புறம்போக்கு படத்திலிருந்து விலகியதற்கு தன் அண்ணன் ஜெயம் ராஜாவின் படத்தைக் காரணமாகக் குறிப்பிட்டுள்ளார் ஜெயம் ரவி.
ஆனால் உண்மையான காரணம், ஈகோ மற்றும் சம்பளப் பிரச்சினைதான் என்று இப்போது தெரியவந்துள்ளது.
எஸ்பி ஜனநாதன் அடுத்து இயக்கும் படம் புறம்போக்கு (இந்த டைட்டில் யாருக்கு என்பதில் ஜனநாதனுக்கும் ஒளிப்பதிவாளர் - நடிகர் நட்ராஜுக்கும் இன்னும் பிரச்சினை தொடர்கிறது).
இந்தப் படத்தில் முதலில் ஜெயம் ரவி - ஜீவாவும் நடிப்பதாக இருந்தது. பின்னர் இந்தப் படத்திலிருந்து ஜீவா விலகினார்.
அடுத்து ஆர்யா வந்தார். இப்போது ஜெயம் ரவி தரப்பில் பிரச்சினை செய்தார்கள். ஆர்யாவுக்கும் ஜெயம் ரவிக்கும் சமமான வேடமென்றால் ஜெயம் ரவி நடிக்க மாட்டார் என்று முதலில் கூறினார்களாம். அடுத்து சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்திக் கேட்டார்களாம்.
இதனால் ஜெயம் ரவியை நீக்கிவிட்டு, விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இப்போது ஆர்யா - விஜய் சேதுபதி இணை நாயகர்களாக இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
ஆனால் இந்த உண்மையை மறைத்துவிட்டு, தன் அண்ணன் படத்துக்காக புறம்போக்கிலிருந்து விலகியதாக ஜெயம் ரவி அறிவித்துள்ளார்.
ஜெயம் ராஜா படம் அறிவிப்பதற்கு முன்பே ரவி ஒப்புக் கொண்ட படம் புறம்போக்கு என்பது குறிப்பிடத்தக்கது.