3 இடியட்ஸ் ரீமேக்கில் சத்யராஜ்,இலியானா
ரசிகர்கள் என்னை மறக்கவில்லை :சோனியா அகர்வால்!
எந்திரன் பாகம் 2 - சூப்பர் ஹிட்!
எந்திரன் திரையரங்குகளில் நான் மகான் அல்ல!-’ஷாக்’ தந்த விளம்பரம்!
ஏன் இந்த ஷாக்?
அதில் ஒன்று நான் மகான் அல்ல என்ற படத்தின் விளம்பரம். இதில் சொர்ண சக்தி அபிராமி மற்றும் ஆல்பர்ட் திரையரங்குகளில் தினசரி 4 காட்சிகளாக 50வது நாளைக் கடந்து அந்தப் படம் ஓடுவதாகக் குறிப்பிட்டிருந்தனர்.
விஷயம் என்னவென்றால் விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள இரு திரையரங்குகளிலும் கடந்த அக்டோபர் முதல் தேதி ரஜினியின் எந்திரன் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த காம்ப்ளக்ஸ்கள் எதிலுமே நான் மகான் அல்ல படம் கடந்த 10 நாட்களாக ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக அபிராமியில் கடந்த ஒரு வாரமாக நான்கு திரையரங்குகளிலும் தினசரி 5 காட்சிகளாக எந்திரன் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆல்பர்ட், பேபி ஆல்பர்ட் இரண்டிலுமே தினசரி 5 காட்சிகளாக எந்திரன் ஓடிக் கொண்டுள்ளது.
ஆனால் இந்த இரு தியேட்டர்களிலும் நான் மகான் அல்ல ஓடி வருவதாக விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், பெரிய சைஸ் விளம்பரத்தையும் வெளியிட்டுள்ளனர்.
இது தெரிந்தே நடந்த தவறா அல்லது பிழையாக நேர்ந்ததா என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளதாம்.
கேரளத்திலும் கருப்புக் கொடி-கழிவறையில் ஒளிந்த அசின்!
கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் நடிகர் விஜய் நடிக்கும் காவலன் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் அவருக்கு ஜோடியாக நடிகை அசின் நடித்து வந்தார்.
அசின் தடையை மீறி இலங்கை சென்றதைக் கண்டித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் படப்பிடிப்புக்கு அசின் வந்திருக்கும் தகவல் அறிந்ததும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டினர் பெரியார் திராவிட கழகத்தினர். இதில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதனால் படப்பிடிப்பு அங்கிருந்து கேரள மாநிலம் ஒத்தப்பாலம் அருகே உள்ள மணிச்சேரி கிராமத்துக்கு மாற்றப்பட்டது. அங்குள்ள ஜமீன் பங்களாவில் சில தினங்களாக காவலன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
நேற்று மாலை படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு சிலர் கருப்பு கொடி காட்ட வருவதாக தகவல் வந்தது. இதையடுத்து நடிகை அசின் அங்குள்ள ஒரு அறையில் சென்று ஓடி ஒழிந்து கொண்டார். அறையில் இருந்தபடியே ஜன்னல் வழியாக யாராவது வருகின்றனரா என்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
கருப்பு கொடி மிரட்டலை அடுத்து அசினுக்கு படப்பிடிப்பு தளத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளி நபர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தனியறையில் இருந்தபடி படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்தனர். இதற்கிடையே நடிகர் விஜய்யை பேட்டி எடுக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் தனியறையில் பதுங்கி இருந்த அசினை பார்த்து விட்டனர்.
இதுகுறித்து இயக்குநர் சித்திக்கிடம் கேட்டனர். அவரோ, “நடிகை அசின் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஷுட்டிங் முடிந்து விட்டதால் அவர் படப்பிடிப்பு தளத்தில் இல்லவே இல்லை” என்றார் ஒரேயடியாக.
ரஜினி-கமல் பங்கேற்கும் இயக்குநர்களின் ‘டி-40′!
இந்த விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்தது. இயக்குநர்கள் பாரதிராஜா, பாலசந்தர், பாலுமகேந்திரா, ஆர்.கே.செல்வமணி, பார்த்திபன், விக்ரமன், சசிக்குமார், சமுத்திரக்கனி உட்பட 200 இயக்குநர்கள் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் இந்திய அளவில் சிறந்த இயக்குநர்களை வரவழைத்து கெளரவிக்கவும் உள்ளனர். இந்த கூட்ட ஆலோசனை குறித்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், “காலங்களைக் கடந்தது கலைத் துறை. அந்தக் கலைத்துறையின் தலைக் குழந்தை இயக்குநர்கள் சங்கம்.
தென்னிந்தியாவில் இயக்குநர்களுக்காக உதித்த முதல் சங்கம் இது. 40-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த சங்கத்தில் தமிழ் மொழி மட்டும் இன்றி, இன்று பல இந்திய மொழிகளை இயக்கும் புகழ் பெற்ற இயக்குநர்கள் இன்று இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பதை கெளரவமாகவும், அடையாளக் குறியீடாகவும் கருதுகிறார்கள்.
இந்த சங்கத்தின் 40வது ஆண்டு விழாவை பிரமாண்டமாக அக்டோபர் 23ம் தேதி சனிக்கிழமை நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சிறப்பாக கொண்டாட இருக்கிறது.
காலை 10 மணி முதல் 2 மணி வரை இசைவிழா நடைபெறும். 2 மணி முதல் 4 மணி வரை கருத்தரங்கம் நடைபெறும். 5 மணி முதல் 10 மணி வரை கலை,இலக்கிய விழா நடைபெறும்.
அந்த விழாவில் சாதனை படைத்த, சாதனை படைத்துக் கொண்டிருக்கிற இந்தியாவின் அனைத்து மொழி இயக்குநர்களும் கலந்து கொண்டு இயக்குநர்கள் சங்கத்தை வாழ்த்துகிறார்கள்.
தெலுங்கு, கேரளா, கர்நாடகா மற்றும் அகில இந்திய அளவில் இருந்து வாழ்த்த வருகின்ற இயக்குநர்கள் கெளரவிக்கப்படுகிறார்கள். மேலும் இச்சங்கத்தின் மூத்த உறுப்பினர்களாக உள்ள வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற சாதனை படைத்த அனைத்து இயக்குநர்களையும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சிறப்பு செய்ய இருக்கிறது. அவர்களது உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்பட உள்ளது.
இந்த விழாவில் இந்திய அளவிலிருந்து நட்சத்திரங்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும், இசைக் கலைஞர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
ரஜினி, கமல் உட்பட அனைத்து நடிகர்களூம்,நடிகைகளும் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். இந்த விழாவை முன்னிட்டு 23ம் தேதி அன்று படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன.
இந்த விழாவின் நோக்கமே, விழாவின் மூலம் வரும் நிதியைக்கொண்டு இயக்குநர்கள் சங்கத்திற்கென்று தனி கட்டடம் கட்டவேண்டும் என்பதுதான்”, என்றார்.
பிரபு தேவா வீட்டை முற்றுகையிடுவோம்! - இந்து மக்கள் கட்சி
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ வேண்டும். ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் பண்பாடு. அதை பிரபுதேவா மீறுகிறார்.
பழைய காலத்தில் உடன் கட்டை ஏறும் பழக்கம் இருந்தது. கணவன் இறந்ததும் மனைவியும் அதே நெருப்பில் உயிரை விடுவாள். நாகரீகம் வளர அதை முட்டாள் தனம் என ஒதுக்கி விட்டோம். ஆனால் 3 குழந்தைகள் பெற்ற அவர்களை உதறி விட்டு ஓடுவதும், காதலியை மறக்க முடியவில்லை என்று சொல்வதும் நாகரீகத்துக்கு உகந்ததாகவே அமையாது.
இந்தியாவின் பெருமைகளே நமது கலாச்சாரமும் கோவில், வேட்டி, சட்டை, புடவைகளும்தான். உலகமயமாக்கலில் நமது கலாச்சாரத்தை தாராளமயமாக்க முடியாது. பிரபுதேவாவும் நயன்தாராவும் கலாச்சாரத்தை சீரழிக்க பார்க்கிறார்கள்.
சுதந்திர போராட்டத்தை தூண்டி விட சினிமா பயன்பட்டது. அது இப்போது கலாச்சார சீரழிவுக்கு பயன்படுகிறது. பொது வாழ்க்கையில் இருப்பவர்களும் பொது மக்கள் பார்வையில் இருப்பவர்களும் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதற்கு எதிராக நடந்தால் அவர்களை மக்கள் மத்தியில் இருந்து துரத்தி அடிப்போம்.
கலாச்சாரத்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ள பிரபுதேவா – நயன்தாராவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். பிரபு தேவா வீட்டில் ஓரிரு நாளில் முற்றுகை போராட்டம் நடத்துவோம். நயன்தாரா- பிரபுதேவா உருவப்படங்களை எரிப்போம்.
-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார் கண்ணன்.
‘தரமற்ற பொருள்களை விளம்பரப்படுத்த வேண்டாம்!’ – நடிகர்களுக்கு தமன்னா வேண்டுகோள்
சினிமாவில் நடிப்பதை விட விளம்பரங்களில் நடிப்பதில் அதிக பணம் கிடைப்பதால், பல நடிகர் நடிகைகளும் விளம்பரப் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். விஜய், நயன்தாரா, அசின், த்ரிஷா, மாதவன், விக்ரம் என பெரும்பாலான நடிகர்கள் விளம்பரப் படங்களில் நடித்து வருகின்றனர்.
இன்று நடிகர், நடிகைகள் சிலர் தரமற்ற விளம்பர படங்களில் நடிப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.
அவர்கள் விளம்பர படுத்தும் பொருட்களை பொது மக்கள் வாங்கி பயன்படுத்தி பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது பற்றி தமன்னாவிடம் கேட்ட போது, நடிகர்- நடிகைகள் சமூகத்தில் பிரபலமான நபர்கள். எனவே அவர்களுக்கு சமூக பொறுப்புணர்வு இருக்கிறது. விளம்பரப் படங்களில் நடிப்பதில் அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் விளம்பரபடுத்தும் பொருட்களை பொதுமக்கள் நம்பி வாங்குகிறார்கள்.
எனவே நடிகர்-நடிகைகள் விளம்பரபடுத்தும் பொருட்கள் தரமானவைதானா? என்று ஆய்வு செய்ய வேண்டும். தரமற்ற பொருட்களை விளம்பரப்படுத்தும் படங்களில் நடிக்கக் கூடாது நான் விளம்பரப்படுத்தும் பொருட்களை முதலில் நானே பயன்படுத்திப் பார்க்கிறேன். அது நல்ல பொருள் என்று திருப்தி ஏற்பட்டால் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறேன். ஒரு சிறிய தவறு நடந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடும், என்றார்.
சொன்னதை கடைப்பிடித்தால் சரி..!
1 கோடிக்கு ஏலம் போன மைக்கேல் ஜாக்சனின் கூடைப் பந்து:ரூ. 69.3 லட்சத்திற்கு போன ஜெர்சி
கூடைப்பந்து ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டன் கையெழுத்திட்ட அந்தப் பந்து சுமார் ரூ. 26, 664-க்கு போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சீனாவில் உள்ள மக்காவில் நடைபெற்ற ஏலத்தில் மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்ட 435 பிரபலங்களின் பொருட்கள் ஏலம் விடப்பட்டன.
இதன் மூலம் ரூ. 13,34,09,78 கிடைத்துள்ளது.
கடந்த 1995-ம் ஆண்டு வெளிவந்த ஹ்ஸ்டோரி என்ற ஆல்பத்தின் விளம்பர வீடியோவில் மைக்கேல் ஜாக்சன் அணிந்திருந்த கருப்பு கற்கள் பதித்த கையுறையும், கை வளையும் ரூ. 79,99,254 -க்கு ஏலம் எடுக்கப்பட்டது.
‘பீட் இட்’ மேல் சட்டை எதிர்பார்த்ததைவிட 20 மடங்கு அதிகமாக ரூ. 69,32,686-க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
படத்தில் நடிக்கிறார் ஏ ஆர் ரஹ்மான்!
10/12/2010 10:45:04 AM
இசைத்துறையில் கலக்கிய இசைப்புயல், தற்போது நடிப்பு புயலாக மறப்போகிறது. ஆமாம், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மலையாளப் படத்தில் நடிக்க போகிறார். அவரை நடிக்க வைப்பதில் முனைப்பு காட்டி வெற்றியும் பெற்றுள்ளனர் மலையாளப் படவுலகினர். ஜெயராஜ் இயக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளராகவே நடிக்கிறாராம் ஏ ஆர் ரஹ்மான். இந்தப் படத்தில் மம்முட்டியும் ஜெயசூர்யாவும் நடிக்கிறார்கள்.
இந்தப் படம் ஒரு துப்பறியும் கதை. வழக்கம் போல துப்பறியும் நிபுணர் பாத்திரத்தில் மம்முட்டி நடிக்கிறார். அதில் சில காட்சிகளில் ஏஆர் ரஹ்மானிடம் விசாரிப்பது போல எடுக்க வேண்டியிருந்ததால், அவரையே நடிக்க வைத்துவிடலாம் என முடிவு செய்து கேட்டிருக்கிறார்கள். தயங்கித் தயங்கி கேட்டிருக்கிறார்கள். ஒருநாள் கால்ஷீட் போதும், அதுவும் வீட்டிலேயே ஷூட்டிங் என்றதும் ஒப்புக் கொண்டாராம் ரஹ்மான்.
ஆஜராவார்களா நயன் -பிரபுதேவா?
10/12/2010 11:10:09 AM
பிரபு தேவா மீது சென்னை குடும்ப நல கோர்ட்டில் ரமலத் தொடர்ந்த வழக்கில் வருகிற 19ந் தேதி நேரில் பிரபு தேவா, நயன்தாரா இருவரும் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். ரம்லத் தொடர்ந்துள்ள இரு வழக்குகளிலும் ஆஜராகி நேரில் விளக்கமளிக்குமாறு சென்னை குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த சம்மன் நேற்று பிரபுதேவா மற்றும் நாயன்தாராவுக்கு தரப்பட்டது.
பிரபுதேவா தற்போது மும்பையில் ஒரு படப்பிடிப்பில் உள்ளார். எனவே அவரது சம்மனை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள பிரபுதேவாவின் தந்தையும், டான்ஸ் மாஸ்டருமான சுந்தரம் வீட்டுக்கு அனுப்பப்பட்டது. நயன்தாரா வீடு கேரளாவில் உள்ளது. அவரது சம்மன் நடிகர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை வருகிற 19-ந்தேதி மீண்டும் நடக்கிறது. அப்போது இருவரும் கோர்ட்டில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கவனக்குறைவால் டைரக்டருக்கு வாய்ப்பு போச்சு
10/12/2010 1:06:32 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
கண்டுக்கிட்டேன் கண்டுக்கிட்டேன் படத்தை இயக்கியவரு மேனன் டைரக்டரு. இப்போ சினிமாவுல காட்ற கவனத்தைவிட தன்னோட கேமரா
இன்ஸ்டிடியூட்லதான் அக்கறை காட்டுறாராம்… காட்டுறாராம்… இந்தியில படம் இயக்க வந்த வாய்ப்பை ஏத்துக்கிட்டாரு. சொன்ன நேரத்துல கதையை தராததால வாய்ப்பு பறிபோயிடுச்சாம்… பறிபோயிடுச்சாம்…
கோலிவுட், டோலிவுட், பாலிவுட்ல ஹிட்டாகுற படங்களை இந்த வுட்டுக்காரங்களே மாத்தி மாத்தி ரீமேக் பண்றதுதான் இப்போதைய டிரெண்ட். அதுக்காக ஸ்டேட் வ¤ட்டு ஸ்டேட் வந்து ஹீரோக்கள் ஒருத்தரோடு இன்னொருத்தர் நட்பை வளர்க்கிறாங்களாம்… வளர்க்கிறாங்களாம்… 'உங்க படம் ஹிட்டான எனக்குதான் ரீமேக் ரைட்ஸ் தரணும்'னு கேட்கிறாங்களாம்… கேட்கிறாங்களாம்…
அலைபாயுற நடிகரு ரெண்டு தமிழ்ப் பட வாய்ப்புகளை மறுத்துட்டாரு… மறுத்துட்டாரு… அதுல ஒண்ணு, வில்லன் கேரக்டராம். ஐம் காட் ஹீரோவுக்கு
வில்லனா நடிக்க டைரக்டரு கேட்டாராம்… கேட்டாராம்… ‘நான் எப்போவுமே ஹீரோதான். வில்லனா நடிக்க மாட்டேன்’னு நடிகரு சொல்லிட்டாராம்…
சொல்லிட்டாராம்…
வாய்ப்பு தேடி அலைவதில்லை :மீனாட்சி
10/12/2010 1:05:08 PM
‘மந்திர புன்னகை’யில் நடித்து வருகிறார் மீனாட்சி. அவர் கூறியது: கரு பழனியப்பன் இயக்கி நடிக்கும் 'மந்திர புன்னகைÕ படத்தில், நந்தினி என்ற கதாபாத்திரம் ஏற்றிருக்கிறேன். ஆணுக்கு பெண் சமம் என்ற போராட்ட குணம் கொண்ட கேரக்டர். 'கருப்பசாமி குத்தகைதாரர்’ படத்துக்கு பிறகு எனக்கு நல்ல படங்கள் அமையவில்லை. வந்த எல்லா வாய்ப்புகளுமே கிளாமர் வேடங்கள்தான். 'மந்திர புன்னகைÕ ஷூட்டிங் முற்றிலும் முடிந்துவிட்டது. எப்போது ரிலீஸ் என்று காத்திருக்கிறேன். அடுத்த மாதம் படத்தின் ஆடியோ ரிலீஸ் ஆகிறது. படம் பார்ப்பவர்கள் ‘இது மீனாட்சியா?’ என்று கேட்கும் அளவுக்கு என்னை அந்த கதாபாத்திரமாகவே மாற்றி இருக்கிறார் இயக்குனர். வேறு கதைகள் வந்தாலும் அதை ஏற்காமல் காத்திருக்கிறேன். ஏனென்றால் அந்தப் படம் எனக்கு ஒரு புது இமேஜ் தரும். மேலும் வாய்ப்பு தேடி நான் என்றைக்கும் அலைந்தது கிடையாது. என்னை தேடி என்ன வாய்ப்பு வருகிறதோ அதை தேர்வு செய்து நடிக்கிறேன்.
நடிகர்&நடிகைகளின் கார் மோகம்
10/12/2010 1:04:06 PM
ஆக்ஷன் படம் ஓடினால் ஆக்ஷன் மேனியா, லவ் சப்ஜெக்ட் ஜெயித்தால் லவ் மேனியா என்று கோலிவுட் ஹீரோக்கள் தங்கள் படங்களின் பாணியை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். அதேபோல் தாங்கள் வாங்கும் காரில் எது டாப் கிளாஸ் என்று தேர்வு செய்து வாங்குவதிலும் போட்டி நிலவுகிறது. சொகுசு காரான பிஎம்டபிள்யூ தான் இப்போதைய கோலிவுட்டின் டிரெண்ட். நடிகர் விஜய் சமீபகாலமாக இந்த காரில்தான் வலம் வருகிறார். அதேபோல் தனுஷும் இந்த கார் வாங்கி இருக்கிறார். நடிகைகளில் த்ரிஷா, நயன்தாரா, டைரக்டர்களில் ஷங்கர், லிங்குசாமி ஆகியோர் பிஎம்டபிள்யூ பிரியர்கள். அந்த காரில்தான் ஷூட்டிங் செல்கின்றனர். தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவும் அவ்வப்போது கார்களை மாற்றுகிறார்.
நீண்ட இடைவெளி ஏன்? : அசின்
10/12/2010 1:03:19 PM
கடைசியாக ‘லண்டன் ட்ரீம்ஸ்’ படத்தில் சல்மான் கானுடன் நடித்தார் அசின். இப்படம் ரிலீசாகி ஒரு வருடம் ஆகிவிட்டது. அதற்கு பின் அவர் நடித்த படமே
வெளிவரவில்லை. இது பற்றி அசின் கூறியது: ‘லண்டன் ட்ரீம்ஸ்’ படத்துக்கு பின் விளம்பர படங்களில் பிசியாக இருந்தேன். அதன் பின் தமிழில் 'காவலன்' பட வாய்ப்பு கிடைத்தது. இந்தியில் மீண்டும் சல்மான் கானுடன் ÔரெடிÕயில் நடிக்க¤றேன். இந்த இரண்டுமே பெரிய படங்கள். அதனால் தொடர்ந்து ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இப்படங்கள் வெளியாகும். அடுத்தடுத்து படங்கள் வெளியாக¤, தோல்வி அடைந்தால் அதனால் பயனில்லை.
ஆண்டுக்கு ஒரு படம் வந்தாலும் பேசப்பட வேண்டும். இந்தியில் மேலும் இரு படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறது. ‘காவலன்’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடிப்பது பற்றி யாரும் என்னிடம் பேசவில்லை. அது பற்றி எனக்கு தெரியாது. இவ்வாறு அசின் கூறினார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டாருகக்கு கோலிவுட் சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் வாழ்த்து!
10/12/2010 10:58:14 AM
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது 68வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இந்திப்பட உலகில் இன்றும் முதலிடத்தில் உள்ளவர் அமிதாப் பச்சன். 68 வயாதாகும் இவர் சமீபத்தில் 13 வயது சிறுவனாக நடித்த பா படத்திற்காக தேசிய விருது பெற்றார். இப்போது தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் நடிக்கவும் ஆர்வத்துடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தி திரையிலகினர் பலர் அமிதாப்பிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அமிதாப்புக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி நேற்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இமயமலை செல்லும் முன் மும்பை சென்றுள்ள அவர், அமிதாப் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களில் பங்கேற்றார். சில சமூக அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.
இயக்குநர்கள் சங்கம் 40வது ஆண்டு விழா : ரஜினி-கமல் பங்கேற்பு
10/12/2010 11:04:29 AM
தமிழ் சினிமா இயக்குநர்கள் சங்கம் தனது 40வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. இந்த விழாவில் இந்திய அளவில் சிறந்த இயக்குநர்களை வரவழைத்து கெளரவிக்கவும் உள்ளனர். இந்த விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்தது. இயக்குநர்கள் பாரதிராஜா, பாலசந்தர், பாலுமகேந்திரா உட்பட 200 இயக்குநர்கள் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். ரஜினி, கமல் உட்பட அனைத்து நடிகர்களூம்,நடிகைகளும் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். இந்த விழாவை முன்னிட்டு 23ம் தேதி அன்று படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன.
எந்திரனை பாராட்டி ஷங்கருக்கு பாலசந்தர் கடிதம்!
10/12/2010 10:33:10 AM
இந்திய திரையுலக வரலாற்றி மாபெரும் வெற்றி எந்திரன் படத்தை பலர் பாராட்டி வந்துள்ள நிலையில், இயக்குனர் சிகரம் பாலசந்தர் ஷங்கருக்கு பாராட்டு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், ஒருவேளை இந்தியாவின் முன்னணி நடிகர் ரஜினி, முதல்நிலை நாயகி ஐஸ்வர்யா ராய், ஏராளமான வாய்ப்பு வசதிகள் என அனைத்தையும் என்னிடம் கொடுத்து படமெடுக்கச் சொல்லியிருந்தால்கூட எந்திரனைப் போன்ற ஒரு படைப்பை தந்திருக்க முடிந்திருக்காது. ரசிகர்கள் கைத்தட்டும் விதமாக ஒரு படம் வேண்டுமானால் கொடுத்திருப்பேன். ஆனால் இப்படி ஒரு உலக சினிமாவை தந்திருக்க முடியாது. கத்தியின் மேல் நடப்பதைப் போல, மிகத் திறமையாக பாலன்ஸ் செய்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறீர்கள்.
ரஜினியை நான்தான் அறிமுகப்படுத்தினேன். நடிகராக்கினேன். இன்னும் சில இயக்குநர்கள் அவரை ஹீரோவாக்கினார்கள். மணிரத்னமும் சுரேஷ் கிருஷ்ணாவும் அவரை பெரிய கமர்ஷியல் நாயகனாக்கினார்கள். ஆனால், சினிமாவின் பன்முகப் பரிமாணங்களிலும் ஜொலிப்பவராக நீங்கள் ரஜினியை மாற்றுயுள்ளீர்கள். உங்கள் எந்திரனுக்கு தலை வணங்குகிறேன். என்று எழுதியுள்ளார்.
மேலும் ஷங்கரை இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன் என்றும், எந்திரனை இந்தியாவின் அவதார், மற்றும் சன் பிக்சர்ஸை இந்தியாவின் எம்ஜிஎம் என்றும் பாராட்டியுள்ளார். இந்தக் கடிதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் ஷங்கர், என் வாழ்க்கையில் நான் பெற்ற முக்கிய பாராட்டு இது என்றார்.
எந்திரனை பாராட்டி ஷங்கருக்கு பாலசந்தர் கடிதம்!
ரசிகர்கள் தொல்லை நடிகை எச்சரிக்கை
10/5/2010 5:22:30 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
நட்பான நடிகை அவுட்டோருக்கு போனா, அவரோட மேக்அப்மேனை ஷூட்டிங்ல வேவு பார்க்க சொல்றாராம்… சொல்றாராம்… செல்போன் நம்பரையும் அடிக்கடி மாத்துறாராம். ரசிகர்கள்னு சொல்லி, சிலர் தொல்லை தர்றாங்களாம்… தர்றாங்களாம்… அதனாலதான் எங்கே போனாலும் எச்சரிக்கையா இருக்கிறாராம்… இருக்கிறாராம்…
பிரகாசமான ஹீரோவுக்கு பாலிவுட் வாய்ப்பு தேடி வருதாம்… வருதாம்… ஆனா எல்லாமே பல ஹீரோ கதையாம். முக்கியத்துவமும் குறைவா இருக்காம். 'வர்மா டைரக்டரோட படத்துல நடிக்கணும்னு ஆசை இருந்ததால நடிச்சேன். தொடர்ந்து இந்தியில நடிக்க மாட்டேன்'னு ஹீரோ எஸ் ஆகுறாராம்… ஆகுறாராம்…
தமிழ், தெலுங்குல காதல் கிசு கிசுவால கல்லூரி நடிகை ரொம்பவே நொந்து போயிட்டாராம்… நொந்து போயிட்டாராம்… யாராவது இதை பற்றி கேட்டா, டென்ஷன் ஆகிப்போறாராம். மனசை தேத்துறதுக்கு ஒரே வழி யோகாதான்னு சில நடிகைங்க காதுல ஓதுனாங்களாம். அதனால இப்போ கல்லூரி நடிகையும் யோகா பிரியை ஆயிட்டாராம்… ஆயிட்டாராம்…
நடிகை மீது ஹீரோ&இயக்கம் கோபம்
9/23/2010 10:50:05 AM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
காவல் பட ஷூட்டிங்கை அடுத்த மாசம் முடிக்க திட்டம் போட்டிருந்தாங்களாம்… போட்டிருந்தாங்களாம்… ஆனா பிசின் நடிகையால படம் லேட்டாகுதாம்… லேட்டாகுதாம்… திடீர்னு இந்தி படத்துக்கு போகணும்னு அப்பப்போ கிளம்பிப் போறாராம். இதனால பட ஹீரோவும் டைரக்டரும் பிசின் மேல கோபமா இருக¢கிறாங்களாம்… இருக்கிறாங்களாம்…
தாடிக்கார டான்ஸ் மாஸ்டரு இந்தி படம் இயக்கப்போறாரு. சவுத் படத்தை அப்படியே உல்டா பண்ணுங்கன்னு தயாரிப்பு சொல்லியிருக்கிறாராம்… சொல்லியிருக்கிறாராம்… இதுக்காக தமிழ், தெலுங்கு பட டிவிடிகளை மாஸ்டரு தீவிரமா பார்க்கிறாராம்… பார்க்கிறாராம்…
படம் தயாரிச்சு, இயக்க பிளான் பண்ணியிருந்தாரு ஆக்ஷன் ராஜா ஹீரோ. அதுக்கு பைனான்ஸ் பிடிக்கிறதுல பிரச்னையாம்… பிரச்னையாம்… அதனால படம் தயாரிக்கிற திட்டத்தை தள்ளிவச்சிட்டாராம்… தள்ளிவச்சிட்டாராம்…
சம்பளம் ஏற்றிய தம்பி நடிகர்
10/8/2010 10:08:17 AM
நல்ல காலம் பொறக்குது… நல்ல காலம் பொறக்குது…
பிரகாச ஹீரோ, தம்பி நடிகருக்கு நிறைய அட்வைஸ் பண்றாராம்… பண்றாராம்… அதுல ஒண்ணு, விளம்பர படத்துல நடிக்கிறது.
அண்ணனோட வழியில தம்பி நடிகரும் விளம்பரத்துல நடிக்க ஆரம்பிச்சிட்டாரு. அடுத்தடுத்து விளம்பர வாய்ப்புகள் வருதாம். செகண்ட் விளம்பரத்துலேயே சம்பளத்தை கூட்டிட்டாராம்… கூட்டிட்டாராம்…
செல்வமான இயக்குனரு, பெரிய பட்ஜெட்ல படம் பண்ண போட்ட பிளான் ஒர்க் அவுட் ஆகல… ஆகல… இதனால தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிற ஹாலிவுட் கம்பெனி கூட பேச்சு நடத்துறாராம்… நடத்துறாராம்… அந்த கம்பெனி மூலமா பெரிய படங்களை இயக்கலாம்னு டைரக்டரு பிளான் போட்டிருக்கிறாராம்… போட்டிருக்கிறாராம்…
விரல் நடிகருக்கும் சிக்ஸ் பேக் ஆசை வந்துருச்சாம்… வந்துருச்சாம்… சமீபத்துல வெளிநாட்டுக்கு ஷூட்டிங்கிற்கு போயிட்டு வந்தாரு. உடல்பயிற்சி சம்பந்தமா நிறைய வ¤ஷயங்களை பயிற்சியாளர்கள்கிட்ட கேட்டு வந்தாராம்…
வந்தாராம்… அடுத்த ஆக்ஷன் படத்துக்காக சிக்ஸ் பேக்குக்கு மாறப்போறாராம்… போறாராம்…
இயக்குனர்நடிகர் மோதல்
10/7/2010 10:08:18 AM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
பிரதர் அர்ஜுனா படத்துல நடிச்சாரு புதுமுகமான கான் நடிகரு. அடுத்த படத்துலயும் தன்னை ஹீரோவாக்கி, தன்னோட மகனை இளம் ஹீரோவாக அற¤முகப்படுத்த பிளான் பண்ணினாரு. இந்த படத்தை இயக்க, அர்ஜுனா படம் இயக்கின ஆனந்த டைரக்டரை புக் பண்ணியிருந்தாங்க… பண்ணியிருந்தாங்க… இதுக்கிடையே கான் நடிகருக்கும் டைரக்டருக்கும் முட்டிக்கிச்சாம்… முட்டிக்கிச்சாம்… இதனால நடிகரே அந்த படத்தை இயக்கப் போறாராம்… இயக்கப் போறாராம்…
வந்தே மாதரம் படத்துல மலையாள மம்மு நடிகருக்கு முக்கியத்துவம் இல்லைனு கேரளால பேசிக்கிட்டாங்க. இதனால அந்த படத்துல நடிச்ச ஆக்ஷன் ராஜா நடிகருக்கு வருத்தமாம்… வருத்தமாம்… தன்னாலதான் மம்மு நடிகரோட ரோலை குறைச்சிட்டதா இப்போ தகவல் பரவிடுச்சாம்… பரவிடுச்சாம்… இனிமே ரெண்டு ஹீரோ கதையில நடிக்க மாட்டேன்னு ஆக்ஷன் ராஜா சொல்றாராம்… சொல்றாராம்…
மொழியான படத்துல நடிக்கிறாரு மும்பை ஷாஸான் நடிகை. புது படத்துல நடிக்க 30 லகரம் கேட்டு மிரட்டுறாராம்… மிரட்டுறாராம்… முதல் படமே இன்னும் வரல, அதுக்குள்ள இப்படி கேட்கிறாரேனு கோடம்பாக்கத்துல சில தயாரிப்புங்க புலம்புறாங்களாம்… புலம்புறாங்களாம்…
சங்கம் மீது நடிகை கோபம்
9/26/2010 11:28:54 PM
தாடிக்கார நாடோடி ஹீரோ, மின்னலான இயக்குனர் தயாரிப்புல படம் இயக்குறதா இருந்தாரு… இருந்தாரு… ஆனா இதுவரைக்கும் கதை ரெடின்னு தாடிக்காரர் தரப்புலருந்து எந்த சேதியும் வரலயாம்… வரலயாம்… மின்னலான இயக்குனர் பலமுறை கேட்டும் பதில் இல்லையாம். இதனால இயக்குனர் கடுப்புல இருக்கிறாராம்… இருக்கிறாராம்…
அனுவான உசர நடிகை சங்கத்துல மெம்பர் ஆகலேன்னு ஒண்ணுக்கு மூணு தடவை ஆக்டர் சங்கம் லெட்டர் அனுப்பினாங்க… அனுப்பினாங்க… கோபமான நடிகை, Ôரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே நான் மெம்பர் ஆயிட்டேன். ஏன் இப்படி தொந்தரவு பண்றீங்கன்னு பதில் கடிதம் அனுப்பினாராம்… அனுப்பினாராம்… பழைய ஃபைல்களை பார்த்தப்போ நடிகை சொன்னது உண்மைதான்னு தெரிஞ்சுதாம்… தெரிஞ்சுதாம்…
தவுசண்ட்ல ஒருத்தர் தயாரிப்புக்கு படம் பண்ணித் தர்றதா அப்பட ஹீரோ சொன்னாராம்… சொன்னாராம்… ஆனா, இதுவரைக்கும் கால்ஷீட் தரலயாம்… தரலயாம்… தயாரிப்பு புலம்புறாராம். கால்ஷீட் கிடைக்கும்னு படம் இயக்க ஒப்பந்தமான புதுமுக டைரக்டரு, காத்து கிடக்கிறாராம்… கிடக்கிறாராம்…
போனில் நடிகைக்கு இயக்குனர் மெசேஜ்
9/17/2010 10:31:28 AM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
பிரகாச இன்ஷியல் இயக்குனர் எடுத்த தெலுங்கு டைகர் படம் எதிர்பார்த்த அளவு போகலயாம்… போகலயாம்… இதனால இயக்குனரு அதிர்ச்சியில இருக்கிறாராம்… இருக்கிறாராம்… அந்த படத்தை தமிழ்ல தானே ஹீரோவா நடிச்சு, இயக்க பிளான் போட்டிருந்தாரு. அந்த பிளானையும் கைவிட்டுட்டாராம்… கைவிட்டுட்டாராம்…
சோனியான நடிகை திரும்ப நடிக்க வந்திருக்கிறாரு… வந்திருக்கிறாரு… அவரைவிட்டு பிரிஞ்ச செல்வமான இயக்கம், செல்போன்ல திடீர் வாழ்த்து மெசேஜ் அனுப்பினாராம்… நடிகைக்கு அனுப்பினாராம்… Ôதிரும்ப நடிக்க வர்றது சந்தோஷம். தொடர்ந்து நடிக்கணும்Õனு அந்த மெசேஜ்ல சொல்லியிருந்தாராம். பதிலுக்கு நடிகை நன்றி மெசேஜ் அனுப்பினாராம்… அனுப்பினாராம்…
கனியானவரு இயக்க இருந்த பட ஷூட்டிங் தள்ளிப்போகுதாம்… தள்ளிப்போகுதாம்… தாடிக்கார இயக்குனர்தான் இதுல ஹீரோ. அவர் இயக்குற படம் இன்னும் முடியாததால, கனியானவர் படம் தொடங்க லேட்டாகுமாம்… லேட்டாகுமாம்…
டான்ஸ் தெரியாத நடிகை ஹீரோக்கள் உர்ர்...
9/27/2010 10:17:54 AM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
கல்யாணமாகி குடும்பத்தோடு செட்டில் ஆயிட்டாரு ‘கல்கி’ ஸ்ருதி. தனக்கு வர்ற ஒரு சில வாய்ப்பையும் ஏத்துக்க மறுக்க¤றாராம்… மறுக்க¤றாராம்… ‘குழந்தை, குடும்பம்ன்னு கவனம் செலுத்த தொடங்கிட்டேன். இனிமே நடிச்சா அம்மன் கதை படங்கள்ல மட்டுமே நடிப்பேன்’னு முடிவு பண்ணியிருக்கிறாராம்… பண்ணியிருக்கிறாராம்…
நடிக்க வந்து வருஷ கணக்கானாலும் ஜெனி நடிகை டான்ஸ் ஆடுறதுல தடுமாறிப் போறாராம்… போறாராம்… கோலிவுட், டோலிவுட் ஹீரோக்கள் அட்ஜஸ்ட் பண்ணிக்க¤றதால பிரச்னை இல்லாம இருந்துச்சாம். பாலிவுட் ஹீரோக்களால பொறுக்க முடியாம டைரக்டருங்ககிட்ட கோபத்தை காட்டுறாங்களாம்… காட்டுறாங்களாம்… நொந்துபோன நடிகை, சாப்பாடு, தூக்கம் மறந்து மாஸ்டருங்ககிட்ட டான்ஸ் ஆட டிரைனிங் எடுக்க¤றாராம்… எடுக்க¤றாராம்…
அருவா டைரக்டர் படம் தள்ளிப்போகுதாம்… தள்ளிப்போகுதாம்… தன்னோட பேவரைட்டான கேமராமேனுக்காக டைரக்டரு காத்து கிடக்கிறாராம். ஆயுத படம் முடிச்சிட்டுதான் வர முடியும்னு கேமரா சொல்லிட்டாராம்… சொல்லிட்டாராம்… அவர் வந்த பிறகே ஷூட்டிங்கை ஆரம்பிக்கலாம்னு டைரக்டர் சொல்றாராம்… சொல்றாராம்…
போதையில் நடிகை பயத்தில் தயாரிப்பு
9/18/2010 11:06:54 AM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
பிசின் நடிகை பிரச்னையால் 'கார்டு' படம் ரிலீசில் சிக்கலிருக்காமே; என்ன செய்யப்போறீங்க'ன்னு டைரக்டர்கிட்ட நிறையபேர் கேக்கறாங்களாம்… கேக்கறாங்களாம்… அவரோ, 'அதுபத்தி எனக்கு தெரியாது, படத்தை முடிச்சு கொடுக்கறதுதான் என் வேலை'ன்னு எஸ் ஆகுறாராம்… ஆகுறாராம்… இதை கேள்விபட்ட தயாரிப்பு ரிலீஸ் விஷயத்துல யாரும் சப்போர்ட் பண்ணாம தனியா விட்ருவாங்களோன்னு பயத்துல இருக்காராம்… பயத்துல இருக்காராம்…
பவர் பேரோட நடராஜர் நடனம் ஆடும் ஊர் பெயரையும் சேர்த்து வச்சிருக்கிற இயக்குனரு தயாரிச்ச படங்கள் அவரது கைய சுட்டுட்டதால பைனான்ஸ் பிரச்னைல இருக்கா றாம்… இருக்காராம்… விட்ட துட்டை புடிக்கற வெறி அதிகமாயிட்டதால பெருமாள் பேர் கொண்ட இயக்குனர்கிட்ட படத்தை இயக்க சான்ஸ் கேட்டிருக்காராம்… சான்ஸ் கேட்டிருக்
காராம்…
போதை பிரச்னை டோலிவுட்ல டமார் டுமீர் ஆனதையடுத்து, அதை விட்டுடுவாங்கன்னு நினைச்சா, சில பார்ட்டி நடிகைகள் வாட்டர் மோகத்துல அநியாயத்துக்கு அலையுறாங்களாம்… அலையுறாங்களாம்… இதுல புதுசா சமீபத்துல அறிமுகமாயிருக்கிற சமந்த நடிகையும் சேர்ந்திருக்கிறாராம்… சேர்ந்திருக்கிறாராம்… டோலிவுட்ல நடந்த பார்ட்டியில நடிகை ஓவராகி விழுந்துட்டாராம்… பிறகு அவரோட நடிச்ச நடிகருதான் பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு போனாராம்… போனாராம்….
நடிகையின் புது நட்பு ஹீரோ வருத்தம்
9/28/2010 10:54:00 AM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
ஐ காட் நடிகரும் நயன நடிகையும் வா போ என உரிமையோடு பேசிக்கிறாங்களாம்… பேசிக்கிறாங்களாம்… நடிகையோடு நடிகர் நட்பாவும் இருக்கிறாராம்… இருக்கிறாராம்… எனக்கு கிடைச்சிருக்கிற புது பிரெண்ட் இவர்தான்னு நெருக்கமானவங்ககிட்ட நடிகை சொல்றாராம்… சொல்றாராம்…
மைக் நடிகர் இன்னும் ஹீரோ கனவிலேயே இருக்கிறாராம்… இருக்க¤றாராம்… 'ரீ என்ட¢ரியா இருக்கும், வில்லனா நடிங்க. கேரக்டர் ரோல் பண்ணுங்கÕன்னு தயாரிப்புங்க கேட்டா, மறுக்கிறாராம்… மறுக்கிறாராம்… 'எனக்கொண்ணும் பெரிசா வயசாகல. ஹீரோவாத்தான் நடிப்பேன்Õனு பிடிவாதமா இருக்கிறாராம்… இருக்கிறாராம்…
கடைசியா நடிச்ச படம் கைகொடுக்கும்னு ஸ்ரீயான ஹீரோ எதிர்பார்த்தாராம். அது நடக்காததால வருத்தத்துல இருக்கிறாராம்… இருக்கிறாராம்… தெலுங்குல செகண்ட் ஹீரோவா நடிக்கிறாரு. அதுக்கான சான்ஸ் பிடிக்கிற வேலையில இறங்கிட்டாராம்… இறங்கிட்டாராம்…
வாய்ப்பு பிடிக்க சம்பளம் குறைப்பு
10/4/2010 11:33:43 AM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது..
தமிழ் பட கவர்ச்சி நடிகையோட வாழ்க்கையை இந்தி தயாரிப்பு படமாக்குறாரு. அதே கதையை தெலுங்கு தயாரிப்பும் தயாரிக்கிறதா சொல்லியிருந்தாரு… சொல்லியிருந்தாரு… அந்த தயாரிப்புக்கு பெரிய தொகை கொடுத்து செட்டில் பண்ணிட்டாங்களாம்… பண்ணிட்டாங்களாம்… இந்தியில தயாரிக்கிற இந்த படத்தை சவுத் லாங்குவேஜ்லயும் டப் பண்றாங்களாம்… பண்றாங்களாம்…
சமீப காலமா நயன நடிகையை காப்பி அடிச்சி, அவரைப்போலவே காஸ்டியூம் போடுறாராம் லட்சுமிகரமான நடிகை. இதை பற்றி கோடம்பாக்கத்துல சில பேர் பேசிக்கிட்டாங்களாம்… பேசிக்கிட்டாங்களாம்… தகவல¢ கேள்விப்பட்ட நடிகை, கோப லட்சுமியா மாறிட்டாராம்… மாறிட்டாராம்… 'யாரைப் பார்த்தும் காப்பி அடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. எல்லோரும் சாப்பிடுறாங்க, தூங்குறாங்க. அதுக்காக அவரை பார்த்து காப்பி அடிக்க¤றாங்கன்னு அர்த்தமாÕன்னு கேட்கிறாராம்… கேட்கிறாராம்…
முமைத்தான கவர்ச்சி நடிகைக்கு வாய்ப்புகள் குறைஞ்சிபோச்சு. இதனால சம்பளத்தை குறைச்சிட்டாராம்… குறைச்சிட்டாராம்… இது சம்பந்தமா தெரிஞ்ச
தயாரிப்புகளுக்கு தகவல் சொல்லி, ஒரு பாட்டுக்கு ஆட வாய்ப்பு இருந்தா சொல்லுங்கன்னு சான்ஸ் பிடிக்கிறாராம்… பிடிக்கிறாராம்…
நடிகைக்கு நடிகர் தந்த உறுதி
9/16/2010 12:07:48 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
முன்னணி ஹீரோ ஒருத்தருக்காக கதை பண்ணியிருந்தாரு பூ இயக்குனர். அந்த நடிகரோட கால்ஷீட் கிடைக்காததால, காதல் நடிகரை படத்துல நடிக்க வைக்கிறாரு… வைக்கிறாரு… முன்னணி ஹீரோவை மனசுல வச்சி, நிறைய பில்டப் சீன்களை வச்சிருந்தாராம்… வச்சிருந்தாராம்… இப்போ அதையெல்லாம் டைரக்டரு மாத்துறாராம்… மாத்துறாராம்…
மலையாள கேசனோவா படம் டிராப் ஆயிடுச்சி… ஆயிடுச்சி… இதுல சமீர நடிகை நடிக்க இருந்தாரு. Ôகவலைப்படாதீங்க. உங்களுக்கு அடுத்த படத்துல வாய்ப்பு தர்றேன்Õனு கேசனோவா பட லால் ஹீரோ உறுதியா சொல்லியிருக்கிறாராம்… சொல்லியிருக்கிறாராம்…
ஆகாயம் படத்துல நடிக்கிற விரல் நடிகரும் சினேகமான இந்தி நடிகையும் ரொம்ப நட்பா இருக்கிறாங்களாம்… இருக்கிறாங்களாம்… பட யூனிட்ல இதைப் பத்திதான் ஹாட் டாப¤க்கா பேசிக்கிறாங்களாம்… பேசிக்கிறாங்களாம்…
வாய்ப்பு பிடிக்க நடிகை டெக்னிக்
9/21/2010 10:45:53 AM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
கீர்த்தியான நடிகைக்கு கைவசம் படங்கள் இல்லையாம்… இல்லையாம்… நடிச்சிட்டிருந்த படங்களும் பாதியில நிக்குதாம்… நிக்குதாம்… இதனால யாராவது, ஃபங்ஷனுக்கு கூப்பிட்டா, உடனே கவர்ச்சி டிரஸ்ல ஆஜர் ஆகுறாராம்… ஆகுறாராம்… பட வாய்ப்பை பிடிக்க, தான் நடிக்காத பட விழாவுக்கும் வர்றாருன்னு பேசிக்கிறாங்க… கோடம்பாக்கத்துல பேசிக்கிறாங்க…
லக லக பார்ட் 2வில் தல நடிகர் நடிப்பாருன்னு கோலிவுட்ல டாக் ஓடுது… டாக் ஓடுது… திடீர்ன்னு ஹீரோவா பிரகாச நடிகர் நடிப்பாருன்னும் சொல்றாங்களாம்… சொல்றாங்களாம்… யார்தான் ஹீரோன்னு லக லக டைரக்டர்கிட்ட கேட்டா, 'அது பற்றி ஆக்டர் திலக கம்பெனிலதான் கேக்கணும்Õனு பதில் சொல்றாராம்… சொல்றாராம்…
பையன் நடிகரு திடீர்னு வெளிநாட்டுக்கு போய் வந்தாரு. ஹாலிடே கொண்டாடத்தான் போனாருன்னு சொன்னாங்க… சொன்னாங்க… ஆனா அது உண்மை கிடையாதாம்… கிடையாதாம்… உடல் எடையை குறைக்க ட்ரீட்மென்ட்டுக்காக அங்கே போய் வந்தாராம்… வந்தாராம்…
அடிக்கடி நம்பர் மாற்றும் நடிகை :குழப்பத்தில் இயக்கம்
10/9/2010 10:28:54 AM
நல்லகாலம் பொறக்குது…
நல்லகாலம் பொறக்குது…
பாடல் பாடுறதை விட தொகுப்பாளினி சான்ஸ்தான் மயி பாடகிக்கு அதிகம் கிடைக்குதாம்… கிடைக்குதாம்… மனம் தளராம வர்ற வாய்ப்பை சாதகமா பயன்படுத்திக்கிறாராம்… சாங் ரிலீஸ் நிகழ்ச்சியில தொகுப்பாளினியா மைக்கை
பிடிச்சதும் அங்க வர மியூசிக் இயக்கங்ககிட்ட பாடறதுக்கு சான்ஸ் கொடுங்கன்னு பகிரங்கமாகவே கேட்கிறாராம்…
கேட்கிறாராம்…
சோனி நடிகைக்கு டான்ஸ் மூவ்மென்ட்ஸெல்லாம் மறந்து போச்சாம்… மறந்து போச்சாம்… கேமரா முன்னால நின்னா மாஸ்டர் தரும் மூவ்மென்ட்சை வேகமா செய்ய முடியாம திணறிப்போறாராம்… ரீ என்ட்ரிக்கு பிறகு மல்டி ஹீரோயின் படங்கள்லதான் வாய்ப்பே வருது. அந்த சான்ஸ் கூட டான்ஸ் குறைபாட்டால கை நழுவிடக் கூடாதுன்னு உஷரா இருக்காறாம். தினமும் டான்ஸ் மாஸ்டரிடம் நம்மூர் குத்துப்பாட்டுக்கான வேகமான ஆட்டத்தை கத்துக்கிறாராம்… அம்மணி கத்துக்கிறாராம்…
ஓவிய நடிகையோட செல்போன் நம்பர், ரசிகர்களுக்கு எப்படியோ லீக் ஆனதுல அப்செட்டா இருக்கிறாராம்… இருக்கிறாராம்… நேரங்கெட்ட நேரத்துல யாராவது போன் பண்ணி, ஏடா கூடமா பேசித் தொலைக்கிறாங்களாம்… தொலைக்கிறாங்களாம்… இதனால புதுசா ஒரு நம்பர் வாங்குனாரு நடிகை… அதுவும் அங்க இங்கன்னு லீக் ஆகி, நடிகையை இன்னும் அப்செட் பண்ணிடுச்சாம்… பண்ணிடுச்சாம்… இதனால இன்னொரு நம்பரை வாங்கி ரகசியமா வச்சிருக்காராம்… ஆனா, அவரு நடிக்கும் படத்து இயக்கங்கதான் இப்ப டென்ஷன்ல இருக்காங்களாம்… எந்த நம்பரை தொடர்புகொண்டாலும் ரீச் ஆகலையாம்… நடிகையை எப்படி புடிக்கிறதுன்னு தெரியாம பெரும் குழப்பம் நடக்குதாம்… ஷூட்டிங் ஸ்பாட்ல குழப்பம் நடக்குதாம்…
ரசிகர்களை ஏமாற்றிய தயாரிப்பு
9/20/2010 12:05:09 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
கல்யாணமாகி வெளிநாட்டுக்கு போயிட்ட கையெழுத்து பட நாயகிக்கு திரும்பவும் நடிக்க ஆசை வந்துருக்காம்… வந்துருக்காம்… சமீபத்துல கேரளா வந்தப்போ தன்னோட ஆசையை வெளிப்படுத்தினாராம். ஆனாலும் கணவர்குல சைடுலருந்து கிரீன் சிக்னல் கிடைக்கலயாம்… கிடைக்கலயாம்…
அந்தரங்கமான படம் எடுத்த தயாரிப்பு, கவர்ச்சி காசு தரும்னு நம்பி ஏமாந்துட்டாராம்… ஏமாந்துட்டாராம்… அதனால போட்ட காசை எப்படியாவது எடுக்கணும்னு படத்தோட பெயரை மாத்தி திரும்பவும் ரிலீஸ் பண்ணியிருக்க¤றாராம்… பண்ணியிருக்க¤றாராம்… புது படமுன்னு நம்பி போகும் ரசிகருங்க ஏமாற்றத்தோடு திரும்பி வர்றாங்களாம்… வர்றாங்களாம்…
கல்யாணமாகி வெளிநாட்டுல செட்டில் ஆயிட்டாரு கனியான நடிகை. வெளிநாட்டுக்கு வரும் நடிகைகளுக்கு கலை நிகழ்ச்சி புக் பண்ணி கொடுக்கிறதுதான் கனியானவரின் முக்கிய வேலயாம்… வேலயாம்…
கடுப்பாகும் ஜூனியர் தவிக்கும் சீனியர்
9/25/2010 10:29:01 AM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
'ஜூனியர் பிசின் நடிகை'ன்னு யாராவது பூரண நடிகையப் பார்த்து சொன்னா கடுப்பாயிடுறாராம்… கடுப்பாயிடுறாராம்… 'நான் நான்தான்.. அவர் அவர்தான்'னு பளிச்சுன்னு சொல்றாராம்… சொல்றாராம்… ஒரு டி.வி பேட்டியில பிசின் நடிகை, 'பச்சையா இருக்குற பட்சிங்க எல்லாம் கிளியாயிட முடியாது'ன்னு சொன்னதுதான் கடுப்புக்கு காரணமாம்… காரணமாம்…
புதுமையின் மாஜி மனைவியான ராமன் ஜோடி நடிகை, தன் புது காதலரோட ஒரே வீட்டுல வாழ்ந்தாலும் காதலருக்கு மாஜி மனைவிகிட்டேருந்து டைவர்ஸ் கிடைக்காததால கல்யாணம் பண்ணிக்க முடியாம தவிக்குறாராம்… சீனியர் நடிகை தவிக்குறாராம்… டைவர்ஸ் கிடைச்சதும் தடபுடலா கல்யாணம் பண்ண முடிவு பண்ணியிருக்காராம்… முடிவு பண்ணியிருக்காராம்…
ஒத்தபாட்டுக்கு ஆடினா அப்படியே முத்திரை குத்திடறதான்னு ராய் நடிகை ரொம்பவே ஆவேசப்படறாராம்… ஆவேசப்படறாராம்… வர்றவங்க எல்லாம் அதேமாதிரி ஆடிக்கொடுங்கன்னு கேக்கறாங்க. பாலிவுட்ல யெல்லாம் இப்படி இல்ல. ஒரு படத்துல குத்தாட்டம் ஆடினாலும் அடுத்த படத்துல ஹீரோயின் வேடம் தர்றாங்க. அந்த டிரண்ட் கோலிவுட்டுக்கும் வரணும்ன்னு பேசவரவங்ககிட்ட பாயறாராம்… பாயறாராம்…
டைரக்டர் மேல் ஹீரோ கடுப்பு
9/15/2010 5:50:31 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
ஸ்பைடர் வலை படத்தை தயாரிச்சவரு அடுத்து ஒரு படத்தை இயக்கினாரு. ஆனா அதுல டைரக்டருன்னு வேற பெயரை யூஸ் பண்ணினாரு… பண்ணினாரு… இப்போ திரும்ப ஒரு படத்தை இயக்குறாரு. அதை இன்னொரு பெயர்லதான் இயக்குறாராம்… இயக்குறாராம்… கடன் கொடுத்தவங்ககிட்டேயிருந்து தப்பிக்கத்தான் இப்படி பெயரை மாத்தி, மாத்தி எஸ் ஆகுறாராம்… தயாரிப்பு எஸ் ஆகுறாராம்…
திமிரான நடிகருக்கு மில்க் இயக்குனரு ஏகப்பட்ட கண்டிஷன் போடுறாராம்… போடுறாராம்… படத்துல கெட்அப் மாத்தி இருக்கீங்க. அதனால வெளியிடங்களுக்கு போகக் கூடாதுன்னு சொல்றாராம்… சொல்றாராம்… இதனால ஷூட்டிங் இல்லாத நேரத்துல நடிகரு வீட்லேயே இருக்கிறாராம். டைரக்டர் மேல கடுப்பாவும் இருக்கிறாராம்… இருக்கிறாராம்…
சமீபத்துல பூரண நடிகை நடிச்ச மலையாள பட ஷூட்டிங் நடந்துச்சு. 'இந்த காட்சியில பிசின் மாதிரியே நடிக்கணும்'னு டைரக்டர் சொன்னாராம்… சொன்னாராம்… கோபமான பூரணம், 'ஏன் அவரோடு என்னை கம்ப்பேர் பண்றீங்க. என்னோட ஸ்டைல்லதான் நான் நடிபேன்'னு உர்ராயிட்டாராம்… உர்ராயிட்டாராம்…
நடிக்க மறுக்கும் ஹீரோ
9/24/2010 10:19:15 AM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
வில்லேஜ் ஸ்டோரி எடுக்க¤ற மதுரமான டைரக்டர் படத்துல நடிக்கிறாரு வர்ஷ¤னியான நடிகை. குடும்ப பெண்ணா நடிக்க¤றதுக்காக கொஞ்சமா உடல் வெயிட் போடச் சொன்னாராம்… சொன்னாராம்… ஆனா நடிகையோ ரொம்ப ஓவரா வெயிட் போட்டுட்டாராம்… போட்டுட்டாராம்… இதனால ரொமான்டிக் ஹீரோயினா நடிக்கிற படங்களுக்கு பிரச்னை ஏற்பட்டிருக்காம்… ஏற்பட்டிருக்காம்… அந்த பட இயக்குனருங்க சத்தம் போடுறதால திரும்ப உடம்பை குறைக்க முயற்சி பண்ணிட்டிருக்கிறாராம்… பண்ணிட்டிருக்கிறாராம்…
கவர்ச்சிக்கு குட்பை சொல்லிட்டு, கேரக்டர் ரோலுக்கு மாறப் போறேன்னு சென் நடிகை சொல்றாராம்… சொல்றாராம்… சின்ன படத்துல நடிக்க சமீபத்துல தயாரிப்பு ஒருத்தரு கேட்டாராம்… கேட்டாராம்… Ôகவர்ச்சியா நடிக்க மாட்டேன். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கிற கதையிலதான் நடிப்பேன்Õனு ஜகா வாங்க¤ட்டாராம்… ஜகா வாங்கிட்டாராம்…
ஏற்கெனவே நடிக்கிறேன்னு ஒத்துகிட்ட படங்கள்லேருந்து ஐம் காட் ஹீரோ எஸ் ஆகுறாராம்… ஆகுறாராம்… நடிக்க கேட்டா, Ôசம்பளம் உயர்த்திட்டேன். நான் கேட்கிற சம்பளம் உங்களால கொடுக்க முடியாது. அதனால வேற படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துட்டேன்Õனு கையை விரிக்கிறாராம்… கையை விரிக்கிறாராம்…
கால்ஷீட் தர மறுக்கும் நடிகை
9/14/2010 10:30:08 AM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
ஆண்ட்ரிய நடிகைக்கு பட வாய்ப்பு வந்தா ஏற்க மறுக்கிறாராம்… மறுக்கிறாராம்… எனக்கு நிறைய பர்சனல் வேலைங்க இருக்கு. கால்ஷீட் ஒதுக்க நேரமில்லைன்னு காரணம் சொல்றாராம்… சொல்றாராம்… நடிக்கிறதுக்கு பதிலா பாட வாய்ப்பு இருந்தா கொடுங்கன்னும் கேட்கிறாராம்… கேட்கிறாராம்…
புது வரவான பிரியமான நடிகைக்கு தமிழ், கன்னடத்துல வாய்ப்புங்க வர ஆரம்பிச்சிருக்காம்… ஆரம்பிச்சிருக்காம்… ஹீரோக்கள், இயக்குனருங்ககிட்ட நட்பா பழகுறாராம்… பழகுறாராம்… இதனால தமிழ்ல முதல் படம் ஓடலேன்னாலும் அடுத்ததா ரெண்டு படங்கள்ல நடிக்கிறாராம்… நடிக்கிறாராம்…
ஹீரோவா நடிச்ச முதல் படம் ரெடியாகி ஒரு வருஷம் ஆயிடுச்சி. ஆனா இதுவரைக்கும் ரிலீசாகல. இத நினைச்சு அஞ்சாத இயக்குனரு, அப்பப்போ வருத்தப்படுவாராம்… வருத்தப்படுவாராம்… இனிமே ஹீரோவா நடிக்கவே மாட்டேன்னு இப்போ முடிவு பண்ணியிருக்கிறாராம்…பண்ணியிருக்கிறாராம்…
நச்சரிக்கும் தாய்க்குலம் தவிக்கும் குடும்பம்
9/29/2010 5:00:51 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
காதலுக்கு கோட்டை கட்டியவரின் மகளுக்கு கையில் படம் எதுவுமில்லையாம்… எதுவுமில்லையாம்… நடிச்ச வரைக்கும் போதும்; காதலிக்கிற பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டிலாகுன்னு தாய்க்குலம் நச்சரிக்கிறாராம்… நச்சரிக்கிறாராம்…
இந்த வருஷ தீபாவளி விளம்பரங்கள்ல நடிகர்கள் ஆதிக்கம்தான் அதிகமா இருக்குதாம்… இருக்குதாம்… அதனால வழக்கமா தீபாவளி விளம்பரத்துல கல்லாகட்டுற நடிகைங்க கலக்கத்துல இருக்காங்களாம்… கலக்கலத்துல இருக்காங்களாம்…
காதலைச் சொல்லாத காலஞ் சென்ற நடிகர், நிறைய பேருக்கு எந்த கணக்கு வழக்குமில்லாம கடன் கொடுத்திருக்காராம்… கொடுத்திருக்காராம்… நிறைய பேருக்கு நம்பிக்கையின் பேரில் ஜாமீன் போட்டிருக்காராம்… போட்டிருக்காராம்… இந்த பிரச்னைகளை எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியாம அந்த குடும்பம் தத்தளிக்குதாம்… தத்தளிக்குதாம்…
தலைமறைவு காஸ்ட்யூமர் சமாளிக்கும் ஹீரோ
10/2/2010 1:51:43 PM
நல்லகாலம் பொறக்குது…
நல்லகாலம் பொறக்குது…
மூணுஷா உள்ளிட்ட பிரபல ஹீரோயின்களுடன் நெருங்கிப் பழகிய சிட்னியான காஸ்ட்யூமர், சமீபகாலமா யார் பக்கமும் தலைகாட்டுவதில்லையாம்… தலைகாட்டுவதில்லையாம்… டோலிவுட் ஹீரோயின்கள் சிலர் போதை மருந்து விவகாரத்தில் சிக்கியபோது சிட்னியானவரின் பெயரும் பலமா அடிபட்டது. அதில் நடுங்கிப்போனவரு, அடிக்கடி தலைகாட்டினா தன்னைப்பற்றி தகவல் வந்துகொண்டே இருக்கும் என்பதால மறைவு வாழ்க்கை வாழ்றாராம்… வாழ்றாராம்…
டாக்ஸி நடிகரு புதுசா கார் வாங்கியிருக்கிறாராம்… வாங்கியிருக்கிறாராம்… புது கார்ல நண்பர்களை ஏத்திகிட்டு பக்த்து யூனியன் பிரதேசத்துக்கு போய் சந்தோஷத்தை கொண்டாடினாராம்… 'தண்ணிக்கு பேமசான இடமாச்சே… அபிஷேகம் நடந்துச்சா?'ன்னு மிஸ்ஸான நண்பர்கள் பிட்டை போட்டதும், 'ஐயோ அதெல்லாம் ஒண்ணுமில்லை. சும்மா ஒரு லாங் டிரிப்புக்காகத்தான் போனேன்'னு அசட்டு சிரிப்பு சிரிச்சு சமாளிக்கிறாராம்… நடிகரு சமாளிக்கிறாராம்…..
ஷூட்டிங்குக்காக வெளிநாட்டுக்குப் போய் திரும்பிய நடிகர்கள், காய்ச்சல் வந்து படுத்துடறாங்களாம்… படுத்துடறாங்களாம்… அதனால வெளிநாடு ஷூட்டிங்குன்னாலே நடிகர்கள் பயப்படுறாங்களாம். சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பிய விரல் நடிகரு, கடுமையான காய்ச்சல்ல அவதிப்பட்டு இப்போதான் குணமாகி இருக்காராம்… பிரசன்னமான நடிகரும் கடந்த 1 மாதமா செல்போனை தூக்கிப்போட்டுவிட்டு ட்ரீட்மென்ட் எடுக்கிறாராம்… ட்ரீட்மென்ட் எடுக்கிறாராம்…