1/10/2011 11:28:26 AM
'மைனா' படத்துக்குப் பிறகு வந்த பல வாய்ப்புகளை ஒரே நேரத்தில் ஒப்புக் கொண்டதால் அமலா பால் கால்ஷீட் பிரச்னையில் தவிப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கூறியதாவது: 'மைனா' படத்துக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்துள்ளது. விஜய் இயக்கத்தில் விக்ரமுடன் நடிக்கிறேன், கணேஷ் விநாயக் இயக்கத்தில் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்', லிங்குசாமி இயக்கத்தில் 'வேட்டை ஆரம்பம்', இதுதவிர பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறேன்.
ஒரே நேரத்தில் பல வாய்ப்புகள் வந்ததால் சிறிது தடுமாற்றம் அடைந்தது உண்மைதான். ஆனால் கால்ஷீட்டில் எந்த பிரச்னையும் இல்லை.
முதல் படத்திலேயே நான் வெற்றி பெற்றுவிடவில்லை. முதல் இரு படங்களில் கசப்பான அனுபங்களை கடந்து வந்திருக்கிறேன். 'மைனா'வுக்காக இரண்டு வருடங்கள் கடுமையாக உழைத்திருக்கிறேன். அதன் பலனை இப்போது அனுபவிக்கிறேன். தமிழ் மக்கள் கொடுத்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது இப்போதைய குறிக்கோள். அதற்காக கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பேன்.