 ல் ஆட்சி செய்த காகதிய வம்ச ராணி ருத்ரமா தேவி. வீரமும் தியாகமும் காதலும் நிறைந்தது அவரது வாழ்க்கை. படத்தை இயக்குபவர் ஒரு தமிழர். பெயர் குணசேகர். தயாரிப்பாளரும் அவரே!